Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Permalink  
 


chillsam Wrote on 04-01-2011 11:03:38:
இந்த பிசாசுகளை அடையாளங் காண கீழ்க்காணும் தொடுப்புகளை சொடுக்கவும்...

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972

http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=1

http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&p=1

முதலாவது பிசாசு மிகவும் கொடியது; இது "இயேசு தொழத் தக்க தெய்வமல்ல" என்று சொல்லும்; என்ன ஒரு ஆச்சரியமென்றால் மற்ற ரெண்டும் பல காரியங்களில் இதனுடன் ஒத்துப்போவதுடன் "இயேசு தொழத் தக்க தெய்வமல்ல" என்ற கருத்துடன் மிகவும் சாந்த சொரூபிகளாக வேடமிடும் ஓநாய்கள்; இவைகள் இதற்கு மேல் தெளிவடைய வாய்ப்பில்லை என்ற தீர்மானத்தின் காரணமாகவே நான் கடுமையாக எதிர்த்து அடையாளங் காட்டுகிறேன்;

இரண்டாவது பிசாசு பத்து கற்பனைகள் வழியாக மட்டுமே இரட்சிப்பு என்ற கருத்தை மேலோட்டமாகவும் அதன் அடுத்தடுத்த கட்டங்களில் வேதத்தில் உயிர்த்தெழுதல் முதலாக ஒவ்வொரு போதனையிலும் விகர்ப்பமானவற்றை போதிக்கும்;

மூன்றாவது பிசாசு மறுபிறவி கொள்கையை உடையது;வேதம் மாத்திரமே வேதமல்ல,புத்தர் போன்ற மகான்கள் மூலமும் ஆண்டவர் பேசியிருக்கிறார்;சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்,சர்வ வல்ல இறைவனுடைய செயல்களை யாரும் கட்டுப்படுத்தவோ புரிந்துகொள்ளவோ முடியாது என்று போதிக்கிறார்; இயேசுவுக்குப் பிறகு பிறந்த அனைவரும் இவரைப் பொறுத்தவரை மறுபிறவிகளே; அதாவது இயேசுவின் மீட்புக்குள் அனைவரையும் கொண்டு வர அவருடைய பிறப்புக்கு முன் பிறந்து வாழ்ந்து மறைந்த அனைவருக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து இறைவன் பிறக்கச் செய்திருக்கிறார்;அந்த வகையில் தானும் கூட ஆதி காலத்தில் சிவபெருமானாகவும் இடைப்பட்ட காலத்தில் இவரும் இவரது சகோதரரும் பிரபலமான இஸ்ரவேலின் சகோதரத் தலைவர்களாகவும் வாழ்ந்தவர்கள்; தற்போது இவர் வாழ்ந்துகொண்டிருப்பது மூன்றாவது பிறவி; இவருக்கு முற்பிறவிகளின் பல காரியங்கள் இன்னும் நினைவில் இருப்பது இவருடைய தனிச்சிறப்பு; தற்போது பரபரப்பாக விவாதிக்கப்படும் இவருடைய தளத்தின் அதிமுக்கியமான கட்டுரையானது சொல்லும் சேதி என்னவென்றால் "இயேசுவானவர் சிலுவையில் கொன்றது சாத்தானின் பகை" யே; சாத்தானை சமாளிக்க வேறு வழியில்லாமல் தேவன் தம்முடைய மகனையே பலியாக செலுத்தி உலக மக்களை மீட்டுக்கொள்ளுகிறார்; மேலும் ஆதிமுதல் பலி செலுத்திய அனைவருமே சாத்தானை குளிர்விக்கவே பலிசெலுத்தினர், என்கிறார்;

'ஆண்டவரையே பிசாசு என்று சொன்னார்களே ' என்று இவை நீலிக்கண்ணீர் வடிக்கும் ஆபத்து இருப்பதால் நாம் இவற்றை பிசாசுகள் என்று சொல்லாதிருப்பதே நல்லது.

ஜாக்கிரதை.. ஜாக்கிரதை... ஜாக்கிரதை..!

நண்பர்களே இங்கு எங்குமே நான் சுந்தர் அவர்களை "யெகோவா சாட்சிக்காரர்" என்று குறிப்பிடவில்லை என்பதை மிகுந்த தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்; நான் அதிகமாக அவதானித்து வரும் மூன்று முக்கியமான தளங்களைக் குறித்த சுருக்கமான அறிமுகத்தை மாத்திரமே கொடுத்துள்ளேன்; துருபதேசக்காரர்களை இயேசுவையும் பவுலையும் காட்டிலும் அதிகமாக சாடியோர் யாருமில்லை என்றெண்ணுகிறேன்; பழைய ஏற்பாட்டில் சத்தியத்துக்கு விரோதமானதை யாரும் போதித்தால்- எழுதினால்- பிரச்சாரம் செய்தால் கொலையே நடந்திருக்கிறது; அந்த உரிமையிலேயே என் ஆண்டவரே இதனைத் துவக்கி வைத்தார் என்று குறிப்பிட்டிருக்கிறேன்; அதனை நான் துணிகரமாக எழுதியிருந்தால் நான் குற்றவாளியாவேன்;அந்த அச்சத்துடனே நான் அதிகபட்சமாக எழுதியுள்ளேன்.ஆனால் கத்தோலிக்கர்களால் சித்தரிக்கப்பட்ட -ஆட்டை சுமந்துகொண்டு பரிதாபமாக உங்கள் வீட்டு வாசலில் சாதுவாக நிற்கும் தாடிக்காரராக மாத்திரம் இயேசுவானவரைக் குறித்து நீங்கள் கற்பனை செய்து வைத்திருந்தால் அந்த தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டியது நீங்கள் தானே தவிர, நானல்ல‌.

