மிக்க நன்றி,நண்பரே. நாம் ஒரு சிறு பிரார்த்தனை ஏறெடுக்கலாமா..,
எங்களை அதிகமாக நேசிக்கிற பரம தகப்பனே, ஆசீர்வதிக்கப்பட்டதான இந்த நல்ல நாளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்; இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன் இவர்கள் என் துதியைச் சொல்லி வருவார்கள் என்று சொன்னீரே,நாங்கள் உமது துதியைச் சொல்ல எமது நாவையும் உம்மைக் குறித்து எழுத எங்கள் விரல்களையும் பெலப்படுத்தும்;'என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.' என்று தாவீது அரசன் சொல்கிற வண்ணமாக நாங்கள் மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நியமிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் தீரத்துடன் போராட எங்களுக்கு கிருபை தாரும்;
தமது மிகுந்த கிருபையால் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட உமது அருமை மகன் அசோக் அவர்களை உற்சாகப்படுத்தும்;அவருடைய பணித்தளத்தில் அவருக்கு உயர்வைக் கட்டளையிடுவீராக; 'நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.' என்று சொன்னீரே, உம்முடைய மகனுக்கு சமயத்துக்கு ஏற்ற ஆலோசனைகளைத் தந்து உயர்த்துவீராக;
கடந்த பல மாதங்களாக எங்களோடு எழுத்தின் மூலமாகப் போராடிக் கொண்டிருக்கும் திருச்சிக்காரன் என்பவருக்கு தமது வெளிச்சத்தை அனுப்பும்;சாத்தானானவன் அவருக்கு முன்பாக வைத்துள்ள மாயையான மார்க்கத்தைக் குறித்த பயங்கரத்தை அவருக்கு தரிசனம் மூலமாகவாவது சொப்பனத்தின் மூலமாகவாவது தெரியப்படுத்தும்;இன்னும் தம்மையும் தமது அடியவர்களையும் காரணமில்லாமல் தூஷித்து எழுதிவரும் தமிழ் ஹிந்து தளத்துக்காக உம்மிடத்தில் வருகிறோம்;அந்த குழுவிலுள்ள ஒவ்வொரு இளைஞரையும் தொடுவீராக;அவர்கள் மனதிலுள்ள ஐயங்களையெல்லாம் நீக்கி மெய் ஜோதியான உம்மையும் தமது நேசகுமாரரான மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசுகிறித்துவையும் அறிகிற அறிவினால் அவர்கள் மீட்கப்பட விண்ணப்பிக்கிறோம்;
இந்த இணைய தள வசதிகளை நாங்கள் சரியான ஞானத்துடன் பயன்படுத்தி அநேகரை உமக்காக விரைந்து ஆதாயப்படுத்த எங்களுக்கு உதவிசெய்யும்;
நண்பரே, திருச்சிக்காரன் என்பவர் நமக்கு அத்தனை முக்கியமான - விவாதத்துக்குரிய முக்கிய நபரல்ல;ஆனால் அவரிடம் வரும் வாசகர்களிடம் நம்முடைய கருத்துக்கள் சென்று சேர பாலமாக இருக்கிறார்;
இதுவரை எந்த ஒரு வாதத்திலும் நீங்களோ நானோ தோற்றுப்போனதாக நான் நினைக்கவில்லை; திருச்சிக்காரனை அவருடைய ஆட்களே ஒரு பொருட்டாக மதிப்பதில்லை; இந்நிலையில் நாமும் அவரை கைவிட்டு விட்டால் அவர் பேசுவதற்கே ஆளில்லாமல் அல்லாடுவார்,பாருங்கள்;
ஒரு நேர்த்தியான கட்டுரையைப் படைக்கக் கூடத் தெரியாத ஆள் சர்வ வல்லவரின் பரிசுத்த எழுத்துக்களை துணிகரமாக இகழ்ந்தால் அவர் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா என்ன..வேடிக்கை பார்க்கத்தானே போகிறோம்;
நீங்கள் சோர்ந்துபோகாமல் தங்களது படைப்புகளையும் ஆக்கப்பூர்வமான அனுபவங்களையும் விரைந்து எழுதத் துவங்குங்கள்;தினமும் ஒரு தியானம் போன்ற பகுதிகளையோ விசேஷித்த ஜெபக் குறிப்புகளையோ பகிர்ந்து கொள்ளலாம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நம் ஆண்டவர், பாவிகள் எனப்பட்டவர்களுடன் எப்போதுமே அன்புடன் இருந்தார். ஆனால், பரிசேயர் போன்ற Hypocraites உடன், எப்போதும் விலகியே இருந்தார். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் கடுமையான பதில்களையே தந்தார். ஏனென்றால், அவர்கள் கேள்வியின் நோக்கம், உண்மையை அறிந்துகொள்வதர்க்கல்ல, குற்றம் கண்டுபிடிக்கவே.
உங்களுக்கே தெரியும், திருச்சிக்காரன் எந்த வகையறா என்று. எதற்க்கெடுத்தாலும் ஆதாரம் (???) கேட்கும் அவர், தன் தந்தை உண்மையிலேயே தன் தந்தைதானா என்றும் சோதனை செய்து ஆதாரம் வைத்துள்ளதாக கூறி, ஒரு மகன் தன் தாயின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையே கொச்சை படுத்தியவர்.
சமரசம், கலாச்சாரத்தோடு சேர்ந்துவாழ்தல், விட்டுக்கொடுத்தல் போன்றவை அவசியம் என்று இவர் கூறுகிறார். இதையே ஏசுவும் கூறுவதாக புருடா விடுகிறார். வேத வசனங்களில் Cherry pick செய்கிறார். தனக்கு வசதியானவற்றை எடுத்துக்கொண்டு, மற்றதை பொய் என்கிறார். வேதத்தை எழுதிய யோவான் போன்றவர்களை, தங்கள் சொந்த கருத்தை எழுதியவர்கள் என்று குற்றப்படுத்துகிறார். இவர்கள் எழுதாமல் திருச்சிக்காரனுக்கு இயேசுவை பற்றி எப்படி தெரியும்? கிறிஸ்துவர்கள் தங்கள் வேதத்தை பின்பற்றாமல், இவர் சொல்வதை பின்பற்றவேண்டுமாம். விக்ரக ஆராதனைகாரர்களோடு சமரசம் செய்து விட்டுக்கொடுத்து போகவேண்டுமாம். இந்த திருச்சிக்காரன் தாய்லாந்து போன்ற விபச்சாரத்தை ஆதரிக்கும் கலாசாரம் உள்ள நாட்டில் வசித்தால், அவர்களோடு சமரசம் செய்து, விட்டுகொடுத்து வாழ்வாரா? சோதோம், கொமாரா போன்ற பட்டணங்களில் வசித்தால், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவாரா?
மேலும், இந்துத்துவதிர்க்கும், பகுத்தறிவிற்கும் புதிதாக ஒரு விளக்கம் கொடுக்கிறார். சர்வவல்ல தேவனை ஒரு அறிவியல் சோதனை கூடாரத்தில் அடைக்கபார்கிறார். மேலும் இறைவனை ஒரு அலாவுதீன் பூதம் போல நாம் சொல்வதை செய்யும் அடிமையாக நினைக்கிறார்.
திருச்சிக்காரனின் எழுத்துக்களை பார்க்கும்போது, வாழ்க்கையில் உருப்படியாக எதுவும் செய்யாமல், தோல்விகளால் துவண்டுபோன தாழ்வுமனப்பான்மைகாரர் என்றே தொன்றுகிறது. இப்படி தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள முனைகிறார். ஆனால், தன்னுடைய முட்டாள் தனமான கருத்துக்களை வைத்து மற்றவர் தன்னை கேலி பேச கூடாது என்ற காரணத்திற்க்காக, தன் பெயரை அவர் வெளியிடவில்லை. ஆனால் தான் புகழை விரும்பாதவன், அதனால்தான் தன் பெயரைக்கூட வெளியிடவில்லை என்று கூறிகொள்கிறார்.
பொதுவாக, பொருட்களை சமுதாயத்திற்கு (மனமுவந்து) தானமாக கொடுப்பவர்கள், தங்கள் பெயரை வெளியிடமாட்டார்கள். ஆனால், சமுதாயத்திற்கு கருத்துக்களை சொல்பவர்கள், தங்களை முழுவதுமாக வெளிப்படுத்திக்கொள்ளவேண்டும். தான் சொல்லும் கருத்தை தான் வாழ்ந்து காட்டினால்தான் அந்து கருத்து வலிமை பெரும், மக்கள் அதை ஏற்பார்கள். வெறுமனே ஊருக்கு உபதேசம் செய்பவர்களை யாரும் மதிப்பதில்லை, அப்படியே மதித்தாலும் அவர்கள் கருத்து மற்றவர் வாழ்வில் தாக்கம் செய்வதில்லை. பெரியார் தன் வாழ்வை வெட்டவெளியில் வைத்ததினால்தான், அவர் விமர்சிக்கப்பட்டாலும், அவருடைய கருத்துக்கள் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை உண்டாக்கி உள்ளது.
வாழ்ந்து காட்டப்படாத ஒரு கருத்து, விவாதத்திற்கு வேண்டுமானால் நலமாய் இருக்கும். கீதை போன்றவை, வெறும் உபதேசமே. அது வாழ்ந்து காட்டப்படவில்லை. ஆனால், கிறிஸ்துவம், வாழ்ந்து காட்டப்பட்ட ஒரு கருத்து. நிரூபிக்கப்பட்டது, உண்மையானது. கிறிஸ்துவத்திற்கு எதிராக பேசுபவன் சாத்தானால் பேசுகிறான். திருச்சிக்காரனும் அப்படியே.