Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிசுத்தமில்லாத இரட்சிப்பா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: பரிசுத்தமில்லாத இரட்சிப்பா?
Permalink  
 


தங்கள் பதிவிற்கு நன்றி சகோ.சில்சாம் அவர்களே,
        கிறிஸ்த்து இயேசு நம்மை பாவத்தில் இருந்து இரட்சிக்க வந்தார். பாவத்தில் இருந்து இரட்சிப்பென்றால், பரிசுத்தமடைவது. அப்படி என்றால் இயேசு கிறிஸ்த்துவின் வருகையின் பிரதான நோக்கம், நம்மை பரிசுத்தமாக்குவதே. நம்மை வறுமையில் இருந்து காப்பதைவிட, நோயில் இருந்து காப்பதை விட, அவமானத்தில் இருந்து காப்பதைவிட, பாவத்தில் இருந்து நம்மை காத்து பரிசுத்தமடைய செய்வதே அவர் நோக்கம். ஆனால், இந்த பரிசுத்தத்தை இப்போது பெரும்பான்மையானவர்கள் பிரசங்கிப்பதில்லை. பரிசுத்தம் நமக்கு மிக தூரமான விஷயமாய் இருக்கிறது. ஜெப விண்ணப்பங்களை எடுத்து பார்த்தால், பெரும்பாலும் அவைகள் தங்கள் உடல்நலக்குறைவு, கடன்தொல்லை போன்ற உலக காரியங்களுக்காக இருக்கிறது. யாரும், தன்னுடைய பரிசுத்த குறைவுக்காக வருந்தி, மேலும் பரிசுத்தமடைவதர்க்காக ஜெப விண்ணப்பங்களை செய்வதில்லை. விசுவாசிகளும், தங்களுக்குள்ளே பரிசுத்தாதை பற்றி அதிகம் பேசுவதில்லை. நம்மை நாமே பரிசுத்தப்படுத்திக்கொள்ள முடியாதுதான், பரிசுத்த ஆவியானவரே அதை செய்கிறார். ஆனால், நமக்கு பரிசுத்தத்தை பற்றிய வாஞ்சை இல்லாவிட்டால்....
     இங்கே அனுபவமிக்க பல சகோதரர்கள் எழுதுகிறார்கள். அவர்கள், தகுந்த வசனங்களை காட்டி நம்மை பரிசுத்தத்தில் வளர, ஒரு சில அறிவுரைகளை முன்வைத்தால் நலமாய் இருக்கும்.
    கள்ள தீர்க்கதரிசிகளை அடையாளம் காட்டும் அதே வேகம் பரிசுத்தத்தை குறித்த ஊழியத்திலும் காட்டினால், பலருக்கு நலமாய் இருக்கும். எனக்கும்தான்.
நன்றி,
அசோக்


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அருமையானதொரு களத்தை அமைத்திருக்கிறார்,நண்பர் அசோக் அவர்கள்;இரட்சிப்பு மற்றும் பரிசுத்தம் முறையே இலக்கு மற்றும் அழைப்பு சார்ந்ததாகும்;பரிசுத்தம் இலக்கானால்இரட்சிப்பு அழைப்பாகும்; இரட்சிப்பு இலக்கானால் பரிசுத்தம் அழைப்பாகும்;இரண்டுமே அனுதின பயிற்சியின் மூலமே சாத்தியமாகும்;இது நிறைவேறவே நாம் பிரயாசப்படுகிறோம்;இது குறித்த இரண்டு வேத வசனங்களை கவனத்துக்கு எடுத்துக்கொள்வோம்.

"மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது."(கலாத்தியர்.5:17)

இரட்சிக்கப்பட்ட நம்மை தேவன் மாம்சத்தில் வைத்திருக்கிறார்;ஆனால் ஆவியில் பிழைத்திருக்கிறோம்;மாம்சத்துக்கு அடிமைப்பட்டு ஊழியம் செய்தது போலவே ஆவிக்கு அடிமைகளாக ஊழியம் செய்து மாம்சத்தை மேற்கொள்ளுவது இலக்காகும்;

"உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.(ரோமர்.6:19)

எப்போதெல்லாம் விழுகிறோமோ அப்போதெல்லாம் எழுவது இலக்காகும்; எப்போதெல்லாம் எழுகிறோமோ அப்போதெல்லாம் விழாதிருக்க எச்சரிக்கையுடனிருப்பது அறிவுடைமையாகும்;விழுந்து விழுந்து எழுவது குறித்து நமக்கே துக்கம் உண்டாகுமானால் அது பரிசுத்தாவியினால் உண்டான துக்கமாகும்;

"அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.(எபேசியர்.4:30)


அவர் தங்கியிருக்கும் மையமான ஆதார ஸ்தானம் நமது மனசாட்சி எனும் நுட்பமான பகுதியாகும்; இதுவே உணர்வுகளின் குவியல் மற்றும் முடிவெடுக்கும் அதிகார மையம்; ஆம் என்றால் ஆம் என்று ஆகும்;இல்லை என்றால் இல்லை என்றே ஆகும்;தவறான காரியங்களை எதிர்க்க‌ துணை செய்து நம்மை ஊக்கப்படுத்த பரிசுத்தாவியானவர் இருக்கிறார்;தவறான காரியங்களுக்கு ஊக்கம் தந்து நம்மை கெடுக்க இந்த உலகம் மாமிசம் பிசாசு ஆகிய மூன்று அமைப்புகள் சீர்வரிசை (கட்டி) யுடன் இருக்கிறது;தவறான ஒரு காரியத்தை நிறைவேற்றியதும் உண்டாகும் குற்ற உணர்வில் இந்த மூன்று அமைப்புகளும் காணாமற் போகும்;தனியாகத் தவிப்போம்;அப்போதும் நம்மைத் தேற்ற அருகில் துக்கத்துடன் நிற்பவர் பரிசுத்தாவியானவர் மட்டுமே;மனங்கசந்து கண்ணீர் விட்டோமானால் அவர் நம்மை மன்னிக்க ஆயத்தமாக இருக்கிறார்;

"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்."(1.யோவான்.1:9)


"அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்."(வெளிப்படுத்தின விசேஷம்.22:11)

மேற்கண்ட வாக்கியத்தில் நம்முடைய‌ அழைப்பும் இலக்கும் ஒருசேர விளங்கும்;பதட்டமே தவறுவதற்கு வாய்ப்பாக இருக்கிறதென்றால் பாவத்தை எதிர்கொள்வதில் தயக்கம் இருக்கக்கூடாது என்பதுடன் பரபரப்பும் பதட்டமும் வரவே கூடாது;பாவத்தின் முழு விளைவையும் நன்றாக சிந்தித்து காரணத்துடன் தவிர்ப்பதே சிறந்தது;உணர்ச்சிவயப்ப‌ட்டு சூழ்நிலையின் அழுத்தத்தால் செய்யும் தவறுகளுக்கு கர்த்தருடைய வருகை பரியந்தமும் நிச்சயம் மன்னிப்பு உண்டு;ஆனால் அதையே ஒரு கோல்டன் பாஸாக எடுத்துக்கொள்ளுதல் படுபயங்கரமான விளைவுகளை வாழ்க்கையில் கொண்டு வரும்;தேவ செயலாக வெளியரங்கமாக சிக்கவைக்கப்படுவோம்.

உதாரணத்துக்கு பிரபல ஊழியர் பென்னி ஹின் அவர்களைக் குறித்த அருவருப்பான சர்ச்சைகள் வெளியாகி இருக்கிறது;அது  மற்ற வளரும் ஊழியர்களுக்கு எச்சரிக்கையாகும்.

நண்பர்களுடைய கருத்துக்கு வாய்ப்பளித்து நான் சற்றே அமர்ந்திருக்கிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

இரட்சிப்பிற்கு பிறகும், பல விசுவாசிகளுடைய வாழ்வில் பாவமிருப்பது ஏன்? பல முயற்சிகளுக்கு பிறகும் பல பாவ காரியங்களை விடமுடியாதது ஏன்? இரட்சிக்கப்பட்டவுடன் இவைகள் நம்மை விட்டுப்போய் விடக்கூடாதா அல்லது இவர்கள் இரட்சிப்பில் பிரச்சனையா?

நண்பர்கள் கருத்து தெரிவிக்கலாம்;பரிசுத்தத்தில் எப்படி வளருவது என்றும் கூறலாம்.
நன்றி,
அசோக்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard