ஆக்கப்பூர்வமான இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கிடைத்தாலே இன்னும் இதுபோன்ற கட்டுரைகளைத் தர இயலும்;இங்கே எனது வாசகர்களே விருந்தை தீர்மானிக்கிறார்கள்; தற்கால சமுதாயத்திலும் பொது மக்களே தலைவர்களை உருவாக்குகிறார்கள்; எனவே வாசக நண்பர்கள் இந்த கட்டுரைக்கு அடுத்த நிலை என்ன என்றோ மேல் விளக்கமோ கேட்காத நிலையில் இது அப்படியே அமிழ்ந்துபோகும் அல்லவா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
பிரச்சினைகளை சமாளிக்கவே பலரும் போராடுகிறார்கள்;ஆனால் பிரச்சினையை சமாளிப்பதல்ல,அதனை தீர்ப்பதும் நிக்ரஹம் செய்வதுமே நிரந்தர தீர்வாகும்;அதைக் குறித்து வாசகர் கோரினால் கேள்விகள் எழுப்பினால் விவரமாக சொல்ல ஆயத்தமாக இருக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நம்முடைய அன்றாட வாழ்வில் பல்வேறு கட்டங்களில் விதவிதமான பிரச்சினைகளை சந்திக்கிறோம்;அந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட தீவிரமாக முயற்சிக்கிறோம்;இறைவனை வேண்டுகிறோம்; பொருத்தனைகள் செய்கிறோம்;எல்லாம் நல்லதே.
பிரச்சினைகளை எதிர்கொள்ளுவதில் பொதுவாக இரண்டுவிதமான அணுகுமுறைகள் உண்டு;ஒன்று பிரச்சினையிலிருந்து எப்படியாவது தப்பிவிடுவது;மற்றொன்று பிரச்சினையை எதிர்கொண்டு அதனை மேற்கொள்ளுவது.
இறைவன் பெரும்பாலான நேரங்களில் பதிலளிக்கத் தாமதிப்பது போலவும் அமைதியாக இருப்பது போலவும் நாம் தவிப்பதற்கு காரணம் நாம் குறிப்பிட்ட பிரச்சினையிலிருந்து எப்படியாவது தப்பிவிட செய்யும் முயற்சியே;இதன் காரணமாக இறைவன் மீதும் மனம் தாங்கல் அடைகிறது.
வேதம் சொல்லுகிறது, "மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்." (நீதிமொழிகள்.19:3)
ஒரு மகன் மீது அக்கறைகொண்ட தகப்பனைப் போன்ற அன்புள்ள இறைவனானவர் அவனை எந்த ஒரு குறிப்பிட்ட பிரச்சினையிலிருந்தும் தப்பச் செய்வதற்கு மட்டுமல்ல,அதனை மேற்கொள்ளும் நுணுக்கத்தைக் கற்றுக்கொடுக்கவும் விரும்புகிறார்;மனிதனோ அந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதைக் காட்டிலும் அந்த பிரச்சினையிலிருந்து எப்படியாவது தப்பிவிடவே யோசிக்கிறான்;இதனால் பிரச்சினையானது பூதாகரமாவதுடன் அதனை மேற்கொள்ளுவதற்கு பதிலாக மனிதன் அதிலேயே வீழ்ந்து மாண்டு போகும் பரிதாப நிலையை அடைகிறான்.
இதன் காரணமாக அநேகர் தங்கள் பரம்பரை சொத்துக்களை இழந்துள்ளனர்; பலரும் தங்கள் வாழ்க்கையை பறிகொடுத்தனர்;அவ்வளவு ஏன் பல நல்ல மனிதர் தங்கள் வாழ்க்கையின் மீது வெறுப்பு கொண்டு தங்கள் இன்னுயிரையே மாய்த்துக்கொண்டனர்.
எனவே நாம் சந்திக்கும் எந்தவொரு பிரச்சினையிலிருந்தும் விடுபடுவதற்கு அவசரப்படும் நேரத்தில் அந்த பிரச்சினையின் ஆரம்பம் எது,அது நம்மை எப்படி சூழ்ந்து வளைத்தது,அதிலிருந்து வெளியேறும் எளிமையான வழிகள் எவை என்பதை நிதானமாக ஆராய்தல் வேண்டும்;எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பிரச்சினையிலிருந்து எப்படியாவது விடுவியும் என்று இறைவனை மன்றாடாமல் அதனை மேற்கொள்ளும் வழிமுறைகளைக் கற்றுத் தாரும் என்று விண்ணப்பிக்கவேண்டும்.
இறைவன் உடனே இடைபட்டு ஒரு அதிசய செயல் மூலம் நம்மைக் காப்பாற்றிவிடவேண்டும் என்றே நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம்;ஆனால் பெரும்பாலான நேரங்களில் இறைவன் எதையுமே செய்கிறதில்லை;அவர் நம்முடைய அர்ப்பணத்தின் அளவைப் பொறுத்து நம்மூலமே எதையும் செய்ய விரும்புகிறார்;அதற்குத் தேவையான ஞானத்தைத் தருகிறார்;செய்து முடிக்கத் தேவையான பெலனைத் தருகிறார்;அந்த குறிப்பிட்ட காரியத்தை மேற்கொள்ளும் போது எதிர்படும் தீமைகளிலிருந்து பாதுகாப்பைத் தருகிறார்;செயல்படவேண்டியது நாமே.
இறைவனுடைய இப்படிப்பட்ட மேலான நல்லெண்ணத்தைப் புரிந்து கொண்டு நிம்மதியும் சுகவாழ்வும் பெற்றிட முயற்சிப்போமாக. (திருமதி.மீனா சோமசுந்தரம் அவர்களிடம் (29.12.2010@9am)பேசிய போது வெளிப்பட்ட கருத்து.)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)