நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் ஹிந்து தளத்தில் ஒரு கட்டுரை... இந்துக்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என சங்கனாதம் செய்யும் வகையில் எழுதியிருக்கிறார் வேதம் கோபால் எனும் நண்பர். தாராளமாக தலை நிமிர்ந்து நில்லுங்கள், வேண்டாம் என சொல்லவில்லை ஆனால் போகிற போக்கில் கிறிஸ்தவ மதம் மீதான உங்கள் வெறுப்பை கக்கி விட்டு போயிருக்கிறீர்கள். இணையம் என்பது பலரும் வந்து போகும் இடமாதலால் இந்த திரியில் சில கருத்துக்களை சொல்லலாம் என நினைத்தேன். தமிழ் ஹிந்து தளத்திலேயே கூட சொல்லி யிருக்கலாம் ஆனால் நம் பேரை பார்த்தால் தான் உடனே நீக்கிவிடுவார்களே என்ன செய்வது. ஐயா, நீங்கள் இந்துத்துவத்திற்கு என்ன விதமான மேல் பூச்சு பூசினாலும் அதன் உள்ளில் இருப்பது அடிப்படைவாதமே. உலக நாடுகளுக்கு சகோதரத்துவத்தை நீங்கள் காட்ட நினைக்கலாம் அதில் வெற்றியும் பெறலாம், ஆனால் சக தேசத்தவனை நீங்கள் எவ்வாறு நினைக்கிறீர்கள் என்பதில் தெரிகிறது உங்களது லட்சணம். இங்குள்ள கிறிஸ்தவனையும், இஸ்லாமியனையும் எதிரியாக பாவித்துக்கொண்டு அமெரிக்காவில் இருக்கிற வெள்ளையனை சகோதரன் என்கிறீர்கள். வெள்ளை கலர் தான் எங்க பிரச்சனையா என தெரியவில்லை!
// ஸ்ரீராமநவமி கிருஷ்ணாஷ்டமி போன்ற பண்டிகைகள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, இங்கிலாந்துப் பாராளுமன்றம், ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற போன்ற மதிப்பிற்குரிய அவைகளில் தொடர்ந்து கொண்டாடப்படுகின்றன.
ஒளிவிழாவான தீபாவளி இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதில் உள்ளுர் அரசியல் தலைவர்களும் பங்கு கொள்கிறார்கள். 2003 ஆம் வருடம் தொட்டு வெள்ளை மாளிகையில் இவ்விழா தொடர்ந்து கொண்டாடடப்படுகிறது. 2009இல் இது மேலும் சிறப்பிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா கலந்துகொண்டு கைகூப்பி குத்துவிளக்கு ஏற்றுகையில் வணக்கம் தெரிவித்தார். அப்போது வேத மந்திரங்கள் சொல்லப்பட்டன. ந்யூயார்க், லாஸேஞ்சலஸ், வாஷிங்டன், சிகாகோ முதலான இடங்களில் வான வேடிக்கைகள் நடந்தன. 2009இல் லண்டன் மேயர் தீபாவளி பண்டிகையை கொண்டாடி நற்செய்திகளை கூறினார். கனடாவில் தீபாவளி கொண்டாட்டம் என்பது அந்த நகரின் சமூக ஒற்றுமை விழாவாகக் கருதப்பட்டு அந்த நாட்டின் பிரதமர் தன் நாட்குறிப்பில் தீபாவளி தினத்தை முக்கிய விழாநாளாகக் குறித்துவைத்துள்ளார்.
டிவியில் ”ஜெய் கிருஷ்ணா” மற்றும் “லிட்டில் கிருஷ்ணா” என்ற ஒளிபரப்புகள் அங்கே பிரபலமானவை. இதை தவிர வெள்ளித் திரையிலும் பாலகிருஷ்ணா, கிருஷ்ணா ஆயோ நட்கட் நந்தலால் போன்ற படங்கள் வெளிவந்துள்ளன. ஜகன்நாதர் ரத யாத்திரை லண்டன் நகரில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதைப்போல் விநாயகசதுர்தி விழா உலகெங்கும் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, துபை போன்ற நாடுகளின் தலைவர்களும் பெரும்புள்ளிகளும் விழாக்களில் குதூகூலத்துடன் பங்குகொள்கிறார்கள். விழாக்களை அமைதியாக ஒர் ஒழுங்குமுறையுடன் இந்துக்கள் கொண்டாடுவதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.
பிரிட்டனின் புதிய முதல்வர் “டேவிட் காமிரோன்” (கன்சர்வேடிவ் கட்சியை சார்ந்தவர்) இந்துக்களின் வாழ்க்கை நெறிமுறைகளை மிகவும் புகழ்ந்து பாராட்டி கூறியுள்ளார். லைஸ்டர் என்ற இடத்தில் சமீபத்தில் நடந்த ஒரு இந்து நிகழ்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். பல சமயங்களில் காமரோன் ஆன்மிக குருவான ”முராரி பாபு” அவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். சமீபத்தில் வெம்ப்ளியில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் காமிரோன் கலந்துகொண்டு இந்துக்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இந்துகளின் கடின உழைப்பு குடும்பத்தை கட்டிகாக்கும் பண்பு தேசபற்று போன்ற நல்ல குணங்களின் தாக்கம் பிரிட்டன் மக்களையும் மாற்றியுள்ளது என்றார் அவர்//.
வாஸ்தவம் தான், நீங்களே பெருமைப்பட்டும் கொள்கிறீர்கள். என்னை பொருத்தவரை வெளினாடுகளில் அதுவும் கிறிஸ்தவ நாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் இ ந்தியர்களுக்கு இவ்வளவு சலுகைகளை வாரி வழங்கும் வெள்ளைக்காரனின் செயல் ஒரு வகையான Minority appeasement தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அப்படியல்ல அங்கு இ ந்து கடுமையாக உழைக்கிறான், அ ந்த தேசத்துக்கு விசுவாசமாக இருக்கிறான் என்று நீங்கள் சொல்லவ ந்தீர்களானால் இங்கு வாழும் கிறிஸ்தவன் உழைக்காமல் இருக்கிறானா இல்லை தெசபக்தியில்லாமல் இருக்கிறானா என்பதையும் தெளிவாக சொல்லிவிடுங்கள்.
//மேலைநாடுகளில் இந்துக்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்//
இங்கு கிறிஸ்தவர்களை எப்படி நடத்துவதாக உத்தேசம், நீங்கள் அமைக்க நினைக்கும் ராம ராஜ்யத்தில் (ஒருவேளை அமைன்தால்) கிறிஸ்தவர்களுக்கு இதே வகையான மரியாதை கிடைக்குமா. இங்கு இ ந்துக்கள், கிறிஸ்தவர், இஸ்லாமியர் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் தான் ஆனால் நீங்கள் தான் வெறுப்பு எனும் விஷத்தை தூவுகிறீர்கள்.
//பெரும்பான்மை கிறுத்துவர்களான அமெரிக்கர்களுக்கு இந்துத்துவம் என்றால் என்ன என்று புரிகிறது. ஆனால், பெரும்பான்மை இந்துக்களான இந்தியர்களுக்கு, உச்சநீதிமன்றமே உள்நோக்கம் இல்லாத விளக்கங்கள் அளித்தும் அதை புரிந்துகொள்ள விருப்பமில்லை//
ரொம்ப கவலை தான்... அதே மாதிரி இ ந்தியனுக்கு கிறிஸ்தவம் புரிந்தால் உங்களுக்கு பற்றிக்கொண்டு வருகிறது.
// ஸ்ரீராமநவமி கிருஷ்ணாஷ்டமி போன்ற பண்டிகைகள்அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, இங்கிலாந்துப் பாராளுமன்றம், ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற போன்ற மதிப்பிற்குரிய அவைகளில் தொடர்ந்து கொண்டாடப்படுகின்றன//
அப்படியே இ ந்திய நாடாளுமன்றத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுமா என ஒரு சராசரி கிறிஸ்தவன் கேட்கிறான்... மௌனம் தான் பதிலாக கிடைக்கிறது.
//பல கிறுத்துவர்கள் ஏசுவிற்கும் பையிளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். பைபிள் ஏசுவிற்குப் பின் 200 ஆண்டுகள் கழித்து ஒரு மாபியா கும்பலால் எழுதப்பட்டது. இன்றும் இந்தியாவில் பைபிள் திரும்ப திரும்ப பல்வேறு மாற்றம் பெற்று வருகிறது. அதைப்போல் இஸ்லாமிலும் சொல்லிக் கொள்கிற மாதிரியான ஆன்மீகம் கிடையாது. இன்று உலகில் மக்கள் ஆன்மீகத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் இந்துமத ஆன்மீகம் ஒரு மருந்துபோல் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது.//
ஹைலைட்டே இதுதான், அதான் வ ந்துட்டீகள்ல.... உமது அறியாமையின் உச்சகட்டம் இது என்று தான் சொல்லவேண்டும்.. மாபியா கும்பலாம்... வெங்காயம், இங்கு ராமாயணத்தையே வால்மீகி, கம்பர், துளசிதாசர் என ஆளுக்கு ஒரு டைப்பாக எழுதிவைத்துக்கொண்டுள்ளார்கள். நீங்க கிறிஸ்தவத்தை பத்தி பேச வ ந்துட்டீங்க.. நேரம் தான். தாங்கள் கண்டும் கேட்டும் இரு ந்ததை தான் ஆதி கிறிஸ்தவர்கள் நம்பினார்கள், அ ந்த ஒரு நம்பிக்கைக்காக தான் அவர்கள் கொலைசெய்யப்படும் அளவுக்கு தங்களை ஒப்புக்கொடுத்தனர், பல்வேறு துன்பங்களை சகித்தனர். இது வரலாறு. ஐயா நீங்க சொல்லும் வெள்ளைக்காரா எல்லாம் .. நம்ப ஊருல இருப்பாளே.. கறுப்புச்சட்டைக்காரா, அவாளைபோல எண்ண அலைவரிசை உள்ளவா தான்.. அவாளுக்கு அவாளது நாட்டில் உள்ள மதத்தை எதிர்க்க வேண்டும் அதனால் கிறிஸ்தவத்தில் அது நொள்ளை, இது நொள்ளை என பினாத்திண்டிருப்பா... அதையே வேத வாக்காக எடுத்துன்னடலாமா... அப்போ இங்குள்ள நாத்திகவாதிகள் இ ந்து மதத்தை பத்தி பலவாறா எழுதியும் பேசியும் வ ந்துன்னுருக்காளே, அதையும் அப்போ நம்புறமாதிரிதானே இருக்கனும்.. புத்த மதத்தை காப்பியடித்ததாம்.. இங்க கூட தோமா வழி ஆதி இன்திய கிறிஸ்தவ மதத்தை காப்பியடித்தது தான் சைவமும் வைணவமும் என ஒருவர் சொல்கிரார்.. என்ன செய்ய... நம்பிடறேளா..
// கிறுத்துவம் இன்று உலகெங்கும் தேய்ந்துகொண்டிருக்கிறது. பல சர்சுகள் விலைக்கு விற்கப்படுகின்றன. (பாதரிமார்களின் பாலியல் குற்றத்திற்கான நஷ்டஈட்டு பணம் தருவதற்காக). சர்ச்சுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மங்கிக்கொண்டுவருகிறது.//