கர்த்தருக்காகப் பற்றி எரிபவர்கள் அத்தியாவசியமான சூழ்நிலைகளைத் தவிர யாரிடமும் மன்னிப்பு கேட்கவே கூடாது;ஏனெனில் எந்த ஒரு தேவ பிள்ளையும் சுயமாக செயல்படுகிறதில்லை; இந்நிலையில் நாம் கேட்கும் மன்னிப்பானது கர்த்தத்துவத்தின் ஆளுமையையும் பாதிக்கும்.
தற்கால அரசாங்க நடைமுறைகளையும் இதற்கு கவனத்தில் கொள்ளவும்;ஒரு அரசாங்க பிரதிநிதி கோர்ட்டாரால் அழைக்கப்பட்டு கண்டிக்கப்படுகிறார் என்றால் அதன் பாதிப்பு முழு தேசத்தையுமே பாதிக்கிறது;அதே போல அட்டர்னி ஜெனரல் போன்ற அரசின் பிரதிநிதிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து அரசின் நிலையை விளக்க முயற்சிப்பார்கள்;சில சமயம் தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் பிரதமர் மற்றும் அமைச்சரவை சார்பாக மன்னிப்பும் கேட்கப்படும்.
அதுபோலவே விண்ணக அரசின் மதிப்புமிக்க பிரதிநிதியான ஒரு ஊழியர் அல்லது ஒரு கர்த்தருடைய பிள்ளை மன்னிப்பு கேட்கவேண்டிய சூழ்நிலைகளைக் குறித்து எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்; அதிகபட்சம் பொறுத்துக் கொள்ள வேண்டலாம்.
மற்றபடி மன்னிப்பு கேட்கும் வண்ணமாக செயல்படுவதைத் தவிர்ப்பதில் கவனமாக இருக்கவேண்டும்;மன்னிப்பு கேட்க அதிக பட்ச தாழ்மையும் சுயபரிசோதனையும் தேவைப்படும்.
கணவன், மனைவி, பிள்ளைகள், முதலாளி, தொழிலாளி, நண்பர்கள் வட்டம், சமுதாயம், போதகர், விசுவாசி இன்னும் மேன்மையாக சிருஷ்டிகரும் இரட்சகருமான தேவாதி தேவன் இப்படிப்பட்ட அமைப்புகளில் இந்த மன்னிப்பு எனும் அருமருந்தை பயன்படுத்தும் முறையை கர்த்தருக்கு சித்தமானால் நிதானமாக விளக்க முயற்சிக்கிறேன்.
(தொடரும்)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)