உலகப்புகழ் பெற்ற புதைபொருள் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் சர் வில்லியம் ரம்சே என்பவராவார் (1851-1939) சிறந்த கல்விமானும் ஆராய்ச்சியாளருமான இவர் பிரித்தானிய, ஐரோப்பிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் 9 கலாநிதிப் பட்டங்களைப் பெற்றிருந்தார். எனினும், இவர் புதிய ஏற்பாட்டுச் சம்பவங்கள் அனைத்தும் எதுவித சரித்திர ஆதாரமும் அற்ற கட்டுக்கதைகள் என்றே கருதி வந்தார். புதைபொருள் ஆராய்ச்சியாளரான இவர், லூக்கா சுவிஷேசத்திலும் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் தவறானவை என்பதை நிரூபிப்பதற்காக சின்ன ஆசியா பகுதிக்கு (தற்போதைய துருக்கி நாடு) அனுப்பப்பட்டார். புதிய ஏற்பாட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் இடங்களில் தான் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள், புதிய ஏற்பாட்டு விடயங்கள் நம்பகமற்றவை என்பதற்கான ஆதாரங்களைத் தரும் எனும் நம்பிக்கையுடன் இருந்த வில்லியம் ராம்சே, தனது நோக்கத்திற்கு எதிரான ஆதாரங்களையே கண்டுபிடித்தார். அதாவது லூக்காவின் எழுத்துக்கள் (சுவிஷேசமும் அப்போஸ்தலர் நடபடிகளும்) சரித்திர ரீதியாக எவ்வித பிழையுமற்றவை என்பதை வில்லியம் ராம்சேயின் ஆராய்ச்சிகள் அவருக்குச் சுட்டிக் காட்டின.
லூக்கா தனது இரு நூல்களிலும் குறிப்பிடம்ட்டுள்ள சரித்திர விடயங்கள் குறிப்பாக நகரங்கள், ஆட்சியாளர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு சதவீதம் சரியானவை ஒரு சிறிய விடயத்தில் கூட தனது கண்டுபிடிப்புக்கும் லூக்காவின் நூல்களுக்கும் விவரி முரண்பாடும் இல்லை என்பதை வில்லியம் ராம்சே கண்டுபிடித்தார். இது அவர் கிறிஸ்தவராகவதற்கும் புதிய ஏற்பாட்டுச் சரித்திரம் பற்றி சில நூல்களை எழுதுவதற்கும் காரணமாயிற்று. “லூக்கா எழுதியுள்ள விடயங்கள் அனைத்தும் உண்மையானவை“ என்று அவரே குறிப்பிட்டுள்ளார். இயேசுக்கிறிஸ்து தெரிவித்ததுபோல வேதவாக்கியங்கள் தவறாததாயிருக்கின்றது (யோவா 10.35) அதில் எவ்விதமான பிழையும் இல்லை. யூத புதைபொருள் ஆராய்ச்சியாளரான நெல்சன் குலூயிக் என்பார் இதுவரையில் 25,000-க்கும் அதிகமான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சிகளில் ஒன்று கூட வேதவசனத்தை முரண்படுத்துவதாய் இல்லை. அனைத்தும் வேதாகமச் உண்மை என்பதை நிரூபிப்பனவாகவே உள்ளன என்பதை அறியத்தருகிறார். எனவே, நம்மால் வேதவிடயங்களை முழுமையாக நம்பக்கூடியதாயுள்ளது.