தேவன், மனிதனை குறைவற்றவனாக, பாவமற்றவனாக, சாபமற்றவனாக, துன்பமில்லாதவனாக, சுதந்திரமானவனாக, நித்யமாக தன்னோடு இருக்க விரும்புகிறார். ஆனால், அவனில் உள்ள பாவம் அவனை தேவனோடு நெருங்கவிடாமல் தடுத்து நன்மையான எதையும் சுதந்தரிக்க விடாமல், அடிமை தனத்தில் வைத்திருக்கிறது. இதனாலேயே மனிதனுக்கு இரட்சிப்பு தேவைப்படுகிறது.
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது;
James 1:17
மேற்கண்ட வசனத்தின்படி, எல்லா நன்மைகளும் தேவனால் மட்டுமே வருகிறது. இரட்சிக்கப்பட்டவன் தேவனுடன் இருப்பான். எல்லா நன்மைகளையும் அனுபவிப்பான். அவனுக்குள்ளேயும் நன்மைகள் பூக்கும். நீதிமானாக்கப்படுவான்.
ரட்சிக்கப்படாதவன், (இவ்வுலக வாழ்க்கைக்கு பிறகு) தேவனுடைய பிரசன்னத்தை விட்டு முழுமையாக நீக்கப்படுவான். அங்கே நன்மைகள் எதுவும் இருக்காது (refer James 1:17), அவனுக்குள்ளும் நன்மைகள் இருக்காது (பிசாசை போலாவான்). ஆவிக்குள்ளான மரணத்தையடைவான்.
புரிந்ததா எதனால் இரட்சிப்பு தேவை என்று. நான் கூறியது கொஞ்சமே, நிறைய இருக்கிறது.
இது ஒரு முக்கிய கேள்வி. ஆனால் இதன் பதிலைத்தான் பலரால் ஏற்கமுடியவில்லை. முதலில் ரட்சிப்புக்கு அர்த்தத்தை பார்போம். இரட்சிக்கப்படுதல் என்றால் காப்பாற்றப்படுதல், மீட்கப்படுதல் என்று அர்த்தம். சாதாரணமாக யாரையும் காப்பாற்றமாட்டோம். அழிகின்ற அல்லது அழியபோகும் ஒன்றையே காப்பாற்றமுடியும்.
(உதாரணம்: ஆற்றில் விழுந்தவனை, ஒரு வீரன் காப்பாற்றினான்)
மீட்பு என்பது, அடமானமாக அல்லது அடிமையாக உள்ளதை திருப்பும் செயல்.
(உதாரணம்: வட்டிக்கடையில் அடமானமாக இருந்த நகையை பணம் கொடுத்து மீட்டுக்கொண்டேன்.
தீவிரவாதிகளிடமிருந்து, பனைய கைதிகளை நம் அரசாங்கம் மீட்டது).
இந்த எளிய உதாரணங்களில் இருந்து, நாம் இரட்சிப்பு என்பதைப்பற்றி ஓரளவாவது புரிந்திருப்போம் என்று நம்புகிறேன்.
சரி, நாம் காப்பாற்றப்படவேண்டிய, மீட்கப்படவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோமா?
அதாவது, அழிவை நோக்கி போய்கொண்டிருக்கிரோமா? அடிமையாக அடமானமாக இருக்கிறோமா?
இந்த கேள்விகளுக்கு என் மனசாட்சி ஆம் என்றே சொல்கிறது. நீங்களும், திறந்த மனதோடு உங்களை கேட்டு பாருங்கள், நீங்கள் அழியப்போவதையும், அடிமையாய் இருப்பதையும அறிவீர்கள். மனிதகுலம் அழிவை நோக்கி போய்கொண்டிருக்கிறது, அது அடிமையாய் இருக்கிறது. இந்த அழிவிலிருந்துகாப்பாற்றப்படவேண்டும், அடிமை தனத்திலிருந்து மீட்க்கபடவேண்டும்.
பங்களிப்புக்கு நன்றி. ஒரு மார்க் கேள்விகளுக்கு சரியாக பதிலளித்துள்ளீர்கள். சில சமயம், விரிவான பதில்கள் தேவை படுகின்றன. பிசாசானவன், வாசகர் மனதில் இந்த வார்த்தைகளை திரித்து, தவறான அர்த்தம் கொள்ள செய்யக்கூடும். வேதவார்தைகளையே திரிக்கும் அவனுக்கு. நம் வார்த்தைகளை திரிப்பது கடினமல்ல.சுத்தமான சுவிசெஷமே முக்கியம். எதையும் கூட்டாமல், எதையும் குறைக்காமல்.
அருமை நண்பர் அசோக் அவர்களுக்கு, தங்கள் கேள்விகளுக்கு விவரமான பதிலை ஆயத்தம் செய்ய எண்ணி எனது ப்ரோஸரை மூடாமல் அப்படியே வைத்திருந்தேன்;ஆனால் நீங்கள் சற்று முந்திக் கொண்டீர்கள்;உங்கள் ஆரம்பமே அழகாக நேர்த்தியாக இருக்கிறது;தயவுசெய்து தொடரவும்;தேவைப்பட்டால் இணைந்து கொள்ளுகிறேன்;
தாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுடன் இன்னுமொரு கேள்வியை சேர்த்துக்கொண்டால் வேதத்தின் சிறப்பான எண்ணான ஏழு கிடைக்குமல்லவா...என்ன பண்றது அப்படியே பழகிடுத்து..!
சரி, தங்கள் கேள்விகளுக்கு ஒரே வரியில் பதிலளிக்கட்டுமா... பாத்து நல்லா மார்க் போடுங்க...ஸார்...!
ஏன் இரட்சிப்பு? கெட்டுப்போகாமலிருக்க எதிலிருந்து இரட்சிப்பு? மரணபயத்திலிருந்து எதற்காக இரட்சிப்பு? நித்தியத்துக்கு
எங்கே இரட்சிப்பு? கல்வாரியில்
எப்படி இரட்சிப்பு? பாவமற்ற இரத்தத்தால்
யாரால் இரட்சிப்பு? தேவகுமாரனால்
ஏழாவது கேள்வி... யாருக்கு இரட்சிப்பு? பாவி என்ற உணர்வுடைய எல்லோருக்கும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
பலர் நினைப்பது போல, இரட்சிப்பு என்பது நரகத்தில் இருந்து தப்பிப்பது அல்ல. பாவத்திலிருந்து இரட்சிப்பு. பாவத்திலிருந்து மீட்கப்படுதல். ஆதாமின் கீழ்படியாமையினால் மனுக்குலத்திற்கு வந்த பாவத்திலிருந்து இரட்சிப்பு. ஒருவன் இரட்சிக்கப்பட்டால், பாவத்தின் அடிமையையில்லாமல், தேவனின் பிள்ளையாய் இருக்கிறான்.
பிதா, இயேசுவை எப்படி பார்த்தாரோ, அப்படியே ரட்சிக்கப்பட்டவனையும் பார்ப்பார். அவனுடைய பாவங்கள் மறைக்கப்பட்டிருக்கும். கிறிஸ்துவின் நீதி அவன் மேல் இருக்கும் (அந்த மனிதனின் சுயநீதியல்ல). கிறிஸ்துவின் நீதி ஒருவன் மீதிருக்கும்போது அவன் நரகத்தின் பாத்திரனாய் அல்லாமல், தேவனுடைய ராஜ்யத்தின் அங்கமாகிறான்.
இது கிறிஸ்துவர்கள் மத்தியில் அதிகம் உபயோகப்படும் வார்த்தை. இதுவே கிறிஸ்துவின் பிறப்பின் தலையாய பணியாக கருதப்படுகிறது. இந்த ரட்சிப்பின் மேல், கிறிஸ்துவர்கள் காதலும், மற்ற பலர் வெறுப்பும் வைத்துள்ளனர்.
ஆனால், வெகு சிலரே ரட்சிப்பை பற்றி அறிந்துள்ளனர்.
ஏன் இரட்சிப்பு?
எதிலிருந்து இரட்சிப்பு?
எதற்க்காக இரட்சிப்பு?
எங்கே இரட்சிப்பு?
எப்படி இரட்சிப்பு?
யாரால் இரட்சிப்பு?
மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு, உண்மையில் பல கிறிஸ்துவர்களுக்கே விடை தெரியாது. மற்றவர் நிலை சொல்ல தேவையில்லை. ரட்சிப்பை பற்றிய இந்த கேள்விகளுக்கு நாமும் மற்றவரை குழப்பாமல், வேதத்திலிருந்து, மற்றவர் கற்று தெளியும்படி விளக்கம் கொடுக்கலாமே.
நல்ல விளக்கங்களையும், நிறைய இரட்சிப்பையும் எதிர் நோக்கி,