அடியேன் எந்த தனிநபர்களையும் ஒருபோதும் தாக்கவில்லை;நான் குறிப்பிட்டவை மூன்றும் மூன்று வெவ்வேறு மாறுபாடான கொள்கைகளைப் போதிக்கும் தளங்கள்;அதனை வித்தியாசப்படுத்திக் காட்டியுள்ளேன்;பெயரைக் குறிப்பிட்டு எதைச் சொன்னாலும் அது சம்பந்தமான தொடுப்பையும் கொடுத்து வருகிறேன்;இந்த திரிக்கு நான் பெயர் வைக்கவில்லை;அந்த கவிதையும் என்னுடையதல்ல;ஆனாலும் அந்த கவிதையின் ஒவ்வொரு வரியும் இந்த மூம்மூர்த்திகளின் கொள்கைகளுடன் ஒத்துப்போவது தெரிந்தும் திருடனுக்குத் தேள் கொட்டியது போல மாயம் பண்ணுகிறார்கள்;


//இத்தளத்தில் சமீபத்தில் திரித்துவத்திற்கு எதிரான எந்தக் கருத்தையும் நானோ கோவைபெரியன்ஸோ சுந்தரோ கூறியதாகத் தெரியவில்லை. (அப்படி யாரேனும் கூறியிருந்தால் அதை எடுத்துக்காட்டும்படி வேண்டுகிறேன்). ஆகிலும் எங்கள் தளங்களில் இது சம்பந்தமான விவாதங்கள் உண்டு என்பதை மறுக்கவில்லை. //

பெரியவர் அன்பு அவர்களின் இந்த வரிகளுக்காக நன்றி;இதிலிருந்தே நீங்கள் எத்தனை தந்திரமானவர்கள் என்பது தெரிகிறது;அதாவது சரியான சமயம் வரும்வரை சர்ச்சைக்குரியவற்றை எடுத்து முன்வைக்கமாட்டீர்கள்;ஆனாலும் உங்கள் வலையில் அப்பாவிகளை விழவைப்பதே உங்கள் மைய நோக்கம் என்பதும் தெரியவருகிறது; அருமை நண்பர் கொல்வின் அவர்களே யார் போடுவது ரெட்டை வேடம் என்று கொஞ்சம் சொல்லுகிறீர்களா..?


// அன்பு சகோதரர்களே நமக்குள் எந்த பிரச்சினையும் வேண்டாம். இங்கு குறிப்பிட விரும்புவது சகோ.சில்சாம் சகோ. சுந்தர் அன்பு அவர்களையும் பிசாசு என்று குறிப்பிடுவதே. அவரின் பதிவுகளை வாசித்தால் புரியும். அவரின் பதிவுகளிலிருந்து அவர் பிசாசு என்று தங்களை குறி்பிபடுவதாக விளங்கிக் கொண்டமையால்தான் பல்வேறு தளங்களிலும் சர்ச்சை உருவாகியது. ஒருவரின் கருத்தை விமர்ச்சிப்பதற்கும் தனிநபர் தாக்குதல் நடத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது.//

கொல்வின் இதற்கு மேல் உங்களுடன் போராட எனக்கு சக்தியில்லை;நான் எவனையும் பிசாசு என்று குறிப்பிடவில்லை என்று மீண்டும் மீண்டும் மறுக்கிறேன்;நன்றாகக் கண்ணைக் கசக்கிக் கொண்டு வாசித்துப் பாருங்கள்;ஆயிரம் வரிகளில் விளக்கம் சொன்னாலும் அத்தனையையும் குப்பையைப் போலத் தள்ளிவிடும் விந்தையை இந்த தளத்தில் தான் காண்கிறேன்;உங்களில் யாருடைய பாராட்டுக்காகவும் நான் ஏங்கிக்கொண்டிருக்கவில்லை;ஆனாலும் புறக்கணிப்பை சகிக்கமுடியாது..!

சகோதரர்களை சாத்தான் என்றும் பிசாசு குறிப்பிடலாமா என்று ஒருவர் கவிதையின் வரிகளிருந்து மேற்கோள் காட்டி கேட்கிறார்; மற்றவர் அது தவறில்லை என்று கருத்து கூற அதற்குப் பின்னரே நான் அவர்களது தொடுப்புகளைக் கொடுத்து அவர்களைக் குறித்த அறிமுகத்தைக் கொடுக்கிறேன்;அப்படியும் அதன் இறுதி வரியில் அவர்களைப் பிசாசு என்று குறிப்பிடாதிருங்கள் என்றே வேண்டுகிறேன்; மேலும் நண்பர் இராஜ்குமார் அவர்களின் திரட்டியில் இவர்களை இணைப்பது தவறல்ல, கூடிப் பேசுவோம் என்று சொன்னவனும் அடியேன் தான்..!

இங்கு கருத்தை விமர்சிக்காமல் எதை விமர்சிக்கிறோம்; அவர்களுடைய மூக்கு முழியைக் குறித்தா எழுதிக் கொண்டிருக்கிறோம்? நான் சொன்னதையெல்லாம் சாபமாக எடுத்துக்கொண்டு துடிப்பது அவர்கள் தானே தவிர நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை; நான் கர்த்தருடைய இரத்தத்தைக் குறித்து எழுதிய போது சாத்தானுக்கு இரத்தம் மீது தற்போது புதிதாக அக்கறை வந்துள்ளது என்று மறைமுகமாக என்னைத் தாக்கி தனி கட்டுரை போட்டவர் சுந்தர்;இந்த தளத்தில் குறிப்பாக இந்த திரியில் எந்த உறுப்பினர்களையும் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக எதுவும் எழுதாத என்மீது பழிசாட்டி அந்த மும்மூர்த்திகளுக்கு வக்காலத்து வாங்குவதை தயவுசெய்து நிறுத்தினால் கொல்வினுக்கு நல்லது..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Comment on TCS:
// இயேசுவானவர் தமது சீஷர்களைப் பார்த்து பேசி அவருடைய சமாதானத்தை கொடுத்துவிட்டு பரமேறிச் சென்றார். உண்மையாகவே, கடவுளை நாம் அறிந்துகொள்ளும் போது அவர் தருகின்ற சமாதானத்தையும் அதின் நிறைவையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும். அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும், பகிர்ந்தளிக்கவும் முடியும். அவர் போதித்தபடி நாம் மற்றவர்களோடு நல்ல உறவைக் கட்டியெழுப்பவும் முடியும்.//


நண்பரே, இயேசுவானவர் சமாதானத்தைக் கொடுத்தார் என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுகிறேன்;ஆனால் அடுத்த வரியிலேயே கடவுளை ஏற்றுக்கொண்டால் அவரும் சமாதானத்தையும் அதின் நிறைவையும் கொடுக்கிறார் என்கிறீர்களே, அப்படியானால் இயேசு, கடவுள் என்றா சொல்ல வருகிறீர்கள்? அல்லது கடவுளைப் போலவே அல்லது கடவுளிடமிருந்து சமாதானத்தைப் பெற்று இயேசு நமக்குக் கொடுக்கிறார் என்று சொல்லவருகிறீர்களா? அதுதான் இங்கே எல்லாருக்கும் ஒரே சந்தேகம்..! ஆனால் நண்பர் கொல்வின் போன்றவர்களுக்கு இது பெரிய விஷ(ய)(ம)மில்லை, சின்ன சின்ன கருத்து வேறுபாடுதான், போகப்போக எல்லாம் சரியாகி விடும், நமக்கு நட்பு தானே முக்கியம்..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

colvin Wrote on TCS 07-01-2011 17:25:01:

சகோ. சில்சாம்
சகோதர்களை பிசாசு மற்றும் மோசமான வார்த்தைகளால் (இரத்தம் கக்கி சாவாய், மூலவியாதி வந்து சாவாய்) எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.. பலதடவை இதுபற்றி சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தளவிதிமுறைகளையும் மீறி நீங்கள் இவ்விதம் பதிவிடுவது சரியானதல்ல. அப்படியே உங்களைப் பற்றியும் அவர்கள் இங்கு எழுதினால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது நிர்வாகம் இவற்றை அனுமதிக்குமா?


சகோ. சுந்தர், மற்றும் அன்பு இத்தளத்தின் மூத்த உறுப்பினர்கள். ஒரு சில கருத்து வேறுபாடுகள் உள்ளது உண்மைதான். ஆனால் அவர்கள் சொல்லாததையெல்லாம் சொன்னதாக நீங்களாக கற்பனை செய்து கொண்டு பெரும்பாலானவற்றை எழுதுகிறீர்கள். நிற்க,


நீங்கள் வளர்த்துவிட்ட கலாசாரம் அதான் சபித்தல் புதிதாக சிலர் பழகி உங்களுக்கே உபயோகிக்கிறார்கள். சகோ. ஆத்மாவின் (உங்களுக்கு மிக பிரியமானவராயிற்றே.............) பதிவுகளை வாசித்தால் புரியும். இந்த பெருமை உங்களுக்கே சேரும்.


சகோ. அன்பைப் பற்றி புகழ்ந்தும் ஒரு பதிவை உங்கள் தளத்தில் எழுதியுள்ளீர்களே! இது உங்களுக்கு முரண்பாடாக தோன்றவில்லையா? உங்கள் இரட்டை வேடத்திற்கு இது நல்லதொரு அத்தாட்சி


நண்பர் கொல்வின் அவர்கள் இந்த தளத்துக்கு தவறான தகவல்களைக் கொடுப்பதற்கு முன்பாக அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறேன்; நீங்கள் வயதில் சிறியவராக இருந்தாலும் உங்களுக்கு தேவைக்கும் அதிகமாக மரியாதை கொடுத்து வருகிறேன்; ஆனால் சத்தியத்துக்கு எதிராக துர்செய்திகளைப் பரப்புவோரிடம் சமரசம் செய்துகொள்ளும் மனோதிடம் எனக்கு இல்லை; இந்த தளத்திலிருக்கும் பெரிய மனிதர்கள் யாரையும் தரக்குறைவாக எழுதியது போல எனக்கு நினைவில்லை; அப்படியே நான் எழுதினாலும் அதனை நீக்கவேண்டியது நிர்வாகத்தின் வேலையாகும்; மேலும் உங்களைப் போல என்னைப் புரிந்துகொள்ளாமல் மனமடிவாக்கும் நபர்களிடமிருந்து இதுவரை விலகிச் செல்வதே என்னுடைய வழக்கமாகும்; அதற்கு அடையாளமாக எனது பதிவுகளை நீக்கியும் இருக்கிறேன்; இப்போதும் கூட இந்த திரியிலிருந்தும் நான் விலகிக் கொள்ளவே எண்ணினேன்; ஆனாலும் பதில் எழுதவேண்டும் என்ற உந்துதல் உண்டானபடியால் எழுதுகிறேன்.

நான் மற்ற தளங்களிலிருந்து நீக்கிவிட்ட பதிவுகள் என்னுடைய தளத்தில் இருக்கக் காரணம், அது என்னுடைய பலமணிநேர உழைப்பாகும்; நீங்கள் வேதம் என்று கையில் வைத்துக்கொண்டு மாய்ந்து மாய்ந்து குனிந்து குனிந்து ஆராய்ந்து கொண்டிருக்கும் உலகப் புகழ்பெற்ற புத்தகத்தில் சாபங்கள் இல்லையா என்பதை அறிய விரும்புகிறேன்; அந்த பரிசுத்த வேதாகமம் எங்கெங்கே யார் யாரை சபித்திருக்கிறதோ அவர்களுடைய சந்ததியாருக்கு அவற்றை நான் நினைவுபடுத்துகிறேன், அவ்வளவே; அப்படியும் இந்த தளத்தில் இல்லாத எழுத்துக்களுக்கு நான் எப்படி பதிலளிக்கமுடியும்? உங்களுக்கு பதில் வேண்டுமானால் அந்த திரியானது எங்கே இருக்கிறதோ அங்கே வந்து உங்கள் கருத்தைப் பதித்தால் உரிய மரியாதையுடன் பதிலளிக்கப்படும்.

இந்த தளத்தைப் பொறுத்தவரையிலும் யாரையும் பிசாசு என்றோ சாத்தான் என்றோ கவிதையிலோ கட்டுரையிலோ நான் குறிப்பிடவில்லை; வழிமொழிந்திருக்கிறேன், அவ்வளவு தான்; எனவே எனக்கு புத்திசொல்லும் முன்பதாக பழிசாட்டுவதையும் தளத்துக்கு தவறான தகவல் தந்து வாதத்தை திசைதிருப்புவதையும் தவிர்ப்பது உங்கள் வளர்ச்சிக்கு நல்லது; நீங்கள் சொல்லும்படியெல்லாம் செயல்பட்டு உங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க எனக்கு அவசியமில்லை; எந்தவொரு பிரச்சினைக்கும் எனக்கென்று தனிப்பட்ட பார்வையும் அணுகுமுறையும் உண்டு; பிசாசை, "பிசாசு" என்று குறிப்பிடாமல், " பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பிசாசு " அவர்களே என்றா குறிப்பிட முடியும்? அது பேதுருவே ஆனாலும் அவன் திருந்தும்வரை அவனும் பிசாசு தான்; இந்த கலாச்சாரத்தை நான் துவங்கவில்லை; இயேசுவே துவங்கிவைத்தார்..!

மேலும் இரட்டை வேடமிட்டு யாரையும் ஆதாயப்படுத்தவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை; எனது எழுத்துக்களைப் புத்தகமாக்கி காசாக்க வேண்டுமே என்று பண ஆசையினால் நயந்தும் இசைந்தும் எழுதவேண்டிய அவசியமுமில்லை; நீங்கள் யோவான் ஸ்நானனை எதிர்த்தால் என்னையும் எதிர்ப்பீர்கள்; நீங்கள் எலியாவை உபசரித்தால் என்னையும் உபசரிப்பீர்கள்; நான் இந்த உலகின் வழக்கமான நடைமுறைகளுக்கும் முற்றிலும் மாறுபட்டவன்; செத்த மீன்களெல்லாம் ஆற்று தண்ணீருடன் அதன் போக்கில் சென்று சேரும்;ஆனால் உயிருள்ள மீன்களோ எந்த காட்டாற்று வெள்ளத்தையும் எதிர்த்தே செல்லும்;நான் இரட்டை வேடமிடுவதாகச் சொன்ன வார்த்தைக்காக நீங்கள் நிச்சயமாகவே வருத்தப்படும் நாள் விரைவில் வரும்.

