Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நியாயப்பிரமாணத்தின் கிரியையும் விசுவாசத்தின் கிரியையும்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: நியாயப்பிரமாணத்தின் கிரியையும் விசுவாசத்தின் கிரியையும்
Permalink  
 


பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்-ஒரு ஒப்பீட்டு முயற்சி

// நம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு எனும் இருபெரும் பிரிவுகள் உண்டு. அதில்...//



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

நண்பர் அசோக் அவர்களே, தங்களுடைய கடுமையான வேலைப் பளு மற்றும் உடல் அசௌகரியங்கள் மத்தியிலும் தாங்கள் தளத்தின் செய்திகளை கவனித்து தங்கள் கருத்துக்களைப் பதிவுசெய்வது பாராட்டுக்குரியது;விரைவில் அனைவருடைய குழப்பத்தையும் போக்கும் வகையில் ஒரு செய்தியை சமர்ப்பிக்கிறேன்;தங்களது நிலையில் எந்த தவறும் இல்லை என்பதை மட்டும் அறியவேண்டுகிறேன்.

அநேகர் நியாயப்பிரமாணக் கிரியை
யையும் விசுவாசத்தின் கிரியையையும் தேவனுடைய கற்பனைகளையும் அதில் கலந்துவிட்ட மனுஷ‌ கற்பனைகளையும் இணைத்து குழப்பி வருகின்றனர்;

இதற்கொரு நல்ல உதாரணம் மிருக இனத்தில் கூட கலப்பினங்களை உருவாக்காதே என்றார்,ஆண்டவர்; ஆனால் கலப்பின விதைகளாலும் மிருகங்களாலுமே இன்றைக்கு பணங்கொழிக்கிறது;அப்படியானால் அதுவும் தேவனுடைய கலப்படமில்லாத பிரமாணம் தானே,அதனை மீறி அதன் கீழிருந்து ஜீவிக்கலாமா ?

இப்படி பத்து கற்பனைகளுக்குள் இவர்களால் அடக்கமுடியாத எண்ணற்ற பிரமாணங்களும் கற்பனைகளும் கட்டளைகளும் புதிய ஏற்பாட்டில் உண்டு;அதனை விளக்கவே இந்த திரியையே நான் துவங்கினேன்;அதற்குள் வெங்கல கடைக்குள் யானை புகுந்தது போல ஏகப்பட்ட களேபரங்கள் ஏற்பட்டுவிட்டது;என்னைப் பொறுத்துக்கொள்ளவும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

//
1.  உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.
2. நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. 
  என்பதே //

நண்பர் சுந்தர் மற்றும் சாம் அவர்களே,
     மேலே குறிப்பிட்ட வாக்கியங்களை பாருங்கள். அவைகள் வேத vasanangalthaan, illai என்று சொல்லவில்லை. ஆனால் தேடி எடுத்து, கிரியைகளே முக்கியம் என்பது போல அன்பர் காட்டியுள்ளார்,என்றே நான் உணர்கிறேன்.
    நம் கிரியைகளை நாம் பிரதானப்படுத்தும் போது நாம் இயேசுவின் ரத்தத்தை மதிக்கவில்லை என்றுதானே பொருள்.
ஐயா, நமது கிரியைகள் எவ்வளவு நன்மையானாலும், அவற்றைக்கண்டு சாத்தான் அஞ்சுவதில்லை. ஆனால், இயேசுவின் ரத்தத்தை கண்டு அஞ்சுவான். நான் எனது நம்பிக்கையை என் கிரியைகளின் மேல் வைக்கும் போது சாத்தான் எவ்வளவு சந்தோஷப்படுவான் என்று எண்ணிப்பாருங்கள். அதே நேரம், என் நம்பிக்கை இயேசுவின் ரத்தத்தை சார்ந்து இருந்தால், என்ன ஆகும் அவன் நிலை...
நான் ஒரு தேர்ந்த எழுத்தாளனாய் இருந்தால், முதலிலேயே எனக்கு இடறலாய் தோன்றிய வார்த்தைகளை எடுத்துவிளக்கி சொல்லி இருப்பேன்.    திரு.சுந்தர் அவர்கள், இயேசுவின் ரத்தத்தை குறித்து சாத்தான் மகிழ்வதாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். எந்த காலத்திலும், இயேசுவின் ரத்தத்தை குறித்து சாத்தான் மகிழமாட்டான்.
   நான் இங்கு யாருடைய மனதை தவறாய் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னியுங்கள். என் எண்ணங்கள் தவறாய் தோன்றினால், எனக்கு சொல்லிக்கொடுங்கள். 




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இங்கே எந்த கட்டுப்பாடும் விதிமுறையும் கிடையாது; யாருடைய கருத்தையும் தணிக்கை செய்ததுமில்லை, யாரையும் நீக்கியதும் இல்லை என்பதே உண்மை; ஆக்கப்பூர்வமாக செயல்படுவோருக்காக இந்த தளம் காத்திருக்கிறது; அதனை அதன் பெயரே பறைசாற்றுகிறது;இந்த தளத்தின் கொள்கையாகவோ போதனையாகவோ எதையும் இன்னும் முன்னிறுத்தவில்லை; இந்த தளத்திற்கு ஆலோசனைகளைக் கூறவும் கேள்விகளைக் கேட்கவும் தனித்தனி பகுதிகள் உண்டு; உண்மையில் மற்ற உறுப்பினர் ஆர்வத்துடன் பங்காற்றினால் நிர்வாகிக்கு சற்று ஓய்வு கிடைக்கும்; ஆனால் இந்த தளத்தின் நோக்கங்களைப் புரிந்துகொண்ட நண்பர்களை ஆதாயம் செய்வதில் இதன் நிர்வாகி தோற்றுப்போனது போலத் தோன்றுகிறது;காலம் பதில் சொல்லும்.

சுந்தர் போல அவ்வப்போது வந்துப்போகும் நண்பர்களும் முழுமையான விசுவாசத்தையுடையவர்களல்ல; அவர்கள் கற்றுக்கொள்ளும் மனநிலையிலும் இல்லை; எனவே கலந்துரையாடலைவிட மோதல் அதிகமாக இருக்கிறது; எல்லோருமே தங்கள் தரப்பை வலியுறுத்தவே போராடுகிறோம்; ஆனாலும் கிறித்துவுக்காக நிற்போரை ஆண்டவர் தேடுகிறார்; சுந்தர் அவர்களிடம் இருக்கும் பிரச்சினைகளை தனி தளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறேன்;

சகோதரர் சாம் அவர்கள் அச்சமின்றி தங்கள் கருத்துக்களை எழுத உற்சாகப்படுத்துகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

sam


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 16
Date:
Permalink  
 

அன்பான சகோ.சில்சாம் எனக்காக மிகுந்த நேரமும் சிரமமும் எடுத்து நீண்ட பதில் தந்தமைக்கு நன்றி.

சில்சாம் எழுதியது:
//தங்களை விலகச் சொன்னது போன்ற தோரணையில் எழுதியதற்காக வருந்துகிறேன்;//

என்பொருட்டு வருத்தம் தெரிவித்தமைக்கும் நன்றி. ஆகிலும் முன்பிருந்த சுதந்தர உணர்வுடன் எனது கருத்துக்களைச் சொல்வது இனி சாத்தியமல்ல என்றாகிவிட்டது.

சில்சாம் எழுதியது:
//அருமை நண்பர் சாம் அவர்களே, குறிப்பிட்ட திரியில் மையப் பொருளையொட்டி தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தாராளமாக எடுத்துச் சொல்லலாம்; தனிநபர்களைப் பாராட்டுவதோ விமர்சிப்பதோ தவிர்க்கப்படவேண்டும்; சிலரை உயர்த்த சிலரை தனிமைப்படுத்துவது சரியல்ல தானே?//

ஒருவரது கருத்தைப் பாராட்ட/விமர்சிக்க முற்படுகையில் சம்பந்தப்பட்ட தனிநபரும் பாராட்டப்படுவதும் விமர்சிக்கப்படுவதும் இயல்பானதே. இதைத் தவிர்ப்பது எனக்கு சாத்தியமல்ல.

உங்கள் கருத்துக்கு எதிர்கருத்துள்ள சுந்தரை நான் பாராட்டி, உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிற அசோக்குமாரை நான் விமர்சிக்கையில், தனிநபரை பாராட்டுவதோ விமர்சிப்பதோ தவிர்க்கப்படவேண்டும் என்கிறீர்கள். ஆனால் சுந்தரை விமர்சித்து, அசோக்குமாரை நான் பாராட்டியிருந்தால், இதேவிதமாக தனிநபரை பாராட்டுவதோ விமர்சிப்பதோ தவிர்க்கப்படவேண்டும் என நிச்சயம் நீங்கள் கூறியிருக்கமாட்டீர்கள்.

தங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறவர்களை ஏற்பதும், ஒத்துப் போகாதவர்களை விலக்குவதும் மனிதருக்குள்ள சாதாரண இயல்பு. அந்த இயல்புக்கு நீங்களும் விதிவிலக்கல்ல என்பதைப் புரிந்துகொண்டேன்.

என்னை உங்கள் தளத்தில் தக்கவைக்க மிகுந்த சிரமத்துடன் பல விளக்கங்களைத் தந்ததற்காக மீண்டும் நன்றி கூறுகிறேன். ஆகிலும் இத்தனை கட்டுப்பாட்டுகளுக்குள் எனது கருத்தை சுதந்தரமாகச் சொல்லமுடியுமா என்பது சந்தேகந்தான். நான் ஒவ்வொரு வார்த்தையை எழுதும்போதும், இவ்வார்த்தை தளநிர்வாகியின் விதிமுறைக்கு உட்பட்டதாக இருக்குமா என யோசித்தால் ஒரு கருத்தைச் சொல்வதற்கு நீண்ட நேரம் பிடிக்கும். எனக்கு அவ்வளவு நேரமில்லை என்பதை தெரிவிக்கிறேன் சகோதரரே.

எனவே தகுந்த நேரம் கிடைத்தால் எனது கருத்துக்களை சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன். தள நிர்வாகி என்ற முறையில் நீங்கள் பற்பல கட்டுப்பாடுகளைக் கூறுவதை ஒரு தவறாக நான் கருதவில்லை. ஆகிலும் உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறவர்/ஒத்துப்போகாதவர் என்ற வித்தியாசம் பாராட்டாமல், எக்கருத்தாக இருந்தாலும் வேதவசனத்தின் துணையோடு கூறுகிறார என்பதை மட்டும் பார்த்தால் நல்லது என்பது எனது ஆலோசனை.

நன்றி சகோதரரே. முடிந்தவரை பதிவுகளைத் தர முயற்சிக்கிறேன்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அருமை நண்பர் சாம் அவர்களே, குறிப்பிட்ட திரியில் மையப் பொருளையொட்டி தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தாராளமாக எடுத்துச் சொல்லலாம்;தனிநபர்களைப் பாராட்டுவதோ விமர்சிப்பதோ தவிர்க்கப்படவேண்டும்;சிலரை உயர்த்த சிலரை தனிமைப்படுத்துவது சரியல்ல தானே?

மேலும் குறிப்பிட்ட திரியை துவக்கிய காரணத்தாலும் தளத்தின் நிர்வாகி என்ற முறையிலும் எனக்கு சில கடமைகள் இருக்கிறது;நான் அசோக்கை பாராட்டுவது நிர்வாகி என்ற முறையிலும் திரியைத் துவக்கியவன் என்ற முறையிலும் நியாயமானதே;நீங்களே ஒரு திரியைத் துவங்கி நடத்தினாலும் இந்த உரிமை உங்களுக்கு உண்டு.

சுந்தர் அவர்கள் மூத்த உறுப்பினர் மற்றும் ஒரு தளத்தின் நிர்வாகியாக இருக்கிறார்;இதன் காரணமாக எனக்கும் அவருக்கும் கருத்து மோதல்களும் அது சம்பந்தமான வருத்தங்களும் உண்டு;இந்த பின்னணி விவகாரங்கள் புதியவரான உங்களுக்குத் தெரிந்திருக்க‌ நியாயமில்லை.

//அன்பான சகோதரரே, வேதவசனத்தின்படியான கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ளத்தான் நீங்கள் இத்தளத்திற்கு அழைத்தீர்கள் என நினைத்தேன்; ஆனால் தற்போது நீங்கள் கூறுவதைப் பார்த்தால், உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறவர்கள் மட்டுந்தான் இங்கு பங்களிக்கலாம் என்பது போலுள்ளது.//

நீங்கள் தவறாக அவதானிக்கிறீர்கள், சகோதரரே; அப்படி பார்த்தால் இங்கு எந்த பதிவுமே இருக்காது;எனது முக்கிய நோக்கமே துருபதேசத்தை அடையாளம் காட்டுவதுதான்.

தங்களை நான் மதிக்காதிருந்தால் இத்தனை நீளமான ஒரு பதிலை மிகுந்த சிரமத்துடன் டைப் செய்து பதிப்பேனா? நீங்கள் நம்ப மாட்டீர்கள், ஞாயிற்றுக்கிழமையான இன்று ஆராதனை முடிந்து வந்து
மதியம் சுமார் 12 மணியிலிருந்து மதியம் ஓய்வும் எடுக்காமல் இந்த ஒரு பதிவை ஆயத்தம் செய்யவே மாலை 5மணி வரை உழைத்திருக்கிறேன்.

இத்தனை நீளமாக எழுதியும் என் மனம் இதில் திருப்தியடையவில்லை; இதற்கு செலவு செய்த எனது பொன்னான நேரத்தை வேறு நல்ல காரியத்துக்கும் செலவிட்டிருக்கலாமே என்ற குற்றவுணர்வும் என்னை வாட்டுகிறது;ஆனாலும் தாங்கள் அடுக்கிய கேள்விகளே இத்தனை நீளமான பதிலை எழுதத் தூண்டியது என்பது மறுக்க முடியாதது ஆகும்;இங்கே கவனித்தால் உங்களுடைய எழுத்துக்களுக்கே நான் அதிகம் பதிலளித்திருக்கிறேன்;நீங்கள் வேண்டாதவராக இருந்தால் நான் ஏன் பதிலளிக்கவேண்டும்?

// நான் விலகிச்செல்லுமளவுக்கு என்ன எழுதினேன் என்பதுதான் எனக்குப் புரியவில்லை //

தங்களை விலகச் சொன்னது போன்ற தோரணையில் எழுதியதற்காக வருந்துகிறேன்;

// உலகளவில் நாம் வேறுபட்டே நிற்கிறோம்;யாரும் யாரையும் திருத்தமுடியாது;விலகிச் செல்லலாம் அவ்வளவே //

மேற்கண்ட எனது கருத்தின் ஆதாரமானது கிறித்தவ மார்க்க பேதங்களின் மீதான எனது மனச் சோர்வின் காரணமாக வெளிப்பட்டது; இது தங்களுக்கு எதிரானதல்ல; பத்து கட்டளைகள் கிருபையின் சுவிசேஷத்தின் ஆதாரமல்ல என்பது எனது நிலை;ஆனால் அதனை எதிர்த்து சிலர் பிடிவாதத்துடன் எழுதும்போது சலிப்பு ஏற்படுகிறது;இதனை எதிர்த்து நிரூபிக்கச் செய்யும் முயற்சிகளே மனச்சோர்வுக்குக் காரணமாகிறது.

உலகளவில் நாம் வேறுபட்டு நிற்கிறோம் எனும் வார்த்தையில் நான் சொல்ல வந்தது, இன்றைக்கு நம்முடைய சமுதாயத்திலிருக்கும் அத்தனை மார்க்கபேதங்களுக்கும் பின்னணி வெளிநாட்டு ஸ்தாபனங்கள் தான்;இதில் பெரும்பான்மையான பிரிவைச் சார்ந்தவர்கள் நியாயப்பிரமாணத்தின் வழியே இரட்சிப்பை அடைய முயற்சிப்போர்;மற்றும் அது இல்லாமலும் விசுவாசத்தின் மூலமே இரட்சிப்படைய முயற்சிப்போர்;மேலும் யெகோவா சாட்சிகள், ஏழாம் நாள்காரர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்;நம்முடைய நண்பர் சுந்தர் அவர்களும் ஓய்வுநாளைக் கடைபிடிப்பவர்தான்;ஆனால் என்ன ஒரு தமாஷ் என்றால் அவர் ஞாயிற்றுக்கிழமையை ஓய்வுநாளாக பாவிக்கிறார்;அன்பு57 என்பவரும் அவரைப் போன்று பத்து கட்டளையைப் பிரதானப்படுத்துவோரும் பிரதான கற்பனைகளில் நான்காம் கற்பனையை நிறைவேற்றும் முயற்சியாக ஏழாம் நாளான சனிக்கிழமையை மேன்மைப்படுத்துவார்கள்;இன்னும் சொல்லப்போனால் அந்த நான்காம் கற்பனையை நிலைநிறுத்தவே பத்து கற்பனைகளையும் அலசி ஆராய்ந்து போதிப்பார்கள்.

இவ்வளவையும் கடந்த மூன்று வருடமாக படித்து ஒருபுறம் மனம் வெதும்பிய நிலையில் மறுபுறம் ஆரோக்கிய உபதேசத்தைக் கொண்டவர்களாக நாம் எண்ணிக்கொண்டிருக்கும் நம்முடைய ஊழிய முறைகளில் காணப்படும் நிர்விசாரம் இன்னும் வேதனைப்படுத்தும்;அந்த நிர்விசாரங்களையும் மோசடிகளையும் இந்த துருபதேசக்காரர்கள் பெரிதாக எடுத்துப்பேசும் போது இன்னும் வைராக்கியம் ஏற்படும்;நான் யாருக்காக யாருடன் வழக்காடுவது,யாரை ஆதாயப்படுத்துவது..?

இந்த போராட்டத்தில் எனது வேலைகளை அதாவது எனது போதக ஊழியத்தைச் செய்ய முடியவில்லை;என்னிடம் ஆண்டவர் ஒப்படைத்துள்ள பணிகள் ஏராளம் உண்டு;மற்றவரைக் குற்றம் பிடிப்பதும் தாக்குவதும் எனது முழுநேரப்பணியல்ல‌;

ஜீவநீரோடை மற்றும் ஜாமக்காரன் பத்திரிகைகளைப் போல முழுநேரமாக இதையே ஊழியமாகச் செய்யும் அளவுக்கு பின்பலமுள்ளவன் அல்ல, நான்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

sam


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 16
Date:
Permalink  
 

மற்றொரு திரியில் சில்சாம் எழுதியது:
//பசித்து- ரசித்து- ருசித்து செல்லும் நண்பர்கள் சின்னதொரு கருத்தையாவது பாராட்டையாவது விமர்சனத்தையாவது ஏதுமில்லாவிட்டாலும் வலது மூலையிலிருக்கும் "ஸ்டார்" ஒன்றையாவது தொட்டுச் செல்லலாமே..!//
//எனவே நண்பர்கள் தங்களை படைப்புகளை "யௌவன ஜனம்" தளத்தில் பதித்து தங்கள் சிந்தனைகள் சரியான வேகத்தில் பயணிக்கச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்;நன்றி..!//
//எனவே தங்களது மேலான கருத்துக்களை அதிகமானோரைச் சென்றடைய "யௌவன ஜனம்" தளத்திலும் எழுத அன்புடன் அழைக்கிறேன்;தங்கள் நண்பர்களுக்கும் நமது தளத்தை அறிமுகப்படுத்தவும் வேண்டுகிறேன்;//
//நாளதுவரை "யௌவன ஜனம்" கிறிஸ்தவ கலந்துரையாடல் தளத்தைப் பார்வையிட்டுச் சென்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறிக் கொள்வதுடன் பதிவு செய்துள்ள நண்பர்கள் தங்கள் பங்களிப்பைத் தந்து இந்த தளத்தை கலகலப்பாக்க அன்போடு அழைக்கிறேன்;//

இப்படியெல்லாம் சொன்ன சகோ.சில்சாம், தற்போது இப்படி கூறுகிறார்:
//ஐயா, சாம் அவர்களே நீங்கள் யாராக இருந்தாலும் அல்லது புனைப் பெயரில் உள்ளே நுழைந்த பழைய நண்பராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை;உலகளவில் நாம் வேறுபட்டே நிற்கிறோம்;யாரும் யாரையும் திருத்தமுடியாது;விலகிச் செல்லலாம் அவ்வளவே;//

அன்பான சகோதரரே, வேதவசனத்தின்படியான கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ளத்தான் நீங்கள் இத்தளத்திற்கு அழைத்தீர்கள் என நினைத்தேன்; ஆனால் தற்போது நீங்கள் கூறுவதைப் பார்த்தால், உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறவர்கள் மட்டுந்தான் இங்கு பங்களிக்கலாம் என்பதுபோலுள்ளது.

நான் விலகிச்செல்லுமளவுக்கு என்ன எழுதினேன் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. மிகுந்த வசன மேற்கோள்களுடன் சகோ.சுந்தர் எழுதியதை, கடுஞ்சொல்லால் அசோக்குமார் விமர்சித்ததை என்னால் தாங்க இயலவில்லை. அவர் ஏதேனும் வசனங்களைச் சொல்லி, சுந்தரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்தால் பரவாயில்லை. ஆனால் வசனம் எதுவும் சொல்லாமல், மொட்டையாக விமர்சனம் செய்ததை என்னால் பொறுக்க இயலவில்லை. இன்று சுந்தருக்கு நேர்ந்த கதிதானே நாளை எனக்கும் நேரிடும்? எனவே நடுநிலையாளனாக நின்று, அசோக்குமாரின் விமர்சனத்திற்குப் பதில் தந்தேன்.

சக உறுப்பினரை மட்டமாக விமர்சித்ததை நீங்கள் ஆதரித்ததால், உங்களுக்கும் பதில் தந்தேன். நானுங்கூட முடிந்தவரை சில வசனங்களைச் சொல்லித்தான் எனது பதிலைத் தந்தேன். ஆனால் ஏனோ, நீங்கள் என்னைப் பலவாறாக விமர்சித்து, தளத்தைவிட்டு விலகிச் செல்லும்படியும் கூறியுள்ளிர்கள். இவ்வளவாய் நீங்கள் சொன்னபின் உங்கள் தளத்தில் பங்களிக்க என் மனம் இடங்கொடுக்கவில்லை.

இப்போதும் சொல்கிறேன், நான் எழுதின எந்த வரிகள் வேதத்திற்கு எதிரானது என்பதை நேரடியாக எடுத்துரைத்தால் நான் என்னைத் திருத்திக்கொள்வேன். இதற்கு மனமில்லையெனில், நீங்கள் வேண்டிக்கொண்டபடி நான் விலகிக்கொள்கிறேன்.

எல்லாம் தேவசித்தப்படிதான் நடக்கும் என முழுமையாக நான் நம்புகிறேன். தாவீதை சீமேயி என்பவன் தூஷித்தபோது: தன்னைத் தூஷிக்கவேண்டும் எனக் கர்த்தர் அவனுக்குச் சொன்னதாக தாவீது கூறினார் (2 சாமுவேல் 16:10). அவ்வாறே நீங்களோ வேறு யாரோ என்னைத் தூஷித்தால் அது கர்த்தர் உங்களை ஏவியதாகவே நான் நம்புகிறேன்.

இத்தளத்தில் நான் பங்களிக்கக்கூடாது என்பது தேவசித்தமெனில், அப்படியே ஆகட்டும். ஆரம்பத்தில் என்னை ஊக்கப்படுத்தி வரவேற்றமைக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

சில்சாம் எழுதியது:
//இந்த சாம் என்பவர் தன்னை மிகவும் அப்பாவி போல அறிமுகப்படுத்த நானும் அதனை நம்பி மிகத் தாழ்மையுடன் வரவேற்றேன்; ஆனால் அவருடைய போக்கு திடீரென மாறி ஏதோ ஒரு திட்டத்துடன் வந்ததுபோல செயல்படுகிறார்.//

நான் எந்தவொரு திட்டத்துடனும் அப்பாவி வேடமிட்டு இங்கு வரவில்லை என்பதை தேவன் அறிவார். என்னை நீங்கள் இத்தனை மட்டமாகக் கருதுமளவுக்கு அப்படி நான் என்ன சொல்லி என்னை அறிமுகப்படுத்தினேன், என்ன கருத்துக்களை எழுதினேன் என எனக்குப் புரியவில்லை.

தேவையில்லாத வகையில் உங்களோடு வாதம் செய்ய எனக்கு நேரமுமில்லை, மனதுமில்லை. உங்கள் பணியை என்னைப் போன்றோரின் குறுக்கீடு இல்லாமல் தொடர்ந்து செய்யுங்கள். நீங்கள் செய்வது தவறா சரியா என்பதை தேவனே தீர்மானித்து, அதற்கான பலனை உங்களுக்கு அளிப்பார்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இந்த திரியின் கீழ் விவாதிக்கப்பட வேண்டிய காரியங்கள் தசமபாகத்தைக் காணிக்கையாக‌ப் பெறுவது தவறா? எனும் திரியின் கீழ் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது;நண்பர்கள் எனது கோரிக்கையை ஏற்று இங்கே வந்ததும் விவாதத்தை இங்கிருந்து தொடருவோம்.

முன்பதாக இதுவரை அங்கே வாதித்த சுருக்கமான விவரங்களையும் அதனைக் குறித்த எனது கருத்துக்களையும் இங்கே பதிக்கிறேன்;இது முழுமையான போதனையல்ல,சிறு முயற்சியே;எந்தவொரு வாதமும் சில சலசலப்புகளை உண்டாக்குமே தவிர மனமாற்றத்துக்கோ மனத் தெளிவுக்கோ உதவாது;ஆனால் நேர்த்தியான போதனைகளோ மனமாற்றத்துக்கும் மனந்திரும்புதலுக்கும் உதவும்.

தசமபாகத்தைக் குறித்த சர்ச்சையில் எனது கருத்துக்களையும் அது தொடர்பான விவாதங்களையும் அலசும் இந்த பதிவில் சுந்தர் அவர்களின் கருத்தின் காரணமாக மையப் பொருளை விட்டு விலகிச் செல்ல நேர்ந்தது; நான்
ஒருவாரமாக தளத்துக்கு வராததால் இதனைத் தடுக்கவும் முடியவில்லை.

நான் குறிப்பிட்ட அப்போஸ்தலர்.15-ம் அதிகாரமே வாதம் திசைதிரும்பக் காரணமாக இருந்தது; ஆனாலும் அதனை நான் குறிப்பிடக் காரணமே சுந்தர் அவர்கள் தனது தளத்தில் நியாயப்பிரமாணத்தில் தசமபாகம் சம்பந்தமான தேவனுடைய பிரமாணத்தைப் பின்பற்றி தானும் மிகச் சரியாக கணக்கு பார்த்து தசமபாகம் செலுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதில் சொல்லும் விதமாகவே நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில் தசமபாகம் செலுத்துவது பயனற்றது, சத்தியத்துக்கு விரோதமானது என்ற கருத்தில் மிகத் தாழ்மையுடன் ஒரு வேதபகுதியைக் குறிப்பிட்டு அதனை நிதானமாக தியானிக்க வேண்டினேன்.

ஆனால் சுந்தர் அவர்கள் நான் அவருடைய எழுத்தை மேற்கோள் காட்டி இந்த வேதப்பகுதியைக் குறிப்பிட்டிருந்தும் அதனை சற்றும் கவனத்தில் கொள்ளாமல் இந்த வேதபகுதிக்கு புதிய விளக்கங்கள் கொடுக்கத் துவங்கிவிட்டார்.

கிருபையின் சுவிசேஷத்தினால் ஆண்டவரிடம் வந்த அசோக் அவர்களுக்கு இது புரியாத புதிராக இருந்தது; கொலோசெயர்.2-ம் அதிகாரமே அவருடைய அதிர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கும்; அவர் புதியவராக இருந்தும் பல இந்து தளங்களில் ஆண்டவருக்காக வைராக்கியத்துடன் எழுதி வருகிறார்; அவரை உற்சாகப்படுத்தும் வண்ணமாக சில வரிகளை நான் எழுத,அதற்கு சாம் என்பவர் பல குறுக்கு கேள்விகளை எழுப்பியதும் ரணகளமானது;

இந்த சாம் என்பவர் தன்னை மிகவும் அப்பாவி போல அறிமுகப்படுத்த நானும் அதனை நம்பி மிகத் தாழ்மையுடன் வரவேற்றேன்;ஆனால் அவருடைய போக்கு திடீரென மாறி ஏதோ ஒரு திட்டத்துடன் வந்ததுபோல செயல்படுகிறார்.

சாம் :
//‘அசிங்கப்படுத்துதல்’ என்பது ஒரு கடுமையான வார்த்தை. இப்படிச் சொல்லி ஒருவரைக் குற்றம் சாட்டும் நீங்கள், எழுதின வார்த்தைக்குக் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் //

சாம் அவர்கள் இது போல மிரட்டலாக யாருக்காகவோ அசோக் அவர்களைத் தாக்கும்போது நானும் எனது கருத்துக்களை மிக மென்மையாக முன்வைத்துள்ளேன்; ஆனால் சுந்தர் அவர்கள் மிக நேர்மையாளர் போலவும் எல்லாம் அறிந்தவர் போலவும் சாம் அவர்கள் தீர்ப்பு செய்துவிட்டார்; இங்கே சாம் அவர்கள் தனது கருத்தாக எதையும் கூறவில்லை என்பதோடு பல கேள்விகளைக் கேட்டு பதிலளிக்க வேண்டி மிரட்டுகிறார்;அவர் ஒன்றுமறியாத அப்பாவி அல்ல என்பதையும் கவனிக்கவேண்டும்;கேள்வி கேட்பவர் அதனைக் கேட்கும் தோரணையிலேயே அவருடைய நோக்கத்தை வெளிப்படுத்துவார்;பாம்பின் கால் பாம்பு அறியுமாம்.

ஐயா, சாம் அவர்களே நீங்கள் யாராக இருந்தாலும் அல்லது புனைப் பெயரில் உள்ளே நுழைந்த பழைய நண்பராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை;உலகளவில் நாம் வேறுபட்டே நிற்கிறோம்;யாரும் யாரையும் திருத்தமுடியாது;விலகிச் செல்லலாம் அவ்வளவே;இது என்னுடைய தனிப்பட்ட அனுபவமாகும்.

நியாயப்பிரமாணத்தின் வழியே அதாவது பத்து கற்பனைகளைப் பற்றிக் கொண்டே இயேசுவின் இரட்சிப்பை அடையமுடியும் என்று நீங்கள் நினைத்தால் ஒரு கையில் செத்த பிணத்தையும் மறுகையில் புத்தம்புது சிசுவையும் ஏந்திக்கொண்டிருப்பவரைப் போல நிற்கிறீர் என்று அர்த்தம்.

எங்கள் விசுவாசத்தைப் போதிக்கும் முன்பதாக துருபதேசங்களை அடையாளம் காட்டும் பணியை பிரதானமாக மேற்கொண்டிருக்கிறோம்;ஏனெனில் ஏதோ ஒரு பெலவீனத்தினாலோ எதிர்கொள்ள முடியாமலோ வாதங்களைத் தவிர்க்க விரும்பியோ ஆரோக்கிய உபதேசத்தைக் கைக்கொள்ளுவோர் துருபதேசக்காரர்களுக்கு விரோதமாக எதுவும் பேசுகிறதில்லை.

சாம் :
// ‘இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யவேண்டும் என்ற விவாதங்கள் எதற்கு’ என்கிறீர்கள். வேதாகமம் கூட பல வசனங்களில் “இதைச் செய், அதைச் செய்யாதே” எனக் கூறவில்லையா? //

ஆம்,வெளியே சொம்புகளைக் கழுவிக் கொண்டிருந்தோரைப் பார்த்து வெளிப்புறத்தைக் கழுவினது போதும் அதன் உட்புறத்தைக் கழுவு என்று ஆண்டவர் சொன்னார்.

காரணம்,வெளிப்புறத்தை வெறுங்கண்களால் பார்த்தே சுத்தஞ்செய்யலாம்; ஆனால் ஒரு பாத்திரத்தின் உட்புறத்தை உணர்வுடன் சுத்தம் செய்யவேண்டியிருக்கும்;அந்த பாத்திரத்தின் நிலைமை மடிப்புகள் வளைவுகள் குறித்த தெளிவுடன் செய்யவேண்டும்;கைவிரல்கள் செல்லும் எல்லா இடங்களையும் கண்கள் பார்க்காது,எனவே உணர்ந்து செய்யவேண்டும்.

அதுபோலவே வெறுங்கட்டளைகளாக அடிமைப்படுத்தும் சர்வாதிகாரமாக‌ தேவ மார்க்கத்தைப் பார்த்த ஒருவன் அவருடைய அன்பு நிறைந்த இதயத்தையும் அவர் தன்னை மீட்க பட்டபாடுகளையும் உணர்ந்து இனி பாவஞ்செய்யாதிருக்க தன் பாவத்தை நிறைவேற்றும் உடல் உறுப்புகளை ஒப்புக்கொடுத்தல் அமைந்திருக்கும்.

கட்டளையின் ஆதாரம் அன்பாக இருக்கிறதே தவிர அன்பு கட்டளையாக இல்லை;இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தை உணரத்தான் முடியும்;இதன்படி அன்பின் நிறைவினால் கட்டளைகள் இயல்பாக நிறைவேறும்;எனவே அன்பை நிறைவேற்றுதல் கட்டளையின் விளைவைவிட மேன்மையாக இருக்கிறது;அன்பை மறுத்து கட்டளைகளைப் பேசுவது சிலுவையின் தியாகத்தை அவமாக்குவது போலிருக்கும்.

"கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே."(1,தீமோத்தேயு.1:5)

கட்டளைகளிலும் சடங்கு சம்பிரதாயங்களிலும் ஊறித் திளைத்த யூதர்களிடம் அதை விளக்குவதற்கு அப்போஸ்தலர்கள் அதிகம் போராட வேண்டிய அவசியமில்லையே.

ஆனால் அந்த கற்பனைகளும் சடங்கு சம்பிரதாயங்களும் கிறித்துவில் எப்படி நிறைவேறியது என்பதையே இயேசுவானவரும் மற்ற அப்போஸ்தலர்களும் நிரூபிக்கப் போராடினர்;அதிலும் புறசாதிகளுக்காக அனுப்பப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுலடிகளின் பணி இன்னும் கடுமையானது;அவர்களுக்கு யூதருடைய தேசியக் கடவுளை, உலக இரட்சகராக நிரூபிக்கவேண்டியதே பிரதான பணியாக இருந்தது; ஏனெனில் பத்து கட்டளை என்பது ஏற்கனவே பிரபலமாகி விட்டது;அது வாழ்வியல் கட்டளையாக மட்டுமே இருந்து அநேகரை விழச் செய்து கொண்டிருந்ததை உலகம் ஏற்கனவே அறிந்திருந்தது.

ஆனால் அதிலும் மேன்மையான பலியாக இயேசுவானவரின் பலியானது குற்ற உணர்ச்சியும் துர்மனசாட்சியும் நீங்க சுத்திகரித்து மறுமை எனும் பேரானந்த பாக்கியத்தையும் தருகிறது;எனவே அதற்கேற்ற கிரியைகளைச் செய்ய மீண்டும் கட்டளைகளே தரப்பட்டது; இது பழைய கட்டளையைப் போன்றதல்ல,அது பாவிகளை உருவாக்கியது;ஆனால் இந்த கட்டளையோ நம்பிக்கையையும் மறுமையின் நிச்சயத்தையும் தருகிறது; "இலைய எடுடா" என்றால் எடுத்த இலைகளை எண்ணுபவனைப் போல பத்து கற்பனைகளைக் குறித்து பேசுவோர் இருக்கின்றனர்.

சாம் :
// சுந்தர் எழுதின புதியஏற்பாட்டு வசனங்கள்: வெளி. 22:14; 1 யோவான் 5:2,3; 1 கொரி. 6:9,10; 7:19; கலாத்தியர் 5:21; யோவான் 2:4. //

இதிலுள்ள வசனங்கள் நியாயப்பிரமாணத்தின்- அதாவது பத்து கட்டளையின் விளக்கவுரை போல- அதாவது கோனார் கைடு போல இருக்கிறது என்பது உண்மையே;அதனை இவ்வளவு விவரமாகச் சொல்வதை விட பத்து கட்டளைகளையும் கூறி விளக்கிவிடலாமே?

பிரச்சினை அதுவல்ல,பாவத்திலிருந்து விடுபட்டவன் மீண்டும் அந்த குறிப்பிட்ட பாவக் கட்டில் விழக்கூடாது; கட்டளையின் படி விழுந்தாலும் அதற்கான அபராதத்தைக் கட்டிவிட்டு அதனைத் தொடர்ந்தார்கள்;ஆனால் புதிய கற்பனையின் படி கட்டளைகளல்ல, மன்னிப்பின் மேன்மையால் மனமாற்றமும் அதன் விளைவால் மறுமை பாக்கியமும் கிட்டுகிறது;இந்த மேன்மையானது பத்து கட்டளையில் வாக்களிக்கப்படவில்லை.

சுருக்கமாக வேறொரு இடத்தில் பவுல் கூறுகிறார்,சுபாவ கிளைகளையே அவர் தப்ப விடவில்லையே,ஒட்டுக்கிளையான உன்னை விடுவாரா என்கிறார்; சுபாவ கிளைகள் கட்டளையை நிறைவேற்ற கட்டளை பெற்றோர்;ஒட்டுகிளைகள் என்பார் மன்னிப்பின் மூலம் மறுவாழ்வையடைந்தோர்;

சாம் :
// புதியஏற்பாட்டுப் போதனையும் நம்மை நிர்பந்திக்கிறது, பயமுறுத்துகிறது எனச் சொல்லலாமே? //

புதிய ஏற்பாட்டு போதனை நிர்பந்திக்கவுமில்லை,பயமுறுத்தவுமில்லை;சுயாதீனத்தையே தருகிறது;பிள்ளை தவறு செய்தால் கண்டிக்கும் தகப்பன் தத்தெடுக்கப்பட்ட அடிமை மகனிடம் கட்டளையையல்ல‌,அன்பையே எதிர்பார்க்கிறார்.

நாம் பிள்ளைகளல்ல,பிள்ளைகள் ஆனோம்;யூதருடைய கீழ்ப்படியாமை அதாவது கட்டளைகளுக்கு எதிர்ந்து நின்றது நம்மை சுதந்தரவாளிகளாக்கினது;நாம் சுதந்தரவாளிகளானபோது கட்டளைகள் பிரதானமாக வரவில்லை,அன்பே பிரதானமாக வந்தது;யூதருக்கோ கட்டளையே பிரதானமாக வந்தது.

அசோக்:
//  கிறிஸ்த்துவின்  ரத்தத்தை நீங்கள் ஏன் அசிங்கப்படுத்துகிரீர்கள்? //

அசோக் அவர்களின் இந்த கருத்துக்கு சுந்தர் அவர்களின் பதில் என்ன தெரியுமா...

சுந்தர்:
//"ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்" அதுபோல் இயேசுவின் இரத்தத்தை குறித்து இந்நாட்களில் சாத்தான் ரொம்பவே ஆதங்கப்படுகிறான். ஏனெனில் அவனது முடிவு எங்கே இருக்கிறது என்பது அவனுக்கு தெரியாதா என்ன? //

சுந்தர்
அவர்களுடைய இந்த கருத்து மிகவும் புண்படுத்துவதாக உள்ளது;அவர் இதை வைத்து ஒரு கட்டுரையே எழுதிவிட்டார்;ரொம்ப சாமர்த்தியம் என்ற எண்ணம் போலும்; இதற்கு சாம் அவர்களுக்கு சுந்தர் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்; சார்,இத கொஞ்சம் கவனிங்க‌.

சுந்தர்:
// நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்ட  காரியங்கள் புதிய ஏற்பாட்டு  காலத்தில் போதிக்கப்பட்டிருந்தால் அதை நிச்சயம் கைக்கொள்ளவேண்டும் என்பதே எனது கருத்து. //

அப்படியானால் நியாயப்பிரமாணத்தில் சொல்லப்படாத காரியங்கள் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருந்தால்...? இந்த நிலையில் யூதர்களைவிட புறசாதிகள் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுவார்களே? யூதர்களாலேயே கடைபிடிக்கப்பட இயலாத வெறும் பத்து கற்பனைகளுடன் புதிய ஏற்பாட்டின் புதிய கற்பனைகளும் பவுல் போன்றோரின் புதிய கட்டளைகளும் சேர்ந்தால் புறசாதியினரின் நிலை என்னவாகும்..? நியாயப்பிரமாணத்தில் கூறப்படாத புதிய ஏற்பாட்டின் பிரமாணங்களையும் கொஞ்சம் எடுத்துவிட்டால் வசதியாக இருக்கும்..!

நியாயப்பிரமாணத்தில் கூறப்படாத எந்த கட்டளையும் புதிய ஏற்பாட்டில் கூறப்படவில்லை என்பீர்களாகில் நீங்கள் நியாயப்பிரமாணத்தையோ ஏன் பழைய ஏற்பாட்டையோ குறித்து பேசுவதையும் எழுதுதையும் உடனே நிறுத்த வேண்டும்;கேவலம் பன்னி குட்டிகளுக்கு- ஸாரி, நாய்குட்டிகளுக்கு பிள்ளைகளின் அப்பம் கேட்கிறதோ..?

அதுபோலவே புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட காரியங்கள் அனைத்தும் நியாயப்பிரமாணம் ஏற்கனவே சொல்லிவிட்டது என்பீர்களாகில் அங்கேயே நில்லுங்கள்;புதிய ஏற்பாட்டினால் உங்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை;உங்களாலும் எங்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை;உங்கள் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி கடலின் ஆழத்தில் யாராவது போட்டுவர உபவாசித்து ஜெபிப்போம்.

சுந்தர்:
// பிதாவாகிய தேவன்தான் அப்படியே  இயேசுவாக மாறி வந்துவிட்டார்" என்ற கருத்தையே நான் மறுக்கிறேன். //

சிலருக்கு சில காலம் நண்பராக இருக்கவேண்டி இப்படி பதமாகவும் இதமாகவும் எழுதுவது பெரிய காரியமல்ல;நான் நேரடியாகக் கேட்கிறேன்,நசரேயனாகிய இயேசுவை என்ன செய்யவேண்டும் என்று பிலாத்து கேட்டது போலக் கேட்கிறேன்,அவரை தெய்வமாகத் தொழலாமா கூடாதா அதைச் சொல்லுங்கள்,ஐயா..!

சாம் :
// நண்பரே, இப்படி மொட்டையாக “ஏன் அவமாக்குகிறீர்கள்” எனக் கேட்டால் எப்படி? யார், எவ்வாறு அவமாக்கினார் என்பதை அவர் எழுதியதை மேற்கோள் காட்டி சொல்லுங்கள். ‘அவமாக்குதல்’ என்பது ஒரு கடுமையான வார்த்தை. இப்படிச் சொல்லி ஒருவரைக் குற்றம் சாட்டும் நீங்கள், எழுதின வார்த்தைக்குக் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் (தேவனிடம்). எனவே எதையும் பொறுப்புடன் எழுதுங்கள். //

"அவமாக்குதல்" என்பது பவுலடிகள் பயன்படுத்தியது தான்;அதற்கு "இல்லாமற் போகச் செய்வது" என்பதே பொருள்;அதன்படி அது அத்தனை கடுமையான வார்த்தையல்ல; சுந்தருக்காக வக்காலத்து வாங்கும் சாம் அவர்கள் சுந்தர் அவர்கள் இயேசுவின் சிலுவைப்பாடுகளை அவமாக்கி எழுதுபவற்றை மேலே நிரூபித்துள்ளேன்; நீங்கள் மோத வேண்டியது சுந்தர் அவர்களிடமே.

சாம் :
// சகோ.சுந்தர் அத்தனை சிரமப்பட்டு பல வசனங்களைப் பதித்து, அதற்கு விளக்கங்கங்களையும் கொடுத்திருக்க, மொட்டையாக ஒரு வரியில், அவர் எழுதியதை அவமாக்குதல் என்கிறீர்களே? உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா? //

சுந்தர் அவர்கள் எந்த சிரமமும் படவில்லை,ஏற்கனவே யாரோ ஒரு புண்ணியவான் ஏற்றிவிட்டதை காப்பி பேஸ்ட் செய்கிறார்;இதனால் அவருக்கு நேரம் மீதமாகிறது;என்னைப் போன்றோர் இதோ கடந்த நான்கு மணிநேரமாக கஷ்டப்பட்டு டைப் செய்து ஏற்றுகிறோம்;அவர் கொடுத்துள்ள வசனங்களும் அத்தனை பொருத்தமானதல்ல,அந்த விளக்கங்களும் சரியானதல்ல‌.

சாம் :
// சுந்தரோ, நானோ எறிந்த கற்களில் (வார்த்தை, தீர்ப்பு) ஒன்றை எங்கள் பதிவுகளிலிருந்து நேரடியாக எடுத்துக்காட்டி, உங்கள் தீர்ப்புகளைச் (அதாவது: அவமாக்குகிறீர்கள், கல்லெறிகிறீர்கள் என்பது போன்ற தீர்ப்புகளைச்) சொல்லுங்கள். மீண்டும் மீண்டும் மொட்டையாக எதையும் சொல்லாதீர்கள். //

நீங்கள் எழுதிய வார்த்தைகளிலிருந்து உங்கள் குற்றவாளியாக்க முயற்சித்தால் அதுவே எங்களை குற்றவாளியாக்கிவிடும் என்பது தெரியாதா என்ன‌?

ஆனால் இயேசுவின் இரத்தத்துக்காக பேசிய அசோக்கை சுந்தர் அவர்கள் சாத்தான் என்று இகழ்ந்ததை நீங்கள் கண்டுகொள்ளாதது ஆச்சரியமாக இருக்கிறது..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

நண்பர்களுக்கொரு தாழ்மையான வேண்டுகோள் எந்த ஒரு பின்னூட்டத்தையும் படித்து கருத்து சொல்லும் முன்பதாக அந்த குறிப்பிட்ட திரியின் தலைப்பையும் அதன் முதல் அறிமுக செய்தியையும் கவனத்தில் கொள்ளவும்;இது நம்முடைய விவாதம் மையப் பொருளை விட்டு விலகாதிருக்க உதவியாக இருக்கும்;

இங்கே முன்வைக்கப்படும் எந்த ஒரு கருத்தையும் தணிக்கை செய்யவோ நீக்கவோ நான் விரும்புகிறதில்லை;ஆனால் ஒன்று செய்கிறேன்;குறிப்பிட்ட அந்த திரியை முடக்குகிறேன்;காரணம் விவாதம் அதிகமாக திசை மாறி சென்றுவிட்டால் புதிதாக வரும் நண்பருக்கு இங்கே என்ன நடக்கிறது என்றே தெரியாமல் போய்விடும்; நான் ரொம்ப யோக்கியமல்ல,நானே இந்த தவறை தெரிந்தும் தெரியாமலும் செய்திருக்கிறேன்;

தொடர்ந்து இங்கே நண்பர் சந்தோஷ் அவர்கள் முன்வைத்திருக்கும் நீண்ட பின்னூட்டத்தைப் பொறுமையாக வாசித்தோருக்கு சில கருத்து வேறுபாடுகளும் சங்கடங்களும் ஏற்படக்கூடும்;அவர் பொதுவாகவே கட்டுரை அல்லது அறிக்கை போல பதித்து செல்கிறவர்;நேரடி விவாதத்துக்கு வரக்கூடியவரல்ல;அவரது பல கருத்துக்கள் ஏற்புடையதாக இருப்பினும் சில வரிகள் சர்ச்சைக்குரியதாகவும் ஏற்கத்தகாததுமாக இருக்கும்;அதற்கான தொடுப்பையும் தரமாட்டார்;நாம் அதை பொருட்படுத்தாது சென்று விட்டால் பரவாயில்லை,

ஆனால் ஒரு  தவறான செய்தியினால் புதியவர்கள் தடுமாறாதிருக்க சிலராவது எழும்பி அதைக் குறித்து எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்; இந்த குறிப்பிட்ட கருத்து அனைவருக்கும் பொதுவானது;

உதாரணத்துக்கு பின்வரும் வரிகள்...இது சந்தோஷ் அவர்கள் கண்டும் காணாதது போல தூவிச் செல்லும் ஒரு கருத்தாகும்;
// அவருடைய ஞானம் அளவிடப்பட முடியாதது. ஞானமானது கர்த்தரின் பெண்சக்தியாகும்.. அவர் தன்னுடைய ஞானத்தோடு ஆலோசனை செய்தார். //

இதனை விமர்சிக்கும் போது இரண்டு விளைவுகள் உண்டாகும்;ஒன்று இந்த கருத்து ஏன் சரியாக இருக்கக்கூடாது என்ற எண்ணம் புதியவருக்குத் தோன்றும்;அல்லது இந்த கருத்தை எப்படி மறுக்கமுடியும் என்ற தவிப்பு உண்டாகும்;

இதில் விமர்சிப்பவர் இரண்டு தவறுகளைச் செய்யமுடியும்;ஒன்று தேவையில்லாத ஒரு கருத்துக்கு அறிமுகம் கொடுத்த தவறு;மற்றொன்று அதற்கு சரியான மறுப்பு கூறாது;

இதன் காரணமாகவே பலரும் தவறுகளைக் கண்டும் காணாமல் செல்கின்றனர்;ஒரு கருத்து தவறானது என்றறிந்தும் அதனை தவறு என்று நிரூபிக்க இயலாதிருப்பது ஒரு மயக்கம்தான்; இதனை நாம் உணர்ந்து நம்மை உருவாக்கிக் கொள்ளவேண்டியதாகிறது;

காரணம் கண்டும் காணாமல் செல்வதைவிட அதினால் ஏற்படும் பாதிப்பு அதிகமாகும்.

இங்கே தசமபாகத்தைக் குறித்த விவாதத்தையொட்டி நியாயப்பிரமாணத்தைக் குறித்த அவரது கருத்துக்கள் மேற்கோள் போல அதிகமாக வந்துள்ளதால் வாசிப்பதில் சற்று சோர்வு ஏற்படுகிறது;

நியாயப்பிரமாணம் ஒழிக்கப்பட்டுவிட்டது என கருதும் போதகர்கள் தங்கள் காணிக்கை உறையில் தசமபாக காணிக்கை என அச்சிட்டிருப்பது முரண்பாடு போலிருக்கிறது;அதற்கு விளக்கமாக நியாயப்பிரமாணத்துக்கு முன்பே தசமபாகம் செலுத்தப்பட்டதைக் கூறுவர்;அதையும் எதிர்த்து இன்றைக்கு பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர்;

சந்தோஷ் அவர்களின் கருத்துக்களை நிதானமாக வாசித்தபிறகு அவரிடம் நான் கேட்க விரும்பியது என்னவென்றால்,நீங்கள் நியாயப்பிரமாணத்தைக் குறித்து மிக எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள்,ரொம்ப சந்தோஷம்;

ஆனால் நிபந்தனையற்ற தேவ சுபாவமும் உணர்வுமான அன்பை எப்படி நியாயப்பிரமாணத்தில் ஒரு பகுதியாக்க இயலும்?

நியாயப்பிரமாணத்துக்கு அன்பு ஆதாரமாக இருப்பினும் அன்பின் மூலமாக நியாயப்பிரமாணம் நிறைவேறுகிறதாக இருப்பினும் அன்பை கட்டளையாக்க இயலுமா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்;

அதாவது என்னை நீ நேசித்தாக வேண்டும் என்று யாரையாவது நான் வறுபுறுத்த முடியுமா?

இது தசமபாகம் சம்பந்தமான திரியிலிருந்து வந்த பின்னூட்டமாகும்;தசமபாகம் சம்பந்தமான கருத்துக்களை பின்வரும் தொடுப்பிலிருந்து தொடர வேண்டுகிறேன்;


http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=38300391


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
நியாயப்பிரமாணத்தின் கிரியையும் விசுவாசத்தின் கிரியையும்
Permalink  
 


அண்மையில் எனது குழு விவாதத்தின் போது ஆராயப்பட்ட கருகலான ஒரு சத்தியம் 'நியாயப்பிரமாணமா, கிருபையா ' என்பதாகும்;இதில் சரியான தெளிவான உபதேசத்தை நாம் பெற்றிருக்கிறோமா என்று தெரியவில்லை.

இதைக் குறித்து நான் அதிகமாக சிந்தித்தபோது எனக்கு நல்லதொரு கட்டுரைக்கான கரு கிடைத்தது; இதற்குக் காரணமானது, எனது நண்பர் ஒருவரின் பத்து கற்பனைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்றியாக வேண்டும் என்ற வைராக்கியமே.

இது தொடர்பான சிந்தனையில் நானிருந்தபோதே கீழ்க்காணும் கட்டுரையினை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது; ஒரு புதிய வலைப்பூவில் எழுதப்பட்ட ஒரே கட்டுரைக்கு முதல் பின்னூட்டமிட்ட வாய்ப்பும் எனக்குக் கிட்டியது; அந்த கட்டுரையும் அதன் தொடுப்பும்...

http://kiristians.wordpress.com/2010/09/13/4/

கிறித்தவமும் மற்ற மார்க்கங்களும்
Posted: செப்டம்பர் 13, 2010 by kiristians

யுரோப் (Europe) தனது 16ம்  நூற்றாண்டில் ஒரு மிக பெரிய வரலாற்று நாயகனை உண்டாக்க போகிறது என்பதை சீக்கிரமாக உணர்ந்தது.அது ப்ரோடஸ்தண்டை உருவாக்கிய மார்ட்டின்லூதர் அவர்கள் தான்.கர்த்தர் இவர் மூலமாக, ' விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் ' என்ற சத்தியத்தை திரும்பவும் நிலைநாட்டினார்.

நான் இந்த வரலாற்று படத்தை சில தினங்களக்கு முன் பார்த்தேன் அதில் ஒரு நிகழ்வில் மார்டின் லூதரின் குரு அவர்கள் பல மரித்த பரிசுத்தவான்களின் உடமைகளையும் அவர்களின் சிலைகளையும் கண்பித்து இவைகளின் மூலம் ஒருவர் தேவபக்தியை பெருக்கலாம் என்று சொல்லுவார்.அதற்க்கு மார்டின்லூதர் இல்லை என்று மறுப்பார்.குரு கோபம் அடைந்தவராய் ,இவைகளின் மூலம் (சிலைகள் )ஒருவன் தேவபக்தியை அடைய முடியாவிட்டால் வேறு எதினால் அடையமுடியும் என்று கேட்பார்.அதற்கு மார்டின்லுதர் கிறிஸ்துவே என்று ஆணித்தரமாக வாதிடுவார்.

என்ன இவன் கிறித்தவமும் மற்ற மார்க்கங்களும் என்று தலைப்பை வைத்து மார்டின் லூதர் பற்றி ஏதோ எழுதுகிறாரே என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் ஆண்டவர், மார்டின் மூலமாக திரும்பவும் நிலைநாட்டிய சத்தியம் (விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்) தான் இன்று கிருத்தவம் மற்ற மார்கங்களிருந்து வேறுபடுகிறது என்று சொல்ல விரும்புகிறேன்.

மற்ற மார்க்கங்களிருந்து கிருத்துவம் எப்படி வேறுபடுகின்றது?

கிருபையும் கிரியையும்
பிற மார்க்கங்களில் கிரியையினால் மோட்சம் அடையலாம் என்று அந்த மார்க்கங்களின் உபதேசியார் சொல்லுவதை நாம் பலமுறை கேட்டிருக்கலாம். அதாவது நாம் தானம் தர்மம் செய்வதினாலும் நாம் உடலை பலவித கட்டுபாட்டில் ஈடு படுத்துவதினாலும் மோட்சம் அல்லது பரலோகம் செல்லலாம் என்கின்றனர்.ஆனால் அடிப்படையான ஒரு உண்மையை அறியாமல் உள்ளனர்.அது எதுவெனில் நல்ல மரம் நல்ல கனியை தானாக தருகின்றது விஷமரம் விஷ கனிகளை தருகின்றது.நாம் நல்ல மரமென்றால் நல்ல கனிகள் மாத்திரம் வர வேண்டுமே தவிர நல்லது அல்லாதவைகள் எப்படி வருகிறது என்ற கேள்வி எழும்புகிறது.

ஆதாம் விழுகையினாலே தான் நாம் எல்லாரும் இந்த பாவ சரீரத்தினால் அவதிபடுகிறோம் என்று பைபிள் காண்பிக்கிறது.அதினால் தான் பவுலும் ரோமர் 7 அதிகாரத்தில் பின்வருமாறு எழுதுகிறார், "நன்மை செய்யும் விருப்பம் எனக்கு இருந்தாலும் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை என்றும் பாவ சரீரத்தில் உள்ள பாவ பிரமாணம் என்னை அடிமைபடுத்துகின்றது " என்றும் சொல்கிறார்.

மற்ற மார்க்கங்களில் இந்த பாவ சுபாவத்தை பற்றி அதிகம் பேசமாட்டார்கள் நம்மால் நல்லது செய்ய முடியம் அதினால் நாம் பரலோகம் செல்லலாம் என்று போதிப்பர்.ஆனால் அந்த நல்லதிலும் ஒரு சுய நலம் உண்டு என்றும் கறைகள் ஏராளம் என்பதை பார்க்க அவர்களால் முடிவதில்லை.ஏனெனில் இந்த உலகத்தின் அதிபதியானவன் அவர்கள் மனக்கண்களை குருடாக்கி உள்ளான்.

இந்த பாவ சுபாவத்தை குறித்து பைபிளின் சில வசனங்களை பார்ப்போம்.

யோபு 14ம் அதிகாரத்தில் 4 வசனம்
அசுத்தமானதிளிருந்து சுத்தமானது பிறப்பிக்கிறவன் உண்டோ?

யோபு 15 அதிகாரம் 14ம் வசனம்
மனுஷனானவன் பரிசுத்தமாக இருப்பதும் பெண்ணிடம் பிறந்தவன் நீதிமானா இருப்பதும் எப்படி?

இன்னும் பல வசனங்கள் பைபிளில் உண்டு.இப்படி நாம் வசனங்கள் மூலமாகவும் நாம் சுய அனுபவத்திலும் மனுஷன் பிறப்பில் இருந்தே   கறை உள்ளவன் என்பதை அறிகிறோம்.இவைகள் மற்ற மார்க்கங்களில் சொல்லபடவில்லை.

இன்றும் பல கிருத்துவர்கள் கூட நம்முடைய பாவ சுபாவத்தை மறந்து பைபிளை படிப்பதினாலும் சபைக்கு தவறாமல் செல்லுவதினாலும் தசமபாகம்  கொடுப்பதினாலும்   தானம் தர்மம் பன்னுவதினாலும் பரலோகம் அடையலாம் என்று எண்ணுகின்றனர் மாறாக இந்த நற்கிரியைகல்லாம் செய்வதற்கு ஆதிமுதல் தேவன் நம்மை உண்டாக்கினார் என்றும் இந்த நற்கிரியைகளில் நடப்பதற்கு அவைகள் முன்னதாகவே ஆயத்தம் செய்யப்பட்டது என்றும் இவைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால்(கிருபையினால் ) வருகின்ற பலன்கள் என்பதை அறியாமல் உள்ளனர்.

மறுமொழிகள்:

chillsam says:
7:33 மு.பகல் இல் செப்டம்பர் 30, 2010
// இவைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் (கிருபையினால் ) வருகின்ற பலன்கள் என்பதை அறியாமல் உள்ளனர் //

எவைகள்…சற்று விளக்கினால் நலம்.(யாக்கோபு.2:17,18 ஐயும் கவனத்தில் கொள்ளவும்)... புதிய வலைப்பூ முயற்சிக்கு வாழ்த்துக்கள்..!

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=1

kiristians says:
4:41 பிற்பகல் இல் அக்டோபர் 2, 2010
தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.கிருபையினால் வரும் பலன்கள் எவைகள் எனில் கிருஸ்துவினடத்தில் வைக்கும் விசுவாசம்,நம்பிக்கை,அன்பு,மற்றும் நீதி,சமாதானம், போன்றவைகள்.

நாம் காட்டு ஒலிவமரமாக இருந்த போதும் நாம் கிரியை நடபித்தோம் அதாவது நம் மனசும் மாம்சமும் விரும்பினைவைகளை செய்து கொண்டு வந்தோம்.இதில் நமக்கு மனது இருந்த போது ஏழை எளியவர்க்கு அன்னதானம் செய்தோம்.

நாம் நல்ல ஒலிவமரத்தில் ஓட்ட வைக்க பட்ட போது கர்த்தர் என்ன விரும்புகிறார் என்பதை அறிந்தோம்.மரியாளை போல விலை ஏற பெற்ற நளதத்தை அவர் மீது ஊற்ற கற்று கொள்ள வைக்கிறார்.அதை ஏழைகளுக்கும் கொடுத்திருக்கலாம் யூதாஸ் சொன்னது போல. இதில் எது சரி என்பது மனிதரின் பார்வையில் தவறாக படலாம் (நம் இந்து மற்றும் முஸ்லிம் சகோதரர்கள் குற்றம் சொல்கிறார்களே).ஆனால் நமக்கோ கர்த்தர் என்ன விரும்புகிறார் என்பதே முக்கியம்

chillsam says:
5:18 பிற்பகல் இல் அக்டோபர் 2, 2010
நல்லதொரு பதிலுக்கு நன்றி; யாக்கோபு.2:17,18 – இன் சரியான விளக்கத்தைக் கூற இயலுமா, அவர் எந்த கிரியையைக் குறித்து சொல்லுகிறார்..?

பின்குறிப்பு:
தயவுகூர்ந்து தாங்கள் எழுதியுள்ளதை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்; பிழையிருப்பின் திருத்திக் கொள்ளுங்கள்; நாம் செய்ய வேண்டிய வேலை அதிகமிருக்கிறதல்லவா..?

kiristians says:
3:25 மு.பகல் இல் அக்டோபர் 3, 2010

யாக்கோபு 2:17-18

17. அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.


18. ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக்காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.

மேலே உள்ள வசனத்தின் படி அந்த ஒருவன் புறஜாதியானவன் என்றால் என் கருத்துகள்,

ஒருவன் மனிதனாக மனசாட்சிபடி வாழும் போது அவன் தேவன் ஒருவர் உண்டு என்பதை அறிந்து அவருக்கு பயந்து வாழ முற்படுகிறான்.அப்படி வாழும் போது தன சொந்த ஜனத்தார் தேவைகளை அவனுக்கு மனம் உண்டாகும் போது பூர்த்தி செய்து தன நற்கிரியைகளை காண்பிக்கிறான்.அப்படி ஒரு மறுபடியும் பிறவாத ஒரு மனிதனே தன் மனசாட்சியின் படி செய்தால்,நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன் அவர் என் உள்ளத்தில் வாசம் செய்கிறார் என்று ஒருவன் சொல்லியும் தன் மாம்சமானவனின் தேவைகளை கண்டும் கானாதவனை போல் இருந்தால் அவன் விசுவாசம் சந்தேகத்திற்கு உட்படுகிறது.

அதனால் தான் கர்த்தர் பரலோகத்தில் செல்பவர்களின் நீதிகள் பரிசேயர்களின் நீதிகளை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார் என்று எண்ணுகிறேன்

chillsam says:
2:35 மு.பகல் இல் அக்டோபர் 4, 2010

// அப்படி ஒரு மறுபடியும் பிறவாத ஒரு மனிதனே தன் மனசாட்சியின் படி செய்தால்,நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன் அவர் என் உள்ளத்தில் வாசம் செய்கிறார் என்று ஒருவன் சொல்லியும் …//

மிக நேர்த்தியான பதில்…இது நியாயப்பிரமாணமில்லாமலே நற்கிரியைகளைச் செய்வோர் சார்பிலான விளக்கமானால் நியாயப்பிரமாண கிரியைகளைக் குறித்த போதனை என்ன‌…அதாவது பத்து கட்டளைகளாகிய கிரியையில்லாத விசுவாசம் செத்தது என்று யாக்கோபு கூறுகிறாரா அல்லது நியாயப்பிரமாணத்தின் கிரியையைக் காட்டிலும் வேறொன்றை போதிக்கிறாரா..?

தயவுசெய்து விளக்கவும்.

kiristians says:
3:21 மு.பகல் இல் அக்டோபர் 4, 2010

//அதாவது பத்து கட்டளைகளாகிய கிரியையில்லாத விசுவாசம் செத்தது என்று யாக்கோபு கூறுகிறாரா அல்லது நியாயப்பிரமாணத்தின் கிரியையைக் காட்டிலும் வேறொன்றை போதிக்கிறாரா..?//

முதலில் பத்து கட்டளைகளை குறித்த என் புரிதலை சொல்லி விடுகிறேன்.இந்த பத்து கட்டளைகளை ஒரு கிருத்துவன் எல்லா சூழ்நிலையிலும் கடைபிடிக்க கடமைபட்டுள்ளான்.இந்த பத்து கட்டளைகளில் ஓய்வு நாள் கட்டளை மாத்திரம் நமக்கு (கிருத்துவர்களுக்கு)விதிவிலக்காக தோன்றினாலும் நாம் தினந்தோறும் அதை கைகொள்கிறோம் என்று சொல்கிறேன்.எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.என் விளக்கம்,

ஆண்டவர் ஒரு முறை சூம்பின கையை உடைய ஒருவனை சுகபடுத்தும் போது,அங்கு இருந்தவர்களை பார்த்து ,ஓய்வு நாளில் நன்மை செய்வதோ,தீமை செய்வதோ எது நியாயம்? என்று கேட்டார்.மேலும் தேவன் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் என்கிறார்.அப்படி என்றால் தேவனை மகிமை படுத்துவது என்று அர்த்தம் அல்லவா?.புதிய ஏற்பாட்டில் பவுலும் நீங்கள் எதை செய்தாலும் அதை தேவ மகிமைக்கென்றே செய்யுங்கள் என்று சொல்கிறார்.ஆகையால் இதன் அடிபடையில் நாம் பத்து கட்டளைகளை தேவனையும்,நம் உடன் மனிதர்களையும்,அன்பு கூறுவதினால் நிறைவேற்றுகிறோம்.பரிசேயரை போல உள்ளம் கடினபட்டு அன்பில்லாமல் வெளி வேஷமாக அல்ல,அன்பினால் கிரியை செய்கின்றா விசுவாசத்தோடு நாம் செய்கின்றோம்.

ஆகையால் ஒரு உண்மை விசுவாசி பத்து கட்டளைகளை மாத்திரம் அல்ல அதற்கும் மேலே நிறைவேற்றுவான் என்று என் புரிதல் அடிப்படையில் சொல்கிறேன்.


ஆகையால் நீங்கள் எழுதினது போல அந்த பத்து கட்டளைகளை அன்பினால் நிறைவேற்றாத விசுவாசியின் விசுவாசம் செத்தது என்றே கருத வருகிறது

chillsam says:
6:46 மு.பகல் இல் அக்டோபர் 4, 2010

பத்து கட்டளைகள் சீர்திருத்தல் நிறைவேறுங்காலம் யூதருக்கு கிறித்துவின் நிழலாகக் கொடுக்கப்பட்டதாகவும் வேதம் கூறுகிறதே;அது எப்படி புறசாதியிலிருந்து கிறித்துவிடம் வந்தோரைக் கட்டுப்படுத்தும்?இப்படியே தசமபாகம் போன்ற நியாயப்பிரமாணத்துக்கு முந்தைய பொதுவான பிரமாணங்களும் கூட கிறித்தவனைக் கட்டுப்படுத்தாது என்று சொல்லப்படுகிறதே?

kiristians says:
12:11 மு.பகல் இல் அக்டோபர் 5, 2010

//பத்து கட்டளைகள் சீர்திருத்தல் நிறைவேறுங்காலம் யூதருக்கு கிறித்துவின் நிழலாகக் கொடுக்கப்பட்டதாகவும் வேதம் கூறுகிறதே;அது எப்படி புறசாதியிலிருந்து கிறித்துவிடம் வந்தோரைக் கட்டுப்படுத்தும்?//

நீங்கள் குறிப்பிட்ட வசனம்
எபிரெயர் 10 அதிகாரம்
1. இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.

மற்றும் நீங்கள் சொல்லியபடி சீர்திருத்த காலம் வரைக்கும் நடந்தேறுவது பத்து கட்டளைகள் அல்ல.அது பலிகளும்,காணிக்கைகளும் தான்.கீழே உள்ள வசனத்தை படிக்கவும்.

எபிராயர் 9 அதிகாரம்
10. இவைகள் சீர்திருந்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல.
மேலும் நம் ஆண்டவர் மத்தேயு 23:23
பரிசேயரை பார்த்து நீங்கள் எல்லாவற்றிலும் தசம பாகம் செலுத்தி நியாயபிரமாணத்தில் வீசெஷிததவைகளான நீதியையும் இரக்கத்தையும் விட்டு விட்டதாக சொல்கிறார்.அவைகளையும் செய்ய வேண்டும் இவைகளையும் விடாதிருக்க வேண்டும் என்றும் சொல்கிறார் அந்த கால கட்டத்தில்.
மேலும்
எபிரெயர் 10 அதிகாரம்

6. சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர்.

7. அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.

8. நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு:

9. தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.
இங்கே ஆண்டவர் முதலாவது நீக்கின காரியங்களில் வெறும் பலிகளையும்,காணிக்கைகளையும் தான் தவிர அன்பு, நீதி, இரக்கங்களை அல்ல.

chillsam says:
3:19 மு.பகல் இல் அக்டோபர் 5, 2010

அப்படியானால் பத்து கற்பனைகளையும் கிறித்தவன் கைக்கொண்டாக வேண்டுமென்கிறீர்களா அல்லது அதன் ஆதாரமான அன்பை நிறைவேற்றினால் போதுமா?

ஏனெனில் யாக்கோபு.2:22 இன் படி விசுவாசத்தின் கிரியையையும் அதன் முடிவையும் காண முடிகிறது; ஆனால் நியாயப்பிரமாணத்தின் கிரியையின் முடிவை எப்படி காண இயலும்?

கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் என்றும் வேதம் சொல்லுகிறதே,அப்படியானால் நியாயப்பிரமாணத்தினால் யாராவது நீதிமான் என்று பெயர் பெற்றதுண்டா என்பதையும் அது நித்திய ஜீவனைடைய உதவும் என்றும் கூற இயலுமா?

kiristians says:
5:44 பிற்பகல் இல் அக்டோபர் 5, 2010

//அப்படியானால் பத்து கற்பனைகளையும் கிறித்தவன் கைக்கொண்டாக வேண்டுமென்கிறீர்களா அல்லது அதன் ஆதாரமான அன்பை நிறைவேற்றினால் போதுமா?//

ஒரு உண்மை கிருத்துவன் விசுவாச வாழ்க்கை வாழும் போது நிச்சயமாக பத்து கட்டளைகளை கை கொள்வான்.அதற்கும் ஆழமாக அவன் அன்பு வெளிப்படும்.அந்த அன்பிற்கு முன் ஒன்றும் நிற்க முடியாது.எபெசியார் முதலாம் அதிகாரத்தில் நாம் அன்பில் பரிசுத்தமாகவும் குற்ற மற்றவர்களாகவும் அவர் தெரிந்து கொண்டார் என்று வாசிக்கிறோம்.

ஆகையால் ஒரு கிருத்துவன் பத்து கட்டளைகளை கை கொள்ளவேண்டுமா?என்று கேட்பதை பார்க்கிலும் அவன் கர்த்தரின் கிருபையால் நிற்பதால் அவனை கர்த்தர் தம் நாம மகிமைக்கென்று பத்து கட்டளைகளை மாத்திரம் அல்ல அந்த கட்டளைகளின் ஆழமான அன்பையும் கைகொள்ள செய்திடுவார் என்று கருதுகிறேன்.

மேலும் இந்த வசனத்தையும் உங்கள் ஞாபகத்திற்கு கொண்டு வருகிறேன்,

I தீமோத்தேயு1 அதிகாரம்

8. ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்.

9. எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய்தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,

10. வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,

11. நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.

kiristians says:
6:07 பிற்பகல் இல் அக்டோபர் 5, 2010

//ஏனெனில் யாக்கோபு.2:22 இன் படி விசுவாசத்தின் கிரியையையும் அதன் முடிவையும் காண முடிகிறது; ஆனால் நியாயப்பிரமாணத்தின் கிரியையின் முடிவை எப்படி காண இயலும்?

கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் என்றும் வேதம் சொல்லுகிறதே,அப்படியானால் நியாயப்பிரமாணத்தினால் யாராவது நீதிமான் என்று பெயர் பெற்றதுண்டா என்பதையும் அது நித்திய ஜீவனைடைய உதவும் என்றும் கூற இயலுமா?//

கலாத்தியர் ௩ அதிகாரத்தில்

நியாயபிரமானமானது நம்மை கிருத்துவினிடத்தில் வழி நடுத்துகிற உபாத்தியாக இருக்கிறது என்று வாசிக்கிறோம்.

நிச்சயமாக நியாயபிரமாணத்தின் கிரியைகளால் ஒருவனும் நீதிமானாக முடியாது என்பதை ரோமர் நிருபத்தில் நாம் தெளிவாக அறியலாம்.

கர்த்தரின் கிருபையால் நாம் நீதிமானாக்கபட்டோம் விசுவாசத்தினால்.அதிலே நாம் நிலைகொண்டிருந்தால் நாம் நீதிமான் தான்.அதன் பலனாக நாம் நற்கிரியைகளை செய்வோம்.ஒரு விசுவாசி தன கிருத்துவ வாழ்க்கையை தொடங்கும் போது நியாபிரமானத்தின் கிரியைகளை செய்ய முயலுவான்.அதினால் ஏற்பட்ட தோல்வியினாலும் பாரத்தினாலும் மனம் சோர்ந்து நான் என்ன செய்வேன் என்று கதறும் போது கிருத்துவானவர் அவனக்கு தன்னை வெளிபடுத்துவார்.மோட்ச்ச பிரயாணம் என்ற புத்தகத்தில் ஜான் பனியன் இந்த அனுபவத்தை தெளிவாக சொல்லுவார்.கிறிஸ்தியான்(மோட்ச்ச பிரயாணத்தின் கதாநாயகன்)தன பார சுமையோடு முன்னேறி கிறிஸ்த்துவின்சிலுவையின் அருகே வரும் போது தன பார சுமை தானாக விழுவதை பார்ப்பான்.

கிருத்துவ வாழ்க்கையில் பல படிகள் உள்ளதாக எண்ணுகிறேன்.௨ பேதுருவில் ௧ அதிகாரத்தில் விசுவாசிகளை பார்த்து பேதுரு சொல்கிறார் நீங்கள் உங்கள் தெரிந்து கொள்ளுதலையும் அழைப்பையும் உறுதி செய்யும் படி ஜாக்கிரதையா இருங்கள் என்கிறார்.அவர்கள்(அந்த விசுவாசிகள்)ஏற்கனவே நீதிமானக்க பட்டால் என இப்படி சொல்கிறார் என்று நமக்கு வினா எழுகிறது.

chillsam says:
8:06 பிற்பகல் இல் அக்டோபர் 5, 2010

ஒரு முழுமையான கிறித்தவ விசுவாசத்துக்கேற்ற விதமாக பதிலளித்து வருகிறீர்கள்;ஆனால் 1யோவான் 3:4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். என்று கூறுகிறது; பத்து கற்பனைகளையும் விசுவாசத்தினாலும் ஆழமான அன்பினாலும் நிறைவேற்றுவதாகக் கூறும் நாம் நான்காவது கற்பனையை எப்படி நிறைவேற்றுகிறோம், என்பதை விளக்குவீர்களா, ஏனெனில் இது ஆதியிலேயே கொடுக்கப்பட்டதல்லவா..?

sarav says:
12:30 மு.பகல் இல் அக்டோபர் 6, 2010

//பத்து கற்பனைகளையும் விசுவாசத்தினாலும் ஆழமான அன்பினாலும் நிறைவேற்றுவதாகக் கூறும் நாம் நான்காவது கற்பனையை எப்படி நிறைவேற்றுகிறோம், என்பதை விளக்குவீர்களா, ஏனெனில் இது ஆதியிலேயே கொடுக்கப்பட்டதல்லவா..?//

இந்த பத்து கட்டளைகளில் ஓய்வு நாள் கட்டளை மாத்திரம் நமக்கு (கிருத்துவர்களுக்கு)விதிவிலக்காக தோன்றினாலும் நாம் தினந்தோறும் அதை கைகொள்கிறோம் என்று சொல்கிறேன்.எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.என் விளக்கம், ஆண்டவர் ஒரு முறை சூம்பின கையை உடைய ஒருவனை சுகபடுத்தும் போது,அங்கு இருந்தவர்களை பார்த்து ,ஓய்வு நாளில் நன்மை செய்வதோ,தீமை செய்வதோ எது நியாயம்? என்று கேட்டார்.மேலும் தேவன் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் என்கிறார்.அப்படி என்றால் தேவனை மகிமை படுத்துவது என்று அர்த்தம் அல்லவா?.புதிய ஏற்பாட்டில் பவுலும் நீங்கள் எதை செய்தாலும் அதை தேவ மகிமைக்கென்றே செய்யுங்கள் என்று சொல்கிறார்.ஆகையால் இதன் அடிபடையில்நாம் தீமை செய்யாமல் நன்மை செய்து,தேவ மகிமைக்கென்று நம் செயல்களை நிமிடந்தோறும் தேவ ஆவியானவரின் மூலம் ஒப்புகொடுக்கபட்டும்,வழி நடத்தபடுகிறதாய் இருப்பதால் நாம் ஓய்வு நாளை(தேவ மகிமையை தேடுவதால்) எல்லா நாளும் அனுசரிக்கிறோம் என்று எண்ணுகிறேன்.

இன்னும் ஒரு விளக்கம் பழைய ஏற்பாட்டில் ஒருவன் தன் உணவுக்கு ( சுயத்திற்கென்று) ஓய்வு நாளில் சுள்ளிகளை எடுக்க சென்றதால் கொல்லபட்டான்.ஆனால் தேவ ஆலயத்தில் ஆசாரியர் ஓய்வுநாளில் ஓய்ந்திராமல் அந்த நாளை வேலை நாளாக்கினாலும் தவறில்லை என்று வாசிக்கிறோமே.ஏன் அவர்கள் கர்த்தருக்கு அடுத்த வேலையே செய்ததால் தானே.நாமும் கர்த்தருக்கு பிரியமானதை தினந்தோறும் நம் குடும்பத்தில்,வேலை இடத்தில், செய்வதால் எல்லா நாளும் நாம் ஓய்வு நாளை போல பரிசுத்தமாய் ஆசாரிக்கிறோம் என்று எண்ணுகிறேன்.

kiristians says:
12:50 மு.பகல் இல் அக்டோபர் 6, 2010

//ஒரு முழுமையான கிறித்தவ விசுவாசத்துக்கேற்ற விதமாக பதிலளித்து வருகிறீர்கள்;ஆனால் 1யோவான் 3:4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். என்று கூறுகிறது;//

ஒரு மனிதன் கர்த்தரை தன் சொந்த இரட்சகராக ஏற்று கொண்ட அந்த நேரத்தில் அந்த உண்மையான விசுவாசத்தில் அடிப்படையில் அவன் நீதிமானாக்க படுகிறான்.ஆகையால் அவன் கர்த்தருக்கே சொந்தம்.அவன் விழுந்தாலும் எழுந்தாலும் அவன் கர்த்தருக்கே உத்தரவாதி.அவன் மேல வேறொருவனும் குற்றம் சொல்ல முடியாது.(இங்கு நான் உண்மை கிருத்துவரை குறிப்பிடுகிறேன் பொய் கிருத்துவரை அல்ல).ஆகையால் அவன் பாவம் செய்து மீறினவன் என்று குற்றம் சாட்டபட்டாலும் அவனை திரும்பவும் எழுப்ப கர்த்தர் வல்லவராக இருக்கிறார்.

உயிரை கொடுக்க தக்கதாக நியாயபிரமாணம் அருளப்படவில்லை.மோசேயும் நல்ல தேசத்தில் பிரவேசிக்க வில்லையே ஒரு அடையாளமாக.ஆனால் நமக்கோ கர்த்தராகிய ஏசு கிறிஸ்த்துவின் இரத்தம் நம் பாவங்களை சுத்திகரித்து நம்மை நிலைக்க செய்கிறது விசுவாசத்தினால்.

chillsam says:
2:26 மு.பகல் இல் அக்டோபர் 6, 2010

http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&p=1

நான் தங்களிடம் கேட்ட கேள்விகள் அனைத்தும் கற்பனைகளைக் கைக்கொள்வதன் மூலமே இரட்சிப்படைய முடியும் அதுவே அன்பு அதை நிறைவேற்றுவதற்கே கிருபாவரம் என சாதிக்கும் ஒரு நண்பரின் வாதங்கள்… உங்களுக்கு ஆத்தும பாரம் (?) இருந்தால் அவருடன் தொடர்பு கொள்ளலாம்.(Mobile:9283333200 / 9003202177)

இதற்கொரு உதாரணமே மேலே நான் கொடுத்துள்ள தொடுப்பு; இவர்களைப் போன்றோரிடம் புதியவர்கள் சிக்கிவிடாதிருக்க நாம் செய்ய வேண்டியதென்ன?

நம்முடைய வீடுகளில் தெரிந்தோ தெரியாமலோ மாட்டி வைத்திருக்கும் பத்து கற்பனைகள் அடங்கிய அட்டையில் சில பதிப்புகளில் ஒரு வரி இருக்கிறது, “மக்கள் மறுரூபமாகுதல்” என,அதனை எடுத்துவிடுவதா அல்லது அன்பினிமித்தமாக செத்துப்போன அந்த பிரமாணங்களை இன்னும் ஞாபகத்துக்காக வைத்திருப்பதா, ஏதோ ஒருவித அச்சத்தினால் அதனை வைத்திருப்பது தவறல்ல என்பதோ பத்து கற்பனைகளைக் குறித்த சரியான தெளிவில்லாததினால் அது அவரவர் சுதந்தரம் என்பதோ கூடாது;

இதைக் குறித்த விரிவான கட்டுரையினை எனது தளத்தில் எழுதுவேன்; அன்பான நண்பர் அவர்களும் இந்த தளத்தில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறேன்.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=38614171


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard