by Yauwana Janam on Friday, 16 December 2011 at 08:39
”பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று." (ஆதியாகமம்.1:24)
மேற்காணும் வசனத்தின் ஆதாரத்தில் ரெவ்.சாம் அவர்கள் போதிக்கிறார்...”ஆண்டவருடைய சிருஷ்டிப்பில் இன்றுவரை யானை யானைக் குட்டியையும் பூனை பூனைக்குட்டியையும் போட்டு வருவது போல கடவுளும் குட்டி போடுகிறார், நாம் தேவனுடைய பிள்ளைகள் என்றால் கடவுள் போட்ட குட்டிகள் அல்லது குட்டி தேவர்கள் என்று அர்த்தம்..!”
அல்லாரும் ஒரு ”ஓ” போடுங்க..? (இருக்கீங்களா..?)
”நாம் இதுவரை, நான் குப்பை... தூசி... புழு... பூச்சி... என்று தவறாக பிரசங்கம் செய்தார்களே அதை யாராவது கேள்வி கேட்டார்களா,அதைவிட இது மோசமா....ஆனால் பாஸ்டர் ஜாண் சபையில் இந்த பிரசங்கம் தானே செய்யப்பட்டிருக்கிறது..? யோவான் எழுதிய நிருபங்களை வாசித்துப்பாருங்கள்... அதில் பாஸ்டர் ஜாண் இவ்வாறே எழுதியிருக்கிறார்.இந்த பிரசங்கம் தான் நமக்குத் தேவை.
ஏதோ நீங்களெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு பரிசுத்தமாக வாழ்ந்து என்றைக்காவது ஒருநாள் இயேசுநாதர் வந்தபிறகே தேவர்களைப் போல அவரைப் போல மாறுவீர்கள் என்று அங்கே எழுதவில்லை. அப்படியானால் சபைக்கு வந்து இதுபோன்ற போதனைகளைக் கேட்கவேண்டியதில்லையே...”
இப்படி போகிறது பிரசங்கம்... கேட்டவர்களுக்கும் கேளாதவர்களுக்கும் ஒரு பிரைஸ் த லார்டு..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
chillsam Wrote@Tcs on 23-02-2011 18:45:41: நாசியில் சுவாசமுள்ள சாதாரண மனுஷன் கண்டுபிடித்து அனுப்பிய சாதாரண சாட்டிலைட்டே இதனை கணித்து சொல்லிவிடுமே..! pgolda Wrote on 24-02-2011 20:18:22: வேறு என்னவெல்லாம் நீஙக அனுப்பிய satellite கணித்து சொல்லியிருக்கிறது சில்சாம் அவர்களே?
rajkumar_s Wrote on 24-02-2011 23:07:49:
கொழுத்தவனுக்கு செழிப்பு உபதேசம் obesity யைக் கொடுப்பதால் அவனுக்கு செழிப்பு உபதேசம் கள்ள போதகமாகத் தெரிகிறது, வேதத்தில் பழுத்தவனுக்கு கடைசி கால வெளிப்பாடுகள் 2000 வருடத்திற்கு முன்னால் வந்த செய்தியாகத்தான் இருக்கும், அடுத்த வேளை உணவில்லாதவனுக்கும், வேதத்தை பரனில் போட்டுவிட்டு ஆனந்த விகடனில் வரும் கிசுகிசுக்களைப் படிப்பவனுக்கும், மேற்சொன்னவை தேவைதான், நீங்கள் p.hd பட்டமே பெற்றிருப்பதால் உங்களுக்கு அது ஒன்றாம் வகுப்பு பாடம் இன்னும் அ, ஆ, இ, ஈ, கூட தெரியாதவனுக்கு..........???? அறம் செய்ய விரும்பும், ஆறுவது சினமும், புதிய பாடம் நாமும் அ, ஆ, இ, ஈ, இல் ஆரம்பித்து தான் p.hd வாங்கியிருக்கிறோம் என்பதை ஒருகணம் சிந்தித்துப் பார்த்துவிட்டு அ, ஆ, இ, ஈ, கற்றுக் கொடுப்பவர்களை ஏளனம் செய்வோமாக....
"அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?" (யோபு.38:2)
சாட்டிலைட் நான் தயாரித்து அனுப்பியதாக எழுதவில்லை கோல்டுடா, சாட்டிலைட் செய்திகளை 24 மணிநேரமும் நாசா போன்ற இணைய தளங்களிலிருந்து பெறமுடியும்;உங்கள் ஆட்கள் அதைப் பார்த்துவிட்டு தூதன் பெயரில் தப்புந்தவறுமாக உளறிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களெல்லாம் சீக்கிரமே தங்கள் மதிகேட்டில் பிடிபடுவார்கள்.
// கொழுத்தவனுக்கு செழிப்பு உபதேசம் obesity யைக் கொடுப்பதால் அவனுக்கு செழிப்பு உபதேசம் கள்ள போதகமாகத் தெரிகிறது, வேதத்தில் பழுத்தவனுக்கு கடைசி கால வெளிப்பாடுகள் 2000 வருடத்திற்கு முன்னால் வந்த செய்தியாகத்தான் இருக்கும் //
இங்கே எழுதும் நண்பர்கள் பலரும் தாங்கள் முழுவதும் கற்றுத்தேர்ந்த மேதாவிகளைப் போல கருத்து சொல்லும் காரணத்தினாலேயே பிரச்சினைகளை மட்டும் எழுதும் என்னைப் போன்றோர் மாற்றுவழிகளையும் தீர்வுகளையும் எழுதுகிறதில்லை;ஆனால் அறிந்த பாவனையில் உலவும் நண்பர்களோ நமது பிரயாசங்களை பரிகசிப்பதுடன் வாதத்தை திசைதிருப்புவதிலேயே கவனமாக இருக்கிறார்கள்.
இங்கே திரு.இராஜ்குமார் அவர்கள் முன்வைத்துள்ள கருத்து ஒரு தத்துவம் போல வாசிக்க இதமாக இருந்தாலும் வேதத்தின் எந்த ஆதார உபதேசத்துடனும் ஒத்துப்போகவில்லை என்பதே உண்மை; செவித்தினவுள்ளவர்களும் சீர்திருத்தத்தை விரும்பாதவர்களும் தங்களுக்கென்று சேர்த்துக்கொண்ட கூட்டத்துக்கும் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொண்ட மேய்ப்பர்களுக்கும் பங்கம் வராதபடி இயன்றமட்டும் ஏழை கிராமவாசியான மீகா போன்றவர்களையும் ஆமோஸ் போன்றவர்களையும் கோபுரங்களில் நின்றுகொண்டு ஆணவத்துடன் பார்த்து முறுவலிக்கலாம்;ஆனால் இரவெல்லாம் வலிக்க வலிக்க தேசத்தின் மீட்புக்காக ஏங்குபவர்களையும் மோசடியாளர்களையும் ஒரே தட்டில் வைத்து எடைபோட்டுக் கொண்டிருப்பவர்களே, obesity - யினால் தவித்துக்கொண்டிருப்பவர்களாவர்.
கடைசிகால வெளிப்பாடுகளைக் கேட்பவன் வேண்டுமானால் வேதத்தில் இன்னும் பழுக்காதவனாக இருக்கலாம்;ஆனால் அந்த வெளிப்பாடுகளை (பொய்களை) ஊதுபவன் தன்னை வேதத்திற்கும் (எழுதப்பட்டதற்கும் ) மேலாக தன்னை நிறுத்த துடிக்கும் பேலியாளின் மனுஷனாகவே கருதப்படுவான்;எனவே செழிப்பு உபதேசம் கொஞ்சம், வெளிப்பாடு கொஞ்சம் என்று காக்டெயில் பார்ட்டி நடத்தும் பாபிலோனின் போதகர்களை நியாயப்படுத்துபவர்கள் ஆரோக்கிய உபதேசத்தைக் கேட்க மனதில்லாத செவித்தினவுள்ளவர்களே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஆதாம் பாவம் செய்தான்,எனவே அவன் சந்ததியாரும் பாவிகளாயினர்; அவன் சந்ததியினர் பாவிகளானதற்கு ஆதாமின் பிள்ளைகளாக இருப்பது மாத்திரமே காரணம் அல்ல, அந்த பாவத்துக்காக தேவன் ஏற்படுத்திய பலியையே புறக்கணிக்கும் பெரிய பாவத்தை செய்யும்போதுதான் பாவிகளாகின்றனர்.
ஆதாம் செய்த பாவத்தைவிட பெரிய பாவம் அந்த பாவத்துக்கான தேவனுடைய தீர்வைப் புறக்கணிப்பதே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அருமையான தேவையான கருத்துக்கள் சில்சாம் அவர்களே., தேவனை விசுவாசிக்காமல் அவர் கொடுத்துள்ள ஆசீர்வாத வசனங்களை விசுவாசித்தல் தேவன் விரும்பாத காரியம். விசுவாசம் என்பது தேவனை மையமாக கொள்வது. அதற்கு தேவனைப் பற்றிய அறிவும் புரிந்து கொள்ளுதலும் அவசியம். அவர் யார் எப்படிப்பட்டவர், குணாதிசயங்கள்,விரும்புபவை போன்றவற்றை சரியாக அறிந்து கொள்வது மிகவும் அவசியம். தேவனிடம் உள்ள விசுவாசமே அவர் சொல்வதை சரியாக விசுவாசிக்கவும், மேலும் சுத்திகரிக்கவும் செய்யும் . அதுவே நமக்கு வாழ்வின் எந்த சூழலிலும் சமாதானத்தையும், தைரியத்தையும், எதிர்நோக்கும் மனோபாவத்தையும் தரும்.
