Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: போதகர் அல்லது பாஸ்டர் என்று அழைக்கப்படுவது தவறா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: போதகர் அல்லது பாஸ்டர் என்று அழைக்கப்படுவது தவறா?
Permalink  
 


chillsam:

// கொல்வின் அவர்களுக்கு ஒரு குறிப்பு: இயேசு தொழத்தக்க தெய்வமல்ல, என்றும் அவரும் பிதாவும் வெவ்வேறானவர்கள் என்றும் கூறி மீண்டும் பத்து கற்பனைகளைக் கற்பிக்கவும் அதனை செயல்படுத்தவும் வலியுறுத்தி துருபதேசம் செய்கிற யாருக்கு நீங்கள் வாழ்த்து சொன்னாலும் அவர்களது கிரியையைகளில் நீங்களும் பங்கேற்று கிறித்துவை மறுதலிக்கிறீர்கள் என்று தனது முதிர்ந்த வயதில் அன்பின் அப்போஸ்தலனாகிய யோவான் கண்ணீருடன் எழுதுகிறார்;ஆம்,அவரை உணர்ந்து படித்தால் அவர் கண்ணீருடன் எழுதுவது புரியும்;இந்த சத்தியத்திலிருந்து அப்பாவிகளை வஞ்சிக்கவே பெரும்பாலும் துருபதேசக்காரர்கள் பெரும்பாலும் இதுபோன்ற சர்ச்சைகளை எழுப்புகிறார்கள்;எச்சரிக்கையாக இருக்கவும். //


colvin Wrote on 27-11-2010 20:55:45:
சகோ. அன்பு அவ்விதம் கூறினாரா? உண்மையில் எனக்கு அதுபற்றி தெரியாது. மல்லிதம்பியின் பதிவுகளுக்கு அவர் சரியாக பதிலளித்திருந்தார்.மற்றும் அவரின் சில ஆக்கங்கள் எனக்குப் பிடித்திருந்தது. நான் வாசித்தவரை இத்தளத்தில் நீங்கள் குறிப்பிடும் பிரகாரமாக கருத்துபதிந்ததாக எனக்குத் தெரியவில்லை. இனி அவர்தான் இதுபற்றி விளக்க வேண்டும்.

அன்பான சகோதரர் கொல்வின் அவர்களே, சத்தியத்தின் மாறுபாடு தவிர இவர்களுடன் மோதுவதற்கு எனக்கு என்ன இருக்கிறது? இவர்கள் சத்தியத்தில் மாறுபாடானவர்கள் என்பதை மிகச் சீக்கிரமே அறியும் ஒரு விசேஷ கிருபையை ஆண்டவர் எனக்குக் கொடுத்திருக்கிறார்; அது இன்னது என்று எனக்கு விளக்கத் தெரியவில்லை; ஆனாலும் அந்த கிருபையாலேயே இவர்களை எதிர்க்கிறேன்; தங்களுக்கு நிறைய நேரம் இருக்குமானால் அவர்களுடைய தளத்துக்குச் சென்று ஒவ்வொன்றாக எடுத்து வாசித்தறியுங்கள்; இதுபோன்ற மோசடியாளர்களை முளையிலேயே கிள்ளியெறியாவிட்டால் அந்த விஷவித்தானது பெரியதாக வளர்ந்து பலரையும் பாதிக்கும்.

அன்பு அவர்களே நீங்கள் வருத்தப்படவேண்டாம், நான் தங்களையல்ல, தங்களிடமிருக்கும் பரிசேயர் வழிவந்த சரக்கையே புறக்கணிக்கிறேன் என்பதையறியவும்; நானும் என் வீட்டாருமோவென்றால் கண்கண்ட தெய்வமாக வெளிப்பட்ட இயேசுவையே ஆராதிப்போம்; இதை மாற்றி போதிக்கும் உங்களை எதிர்க்காமல் இருக்கமுடியாது; கோவை பெரியன்ஸ், சுந்தர் மற்றும் நீங்கள் ஆகிய மூவரும் இந்த காரியத்தில் ஒன்றுபட்டிருக்கிறீர்கள் என்பது உண்மைதானே?