உங்களுக்கு அருமையான புதிய நண்பர் ஒரு வேதவார்த்தையைக் குறிப்பிட்டு அதனை இந்து புராணங்களின் கதாநாயகன் சிவபெருமானுடன் சம்பந்தப்படுத்தி இன்று எழுதியிருப்பதை கவனிக்கவில்லையா? மேலும் அனைத்து இந்து தெய்வங்களும் ஒரு குறிப்பிட்ட வேத காலத்தில் வாழ்ந்தவர்களே என்கிறார்; அதனை ஏற்றுக்கொள்ளுகிறீர்களா? மேலும் தனக்கு மரணமில்லை என்று கூறுவதையும் தான் ஒரு மறுபிறவி என்று அவர் கூறிக்கொள்வதையும் மறுக்க முடியுமா? ஆண்டவர் வந்துபோனபிறகு பிறப்பவர்களெல்லாம் மறுபிறவிகளே என்றும் அவர்களெல்லாம் இயேசு இந்த உலகத்தில் வரும் முன்பதாக வாழ்ந்து மறைந்தவர்களே என்றும் சுந்தர் கூறுவது உங்களுக்குத் தெரியுமா? எதையும் அவசரமாகப் படித்து கூறவேண்டிய அவசியமோ அவசரமோ எனக்கில்லை; அதற்காகவே என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் மேற்கோள் காட்டுவதையும் அதற்கான தொடுப்பைத் தருவதையும் வழக்கமாக வைத்துள்ளேன்; உங்களுக்கு படிக்க நேரமில்லாவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல; கடந்த ரெண்டு வருடமாக வேறெந்த பரிசுத்தவான்களின் எழுத்துக்களைவிட‌ இவர்களுடைய எழுத்துக்களையே படித்து ஆராய்ந்து வருகிறேன்;

"ச்சீய்.." என சலித்துப்போய் வாதங்களிலிருந்து ஒதுங்கிச் செல்லும் போதெல்லாம் உம்மைப் போன்ற பெரிய மனிதர்கள் என்னை சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதே வாடிக்கையாகி விட்டது; என்னைக் குறித்து ஏதாவது எழுதும் முன்பாக எச்சரிக்கையாக இருக்கவும்; நான் யாருக்கும் சொந்தமானவனோ பெரிய மனுஷனோ அல்ல, என்னை அடித்தால் நியாயம் கேட்க யாரும் வரமாட்டார்கள்; ஆனாலும் நான் யாருக்காக வேலை செய்கிறேனோ அவர் உங்களைவிட மகா ஞானமுள்ளவர்; நான் அவருக்கு மட்டுமே பயப்படுவேன், உங்களுக்கு அல்ல‌..!

Dear Friends,

தொடர்ந்து சர்ச்சைக்குரியதும் வேதத்துக்குப் புறம்பானதுமான விஷவித்துக்களைத் தூவிக்கொண்டிருக்கும் பிசாசின் மக்களுக்கு பரிசுத்த வேதத்திலிருந்து சரியான பதிலைக் கொடுக்கக்கூட அவகாசந்தராமலும் அல்லது அதற்காக தன் தரப்பில் முயற்சிக்காமலுமிருந்து கொஞ்சங்கூட சூடுசொரணையோ ரோஷமோ வைராக்கியமோ இல்லாமல் இயேசுவைத் தாக்கினால் எனக்கென்ன, எனக்கு நட்பும் என்னைக் குறித்த நல்லெண்ணமுமே முக்கியம் என்று சிலர் பொறுப்பில்லாமல் செயல்படுகின்றனர்; அப்படிப்பட்டவர்களிடமிருந்து நான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதைக் குறித்து ஆனந்தமடைகிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

கீழ்க்காணும் விவரங்கள் இறைவன் தளத்திலிருந்து எடுத்து பதித்தாகும்; இதில் அவர் நம்மைக் குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை கசிய விட்டிருக்கிறார்;அனைத்தையும் ஆண்டவர் அறிவார்,ஆனாலும் அவருடைய தளத்தைக் குறித்து நாம் அபாண்டமாக எதுவும் எழுதவில்லை என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்வதுடன் இதற்கான விளக்கத்தை விரைவில் தெரிவிப்பேன்; மேலும் கீழ்க்காணும் வரிகளில் அவர் ஏதாகிலும் மாற்றம் செய்துவிடுவார் என்ற காரணத்தினாலேயே இங்கே முழுவதுமாக எடுத்து பதித்துள்ளேன்; மீண்டும் சந்திப்போம்...

தள  சகோதர  சகோதரிகளுக்கு!
தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் நம்மை "யோஹோவா சாட்சிக்காரர்" என்று வர்ணித்து ஒரு தவறான செய்தியை நமது  சகோ. சில்சாம்  பதிவிடுள்ளார் யகோவா சாட்சிகாரர்கள் யாரென்பதே சரியாக தெரியாத நமக்கு அச்செய்தி கொஞ்சம் அதிர்ச்சியை தருகிறது.   அதற்க்கு மறுப்பு கூறவேண்டாம் என்று எண்ணி விட்டுவிட்டேன் ஆகினும் வேத வசனம்:   யாத்23:1 அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக; என்று  போதிப்பதால் இப்பதிவை தருகிறேன்!
நமது  தளத்தைப்பற்றி இல்லாததும் பொல்லாததுமான தேவையற்றை பதிவுகள் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில பதிவிடுவது என்பது அந்த நண்பரின் முக்கியமான  வேலை என்பதை நாம்  அனைவரும் அறிவோம். இந்நிலையில்   அங்கு அவரால்  பதிவிடப்பட்துள்ள உண்மையற்ற அந்த செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
நமது  தளத்தின்மீது வீண்பழிபோடும்  அவர்  "ஆண்டவராகிய இயேசுவை பற்றி நான்  தாழ்வாக விமர்சிப்பதுபோல்  எனது பெயரில் கள்ளத்தனமான ஒரு பதிவை அவரே  அவரது பிளாக்கில்  பதிவிட்டு, அதை தொடரும்போது எமது தளத்து தொடுப்பை கொடுத்து  இப்படி எவ்விதத்திலாவது  கீழ்த்தரமான முறைகளில் மோசடிசெய்து முயன்று நம்மை தரம்தாழ்த்த நினைத்தார், ஆனால் முடியவில்லை. பின்னர் "மூல வியாதி வரும், இரத்தம் கக்கி சாவாய்" போன்ற சாபங்களை பதிவிட்டு சபித்து  பார்த்தார் அதிலும் பயனில்லை,  எனவே இப்பொழுது கிறிஸ்த்தவர்களின்  பொதுதளத்தில் நமது தளத்தையும் "யகோவா சாட்சிகள்" என்று சேர்த்து எழுதி  எம்மை பற்றி ஏதேதோ புது புது கதைகளை பதிவிட்டு இருக்கிறார்.
இவரை மட்டுமே ஆவிக்குரியவர் போதகர்  என்று நம்பி அதிகம் சார்ந்திருந்த நான் இவரது சுயரூபத்தை  கண்டு விலகிவிட்டேன். அவரின் சாப வார்த்தைகள் மற்றவர்களுக்கு இடறலாக இருக்ககூடாது என்று கருதி நமது தள  நிர்வாகியும் அவரை நமது தளத்தில் பதிவிட தடை செய்துவிட்டார், அத்தோடு அவரைப்பற்றி எதுவும் இங்கு எழுதவேண்டாம் என்றும் அறிவித்துவிட்டோம்.  ஆகினும் அவர் தொடர்ந்து அவரது தளத்திலும்  தமிழ் கிறிஸ்த்தவ தளத்திலும் நம்மைப்பற்றி அவதூறுகளை  எழுதி வைகிறார்.
அவர் என்னை இவ்வளவு வெறுத்தும் அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்ப நான் ஆயத்தமானேன் அனால் அன்று எனக்கு கடுமையான ஜுரம் வந்து நான் எழுதி பதிவை அனுப்ப முடியாமல் போய்விட்டது. தேவனாலே  அது நடந்தது அவரைப்பற்றி வேறு எதுவும் நான் சொல்வதற்கு இல்லை! ஏனெனில் நாம் இங்கு ஜீவனுள்ள தேவனை பற்றி எழுதிவருகிறோம். நம்மிடம் உண்மை இருந்தால் தேவன் நமக்காக வழக்காடுவார்!
அவர் கர்த்தர்! அவர் ஜீவனுள்ளவர்!  அவர் தமது பார்வைக்கு நலமானதை செய்வாராக!
நான் ஒரு நல்ல போதகன் என்று நிரூபிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தினால் இப்பதிவை தரவில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை. நான் கள்ளனாகவோ கள்ள போதகனாகவும்தாலும் என்னால் ஒரு ஆத்துமா இடறலடைந்தாலும் எனக்கு ஐயோ!
உபாகமம் 18:௨௦ நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். என்று வேதம் சொல்கிறதே!

நான் கள்ள போதகனா? என்பதை தீர்மானிப்பது தேவன் ஒருவரே.
என்னை நல்ல போதகனாகவோ அல்லது கள்ளபோதகனாகவோ மாற்ற தேவனாலேயே கூடும்!
தள சகோதரர்கள் பிற மனிதனின் விகர்ப்பமான
வார்த்தைகளை  நம்பி  எம்மை விமர்சிக்காமல்  எனது பதிவை அராய்ந்து   பின்னர் முடிவெடுத்து கொள்ளுங்கள்
அவரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள பதிவு இது:
அதில் உள்ள கருத்துக்கள் தவறா சரியா என்பதை நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள்.  நான் முறைப்படி பயின்று வேதாகமத்தை அறிந்துகொள்ள வில்லை. ஒரு இந்துவாகிய நான் தேவனால் எதிர்பாராதவிதமாக தொடப்படு இயேசுவை ஏற்றுக் கொண்டவன். பின்னர் தேவனிடம் பிடிவாதமாக என்னுடைய மனதில் பதில் தெரியாமல் இருக்கும் கேள்விகளுக்கு எல்லாம் சரியான  விடை  தெரிந்தால் மட்டுமே நான் உம்மை உறுதியாக பின்பற்றுவேன் என்று மன்றாடியதால் தேவன் எனக்கு பல உண்மைகளை தெரிவித்தார். அவற்றை  வசன ஆதாரத்தோடு தான் எழுதி வருகிறேன்.
சிவபெருமான் என்னும் இந்துசாமி  இன்னொரு ஆண் இந்து சாமியோடு இச்சை கொண்டு  இணைத்தால் தேவனின் மாறானத பிரமாணமாகிய "ஆணும் ஆணும் சேரக்கூடாது" என்ற பிரமாணத்தின்படி  தண்டனை பெற்று தன் மகிமையை இழந்தார் என்று

ரோமர் 1:26
இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார் 27. அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.

என்ற வசனத்த்தின் அடிப்படையில்  நான் கூறிய ஒருகருத்தை திரித்து ஏதோதோ அவர் எழுதியிருக்கிறார்!

எனது கருத்துக்கள் சற்று மாறுபாடாக இருந்தாலும்பொதுவான கிறிஸ்த்த கொள்கைகளுக்கு நான் எந்த விதத்திலும் முரணானவன் அல்ல என்பதை இந்த தளத்தில் உள்ள பதிவுகளை படித்து அறிந்து கொள்ளலாம்
ஒரு வகையில் பார்த்தால் நாம் "யகோவா" என்ற நாமமுள்ள  சர்வ வல்ல தேவனுக்கு சாட்சிகளாகவும் இருக்கிறோம் என்பதை அவர் தெரிவித்ததில் மகிழ்ச்சியே.  ஏனெனில் அவரே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர் என்று வேதம் சொல்கிறதே.  ஆனால்  "யகோவா சாட்சிகள்" என்று பெயர் வைத்துக கொண்டுள்ள ஒரு கூட்டத்துடன் எமக்கு எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துகொள்கிறோம்!
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்! தேவனுக்கே என்றும் மகிமை உண்டாகட்டும்!
நன்றி
அன்புடன்
SUNDAR


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Permalink  
 


நண்பர்கள் தயவுசெய்து எனது கோபத்தையோ முரட்டுத்தனத்தையோ விமர்சிக்காமலும் அதனைப் பொருட்படுத்தாமலும் இருந்து என்னால் அடையாளம் காட்டப்படும் நபர்களை கவனியுங்கள்; நண்பர்கள் என்னைத் திருத்துவதைவிட அவர்களால் பல அப்பாவிகள் பாதிக்கப்படாதிருக்க உதவிசெய்வ‌தே அதிமுக்கியமான பணியாகும்; எப்போதும் விஷசெடிகள் வேகமாக பரவிவிடும், பிறகு அவற்றை அழிப்பது கடினமான பணியாகும்; நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் தத்தமது வட்டாரங்களில் பழகுவோரிடமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுகிறேன்; எப்போதுமே நூதனமான காரியங்களில் ஈர்க்கப்படுவது மனிதனின் இயல்பான பெலவீனமாகும்.

நம்முடைய அருமை நண்பர் இளங்கோ அவர்கள் தனது ஆவிக்குரிய வாழ்க்கையின் பயணத்தைக் குறித்து எழுதியிருப்பதே இதற்கு ஒரு சிறந்த உதாரணம்; ஆனாலும் அவரை ஆதாயப்படுத்தின புண்ணியவானைக் குறித்து எழுதவே மாட்டார் என்று நம்புவோமாக; காரணம் இவர்கள் சொந்த விருப்பத்தின் பேரில் மயங்கி விழுந்ததை எப்படி வெளிப்படையாக எழுதமுடியும்? இவர்களெல்லாருக்கும் பிதாமகன் இரசல் எனும் படுபாவி தான்; இப்படியே பலரும் வஞ்சிக்கப்பட்டு மிகச் சிறப்பானதைப் பெற்றுவிட்டதைப் போல இறுமாந்திருக்கிறார்கள்; ஆனாலும் அவர்களுடைய நிலைமை மிகவும் பரிதாபமானது.

http://getthesalvation.blogspot.com/2010/05/blog-post_30.html



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Permalink  
 


இந்த பிசாசுகளை அடையாளங் காண கீழ்க்காணும் தொடுப்புகளை சொடுக்கவும்...

