இடத்துக்கு ஏற்றார்போல் தன்னை உருமாற்றிக் கொள்ளும் ஒரு ஜீவன் உண்டு,அதற்கு பச்சோந்தி என்று பெயர்;அந்த ஜீவனைக் குறைசொல்லுவதற்காக இதைச் சொல்லவில்லை,சில வேடதாரிகள் நேரத்துக்கு ஏற்றார்போல் தங்களை மாற்றிக்கொண்டு மாயம் பண்ணுவதை எப்படி வருணிப்பது என்று தெரியாததாலேயே இப்படிப்பட்டவர்களைப் பச்சோந்திஎன்று வருணிக்கிறோம்.தன்னிடமுள்ள சரக்கு தீர்ந்துபோய் தான் பெலவீனப்பட்டதாக எப்போதெல்லாம் ஒரு மனுஷன் உணருகிறானோஅப்போதெல்லாம் அவன் காலிப் பெருங்காய டப்பாவைப் போல வெறுமனே இல்லாத வாசத்தைக் காட்ட ஏதோ செய்வதைப் போல பரப்பரப்பாகக் காட்டிக்கொள்ளுவது மனிதனின் பெலவீனம்.
அதுபோலவே இறைவன் தளத்தின் நிர்வாகியும் எனது அன்புக்குரிய நண்பருமாகிய சுந்தர் அவர்கள் புழுதி கிளப்பியிருக்கிறார்;இவருடைய கூட்டாளிகளான கோவை வெறியனும்-/-அநித்திய சீவலும் இவரை பிரதான தூதன் மேட்டரில் கழற்றிவிட்டபோது எனக்கே பரிதாபமாக இருந்தது;மீண்டும் நேசக்கரம் நீட்டலாமா என்று யோசித்தேன்;ஆனாலும் சற்று பொறுமையாக இருந்த இடைவெளியில் மீண்டும் சீண்டுகிறார்; ஒருவரைப் பற்றி சர்ச்சைக்குரிய காரியங்களைப் பேசவேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால் அதில் உறுதியாக இருக்கவேண்டும்;எதிர்ப்பதாக இருந்தால் முழுமையாக எதிர்க்கவேண்டும்;என்ன தலையையா வாங்கி விடுவார்கள்,என்ற வைராக்கியத்துடன் முன்னேறவேண்டும்; அதுபோன்ற ஆண்மையில்லாமல் மறைமுகமான வார்த்தைகளால் இண்டு இடுக்குகளில் சிண்டுமுடித்து வைப்பது கீழ்த்தரமான செயலாகும்;இது தெரியாத நண்பர்கள் என்னைக் குறிவைத்து விமர்சிக்கிறார்கள்; உண்மையிலேயே ஆபத்தானவர்கள் யாரென்று அறியாமல் "ஆபத்து,ஆபத்து" என்று சத்தம் போடுபவனைப் பார்த்து "ச்சூ" சத்தம் போடாதே என்கிறார்கள்.
நண்பர் சுந்தர் ஊழியர்களையும் உபதேசங்களையும் குறைசொல்லுவதை விரும்பாதவர் போலக் காட்டிக்கொண்டாலும் அவ்வப்போது அவருக்கும் ஏதோ ஒரு ஆசை மேலிட எதையோ எழுதி வைக்கிறார்;அது அவர் எழுதியவற்றுக்கே எதிராக இருக்கிறது;முன்னுக்குப் பின் முரணான அவருடைய இந்த போக்கை வாசகர்கள் அறிய வாய்ப்பில்லை என்பதால் அதனைச் சுட்டிக்காட்டுவது நம்முடைய கடமையாகிறது.
நாம் ஆரம்பத்திலிருந்து எதற்காக சுந்தரை எதிர்க்கிறோமோ அதற்கு மாறாக நாம் ஆரம்பத்தில் நாம் அவருக்கு சொன்ன ஆலோசனையையே நமக்கு அவர் புதிதாக சொல்லுவது நகைப்புக்குரியது அல்லவா? இதனை வாசிக்கும் என்னுடைய மனம் அவருடன் கைகோர்த்து எதையாவது செய்ய துடிக்கிறது;ஆனாலும் அவர் முன்பு எழுதியவற்றைக் குறித்து வருத்தம் தெரிவிக்காமல் நான் நேசக்கரம் நீட்டினாலும் அதனால் ஒரு பயனும் இராது.
இன்று அவர் தன்னுடைய தளத்தில் "சத்தியத்தை தேடி வரும் அன்பு சகோதரர்களுக்கு..!" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைப் போட்டிருக்கிறார்;இதில் மாத்திரமல்ல, பல கட்டுரைகளிலும் அவர் நம்மை மறைமுகமாக தாக்குவதை கவனித்தே வருகிறோம்;நமது இந்த பின்னூட்டம் அவருக்கு இறுதி எச்சரிக்கையாக இருக்கட்டும்;மற்றபடி எமது இந்த பாணியே உமக்குப் பிடிக்கிறது என்றால் உமது ஒவ்வொரு வரிகளையும் எடுத்துக் காட்டி உமது மதியீனமான கொள்கைகளைக் குறித்து விமர்சிக்க தயங்கமாட்டோம் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்;நீர் ஆரம்பத்தில் எனக்குச் சொன்ன அறிவுரை அவ்வப்போது என் மனதில் வந்து போகும்;"நாங்கள் எதுவேண்டுமானாலும் எழுதுவோம்,அதைக் கண்டுக்கொள்ளக்கூடாது,பிடிக்காவிட்டால் அமைதியாக இருக்கவேண்டும்," என்று கூறியதுடன் நான் அவ்வப்போது இடைபட்டு கேள்விகளை எழுப்புவது தலைவராக விரும்பும் உமக்கு சங்கடமாக இருந்ததால் என்னை தளத்தைவிட்டு நீக்கியது உமது மனசாட்சிக்கே நன்கு தெரியும்.
தொடர்ந்து சுந்தருக்கு நம்முடைய விளக்கம்...
// சத்தியத்தை அறியவேண்டும் என்று ஆவலில் அங்கும் இங்கும் தேடி கொண்டிருக்கும் அன்பு சகோதரர்களே, இந்ததளத்துக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது சத்தியத்தை தேடிக்கொண்டிருக்கும் ஒரு தளமல்ல. நீங்கள் சத்தியத்தை எங்கும்போய் தேடவேண்டிய அவசியமும் இல்லை.காரணம், "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்." (யோவான் 17:17)
-என்று வசனம் சொல்வதால், அனைத்து சத்தியமும் அடங்கிய வேத புத்தகம் நமது கையில் ஏற்கெனவே இருப்பதால் வேத புத்தகத்தை விட்டு வேறு ஒரு இடத்தில் சத்தியத்தை தேடினால் அது உங்களுக்கு எங்குமே கிடைக்காது. //
இந்த கருத்தைத் தானே நான் ஆரம்பம் முதல் சொல்லிக்கொண்டிருக்கிறேன்;அப்படியானால் புத்தர் மூலமும் ப்ளாட்டோ மூலம் முகமது மூலமும் கூட கடவுள் பேசினார் என்று முன்பு கூறியது தவறுதானே? அதை உணர்ந்தீரா? இங்கே நான் துவக்கிவைத்துள்ள திரியிலும் கூட வேதாகத்தில் சேர்க்கப்பட தகுதியில்லாததாக தள்ளப்பட்ட தோமையர் சுவிசேஷத்தைக் குறித்து நீர் மேன்மைபாராட்டவில்லையா? வேதம் மாத்திரமே வேதம் அல்ல, என்று நீர் முழங்கியதில்லையா? வேதம் என்ற ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு பரலோகத்துக்குச் செல்லமுடியாது என்று எக்களிக்கவில்லையா? இராக்காலத்தில் எங்கும் வெளியே போகாதிரும்,ரெய்டு பயங்கரமாக இருக்கிறது; இதுபோல முன்னுக்குப் பின் முரணாக உளறிவைத்தால் தூக்கி உள்ளே வெச்சுருவான்,போலீஸ்காரன்..!
-என்று தெளிவாக சொல்லியிருப்பதால் இயேசுவை அறிந்துகொள்வதே சத்தியத்தை அறிந்து கொள்ளும் வழி. இயேசுவை அறிந்துகொண்டவர்கள் சத்தியத்தைதேடி அலைய வேண்டியது இல்லை.
பிறகு நாம் இப்பொழுது செய்யவேண்டியது என்ன?
சத்தியம் அடங்கிய வேத புத்தகத்தை நாம் வைத்திருப்பதன் மூலமும் ஆண்டவராகிய இயேசுவை அறிந்துகொண்டதன் மூலமும் நாம் ஏற்கெனவே சத்தியம் என்னவென்பதை அறிந்துகொண்டு விட்டோம். இப்பொழுது நமது அவசரதேவை அறிந்த சத்தியத்துக்கு கீழ்படிதலேயன்றி இன்னும் ஒரு புதிய சத்திய தேடல் அல்ல! அறிந்த சத்தியம் சற்று கடினமாக இருப்பதால் வேறு ஏதாவது சுலபமான சத்தியம் கிடைக்காதா என்று ஏக்கத்தில் பலர் தொடர்ந்து தேடிக்கொண்டு இருக்கலாம். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை என்பதை இங்கு தெரிவித்துகொள்கிறேன். // இயேசு தொழத்தக்கவரல்ல என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாய்களோடும் பன்றிகளோடும் கள்ள உறவு வைத்துக்கொண்டு எப்படி ஆண்டவராகிய இயேசு கிறித்துவை அறிவதே சத்தியத்தை அறியும் வழி என்று உம்மால் சொல்லமுடிகிறது? காரணம்,நீரும் கூட மாயம் பண்ணிக்கொண்டிருக்கிறீர், இயேசு தம்மை ஆராதிக்கச் சொல்லி எங்கும் சொல்லவில்லை,ஆனாலும் நாம் அவருக்கு நாம் மரியாதை செலுத்துவதில் தவறில்லை என்றொரு வழவழா கொழகொழா விளக்கத்தை நீர் கொடுக்கவில்லையா? உம்முடைய விளக்கங்கள் குழப்பத்தின் உச்சக்கட்டம்... ஏதோ சொல்லவருகிறீர் ஆனால் அது என்ன என்று உமக்கே புரியவில்லை அல்லவா?
// நாம் அறிந்த சத்தியத்துக்கு கீழ்ப்படியவேண்டும் என்பதுவே நம்மேல் விழுந்த முக்கிய கடமை. எழுதப்பட்டுள சத்தியமாகிய வேதத்துக்கும் ஆண்டவராகிய இயேசுஎன்னும் சத்தியமானவர் சொல்லும் கற்பனைகளுக்கும் நாம் கீழ்படிவதால் மட்டுமே ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற முடியும் அடுத்த நிலையை எட்ட முடியும்.// நீர் அறிந்த சத்தியம் என்னவென்று எங்களுக்குத் தெரியாதா,இயேசு வந்துபோனபிறகு யாரும் பிறக்கவில்லை,நாமெல்லாம் இயேசு வருவதற்கு முன் வாழ்ந்து மறைந்தவர்களின் மறுபிறவிகள் என்பது தானே நீர் அறிந்த சத்தியம்? ஆண்டவராகிய இயேசுவின் கற்பனைகள் என்று நீர் கூறுவது பத்து கற்பனைகள் தானே,அதன் காரணமாக நீர் ஓய்வுநாள் பிரமாணத்துக்கு ஏற்ப வீட்டில் இருப்பதாகவும் உமக்கு மரணமே இல்லை என்றும் மாறுபாடானவற்றைப் போதிக்கவில்லையா? இதில் எதற்கு நாங்கள் கீழ்ப்படிய வேண்டும்; சத்தியம் ஒன்றானால் நீரும் நானும் ஏன் வேறுபட்டு நிற்கவேண்டும்? // ஒவ்வொரு படியாக ஏறினால்தான் உச்சத்தை செற்றடைந்து உண்மையை உணர முடியும். கண்ணுக்கு தெரியும் படியில் ஏறாமல் பைனாக்குலரை வைத்து உச்சியில் என்ன இருக்கிறது என்று பாப்பது இந்த உலகத்தில் வேண்டுமானால் சாத்தியமாகலாம் ஆனதால் தேவனை பொறுத்தவரை அது சாத்தியமல்ல. அவர் உனக்கு தெரியப்படுத்தியிருக்கும் காரியங்களுக்கு நீ முழுவதும் கீழ்படிந்தால் மட்டுமே அடுத்த காரியத்தை குறித்த வெளிச்சம் உனக்கு கிடைக்கும்! //
