ஆனாலும் இந்த நட்சத்திரங்கள் பொது தளங்களில் இதுபோல தங்களைக் காட்டிக்கொள்வது எந்தவகையிலும் சரியானதாக இருக்கமுடியாது என்பது திண்ணம்; நான் பழமைவாதி என்று சொன்னாலும் சரி, இது கலாச்சார சீரழிவின் அடையாளமே;குறிப்பாக ஆதிசபையின் மாதிரிகளுக்கு முற்றிலும் எதிரானது..!
drpethuru Wrote on 08-12-2010 20:18:06:
இதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன். பொது கலாச்சாரம் சீரழிந்து.... இப்போது கிறிஸ்தவ கலாச்சாரமும் சீரழிய ஆரம்பித்திருக்கிறது. இவர்களெல்லாம் நட்சத்திரங்களாக ’பிரகாசிப்பவர்களாக’ இருந்தால் இப்படியெல்லாம் செய்ய சற்று யோசிப்பார்கள். ஆனால் தங்களை நட்சத்திரங்களாக பிரதிபலிக்க முயற்சி செயவதால் தான் இந்த மாதிரியெல்லாம் செய்யவேண்டியுள்ளது.
அன்பான சகோதரர் மரு.பேதுரு அவர்களின் கருத்துக்கு நன்றிகள்... அடியேனை கர்த்தர், "மாணவர் இயேசுவுக்காக" என்ற இயக்கத்தின் மூலம் சந்தித்தார்; நான் விலகிச் சென்ற போது என்னைத் தேடி எடுத்துக்கொண்டார்;அன்று சகோதரர் ஸ்டான்லி போன்ற அண்ணன்மார் என்னிடம் பொறுமையாக இருந்ததாலேயே இன்று உறுதியான அடித்தளத்தின் மீது சறுக்காமலிருக்க முடிகிறது; அதுபோன்ற மாதிரிகளே மாறாத மாதிரிகள்..,ஒருமாதிரியான மாதிரிகள் உதிரும் உதிரிகள்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// அண்ணே, இப்படி சமூக வலை தளங்களில் படங்களை போடுவது தவிர்க்கலாம் என சொல்லலாம் ஆனால் பிளேபாய் என சொல்வது கொஞ்சம் அதிகப்படியாக தெரிகிறது. சபையில் எதிர் பாலின ஈர்ப்பிற்காக செய்யப்படும் சாகசங்களை போதகர் நிச்சயமாக கண்டிக்கலாம். நீங்கள் சொல்லவரும் மேலை நாட்டு கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை பற்றி தான் கொஞ்சம் எனக்கு தெரிந்ததை சொல்லலாம் என நினைக்கிறேன். பொதுவாக மேலை நாடுகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடுவதில்லை, அவர்களாகவே தேடிக்கொண்டால் தான் உண்டு. அது அவர்களது வாழ்க்கை முறையாகிப்போய்விட்டது. ஜோடிப்பொருத்தங்கள் காலாகாலத்தில் திருமணத்தின் முந்தைய ஒழுக்கத்தோடு கூட திருமணத்தில் முடிந்தால் ஷேமம் தான்.பிள்ளைகளுக்கு பெற்றோர் தான் பெண் தேட வேண்டும் என வேதாகமத்தில் எந்த கட்டுப்பாடும் கட்டாயமும் விதிக்கப்படவில்லை. பெற்றோரால் திருமணம் செய்துவைக்கப்பட்ட ஈசாக்கின் மகனான இஸ்ரவேல் தான் ஒரு பெண்ணின் காதலுக்காக 14 வருஷம் ஆடு மேய்த்தார்.கிறிஸ்துவை அறிந்த ஆணும் பெண்ணும் தேவனுடைய சித்தத்தின் படி திருமணம் செய்தால் என்ன தவறு? எத்தனையோ இளம் விசுவாசிகள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு குடும்பத்தின் வெறுப்பை சம்பாதித்துகொண்டு மற்றொரு விசுவாசியை தான் திருமணம் செய்ய வேண்டும் என முடிவோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு prospective life partners அவர்கள் போகும் சபையில் வரன் கிட்டினால் அது தவறா? இதை ஏன் மேலை நாட்டு ஒழுக்கக்கேடாக நினைக்கவேண்டும். நாம் அறிந்த பல மேலை நாட்டு மிஷனரிகள் அவர்களாகவே அவர்களது துணையை தேடிக்கொண்டவர்கள் தானே (தேவசித்தத்தின் படி : பில்லி கிரஹாம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்) //
ஆகபோக என்னை ஒருவழியாக அண்ணனாக்குகிறீர்கள், இது கொஞ்சமும் சரியில்லிங்'ணா... மேலும் நான் காதல் திருமணத்துக்கு எதிரி என்பதைப் போல சித்தரிப்பதையும் மறுக்கிறேன்;ஆனால் இந்த அடையாளங்கள் எதிரின கவர்ச்சிக்காகவே செய்யப்படுவதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது.