சாத்தான் தந்திரமாக விசுவாசம் மாதிரியே பல வழி குழிகளை வைத்துள்ளான். நாம் கவனமாக இருக்க வேண்டும். ஆபிரகாமிற்கு தேவன் செழிப்பைத் தந்தார் என்று கூறுபவர்கள் முதலில் மக்களை ஆபிரகாம் போல தேவனை விசுவாசிக்கவும்,அவர் வழிநடக்கவும் போதிக்க மறப்பதேனோ? இல்லை ஆபிரகாம் போன்று விசுவாசமுடையவர்களுக்கு தான் போதிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் இந்த போதனை பயன் தராதே.தேவனிடமே விசுவாசம் இல்லையென்றால் நிச்சயமாக அவர் வார்த்தைகளிலும் நமக்கு இருக்க முடியாது. இங்கே ஜனங்கள் தேவனை விசுவாசிக்காமல் அவர் தரும் ஆதாயத்துக்காக அவரை தேடினார்கள் அப்பொழுது இயேசுவும் அவருடைய சீஷரும் அங்கே இல்லாததை ஜனங்கள் கண்டு, உடனே அந்தப் படவுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள்.கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைக் கண்டபோது: ரபீ, நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர் என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்களென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.அழிந்து போகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்.....யோவான்.6:24-27 ”அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.யோவான்.6:53”
இதனைக் கேட்டு அனேக சீஷர்கள் கிறிஸ்துவை விட்டு பின்வாங்கினார்கள். காரணம் அவர்கள் அவர் கூறினதை மாத்திரமே பார்த்தனரே தவிர கூறினவர் யார் எப்படிபட்டவர் என்பதை உணரவில்லை.
// சகோ.சில்சாம், போதகர் சாம் அவர்கள் அற்புத ஊழியம் செய்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. அவருடைய செய்தியை ஓரிரு முறை மட்டும் பல மாதங்களுக்கு முன் நான் கேட்டுள்ளேன். அதில் எதுவும் எனக்கு ஞாபகமில்லை. அவரது உபதேசம் செழிப்பு உபதேசம் என்பதை உங்கள் பதிவிலிருந்துதான் நான் அறிகிறேன். //
அன்புக்குரிய நண்பர் சாம் அவர்களே, நீங்கள் குறிப்பிட்டது போல ரெவ்சாமோ அல்லது வேறு யாராக இருந்தாலும் அது நம்முடைய தள நண்பர்களான சுந்தர் அன்பு கோவைபெரியன்ஸ் போன்றவர்களாக இருந்தாலும் ஆதாரமில்லாமலோ அல்லது அவர்களைக் குறித்து நிதானிக்காமலோ குற்றஞ்சாட்டுவது முறையல்ல, அல்லவா..?
எனவே ரெவ்சாம் (ஆங்கிலத்தில் revsam இப்படியே அவர் குறிப்பிடப்படுவதால் இதையே தொடருவோம்..) அவர்களைக் குறித்து நாம் விமர்சிக்கும் முன்பதாக நாம் ஏதாவதொரு மார்க்கபேதக் குழுவைச் சார்ந்தவர்களாக இருந்து குற்றஞ்சாட்டாதவர்களாக நம்மைக் காத்துக்கொள்ளுவது அதிமுக்கியம்; ஏனெனில் எந்த ஊழியமோ அல்லது மார்க்க பேதமோ ஆவியானவருடைய அனுமதியில்லாமல் இங்கே தொடரமுடியாது என்பது வெளிப்படையான வேத சத்தியம்; எனவே நாம் ஒருவரைக் குற்றஞ்சாட்டும்போது அதிக ஆபத்தானதொரு பணியை மேற்கொள்ளுகிறோம் என்ற உணர்வுடன் செயல்படுவது நம்முடைய ஆத்துமா ( என்பதே வெறுங் கற்பனை என்பர், கோவை பெரியன்ஸ் யெகோவா சாட்சி குழுவினர்)- வின் ஈடேற்றத்துக்கு உதவியாக இருக்கும்; இது ஒரு வெடிகுண்டு நிபுணர் அதனை செயலிழக்கச் செய்யும் முயற்சியைப் போன்றதே; அவசரப்பட்டாலோ அல்லது ஏதேனும் தவறு இழைத்துவிட்டாலோ அவரையே அது கொன்றுவிடும் அல்லவா..?
எனவே சமதளத்திலிருந்து நோக்கி, ஆரோக்கிய உபதேச ஊழியர்களின் தவறான போக்குகளைச் சுட்டிக்காட்டுவதுடன் எந்தவொரு துருபதேசக்காரனும் அவர்களைக் குற்றஞ்சாட்டாமலும் தடுக்க வேண்டியதாக இருக்கிறது; இதன் காரணமாக என்னைப் போன்றவர்கள் ரெட்டை நிலையெடுக்கிறோமோ என்ற ஐயம் ஏற்படுவது இயல்பு; ஆனாலும் இந்த காரியத்தில் நாம் தெளிவாக இருக்கிறோம்; எப்படியெனில் இயேசுவை தெய்வமாகத் தொழுவதை மறுத்து அவர் வழியாக வந்த பெரிதான இரட்சிப்பைக் குறித்து பரியாசம் செய்யும் நீ, எங்கள் ஊழியர்களைக் குறைகூற உனக்கு உரிமையில்லை என்கிறோம்;
உதாரணமாக நாம் இந்தியாவின் பிரச்சினையைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது அடுத்த நாட்டுக்காரனான வெறிப்பிடித்த பாகிஸ்தான்காரன் வந்து நம்மை தூஷித்தால் அவன் வாலை ஒட்ட நறுக்குவோம் அல்லவா? அவன் இங்கே வந்து குழப்பம் விளைவிக்க நாம் அனுமதிக்கவே மாட்டோம்; அதுபோலவே நாம் வைத்திருக்கும் ஒரே அடையாளமாகிய இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழும் அமைப்புக்குள் வராத யார் நம்மையும் நம்முடைய ஊழியர்களையும் தூஷித்தாலும் நாம் அதனைத் தடுப்பதற்கு உண்டான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளுவோம்; நாம் இதைக் கூட செய்யாமல் "கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்" என்ற வசனத்தின்படி அதையும் அவரே பார்த்துக்கொள்வார் என்று விலகிச் செல்வோமானால் நான் கேட்கிறேன், நீங்கள் எங்காவது வெளியே சென்றால் உங்கள் வீட்டைப் பூட்டுகிறதில்லையா, அல்லது எங்காவது உங்கள் வாகனத்தை நிறுத்தும்போது பூட்டுகிறதில்லையா? ஏனெனில் கர்த்தரே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வேன் என்று சொல்லியிருக்கிறாரே, என்று கூறமுடியும்; ஆனால் சாத்தான் இப்படி ஆண்டவரை சோதித்த போது கூறிய பதிலே இதற்கும் பதிலாக அமையும்."ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். " (லூக்கா.4:10,11,12 )
எனவே நம்முடைய விசுவாசத்துக்கெதிரான சாத்தானுடைய அனைத்து சூழ்ச்சிகளையும் மேற்கொள்ள நாம் பயிற்றுவிக்கப்பட வேண்டும்; அதற்காக அமைப்புரீதியான நேர்த்தியானதொரு அமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்பது எனது உள்ளத்தின் பாரமாகும்; எப்படி இயேசுவைப் புறக்கணித்து பிதாவை மையப்படுத்தி தவறாக உபதேசித்து அப்பாவிகளை வஞ்சிக்கிறார்களோ அதுபோலவே மற்றொரு கூட்டத்தினர் இயேசுவை மட்டும் பிரதானப்படுத்தி பிதாவாகிய தேவனைப் புறக்கணித்து அவரே இவர் இவரே அவர் என்றும் கூட்டம் தவறாக உபதேசித்துக் கொண்டிருக்கிறது; இதையும் நாம் கவனத்தில் கொண்டுள்ளோம்; ஆனாலும் இவ்விரண்டு பிரதானமான ஸ்தாபனங்களையும் அவர்கள் வழியிலேயே சென்று தந்திரமான சில வழிமுறைகளின் மூலமே மேற்கொள்ள முடியும்; நமது இடைவிடாத முயற்சிகளின் காரணமாக எவ்வாறு மும்மூர்த்திகளின் கூட்டணியை உடைத்து வெட்ட வெளிச்சமாக்கினோமோ அதே வழிமுறைகளின் மூலம் இதையும் சாதிப்போம்; அதற்கு சற்று அவகாசமும் அதிகமான தேவ கிருபையும் வேண்டும்.
இறுதியாக, நம்முடைய ரெவ்சாம் அவர்களின் ஆதாரப் போதனை (தை) யான, "நாம் இரட்சிக்கப்பட்டு பரலோகம் போக வேதம் கொடுக்கப்படவில்லை, இதிலுள்ள ஆசீர்வாத வசனங்களை இடைவிடாமல் பேசி செழிப்புள்ள வாழ்க்கையை இங்கே அனுபவிக்கவே கொடுக்கப்பட்டுள்ளது" என்பதற்கு நேரெதிராக மற்றொரு சொற்றொடர் எனக்கு குறுஞ்செய்தியாக (SMS) நண்பர் ஒருவருடைய கைபேசி (Mobile) யிலிருந்து வந்தது; அது சொல்லும் சேதி இதுதான்.., "If Prosperity & blessing are d 1ly need 4 mankind, d old testament is surely enough & Jesus wouldn't hv 2 come. But He came 2 save ppl frm their sin & Mat 6:33 "அதாவது மத்தேயு.6:33 இல் வாசிக்கிற வண்ணமாக, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ஏனெனில் செழிப்பும் ஆசீர்வாதமும் மட்டுமே மனுக்குலத்தின் தேவையாக இருந்திருக்குமானால் நமக்கு பழைய ஏற்பாடு மாத்திரமே போதும், இயேசு இங்கே வந்திருக்கவேண்டிய அவசியமே இருந்திராது; அவர் பாவிகளை அவர்தம் பாவத்திலிருந்து மீட்கவே இந்த உலகுக்கு வந்தார் என்று வேதம் சொல்லுகிறது; இந்த சிறிய சொற்றொடரானது எனக்கு பல்வேறு சத்தியங்களை சொல்லாமல் சொல்லித் தந்தது; இதனை எனது நேசத்துக்குரிய வாசகர்களும் விரும்புவர் என்று எண்ணுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சில்சாம்: //இந்த திரியின் நோக்கத்துக்கு வெளியே நாம் சென்று விடாதிருக்க முயற்சிக்க வேண்டும்; ஏனெனில் போதகர் சாம் அவர்கள் அற்புத ஊழியத்தில் நம்பிக்கையுள்ளவரல்ல; எனவே அவருடைய உபதேசம் தொடர்பான கருத்துக்களையும் முன்வைக்க வேண்டுகிறேன்.//
சகோ.சில்சாம், போதகர் சாம் அவர்கள் அற்புத ஊழியம் செய்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. அவருடைய செய்தியை ஓரிரு முறை மட்டும் பல மாதங்களுக்கு முன் நான் கேட்டுள்ளேன். அதில் எதுவும் எனக்கு ஞாபகமில்லை. அவரது உபதேசம் செழிப்பு உபதேசம் என்பதை உங்கள் பதிவிலிருந்துதான் நான் அறிகிறேன்.
சில்சாம்: //நாம் இரட்சிக்கப்பட்டு பரலோகம் செல்ல வேதம் கொடுக்கப்படவில்லை;வேதத்திலுள்ள டெக்னிக்குகளைப் பயன்படுத்தி இந்த உலகிலேயே நீண்ட காலம் சௌக்கியமாக செல்வ செழிப்புடன் வாழவே வேதம் கொடுக்கப்பட்டது என்கிறார்; இந்த கூற்றை நிறுவ அவர் ஏழை ஊழியர்களையும் அவர்களது தரித்திர நிலைமையும் பரியாசம் செய்யத் தவறுவதில்லை.//
//போதகர் சாம்.P.செல்லத்துரை அவர்கள் மீண்டும் மீண்டும் ஆசீர்வாதத்தைக் குறித்தும் வெற்றிகரமான வாழ்க்கையைக் குறித்தும் மட்டுமே போதிப்பதால் மக்கள் எழுச்சி கொள்ளுகின்றனர்,ஊக்கப்படுத்தப்படுகின்றனர் என்பதை மறுக்க முடியாது;ஆனாலும் இந்த செழுமை உபதேசமானது (Prosperity Gospel) முழுமையான சீஷத்துவ பணியை நோக்கி அவர்களை நடத்துகிறதா என்பதில் மிகப் பெரிய கேள்விகுறி எழுகிறது.//
உங்களது இப்பதிவுகளின் அடிப்படையில் நான் சொல்வது:
செழுமை உபதேசம் என்றாலே அதில் உலகத்திற்குரியதை சொல்லியேயாக வேண்டும். ஆனால் வேதாகமமோ இப்படிச் சொல்கிறது.
1 யோவான் 4:5 அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். (இவ்வசனத்தில் அவர்கள் எனும் வார்த்தை கள்ளத்தீர்க்கதரிசிகளையே குறிக்கும் என வசனம் 1-லிருந்து அறியலாம்)
யாக்கோபு 4:4 விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
இத்தனை தெளிவாக வசனம் கூறியுள்ளதால், சாம் செல்லத்துரை மட்டுமின்றி வேறு யாராக இருந்தாலும், அவர் உலகத்திற்குரியதைச் சொன்னால் அவர் கள்ளத்தீர்க்கதரிசியே என்றும் அவரது உபதேசம் கள்ள உபதேசமே என்றும் திட்டவட்டமாகச் சொல்லலாம்.
//அற்புதங்களும் அடையாளங்களும் ஜனங்களுக்காக என்றில்லாமல், வசனத்தைப் பிரசங்கித்த ஊழியர்களுக்காகவே நடக்கவேண்டியதாயிருந்தது. மற்றபடி, தனிப்பட்ட ஒருவன் அற்புதத்தைக் கண்டுதான் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் கருத்துக்கு ஆதாரமான வசனம் வேதாகமத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.//
அற்புத ஊழியங்களைக் குறித்த ஒரு கோணத்தில் தமது கருத்துக்களை முன்வைத்துள்ள சாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்;நீங்கள் சந்தோஷுக்கு நல்லதொரு பதிலைக் கொடுத்துவிட்டதுபோலிருந்தாலும் இந்த திரியின் நோக்கத்துக்கு வெளியே நாம் சென்று விடாதிருக்க முயற்சிக்க வேண்டும்;ஏனெனில் போதகர் சாம் அவர்கள் அற்புத ஊழியத்தில் நம்பிக்கையுள்ளவரல்ல;எனவே அவருடைய உபதேசம் தொடர்பான கருத்துக்களையும் முன்வைக்க வேண்டுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சந்தோஷ் எழுதியது: //பவுலின் கண் பார்வை போகவில்லை எனில், மீண்டும் அது அதிசயத்தக்க விதமாக கிடைக்கவில்லை எனில் பவுல் இயேசுவை ஏற்று கொண்டிருக்க மாட்டார்.//
இது ஒரு தவறான தகவல். பவுல் சந்திக்கப்பட்ட சம்பவத்தை நன்கு படித்துப்பாருங்கள். அப். 9:3-ம் வசனத்தின்படி சடிதியான/பிரகாசமான ஒளியைக் கண்ட மாத்திரத்தில் அதன் பிரகாசத்தைத் தாங்கமுடியாமல் கண்களை மூடி பவுல் கீழே விழுந்துவிட்டார். பின்னர் இயேசு பவுலிடம், “சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய், நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்” என்று சொன்ன உடனேயே பவுல் இயேசுவிடம், “ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்” எனச் சொல்லிவிட்டார் (4,5,6 வசனங்கள்). அதற்குப் பிறகு பவுல் தனது கண்களைத் திறந்து பார்த்தபோதுதான் தனது கண்கள் குருடாகிப் போனதை அறிந்தார் (8-ம் வசனம்). இயேசுவோடு நடந்த உரையாடல் நேரம் முழுதும் பவுல் கண்களை மூடியே இருந்ததால் அப்போது அவரது கண்கள் குருடானதை அவர் அறிந்திருக்க மாட்டார்.
எனவே பவுலின் மனமாற்றத்திற்கும் “அவரது கண்கள் குருடாகி அது அதிசயமாக் கிடைத்ததற்கும்” சம்பந்தமில்லை.
ஒளியாக வந்த இயேசுவைப் பார்த்ததும் அவரது சத்தத்தைக் கேட்டதும்தான் பவுலின் மனமாற்றத்திற்குக் காரணமாக இருந்திருக்கமுடியும். இயேசு ஒளியாக வந்தது, பவுலிடம் பேசியது ஆகியவற்றை அற்புதமாக எடுத்துக்கொண்டு, அந்த அற்புதத்தால் பவுல் மனம் மாறினார் என வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள்.
அற்புதத்தால் பவுல் மாறினார் என்றே வைத்துக் கொள்வோம். உண்மையில் அக்கால கட்டத்தில் அற்புதம் அவசியமாகத்தான் இருந்தது. பேதுரு போன்ற அப்போஸ்தலர்கள் மூலம் அற்புதமும் அடையாளமும் நடக்கவேண்டும் என பேதுருவைவிட அவர்களோடிருந்த மற்ற சீஷர்கள் பெரிதும் விரும்பி, அதற்காக ஜெபிக்கவும் செய்தனர்.
யூதரின் தலைவர்களான வேதபாரகர் மற்றும் ஆசாரியரால் புறக்கணிக்கப்பட்ட இயேசுவைப் பிரசங்கிப்போரின் உயிர் போகக்கூடிய அளவு அக்காலத்தில் ஆபத்து இருந்தது. இதற்கு ஸ்தேவானின் மரணம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
ஒரு சப்பாணியைக் குணமாக்கி வெகுஜனங்களால் ஈர்க்கப்பட்ட பேதுருவையும் யோவானையும் ஆசாரியர்கள் அழைத்து விசாரித்து பயமுறுத்தி விடுதலைசெய்ததாக அப். 4:1-21 கூறுகின்றன. இந்நிலையில் பேதுருவும் யோவானும் மீண்டும் தைரியமாக வசனத்தைப் பிரசங்கிக்க வேண்டுமெனில், அற்புதம் அவசியமாயிருந்தது. எனவேதான் அவர்களோடிருந்த மற்ற சீஷர்கள் இவ்வாறு ஜெபம் பண்ணினார்.
அப். 4:24-30 அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டுத் தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். 25 புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும், 26 கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. 27 அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, 28 ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். 29 இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களைத் தேவரீர் கவனித்து, 30 உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்
அற்புதங்களும் அடையாளங்களும் ஜனங்களுக்காக என்றில்லாமல், வசனத்தைப் பிரசங்கித்த ஊழியர்களுக்காகவே நடக்கவேண்டியதாயிருந்தது. மற்றபடி, தனிப்பட்ட ஒருவன் அற்புதத்தைக் கண்டுதான் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் கருத்துக்கு ஆதாரமான வசனம் வேதாகமத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
வசனத்தைச் சொல்லும்போது ஒருவன் ஏற்றுக்கொண்டால் நல்லதுதான்; ஏற்காவிடில், அவனுக்கெதிராக காலில் படிந்த தூசியை உதறிவிட்டு அடுத்தவனிடம் செல்லவேண்டும் என்றே இயேசு கூறினார். மற்றபடி ஒருவன் இயேசுவை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அற்புதம் நிகழவேண்டும் என்பது அவசியமில்லை.
நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த பவுலின் வசனங்களை (2 தெச. 2:9-12) மீண்டும் சுட்டிக்காட்டுகிறேன். அக்கிரமக்காரனின் வருகையால் வல்லமையும் அடையாளங்களும் பொய்யான அற்புதங்களும் நடக்கத்தான் செய்யும். இவைகள் யாருக்கு நடக்குமென்றல், (பரலோக ராஜ்யத்திற்கான) சத்தியத்தை விசுவாசிக்காமல் (உலகத்துக்கான) அநீதிகளில் பிரியப்படுகிறவர்களுக்கே நடக்கும். இவர்கள் ஆக்கினைக்குள்ளாகும்படி பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக, அந்தக் கொடிய வஞ்சகத்தை தேவனே அனுப்புவார் எனப் பவுல் தெளிவாகக் கூறுகிறர்.
எனவே அற்புதங்களின்மேல் மனதை வைப்பதென்பது நாம் வஞ்சிக்கப்படுவதற்கே ஏதுவாகும். எனவே தற்காலத்தில் அற்புதங்களைச் செய்வதாகக் கருதப்படுவோரிடம் நாம் சற்று ஜாக்கிரதையாயிருப்பதே நல்லது.
-- Edited by sam on Tuesday 11th of January 2011 06:40:12 AM
இந்த திரியை தொடருவதா மூடிவிடுவதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்; ஆனாலும் இந்த திரியானது குறுகிய காலத்தில் வாசகர்களின் அமோக ஆதரவுடன் வெற்றிபெற்றுள்ளதைக் காண்கையில் வாசகர்கள் சரியான போதகத்தை அறியவும் தவறான உபதேசங்களை குறித்த தெளிவான நடத்துதல்களைப் பெறவும் விரும்புவதாகவே தோன்றுகிறது; அதனை நிரூபிக்கும் வண்ணமாக நமக்கு அருமையான நண்பர் எபி அவர்கள் நான் விட்ட இடத்திலிருந்து மீண்டும் துவங்கியிருக்கிறார்; நான் மட்டுமே இங்கே எழுதி ஆதிக்கம் செலுத்தாவண்ணமாக நண்பர்களுடைய பங்களிப்புக்காகக் காத்திருந்தேன்; தற்போதும் கூட வாசகர் ஒரு உதவிசெய்யலாம்; இங்கே விவாதிக்கப்படும் செய்திகளிலிருந்து சரியான போதனையை எதுவென்று அறிய விரும்பினால் அல்லது நீங்கள் அறிந்திருந்தால் அதனை இங்கே பதிக்கலாம். போதகர் சாம் .P அவர்கள் தனது ஊழியத்தின் ஆரம்பகாலத்தில் அதிகமாகச் சொல்லி உபதேசித்த வசனத்தைக் குறித்த தனது கருத்தினை நண்பர் எபி அவர்கள் முன்வைத்திருக்கிறார். "மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்." (நீதிமொழிகள்.18:21) // நாவினால் தேவனுக்கு பிரியமானவற்றையும் பேசலாம் மற்றும் தேவன் விரும்பாதவற்றையும் பேசலாம். நாம் எதை தேர்வு செய்கிறோமோ அதற்கேற்ற பலன் கிடைக்கும். ஏனெனில் நாம் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று வேதம் சொல்கிறது. இதுவே இந்த வசனத்தின் அர்த்தமாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. // இது ஓரளவுக்கு சரியான விளக்கமாக இருந்தாலும் முழுவதுமே பொருந்தாது என்று எண்ணுகிறேன்;எப்படியெனில் நீதிமொழிகளின் சிறப்பு என்னவென்றால் மற்ற வேதப்பகுதிகளைப் போல அதனை முன்பின் வசனங்களுடன் ஒப்பிட்டு அதன் பொருளை அறியமுடியாது;ஒவ்வொரு வசனமும் தனி அதிகாரம் போல சிந்திக்கத் தூண்டும்;அதன் சரியான ஜோடியை வேறு பகுதியிலிருந்து தேடியெடுத்து உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டியிருக் -கும்;ஆனாலும் இந்த குறிப்பிட்ட வசனத்தைப் பொறுத்தவரையிலும் அது அதன் முந்தைய வசனத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது;அதிலிருந்தே நாம் போதனையைப் பெறமுடியும். "அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்." (நீதிமொழிகள்.18:20) -இந்த வசனத்தின்படி ஒரு மனுஷன் தான் பேசும் வார்த்தைகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது தெரியவருகிறது;ஆனாலும் அதனால் அவன் ஆத்துமாவுக்கு என்ன பலன்? அல்லது அதனால் அவனைச் சார்ந்த அல்லது அவன் சார்ந்திருக்கும் இந்த சமுதாயத்துக்கும் சபைக்கும் அவன் குடும்பத்தாருக்கும் என்ன பலன்? என்று சிந்தித்தோமானால் வேத வார்த்தைகளை ஒரு மந்திரம் போல சொல்லிக் கொண்டே இருந்தால் மாத்திரம் போதாது என்பதும் விளங்கும். "தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." (1கொரிந்தியர்.4:20) அது நீதிமொழிகளோ அல்லது எந்தவொரு பழைய ஏற்பாட்டின் வேதப் பகுதியோ மிகவும் முக்கியமானதும் புறக்கணிக்கப்பட முடியாததுமானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது; ஆனாலும் புதிய ஏற்பாடு என்று வரும்போது அதில் மட்டுமே கிறித்துவின் மூலம் கிடைத்த புதிய வெளிப்பாடுகளும் கிருபைகளும் அப்படியே முழுவதுமாக எடுத்துக்கொண்டு செயல்படுத்தக்கூடியதாக இருக்கிறது; எனவே பழைய ஏற்பாட்டின் எந்தவொரு போதனையையும் புதிய ஏற்பாட்டுடன் சம்பந்தப்படுத்தி போதிக்கும் போது ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்; அப்படி இந்த நீதிமொழிகளின் வாக்கியத்தின்படி ஒரு மரணத்துக்குரிய ஒரு அறிக்கை செய்ததாலேயே பரிசுத்தவான்கள் துன்புறுத்தப்பட நேர்ந்தது என்றும் சொல்லலாமே; ஆனாலும் விசுவாச வார்த்தைகளின் மூலம் உள்ளான மனுஷனில் பெலங்கொள்ளுகிறோம் என்பதும் புதிய ஏற்பாட்டின் போதனைகளில் உண்டு; ஆனாலும் விசுவாச வார்த்தைகளினால் ஐசுவரியமடைய முடியும் என்பதோ வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதோ புதிய ஏற்பாட்டின் போதனையல்ல; இதுபோலவே தெய்வீக சுகம் உட்பட எந்தவொரு பழைய ஏற்பாட்டின் போதனைக்கும் நேர்மாறான காரியங்கள் புதிய ஏற்பாட்டில் உண்டு என்று சொல்லலாமா? அதைக் குறித்தும் கவனத்தில் கொண்டு ஆராய வேண்டும். விசுவாசவார்த்தைசொல்லுவது, வெற்றிகரமான -சுகவாழ்வு வாழ்வது, பெரும் பணக்காரனாவது போன்ற எந்தவொரு சுய முன்னேற்றப் போதனையும் கிறித்துவையும் அவரது பாடுகளையும் மையமாக வைத்து போதிக்கப்படாமல், அவர் பாடுபட்டு முடித்துவிட்டார், இனி நமக்கு எல்லாம் சௌக்கியம் மட்டுமே; ஆசீர்வாதம் மட்டுமே, இந்த உலகமே செழிப்பான இன்ப வனமாக மாறிவிடுவதால் பரலோகம் குறித்து கவலை கொள்ள வேண்டாம்; நாம் இரட்சிக்கப்பட்டது பரலோகம் செல்வதற்காக அல்ல; ஒரு நல்ல ஆசீர்வாதமான செழிப்பான உயர்தரமான வாழ்க்கையை இங்கே வாழ்ந்து வெற்றியை நிரூபிப்பதே ; அதற்காகவே வேதம் கொடுக்கப்பட்டது; அதனைச் சொல்லச் சொல்ல நாம் முன்னேறிக்கொண்டே இருப்போம் என்றெல்லாம் பேசுவதும் எழுதுவதும் எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது, அதனால் நானும் வசதியானவனாகவும் புகழ்பெற்றவனாகவும் மாறிவிடுவேன்;ஆனால் இதுவா சுவிசேஷம் இதுவா சபைக்கு பிரதான கட்டளையாகக் கொடுக்கப் பட்டது? இயேசுவானவர் பாடுபட்டு பரமேறிச் செல்வதற்கு சற்று முன்பதாகக் கொடுத்ததே பிரதான கட்டளை எனப்படுகிறது;அது சொல்வது என்ன? "அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். " (மத்தேயு.28:18,19,20) இந்த வசனங்களை மீண்டும் மீண்டும் வாசித்துப் பாருங்கள்;அதையா இன்றைய ஊழியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்? மனசாட்சியைத் தொட்டு எந்த சஞ்சலத்துக்கும் சபலத்துக்கும் ஆளாகாமல் -நம்முடைய கண்ணையும் கருத்தையும் கவர்ந்த அனைத்து தலைவர்களையும் ஒரு கணம் மறந்துவிட்டு - நம்முடைய ஆண்டவர் அதோ உயிர்த்தெழுந்த வல்லமையுடன் கம்பீரமாக நின்றுகொண்டிருப்பதையும் மனக் கண் முன்பாகக் கொண்டுவந்து -அதையொட்டியே நாம் போதிக்கப்படுகிறோமா என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்; நாம் இந்த உலகத்திலேயே வெற்றிகரமானதொரு வாழவேண்டுமானால் பாவத்தைக் குறித்து கண்டித்துணர்த்தும் போதகங்களே இன்றைய உடனடி தேவையாகும்; அதுமாத்திரமே நம்மை நீதியுள்ளவர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் நிறுத்த வல்லது; ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தான்; அதை அவனுக்கு நீதியாக எண்ணி னார்;அதுபோலவே நாமும் இந்த வேதத்திலுள்ள ஆசீர்வாத வார்த்தை களையெல்லாம் விசுவாசித்து அதையே மீண்டும் மீண்டும் அறிக்கையிட்டுக் கொண்டே இருந்தால் அதுவே நமக்கும் நீதியாகவும் அதன்மூலம் நாமும் ஆபிரகாமைப் போல இந்த உலகத்தில் பெரும் செல்வந்தராகி விடலாம் என்று ஆசை காட்டப்படுகிறது; இங்கே நுணுக்கமானதொரு திருக்கு வேலையை (Twist) போதகர் செய்கிறார்;ஆபிரகாம் விசுவாசித்தது, கர்த்தரை; ஆனால் இவர் விசுவாசிக்கச் சொல்வது ஆபிரகாமிடம் சொல்லப்பட்ட வார்த்தையை; வார்த்தையை விசுவாசிப்பது நல்லதுதான், தவறல்ல; ஆனால் வேதம் சொல்லுகிறது, "அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்." (ஆதியாகமம்.15:6)
ஆனால் இவர்கள் என்ன போதிக்கிறார்கள்,ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்ட ஆசீர்வாதங்களையல்லவா விசுவாசிக்கச் சொல்லுகிறார்கள்,வித்தியாசம் புரிகிறதா? இன்னும் இந்த வசனம் மேற்கோள் காட்டப்பட்ட ரோமர்.4:17 -ஐயும் கூட தவறாகவே வியாக்கியானம் செய்கிறார்கள்;இதுவும் ஆசீர்வாதத்துக்கான ஏக்கமாகவும் அதற்கான முயற்சியாகவுமே இருக்கிறது. "அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்." (ரோமர்.4:17) ஆனாலும் பின்வரும் வசனங்களிலேயே அது சொல்லப்பட்ட நோக்கம் முழுமையடைகிறது என்பதை அறிவோமாக. "நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற் காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.(ரோமர்.4:24,25 ) புதிய ஏற்பாட்டின்படி நாம் விசுவாசிக்க வேண்டியது என்ன என்றும் நமக்கு நீதியாவது எது என்றும் தெளிவாகப் போதிக்கப்பட்டுள்ளது; அதையே நாம் கைக் கொள்ள அப்போஸ்தலர்கள் வழியாகக் கட்டளையிடப்பட்டுள்ளோம்; ஏனெனில் அவர்களில் ஒருவரும் ஐசுவரியத்தை நாடி போதிக்கவே இல்லை; இறுதியாக, "மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்." (நீதிமொழிகள்.18:21) எனும் வசனத்துக்கு ஜோடியாக அடியேன் ஒரு வசனத்தை முன்வைக்கிறேன்., "தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்."(மத்தேயு.10:39) இதன்படி கிறித்துவுக்காக மரிக்கவும் ஆயத்தமாக இருக்கும் ஒரு மனுஷன் அதன் காரணமாகவே மரிக்கிறான் என்று கொள்ளலாமா? இங்கே பிரமாணம் மாறுகிறதே? மேலும் இங்கே பாவி என்பவன் பாவியாவதில்லை; அதுவே அவனுக்கு நீதியாகிறது.ஆனால் தன்னை நீதிமான் என்பவனோ அல்லது தன்னிடத்தில் பாவமில்லை என்பவனோ குற்றவாளியாகிறான்; இது எப்படி? எனவே மனுஷீக ஞானத்தினாலும் தந்திரோபாயத்தினாலும் தரப்படும் போதகமாகிய மதுவில் மயங்கி சத்தியத்தையும் பரிசுத்தமும் தியாகமுமான வாழ்வையும் விட்டு விலகி மாயையில் நாம் சிக்கிவிடாதிருக்க எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். "அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்." (எபேசியர். 4:13,14,15 ) மேற்காணும் வசனத்தின் அடிப்படையில் எனது சிந்தனைகளை தொடர்ந்து எழுதுவேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
"மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். (நீதிமொழிகள்.18:21)”
நாவினால் தேவனுக்கு பிரியமானவற்றையும் பேசலாம் மற்றும் தேவன் விரும்பாதவற்றையும் பேசலாம். நாம் எதை தேர்வு செய்கிறோமோ அதற்கேற்ற பலன் கிடைக்கும். ஏனெனில் நாம் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று வேதம் சொல்கிறது. இதுவே இந்த வசனத்தின் அர்த்தமாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.
இந்த திரியில் நான் துவங்கி நிறுத்தியுள்ள இரண்டு குறிப்புகளைத் தவிர நண்பர் சந்தோஷ் அவர்களுடைய கருத்தும் இணைந்துள்ளது;இதில் சம்பந்தப்பட்ட விஜய் மற்றும் சாம் ஆகிய நண்பர்கள் வரும் வரை நான் காத்திருக்கிறேன்,பிறகு தொடருவேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
தேவனோடு இணைந்த ஒரு வாழ்க்கை வாழவே கிருத்துவன் அழைக்கபட்டிருக்கிறான். சபைகள் எனப்து மனிதனின் இந்த வாழ்க்கைக்கு உதவி செய்வதற்காக இருப்பவையே. ஒரு மனிதன் தன் வாழ்னாளில் 90 சதவீத பகுதியை வெளியில் சமுதாயத்தை சந்திப்பதில் கழிக்கிறான் ஒரு பத்து சதவீத நேரம் மட்டுமே சபையில் இருக்கிறான்.
சபையிலும் மற்றும் இந்த 90 சதவீத நேரத்திலும் தேவனோடு இணைந்த வாழ்வு எவ்வாறு வாழ்வது என்பதை பற்றி சொல்வதும், அதற்கு அந்த மனிதனை ஏற்றவனாய் ஆக்குவதும் தான் சபையின் வேலையாகும். இப்படியாக மனிதனே ஆலயம் என்ற நிலையை அடைவதற்க்கு பதிலாக இன்று சபை மட்டுமே ஆலயாக இருக்கிறது.
சபையில் தேவனோடு தொடர்பு கொள்ளும் மனிதன் சமூகத்தை சந்திக்கும் போது அந்த தொடர்பை இழந்து விடுகிறான். சரியான போதகம் என்பது மனிதனின் மனதையும், இருதயத்தையும் ஊடுறுவி அவனை எப்போது தேவனோடு இணைந்து இருக்க செய்வதே. ஆனால் ஒரு சில போதகர்களால் மட்டுமே மனிதர்களின் மனதையோ, இருதயத்தையோ பாதிக்க முடிகிறது.
ஒரு போதகரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பதும், பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்துபடி போதிப்பது எனபதும் வேறு வேறு விஷயங்கள்.
ஒரு போதகருக்கு தகுதியாக நாம் பரிசுத்த வாழ்க்கையையும், தேவ பக்தியையும் கூறுவோம். ஆனால் விட்னஸ் லீ என்னும் தேவ ஊழியர் ஒரு போதகருக்கு தகுதியாக இவற்றோடு கூட அந்த ஊழியர் நொறுக்கப்பட்ட அனுபவத்தை கடந்து வந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
இந்த அனுபவத்தின் வழியாக கடந்து வராத போதகர்களால் மிகுந்த துன்பத்தின் வழியே கடந்து செல்லும் மனிதனை தேவனுக்குள் காத்து கொள்ள முடியாது.
என் வாழ்வில் துன்பத்தின் வழியே கடந்து சென்ற போது எந்த போதகமுமே என்னை தாங்க கூடியதாய் இல்லை. அது செழிப்பின் போதகமானாலும் சரி, துன்பப்படுவதை பற்றின போதகமானாலும் சரி எதுவும் தாங்க முடியவில்லை. அதற்கு காரணம் போதகர்கள் இவ்வாறான மக்களுக்கு சரியான வார்த்தையை சரியான ஆழத்துடன் சொல்லும்படிக்கு அவர்கள் வாழ்க்கையில் அனுபவபடாததே.
இது போன்ற நேரங்களில் ஒரு மனிதனுக்கு உதவி செய்வது புத்தகங்களே. சபையில் போதகர்களால் அடைந்ததை விட புத்தகங்களால் அடைந்தது அதிகம் என்று கூட சொல்லலாம். ஆனால் அந்த புத்தகத்தை எழுதியவர் யார் என்றோ, அவர் எப்படிபட்ட வாழ்க்கை வாழ்கிறார் என்பதோ எனக்கு தெரியாது மற்றும் அது எனக்கு தேவையும் இல்லை. எனக்கு தேவை எனக்கு முக்கியமான போதகமே.
இது போலவே சொல்லும்படியாக பாவம் எதுவும் செய்யாமல் இரட்சிக்கப்பட்டு போதகர் ஆன ஒருவரால், பாவத்தினால் தடுமாறும் ஒருவரை தேவனுக்குள் நிலை நிறுத்த முடியாது, ஏனெனில் பாவத்தை குறித்து அனுபவபூர்வமாக கண்டித்து உணர்த்த அவரால் முடியாது.
ஒரு போதகர் தேவ பக்தி உள்ளவராக இருப்பாரானால் அவருக்கு தேவனுடைய சரியான வார்த்தை கிடைக்கும். இருந்தாலும் அவர் அந்த வார்த்தையை குறித்த அனுபவம் இல்லாது இருந்தார் என்றால் அவர் செய்தியில் ஆழம் இருக்காது. அதை கேட்பவரையும் மாற்ற முடியாது. அதாவது அவர் நொறுக்கப்பட்ட அனுபவத்தை பெறாதிருந்தால் தேவனுடைய சரியான வார்த்தை அவருக்கு கிடைத்தும், அதை சொன்னாலும் அது துன்பப்படும் மனிதனுக்கு போதுமானதாக இருக்காது.
அது போலவே உருவ வழிபாட்டிலிருந்து புதிதாக வந்து, அதற்க்கும், தேவனுக்கும் இடையே தடுமாறும் ஒருவரை சரியானபடி மாற்ற பரம்பரை கிருத்துவர்களால் முடியாது. ஏனெனில் அவர்களுக்கு உருவ வழிபாட்டிலிருந்து மனம் திரும்பின அனுபவம் இல்லை.
இப்படியே எல்லா தகுதிகளும் உடையவர்களாக ஊழியர்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்த்தால் ஒருவர் கூட ஊழியம் செய்ய தகுதி இல்லாத நிலையில் உள்ளவர்கள் என தெரிய வரலாம்.
இன்று இருக்கும் அனேக போதகர்கள் நல்லவர்களாக இருந்தும், தேவ பக்தி உடையவராக இருந்தும் சொல்லும் செய்தியில் ஆழம் இல்லை (ஆழம் என்பது அவர்கள் அனுபவத்தினூடே வருவது). பொதுவாக அதிக பணம் சம்பாதிக்கிறார்கள் என குற்றம் சாட்டப்படும் ஊழியரிடமும், அனேகரை தங்கள் பக்கம் கவருகிறார்கள் என்று சொல்லப்படும் ஊழியர்களிடமும் மற்றவர்களை பாதிக்கும் அளவுக்கு அவர்கள் பேச்சில் ஆழம் இருப்பதை காண முடியும்..
ஜாய்ஸ் மேயர் அவர்களின் பிரசங்கங்கள் மனிதர்கள் ஆயிரம் வருட ஆட்சிக்கு வந்து விட்டது போலவும் அவர்கள் மிகவும் சிறிய விசயங்களிலேயே முன்னேற வேண்டும் என்பது போலவும் (நான் கேட்ட வரை) அமைந்திருக்கும். இவரின் பிரசங்கம் ஆன்மிக பிரகாரமாக அவ்வளவாய் ஆழமில்லாதது போல் இருப்பதனால் நான் எப்போதாவது தான் பார்ப்பேன், அது மட்டுமில்லாது இவரின் பிரசங்கத்தால் யார் தேவனை நோக்கி பார்ப்பார்கள் என்றும் நினைத்திருந்தேன்.
என் மனைவி இரட்சிக்கபடாதவர் (இன்று வரை). நான் ஏதாவது கிருத்துவ நிகழ்ச்சி பார்த்தால் டிவியை நிறுத்த சொல்லி சணடையிடுவாள். நான் எதிர்பார்க்காத வண்ணமாக என்னோடு கூட ஜாய்ஸ் மேயர் நிகழ்ச்சியை பார்த்த அவள் இந்த அம்மா நல்லா பேசறாங்க என்றாள். அது மட்டுமல்லாது அவர்களுடைய மார்பகங்கள் உண்மையானது அல்லவென்பதும் இருந்தும் அவர்கள் அந்த அளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் எனபதும் அவளை மிகவும் பாதித்தது.
அப்போதுதான் என் மனைவி போன்ற ஒருவர் இயேசுவை பற்றி அறிய ஜாய்ஸ் மேயர் மூலம் ஒரு சாத்தியக்கூறு இருப்பதை புரிந்து கொண்டேன்.
ஜாய்ஸ் மேயர் ஆடம்பரமாக வாழ்கிறார்கள் என்று அவர்களை குற்றம் சொல்லி, அவரின் ஊழியம் தடைபெறுகிறது என்று வைத்து கொள்வோம். இப்போது அவரை போன்றவர்கள் மூலமாக மனம் திரும்ப வாய்ப்பு உள்ளவர்களுக்கு போதிக்க யாரால் முடியும்?
தேவ ஊழியர்களான தினகரன் லாசரஸ் போன்றவர்களின் மேல் குற்றம் சாட்டுவதானால் அவர்கள் ஊழியம் தடைபட்டால் அவர்களால் நடை பெற வேண்டிய ஊழியத்தை அல்லது அவர்களால் நடை பெற்ற ஊழியத்தை போன்ற ஒரு ஊழியத்தை குற்றம் சாட்டுபவர் அவரது ஊழியத்தோடு சேர்த்து செய்வாரா? அல்லது அதுதான் முடியுமா?
ஒரு ஊழியர் தனிப்பட்ட வாழ்க்கையில் சரியில்லாதவராக இருந்தால், அவரை தண்டிக்க தேவன் உண்டு. நாம் பார்க்க வேண்டியது அவரது போதகத்தையும் அதில் உள்ள தேவ வல்லமையையுமே.
கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் மற்றவர்களை குற்றம் சாட்டுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை என்பதையும் நாம் அறியலாம்.
உதாரணமாக பிசாசு துரத்தும் ஒரு ஊழியரின் நிகழ்ச்சியை நாம் குற்றம் சாட்டலாம். ஆனால் அதை டிவியில் பார்த்த .வேறு ஒரு ஊரில் இருக்கும் மனிதர் இயேசுவினால் பிசாசை ஓட்ட முடியும் என்பதை உணர்ந்து அசுத்த ஆவி பிடித்த தன் உறவினரை ஒரு கிருத்துவ ஊழியரிடத்தில் அழைத்து செல்ல வாய்ப்புண்டு. இது போல நாமே எதிர்பார்க்காத பல விதங்களில் தனக்கு தேவையான்வர்களை அழைக்க தேவனால் முடியும்.
(இயேசு பிசாசை ஓட்டுவார் என்று யாரும் பிரசங்கிப்பதில்லை. இரட்சிப்பார் என்றே சொல்கின்றனர். இதனால் பிற மதத்தை சேர்ந்த அனேகருக்கு இயேசு பிசாசை ஓட்டுவார் என்பது தெரியாமல் இருக்கிறது. பிசாசினால் பிரச்சனை உள்ளவர்கள் அதற்கென்று உள்ள தர்காவிற்கோ, கோவிலுக்கோ செல்லுகின்றனர். இவர்களில் அனேகர் இயேசுவை ஏற்று கொள்ள வேண்டும் எனில் இயேசு பிசாசை ஓட்டுவார் என்ற செய்தி பிரசங்கிக்கபட வேண்டும் ஆனால் இது கிருஸ்துவர்களின் கெளரவத்தை பாதிக்கும் என்பதால் இந்த செய்தியை பிரசங்கிக்க மாட்டார்கள். ஆனால் இந்த பிசாசு ஓட்டும் ஊழியர் இயேசுவை பற்றின இந்த செய்தியை அறிவிக்கிறவராய் இருக்கிறார்)
ஆடம்பரமாக வாழும் ஊழியர்கள் வேதத்தை படிக்காதவர்கள் அல்ல. அதனால் அவர்களுக்கு வேதத்தின் வழியே புத்தி சொல்வதும் அவசியமற்றது. "சிவன் சொத்து குல நாசம்" என புற மதத்தவர்களாலேயே வழங்கப்பட்டிருக்க தேவனுடைய சொத்தை தன்னுடைய ஆடம்பரத்துக்காக பயன்படுத்துபவர்கள் மேல் எவ்வளவு தேவ கோபம் இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தும் அதை அசட்டை செய்கிறார்கள் எனில். அவர்கள் நரகத்துக்கு போக தன்னை திடப்படுத்தி கொண்டவர்கள் என்றே அர்த்தம். ஆனாலும் சில நேரங்களில் அவர்கள் போதகம் குறையில்லாமல் இருக்க வாய்ப்புண்டு.
ஆடம்பரமாக வாழும் ஊழியர்கள், பாவத்தில் இருக்கும் ஊழியர்கள் போன்றோரின் உண்மை நிலை வெளிப்படுத்தபட வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மற்றும் அவரை தாங்குபவர்கள் உணர்வடைய வேண்டும்.
//அற்புதம் எல்லா இடங்களிலும் எல்லா மதங்களிலும் நடக்கிறது. எனக்கு ஒரு அற்புதம் நடந்துவிட்டது, நான் பயனடைந்துவிட்டேன் அதனால் நான் அங்கே தவறு நடந்தாலும் அதை எதிர்க்க மாட்டேன் என்பது வடிகட்டிய சுயநலம். பவுல் யூதமார்க்கத்தில் ஒரு ராஜகுமாரன் போல வலம்வந்தார். கனம் பொருந்தியவராக இருந்தார். ஆனால் இயேசுவால் தொடப்பட்டபோதோ அவருக்காக சகலத்தையும் குப்பையென்று எண்ணி தன்னை ராஜகுமாரன் போல நடத்தியவர்களையே கிறிஸ்துவின் நிமித்தம் பகைக்கத் துணிந்தார். அவர்களால் கல்லெறியப்பட்டார், அவர்கள் கையிலேயே மரணமும் அடைந்தார். எது முக்கியம் இயேசுவா? சுயமா?//
BRO. SAM WROTE
//அதாவது ஒரு ஊழியரிடமிருந்து அற்புதம் பெற்றால், அவர் என்ன செய்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல், ஊழியருக்கு நன்றி செலுத்தவேண்டும் என்கிறீர்கள்.
கடைசி நாட்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அற்புதம் செய்வார்கள் என இயேசு சொல்கிறாரே?
மத்தேயு 24:24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
மாத்திரமல்ல, பவுல் சொல்வதையும் படியுங்கள்.
2 தெச 2:9-12 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
இப்படியெல்லாம் வேதாகமம் சொல்லும்போது அற்புதத்தையே சொல்லிச் சொல்லி நாமும் ஏமாந்து மற்றவர்களையும் ஏமாறச் செய்யலாமா? அற்புதம் செய்து, பிசாசு துரத்தி, தீர்க்கதரிசனம் சொன்ன ஊழியர்களின் கதி பற்றி மத்தேயு 7:22,23 சொல்வதை அறிவீர்கள் அல்லவா? அந்த அக்கிரமக்காரர்களை நம்பிச் செல்லும் ஜனங்கள் இடறுவதற்கு வாய்ப்பு உண்டல்லவா? எனவே அந்த அக்கிரமக்காரர் பற்றி எச்சரிப்பது அவசியந்தானே?//
சகோதரர் சாம் மற்றும் விஜய் அவர்களே,
உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வெகு காலம் ஆகி விட்டதற்க்காக வருந்துகிறேன்.
வேறு மதத்திலிருந்து, இயேசுவை ஏற்று கொண்டவர்களின் பிரச்சனைகள் பரம்பரை கிருத்துவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இவ்வாறு இயேசுவை ஏற்று கொண்ட அனேகர் சத்தியம் வேதத்தில் உண்டு என்பதற்காகவோ அல்லது நரகத்துக்கு பயந்தோ ஏற்று கொண்டவர்களல்ல. அவர்கள் வாழ்வில் வந்த தாங்க முடியாத பிரச்சனையாலும் அது அதிசய விதமாக இயேசுவால் தீர்க்கப்பட்டதாலும் தான் இயேசுவை ஏற்று கொண்டார்கள். நான் குறிப்பிட்ட அதிசயங்கள் நான் இயேவுக்குள் வர வாய்ப்பாய் இருந்தது. அதாவது அந்த அதிசயங்கள் இல்லாவிடில் நான் இயேசுவை ஏற்று கொண்டிருக்க மாட்டேன்.
பவுலின் கண் பார்வை போகவில்லை எனில், மீண்டும் அது அதிசயத்தக்க விதமாக கிடைக்கவில்லை எனில் பவுல் இயேசுவை ஏற்று கொண்டிருக்க மாட்டார். அற்புதத்துக்கு விரோதமாக அவர் சொன்ன வசனத்தையே சொல்லும்படிக்கு அவரின் இந்த வசனமும் கிடைத்திருக்காது.
அடுத்ததாக அசுத்த ஆவி பிடித்த அனுபவம் அனேகருக்கு இல்லை. அதனால் அனேகர் அதை மிக சாதாரணமாக கருதுகின்றனர். அசுத்த ஆவி உள்ள மனிதன் முதலில் மனிதனே இல்லை. மனிதனுக்கே கடவுள், பரிசுத்த வாழ்க்கை எல்லாம் தேவை. அசுத்த ஆவி பிடித்த மனிதன் முதலில் அதிலிருந்து விடுபட்டு பிற மனிதர்களை போல ஆக வேண்டும். அதற்க்கு பிறகே அவனுக்கு கடவுள் தேவை.
ஆக இந்த விஷயத்தில் எனக்கு உதவின இந்த இரு ஊழியர்களும் எனக்கு எவ்வளவு பெரிய நன்மை செய்திருக்கிறார்கள் என தெரிய வரும். இன்னமும் இது போல இவர்களால் பலன் பெற்றவர்கள் அதிகம். தேவன் பயன்படுத்தும் இவர்களின் இத்தகைய ஒரு மகத்தான செயலை கேலி பொருளாக்கும் வண்ணம் இவர்களின் மேல் குற்றம் சாட்டப்படுகிறது.
அதிசய / அற்புதங்கள் எதுவும் தேவைப்படாமல் தேவனால் நல்ல நிலையில் இருக்கிறவர்கள், தேவனின் அதிசய் அற்புதங்களை இழிவாக எண்ணுகின்றனர். பரம்பரை கிருஸ்துவர்கள் கூட தங்கள் முன்னோர்களின் வாழ்க்கையை பின்னோக்கி பார்த்தால் அதில் தேவனுடைய அற்புதங்களால் தொடப்பட்டது தெரிய வரும்.
ஊழியர்கள் போன்ற பொதுவான விஷயத்தை குறித்து கருத்து சொல்லும் போது அனேகர் தங்கள் வாழ்க்கையை மட்டும் அடிப்படையாக கொண்டு கருத்து சொல்லுகின்றனர். ஆனால்எல்லா மனிதர்களின் பார்வையிலுமிருந்து ஒரு நிகழ்வை பார்த்து அதன் மூலம் கருத்து சொல்வதே சரியானது.
(இப்போதும் எனக்கு தேவைகள் இருக்கின்றன. ஆனால் அற்புதம் எதுவும் நடைபெறவில்லை. இருந்தும் இயேசுவை விட்டு விலகாமல் இருக்க முடிகிறது)
கடந்த கிறிஸ்மஸ் (25.12.2010) ஆராதனையை (அவர்களுடைய இணையதளத்தின் பெட்டகப் (Archive) பகுதியிலிருந்து...) கவனித்தால், ஆராதனையின் ஆரம்பத்தில் ஜெபிக்கும் போதகர் (?!) இப்படியாக ஜெபிக்கிறார், "அன்புள்ள பரலோகத் தந்தையே இந்த நல்ல நாளுக்காக நன்றி செலுத்துகிறோம், எங்கள் மீதான உமது பேரன்புக்காக நன்றி செலுத்துகிறோம், உம்முடைய வார்த்தை சொல்லுகிறது,தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்து இந்த உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோவான்.3:16) தந்தையே உமக்கு நன்றி செலுத்துகிறோம்,ஏனெனில் இதுபோன்ற ஒரு நாளில் (சற்று தடுமாறி,நிறுத்தி...) சர்வ வல்ல தேவன் -மகாபெரிய யெகோவா குழந்தையாக பெத்லகேமில் பிறந்தார், இந்த உலகில் வந்து மனிதனாக வாழ்ந்த இயேசுகிறித்துவுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்; இயேசுகிறித்துவின் பிறப்பைக் கொண்டாட எங்களுக்கு கிடைத்த இந்த நல்ல வாய்ப்புக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்;உமது அன்பையும் இயேசுகிறித்துவின் அன்பையும் புரிந்துகொள்ள தேவ ஆவியானவர் உதவிசெய்வாராக,ஆவியானவர் தாமே எங்கள் கண்களைத் திறந்து இந்த உண்மைகளையறிய உதவிசெய்வாராக" என்பதாக ஜெபித்தார்;இது அவருடைய ஜெபத்தின் சுருக்கமான தொகுப்பு மட்டுமே;இதன் விவரங்களை போதகர் சாம்.P அவர்களின் இணையதளத்திலிருந்து பெறலாம்.
மேற்கண்ட போதகரின் ஜெபத்திலிருந்து சத்தியத்துக்கு விரோதமான சில காரியங்கள்...
அடுத்து யாரிடம் ஜெபிக்கிறாரோ அவரிடமே அவரைக் குறித்த வரலாறை விவரிப்பதைப் போல, 'தகப்பனே யெகோவா என்பவர் குழந்தையாகப் பிறந்தாரே, எனவே இயேசுகிறித்துவுக்கும் நன்றி செலுத்துகிறோம்' என்பது தெய்வத்துவத்தைக் குறித்த ஒரு தெளிவில்லாத இவர்களுடைய நிலையினைப் பறைசாற்றுகிறது;இவ்வாறாக ஜெபிப்பது எந்தவிதமான மொழி இலக்கணத்துக்கும் பொருந்தாத தவறான ஜெபமாகும்;"யெகோவா எனும் நாமத்தையுடைய தகப்பனே எங்களுக்காக பெத்லகேமில் குழந்தையாக வ்ந்து பிறந்தீரே" என்று ஜெபித்தாலும் ஓரளவுக்கு இலக்கண சுத்தமும் தெளிவும் உடைய ஜெபமாக அது இருக்கலாம். பிதாவை நோக்கி இயேசுகிறித்துவின் மூலமாக ஆவியானவரின் துணையுடன் ஜெபிக்கும் முறையைக் கற்றுக் கொடுத்த அப்போஸ்தலர்களின் போதனைக்கு முற்றிலும் விரோதமாக ஜெபிக்கும்போது இதற்கு எப்படி கேட்பவர் ஆமென் என்று சொல்லலாம்..?
=>அப்படியானால் ஜெபத்தில் பங்கேற்பவர் அதனை ஒரு சடங்காக ஈடுபாடில்லாமல் செய்கிறார் அல்லது வஞ்சகமான ஏதோ ஒரு உபதேசத்தில் சிக்கியிருக்கிறார் என்று அர்த்தமாகும்.
=>அப்படிப்பட்ட ஒரு தெளிவில்லாத ஜெபத்தைத் தொடர்ந்து நடப்பவையும் தாறுமாறாகவே இருக்கும்.
=>இப்படிப்பட்ட ஜெபத்தைச் செய்பவர் தவறான போதனையின் மூலமே இப்படி ஜெபிக்கிறார்.
=>அதுபோலவே இப்படிப்பட்ட ஜெபத்தை அனுமதிக்கும் நிகழ்ச்சியின் தலைவரும் தெரிந்தோ தெரியாமலோ தவறான திரித்துவக் கொள்கையைக் கடைபிடிப்பவராக இருக்கவேண்டும்.
=>மற்றபடி அவருக்குத் தெரியாமல் அவருக்குக் கீழிருக்கும் ஒருவர் இதுபோல ஜெபிக்கமுடியாது.
இதெல்லாம் பெரிய விஷயமா,இதெல்லாம் பெரிய குற்றமில்லை என்போர் தேவனுடைய பயங்கரத்தை அறியாதவர்களாக இருக்கலாம்;இயேசு தேவனல்ல,சாதாரணமான குமாரனே என்பது ஒரு பயங்கரமென்றால் யெகோவா தேவனே குழந்தையாக பெத்லகேமில் அவதரித்தார் என்பதும் வேதத்துக்கு விரோதமானதே;அதுபோன்ற கருத்துடைய ஒரு வசனமும் வேதத்தில் இல்லை.
"அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்..,(1.தீமோத்தேயு.3:16)
-ஆகிய வசனங்கள் இயேசுவில் வெளிப்பட்ட தெய்வத்தன்மையை மட்டுமே கூறுகிறதேயன்றி யெகோவா தேவனே மாம்சத்தில் வந்துவிட்டார் என்று கூறவில்லை.
இயேசுவின் தெய்வத்தன்மையை மறுக்கும் துருபதேசத்துக்கு கொஞ்சமும் குறையாத குற்றமானது அவரது தனித்தன்மையை மறுத்து அவரை யெகோவா தேவனுடன் இணைத்து விடுவதாகும்;மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாகிய இயேசுகிறித்துவுக்கே உரித்தான தனித்தன்மைகளும் அதிகாரங்களும் விசேஷமானதாகும்.
அந்த போதகர் எந்த வசனத்தைச் சொல்லி ஜெபித்தாரோ அந்த வசனத்திலேயே இந்த உண்மைகள் உரைக்கப்பட்டிருக்கிறது;இதைச் சொன்னவர் யாரோ அல்ல,ஆண்டவராகிய இயேசுகிறித்துவே.
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். (யோவான்.3:16 )
திரித்துவ உபதேசத்தில் தெய்வத்துவ ஸ்தானங்களை மாற்றாமலும் மறுக்காமலும் இருப்பது சத்தியத்தை அறிய மட்டுமல்ல,அதுவே நம்முடைய ஜெபங்கள் கேட்கப்படுவதற்கும் அவை சரியான இடத்தைச் சென்று சேருவதற்கும் நாம் தேவ கோபத்துக்கு ஆளாகாமல் தப்பவும் உதவிகரமாக இருக்கும்;இதனால் புதியவர்கள் தடுமாறாமல் சரியான சத்தியத்தை அறியவும் வாய்ப்புண்டாகும்.
இன்னும் சிலர் இயேசுவே என்று ஜெபிக்கத் துவங்கி இயேசுவின் நாமத்தில் பிதாவே என்று ஜெபத்தை நிறைவுசெய்வார்கள்;இன்னும் சிலர் மேற்கண்ட போதகரின் ஜெபத்தைப் போல, யாரிடம் யாருக்காக எப்படி ஜெபிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் சத்தியத்துக்கு விரோதமாக ஜெபிக்கிறார்கள்;தகப்பனே என்று யாரை கூப்பிடுகிறார்,யெகோவா தேவனே இயேசுகிறித்துவாக வெளிப்பட்டார் எனில் யாரிடம் அந்த செய்தியைப் பகிர்ந்துகொள்ளுகிறார்? இதெல்லாம் பல்வேறு உபதேசக் கோளாறுகளால் வந்த தீங்காகும்.
இதைக் குறித்தும் வாசக நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
போதகர் சாம் அவர்களின் இணையத்தில் (Archive) பெட்டகப் பகுதிக்குச்சென்றுஏதேனும் ஒரு நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுத்து அதனை இயங்கச் செய்தால் முதலில் அறிமுக வரிகளாக தொனிக்கும் வார்த்தையானது ஆங்கிலத்தில், "நம்முடைய வார்த்தைகள் வல்லமையுள்ளது, காரணம் நாம் இராஜாக்கள், வார்த்தையே ஆகச் செய்யும் பொருள் " (Our words are Power because we are Kings and our words Matter) என்கிறார், போதகர் சாம்.P அவர்கள்.
"அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்." (சங்கீதம்.33:9)
-மேற்கண்ட வசனங்களே கர்த்தருடைய வார்த்தைக்கும் அதன் உருவாக்கும் வல்லமைக்கும் ஆதாரமான வசனங்களாகும்;ஆனால் இதனை சற்று வளைத்து நெளித்து லாவகமாக பிரயோகித்தால் உலகப் பொருளைப் பெறவும் இவற்றை ஒரு மந்திரம் போல பிரயோகிக்க முடியும் என்று தவறாக உபதேசிக்கப்படுகிறது; இதுவே நம்மை சத்தியத்தைவிட்டு தூரப்படுத்தும் ஆரம்பப் புள்ளியாகும்.
நம்மை அபரிமிதமான வல்லமையுள்ளவர்களாகவும் வார்த்தையை சாதாரணமான மந்திர வார்த்தையாகவும் பாவிக்க ஆதாரமாகப் பயன்படுவது கீழ்க்காணும் வேத வாக்கியமே; இது அடிக்கடி போதகர் சாம்.P அவர்களால் பயன்படுத்தப்படும் வேத வாக்கியமாகும்; இன்னும் கேட்டால் இந்த வசனத்தை தமிழ்க் கிறித்தவ உலகில் பிரபலப்படுத்தியதே அவர்தான்.
"மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். (நீதிமொழிகள்.18:21)
இது சம்பந்தமான சரியான போதனையை அறிந்தவர்கள் இங்கே பகிர்ந்துகொள்ள அழைக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
தங்கள் மேலான கருத்தைப் பதிவிட்ட நண்பர்கள் விஜய் மற்றும் கோல்டா ஆகியோர்க்கு மனமார்ந்த நன்றிகள்;நண்பர் கோல்டா அவர்களின் முதல் பதிவிலேயே மனதை அள்ளும் தமிழ் நடை அருமை;தொடர்ந்து பதிவிடுக; நாம் ஒன்றிணைந்து ஆண்டவருடைய நாமத்தை உயர்த்துவோமாக..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
[பிரபல போதகரான சாம்.P அவர்கள் இன்றைய கிறித்தவத்தின் ஒரு குறியீடு மட்டுமே;அவர் மட்டுமே முழு குற்றவாளியல்ல;அவரை இப்படி செயல்பட வைத்தது,இந்த சமுதாயம்;அதன் பின்னணியில் கிறித்து சபையின் எதிரியான சாத்தான்; நித்தியத்துக்குரிய - மேன்மையான அழிவில்லா போஜனத்துக்காக கிரியை நடப்பிப்பதை மறைத்து - மறுத்து அழிவுள்ள அநித்திய சுகங்களைக் குறித்து பேசி மனதை மயக்குபவன் அவனே.]
முழுவதும் உண்மை. மக்களுக்கு பணம் வேண்டும். ஊழியக்காரர்களுக்கும் பணம் தேவைபடுகிறது. கொடுத்தால் நூறு மடங்கு கொடுப்பார் என்று சொல்லி எளிதில் மக்களை மயக்கி கல்லா கட்டி விடுகிறார்கள்!
ஆண்டவரை நேசித்து கொடுப்பவர்கள் எத்தனை பேர்?
'விசுவாச ஊழியம் செய்கிறோம்' என்று சொல்லும் பலரும் ஆண்டவரின் கொடுக்கும் சக்தியை விட மக்கள் தரும் தசமபாகத்தைதான் அதிகமாக விசுவாசிக்கிறார்கள்.