ஆண்டவர் வெளிப்படுத்தியதாக நீர் சொல்லுபவை வேதத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை,என்றும் சொல்லியிருக்கிறீரே அப்படியானால் இந்த கட்டுரையின் ஆரம்ப வரிகளுக்கு இது முரணாக இருக்குமே? வேதத்துக்கு வெளியே உமக்கு கிடைக்கும் வெளிப்பாடுகள் மற்றும் வேத வசனங்களுக்கு உங்கள் கூட்டத்தார் கற்பிக்கும் புதிய வியாக்கியானங்கள் மற்றும் ஏற்கனவே எழுதப்பட்டதாக முத்திரிக்கப்பட்டிருக்கும் வேத வசனங்கள் இவற்றில் நாங்கள் எதை அறிந்துகொள்ளவேண்டும் அல்லது எதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று சொல்லுவீர்களா? // ஆண்டவரின் பெயரில் அரட்டை அடிக்க விரும்புகிறவர்களும், "ஏதோ நான் ரட்சிக்கபட்டுவிட்டேன் அது எனக்கு போதும்"/ "இயேசுவை அறிந்துகொண்டு விட்டேன் என்னை இனி யாரும் அசைக்க முடியாது"/ " இயேசுவை அறிந்து கொண்டால் மட்டும் போதும் வேறுஎதுவும் தேவையில்லை" என்ற நோக்கத்தோடு போட்ட அஸ்திபாரத்தையே திரும்ப திரும்ப போடும் ஞானிகளுக்கு இந்த தளத்தில் எந்த வேலையும் இல்லை. //
உம்ம தளத்தில் கொஞ்ச நஞ்சம் ஆரோக்கிய உபதேசத்தை எழுதுவோரையும் விரட்டிவிட்டு இனி இங்கே வேலை இல்லை என்பது அயோக்கியத்தனமல்லவா? தினமும் ஒரு பெயரில் உள்ளே நுழைந்து உமக்குத் தொல்லை கொடுக்கமுடியும் ஆனாலும் "மதியாதார் தலைவாசல் மிதியாதே" எனும் முதுமொழியையும் "உன்னை ஒருவன் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவனை விட்டு விலகு" என்று எனது ஆண்டவர் சொன்னதையும் கருத்தில் கொண்டு நாங்கள் ஏற்கனவே விலகிவிட்டோம்.அதன்பிறகு நீர் வேறுவழியில்லாமல் என்னை நீக்கிவிட்டதாக பிதற்றியது அறிந்ததே,
மீண்டும் மீண்டும் எத்தனை முரண்பாடு..! இந்த ஒரு கட்டுரையிலேயே இத்தனை பல்டியடிக்க உம் ஒருவரால் மட்டுமே முடியும்..! ஆரம்பத்தில் சொன்னது என்ன, இயேசுவை அறிவதே சத்தியத்தை அறிவது என்பதாக்.இதோ இங்கே சொல்வது என்ன,இயேசுவை அறிந்தால் மட்டும் போதும் என்போர் போடுவது அஸ்திபாரத்தின் மீது அஸ்திபாரம் என்பதாக.இதை எப்படி விளங்கிக்கொண்டு என்றே புரிந்துகொள்ள முடியவில்லை;எனவே உம்மைப் போன்ற ஞானி யாரும் இருக்கமுடியாது; தலைகால் புரியாத கருத்துக்களைக் கூறி குழம்பவைப்பதே ஞானம் என்றால் அதில் உம்மை விஞ்ச ஆளில்லை. "ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக." (எபிரெயர் 6:2 )
திரும்ப திரும்ப குழந்தைகள் உண்ணும் பாலையே உண்பவர்களாக இருக்காமல்,இயேசுவுக்குள் அதிகமதிகமாய் பூரணப்பட விரும்புவோரும், மகிமையின்மேல் மகிமை அடைய விரும்பு வோர்களுக்கு மட்டுமே இந்த தளம் பயன்படும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன். வாஞ்சை உள்ளவர்கள் வந்து பங்கேற்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்!
இந்த கட்டுரையின் நோக்கமே தமிழ்க் கிறித்தவ தளத்திலும் யௌவன ஜனம் தளத்திலும் விவாதிக்கப்பட்டுவரும் ஞானஸ்நானம் குறித்த விவாதமே என்று கருதுகிறேன்;இது தேவையில்லாதது என்றால் வேறு எது தேவையாம்? எழுதப்பட்டதற்கு மிஞ்சி தேவன் நல்லவரா என்றும் பலி கேட்டாரா என்றும் தீமைக்கு யார் காரணம் என்றும் அறிவுஜீவிகளைப் போல கேள்விகளை எழுப்பி பிரதான தூதனே இயேசுவாக வந்தார் என்று ஆண்டவரின் இறைத்தன்மையை தூஷிப்பவருடன் கைகோர்த்து ஆரோக்கிய உபதேசத்துக்கு எதிராக புஜம் தட்டுவது தான் தேவையா? அதுதான் மறுரூபமடையும் வழியா? ஆம்,மறுரூபம் அடைவீர் நிச்சயமாக,மிருகத்தைப் போல..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)