இதனால் இளைஞர்கள் அதிகமாக ஈர்க்கப்படுவது உண்மையே; விசுவாசத்துக்கு ஒப்புக்கொடுக்கும் இளைஞர்கள் அதிகப்பட்சம் 48 மணிநேரம் கூட தாக்குப்பிடிக்க இயலாத நிலையே நிலவுகிறது; காரணம், அவர்களது மனநிலை அப்படிப்பட்டது; இவர்களுடைய ஆராதனைக் கொண்டாட்டத்தில் கண்ணீருடன் ஒப்புக்கொடுக்கும் எத்தனை இளைஞர்களும் கன்னியரும் காதல் தோல்வியினாலும் துரோகத்தினாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தங்களுக்குத் தெரியுமா? அதன் விளைவு இரட்சிப்பாகவும் விசுவாசத்தில் நிலைத்திருப்பதாகவும் மாற்றமடைய செய்யவேண்டிய பணிகள் ஏராளம் உண்டு; ஆனால் இந்த தொடர் ஆராதனைக் கொண்டாட்டங்கள் மனஅழுத்தத்தைப் போக்கும் தற்காலிக மருந்தாகவே விளங்கும் வாய்ப்புகள் அதிகம்; அது தனி விவாதமாக இருக்கட்டும்.
ஆனாலும் இந்த நட்சத்திரங்கள் பொது தளங்களில் இதுபோல தங்களைக் காட்டிக்கொள்வது எந்தவகையிலும் சரியானதாக இருக்கமுடியாது என்பது திண்ணம்; நான் பழமைவாதி என்று சொன்னாலும் சரி, இது கலாச்சார சீரழிவின் அடையாளமே;குறிப்பாக ஆதிசபையின் மாதிரிகளுக்கு முற்றிலும் எதிரானது..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அண்ணே, இப்படி சமூக வலை தளங்களில் படங்களை போடுவது தவிர்க்கலாம் என சொல்லலாம் .சபையில் எதிர் பாலின ஈர்ப்பிற்காக செய்யப்படும் சாகசங்களை போதகர் நிச்சயமாக கண்டிக்கலாம். நீங்கள் சொல்லவரும் மேலை நாட்டு கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை பற்றி தான் கொஞ்சம் எனக்கு தெரிந்ததை சொல்லலாம் என நினைக்கிறேன். பொதுவாக மேலை நாடுகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடுவதில்லை, அவர்களாகவே தேடிக்கொண்டால் தான் உண்டு. அது அவர்களது வாழ்க்கை முறையாகிப்போய்விட்டது. ஜோடிப்பொருத்தங்கள் காலாகாலத்தில் திருமணத்தின் முந்தைய ஒழுக்கத்தோடு கூட திருமணத்தில் முடிந்தால் ஷேமம் தான். பிள்ளைகளுக்கு பெற்றோர் தான் பெண் தேட வேண்டும் என வேதாகமத்தில் எந்த கட்டுப்பாடும் கட்டாயமும் விதிக்கப்படவில்லை. பெற்றோரால் திருமணம் செய்துவைக்கப்பட்ட ஈசாக்கின் மகனான இஸ்ரவேல் தான் ஒரு பெண்ணின் காதலுக்காக 14 வருஷம் ஆடு மேய்த்தார். கிறிஸ்துவை அறிந்த ஆணும் பெண்ணும் தேவனுடைய சித்தத்தின் படி திருமணம் செய்தால் என்ன தவறு? எத்தனையோ இளம் விசுவாசிகள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு குடும்பத்தின் வெறுப்பை சம்பாதித்துகொண்டு மற்றொரு விசுவாசியை தான் திருமணம் செய்ய வேண்டும் என முடிவோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு prospective life partners அவர்கள் போகும் சபையில் வரன் கிட்டினால் அது தவறா? இதை ஏன் மேலை நாட்டு ஒழுக்கக்கேடாக நினைக்கவேண்டும். நாம் அறிந்த பல மேலை நாட்டு மிஷனரிகள் அவர்களாகவே அவர்களது துணையை தேடிக்கொண்டவர்கள் தானே (தேவசித்தத்தின் படி : பில்லி கிரஹாம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்)
-- Edited by joseph on Wednesday 8th of December 2010 02:20:01 PM
இந்த காலத்தில் ஒரு இசைக்கருவியை வாசிக்கத் தெரிந்து சுமாராகப் பாடத்தெரிந்தால் போதும் ஊழியம் செய்கிறேன் என்று இறங்கிவிடுகிறார்கள். பாப் ராப் என்று வார்த்தைகள் புரியாதபடி பாடி ஆடி சிடியும் போடுகிறார்கள். தங்களுக்கு உள்ள நடிக்கும் ஆசையை பூர்திசெய்ய செய்து விட்டு தேவனுக்காக என்று அறிந்தும் அறியாமலும் மாய்மாலப் போர்வையிலுள்ளார்கள்.உலகம் பண்ணுவதையெல்லாம் பண்ணிவிட்டு உலகம் பார்ப்பது போல் பார்க்காமலிருப்பது தான் கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசமா?
நவீன உலகைற்கு ஏற்ப கிறிஸ்துவிற்கும் கிறிஸ்தவத்திற்கும் இலக்கணம் வகுக்கிறார்கள்.தாங்களும் கெட்டு...பிறரையும் கெடுத்து...ம்ம்ம் ..என்னத்த சொல்ல போங்க!!!
இதில் இவர்கள் சொல்லவரும் ஒரு நன்மையான செய்தி என்னவென்றால் வேறு எந்த இளம்பெண்ணும் இவர்கள் மீது காதல் வயப்படக்கூடாது; ஏனெனில் இவர் இன்னொருத்திக்கு சொந்தமாகி விட்டார்; அந்த பெண்ணின் முகத்திலும் இந்த பெருமையைக் காணலாம்;இதன் மற்றொரு பக்கத்திலுள்ள தீமை என்னவென்றால் இனி பலரும் இவர்களைப் போலவே தன்னுடன் இணைந்து ஆராதிக்க வரும் இளம்பெண்களுக்குள் தங்கள் ஜோடியைத் தேடி சாகசங்கள் செய்யலாம்; இது காதல் ஜோடி என்றே யூகிக்க முடியும்; இது தவறான மேல்நாட்டு கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகும்.
சபைகள் தோறும் இந்த கலாச்சாரம் பரவுமானால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதனால் பலவகையிலும் பாதிக்கப்படுவார்கள்; ஆராதிப்பவரின் கண்கள் தேவனை நோக்காமல் இங்குமங்கும் அலைந்துகொண்டிருக்கும்; ஏற்கனவே ஆராதனை வீரர்களும் இசைக்கருவி மீட்டுபவர்களும் கண்களை மூடுவதில்லை; ஜனங்கள் துள்ளிகுதிப்பதை இரசிக்கவும் அவர்களை இன்னும் உணர்ச்சிவசப்பட வைக்கவும் இசைக்கருவிகளின் சத்தத்தையும் வேகத்தையும் அதிகப்படுத்துகிறார்கள்; ஏதாவது ஊருக்குச் சென்று ஏதாவதொரு ஆவிக்குரிய சபையில் (..?) நின்று அங்கே நடைபெறும் ஆராதனை முறையினை கவனித்தால் இது புரியும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
http://www.facebook.com/gerssonedinbaro#!/album.php?id=532537043&aid=215845 இதில் நண்பர் ஷிஜூ அவர்களின் ப்ரொஃபைலில் நான் ஒரு காமெண்ட் போட அது ஒரு பெரிய விவாதமாகி விட்டது...பிறகு அவை நீக்கப்பட்டுவிட்டது;அதில் நான் குறிப்பிட்டது இதுதான்: "அன்பான நண்பரே நீங்கள் ஒரு தேவனுடைய மனிதன் ஊழியர் என்ற முறையில் இதுபோன்ற தோற்றங்களில் உங்களில் வெளிப்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்;உங்கள் மனைவி உங்களுக்கு மட்டுமே அழகாக இருந்தால் போதுமானது" என்று கூறியிருந்தேன்.
அதற்கு பதிலளித்த பலரும், உங்கள் பார்வை தவறு,ஆண்டவருடைய பார்வையில் இது விரும்பத்தகாததல்ல (not displeasing),நீங்கள் உலகம் பார்ப்பது போல பார்க்கக்கூடாது என்று எனக்கு புத்தி சொல்லியிருந்தனர்.
அது இன்றைய கிறித்தவத்தின் மனநிலைக்கு ஒரு சரியான உதாரணமாகவும் விளங்குகிறது..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)