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972

http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=1

http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&p=1

முதலாவது பிசாசு மிகவும் கொடியது; இது "இயேசு தொழத் தக்க தெய்வமல்ல" என்று சொல்லும்; என்ன ஒரு ஆச்சரியமென்றால் மற்ற ரெண்டும் பல காரியங்களில் இதனுடன் ஒத்துப்போவதுடன் "இயேசு தொழத் தக்க தெய்வமல்ல" என்ற கருத்துடன் மிகவும் சாந்த சொரூபிகளாக வேடமிடும் ஓநாய்கள்; இவைகள் இதற்கு மேல் தெளிவடைய வாய்ப்பில்லை என்ற தீர்மானத்தின் காரணமாகவே நான் கடுமையாக எதிர்த்து அடையாளங் காட்டுகிறேன்;

இரண்டாவது பிசாசு பத்து கற்பனைகள் வழியாக மட்டுமே இரட்சிப்பு என்ற கருத்தை மேலோட்டமாகவும் அதன் அடுத்தடுத்த கட்டங்களில் வேதத்தில் உயிர்த்தெழுதல் முதலாக ஒவ்வொரு போதனையிலும் விகர்ப்பமானவற்றை போதிக்கும்;

மூன்றாவது பிசாசு மறுபிறவி கொள்கையை உடையது;வேதம் மாத்திரமே வேதமல்ல,புத்தர் போன்ற மகான்கள் மூலமும் ஆண்டவர் பேசியிருக்கிறார்;சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்,சர்வ வல்ல இறைவனுடைய செயல்களை யாரும் கட்டுப்படுத்தவோ புரிந்துகொள்ளவோ முடியாது என்று போதிக்கிறார்; இயேசுவுக்குப் பிறகு பிறந்த அனைவரும் இவரைப் பொறுத்தவரை மறுபிறவிகளே; அதாவது இயேசுவின் மீட்புக்குள் அனைவரையும் கொண்டு வர அவருடைய பிறப்புக்கு முன் பிறந்து வாழ்ந்து மறைந்த அனைவருக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து இறைவன் பிறக்கச் செய்திருக்கிறார்;அந்த வகையில் தானும் கூட ஆதி காலத்தில் சிவபெருமானாகவும் இடைப்பட்ட காலத்தில் இவரும் இவரது சகோதரரும் பிரபலமான இஸ்ரவேலின் சகோதரத் தலைவர்களாகவும் வாழ்ந்தவர்கள்; தற்போது இவர் வாழ்ந்துகொண்டிருப்பது மூன்றாவது பிறவி; இவருக்கு முற்பிறவிகளின் பல காரியங்கள் இன்னும் நினைவில் இருப்பது இவருடைய தனிச்சிறப்பு; தற்போது பரபரப்பாக விவாதிக்கப்படும் இவருடைய தளத்தின் அதிமுக்கியமான கட்டுரையானது சொல்லும் சேதி என்னவென்றால் "இயேசுவானவர் சிலுவையில் கொன்றது சாத்தானின் பகை" யே; சாத்தானை சமாளிக்க வேறு வழியில்லாமல் தேவன் தம்முடைய மகனையே பலியாக செலுத்தி உலக மக்களை மீட்டுக்கொள்ளுகிறார்; மேலும் ஆதிமுதல் பலி செலுத்திய அனைவருமே சாத்தானை குளிர்விக்கவே பலிசெலுத்தினர், என்கிறார்;

'ஆண்டவரையே பிசாசு என்று சொன்னார்களே ' என்று இவை நீலிக்கண்ணீர் வடிக்கும் ஆபத்து இருப்பதால் நாம் இவற்றை பிசாசுகள் என்று சொல்லாதிருப்பதே நல்லது.

ஜாக்கிரதை.. ஜாக்கிரதை... ஜாக்கிரதை..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
Permalink  
 


பரலோகம் இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்...
நரகம் ஒன்று இல்லை என்று அடித்து சொல்வீர்கள்....

இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்....
இயேசுவின் பிறந்தநாளை கொண்டாட மாட்டீர்கள்...


இயேசு வரப்போகிறார் என்பதை அறிவிக்க மாட்டீர்கள்....
திரித்துவம் என்பது வேதத்தில் இல்லை என்பீர்கள்....

ஏகதெய்வ ஒருமைக் கோட்பாட்டை மட்டும் வலியுறுத்துவீர்கள்.....
கிறிஸ்துவுக்கெதிரான அந்திகிறிஸ்து போல நடந்துகொள்வீர்கள்....


முகமதியரோடு சேர்ந்து இயேசுவை நபி என்பீர்கள்.....
யூதரோடு சேர்ந்து அவரை தீர்க்கதரிசி என்பீர்கள்.....

பாவிகள் இயேசுவை கிறிஸ்துவாய் மீட்பராய் அனுபவிக்கையில்...
இந்தப் பரிசேயக் கூட்டத்தினர் கண்கள் குடுடாகிவிட்டனர்.....?


ஒரு கழுதை காணும் சத்தியத்தை
இந்த பிலேயாம்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்....!!!


கோதுமை பயிரிலே களைகளான
இந்த பார்வோன்களின் இருதயங்கள் கடினமாகிவிட்டது.....!!!


வேதத்தை திரித்து பேசும் இந்த சாத்தான்கள்...
இயேசுவை சோதித்ததுபோல...


ஓ...கிறிஸ்தவனே உன்னையும்
வேதத்தைக் கொண்டே சோதிப்பார்கள்....

எச்சரிக்கை!! எச்சரிக்கை!!


->(Selected)<-



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard