Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இனப்படுகொலை செய்யத் தூண்டிய கர்த்தர் ஒரு கடவுளா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: இனப்படுகொலை செய்யத் தூண்டிய கர்த்தர் ஒரு கடவுளா?
Permalink  
 


நான் நகைச்சுவைக்காக இதை எழுதவில்லை நண்பரே, உண்மையான பரிதாப உணர்ச்சியினால் எழுதியது. ஆக்கினையில் இருந்து ஒருவர் தப்பிசெல்ல வழி சொல்லப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில், அவர்களுக்கு புரியும் வண்ணம் சொல்ல முயற்ச்சிக்கையில், இப்படி அவசரமாக நரகத்தை நோக்கி ஓடுகிறாரே. no


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// அவசரமாக இலையை தின்றுவிட்டு ஓடிபோயவிட்டு, இப்போது நாங்கள் கொடுத்த உணவு (அவர்கள் தின்ற இலை) கசக்கிறது, வயிறுவலிக்கிறது என்கிறார்கள். //

அசோக் அவர்களே இவ்வளவு நகைச்சுவையுணர்வுடைய உங்களால் எப்படி இத்தனை பொறுமையாக எழுத முடிகிறது;படித்தேன்,ரசித்தேன்,சிரித்தேன்..!

உங்கள் கருத்தைப் படித்ததுமே பின்வரும் வேத வசனமே நினைவுக்கு வந்தது, "தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்." (சங்கீதம்.106:20)

இந்த வசனத்திலிருந்து நம் தேச மக்கள் பசுமாட்டை தெய்வமாக வணங்குவதன் பின்னணியை அறிய வேண்டுகிறேன்;இதனை அன்றைக்கே வேதம் முன்னறிவித்து கண்டிக்கிறது;இதுவே அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசமாக்கும்;இன்னும் பின்வரும் வேத பகுதியும்  நாமனைவரும் அறிந்ததே.

"அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.

அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.

அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள். (சங்கீதம்.115:4 To 8)


இதன் காரணமாகவே அவர்களுடன் நாம் போராடவேண்டியதாகிறது;மகா மட்டரகமான வழிபாட்டு முறையைக் கொஞ்சமும் "லாஜிக்"(logic) பாராது அவர்கள் செய்து கொண்டிருந்து நம்மைப் பார்த்து "இல்லாஜிக்கல்"
(illogical) என்பது எத்தனை கொடூரமான காரியமல்லவா..?

ஆனாலும்
நாம் தளர்ந்துபோகாமல் நாம் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு வலு சேர்க்கும் விதமாக எழுதிவைப்போம்.

ஊருக்குள் ஒரு யானை வந்து ஊர்மக்களைப் படாதபடுத்தி ரெண்டு மூணு பேரை கொலைசெய்து விட்டு களைத்துப் போய் நிற்கிறது;காட்டிலாகா அதிகாரிகள் வந்து அதனை ராஜமரியாதையுடன் அழைத்துச் சென்று காட்டில் விட்டு விட்டு வருகின்றனர்.


இதைப் பார்க்கும் அறிவில்லாத மனிதன் கொஞ்சமும் யோசிக்கிறதில்லை; கருணையுள்ள தெய்வமாகத் தான் போற்றும் யானை சாமி ஏன் இப்படி போர்க்கோலம் பூண்டு தன் பக்தர்களைக் கொல்கிறது, என்று; மேலும் நாசமாகப் போக பரிகார பூஜைகள் என்ற பெயரில் எதையோ செய்து வைக்க அடுத்து கொள்ளை நோய்கள் வருகிறது;அதிலிருந்து மீள்வதற்குள் தேசம் எதிரிகளால் சூழப்படுகிறது;இவையாவும் ஒன்றையொன்று தொடர்ந்த சம்பவங்களாக சங்கிலித் தொடராக நிகழ்ந்தாலும் இவர்களுடைய கண்களை பிசாசு அடைத்திருப்பதால் இவை இயல்பான சம்பவங்கள் என்று எண்ணி தேவனைத் தேடுவதற்கு பதிலாக பிரச்சினையின் தீர்வுகளைத் தேடுகிறார்கள்; அத்துடன் நில்லாமல் இவற்றைச் சொல்லி தேவ எச்சரிப்பைக் கூறும் நம்மையும் தூஷிக்கிறார்கள்; பின்வரும் எச்சரிப்பு நாம் ஒவ்வொருவரும் நெஞ்சில் நிறுத்தவேண்டிய தீர்க்கதரிசன வாக்கியமாகும்.

"மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன்.

அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

நான் தேசத்தில் துஷ்டமிருகங்களை அனுப்ப, அம்மிருகங்களினிமித்தம் ஒருவரும் அதின் வழியாய் நடக்கக்கூடாதபடி வெறுமையும் பாழுமாகும்போது,

அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

அல்லது நான் அந்தத் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணி: பட்டயமே, தேசத்தை உருவப்போ என்று சொல்லி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்போது,

அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

அல்லது நான் அந்தத் தேசத்தில் கொள்ளை நோயை அனுப்பி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி அதின்மேல் இரத்தப்பழியாக என் உக்கிரத்தை ஊற்றும்போது,

நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரனையாகிலும், குமாரத்தியையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
(எசேக்கியேல்.14:13 To 20)

தேவன் தாம் செய்யும் காரியங்களுக்கு யாரிடம் அனுமதி கேட்கவேண்டிய அவசியமோ விளக்கம் சொல்லவேண்டிய அவசியமோ இல்லை என்பதை அவருடைய பிள்ளைகளான நாமும் அறிந்திருக்கவேண்டும்;

கர்த்தர் செய்த அல்லது அனுமதித்த ஒரு காரியத்தின் காரணம் எனக்குத் தெரியாது மிக நேர்மையுடன் சொல்லியிருக்கிறேன்; அதை ஒப்புக்கொள்ள இருதயமில்லாதவனுடைய இருதயம் தேவனுக்கு விரோதமாக எத்தனை கடினமாக இருக்கும்? அல்லது அவரே அவன் இருதயத்தை கடினப்படுத்தியிருந்தால் யாரை நொந்துகொள்ள முடியும்?

நமக்கு அருளப்பட்ட கிருபைக்காக நன்றி கூறுவதுடன் அமர்ந்திருக்க வேண்டும்; அதையே நான் செய்கிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

 கந்தர்வன் போன்றோர் உணவு கேட்டு வருகிறார்கள், அவர்கள் பசியாற, இலையை போட்டு உணவு பரிமாருவதர்க்குள், அவசரமாக இலையை தின்றுவிட்டு ஓடிபோயவிட்டு, இப்போது நாங்கள் கொடுத்த உணவு (அவர்கள் தின்ற இலை) கசக்கிறது, வயிறுவலிக்கிறது என்கிறார்கள். என்ன செய்வது. நறுங்குன்டதும் நோருங்குண்டதுமான இதயங்கள் மட்டுமே மெய்யான தெய்வத்தின் பக்கம் இழுக்கப்படுகிறது புலனாகிறது.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// எனக்குத் தேவையானது உங்கள் வாய் (அல்லது கை) வழியாகவே கிடைத்து விட்டது. இனி நான் உங்களுடன் இத்தளத்தில் விவாதத்திற்கு வரவில்லை. நீங்கள் இத்திரியில் உள்ளதை டிலீட் செய்தாலும் நான் ஸ்னாப்ஷாட் எடுத்து வைத்து ஆவணப்படுத்தியுள்ளேன். டாடா பைபை. //

நண்பர் கந்தர்வன் அவர்களே நீங்கள் உளவாளி என்று அறிந்தே முழுமையான பதில்களைத் தராமல் அளவாகப் பேசினோம்; நீங்கள் குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் எதைத் தேடினாலும் அது உங்களுக்கு தூரமாகவே போகும்; தவறானதைத் தொடரும் பரிதாப நிலையே உங்களுக்கு ஏற்படும்;ஏனெனில் நீங்கள் மாய மானைப் பின்சென்று வஞ்சிக்கப்பட்ட‌ சீதா தேவியின் வழிவந்தோர் அல்லவா?

நாங்கள் எத்தனை திறந்த மனதுடன் வரவேற்றோம், நீங்கள் காட்டும் மரியாதை என்ன, இதுவே உங்களுடைய குணாதிசயத்துக்கு நல்லதொரு உதாரணமாகும் .

இந்த உலகில் பதில் விடுக்க இயலாத கேள்வி என்று எதுவுமே இல்லை; அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை ;இந்த விதி பொதுவானது ;கிறித்தவத்தையோ தெய்வத்துவத்தையோ இறுதி செய்யும் அமைப்பின் தலைவர் நானல்லை .

// சிவனும், பார்வதியும், கணபதியும், முருகனும் மரியாதைக்குரியவர்கள் ஆதலால், அவர்களைக் குறித்து அவதூறாகவும் எழுத மாட்டோம். //

இதுதானே உங்கள் வெற்றியின் இரகசியம்...சமரசம் செய்து கொண்டால் ஆளலாம், எதிர்த்து நின்றால் அடிமைப்படவேண்டுமே..!

நீங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து இது சிந்து நதிக்கு அப்பால் உள்ள தேசமாதலால் சிந்து தேசம் என்று அழைத்து பின்னர் மருவி அது இந்து தேசம் என்று அழைத்து இங்கே செய்யப்பட்ட இயற்கை வழிபாட்டை மாற்றி உருவ வழிபாடாக்க பல மிரட்டல் உருட்டல் வேலைகளைச் செய்து அதை நிறைவேற்ற அன்றைய அரசர்களை வசப்படுத்தி உங்கள் முன்னோர் செய்த அனைத்து தகிடுதத்தங்களும் உலகறிந்த இரகசியமாகும்; இப்போதெல்லாம் வெள்ளைத் தோலுடன் எல்லா ஜாதியிலும் பிள்ளை பிறக்கிறது என்பதே உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்;இனி இங்கே நிறவெறியும் வர்ணாசிரமமும் செல்லாக்காசாகும் .

இந்த விழிப்புணர்ச்சிக்கு அடித்தளமானது பரிசுத்த வேதாகமமே ; எனவே தான் உங்க ஆட்களுடைய அத்தனை வெறியும் இந்த வேதத்தின் மீது திரும்பியிருக்கிறது .


வைதீக வழி நிற்கும் ஒரு பக்தனுக்கு வேதமே பிரதானம் என்றும் அவன் உருவ வழிபாட்டுக்கு அப்பாற்பட்டவன் என்றும் அறிந்தே இருக்கிறோம் ; ஆனாலும் இந்த தேசத்தை வசப்படுத்தி எந்த மதத்தையும் சாராத அப்பாவிகளை பொத்தாம்பொதுவில் இந்துக்களாகிய மாபாவிகள் நீங்களே ; உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பே கிடையாது ;

வாழ்வியல் நெறிகளைக் கதைகளாகவும் கதாநாயகர்களை தெய்வங்களாகவும் நிறுத்தி அப்பாவிகளை வஞ்சித்த உங்களுக்கு விமோசனமே கிடையாது ;

இருக்கும் தெய்வத்தை இல்லாமலாக்க பொய்யான தெய்வங்களை சிருஷ்டித்த படுபாவிகள் அன்று மோசேயின் ஜனத்தில் சரிபாதியாக இருந்து கொலை செய்யப்பட்டனர்;நீங்கள் அவர்தம் வழிவந்தோர் என்றும் அதுவே இன்றைய கோமாதா வழிபாடு என்பதை விரைவில் நிரூபிப்போம்.

இறுதியாக ஒரு சவால், நீங்கள் உண்மையான வைதீகனாக இருந்தால் இந்த தளத்தின் தொடுப்பைத் தராமல் இங்கு விவாதிக்கப்பட்டவைகளைக் குறித்து எங்கும் எழுதக்கூடாது ;நாங்கள் எதில் தோற்றோம் ,நீங்கள் எதில் ஜெயித்தீர்கள் என்று வாசகர் சொல்லட்டும் ;

ஜாடியைத் திறப்பதற்குள் ஓடிட எத்தனிக்கும் நீங்கள் எப்படி வெற்றிபெற முடியும்? நாங்கள் எங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு கேள்விகளையே பதிலாக்கிப் பழக்கப்பட்டவர்கள்; நீங்கள் எதிர்பார்க்கும் பதிலைத் தர நாங்கள் உங்கள் வர்ணத்தைச் சார்ந்தவர்களல்ல‌..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

 கந்தர்வன்,
     பெரிதாக எதையோ சாதித்து விட்டதாக நினைத்து கொண்டிருக்கிறீர்கள், எங்களை வென்றதாக நினைத்துகொண்டிருக்கிரீர்கள்.  எங்களை வென்று உங்களுக்கு எண்ணாக போகிறது? நாங்கள் உங்களை வெல்ல போராடவில்லை. நாங்கள் போராடுவது, நீங்கள் உங்கள் பாவங்களை வெல்லவே.
    சில்சாம் இங்கு எதையும் அழிப்பார் என்று நான் நினைக்கவில்லை. எங்கள் வேத ஞானம் சொர்ப்பமாய் இருந்தாலும், அவற்ற்றை கொண்டு மாபெரும் காரியங்கள் செய்ய என் தேவன் வல்லவராய் இருக்கிறார். நீங்கள், தமிழ் ஹிந்துவில் மட்டுமல்ல, எங்கு வேண்டுமானாலும் எழுதுங்கள். அது என் தேவனுக்கு மகிமையையே கொண்டுவரும்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

Dear Gandharvan,
   The first question is about Sita. I have asked what is the relationship between Sita and Rama. Also, the replationship between Sita's mom and your Vishna. I have to really thank you Mr.Gandharvan, because of this discussion, I really dont know how much you are benefitted. But, I am getting more revelations from the Bible.
Thanks,
Ashok


__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 20
Date:
Permalink  
 

சில்சாம்,

நீங்கள் கூறும் திரியில் எந்த ஒரு கேள்வியும் இல்லை. சான்றோர்கள் யாராலும் தொடப்படாத, விஷ்ணு த்வேஷிகள் சிலரால் புனையப்பட்ட பொய்க்கதையைப் பிடித்துக்கொண்டு பிடிவாதம் பிடிக்கிறீர்கள். வேண்டுமானால் விஷ்ணு புராணம், பாகவதம், பகவத் கீதை, இராமாயணம், நான்கு வேதம், பத்து உபநிஷத்து இதில் எந்த கேள்வியை வேண்டுமானாலும் அந்தத் திரியில் கேட்கலாம்.

சைவத்தையோ சாக்தத்தையோ அழிப்பது எமது நோக்கம் அன்று. படிப்படியே ஆன்மா முன்னேறுவதற்கான முக்கியமான படிகள் அவை. மேலும், மதச் சுதந்திரமும் நாகரீகப் பண்பாடும் கருதி நாம் உங்களைப் போல் தேவையில்லாமல் பிறரிடம் வந்து "நான் வணங்கும் கடவுளையே வணங்கு" என்று வற்புறுத்தவோ மாட்டோம். மேலும், சிவனும், பார்வதியும், கணபதியும், முருகனும் மரியாதைக்குரியவர்கள் ஆதலால், அவர்களைக் குறித்து அவதூறாகவும் எழுத மாட்டோம்.

நாம் இத்திரியில் கேள்வியாகக் கேட்ட அனைத்தும் பழைய ஏற்பாட்டில் அப்படியே உள்ளது. நாம் கேட்ட கேள்விக்கு பதிலைக் காணோம். ஆக மொத்தம், நீங்கள் தோல்வி அடைந்து ஓட்டமாக ஓடுகிறீர்கள். இதிலிருந்து உங்களுக்குப் படுதோல்வி கிடைத்து விட்டது, உலகம் பார்த்து சிரிக்கட்டும். அகந்தை அழிந்தால் தான் பரமன் மீது பக்தி பிறக்கும். மேலும் என்ன தெரிகிறது என்றால், நீங்கள் சுயநலம் காரணமாகவோ, வசதி காரணாமாகவோ கிறித்தவத்திற்கு பஞ்ஜீ ஜம்ப் அடித்துவிட்டீர்கள் என்று தெரிகிறது. நீங்கள் இங்கு செய்து கொண்டிருப்பது ரவுடிகளும் குண்டர்களும் செய்துக் கொண்டிருக்கும் வேலை. உமக்கு உண்மையில் எதிலும் அறிவுப்பூர்வமான, உண்மையான நம்பிக்கை இல்லை என்று தெரிகிறது. எல்லாம் மற்றவரை ஏமாற்றவும் உங்கள் ஈகோவை வளர்க்கவும் பயன்படும் வெறும் போர்வை தான்.

நீங்கள் இதுவரை அளித்துள்ள பதில்களில் பல அற்புதமான விஷயங்களை அசோக்கும் நீங்களும் சேர்ந்து உதிர்த்து விட்டிருக்கிறீர். இந்த விவாதத்தில் உள்ளதைக் கொண்டு தமிழ்ஹிந்துவில் ஒரு கட்டுரை எழுதப் போகிறேன். அதை வைத்துக் கொண்டு பிரச்சாரம் பண்ணித் தமிழகத்தில் பைபிள் என்ற பிசாசு நூலில் உள்ள மோசடிகளையும், நீங்கள் நடத்தும் குண்டர் ரவுடி காரியங்களையும் அறியுமாறு மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்குவோம்.

எனக்குத் தேவையானது உங்கள் வாய் (அல்லது கை) வழியாகவே கிடைத்து விட்டது. இனி நான் உங்களுடன் இத்தளத்தில் விவாதத்திற்கு வரவில்லை. நீங்கள் இத்திரியில் உள்ளதை டிலீட் செய்தாலும் நான் ஸ்னாப்ஷாட் எடுத்து வைத்து ஆவணப்படுத்தியுள்ளேன். டாடா பைபை.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=38878370

அன்பர் கந்தர்வன் அவர்களுக்கு,மேற்காணும் திரியில் தாங்கள் பதிலளிக்கவேண்டிய கேள்விகள் ஏராளமுண்டு; தாங்கள் இந்த தேசத்தில் செய்து முடிக்க வேண்டிய பணியும் ஏராளம் உண்டு.

ஏனெனில் இந்த தேசத்தின் பெரும்பான்மையினர் தாந்தொன்றிகளாக கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற தெய்வ வழிபாட்டில் உள்ளனர்; உங்களைப் போன்ற தந்திரசாலிகளாக நாங்கள் இருந்திருந்தால் சுமக்க தோள் கிடைத்தால் போதும் என்று சமரசம் செய்துகொண்டு வயிற்றைத் தடவிக் கொண்டு வண்டியை ஓட்டியிருப்போம்.

நீங்கள் நேர்மையுடன் இந்த தேசம் முழுவதும் வைதீக நெறியைப் பிரச்சாரம் செய்து அதற்கெதிரான சைவத்தை ஒழிக்கும் வழியைப் பாருங்கள்; இறுதியில் உங்களை ஆதாயப்படுத்துவது எங்களுக்கு எளிதாகும்.

God Bless You..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 20
Date:
இனப்படுகொலை செய்யத் தூண்டிய கர்த்தர் ஒரு கடவுளா?
Permalink  
 


சில்சாம் அவர்கள் கவனத்திற்கு...

இராவணன் சிவ பக்தனாக இருந்தால் என்ன, விஷ்ணு பக்தனாக இருந்தால் என்ன, கிறித்தவனாக இருந்தால் என்ன, முகம்மதியனாக இருந்தால் என்ன. குற்றவாளி குற்றவாளி தான். இராமன் நட்புக்கும், சகோதரத்துவத்துக்கும், சரணடைவதற்கும் பல வாய்ப்புகள் தந்தும் சீதையை இராவணன் விடுவிக்கவில்லை. அதற்கான தண்டனையை அனுபவித்தான். அவ்வளவே.

மெய்ய்ப்பொருளான ஆதி கர்த்தாவாகிய இராமனும் அவன் படையும் இராவணன் என்ற அரக்கனையும், இராவணனைப் பற்றித் தெரிந்தும் அவனுக்கு உதவி புரிந்தவர்களையும் மாத்திரம் சம்ஹரித்தான்
. வேதத்திலேயே போர் செய்வதற்கு நியமம் உண்டு. கண்டபடி பெண்டு, குழந்தை, ஆடு, மாடு என்று எல்லாவற்றையும் அழித்தல் வேத தர்மத்தின்படி கொடிய நரகத்தில் தள்ளும் குற்றமாகும். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இராமனும் அவ்வாறே இராவணன் தம்பி விபீஷணனுக்கு இராஜ்ஜியமும், வாலி மகன் அங்கதனுக்கு வாழ்வும், வாலியை இழந்த விதவை தாரைக்கு வாழ்வும் கொடுத்தான். "இலங்கைக்குச் சென்று அங்கு இருப்பவர்களை எல்லாம் கொன்றுவிட்டு வாருங்கள்" என்ற ஆணையைப் பிறப்பிக்கவில்லை. ஆகவே, அமேலைக்கிய கதையுடன் ஒப்பிட முடியாது.

மேலும்,

// ஆனால் வெளிநாட்டு தெய்வமாக நீங்கள் நினைக்கும் ஒரு தெய்வத்தைக் குறித்து கேள்வி கேட்கவோ அந்த மெய்த் தெய்வத்துடன் இங்கே இருக்கும் எண்ணற்ற லோக்கல் தெய்வங்களை ஒப்பிடவோ இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். //

இப்படி எழுதிவிட்டு இராமாயணத்தையும் பழைய ஏற்பாட்டூ நிகழ்வையும் ஒப்பிட்டது எதற்கோ?


-- Edited by gandharvan on Thursday 21st of October 2010 02:03:20 PM

__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 20
Date:
RE: இனப்படுகொலை செய்யத் தூண்டிய கர்த்தர் ஒரு கடவுளா?
Permalink  
 


(1) நல்லது-கெட்டது பற்றிய அறிவு வருவதற்குள் இறக்கும் சிசுவுக்கு அ. சுவர்க்கம், ஆ. நரகம் இரண்டில் ஏதோ ஒன்று தானே கிட்டும்?

(2) அவர்களுக்கு நரகமே கிட்டுகிறது என்றால், "சிலருக்கு (இறக்காமல் வளரும் கிறித்தவக் குழந்தைகளுக்கு) மாத்திரம் ந்யான ஸ்னானம் செய்யும் வாய்ப்பையும் இயேசுவை ஏற்கும் வாய்ப்பையும் கொடுத்து அவர்களை மீட்க வைக்கிறார்" என்றும், "சிலருக்கு (இறக்கும் சிசுக்களுக்கு) அப்படி முதற் பாவத்தைப் போக்கிக் கொண்டு உய்வு பெற வாய்ப்பளிக்கவில்லை" என்றும் விளையும். சரி தானே?

(3) அவர்களுக்கு சுவர்க்கமே கிட்டுகிறது என்றால், "சிலருக்கு (இறக்கும் சிசுக்களுக்கு) மாத்திரம் இலவசமாக சுவர்க்கம் புக டிக்கெட் கொடுத்து விடுகிறார், சிலருக்கு மாத்திரம் ’இவன் நம்மிடம் வந்து சரணடைகிறானா என்று பார்ப்போம்’ என்று சோதித்துப் பார்க்கிறார்" என்றும் விளையும். சரி தானே?

(4) முதல் பாயிண்டின் படி இரண்டாவது பாயிண்டோ அல்லது மூன்றாவது பாயிண்டோ இரண்டில் ஏதோ ஒன்று உண்மையாக இருக்க வேண்டும். சரி தானே?

(5) அவ்விரண்டில் எது உண்மையானாலும், கர்த்தர் நியாயமானவல்லர், அநீதி இழைப்பவர் என்று விளையும். சரி தானே?

மேற்கூறிய கேள்விகளுக்கு எல்லாம் "சரி" என்று ஒப்புக் கொண்டால் என் வேலை முடிந்தது. "தவறு" என்று கூறினால், ஒரு பாரா அளவுக்குள் ஏன் தவறு என்று எழுதவும். சவாலை ஏற்கிறீர்களா?


__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 20
Date:
Permalink  
 

சில்சாம், அசோக் குமார்,

சிந்தியுங்கள்...

இறக்கும் சிசு, முதற் பாவம், அமேலேக்கிய சிசுக்கள், எகிப்திய முதல்சன்கள் -- இவை எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தமானவையே.

நிஜமாகவே உங்கள் பதில்கள் என்னை வியக்க வைக்கின்றன. பாபச் செயல்களைச் செய்ய வாய்ப்பே இல்லாத குழந்தைகள் "சுவர்க்கம் தான் போகும்" என்று அடித்துச் சொல்லக் கூட முடியாமல் "ஏதோ ஒரு நல்ல கதி கிட்ட வாய்ப்புண்டு" (அசோக் குமார்) என்றும் "தெரியாது" என்றும் (சில்சாம்) கூறுவது ஆச்சரியமாக உள்ளது. இது தான் "நியாயமான கருணையுள்ள கர்த்தரின்" செயலா?

சுவர்க்கம் எப்போது நிர்மாணிக்கப்படும் என்பது ஒரு பொருட்டே அல்ல. எல்லா மனிதர்களுக்கும் நிரந்தரமான இரண்டே முடிவு தான் என்றே உங்கள் கொள்கை கூறுகிறது. எப்பொழுது அது நடக்கும் என்பதும் ஒரு பொருட்டல்ல. காந்தி இப்பொழுது எங்கு இருந்தாலும் இருக்கட்டும். அதற்கும் இந்த விவாதங்களுக்கும் சம்பந்தம் இல்லை.

அமலேக்கிய குழந்தைகளுக்கு "வாய்ப்பு" என்று அசோக் குமார் ஏதோ சொல்கிறாரே? "வாய்ப்பு" என்றால் "நல்லதையும் கெட்டதையும் பார்த்து அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு" என்று தானே அர்த்தம்? அப்படியானால், அமலேக்கிய குழந்தைகளுக்கு மாத்திரம் மறுபிறவி உண்டோ?

அசோக் குமார் சொல்வதைப் போல, படைக்கும்போதே சிலரைத் தீயவர்களாகவும் சிலரை நல்லவர்களாகவும் படைப்பவன் "நியாயமான" "கருணை உள்ளம் படைத்த" கர்த்தரா? அப்படியானால், ஃபாரோவையும் சிசுவாக இருக்கும்போது கொன்றிருக்கலாமே!

சில மனிதக் குழந்தைகள் பிறக்கும்போதே கட்டுவிரியன்களாம், சில மனிதக் குழந்தைகள் பிறக்கும்போதே சாதுவான மான் குட்டிகளாம். இதெல்லாம் இனவாதம் (racism) ஆகும் என்பது சிறுவர்க்கும் விளங்கும்.

ஆதி தகப்பனாகிய ஆதாம் செய்த தவற்றிற்காக அவனுடைய குழந்தைகளை ஏன் சபிக்க வேண்டும்? தகப்பன் செய்த திருட்டுக்குப் பிள்ளையைப் பழிவாங்குவது சரியா என்ன? இது தான் "நியாயமான கருணையுள்ள கர்த்தரின்" செயலா?

அமலேக்கிய சிசுக்களைக் கொன்றது "அந்தச் சிசுக்கள் வளர்ந்து கொடியவர்களாகிவிடுவர்" என்பதற்காக அல்ல, மாறாக 400 வருடங்களுக்கு முன் அமலேக்கிய முன்னோர்கள் செய்த குற்றத்திற்காக இப்போது பிறந்த குழந்தையைக் கொல்லச் சொல்லுகிறார் என்று விவிலியத்திலேயே கர்த்தர் வாக்காகத் தெரிகிறது.

எப்படி இருப்பினும்...

பிறக்கும்போதே ஒருவன் என்னென்ன செய்யப் போகிறான் என்று விதி எழுதப்பட்டிருந்தால், எதுவும் நம் கையில் இல்லை என்று ஆகிவிடுகிறதே? எதிற்கு விவிலியம், போதனை, விவிலியப் பிரச்சாரம் எல்லாம்? அவர்கள் போகிற போக்கில் போகட்டுமே? எல்லாம் கர்த்தர் முன்னமே நியமித்த வழி தானே நடக்கிறது?

மேலும்... அமலேக்கிய சிசுக்கள் வளர்ந்து என்ன செய்யப் போகிறார்கள் என்று அறிந்த கர்த்தர், அச் சிசுக்களை வளரவிடாமல் கொல்ல ஆணையிட்டு அதை இஸ்ரவேலியர்களும் பூர்த்தி செய்துள்ளனர். அப்படியானால், முன்பு கர்த்தர் அறிந்தது ("அவர்கள் இஸ்ரேலியர்களைப் பிற்காலத்தில் துன்புறுத்துவார்கள்" என்பது) பொய்யாகிவிடுகிறதே?

மேற்கூறியதை சிந்தித்துப் பாருங்கள். இப்போது அதற்கு சிரமப்பட்டு பதில் போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மாறாக, உங்களுக்கு வேலையை எளிதாக்குகிறேன். என் சவாலை இப்படி எளிமையாக நிர்மாணிக்கிறேன். ஒவ்வொரு புள்ளிக்கும் "ஆமாம், இல்லை" என்று நீங்கள் ஒத்துக் கொண்டுள்ளதை இடுங்கள். இறுதியில் என்ன வருகிறது என்று பார்ப்போம். உங்கள் வசதிக்காக அடுத்த மறுமொழியில் இதை இடுகிறேன்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

St.Samuel:
// அமலேக்கிய சிசுக்கள் பெரியவர்களாகி இஸ்ரவேலை அழிப்பார்கள், அதனால் இயேசு இவ்வுலகிற்குள் வரமுடியாது என்பதை தேவன் அறிந்ததால்தான் அமலேக்கியரின் சிசுக்கள் உட்பட அனைவரையும் அழிக்கச் சொன்னதாக அசோக் கூறுகிறார். //

Ashok:
// அதேபோல்தான், தன் ஒரே குமாரனை, இந்த உலகத்திற்கு தன் சந்ததியில் தரப்போகும் இஸ்ரவேலரை (பின்னாளில்) அழிக்கும் அபாயம் நிறைந்த ஒரு கூட்டத்தைதான், கர்த்தர் அழிக்க கூறினார். இப்படி பாதுகாத்து இந்த உலகத்திற்கு கொண்டுவந்த குமாரனைதான், நமக்காக பலி கொடுத்தார். //

விவாதத்தில் பங்கேற்கும் புதிய நண்பர் சாம்யேல் அவர்களை வரவேற்கிறேன்; தாங்கள் முதலாவது தங்களையும் தங்கள் விசுவாசத்தையும் அறிமுகப்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன் .

நண்பர் அசோக் அவர்களிடம் கேள்வி கேட்ட மாற்று மார்க்க நண்பருடைய நிலைக்கு ஏற்ற பதிலையே கொடுத்துள்ளார்;அது முழுமையானதல்லவென்றாலும் நல்ல முயற்சி;அதிலிருந்து திசைதிருப்பாமல் தாங்களும் தங்கள் மேலான கருத்துக்களை முன்வைக்கலாம் .

இங்கே நண்பர் அசோக் அவர்கள் பாவத்தைக் குறித்தோ மீட்பைக் குறித்தோ விளக்காமல் எகிப்திய தலைச்சன்களையும் அமலேக்கிய சிசுக்களையும் அழிக்கக் கட்டளையிட்ட கர்த்தர் கடவுளா எனும் கேள்வியையே களமாகக் கொண்டிருக்கிறார் .

பாவம் அல்லது மீட்பைக் குறித்து "போதனை " பகுதியில் நீங்கள் செய்தியை பதிக்கவேண்டுகிறேன்;இங்கு நீங்கள் பதித்துள்ள ஆதாமின் வீழ்ச்சி குறித்த தங்கள் கருத்தையும் அது தொடர்பான ஆங்கிலக் கட்டுரையையும் அங்கு மாற்றிவிடவும் .

Thanks..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 3
Date:
இனப்படுகொலை செய்யத் தூண்டிய கர்த்தர் ஒரு கடவுளா?
Permalink  
 


பிந்தினா ஆதாமாகிய கர்த்தரை சாத்தான் சோதித்த போது(இந்த கல்லுகளை அப்பங்கள் ஆகும் படி செய்திடும்)அவர் அப்படி செய்ய வில்லை.ஆனால் அவரால் அப்படி கல்லுகளை அப்பங்கள் ஆகா செய்திருக்கும் முடியும் ஆனால் அவர் செய்யவில்லை.ஆதாமோ தன மனைவின் நிமித்தம்,    தவிர்த்து இருக்க வேண்டிய பாவத்தில் கீழ்படியாமல் போனான்

-- Edited by stsamuel on Thursday 21st of October 2010 06:32:03 AM

__________________


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 3
Date:
RE: இனப்படுகொலை செய்யத் தூண்டிய கர்த்தர் ஒரு கடவுளா?
Permalink  
 


sam quote
//தேவன் நினைத்தால் அமலேக்கிய சந்ததியை பெருகாதபடிக்கும் செய்யமுடியும். இப்படி பல வழிகள் இருக்கும்போது, பிறந்த சிசுக்களைக் கொன்றுதான் ஆகவேண்டுமா?//

தேவன் நினைந்திருந்தால் அமலேகியரை அப்போதே அழித்து விட்டிருக்கலாம்.ஆனால் அவர் இஸ்ரவேலை அல்லவா அவர்களை கொன்று நிர்மூலம் ஆக்க செய்ய சொல்கிறார்.அதினால் அது இஸ்ரவேல் விழுந்த கடமை.ஆனால் அவர்கள் மாம்சத்திலே அதை முற்றிலுமாக செயல்படுத்த முடியவில்லை ஏனெனில் இது மாம்சத்துக்குரிய யுத்தம் அல்ல ஆவிக்குரிய யுத்தம்.அதனால் தான் மாம்சத்தில் வெளிபட்ட தேவன் தன மாம்சத்தினால் அவர்களின் பிதாவாகிய சாத்தானை ஜெயித்தார்.(நீங்கள் உங்கள் தகப்பனாகிய பிசாசினால் உண்டானவர்கள் என்று கர்த்தர் தம்மை விசுவாசியாத யூதர்களை பார்த்து சொன்னதையும் இங்கு நினைவில் கொள்ளுங்கள் அவர் பட்ச பாதம் உள்ளவர் அல்ல)

__________________


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 3
Date:
இனப்படுகொலை செய்யத் தூண்டிய கர்த்தர் ஒரு கடவுளா?
Permalink  
 


So why did Adam sin? Because God made him bad?
Adam ate the forbidden fruit because he listened to his wife, rather than God.

Genesis 3:17 And unto Adam he said, Because thou hast hearkened unto the voice of thy wife, and hast eaten of the tree, of which I commanded thee, saying, Thou shalt not eat of it: cursed is the ground for thy sake; in sorrow shalt thou eat of it all the days of thy life;

Adam did not take it because he was deceived by the serpent (though the woman was deceived by the serpent):

1 Timothy 2:14 And Adam was not deceived, but the woman being deceived was in the transgression.

Adam explained his own action this way:

Genesis 3:12 And the man said, The woman whom thou gavest to be with me, she gave me of the tree, and I did eat.

So, in the end, what is the easiest answer we can give?

Adam loved the gift more than the giver. He loved his wife more than he loved God.

Adam was placed in a situation in which he was tempted to sin, and Adam did not resist the temptation.

God made Adam good, but God also made Adam fallible.At the appointed time, Adam fell - and in him all those whom he represented: his wife and all his natural descendents.

Then, in the fullness of time, God sent His only-begotten Son, the Lord Jesus Christ to be the second Adam. All those who obtain life from Adam, die with Adam, but those who die with Christ from him receive life everlasting.

Praise be to God!

-TurretinFan

http://turretinfan.blogspot.com/2008/03/why-did-adam-sin.html

__________________
sam


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 16
Date:
Permalink  
 

அன்பான சில்சாம், அசோக் மற்றும் கந்தர்வமனுக்கு, வாழ்த்துக்கள்.

உங்கள் விவாதம் நன்றாகச் செல்கிறது. இடையில் நானும் குறுக்கிட்டு சில கேள்வி கேட்க விரும்புகிரேன்.

அமலேக்கிய சிசுக்கள் பெரியவர்களாகி இஸ்ரவேலை அழிப்பார்கள், அதனால் இயேசு இவ்வுலகிற்குள் வரமுடியாது என்பதை தேவன் அறிந்ததால்தான் அமலேக்கியரின் சிசுக்கள் உட்பட அனைவரையும் அழிக்கச் சொன்னதாக அசோக் கூறுகிறார். இது சம்பந்தமாக ஒரு கேள்வி.

ஆசா எனும் ராஜாவின் காலத்தில் குறைந்த படையான 580000 பேரைக் கொண்டு அதிக படையான 10 லட்சம் பேரை மேர்கொள்ள தேவன் ஆசாவுக்கு உதவியதாக 2 நாளா 14:8-12 கூறுகிறது. கிதியோனின் காலத்தில் வெறும் 300 பேரைக் கொண்டு கடற்கரை மணலைப்போல இருந்த மீதியானிர் அமலேகியர் கிழக்கித்திப் புத்திரரை மேற்கொள்ள தேவன் உதவியதாக நியாயதிபதிகள் 7-ம் அதிகார்ம் கூருகிறது. பலமுள்ளவன் பலமற்றவன் யாராயினும் அவனுக்கு உதவுவது தேவனுக்கு லேசான காரியம் என ஆசா சொன்னார்.

இப்படிப்பட்ட தேவன், அமலேக்கியரின் சிசுக்கள் பெரியோரானபின் அவர்களிடம் இஸ்ரவேல் அழிய விட்டுவிடுவாரா? அமலேக்கிய சிசுக்கள் பெரியோரானபின் அவர்கள் இஸ்ரவேலை அழிப்பார்கள் என அசோக் சொல்வது ஏற்கத்தக்கதாக இல்லை.

தேவன் நினைத்தால் அமலேக்கிய சந்ததியை பெருகாதபடிக்கும் செய்யமுடியும். இப்படி பல வழிகள் இருக்கும்போது, பிறந்த சிசுக்களைக் கொன்றுதான் ஆகவேண்டுமா?

அமலேக்கியர் பின்னாளில் இஸ்ரவேலரை அழிப்பார்கள் என்பதற்காகத்தான் அவர்களின் சிசுக்களை முதலாக தேவன் கொல்லச் சொன்னார் என அசோக் கூறுகிறார். ஆனால் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகையில் அவர்களை அமலேக்கியர் வழிமறித்ததால்தான் அவர்களைப் பழிவாங்கும்படி தேவன் அவர்களை அழிக்கச் சொன்னதாக 1 சாமுவேல் 15:2 கூறுகிறது.

ஒருவன் பாவியாய் இருப்பதால் பாவம் செய்கிறான் என அசோக் கூறுகிறார். அவ்வாறெனில் ஆதாம் ஏன் பாவம் செய்தார்? அவரும் பாவியாகத்தான் சிருஷ்டிக்கப்பட்டார?


__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 20
Date:
RE: இனப்படுகொலை செய்யத் தூண்டிய கர்த்தர் ஒரு கடவுளா?
Permalink  
 


விவாதத்தில் பங்கு கொள்ளும் மற்ற இருவருக்கும்:

நாம் சுமார் பனிரண்டு மணி நேரம் கழித்து உங்களுக்கு விரிவான பதில்களை அளிப்போம். அதுவரை மூவரும் காத்திருப்போம்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

(1) எகிப்தில் தகப்பன்/பெற்றோர் செய்த தவற்றுக்காக சிசுக்களைக் கொல்வது நியாயமான கடவுளின் செயலா?

ஆம், நியாயமான செயலே; எகிப்தில் அந்நிய இனத்தார் பெருகுவதைத் தடுக்க அந்த இனத்தில் பிறக்கும் அத்தனை ஆண்குழந்தைகளையும் நதியில் போட்டுவிட வேண்டுமென்ற கொடூரமான கட்டளையைப் போட்டான் எகிப்திய அரசன்; அதன் வலியைப் புரியச் செய்யவும் தமது ஜனத்தை வெளியே கொண்டு வரவும் இரக்கமுள்ள சிருஷ்டி கர்த்தாவான தேவன் எகிப்தியரின் தலைச்சன்களை மட்டுமே சங்கரித்தார்;எகிப்திய அரசனைப் போல அனைத்து குழந்தைகளையும் அழிக்கவில்லை;

ஏன்,இயேசு இந்த உலகில் பிறந்தபோதும் அதே போன்றதொரு நிகழ்ச்சி சரித்திரத்தில் ஏரோது அரசன் காலத்தில் நடந்ததே;அதை யார் கேள்வி கேட்கமுடியும்?

சங்கரித்தல் என்பது நிக்கிரகமல்ல; அவர்கள் இந்த பூவுலகில் வாழும் உரிமை மட்டுமே மறுக்கப்பட்டது;அவர்தம் ஆத்துமா அழிவில்லாததாகையால் ஒரு பாவமும் அறியாத சிசுக்கள் ஒரு மேலான நிலையினை மறுமையில் அடையும் வாய்ப்புண்டு.(லூக்கா.12:5)

(2) அமெலகைத்திய சிசுக்களைக் கொல்லச் செய்யும் கொடூரமான ஆணையை இடுவது நியாயமான கடவுளின் செயலா?

ஆம், நியாயமான செயலே;அசுரர்களை அழிக்கவே தேவர்கள் தோன்றினர்; இங்கே சிவபக்தனான இராவணன் அசுரனாகக் கற்பிக்கப்படவில்லையா? இதனால் இராமாயணம் எபிரேயர்களின் வாழ்வில் நடந்த நிஜமான சம்பவங்களின் நிழல் என்பது தெளிவாக விளங்குகிறது.

உங்களுக்கு இஷ்டமானால், முடிந்தால், பின்வரும் கேள்விக்கும் இங்கு பதில் கூறலாம்:
(3) எல்லா மனிதருக்கும் அ. சுவர்க்கம், ஆ. நரகம் என்ற இரண்டே இரண்டு நிரந்தரமான முடிவுகளே உண்டு என்றால், விவரம் தெரியாத இறக்கும் சிசுக்களின் கதி என்ன? சுவர்க்கமா? நரகமா?

நேரடியான பதில்: தெரியாது.
யூகமான பதில்:
அவர்கள் இரண்டாம் உயிர்த்தெழுதலில் பங்கேற்று நன்மையானதொரு பங்கைப் பெறுவர்;சுவர்க்கமோ நரகமோ இன்னும் ஸ்தாபிக்கப்படவில்லை என்பதே கிறித்துவின் போதனையாகும்;

எனவே திறந்த நிலை பட்டியலிடும் காலத்திலேயே வருங்காலத்தின் நிகழ்வை நிறுவி நிரூபிக்க இயலாது; எனவே காந்திஜி போன்ற புனிதர்களுக்கும் கூட எந்த தீர்ப்பையும் யாரும் செய்ய இயலாது.

N.B:


மறுபிறவி
அல்லது மறுசுழற்சி கொள்கையாளர் காந்திஜி தற்போது என்னவாகப் பிறந்து வாழ்கிறார், எத்தனையாவது பிறவியில் தற்போது இருக்கிறார் என்பதை கூறினால் மிகவும் சுவாரசியமாக இருக்கும்;அல்லது மரித்த அவருடைய ஆவியிடம் கேட்டு சொன்னாலும் போதும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

பதிலுக்கு நன்றி கந்தர்வன்,
    பொதுவாக பாவம் என்பதை ஒரு தகாத செயல் (திருட்டு, கொலை, விபச்சாரம்) என்றே நாம் கருதுகிறோம். இத்தகைய தகாத செயல்களை செய்பவரை நாம் பாவம் செய்கிறான் என்கிறோம். ஆனால், வேதாகமம் என்ன சொல்லுகிறதென்றால், இத்தகைய தகாத செயல்கள், பாவத்தின் வெளிப்பாடுகள் என்று சொல்லுகிறது. ஒருவன் பாவியாய் இருப்பதனால் பாவம் செய்கிறான். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவனுக்குள் பாவம் இருப்பதாலேயே, பாவ காரியங்கள் (திருட்டு, பொய், போன்றவை) செய்கிறான்.
   உதாரணமாக, ஒரு மரம் மாமரமாய் இருப்பதால் அது மாங்கனி கொடுக்கிறது.  மாங்கனி கொடுக்காமலும் சில மாமரங்கள் இருக்கும். அந்த கனிகள் இல்லாததால் அவற்றை மாமரம் அல்ல தென்னைமரம் என்று சொல்லமுடியுமா? அதேபோல், ஒருவன் பாவியாய் இருப்பதால் பாவகாரியங்கள் செய்கிறான், சிலரிடத்தில் அந்த பாவ காரியங்கள் காணப்படாவிட்டாலும், அவர்கள் பாவி அல்ல என்று சொல்ல முடியுமா? தகுந்த சூழ்நிலை அமையாமல் இருக்கலாம், தேவைகள் இல்லாமல் இருக்கலாம், போதுமான தைரியம் இல்லாமல் இருக்கலாம், இப்படி ஏதாவது காரணம் இருக்கலாம். அதனால், ஒருவரது, தோற்றம், அல்லது அவரது கடந்த காலம் போன்றவையை வைத்து அவர் பாவி அல்ல என்று முடிவு செய்ய முடியாது.
   "மனிதன் முகத்தை பார்கிறான், கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறவர்", மேலும் கர்த்தர் முக்காலமும் அறிந்தவர், நான் என் தாயின் கருவில் உண்டாகும் முன்னமே, நான் என்னவெல்லாம் செய்யபோகிறேன் என்று அறிந்தவர். அதனால், நாம் வெகு எளிதில் சிலரை அப்பாவி என்று ஏமாந்து போகலாம், ஆனால் கர்த்தர் அனைத்தையும் அறிவார்.  அமலேகைதில் உள்ளவர்களை அப்பாவி என்று நீங்கள் எப்படி முடிவு செய்தீர்களோ எனக்கு தெரியாது, ஆனால் கர்த்தர் அவர்கள் இருதயத்தை அறிந்திருக்கிறார். 
   குழந்தைகள் innocent அல்ல, incapable . They are incapable to do / think  wrong deeds .  Once they become capable , உங்களுக்கு உண்மை புரியும். சவுல் ராஜா, தேவனின் பேச்சை கேளாமல் சிறுவன் என விட்டுவைத்தவன் தான், பின்னாளில் சவுலை கொன்றான்.
    ஒரு விரியன் குட்டி, ஆபத்தில்லாதது. அது குட்டியாக இருப்பதால் யாரையும் கடிக்காது (ஏனென்றால் கடிக்க தெரியாது), இதுவரை யாரையும் கடித்ததில்லை என்ற காரணத்தால், ஒரு விரியன் பாம்பு குட்டியையும், உங்கள் குழந்தையையும் ஒரே அறையில் வளர்ப்பீர்களா? அந்த பாம்பு வளர்ந்தால் கட்டாயம் உங்கள் பிள்ளையை கடிக்கும் என்று உங்களுக்கு தெரியும். அதனால், நீங்கள் அந்த பாம்பை கொள்ளலாம், அல்லது அதை எங்காவது தூரமாக கொண்டு சென்று விடலாம்.
   அதேபோல்தான், தன் ஒரே குமாரனை, இந்த உலகத்திற்கு தன் சந்ததியில் தரப்போகும் இஸ்ரவேலரை (பின்னாளில்) அழிக்கும் அபாயம் நிறைந்த ஒரு கூட்டத்தைதான், கர்த்தர் அழிக்க கூறினார். இப்படி பாதுகாத்து இந்த உலகத்திற்கு கொண்டுவந்த குமாரனைதான், நமக்காக பலி கொடுத்தார்.
(தொடரும்)  


__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 20
Date:
இனப்படுகொலை செய்யத் தூண்டிய கர்த்தர் ஒரு கடவுளா?
Permalink  
 


அசோக்,

வைதீகத்தில் ஜீவகாருண்யம் என்பது சமண மதம் போலவோ புத்த மதம் போலவோ அன்று. தரும சாஸ்திரங்கள்படி நாம் அன்றாடம் செய்யும் தருமங்களில் (அறிந்தோ அறியாமலோ) சில ஜீவராசிகளைக் கொல்ல வேண்டி வரும். அடுப்பு மூட்டினால் சில நுண்ணுயிர்கள் கொல்லப்படுகின்றன. கோயில் வாசலைப் பெருக்கினால் சில பூச்சிகள் செத்துப் போகின்றன.  மருந்து உண்டால் சில கிருமிகள் இறக்கின்றன.

கொல்லப்படும் அக்கிருமிகளாகப் பிறந்த ஆன்மாக்கள் தம் கர்ம பலனை அனுபவிக்கின்றன, பிறகு வேறு பிறவி எடுக்கின்றன அல்லது பகவத் கிருபையால் மோக்ஷம் பெறுகின்றன.

மருந்து உண்டு உடம்பைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் (இறைத்தொண்டுகளைச் செய்ய). அதே போல, உணவு படைக்கவும் வேண்டும். இதுவும் தருமம் தான். சரி, கொன்றதன் பாபம் வருமே என்றால், அதற்குப் நிமித்தமாகத் தான் சந்தியாவன்தனம் முதலிய கடன்கள். வேதம் ஓதாதவர்களுக்கு அந்தப் பாபங்கள் அண்டுவதில்லை.

அது போக, தேவை இல்லாத உயிர்க் கொலைகளைத் தெரிந்தோ தெரியாமலோ இயன்றவரைச் செய்வதில்லை. அதனால் தான் மாமிச உணவு உண்ணுவதில்லை. ஏனென்றால் மாமிசம் தயாரிப்பதில் உள்ள உயிர்க்கொலையின் எண்ணிக்கையை விட, விவசாயம் பண்ணி நெல்லும் காயும் கனியும் சமைப்பதில் உள்ள உயிர்க்கொலை குறைவானதே என்பதை அறிவியல் கூட ஏற்கும்.

எல்லா ஜீவான்மாக்களும் சமமே. இதில் எனக்குச் சந்தேகம் இல்லை. எம்பெருமானும் எல்லா ஜீவராசிகளிடமும் சமமான அன்பையே வைக்கிறான் "ஸமோஹம் ஸர்வ பூதேஷு" என்று சொல்கிறான். நம்மையும் "அத்வேஷ்டா ஸர்வ பூதானாம்" என்று எந்த ஒரு உயிரினத்தின் மீதும் த்வேஷம் வைக்காமல் இருக்கச் சொல்லுகிறான்.


-- Edited by gandharvan on Wednesday 20th of October 2010 06:42:55 PM

__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard