பரவச அனுபவங்கள் ஒருபோதும் பரி.ஆவியின் கிரியை அல்ல;நற்கிரியையும் நற்குணங்களுமே பரி.ஆவியின் கிரியையாகும்.
தான் வஸ்திரம் விலகி விழுந்து புரளுவது வீடியோ எடுக்கப்படும் என்று ஒரு பெண் முன்பதாக அறிந்திருந்தால் ஒருபோதும் அவள் தனக்குள் இதுபோன்ற ஆவியானது இறங்க அனுமதிக்கவே மாட்டாள்.இதுவும் பெண்களுக்கு எதிரான ஒரு வன்கொடுமையாகவே பாவிக்கப்படவேண்டும்.
குறிப்பாக பெண்களின் பலவீனமான பகுதிகளைத் தொட்டு உணர்ச்சிவயப்பட வைக்கிறார்கள்.அதில் பழகிய பெண்கள் ஒரு வித மனநோயாளிகளைப் போல நடந்துகொள்ளுகிறார்கள்.
இதுபோன்ற கூத்துக்களை நடத்துவோரின் மனைவியோ மகளோ இதுபோல ஒருமுறையாவது விழுந்து புரண்டிருக்கிறார்களா ? அதுபோன்ற வீடியோ வெளியிடப்பட இந்த தலைவர்கள் அனுமதிப்பார்களா ?
அன்பு சகோதரர் அவர்களுக்கு, தங்கள் பின்னூட்டத்துக்கும் தங்கள் கட்டுரையின் தொடுப்பைத் தந்து அடியேனுடைய கட்டுரைக்கு வலு சேர்த்தமைக்கும் மிக்க நன்றி. தாங்கள் இணைத்துள்ள வீடியோ துக்கத்தையும் கோபத்தையும் வரவழைப்பதாக இருக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால் இந்த மாதிரி ஊழியர்களை விட அந்த இளைஞரைப் பிடித்திருந்த பிசாசே தேவலாம் போல இருக்கிறது. தனது சுய விளம்பரத்துக்காக ஒரு வாலிபரின் சுயமரியாதையைக் கிழித்து தெருவில் தொங்கவிட்டிருக்கிறார் நமது கனம் பொருந்திய ஊழியர்.
//ஆனாலும் நீங்களாவது நண்பர் என்ற முறையில் நம்முடைய யௌவன ஜனம் தளத்தில் இதுகுறித்து ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதை ஒரு வரியாகிலும் குறிப்பிட்டிருந்தால் நமக்குள் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்பட வாய்ப்புண்டாகுமே..?//
மன்னிக்க வேண்டும் சகோதரரே! இந்தக் கட்டுரை கடந்த அக்தோபர் மாதம் எழுதப்பட்டு அடியேனுடைய பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டது. இக்கட்டுரை "உண்மை சுடும்" புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. தங்களது கட்டுரையை நான் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனாலும் இப்போது தொடுப்பைத் தந்தமைக்கு மிக்க நன்றி.
//நீங்கள் கட்டுரைகளாகவே எழுதி அதனைப் புத்தகமாகவும் போடுமளவுக்கு நேர்த்தியாக வேலை செய்கிறீர்கள்;உங்கள் அளவுக்கு நான் இந்த காரியத்தில் என்னால் சாதிக்கமுடியாத வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.//
ஊழியத்தை நினைக்கும் போதெல்லாம் நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கும் ஒரு காரியம் உண்டு சகோதரரே! அது கர்த்தராகிய இயேசு சொல்லும் "நல்லது உண்மையும் உத்தமமுமான ஊழியக்காரனே!" என்பதுதான். அவர் "நல்லது பெரிதானவற்றை சாதித்த வெற்றிகரமான ஊழியனே!" என்று சொல்லவில்லை. "கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" என்றும் வேதம் சொல்லுகிறது. பாராட்டுகளிலிலும் வெற்றிகளிலும் மேன்மை பாராட்டாதபடி நம் தலையில் குட்டிவைக்கும் காரியங்கள் இவைகளே! நமது சாதனைகளல்ல "நமது உண்மையே" கடைசிநாளில் பேசப்படும் அல்லவா? தாங்கள் தைரியத்திலும், கிறிஸ்துவுக்காகப் பாராட்டும் வைராக்கியத்திலும் எட்டிப்பிடிக்க முடியாத தொலைவிலல்லவா இருக்கிறீர்கள்! தங்கள் வைராக்கியத்துக்கான வெகுமதியை கர்த்தருடைய கரத்திலிருந்து நிச்சயம் பெறுவீர்கள்!
நண்பர் விஜய் அவர்களின் தளத்தில் ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது; அதுகுறித்த நமது உணர்வுகளை அங்கே பதித்துள்ளோம்.
அன்பு சகோதரர் விஜய் அவர்களே, நல்லதொரு கட்டுரையினை உங்கள் பாணியில் படைத்திருக்கிறீர்கள்;நீங்கள் எழுதினால் அது உடனே சென்று சேரவேண்டிய இடத்தில் சேருகிறது; எல்லாவற்றுக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் போலிருக்கிறது.
ஆனாலும் நீங்களாவது நண்பர் என்ற முறையில் நம்முடைய யௌவன ஜனம் தளத்தில் இதுகுறித்து ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதை ஒரு வரியாகிலும் குறிப்பிட்டிருந்தால் நமக்குள் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்பட வாய்ப்புண்டாகுமே..?
நம்முடைய கட்டுரை (?!) யை தாங்கள் கவனிக்கவில்லையோ அல்லது அதன் பாதிப்பினால் நீங்கள் இதை எழுதினீர்களோ நான் அறியேன்…ஆனாலும் நமது மதிப்புற்குரிய வாசகர்களின் கவனத்துக்கு இதனைக் கொண்டுவருகிறேன்.
அடியேன் ஆதாரத்துடனும் நேருக்கு நேராக பெயரைக் குறிப்பிட்டும் எழுதுவதால் எனக்கு எதிரிகள் அதிகம்,ஆனாலும் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்முடைய பாணி இதுவே என்று நிர்ணயித்துக்கொண்டேன்.
நீங்கள் கட்டுரைகளாகவே எழுதி அதனைப் புத்தகமாகவும் போடுமளவுக்கு நேர்த்தியாக வேலை செய்கிறீர்கள்;உங்கள் அளவுக்கு நான் இந்த காரியத்தில் என்னால் சாதிக்கமுடியாத வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.
// என் மனைவி அங்கு சென்று ஆடவில்லை கீழேயும் விழவில்லை ஆனால் அவர் அபிஷேகத்தை பற்றிய செய்தி கொடுக்கும்போது அதிகமதிகமாக அபிஷேகம் இறங்கியதாகவே சாட்சிபகன்றுள்ளார். உங்கள் விமர்சனத்துக்கு பயந்துகொண்டு என் மனைவி அபிஷேகம் பெற்றதையும் அதில் உள்ள உண்மையையும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை //
நண்பர் சுந்தர் அவர்களுக்கு, எனது சகோதரியும் தங்கள் மனைவியுமான ஒரு கர்த்தருடைய பிள்ளையை இங்கே விவாதப் பொருளாக்க வேண்டாம் என்றே வேண்டினேன்;அவர் அபிஷேகம் பெற்றதாக நினைத்ததும் சொல்லிக்கொள்ளுவதும் வசனத்தின்படியானதல்ல என்பதை அபிஷேகம் எனும் வார்த்தையின் பொருளைக் கொண்டே விளக்கியிருக்கிறேன்;அது ஒரு பரவச அனுபவம் அவ்வளவே;அபிஷேகமும் அதன் தொடர்பான செயல்பாடுகளும் வெவ்வேறானவை;அதனை நமது ஆராதனை அரங்குகளிலிருந்து நீங்கள் கற்க முடியாது.
மக்களரங்கத்திலும் வேதத்திலும் நீங்கா இடம் பெற்றுள்ள தாவீது சாமுவேலின் கையினால் அபிஷேகிக்கப்பட்ட போது தற்கால இசை இரைச்சல்களும் கூச்சல்களும் இருக்கவில்லை;
ஏரோதியாளுக்கெதிராக சிங்கநாதமிட்ட திருமுழுக்கினர் யோவான் அபிஷேகிக்கப்பட்டபோது இன்னும் அவர் பிறக்கவேயில்லை, வயிற்றிலிருந்தே துள்ளினார்;
இன்றைக்கு வீரமுழக்கமிடும் ஊழியர்களைத் தாக்க அல்ல,ஒரு விவரம் கேட்க நான் மேடையின் அருகில் சென்றால் என்ன நடக்கும் தெரியுமா, அவரைச் சுற்றிலுமிருக்கும் குண்டர்கள் என்னைத் தூக்கிச் சென்று தர்மஅடி கொடுப்பார்கள்;
அசுத்த ஆவியால் பீடிக்கப்பட்ட அந்த இளைஞன் சுற்றிலும் கட்டுமஸ்தான நபர்கள் பிடித்துக்கொள்ள நமது ஊழியர் தன் கால்களாலேயே அவனைத் தாக்குவதை நீங்கள் பார்க்கவில்லையா? ஊழியர் போட்ட கூச்சலும் இந்த மறைமுகத் தாக்குதலும் மல்யுத்த களத்தைப் போல அல்லவா இருந்தது..? //இந்நிலையில் பிறர் செய்வது தவறு மோசடி என்று விமர்சிப்பது எவ்விதத்திலும் ஏற்றத்தல்ல என்பதை...//
மோசடியை மோசடி என்று கூறாமல் எப்படி கூறுவது, நண்பரே? கொஞ்சம் சத்திய வசனத்தையும் மீதம் உலகப் பிரகாரமான முறைகளையும் கலந்தடிப்பதால் உங்களுக்கு தவறு எடுபடாமலிருக்கிறது;வசன அறிவினால் மட்டுமே நிரந்தர விடுதலை உண்டாகும்; இதுபோன்ற பேய் ஓட்டும் முறைகள் வேதத்தில் இல்லை;அதுபோல அப்போஸ்தலர்கள் கற்றுக்கொடுக்கவில்லை; 'எல்லோர் மீதும் சீக்கிரத்தில் கையை வைக்காதே' என்று சொன்ன பவுலடிகள் கை வைத்து பேய் ஓட்டியதாக ஒரு வசனமாவது உண்டா?
வியாதியை சுகமாக்க மக்களைத் தொட்ட ஆண்டவர், பேய் பிடித்தவன் அருகில் சென்று சம்பாஷித்துக் கொண்டிருந்ததாகவோ அவனுடன் கட்டிப்புரண்டு போராடிக் கொண்டிருந்ததாகவோ வாசிக்கிறோமா? அதட்டினார்...எத்தனை முறை..?
கவனியுங்கள்...தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார்..!
// உங்களைபோல "அடிவிழும்" "உதை விழும்" "அவன், இவன்" என்று கடின வார்த்தைகள் எழுதி எனக்கு பழக்கம் இல்லை ஆகினும் இதற்க்கெல்லாம் கர்த்தரிடம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன் //
எச்சரிக்கைக்கு நன்றி, நண்பரே; ' நான் வந்து உங்களை அடிப்பேன் ' என்று எங்கேயாவது எழுதினேனா..? நீங்கள் சத்தியத்துக்கு விரோதமாக எழுதும் போது அதனை எச்சரிப்பது எனது கடமை; 'ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ ', என்கிறார் பவுலடிகள்;
நீங்கள் பாட்டுக்கு ஏதோ ஒரு ஆவி தந்த வெளிப்பாட்டினால் புத்தர் மூலமும் ஆண்டவர் வேதத்தைக் கொடுத்தார்,பைபிள் மாத்திரமே முழுமையானதல்ல என்றெல்லாம் பேசும் போது நான் வைராக்கியத்தை வெளிப்படுத்தினேன்;அதையும் உதாரணத்துடனே கண்டிக்கிறேன்,ஒரு இஸ்லாமியனாக இருந்து குரானையும் இதுபோல பேசுவீர்களா, என;அந்த ஆட்களை சாந்தப்படுத்தி, அவர்களோடு உறவுகொள்ளவும் சமதர்மவாதியாக பேரெடுக்கவும் பைபிளைக் குறைத்து பேசினால் பார்த்துக் கொண்டிருக்கமுடியாது;இன்னும் மோசமாகவும் தாக்குவோம்.
// பால் தினகரனில் ஆரம்பித்து ஆலன் பால் எசேக்கியா ஃபிரான்சிஸ் என்று தொடர்ந்து இப்பொழுது ஜியாஃபிரீ வரை எல்லோரும் எதோ அர்த்தமற்ற ஊழியம் செய்வதுபோலவும் நீங்கள் ஒருவர்தான் உண்மையான ஊழியர் போலவும் எழுதிகொண்டிருப்பதோடு, இப்பொழுது அவர்கள் நடத்தும் கூட்டத்துக்கு சென்றுவரும் சகோதரிகளையும் கடுமையாக விமர்சிக்கிறீர்கள். இது சரியான போக்கு அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன். //
நான் ஊழியர் என்று எங்கும் பறைசாற்றிக் கொள்ளவில்லையே;அப்படியானால் நான் ஏன் புனைப் பெயரில் எழுதவேண்டும்? எனது பேர், பெருமை, புகழ் வெறுத்தே என்னை மறைத்துக்கொண்டு என்னாலான சிறு எழுத்துப் பணியைச் செய்கிறேன்;
சிலர் சரியானது எது என்பதை விரைந்து அறிவார்கள்;சிலர் தவறானது எது என்பதை விரைந்து அறிவார்கள்;நான் எந்த வகை என்பது உங்களுக்கே தெரியும்.
சரியானது எது என்பதைக் கூறிய பிறகே எனது முயற்சி நிறைவடையும் என்பதை அறிந்திருக்கிறேன்;ஆனால் தவறானதைக் கூறியே அதன் வழியே சரியானதை அடையாளம் காட்ட இயலும்; ஆனால் ஆரம்பத்திலேயே எனது முயற்சிக்கு ஆதரவு இல்லாததால் இந்த பணியை நிறைவு செய்ய இயலவில்லை.
ஒருவரை குறைகூறினால் அதைக் குறித்து பரிசீலிப்பதைவிட குறை கூறுபவர்க்கு என்ன தகுதியுண்டு என்றே ஆராய்கிறார்கள்;அப்படியானால் குறை சொல்லுவதற்கும் ஒரு தகுதி வேண்டுமோ?
அப்படியானால் நமது ஊழியர்கள் வேதத்திலுள்ள பரிசுத்தவான்களைவிட பெரியவர்களா? தற்கால போதகர்கள் ஆபிரகாமையும் யோபுவையும் ஆராய்ந்து குறைகூறுவது உங்களுக்குத் தெரியாதா?
என்னைப் பொருத்தவரையில் நான் எந்த ஊழியரையும் தனிப்பட்ட முறையில் குறைகூறி தாக்கியதில்லை;இன்றைய ஊழியர்களைக் குறித்த தனிப்பட்ட விவரங்கள் எனக்குத் தெரிந்தாலும் அதனை வி(வ)காரமாக்க நான் விரும்பியதில்லை;அது அந்நியர் வாய்க்கு அவலாகிறதைக் கண்டு என்னை அடக்கிக்கொண்டேன்.
ஆனால் அதுவும் சபை போதனை சம்பந்தமானதுதான், குறிப்பிட்ட போதகர் குடும்பம் சம்பந்தமான அந்த காரியம் சபை மக்களுக்கு தவறான முன்மாதிரியைத் தந்துவிட்டது;அதுகுறித்து பெங்களூரிலிருந்து ஒரு சகோதரி மிகவும் வருந்தி கேட்டுக்கொண்டதால் அந்த குறிப்பிட்ட பதிவை நீக்கினேன்;அது பழைய கதை.
ஆனால் நீங்கள் சொல்வது போல பால் தினகரன் குறித்தோ ஆலன்பால் குறித்தோ எசேக்கியா ஃபிரான்சிஸ் குறித்தோ இப்பொழுது ஜியாஃபிரீ குறித்தோ நான் எழுதும்போது நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் நான் அவர்களுடைய போதனையைக் குறித்தே எழுதுகிறேன்;ஆனாலும் அவர்கள் நம்முடைய சமுதாயத்தின் பொறுப்பான தலைவர்கள் என்பதை அறிந்திருக்கிறேன்;எனவே அந்த தார்மீக வைராக்கியத்துடன் அவர்கள் சரியாகச் செய்ததால் இந்த தலைமுறை மாத்திரமல்ல இனி வரும் தலைமுறையும் செழிக்குமே என்ற ஆதங்கத்துடனே எழுதுகிறேன்;
ஆரம்பத்தில் கூட்டம் சேர்க்க நாம் கடைபிடித்த தந்திரங்களை வளர்ந்த பின்னரும் கடைபிடிக்க வேண்டுமென்பது என்ன கட்டாயம்?
இது இவர்களோடு முடிகிற காரியமல்லவே...இவர்கள் தலைமுறையிலேயே இயேசு வருகிறார் என்ற உத்தரவாதத்தை யாராவது தரமுடியுமா அல்லது அப்படியே உத்தரவாதம் தந்தாலும் இவர்களை நம்பி இவர்கள் போகுமிடமெல்லாம் ஓடிவரும் ஆத்துமாக்களுக்கு இவர்கள் உத்தரவாதம் தருவார்களா?
பால் தினகரனைக் குறித்து என்ன எழுதினேன்,அவர் தனது ஊழியத்தின் ஜெப அரங்கில் இயேசுவின் படத்தை சித்தரித்து அதை நோக்கி ஜெபிக்க மறைமுகமாகத் தூண்டும் வண்ணமாக வைத்திருக்கிறார்;அது சரியா?
ஆலன் பால் வசனத்தை தவறாக வியாக்கியானம் செய்வதைத் தடுக்க இயலாத வேத வல்லுனர்களின் மனக்குமுறலையே நான் எதிரொலித்திருக்கிறேன்; ஏவாள் தின்ற கனி தசமபாகம் தான் என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா?
எசேக்கியா ஃபிரான்சிஸ் பரிசுத்தாவிக்கு பயிற்சி பட்டறை வைத்து அங்கே சிரிக்கவும் வாந்தியெடுக்கவும் சொல்லிக்கொடுக்கிறார்;அதற்கு பணமும் வசூலிக்கிறார்;அது சரியா?
ஜியாஃபிரீ இந்து பூஜாரிகள் பாணியில் பேய் ஓட்டுவதுடன் அதனை டிவியில் போட்டு விளம்பரப்படுத்துகீறார்;இது சரியா?
இவர்களெல்லாம் நம்முடைய சமுதாயத்தின் பொறுப்பான தலைவர்கள்; இவர்கள் யாருமே சரியாக இல்லாததால் ஒருவரையொருவர் கண்டிக்கவோ சீர்திருத்தவோ வாய்ப்பில்லாமல் சபையானது சிதறி தனித்தனி குழுக்களாக பிரிந்துகிடக்கிறது;
சாதாரண மனிதனின் குழந்தைகளுக்கு இனிஷியல் போடுவதைப் போல நான் இவனை சார்ந்தவன் என்றும் நான் அவனைச் சார்ந்தவன் என்றும் சொல்லிக்கொள்ளுகிறார்களே, இதனை பவுல் கண்டிக்கவில்லையா?
அரசியலில் கட்சிகள் உடையும்போது வித்தியாசப்படுத்திக்கொள்ள கட்சியின் பெயரைப் போட்டு அடைப்புக்குறிக்குள் தமது பிரிவைப் போட்டுக்கொள்வார்கள்;அதுபோலவே இவர்களுடைய நாமகரணங்களும் இருக்கிறது;
இந்த குழுக்களை எந்த ஒரு குறிப்பிட்ட போதனை முறையானது இணைக்கவோ அல்லது பிரிக்கவோ காரணமாகவோ இருக்கிறதோ அது கிறித்துவின் மாதிரியிலிருந்து பெறப்படவில்லை;
இணைந்தவர்கள் கிறித்துவின் மாதிரியிலிருந்து இணையவில்லை;எப்படியெனில் தான் நாட்டப்பட்ட சபையிலிருந்து நிதானமாக வசனத்தைக் கற்று மேற்கொள்ளாமல் விரைந்து எதையோ செய்ய துடிக்கிறவர்களை இழுக்க சில தந்திரங்களை இந்த ஊழியர்கள் பயன்படுத்தி அவர்களைத் தம்மிடமாக இழுத்துக்கொள்ளுகிறார்கள்;அவர்கள் தம்மிடமிருந்து பிரிந்துசென்றுவிடாதிருக்க மேலும் சில தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்;(உதாரணமாக இளம்பங்காளர் திட்டம்,குடும்ப ஆசீர்வாத திட்டம்...etc)
மெய்யாகவே இந்த தலைவர்கள் விசுவாசக் குடும்பத்தாரை ஈர்ப்பதைக் காட்டிலும் வட்டாரத் தலைவர்களை சந்தித்து பேசி அவர்களுடன் தம்மிடம் வரும் மக்களை இணைத்துவிடவேண்டும்;அப்படி செய்துவிட்டால் அறுவடையானது இன்னும் பலமாக இருக்கும்;
வட்டாரத் தலைவர் இந்த பெரும்புள்ளிகளையும் பெரும்புள்ளிகள் இந்த வட்டாரத் தலைவர்களையும் நம்புகிறதில்லை என்பதே உண்மை; உதாரணத்துக்கு திரு.ஜியாஃபிரி அவர்களால் புரசைவாக்கத்திலுள்ள மேய்ப்பர் சுந்தரம் ஐயா அவர்களது சபையில் சலசலப்பு உண்டானது;இவர் அங்கிருந்து திருடிச் சென்ற ஆடுகளே இவரைத் தூக்கிச் சுமக்கிறது.
அந்நாட்களில் வட்டார சபைகளே படைமுயற்சி கூட்டங்களை தங்கள் செலவில் நடத்துவர்;அதில் டிஜிஎஸ் போன்ற தலைவர்கள் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டனர்;அவர்கள் தங்களை மையப்படுத்தி சபையினரை ஈர்க்க முயற்சிக்கும்போது சபை நிர்வாகம் தடுமாறியது;அபரிமிதமான மக்கள் ஆதரவு காரணமாக சபையானது பின்வாங்க தனி ஊழியர்கள் வளர்ந்து சபைகளைக் கட்டுப்படுத்தவும் உடைக்கவும் துவங்கினர்;இன்றைக்கு சபை அமைப்பானது சிதைந்து அதன் பணநிர்வாகம் சீர்குலைந்து பெரும்பணம் தனியார் வசம் குவிந்தது பரிதாபம்.
இதனால் சபை நிர்வாகத்தில் சலிப்பும் பொறுப்பின்மையும் தோன்றி ஊழல்கள் மலிந்தது; இவர்கள் கணக்கில் வைத்து கொள்ளையடித்தால் அவர்கள்- அதான் தனியார் ஊழியர்கள்- அதாவது எந்த சபைக்கும் கட்டுப்படாத ஊழியர்கள் கணக்கில்லாமல் கொள்ளையடிக்கின்றனர்.
இந்த இயக்கங்களிடையே காணப்படும் பிரிவினையும் வெளிப்படையானது;எல்லோரும் ஒன்றுபோலவே காணப்பட்டாலும் இவர்களுக்குள்ளும் நுட்பமான பிரிவினைகள் உண்டு;இதில் ஜாதி பாசம், ஊர் பாசம் முதற்கொண்டு அனைத்தும் அடங்கும்.
தேவாலய பீடம் எந்த நிபந்தனையுமில்லாமல் வரவேற்கிறது;ஆனால் இந்த அற்புத ஊழியர்களை சந்திக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் பத்தாயிரத்திலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வரை செலவாகும்.
பத்தாயிரம் என்றால் ஒருவாரம் கழித்து அப்பாயிண்ட்மெண்ட்;ஒரு இலட்சம் என்றால் உடனடி அப்பாயிண்மெண்ட்;என்ன, நீங்கள் ஆண்டவர் பெயரில் ஒரு பொய் சொல்லவேண்டும்;"ஆண்டவர் உங்கள் ஊழியத்துக்கு இவ்வளவு பணம் தரச் சொன்னார் என்றோ எனது பொருத்தனை காணிக்கையை நிறைவேற்றவேண்டும் " என்றோ சொல்லவேண்டும்;
திருப்பதிக்குக் கூட இணையதளம் மூலம் பணம் கட்டினால் வீடுதேடி பிரசாதம் வந்து சேருகிறது;அதுபோலவே இயேசுவையும் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள குட்டிசாத்தான் போல சித்தரித்து கல்லா கட்டுகிறார்கள்;இதற்கு பில்டப் கொடுக்கவே அலங்கார மேடையும் ஆடையாபரணமும் விளம்பர ஏஜென்சிகளும் இசைக் கச்சேரிகளும் மேடையை அலங்கரிக்கும் அரசியல் சினிமா பிரபலங்களும்.
ஏரோது ராஜாவின் அரசவைக்கு யோவான் ஸ்நானனின் தலை தாலத்தில் வைக்கப்பட்டு சென்றதே தவிர அவன் சென்றதில்லை;இயேசுவையும் அவ்வாறே ராஜா பலமுறை சந்திக்க விரும்பியும் அவர் அந்த அழைப்பை நிராகரித்தார்;சீரியா தேசத்தின் படைத்தலைவனான நாகமானை எலிசா முன்பின் பார்த்ததே யில்லை;அதாவது அவன் குஷ்டத்தின் கஷ்டத்தில் வந்தபோதும் சரி அவன் குணமானபிறகும் சரி எலிசா அவனை சந்திக்க விரும்பவில்லை;ஆனால் கேயாசி சந்தித்தான்.
// எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் புதை குழியை நோக்கி போகும் ஜனங்களை ஏதாவது ஒருவழியில் அழைப்பு விடுத்து என்னிடத்தில் வாருங்கள் அல்லது நான் சொல்வதை கேளுங்கள் அல்லது என்னை பின்பற்றுங்கள் நான் உங்களை தேவனிடம் வழி நடத்துகிறேன் என்று சொல்வதில் எந்த தவறும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை. //
அதில் எந்த தவறும் இல்லை;ஆனால் வருபவர்களிடம் தொடர்பு முகவரி கேட்பதும் வேறு ஊழியர்களிடம் அவர்கள் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ளும் கரிசனையுமே வியக்கவைக்கிறது;
// நாங்கள் நடத்தும் கூட்டத்துக்கு வாருங்கள் என்பது அவர்கள் அழைப்பாக இருந்தாலும் அவர்கள் நடத்தும் கூட்டத்தில் சென்று அமர்ந்ததால் அவர்கள் தேவனை தான் நோக்கி பார்க்கும்படி போதிக்கிறார்கள். //
அப்படியா...அப்படியானால் நான் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன்? நான் என்ன வேதநாயகம் சாஸ்திரியார் காலத்திலிருந்தா சிந்திக்கிறேன்? எந்த ஊழியரும் தேவனை நோக்கி நடத்தினால் எந்த பிரச்சினையும் இருக்கப்போவதில்லை;இவர்கள் நடத்தும் கூட்டங்களின் சாட்சி பகுதியை கவனித்தாலே போதும்;அது டிவியோ பத்திரிகையோ முழுக்க முழுக்க சுயப் பிரஸ்தாபமே கொட்டி கிடக்கிறது; சாட்சி சொல்லுபவர் வரிக்கு வரி ஊழியருடைய பெயரைச் சொல்லவேண்டிய அவசியமென்ன? அந்த ஸ்தாபனத்துக்கு காணிக்கையை வாக்களிப்பது ஏன்? வேதத்தில் சுகம் பெற்ற யாராவது ஆண்டவரிடமோ அப்போஸ்தலரிடமோ காணிக்கை பெற்றனரா?
// வெளியே இருந்துகொண்டு வேடிக்கை பார்த்து அங்கு நடப்பது எல்லாம் தவறு என்று உலகத்தார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் கிறிஸ்த்துவின் சபை என்னும் சரீரத்தில் அங்கமாக இருக்கும் சக சகோதரர்களாகிய நமக்கு அது தகுதியல்ல. //
அடடா...காலில் முள்குத்தினால் கூட சிரித்துக்கொண்டே சமாளிப்பீர்களோ? ஒருவேளை உங்களுக்கு வேண்டியவர் எதிரில் கொஞ்ச நேரம் சமாளிக்கலாம்...அப்புறம்..?
சகோதர்களுக்கிடையே வர்க்க பிரிவுகள் இருக்கலாமா,வசதியானவர்கள் வசதி குறைந்தவர்கள் எனும் பாகுபாடு காட்டலாமா?எவ்வளவு காணிக்கை கொடுத்திருப்பீர்கள்,ஒருநாளாவது அவர்கள் வீட்டுக்குள் அனுமதித்திருப்பார்களா, இலட்சக்கணக்கில் காணிக்கை வசூலிக்கும் இவர்கள் தமது விருந்தினருக்கு சாதாரண நீர் மோராவது ஏன் வெறும் தண்ணீர் பாக்கெட்டாவது ஒழுங்கு செய்கிறார்களா? சரீரத்தின் அங்கம் என்றால் இந்த அடிப்படையான காரியங்களில் கரிசனையுடன் கூடிய அணுகுமுறை இருத்தல் வேண்டும்; சரீரத்தின் அங்கம் எனும் போதனையானது சபைக்காக மாத்திரம் கொடுக்கப்பட்டது; இவர்கள் தான் எந்த சபைக்கும் கட்டுப்படாதவர்களாயிற்றே?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் புதை குழியை நோக்கி போகும் ஜனங்களை ஏதாவது ஒருவழியில் அழைப்புவிடுத்து என்னிடத்தில் வாருங்கள் அல்லது நான் சொல்வதை கேளுங்கள் அல்லது என்னை பின்பற்றுங்கள் நான் உங்களை தேவனிடம் வழி நடத்துகிறேன் என்று சொல்வதில் எந்த தவறும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.
நாங்கள் நடத்தும் கூட்டத்துக்கு வாருங்கள் என்பது அவர்கள் அழைப்பாக இருந்தாலும் அவர்கள்நடத்தும் கூட்டத்தில் சென்று அமர்ந்ததால் அவர்கள் தேவனைதான் நோக்கித்தான் பார்க்கும்படி போதிக்கிறார்கள்.
வெளியே இருந்துகொண்டு வேடிக்கை பார்த்து அங்கு நடப்பது எல்லாம் தவறு என்று உலகத்தார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் கிறிஸ்த்துவின் சபை என்னும் சரீரத்தில் அங்கமாக இருக்கும் சக சகோதரர்களாகிய நமக்கு அது தகுதியல்ல.
"நான் விரும்பாததையே செய்கிறேன்" என்று சொல்லிய பவுல் "என்னி டத்தில் ஒரு குற்றமும் அறியேன்" என்றும் சொல்லிவிட்டால் உடனே அவரிடம் குற்றம் எதுவும் இல்லை என்று பொருள் ஆகிவிடுமா? "நானும் கூடத்தான் என்னிடத்தில் ஒரு குற்றமும் அறியேன்" ஆனால் நான் தேவனின் பார்வையில் எப்படி இருக்கிறேன் என்று யாருக்குதெரியும்?
யோபு 15:14 மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
"நான் கிறிஸ்த்துவை பின்பற்றுவது போல என்னை பின்பற்றுங்கள்" என்று பவுல் துணிந்து சொல்கிறார்
இந்த வசனத்தை வைத்து அவர் தேவனை நோக்கி ஜனங்களை திருப்பாமல் தன்னை பின்பற்ற சொல்லுகிறார் என்று எடுத்து கொள்ளலாமா?
பால் தினகரனின் ஆரம்பித்து ஆலன் பால் எசேக்கிய பிரான்சிஸ் என்று தொடர்ந்து இப்பொழுது ஜியாபிரீ வரை எல்லோரும் எதோ அர்த்தமற்ற ஊழியம் செய்வதுபோலவும் நீங்கள் ஒருவர்தான் உண்மையான உழியர் போலவும் எழுதிகொண்டிருப்பதோடு, இப்பொழுது அவர்கள் நடத்தும் கூட்டத்துக்கு சென்றுவரும் சகோதரிகளையும் கடுமையாக விமர்சிக்கிறீர்கள். இது சரியான போக்கு அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன். உங்களைபோல "அடிவிழும்" "உதை விழும்" "அவன் இவன்" என்று கடின வார்த்தைகள் எழுதி எனக்கு பழக்கம் இல்லை ஆகினும் இதற்க்கெல்லாம் கர்த்தரிடம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்
எவனும் இங்கு நூற்றுக்கு நூறு பரிசுத்தவான் இல்லை எதோ தேவனின் கிருபையால் நாம் தப்பித்திருக்கிறோம். மன்றபடி நிச்சயம் நமது பரிசுத்தத்தால் அல்ல. இந்நிலையில் பிறர் செய்வது தவறு மோசடி என்று விமர்சிப்பது எவ்விதத்திலும் ஏற்றத்தல்ல என்பதை வேதத்தில் பல வசனங்கள் மிகுந்த எச்சரிப்போடு சொல்கின்றன.
லூக்கா 6:37 மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்;
ரோமர் 14:10 நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன
(என் மனைவி அங்கு சென்று ஆடவில்லை கீழேயும் விழவில்லை ஆனால் அவர் அபிஷேகத்தை பற்றிய செய்தி கொடுக்கும்போது அதிகமதிகமாக அபிஷேகம் இறங்கியதாகவே சாட்சிபகன்றுள்ளார். உங்கள் விமர்சனத்துக்கு பயந்துகொண்டு என் மனைவி அபிஷேகம் பெற்றதையும் அதில் உள்ள உண்மையையும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை)
// ரோமர் 7:15 எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். ரோமர் 7:19 ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். //
மேற்கண்ட வசனம் தவறாகப் பிரயோகிக்கப்பட்டுள்ளது;இங்கே பவுலடிகள் எழுத்தின்படி தன்னை ஒரு வாதியாக வைத்து உதாரணத்துக்காகவே பேசுகிறார்;அதே பவுல் தன்னிடத்தில் ஒரு குற்றத்தையும் காணவில்லை,ஆனாலும் அதினால் தான் நீதிமானாக முடியாது என்றும் கூறுகிறார்;
உங்கள் மனைவியைக் குறித்து இத்தனை வெளிப்படையாக கூறியிருக்கவேண்டாம் என்று நினைக்கிறேன்;ஏனெனில் பிசி ஜ்யாஃப்ரியின் ஆவியே தங்கள் மனைவியை ஆடவைத்தது என்று நான் எண்ணுகிறேன்;நீங்களெல்லாம் எதை அபிஷேகம் என்று கூறுகிறீர்கள் என்றே புரியவில்லை.
அண்மையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக ஒருவர் குடியரசு தலைவரால் அபிஷேகிக்கப்பட்டார்;அவர் என்ன தலைகால் புரியாமல் குதித்தாரா?
தவறாக எண்ணவேண்டாம் சகோதரரே,வார்த்தையின்படியான பொருளை முதலில் கவனிக்கவும்.
//... என்று இயேசு கூறியிருக்கிறார் அந்த "பெரிய கிரியையில்" ஜியாப்ரி செய்யும் கிரியைகளும் ஏன் அடங்க கூடாது? //
ஆம்,விசுவாசிகளும் தடுமாறக் கூடிய பெரிய அற்புதங்களையும் அந்தி கிறித்துவின் ஆவியால் செய்யமுடியும்;அதையும் அதே இயேசுவானவரே கூறியிருக்கிறார்;இங்கே அதுவல்ல,பிரச்சினை;இந்த ஊழியர் பெரிய காரியம் எதையும் செய்யவில்லை;
மூணே வெட்டில் வீழ்த்தப்படுகிற இளநீரை மல்டி மீட்டர் தெர்மா மீட்டர் உட்பட அனைத்து மீட்டர்களும் வைத்து பக்கத்துக்கு ஒருவராகப் பிடித்துக் கொள்ள ஒருவன் வெட்டிவிட்டு பெருமையடித்துக் கொண்டால் என்ன மேன்மையோ அதையே அவரும் செய்திருக்கிறார் என்கிறேன்;யோசித்துப்பாருங்கள்,சகோதரரே;
நீங்களெல்லாம் இதுபோல மேலும் மேலும் கேள்வி கேட்பீர்கள் என்பதாலேயே அதனை படமெடுத்து போடுகிறேன்;அணுவணுவாக ஆய்ந்து அறிக்கை தாருங்கள்;
நம்மெல்லாருக்கும் அது ஒரு பாடமாக இருக்கட்டும்;தங்கள் தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன்;ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
எனவே இயேசு செய்ததுபோல் இவர்கள் செய்யவில்லை எனவே அது உண்மை இல்லை என்று வாதிடுவது சரியல்ல.
யோவான் 14:12 என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
என்று இயேசு கூறியிருக்கிறார் அந்த "பெரிய கிரியையில்" ஜியாப்ரி செய்யும் கிரியைகளும் ஏன் அடங்க கூடாது?
அவரவர் கனிகளினால் அவரவர் அறியப்படுவார் என்பதை நாம் நிச்சயம் ஏற்றாக வேண்டும்! அவ்வாறு கனிகளை ஆராய்ந்து பார்க்க புறப்பட்டால் யாருமே இங்கு பரிசுத்தவான் இல்லை. ஆனானப்பட்ட பவுலே:
ரோமர் 7:15 எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். ரோமர் 7:19 ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.
என்று புலம்புவதால், கனிகளை கண்டுபிடித்து ஒருவரின் உண்மை ஆவிக்குரிய தன்மையை கண்டறிவது கடினம். நீங்கள் அவர் டிரைவரை கேட்க சொல்லலாம் அவர் உங்கள் வீட்டு பக்கத்து வீட்டு காரரிடம் கேட்க சொல்லலாம் இப்படி விவாதத்துக்காக வேண்டுமானால் ஏதாவது சொல்லலாம்.
சகோதரர் சாம் அவர்கள் கேட்டதுபோல் "எந்த வசனத்துக்கு விரோதமாக அவர் காரியங்களை செய்கிறார்" என்பதை தெளிவாக தெரிவியுங்கள்.
(எனது மனைவி சகோ. ஜியாபிரி அவர்கள் கூட்டத்துக்கு சென்று தேவ அபிஷேகத்தால் நிரப்பபட்டு வந்ததை நான் அறிவேன் அதனால் கேட்கிறேன்.)
// ஆனால் ஜியாப்ரியின் செயல், வேற்று மத பூசாரிகளின் செயலை சறறு நினைவூட்டினது. இயேசுவோ அல்லது அப்போஸ்தர்களோ ஜியாப்ரியைப் போலத்தான் பிசாசுகளை ஓட்டியிருப்பார்கள் என்றும் நம்பமுடியவில்லை.//
மிகச் சரியாக கணித்துள்ளீர்கள்,ஐயா; மேற்கண்ட தங்கள் வரிகளே தங்கள் கேள்விக்கு போதுமான பதிலாகும்;ஆனாலும் தாங்கள் குறிப்பிட்ட வசனத்தைக் கேட்டால் நாம் சுவிசேஷங்களின் சம்பவங்கள் வழியாகச் செல்லவேண்டும்;அங்கே அதற்கான சரியான வசனம் கிடைக்கும்.
நாம் பைபிள் முழுவதையும் வாசித்தறிய வாய்ப்பில்லாதிருந்தாலும் நான்கு சுவிசேஷங்களையும் அப்போஸ்தலர் பணியையும் ஓரிரு நாட்களில் வாசித்துவிடலாமல்லவா? முயற்சியுங்கள்,ஆவியாவனவர் உங்களுக்கு உதவிசெய்வார்.
ஐயய்யோ ஆவியானவர் என்றதும் அதிலும் குழப்பங்கள் உண்டல்லவா,ஆவியானவரைக் குறித்த எளிமையான விளக்கத்துக்கு ஏசாயா.11:2 மற்றும் 1.யோவான்.2:27- ஐ கவனிக்கவும்.
சாதாரண மனித ஆவியில் இது என் மனைவி என் மகள் என் மகன் என் வீடு என் வாகனம் என்று அறிகிறோமல்லவா,அதுவே தேவ காரியங்களைக் குறித்த சரியான உணர்வுக்கு உதவி செய்வது பரிசுத்த ஆவி, அவ்வளவுதான்.
புதிய ஏற்பாட்டின் ஒரு சம்பவத்தில் கூட பிசாசு பிடித்தவனுடன் இயேசுவோ சீடர்களோ நெருங்கியதாகவோ போராடியதாகவோ தொட்டதாகவோ குறிப்பிடப்படவில்லை;இங்கோ மனநிலைக் கோளாறு மற்றும் ஹைபர் டென்ஷன் நோயாளிகளையும் பிசாசு பிடித்தவர்கள் அல்லது அபிஷேகம் பெற்றவர்கள் பட்டியலில் சேர்த்து துன்புறுத்துகிறோம்.
தன்னை பிறர் அடித்து துன்புறுத்துவதில் சுகம் காண்பதும் ஒரு வகை மனநோய் தான்;அந்த நோய் பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது;வீட்டில் புருஷனிடம் வாங்கிய மிச்சம் மீதியை இந்த புருஷமாரிடம் அனுபவித்து அந்த சுகத்தில் அவர்க்ள் செல்லுமிடமெல்லாம் ஓடுகிறார்கள்;இதனால் வீட்டையும் புருஷனையும் கவனிக்காமல் குடும்பங்கள் உடைகிறது;வேறு வழியில்லாமல் சில கணவன்மாரும் இவர்களிடம் சரணடைகிறார்கள்;விதவைத் தாய்மார்களுக்கு பிரச்சினையில்லை;
இதுபோன்றவர்களின் கூட்டத்தால் ஊழியர்களுக்கு பெருமை தலைக்கேறி தங்களைப் பெரிய ஆட்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்;மக்களுக்கு மலிவான விலையில் சுகம் வேண்டும்;ஊழியர்களுக்கோ கூட்டம் சேர்க்கவேண்டும்; இந்த இரண்டு நோக்கங்களே இவர்களுடைய உறவுக்குக் காரணமாகிறது;என்னோடே சேர்க்காதவன் எனக்கு விரோதி (லூக்கா.11:23) என்றார் இயேசுவானவர்;அதுபோலவே இவர்கள் அப்பாவி ஆத்துமாக்களை தேவனை நோக்கி நடத்தாமல் தங்களையே சார்ந்திருக்கும் வண்ணமாகப் போதித்து அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்;
அடுத்த வீட்டுக்காரன் இயேசுவானவரைத் திட்டினால் ஆண்டவரே பார்த்துக்கொள்வார் என அமர்ந்திருக்கும் இந்த அப்பாவி ஆத்துமாக்கள் இந்த ஊழியர்களைக் குறித்து ஏதாவது சொல்லிவிட்டால் சீறிக் கொண்டு வருவார்கள்;
எனவே ஆண்டவரும் அவர்கள் கனிகளாலே அவர்களை அறிவீர்கள் என்றார்;இவர்கள் கனி என்ன என்பதை இவர்களுடைய கார் டிரைவரிடம் கேட்டால் தெரிந்துவிடும்;இவர்களிடம் பணிசெய்து விலகிய வேலைக்காரர் இன்னும் தெளிவாகச் சொல்லுவார்கள்;பண ஆசை, ஆடம்பரம், புகழ், பெருமை போன்ற கனிகளையே தரும் இந்த ஊழியர்கள் சாத்தானின் தயவில் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்து தேவாலயத்தின் பீடத்தை மறைக்கும் காகிதத் தோரணங்களாக இருக்கிறார்கள். விரைவில் ஆதாரத்துடனும் இன்னும் தெளிவாகவும் கட்டுரை வடிவில் தரமுயற்சிக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Bro.chillsam எழுதியது //நான் பதில் சொல்வதற்கு முன்பாகத் தங்களிடம் ஒரு எதிர்கேள்வி கேட்ட அனுமதிக்கவும்;தாங்கள் கவனித்த துண்டுபட செய்தியில் எது பரிசுத்த வேதாகமத்துக்கு ஏற்றது என்பதை விளக்குவீர்களா?//
நான் கவனித்த துண்டுபட செய்தியில் பரிசுத்த வேதாகமத்துக்கு ஏற்றது ஏதாவது உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் ஜியாப்ரியின் செயல், வேற்று மத பூசாரிகளின் செயலை சறறு நினைவூட்டினது. இயேசுவோ அல்லது அப்போஸ்தர்களோ ஜியாப்ரியைப் போலத்தான் பிசாசுகளை ஓட்டியிருப்பார்கள் என்றும் நம்பமுடியவில்லை.
மொத்தத்தில் ஜியாப்ரியின் செயல் வேதாகமத்துக்கு உட்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் அதை குறிப்பாக ஒரு வசனத்தைச் சொல்லி என்னால் சொல்லமுடியவில்லை. மற்ற பலரும் என்னைப் போலவே இருக்கக்கூடும். அதனால்தான் ஜியாப்ரியின் செயல் எந்த வசனத்திற்கு விரோதமாக உள்ளது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லும்படி கேட்டிருந்தேன்.
அன்பு நண்பரே(sam), தாங்கள் இதுவரை போட்டுள்ள நான்கு பின்னூட்டங்களில் ஒன்றின் மூலமும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளாததை நினைவுபடுத்துகிறேன்; இதுபோன்ற கலந்துரையாடல் தளத்தில் நம்முடைய விசுவாசத்தையும் நம்முடைய பின்னணியையும் குறித்து சற்று தெரிவிப்பது சிறப்பாக இருக்கும்; இனி தங்கள் கேள்வி சம்பந்தமாக...
நான் பதில் சொல்வதற்கு முன்பாகத் தங்களிடம் ஒரு எதிர்கேள்வி கேட்ட அனுமதிக்கவும்;தாங்கள் கவனித்த துண்டுபட செய்தியில் எது பரிசுத்த வேதாகமத்துக்கு ஏற்றது என்பதை விளக்குவீர்களா?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கிறித்துவுக்குள் அன்பான தேவனுடைய பிள்ளைகளே,கடந்த இரண்டு வருடமாக கிறித்தவ விழிப்புணர்வுக்காக இணையதளத்தின் மூலம் போராடி வருகிறேன்.
எனது உள்ளத்திலிருக்கும் பல காரியங்களையும் மனதுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு வெளிப்படையாகத் தெரியும் காரியங்களை மட்டுமே கண்டித்து வருகிறேன்.
இதன் காரணமாக பலராலும் பல சமயங்களில் விமர்சிக்கப்பட்டும் தனிமைபடுத்தப்பட்டும் தவித்ததுண்டு;பலரும் பலமுறை கேட்ட போதும் என்னுடைய போதனையாக எதையும் எங்கும் நிறுவியதில்லை;நான் எந்த ஒரு குறிப்பிட்ட கூட்டத்திலும் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாததே இதற்குக் காரணம்.
இந்நிலையில் நான் எதை எழுதினாலும் அதற்கு என்னுடைய தள நண்பர்கள் ஆதாரம் கேட்பதுண்டு; இலைமறை காய்மறையாக சினிமா கிசுகிசு பாணியில் எழுதுவதில் எனக்கு நம்பிக்கையில்லை;இயேசுவானவர் தனிமையில் கண்டிக்கச் சொன்ன காரியமும் அதுவல்ல;
எதிரிகள் வெளிப்படையாகச் செய்யும் காரியங்களை அந்தரங்கமாகக் கண்டித்து எந்த பிரயோஜனமும் இல்லை;அவர்களுடன் பணபேரத்துக்கு வேண்டுமானால் இந்த அணுகுமுறை உதவலாம்;ஆனால் எனக்கோ அதுபோன்ற எண்ணமோ என்னை பிரபலப்படுத்திக்கொள்ளும் ஆசையோ இல்லை;
எனவே பெரும்பாலான என்னுடைய நண்பர்களின் வேண்டுகோளின் காரணமாக எந்தவொரு மோசடியான ஊழிய முயற்சிக்கும் ஆதாரத்தை சேகரிக்கவும் அதுபோன்றோரை அடையாளம் காட்டவும் முயற்சிக்கிறேன்.
இதன் காரணமாக நான் வெறுத்துவிட்டு வந்த டிவி பார்க்கும் பாவத்தையும் செய்யவேண்டியதாகிறது;அதிலும் இந்த மோசடியாளர்களின் நிகழ்ச்சிகளைப் பார்க்கவேண்டியதாகிறது;கர்த்தர் தாமே என்னை மன்னிப்பாராக.
இங்கே முதலாவதாக,பெந்தெகொஸ்தே வட்டாரத்தில் பயிற்சி பெற்று ஆவிகளுடன் அடையாளம் காணப்பட்டு வேப்பமரத்தடி பூசாரி தரத்தில் ஊழியம் என்ற பெயரில் எதையோ செய்து வேகமாக வளர்ந்துவிட்டவர் இந்த நபர்;இவரைக் குறித்த மேல் விவரங்களை அறிந்தோர் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
மேற்காணும் இந்த துண்டு படத்தைக் குறித்த கருத்துக்களையும் இந்த ஊழிய முறையின் சூழ்ச்சிகளையும் சூட்சமங்களையும் சத்திய விரோதப் போக்கினையும் விரைவில் வெளிக்கொணருவேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)