Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்மஸ் புறமதப் பண்டிகை நாளா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: கிறிஸ்மஸ் புறமதப் பண்டிகை நாளா?
Permalink  
 


உங்கள் விளக்கமும் ஏற்கத்தக்கதுதான். இது குறித்த சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது. ஆயினும் இதன் மற்றொரு கோணத்தையும் தெரிந்து கொண்டால் நலமாயிருக்குமே என பதித்தேன். முன்னரே நாம் கேள்விபட்டபடி இது புறஜாதியரின் கொண்டாம்தான். எனவே அதற்கு மாற்றாகதான் இதனைப் பதித்தேன். நூலாதாரங்களையும் தந்தேன். 

உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 


sekarsamuel Wrote on 25-12-2010 21:23:59:
சகோ.சில்சாம் அவர்களே அந்தளவுக்கு கிறிஸ்தவர்களின் மனது சுருங்கிவிட்டதா? ஆச்சரியமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இது போன்ற பண்டிகைகள் புறமதஸ்தர்கள் தங்களின் விழாக்களில் காட்டும் பகட்டு, ஆடம்பரம் மற்றும் அமர்க்களத்தைக் காண்பிக்கவும் வீட்டுப் பிள்ளைகள் நன்றாக அனுபவிக்கவுமான ஒரு வாய்ப்பு அவ்வளவே!

அதிலென்ன தவறு நண்பரே..? நமது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல,எண்ணற்ற அனாதை சிறுவர்களுக்கும் ஆதரவற்ற முதியோருக்கும் இந்த விழாக் காலங்கள் மாத்திரமே சற்றே தங்களை ஈரப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பினைத் தருகிறது;

பண்டிகைக் கொண்டாட்டங்களை நாம் மற்றவர்களிடமிருந்து கற்க வேண்டிய அவசியமேயில்லை,நண்பரே;நம்மிடமிருந்து தான் அவர்கள் கற்கிறார்கள்;அது ஒரு திருமண விழாவோ பிறந்த நாள் விழாவோ அல்லது ஏதோ ஒரு திறப்பு விழாவோ நாமே அனைத்துக்கும் முன்னோடிகளாக இருந்து வந்துள்ளோம்;

ஒலிபெருக்கி உபகரணங்களுக்கும் பக்தி பாடல்களுக்கும் ஆராதனை முறைமைகளுக்கும் ஊடகங்களிலும் நவீன இசையிலும் கிறித்தவர்களே உலக அளவில் ஆக்கிரமித்துள்ளனர்;எனவே கிறித்தவர்களாகிய நாம் ஏதோ ஒன்றை இந்திய பாரம்பரியத்திலிருந்து கற்றுக்கொண்டோமென்றால் அது எதுவென்று தெரியவில்லை;ஒரு வேளை ஒருவரையொருவர் வாரிவிடுவதை கற்றுக்கொண்டோமோ என்னவோ..?

கிறித்துவைப் போல கொண்டாட முழு தகுதி படைத்த தலைவரோ சீர்திருத்தவாதியோ அல்லது மனிதருள் மாணிக்கமோ வேறு யாரேனும் உளரா என்றும் தெரியவில்லை;

வேதத்தின் பஸ்கா பண்டிகை சம்பந்தமான கட்டளைகளை அப்படியே இதற்கு ஒப்பிட்டுப் பாருங்கள்,சற்று தெளிவு பிறக்கலாம்;அல்லாவிட்டால் வேதத்தின் அர்த்தம் பொதிந்த கிறித்துவின் வாழ்வில் முழுமையும் நிறைவேறியதும் நிறைவேற ஆயத்தமாக இருப்பதுமான பண்டிகைகளைக் கொண்டாட வாருங்கள்;

எப்படி ஒரு கதையின் மூலம் மொழியையும் மொழி இலக்கணத்தையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எளிதாக்கப்படுகிறதோ அதுபோலவே பண்டிகைகள் மூலம் வேதம் போதிக்கப்படுகிறது;தெய்வத்துவத்தின் தனித்தன்மைகள் இளந்தலைமுறையினரைச் சென்று சேருகிறது;

வருடமுழுவதும் சிறுவர் விழாக்களை நடத்திக்கொண்டிருக்க முடியாது; ஆனால் கிறிஸ்மஸ் பண்டிகை தொடர்பான ஆடல் பாடல் நாடக நிகழ்ச்சிகளின் மூலம் எண்ணற்றோர் முதன்முறையாக கிறித்துவின் பிறப்பைக் குறித்து எளிய முறையில் கேள்விப்படுகின்றனர்; இதன்மூலம் ஆண்டவருடைய நாமம் மகிமைப்படுவதாலேயே அவர் இதனை அனுமதித்திருக்கிறார்.

கொல்வின் அவர்களே, கிறிஸ்மஸ் விழாவானது புறமதஸ்தரின் - குறிப்பாக பாபிலோனிய பாரம்பரியத்தில் வந்தது என்பதற்கு தெளிவான ஆராய்ச்சி முடிவுகள் ஏற்கனவே இருக்கிறது;தங்கள் கட்டுரையானது அதன் மற்றொரு தியரி அவ்வளவே;இதில் இதுவே சரி ,அதுவே சரி என்பதற்கு எதுவுமே இல்லை.

இரண்டு மனிதன் சம்பந்தப்பட்ட எந்தவொரு காரியமுமே - அது ஒரே பொருள் சம்பந்தமாக இருந்தாலும் அதன் விளைவு ஒன்றாக இருந்ததில்லை; காரணம் மனிதன் எப்போதுமே தன்னை மற்றவனைவிட ஒருபடி மேலானவ
னாகக் காட்டவே போராடுகிறான்;ஆண்டவரோ இந்த போட்டியிலிருந்து விலகி நின்று மனிதன் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்க அனுப்பிவிடுகிறார்;ஆனாலும் அந்த மனிதன் தேடுவது தம்மையே என்றறிந்தால் எடுத்து அணைத்துக்கொள்கிறார்;

அதாவது மையப்பொருளும் மெய்ப்பொருளுமான ஆண்டவரைத் தேடுபவன் ஒன்றுக்கும் உதவாத வீணான காரியங்களில் தனது  பொன்னான நேரத்தை செலவிடுகிறதில்லை;மெய்சோதியான அவரைத் தேடாதிருந்து வேறு எதையோ தேடுவோர் தேடிக்கொண்டே இருக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இதில் நாம் எந்த வகையோ..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

பிரதர் சில்சாம் இதில் வாதிடுவதற்கு எதுவுமில்லை. புறமதத்தவரின் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் விழாவாக கொண்டாடுகிறார்கள் என்ற கருத்து உண்டு். அது தவறானது என்பதை நிருபிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். இக்கட்டுரையில் அப்பழக்கம் எப்போது ஆரம்பமானது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். ஆதிசபையில் கொண்டாடியிருக்க வாய்ப்பில்லை. கட்டுரையில் குறிப்பிட்ட ஆண்டை பார்த்தாலே இது புரிந்துவிடும்

இக்கட்டுரையை சில Editing வேலைகளை செய்தபின்பே பதித்தேன்.  இது சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த டாவின்சி நூலின் பல கேள்விகளில் இதுவும் ஒன்று அதாவது புறஜாதியினரின் பண்டிகைதான் இந்த கிறிஸ்மஸ் என்பது அது தவறான செய்தி அவ்வாறு இது வந்தல்ல என்பதை நிருபிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். சில பொருத்தமில்லாத வாக்கியங்களை இக்கட்டுரையின் நிமித்தம் நீக்கியிருந்தேன். ஏனென்றால் இத்தலைப்புக்கு அவை உபயோகப்படாது என்பதால் ஆகும்.

சகோதரர் sekarsamuel தவறான புரிதலே இதற்கு காரணம்.  இக்கட்டுரைக்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் பின்னூட்டம் இட்டிருந்தார். மீண்டும் ஒரு முறை கட்டுரையை வாசித்துப் பார்த்தல் இந்த உண்மை உங்களுக்குப் புரியும்.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

"அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்." (யோவான்.21:22)

அருமை நண்பர்களே, நாமெல்லாரும் ஒரே இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள்; நமக்குள் தேவையில்லாத வருத்தங்கள் இந்த நல்ல நாளில் வேண்டாமென்று எண்ணுகிறேன்; இங்கே கொல்வின் அவர்களை எதிர்த்து எனது வழக்கமான பாணியில் எழுத எனக்கும் தெரியும்; ஆனாலும் இருதரப்புக்கும் பொதுவான ஒரு கருத்தையே முன்வைத்துள்ளேன்; கர்த்தர் எனக்குக் கொடுத்த கிருபையின்படி ஒரு சிலரை ஆதாயப்படுத்த நான் எப்படியும் வாதாட முடியும், ஆனாலும் சேகர் அவர்களிடம் ஒரு காரியம் சொல்லவேண்டும்; மேற்கண்ட வேத வாக்கியத்துக்கு தங்கள் விளக்கம் என்ன? ஆண்டவர் இங்கே என்ன சொல்ல வந்தார்? இதில் நீங்கள் யார் என்ன விளக்கம் சொன்னாலும் நான் ஏற்கப்போவதில்லை; ஏனெனில் இதைச் சொன்ன கர்த்தரைத் தவிர இதற்கு விளக்கம் சொல்லும் உரிமை யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை அல்லவா?

அப்படியே கர்த்தருடைய இவ்வளவு தாமதமாகும் என்பது முதல் நூற்றாண்டு பரிசுத்தவான்களுக்கே தெரியாதிருந்த நிலையில் அவர்கள் நம்மைப் போல புத்திசாலித்தனமான எந்த வழிகாட்டுதலையும் சபைக்குத் தர இயலாத நிலையிலிருந்தனர்; கிறித்தவம் ஒரு தனி மதமாக அதாவது மார்க்கமாக உருவெடுக்கும் என்பதை முதல் நூற்றாண்டு பரிசுத்தவான்கள் யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்; எனவே அதற்காக எந்த திட்டமும் போடவில்லை; ஆனால் நாம் புத்திசாலிகள்,எப்படி..? ஒருபுறம் " இயேசு சீக்கிரம் வருகிறார் " என்று சொல்லிக்கொண்டே மறுபுறம் ஏழேழு தலைமுறைக்கான சொத்துக்களையும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் போட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறோமே..!

இந்த நிலையில் கர்த்தருடைய வருகை பரியந்தமும் கிறித்தவ விசுவாசத்தை உயிரோட்டமுள்ளதாக வைத்துக்கொள்ளவும் அடுத்தடுத்த சந்ததிக்கு - குறைந்த பட்சம் நம்முடைய கர்ப்பப்பிறப்பான பிள்ளைகளுக்கு இந்த செய்தியைக் கடத்தவும் இதுபோன்ற விழாக் கொண்டாட்டங்கள் உதவும் என்பது நிச்சயம்.

நம்மை நம்பி அநேக தொழிலாளர்கள் பிழைக்கிறார்களல்லவா, அதுவும் தர்மம் தானே? பணமும் சக்தியும் எப்போதுமே ஒரே இடத்தில் குவிவது சமூகத்தின் சமநிலையை பாதிக்கும் என்றே பெரியவர்கள் விழாக் கொண்டாட்டங்களை நியமித்தார்கள் என்பது கண்கூடு; இந்த வாதத்தில் பவுலடிகள் சொன்ன அறிவுரைகளைப் பொதுவாகக் கவனத்தில் கொள்ளலாமே..?

"ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக." (கொலோசெயர்.2:16)

மேற்கண்ட வசனத்தின்படி எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடுபவன் மற்றவனை இழிவாக நடத்தக்கூடாது; அதுபோலவே கொண்டாடாதவனும் மற்றவனைக் குற்றப்படுத்தக்கூடாது என்கிறார், பவுலடிகள்.

"அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன் தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்."(ரோமர்.14:5)

நான் ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணமாக நோக்கங்கள் சிதைக்கப்பட்ட பஸ்கா பண்டிகையை அதன் நாயகரான கர்த்தரே கொண்டாடியிருக்கும் போது அவருடைய பிறப்பாக சபையின் ஆதி அமைப்புத் தலைவர்களால் நியமிக்கப்பட்ட நாளை ஒரு ஞாபகார்த்தமாக கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கமுடியும்?

இன்றைக்கு பெந்தெகொஸ்தே தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தலைவர்கள் எப்போது ஊழல் அரசியல் வாதிகளுடனும் ஆவியில்லாத செத்த சபை என்று சொல்லப்பட்டோருடனும் சேர்ந்து கிறிஸ்மஸ் விழா கொண்டாட ஆயத்தமானோர்களோ அப்போதே எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது; இங்கே நம்மை நடத்தும் தலைவர்கள் என்று யாரும் இல்லை; பின்பற்றத் தகுந்த மாதிரிகளும் அரங்கத்தில் இல்லை; 500 வருடம் அமைதியாக இருந்த தேவன் முதல் நூற்றாண்டில் வெளிப்பட்டாராம்; இதோ 2000 ஆண்டுகள் அமைதியாக இருக்கிறார்; இந்த அண்டத்துக்கு நேரப்போவது என்னவோ?

விசுவாசிகள் அமைதி காக்கவும்..!

கொல்வின் அவர்களுக்கு ஒரு வார்த்தை: ஒரு கட்டுரையின் தலைப்பு கேள்வி வாக்கியமாக அமைந்தாலே அது விவாதத்துக்குரியதாகிவிடும்; எனவே நீங்கள் உங்கள் கட்டுரையின் தலைப்பை செய்தி வாக்கியமாக மாற்றுங்கள் அல்லது நிர்வாகத்தினர் இந்த கட்டுரையை விவாதப்பகுதிக்கு மாற்றட்டும்.

http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=4&topic=2012&Itemid=287


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

உபயோகமான நல்லதொரு செய்தியைப் பதித்த நண்பர் கொல்வின் அவர்களுக்கு நன்றி;பல்வேறு மனிதக் கொள்கைகளால் கவரப்பட்டு ஆடம்பரமாக ஒரு பண்டிகையைக் கொண்டாடுவதும் தவறு;அதேநேரம் உலகமுழுவதுமுள்ள அனைத்துக் கிறித்தவர்களும் தங்கள் இரட்சகர் அவதரித்ததை நினைவுகூறும் நேரத்தில் தேவையில்லாமல் நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்வதும் தவறு.

உதாரணத்துக்கு பண்டிகைகளையும் பலிகளையும் வெறுத்த கர்த்தரே தமது ஜனத்துடன் சேர்ந்து பண்டிகையினை ஆசரித்தார் என்பதை மறக்கக்கூடாது; எனவே வேறுபட்டு நின்று சத்துருவின் சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல் உலகளாவிய கிறித்து சபையுடன் இணைந்து இந்த திருநாளை நன்றியுடன் நினைவுகூறுவதே சிறந்தது..!

Happy Christmas..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 



புறஜாதியாருடைய பண்டிகை நாளான டிசம்பர் 25ம் திகதியையே கொன்ஸ்டன்டைன் கிறிஸ்மஸ் பண்டிகை நாளாக்கினான். பல கிறிஸ்தவர்களும் புறமத தெய்வத்தின் பண்டிகை நாளே கிறிஸ்மஸ் பண்டிகை நாளாக்கப்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர். ஆனால், இது தவறான கருத்தாகும். உண்மையில் கிறிஸ்தவர்களின் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டே புறஜாதி மக்கள் தங்களுடைய பண்டிகையை டிசம்பர் 25ம் திகதி கொண்டாடியுள்ளனர். எனவே. டிசம்பர் 25ம் திகதி பண்டிகை புறமதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு வந்த கொண்டாட்டம் அல்ல.

புறமதப் பண்டிகையின் நாளே கிறிஸ்மஸ் பண்டிகையின் நாளாக மாற்றப்பட்டது என்னும் கருத்து முதற்தடவையாக கி.பி. 17ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே உருவானது. (1) ஆனால் கி.பி 70ல் எருசலேம் தேவாலயம் ரோமர்களால் அழிக்கப்பட்ட பின்னர் கிறிஸ்தவம் முழுமையாக யூதமாரக்கத்திலிருந்து பிரிந்து தனியான ஒரு மதமாகியது. அதன்பின்னர் இயேசுக்கிறிஸ்துவின் மரணம் சம்பவித்த நாளைக் கிறிஸ்தவர்கள் கணிப்பிடத் தொடங்கினார்கள். அக்காலத்தில் வித்தியாசமான கலண்டர்கள் உபயோகத்தில் இருந்தமையால், கிழகத்திய சபைகள் ஏப்ரல் 6ம் திகதியையும் மேற்க்கத்திய சபைகள் மார்ச் 25ம் திகதியையும் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்த நாளாகக் கணித்தனர். பழைய ஏற்பாட்டுத் தீரக்கதரிசிகள், தாங்கள் கருவுற்ற அல்லது பிறந்த தினத்திலேயே மரித்தார்கள் என்னும் நம்பிக்கையின்படி இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்த நாளை அடிப்படையாகக் கொண்டு, கிழக்கத்திய சபைகளில் இயேசு கிறிஸ்து ஜனவரி 6ம் திகதி பிறந்தார் என்றும் மேற்கத்திய சபைகளில் அவர் டிசம்பர் 25ம் திகதி பிறந்தார் என்றும் முடிவு செய்யப்பட்டது. (2). எனவே, கிறிஸ்மஸ் பண்டிகையின் நாள், புறமதப் பண்டிகை நாளின் கிறிஸ்தவ மாற்றம் அல்ல.

கொன்டஸ்டன்டைன் என்னும் அரசன் டிசம்பர“ 25ம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடியதைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. உண்மையில் இவ்வரசனுடைய மரணத்திற்கும் (கி.பி. 337) பின்பே. அதாவது கி.பி 379ம் ஆண்டே முதற்தடவையாக இயேசுக்கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூரும் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ம் திகதி கொண்டாடப்பட்டது. எனவே, கொன்ஸ்டன்டைன் என்னும் அரசனே புறமதப் பண்டிகை நாளைக் கிறிஸ்மஸ் பண்டிகையின் நாளாக மாற்றினான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

(இவ்வாக்கமானது சகோ. எம்.எஸ் வசந்தகுமார் அவர்கள் எழுதிய டாசின்சியின் ஓவியத்தைப் பற்றிய நாவல் உண்மைச் சரித்தையா? என்னும் நூலிலிருந்து பெறப்பட்ட்தாகும்)
பின்குறிப்பு :- இத்தலைப்புக்கு ஏற்றவித்த்தில் மூலகருத்திற்கு எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாமல் சிலவற்றை Edit செய்துள்ளேன்)

References :
(1) W.J. Tighe, : “Calculating Christmas’ in Touchstone, December 2003
(2) C.E. Olson & S. Miesel, The Da Vinci Hoax : Exposing the Errors in Da Vinci Code p, 162-163
ip.gif


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard