அக்டோபர் 07,2010
இன்று மகாளய அமாவாசையை யொட்டி வேதாரண்யம் கடலில் பக்தர்கள் புனித நீராடினர். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மறந்தவர்களுக்கு மகாளயம் என்று போற்றப்படுவது மகாளய அமாவாசை ஆகும். மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசைகளில் திதி கொடுத்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம் ஆகும். இப்படி திதி கொடுப்பதால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.
முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்து அல்லது முடியாமல் போனால் மகாளய அமாவாசையில் திதி கொடுத்தால் அனைத்து அமாவாசைகளிலும் திதி கொடுத்த பலன் கிடைக்கும். இப்படி சிறப்பு பெற்ற மகாளய அமாவாசையையொட்டி இன்று கடல், ஆறுகளில் பக்தர்கள் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
சென்னை : மகாளய அமாவாசையை ஒட்டி, இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, வழிபாடு செய்யப்படுகிறது. புரட்டாசி மாதம் பவுர்ணமி முதல் அமாவாசை வரும் 15 நாட்களும் மகாளயபட்ச காலம். இந்த நாட்களில், அந்தந்த திதிக்கு உரிய, தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் வழக்கம் இந்துக்கள் மத்தியில் உள்ளது.
அதிலும் மகாளயபட்சத்தின் இறுதி நாளான மகாளய அமாவாசை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.அந்த வகையில், மகாளய அமாவாசை தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாள். மகாளய அமாவாசையை ஒட்டி, இன்று கடற்கரை, ஆறு போன்ற இடங்களில், புனித நீராடியும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபாடு செய்வர். கோவில்களுக்கு சென்றும் வழிபாடு நடத்துவர். பசுவிற்கு அகத்திக்கீரை, உணவு கொடுத்தும் வழிபாடு நடத்துவது உகந்தது. இதனால், இன்று ஏராளமான பொதுமக்கள், புனித தலங்களில் முன்னோர் வழிபாடு நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://img1.dinamalar.com/kovilimages/news/TN_111611000000.jpg
அதிலும் மகாளயபட்சத்தின் இறுதி நாளான மகாளய அமாவாசை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.அந்த வகையில், மகாளய அமாவாசை தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாள். மகாளய அமாவாசையை ஒட்டி, இன்று கடற்கரை, ஆறு போன்ற இடங்களில், புனித நீராடியும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபாடு செய்வர். கோவில்களுக்கு சென்றும் வழிபாடு நடத்துவர். பசுவிற்கு அகத்திக்கீரை, உணவு கொடுத்தும் வழிபாடு நடத்துவது உகந்தது. இதனால், இன்று ஏராளமான பொதுமக்கள், புனித தலங்களில் முன்னோர் வழிபாடு நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://img1.dinamalar.com/kovilimages/news/TN_111611000000.jpg
இதைக் குறித்து நான் ஏற்று சேவிக்கும் குருபஹவான் ஆன மகாபிரபுவான இயேசுவானவர் கூறுவதென்ன என்று ஆராய்ந்தேன்; பின்வரும் வேதப்பகுதியில் அதைக் குறித்து சில காரியங்கள் கிடைத்தது; அந்த வேதப்பகுதியை வாசித்தபிறகு எனது கருத்தை முன்வைக்கிறேன்.
"எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.
நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி,
அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்;
நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்." (மாற்கு.7:10 முதல்13 வசனங்கள்)
மேற்காணும் வேத வாக்கியங்களின்படி நாம் அறிவதென்ன, நீண்ட நெடுங்காலமாக முன்னோர்க்கு மரியாதை செய்வதும் அவர்கள் காலத்துக்குப் பிறகும் அவர்கள் நினைவைப் போற்றி தர்ப்பணம் செய்வதும் நமது கலாச்சாரத்தில் இருக்கிறது என்பது வெளிப்படையானது;
ஆனாலும் இந்த தர்ப்பணம் செய்வதின் உண்மையான பொருள் என்ன?
ஐதீகம் என்று விலகிச் சென்று விடாமல் நின்று யோசித்தால் சில உண்மைகள் வெளிப்படும்;
தர்ப்பணம் செய்வதின் மூலம் முன்னோர்களுக்கு மரியாதை செய்வது போலத் தோன்றினாலும் அவர்களுடைய நல்வினை தீவினையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதே மைய நோக்கமாக இருக்கிறது;
ஏனெனில் நம்முடைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பல காரியங்களை மூடநம்பிக்கை என்று நம்முடைய சமுதாயம் சொன்னாலும் மாறாத வேத சத்தியங்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதே நிதர்சனமான உண்மையாகும்;
அதாவது நம்மைப் பெற்ற தாயோ தகப்பனோ அவர்கள் நம்முடன் வாழும் காலத்தில் நாம் எவ்வளவுதான் அவர்களைத் திருப்திபடுத்த முயற்சித்தாலும் அவர்களுக்கு நம்முடைய சிறுவயதிலிருந்தே நம்மீது பல வருத்தங்கள் இருந்திருக்கும்;மேலும் அவர்களது இறுதிக்காலத்தில் நாம் அவர்களுக்கு செய்யத்தவறிய சில புண்ணியங்களும் இருந்திருக்கும்;அந்த கணக்கைத் தீர்த்துக் கொள்ளும் பரிகாரப் பூஜையாகவே இந்த மகாளய அமாவாசை தர்ப்பணம் விளங்குகிறது;
குருபஹவான் இதையே கண்டிக்கிறார்;நீ உன் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் அதற்கு இணையாக வேறு ஏதோ ஒரு சடங்கை செய்துகொண்டிருக்கிறாய் என்கிறார்;ஏனெனில் பெற்றோரை கனம்பண்ணுவது பத்து கட்டளைகளில் பிரதானமானதாம்;
"பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது."(எபேசியர்.6:1,2,3)
மேலும் இந்த தர்ப்பண பூஜையின் மற்றொரு விசேஷம் முன்னோர் தம் நல்வினை தீவினை நம்மை பாதிக்கக்கூடாது என்ற சுயநலமாகும்;இவ்வுலகைவிட்டு கடந்து செல்லும் ஆன்மாக்கள் சாந்தியடையாவிட்டால் மீண்டும் நம் வீடுகளுக்கு வந்து தீமை செய்துவிடுமோ என்ற அச்சத்தினால் அவர்களை பரகதிக்குள் இங்கிருந்து முயற்சித்து தள்ளுவது போன்ற நிகழ்ச்சியே இது;
அப்படியானால் முன்னோரின் நல்வினை தீவினை அவர்தம் பின்னடியாரை பாதிக்கும் என்ற உண்மையையும் நாம் அறிகிறோம்;நல்வினை நம்மை அடைந்தால் ரொம்ப சந்தோஷம்;ஆனால் தீவினையைத் தவிர்க்க என்ன செய்வது? அவர்களுக்கும் நமக்குமான உறவை அறுத்துவிடுவது தான் ஒரே வழி;அந்த நிகழ்ச்சியே இந்த தர்ப்பணம்.
இதன்மூலம் ஒரு மனுஷன் என்ன சொல்லுகிறான்,என்னுடைய நல்வினை தீவினையின் பலனை நான் கவனித்துக் கொள்ளுகிறேன்;நீ என் வாழ்க்கையில் குறுக்கிடாதே,நீ வைகுண்டத்துக்குச் சென்று ஓய்வெடு" என்கிறான்;
அப்படியானால் நமக்கு அருமையான உறவுகளையே குட்டிசாத்தான்களாக்கி காசுபார்க்கும் போலி சாமியார்களின் சூழ்ச்சியை நாம் புரிந்துக்கொண்டு இந்த எல்லா கர்மங்களையும் தம்முடைய மாசற்ற இரத்தத்தால் பரிகரித்த குருபஹவான் இயேசுவையே சரணடையவேண்டும்; அமாவாசை இருளில் முணுமுணுவென்று எதையோ ஓதாமல் வெளிச்சத்துக்கு வர ப்ரஜாபதி அன்புடன் அழைக்கிறார்.
"அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்."(1யோவான்.1:7)