இன்று காலையில் விஜயா எனும் சகோதரிக்காக பிரார்த்தனை செய்த போது - அவர்களுடைய மனதின் ஒருவித பாரத்துக்காக உணர்ந்து பிரார்த்தித்த போது வெளிப்பட்ட ஒரு கருத்து...
நான் ஒன்றுக்கும் உதவாத உதிர்ந்த இலைகளைப் போலவும், உதிர்ந்து விழுந்து காய்ந்த சருகு போலவும் இருக்கிறேனே என்று கலங்குகிறாயோ, உன் வாழ்க்கை வீணாவதில்லை;உன்னை வேர்களின் உரமாகவும் அதன் சாரமாகவும் மாற்றுவேன்;உனக்குரிய பங்கை நிறைவேற்றுவேன்;நீ கிளர்ந்தெழும்பும் கிளைகளின் மகிமையாகவும் அதன் கனிகளின் சாரமாகிய வேர்களின் பங்காகவும் இருப்பாய், எப்படி தண்ணீரில் பாரம் மறைகிறதோ அப்படியாக தேவ அன்பின் நதியை நோக்கி வா,அங்கே உன் பாரத்தை வைத்துவிட்டு அவரில் மகிழ்ந்திரு,அவருடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் மகிழ்ந்து இளைப்பாறு..." இப்படி ஜெபித்து முடித்தபோது எனக்கே ரிலாக்ஸாக இருந்தது.
எனது தனி ஜெபத்தின் இன்பத்தைவிட இதுபோன்று மற்றொரு வேதனை நிறைந்த இருதயத்தின் பாரத்தோடு இணைந்து ஜெபிக்கும் போது பெலனடைகிறேன்;
நான் ஜெபிக்க இதுபோன்ற ஜெபப் பங்காளர்களின் தொலைபேசி அழைப்புகள் உதவுகிறது;எனவே நான் அதுபோன்ற அழைப்புக்காகக் காத்திருக்கிறேன்;
எத்தனையோ முறை இதுபோன்ற ஜெபங்களில் அற்புதமான போதனைக் குறிப்புகள் கிடைத்திருக்கின்றன;இதுவே எனது அன்றாட நடவடிக்கைகளின் முக்கிய நிகழ்ச்சியாகவும் இருக்கிறது;