இது எனது கிறிஸ்மஸ் செய்தியாக இறைவனிடமிருந்து வந்தது..,
Christmas is ... to Share, to Care, to Bear
பகிர்தல், பராமரிப்பு, சுமந்து கொள்ளுதல்
1.பகிர்தல் தேவனுடைய அன்பு இறைமகன் இயேசுவில் பகிரப்பட்டது(யோவான்.3:16); இயேசுவானவரும் அன்புக்கு இலக்கணமாக தம்முடையவர்களை இறுதிவரை நேசித்தார்(யோவான்.13:1); அவர் தம் தூயஆவியான தேற்றரவாளனும் நம் இருதயங்களில் ஊற்றப்பட்டிருப்பதால் நம்மை எந்த சூழ்நிலையிலும் வெட்கப்படுத்தாமல் மேன்மைப் படுத்துவாராம்.(ரோமர்.5:5) 2.பராமரிப்பு யோபு(10:11 12) சொல்வது போல ஆண்டவர் தாயைப் போல நம்மை பராமரிப்பதுடன் அனுதினமும் விசாரிக்கிறார்.எனவே நமது கவலைகளை அவர்மீது வைத்துவிட வேதம் சொல்லுகிறது(1.பேதுரு.5:7 மற்றும் சங்கீதம்.55:22)
3.சுமந்துகொள்ளுதல் ஆண்டவர் நமது (மனப்)பாரங்களைச் சுமந்துகொள்ள ஆயத்தமாக இருக்கிறார்;இயேசு தாமே இதனைச் செய்வதாகச் சொல்லி அனைவரையும் அன்போடு அழைக்கிறார்;நாம் செய்யவேண்டியதெல்லாம் தேவையுள்ளோரை அவரிடம் கொண்டு வருவது மட்டுமே; இயேசு (வானவர்) நம்மை ஏற்றுக்கொண்டு நம்முடைய (மனப்)பாரங்களையும் சுமந்துகொள்ளுவது மட்டுமல்ல,நமக்கு இளைப்பாறுதலையும் தருகிறாராம்.(மத்தேயு.11:28 ) கிராமங்களிலுள்ள சுமைதாங்கி கல்லைப் போல..! நாம் செய்ய வேண்டுவது என்ன? 1.நாம் அனைவரையும் (காரணமில்லாமல்) நேசிக்கவேண்டும். 2.மற்றவர் நலனில் அக்கறை கொள்ளவேண்டும். 3.ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கவேண்டும்(என்று போதிக்கக்கூடாது..!?)
"JOY" to the World..! J=>Jesus O=>Others Y=>Yours
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)