நீர் மாத்ரம் எனக்கு (4) நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு (2)
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு (2)
-நீர் மாத்ரம்
(1)
அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு கோட்டையும் என் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு (2) துருகமும் கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு கேடகமும் கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு
(2)
ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு (2) ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நீர் செய்த நன்மைகளை நினைக்கிறேன் கருத்தோடு நன்றி சொல்கிறேன்
நன்றி நன்றி பலி செலுத்தியே நாதன் இயேசுவையே பாடுவேன் கோடி நன்றி பலி செலுத்தியே ஜீவன் தந்தவரைப் பாடுவேன்
1. என் தாயின் கருவிலே நான் உருவான நாள் முதல் நாள்தோறும் காத்து வந்தீரே என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல் நாள்தோறும் காத்து வந்தீரே
-நன்றி நன்றி பலி
2. பாபியாக நான் வாழ்ந்து பாபஞ்செய்த நாட்களிலும் நாள்தோறும் காத்து வந்தீரே நான் உம்மை விட்டு தூரம் சென்று துரோகம் செய்த நாட்களிலும் நாள்தோறும் காத்து வந்தீரே
-நன்றி நன்றி பலி
3. நான் திக்கற்று துணையின்றி திகைத்திட்ட நேரத்தில் துணையாக தேடிவந்தீரே நான் துக்கத்தால் மனம் நொந்து மடிகின்ற நேரத்தில் மகன் என்னை தேடி வந்தீரே
-நன்றி நன்றி பலி
4. நான் மனதார நேசித்த மனிதர்கள் மறந்தாலும் மறவாத நேசர் நீரையா சூழ்நிலைகள் மாறிட்டாலும் மாறிடா உம் கிருபையாலே நாள்தோறும் தாங்கினீரையா
(நீர் செய்த நன்மைகளை நான் நினைத்து பார்க்கிறேன் கருத்தோடு நன்றி சொல்கிறேன்.)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இளம் ஆராதனை வீரர் ஜெர்ஸன் எடின்பரோ அவர்களின் இசைத் தொகுப்பான "நீரே" மூன்றாம் பாகம் வெளியாகி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது;ஆனாலும் அதன் பாடல் தாள் (Song Sheet) இணைக்கப்படாததால் புதிய பாடல்களான அவற்றைக் கற்றுக்கொண்டு நமது சபை ஆராதனைகளில் பாடுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு "நீரே" மூன்றாம் பாகத்தின் பாடல் வரிகளை எனது அன்பு வாசகர்களின் வசதிக்காக பதிக்கிறேன்;இன்னும் இது போன்ற புதிய பாடல்களின் வரிகள் தேவைப்பட்டால் தள நண்பர்கள் தயக்கமின்றி தெரிவிக்கவும்.
பாடல்.1
பேசு சபையே பேசு (4)
இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள் இது தள்ளாடும் முழங்கால்கள் புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள் இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள் இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் (2) (பேசு)
நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்றுசேரும் தசைகளும் புதிதாகத் தோன்றும் ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும் புதுஜீவன் உனக்குள் தோன்றும் (2) (பேசு)
(குறிப்பு:"நீரே" இசைத் தொகுப்பின் ஒரிஜினல் சிடிக்களை வாங்கி மீண்டும் மீண்டும் கேளுங்கள்;அந்த பாடல்களின் இசையும் அதன் வரிகளும் நிச்சயமாகவே உங்களுக்குள் ஒரு மாற்றத்தையும் உரு மாற்றத்தையும் கொண்டுவரும் என்பது நிச்சயம்.)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)