புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்த சர்.ஐசக் நியூட்டன் எனும் விஞ்ஞானி ஒரு சமயம், சூரியனைச் சுற்றி பல்வேறு கிரகங்கள் சுற்றுவது போன்ற ஒரு மாதிரி உருவம் ஒன்றைத் தன் மேசையின் மீது செய்து வைத்திருந்தார். அதைப் பார்த்த ஐசக் நியூட்டனின் உதவியாளர் ஒருவர் அவரிடம் “இதைச் செய்தது யார்? என்று கேட்டார்.நாத்திகரான அவ்வுதவியாளருக்குச் சரியான பதிலொன்றைக் கொடுக்க்க்கூடிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த ஐசக் நியூட்டன் “அந்த மாதிரி உருவத்தை யாரும் உருவாக்கவில்லை.அது தானாகவே வந்த்து“ என்று கூறினார்.
நியூட்டனின் வார்த்தைகளை நம்ப மறுத்த அவ்வுதவியாளர் “இவ்வளவு அழகான உருவம் எப்படி தானாகவே வந்திருக்க முடியும்?” என்று கேட்டார்; “சாதாரண ஒரு மாதிரி உருவத்தை உருவாக்குவதற்கே ஒருவர் தேவை என்றால் சூரியனையும் கிரகங்களையும் உருவாக்கத் தேவன் என்றொருவர் இருந்திருக்க வேண்டும் அல்லவா?”என்று தன் நாத்தீக உதவியாளருக்கு பதில் அளித்தார் சர் ஐசக் நியூட்டன்.
நாம் வாழும் உலகம் தானாக உருவானதொன்றல்ல. அது நம் தேவனால் சிருஷடிக்கப்பட்டது. இதைப்பற்றி வேதாகமம் பின்வருமாறு கூறுகின்றது.