இயேசுவானவர் நம்முடைய துதிதோத்திரபலிகளை ஏற்றுக்கொள்ளத் தகுதியாவனவர் என்றும் அவர் அதரிசனமான தேவனின் தற்சொரூபமுமானவர் என்பதை நேரடியாக ஒப்புக்கொண்டால் நாம் தொடர்ந்து பேசலாம்..! அல்லது இஸ்லாமியர்களைப் போல நீங்களும், இயேசுவானவர் தம்மை தொழுதுகொள்ளும்படி எங்குமே போதிக்கவில்லை என்றும் பவுலும்கூட அப்படியாக எங்குமே சொல்லவில்லை என்றும் ஞாயிற்றுக்கிழமையானது சபை கூடி வரும் நாளல்ல என்றும் கூறி தமிழ் இணைய உலகில் தவறான போதனைகளைப் பதிவுசெய்து வைப்பீர்களானால் வரும் சந்ததியின் இரத்தப்பழிக்கு நீங்கள் பொறுப்பாக வேண்டும்;

மற்றபடி உங்களைப் போன்றோருடனான போர் முடிவுக்கு வந்தால் நான் ஆவணப்படுத்த விரும்பும் எண்ணற்ற பொக்கிஷங்கள் என்னிடத்தில் உண்டு;பாரம்பரிய பாடல்களிலிருந்து பிரபலமான கிறித்தவ பத்திரிகை செய்திகளிலிருந்து மொழியாக்கம் செய்யவேண்டிய நல்ல ஆங்கில செய்திகளிலிருந்து பலவும் உண்டு.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

chillsam Wrote on 27-11-2010 11:09:39:
நாயர், நாயர் தான்; டீக்குடிப்பவர், டீ குடிப்பவர் தான்' என்பதை தெளிந்துணர்க‌. [/size]

mycoimbatore Wrote on 27-11-2010 12:56:26:
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர் சில்சாம் அவர்களுக்கு நீங்கள் இந்த தொடுப்பில் எழுதிவரும் அடிப்படை கருத்தை ஏற்றுக்கொள்ளுகிறேன்.ஆனால் இந்த மாதிரி நாயர் கதையெல்லாம் கொஞ்சம் அதிகம் என்று நினைக்கிறேன்

சகோதரரே, நாயர் கதை கொஞ்சம் ஓவர்தான்; ஆனாலும் நண்பர் அற்புதம் பாஸ்டர் பணியை பிணியாக நினைத்து ஒதுங்கும் அளவுக்கு ஓவர் அல்ல, என்றெண்ணுகிறேன்; கொஞ்ச நகைச்சுவையுணர்வுடன் படித்தால் தவறாகத் தோன்றாது; உண்மையில் உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ நாயர் ரொம்ப நல்லவர்; அவருகிட்ட அக்கௌண்ட் வைத்து டீ சாப்பிட்டவர்கள் பலரும் அந்த பாக்கியை செட்டில் பண்ணாமலே ஃபாரின் போயிட்டதாலேயே அவர் இன்னும் முன்னேறாமல் இருக்கிறார்; நான் நாயரைக் குறித்து மட்டுமே சொல்லுகிறேன் என்பதை கவனத்தில் கொள்ளவும்; இந்த கதையை நான் சிரித்துக்கொண்டே எழுதினேன்;நீங்களும் சிரிக்கவேண்டுகிறேன்.

போதகர் என்றாலே பேதகரோ என்று அதாவது பேதங்களை உருவாக்குகிறவரோ என்று சிலர் அதனைவிட்டு ஒதுங்க நினைக்கின்றனர்; உதாரணமாக ஒரு வட்டாரத்திலிருந்து அரசியல் பணியாற்றும் ஒருவர் தன்னை அரசியல்வாதி என்று சொல்லிக்கொள்ள வெட்கப்பட்டுக் கொண்டு நான் ஏதோ ஒரு சின்ன சமூகப்பணிதான் ஆற்றுகிறேன் என்று சொல்வதைப் போலவே இது இருக்கிறது;.

