// உங்களுடைய இருக்கிற தெய்வத்தை வைத்து, சந்திரனையும், சூரியனையும் இயக்குகிற தெய்வத்தை வைத்து, தொடர்ச்சியாக சந்திரன் எல்லா நாட்களிலும் முழு நிலவாக ஒளி தரும்படி, மாதத்தின் எல்லா நாட்களிலும் முழு நிலவாக ஒளி தரும்படி ஒரு ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக் இப்படி ஒளி விடும்வடி செய்து காட்டுங்கள் //
அண்ணா ,நீங்க கேட்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது;ஒரே சிரிப்பாக வருகிறது;உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற இறைவன் முடிவுசெய்துவிட்டால் அதனைப் பார்த்து இறைவனை ஏற்றுக்கொள்ள இந்த உலகில் எந்த உயிரினமும் இருக்காது;ஏன் இந்த உலகமே இருக்காது ; அறிவுபூர்வமான கேள்வியைத் தான் கேட்கிறீர்களா?
அந்த நாளும் விரைவில் வருகிறது , இதுவரை தமது சிருஷ்டிகள் மூலம் மனிதனுடன் போராடிக் கொண்டிருந்த இறைவன் தமது அனைத்து இரக்கத்தையும் அடைத்துக் கொண்டு இந்த கீழ்ப்படியாத உலகை நியாயந்தீர்க்க இறங்கும் நாளில் தங்கள் வேண்டுகோள் அற்புதமாக நிறைவேறப்போகிறது; அது நீங்கள் எதிர்பார்ப்பதைவிட இன்னும் பயங்கரமாக இருக்கும் .
இது பழைய ஏற்பாட்டின் "யோவேல்" எனும் புத்தகத்திலிருந்து...
Joe 2:30 வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.
Joe 2:31 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
Joe 2:32 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.
இது பழைய ஏற்பாட்டின் "செப்பனியா "எனும் புத்தகத்திலிருந்து...
Zep 1:7 கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.
Zep 1:12 அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன்.
Zep 1:13 அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சத்தோட்டங்களை நாட்டியும், அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.
Zep 1:14 கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான்.
Zep 1:15 அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.
Zep 1:16 அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள்.
Zep 1:17 மனுஷர் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், அவர்கள் குருடரைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும்; அவர்கள் மாம்சம் எருவைப்போல் கிடக்கும்.
Zep 1:18 கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார் .