ஒன்று நண்பர் போதகப் பணியைக் குறித்து மிகவும் உயர்ந்த அபிப்ராயத்தை தானே வளர்த்துக்கொண்டு தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார் அல்லது தன்னைப் போதகர் என்று சொல்லுவதால் வழக்கமான போதகர் வரிசையில் தான் சேர்க்கப்பட்டு விடுமோ என அஞ்சுகிறார்; அதாவது போதகர்கள் பொதுவாகவே பணஆசை உடையவர்களாகவும் குடும்பங்களை உடைக்கிறவர்களாகவும் சமுதாயத்தில் கேலிப் பொருளைப் போலவும் பார்க்கப்படுவதால் அப்படிப்பட்ட தவறான எண்ணம் ஏற்பட்டிருக்கலாம்.

நான் ஏதாவதொரு எளிமையான உதாரணத்தைக் கூறி அற்புதம் அவர்கள் போதகர் என்றோ பாஸ்டர் என்றோ ஒப்புக்கொள்ள வைக்க முயற்சிக்கிறேன்; அவர் ஒரு நல்ல மூத்த ஊழியரின் கீழிருந்து மூன்று வருடமாவது தவறாமல் ஆலய உதவிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்து பின்னர் முழு அர்ப்பணம் மற்றும் அழைப்பின் அடிப்படையில் மூத்த ஊழியர்களால் அபிஷேகிக்கப்பட்டு ஜெப ஊழியத்திலோ சுவிசேஷ ஊழியத்திலோ முழுநேரமாகவோ பகுதி நேரமாகவோ தனது அழைப்பை நிறைவேற்றும் முயற்சிகளில் - அதாவது குறைந்தது மூன்று அல்லது நான்கு பேருக்கோ சத்தியத்தைப் போதித்து முக்கியமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு குறிப்பிட்ட ஆராதனைக் குழுவை முன்னின்று நடத்தினால் அவர் நிச்சயமாகவே ஒரு பாஸ்டர் தான்.

இதில் நான் வேதாகம கலாசாலையிலிருந்து வருவோரைக் குறிப்பிடவோ அதனை ஒரு தகுதியாகக் கூறவோ இல்லை என்பதை கவனிக்கவும்; ஆனால் போதகர் என்பது வேறு; இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளவேண்டாம்; ஏனெனில் ஆங்கிலத்தில் பாஸ்டர் என்று சொல்லும் நாம் அறியாமல் தமிழில் போதகர் என்று கௌரவத்துக்காகவோ எதற்காவோ கூறுகிறோம்; அதன் காரணமாகவே இந்த வாதம் இந்த அளவுக்கு வளர்ந்தது என்று நினைக்கிறேன்; பாஸ்டர் எனும் வார்த்தைக்கு மேய்ப்பர் என்பதே சரியான தமிழ் பதமாகும்;போதகர் என்பது டீச்சர் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது.

போதகப் பணியை விட மேய்ப்பு பணியே சிரமமானது; அது சில குடும்பங்களுக்காக உத்தரவாதத்துடன் இறைவனிடம் மன்றாடுவதிலும் மாதத்துக்கு ஒரு முறையாவது அவர்களுடன் ஆண்டவருடைய பாடு மரணத்தை நினைவுகூறும் திருபந்தியை ஆசரிப்பதிலும் முழுமையடையும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

chillsam Wrote on 26-11-2010 06:15:16:
நண்பர் அற்புதம், சாத்தானிடம் சரணடைவதுபோல, நான் போதகர் இல்லை என்பதும் என்னை பாஸ்டர் என்று அழைப்பதை விரும்பவில்லை என்பதும் தான் பெற்றதாக நினைக்கிற அபிஷேகத்தை - அதாவது அலுவலகப் பணியை - அதாவது பொறுப்பை அவமதிக்கும் செயலாகும்;

Arputham:
சகோ.சில்சாம் நீங்கள் எனது கருத்தை சரியாக புரிந்து கொள்ள வில்ல என்று நினைக்கிறேன். “சாத்தானிடம் சரணாகதி அடைவது போல” என்கிற பதம் கொஞ்சம் அதிகப்படியானதாக தோன்றுகிறது. உள்ளத்தில் உள்ளதை ஒத்துக் கொள்வதினாலும், தாழ்த்திக் கொள்வதினாலும் எனக்கு சிறுமை ஏற்படுமாகில் மிகுந்த பெருமகிழ்ச்சி அடைவேன்.


இதில் தாழ்த்துவதோ (humility) தாழ்ந்து (low or inferior) போவதோ ஏதுமில்லை, நண்பரே; நான் தான் சொல்றேனே,அது ஒரு வேலை; அதில் பெருமைக்கு ஒன்றுமில்லை; உதாரணமாக நீங்கள் ஒரு நாயர் என்று வைத்துக்கொள்ளுவோம்; டீக்கடை வைத்திருக்கிறீர்கள்; டீ குடிக்க வரும் வாடிக்கையாளர் வந்து, " நாயர் ஒரு டீ போடு " என்று கட்டளையிட்டால் உங்கள் வேலை டீ போட்டுத் தரவேண்டுவதுதானே தவிர மிகவும் தாழ்மையாக அந்த வாடிக்கையாளரிடம் போய்," நான் தாராளமாக டீ போட்டுத் தாரேன்; ஆனால் நான் நாயர் கிடையாது சாதாரண மனுஷன் தான் " என்றால் எப்படியிருக்கும்?

ஆனால் ஆண்டவர் சொல்லிவிட்டார், நீங்களெல்லாரும் டீக்கடைக்காரர்களே, யாரும் நாயர் என்று அழைக்கப்படக்கூடாது; நான் மட்டுமே நாயர் என்று; அவரே பிறகு சிலரை தேர்ந்தெடுத்து தனது நாயர் பதவியை சிலருக்குக் கொடுத்து அவர்கள் வழியாக இந்த பொறுப்பு அடுத்தடுத்த சந்ததிக்கு சென்று சேர வழிசெய்தார்; இப்போது என்ன சொல்லுவோம்; நிறைய நாயர்கள் வந்துவிட்டனர்; அப்படியானால் ஆண்டவர் யார்?அவரும் நாயர்தான், பிரதான நாயர்..!

நாயர், நாயர் தான்; டீக்குடிப்பவர், டீ குடிப்பவர் தான்' என்பதை தெளிந்துணர்க‌.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இந்த வாதத்தில் வேதமாணவர் குழுவினர் தரும் விளக்கம் புதிய கோணத்தில் உள்ளது;அதையும் கவனத்தில் கொள்ளுவோம்..!

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Posted@Tamil Christians

முன்குறிப்பு:
(அதாவது இது எல்லாவற்றுக்கும் பின்குறிப்பு அல்ல, முன்குறிப்பு...) இந்த திரியைத் துவங்கிய என்னுடைய கருத்துக்களைத் தவிர்த்து நண்பர்கள் எழுதுவது போல உணருகிறேன்; அந்த கருத்துக்கள் பயனற்றதாக இருக்குமானால் அவற்றை நீக்கிக் கொள்ளவும் சம்மதிக்கிறேன்; பிரச்சினைகளின் அடிப்படையில் பலருடன் பல சமயம் மோதல் ஏற்பட்ட காரணத்தினால் எல்லோருமே அந்த எண்ணத்துடனே என்னை அணுகுவதும் நடத்துவதும் நட்புக்கு மிகவும் ஆபத்தானது.


வேதத்தில் கள்ளப் போதகர் என்றும் கள்ளக் கிறித்து என்றும் கள்ள வேலையாட்கள் என்றும் எப்போது வந்துவிட்டதோ அப்போது சரியான வேலையாட்களும் போதகர்களும் தீர்க்கதரிசிகளும் மேய்ப்பர்களும் சுவிசேடகர்களும் தலையான கிறித்துவுக்குள் -அலுவலகத்தில் (Office bearers) இருக்கிறார்கள் என்பதே யதார்த்த நிலையாகும்;

இதற்குப் போய் நண்பர் அற்புதம், சாத்தானிடம் சரணடைவதுபோல, நான் போதகர் இல்லை என்பதும் என்னை பாஸ்டர் என்று அழைப்பதை விரும்பவில்லை என்பதும் தான் பெற்றதாக நினைக்கிற அபிஷேகத்தை - அதாவது அலுவலகப் பணியை - அதாவது பொறுப்பை அவமதிக்கும் செயலாகும்;

ஆண்டவரைக் குறித்து இதுபோன்ற கேள்விகள் எழும்போது அவர் யாராக இருந்தாரோ அதில் ஆண்டவர் ஒருபோதும் பின்வாங்கவில்லை; "ஆம்,நான் முன்பே சொன்னேன், நீங்கள் ஏற்கவில்லை " என்றே கூறுகிறார்; மேலும் தன்னை மக்கள் யாரென்று கூறுகிறார்கள் என்றும் வினவுகிறார்; பிலாத்துவிடமும் நெஞ்சை நிமிர்த்தி வீரத்துடன் "சாட்சி" கொடுத்தார்; தனது சீடர்களை முதலில் ஆடுகளாகவும் பின்னர் மேய்ப்பராகவும் பாவிக்கிறார், அதாவது பாஸ்டர். எனவே பிரதான மேய்ப்பன் என்ற சொல்லும் கையாளப்படுகிறது; பிரதான மேய்ப்பனும் ஆசாரியனும் அவரே;நம்மை சகோதர்கள் என்று கூறுவது உணர்வு சம்பந்தமானதாகும்;

பாமரனுக்கும் புரியும் எளிமையான ஒரு உண்மையை மூலபாஷையின் அர்த்தத்தையெல்லாம் எடுத்து புரியவைக்க என்ன அவசியமோ? ஒரு கிராம பஞ்சாயத்திலிருந்து சாதாரணமான ஒரு மனிதன் ஊர் பஞ்சாயத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவனை என்னவென்று சொல்லுவார்கள்?

அவன் அந்த ஒரு ஊரிலுள்ள சாதாரண குடியானவன்; தன் குடும்பத்தின் தலைவன்; பிள்ளைகளுக்கு தகப்பன்; பெற்றோருக்கு பிள்ளை; மனைவிக்கு கணவன்; எல்லாம் போக ஏற்றுக்கொண்ட பணியின்படி ஊரின் பஞ்சாயத்து தலைவன்; அவன் தன் பணியில் நேர்மையுடனும் அனைத்து மக்களிடமும் பணிவுடனும் நடந்துகொள்ள வேண்டுமென்பதும் தன்னைப் போலவே தலைவர்களாக உள்ள மற்ற ஊர் பஞ்சாயத்து தலைவர்களிடமும் இணக்கமான உறவைப் பேண வேண்டும் என்பதும் அவனுடைய குணாதிசயம் மற்றும் செயல்பாடு சம்பந்தமான காரியமாகும்.

இதன்படி இன்றைக்கு குறைந்தது ஆறு பேருக்கு உபதேசிப்பவர் அல்லது சத்தியத்தில் நடத்துபவரின் ஸ்தானமானது தெற்கில் உபதேசி என்றும் பொதுவாக போதகர் என்றும் மேய்ப்பர் (பாஸ்டர் ) என்றும் வழங்கப்படுகிறது; அதிக ஆக்கினை அடைவோமென்று அறிந்து போதகராதிருங்கள் என்று யாக்கோபு கூறும்போது போதகர் என்ற பணியை மறுக்காமல் அதனை பொறுப்புடன் செய்யும் அவசியத்தையே வலுயுறுத்துகிறார்; இதையும் நண்பர்கள் ஏற்க மனதில்லாதிருந்தால் நான் அமர்ந்துகொள்ளுகிறேன்.


(கொல்வின் அவர்களுக்கு ஒரு குறிப்பு: இயேசு தொழத்தக்க தெய்வமல்ல, என்றும் அவரும் பிதாவும் வெவ்வேறானவர்கள் என்றும் கூறி மீண்டும் பத்து கற்பனைகளைக் கற்பிக்கவும் அதனை செயல்படுத்தவும் வலியுறுத்தி துருபதேசம் செய்கிற யாருக்கு நீங்கள் வாழ்த்து சொன்னாலும் அவர்களது கிரியையைகளில் நீங்களும் பங்கேற்று கிறித்துவை மறுதலிக்கிறீர்கள் என்று தனது முதிர்ந்த வயதில் அன்பின் அப்போஸ்தலனாகிய யோவான் கண்ணீருடன் எழுதுகிறார்;ஆம்,அவரை உணர்ந்து படித்தால் அவர் கண்ணீருடன் எழுதுவது புரியும்;இந்த சத்தியத்திலிருந்து அப்பாவிகளை வஞ்சிக்கவே பெரும்பாலும் துருபதேசக்காரர்கள் பெரும்பாலும் இதுபோன்ற சர்ச்சைகளை எழுப்புகிறார்கள்;எச்சரிக்கையாக இருக்கவும். )


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
போதகர் அல்லது பாஸ்டர் என்று அழைக்கப்படுவது தவறா?
Permalink  
 


"கிறித்தவ திரட்டி" சம்பந்தமான அறிவிப்பு திரியில் " போதகர் " என்று அழைக்கப்படுவது தவறு என்று அன்பு அவர்கள் எழுத அதனை அல்லா6666 மறுக்க அது விவாதம் போல தொடர்கிறது; அதில் வழக்கம் போல நான் வேறு "..." மாதிரி தலையிட்டுவிட்டேன்; எனவே அதனை தனி திரியாக துவங்குகிறேன்; தள நண்பர்கள் கருத்துக்களை இனி சுதந்தரமாகத் தெரிவிக்கலாம்.

வாதத்தின் பின்னணி விவரத்துக்கு:

http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=6&topic=1908&Itemid=287

எல்லாவற்றுக்கும் மூல பாஷையிலிருந்து பொருளை எடுத்து போதிக்கும் அன்பு அவர்கள் இந்த குறிப்பிட்ட வார்த்தையின் மூலபாஷை அர்த்தத்தை ஆராயாத காரணம் என்னவோ?

போதகர் எனும் வார்த்தை எபிரேய மொழியில் H7227 rab என்றும் கிரேக்க மொழியில் G4461 hrab-bee' என்றும் குறிப்பிடப்படுகிறது; அதன் தமிழ் சொல்லானது இரண்டுக்கும் பொதுவாக இருக்கிறது; அதற்கு நாம் என்ன செய்யமுடியும்?

மூலபாஷையின் படி rhabbi எனும் சொல்லுக்கு எஜமானர் என்றும் G2519 kath-ayg-ay-tace' நடத்திச் செல்பவர் என்றும் சொல்லலாம்; இதுவே மத்தேயு.23:8 ல் ஆண்டவர் கட்டளையிட்டது;

உதாரணத்துக்கு ஊழியக்காரர்கள் யாரையாவது ஆண்டவரே என்றால் பாவமாகும்;ஐயா என்று அநேகரை விளிக்கிறோம்;
தமிழ் சொல்லர்த்தப்படி அதுவும் பாவமே; ஆனாலும் நம் உணர்வில் அப்படிப்பட்ட எண்ணமில்லாததால் பாவமாகக் கருதப்படாது என்று அறியலாம்.

ஆனால் அப்போஸ்தலர்.13:1 மற்றும் 1.கொரிந்தியர்.12:28,29 ஆகிய வேத வசனங்களில் மூலபாஷையான கிரேக்கத்தில் G1320 didaskalos எனும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது; இது முற்றிலும் வேறு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறது; இதன் அடிப்படையிலேயே போதகர் அல்லது மேய்ப்பர் என்று வழங்கப்படுகிறது; இதற்கு instructor என்றும் தமிழில் பயிற்சியாளர் என்றும் ஓரளவு பொருளை மாற்றி கூறலாம்; இதன்படி போதிப்பவர் என்ற அர்த்தத்தில் போதகர் என்றாலும் தவறில்லை;

அதாவது G1320 இன் படி didaskalos என்றும் G1321 didaskō என்றும் வழங்கப்படுகிறது; இதன்படி கற்று - கற்பிப்பவர் என்றும் கூறலாம்; ஏனெனில் 1.யோவான்.2:27 -இல் ஆவியானவரே போதிக்கிறவர் என்ற வசனத்திலும் இதே சொற்கள் காணப்படுகிறது; இதனால், "பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர். " என்று நம்முடைய ஆண்டவர் சொன்னதும் (மத்தேயு.10:20) நிரூபணமாகிறது.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard