Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தசமபாகத்தைக் காணிக்கையாக‌ப் பெறுவது தவறா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
தசமபாகத்தைக் காணிக்கையாக‌ப் பெறுவது தவறா?
Permalink  
 


நன்றி நண்பரே,
     என் ஆதங்கத்தை நீங்கள் புரிந்து கொண்டதற்காக நான் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். முதிர்ச்சி அடையாத கிறிஸ்துவ பிள்ளைகள் இத்தகைய விவாதங்களை பார்த்து, இடறல் அடைந்து விட கூடாது என்பதே என் எண்ணம். கனி கொடுக்கவேண்டும் என்ற ஆவல் இங்கு எழுதும் அனவருக்கும் இருப்பதை பார்கிறேன். கிறிஸ்துவில் நாம் நிலைத்திருந்தால், கனி கொடுப்பது இயற்கையாக வரும். அதேபோல், கட்டளைகளை நம் முயற்ச்சியால் கைகொள்ள முடியாது. ஆனால், கிறிஸ்துவில் நிலைத்திருந்தால், கட்டளைகள் நம்மில் நிறைவேறும் (கிறிஸ்துவில் நிறைவேறியதை போல). அதனால் கட்டளைகளை நோக்கி பார்க்காமல், கிறிஸ்துவை மட்டும் பார்ப்போம்.
நன்றி,
அசோக்


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ஆதங்கத்துடன் கூடிய நல்லதொரு கருத்துக்காக நன்றி,நண்பரே;இந்த அயல்வீட்டுக்காரர்களுக்கேற்ற பதிலைத் தருவேன்;அப்போது தங்கள் ஆதங்கம் குறைந்து ஆறுதல் ஏற்படும்;

வீட்டின் வெளிப்புற அழகை இரசிப்பவன் வீட்டினுள் இருக்கும் பாதுகாப்பையும் அரவணைப்பையும் பராமரிப்பையும் அறியமுடியாது;அதுபோலவே தேவனுடைய பிரமாணங்களும்..!

விரைவில் வருகிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

 நண்பர்களே,
    கிறிஸ்த்துவின்  ரத்தத்தை நீங்கள் ஏன் அசிங்கப்படுத்துகிரீர்கள்? நீங்கள் இன்னும் ஏன் உங்கள் கிரியைகளை நம்பி இருக்கிறீர்கள்? கிருபை மூலம் ரட்சிப்பென்றால், எதற்கு இதை செய்யவேண்டும், அதை செய்யவேண்டும் என்ற விவாதங்கள்? உங்கள் கிரியைகளை நோக்கி பார்காதிருங்கள் (அவை நன்மையாய் இருந்தாலும், தீமையாய் இருந்தாலும்). தேவ கிருபையை மாத்திரம் சார்ந்து கொள்ளுங்கள். கிறிஸ்துவை சார்ந்து கொள்ளுங்கள், அவர் கிரியைகள் உங்களை தேவராஜ்யத்தை சுதந்தரிக்க செய்யும்.
 
நன்றி,
அசோக்


__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
Permalink  
 

சகோதரர் சில்சாம் அவர்களே ஒரு வேதவசனம் சம்பந்தப்பட்ட முடிவுக்கு வரும்முன் அவ்வசனம் சம்பந்தப்பட்ட எல்லா வசனங்களையும் அலசி ஆராய்ந்து பின்னர் முடிவெடுப்பதுதான் சரியான முடிவாக அமையும்.  
 
உபாகமம் 7:11 ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்வாயாக.

என்று ஆரம்பித்து

வெளி 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

என்பது வரையில் நூற்றுக்கதிகமான வசனங்களில் கற்பனையை கட்டளையை கைக்கொள்ளவேண்டும் என்று வேதம் போதிக்கும் பட்சத்தில் ஒருசில இடங்களில் நியாயபிரமாணம் முடிந்துவிட்டது என்று எழுதப்பட்டு இருக்கிறது  என்றால் அது எதை குறிக்கிறது அதன்  உண்மை பொருள் என்னவென்பதை ஆராயாமல் நாம் ஒரு முடிவுக்கு வரக்கூடாது.  
 
தாங்கள் குறிப்பிட்ட சம்பவமும் உரையாடல்களும் முதலில் விருத்தசேதனத்தில் ஆரம்பித்து பின்னர் மோசேயின் நியாயபிரமாணம் கைகொள்ளுவது பற்றிய சம்பாஷனை வருகிறது.    
 
இங்கு தாங்கள்
Act 15:10  இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்?
Act 15:29  அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது;

இங்கு பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தமாட்டோம் என்று சொல்வது தேவனின் கட்டளைகள் கற்பனைகளை குறிப்பது அல்ல ஏனெனில்
 
I யோவான் 5:3 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.

என்று
வேதமே போதிக்கிறது! அத்தோடு கற்பனைகளை எழுதிகொடுத்த கர்த்தர்  
 
உபாகமம் 30: 15. இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்
11. நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல.
14
நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.

என்றும் கூறியிருக்கிறார்! எனவே அவர்கள் பாரமாய் இருக்கும் நுகம் என்று குறிப்பிட்டது நிச்சயம் கட்டளை கற்பனைகளை அல்ல என்பதை அவதானித்து அறியவேண்டும்.
 
விருத்தசேதனம்  மற்றும் பலியிடுதல் போன்ற சடங்காச்சார செயல்களே மிகுந்த பாரம் உள்ளதாகவும், செய்வதற்கு பண செலவு மற்றும் கடினமான காரியமாகவும் இருந்தது அதையே அவர்கள் நிராகரித்தனர். இவைகள் கர்த்தரே  ஏற்கெனவே சில வசனங்களில்  நிராகரித்து விட்டிருக்கிறார். 
 
சரி தாங்கள் சொல்வதுபோல் மொத்த நியாய பிரமாணமும் முடிந்துவிட்டது என்று எடுத்துகொண்டால், கீழ்கண்ட காரியங்கள் தவறு என்பதையும் நியாயபிரமானம்தானே சொல்கிறது?   
 
Act 15:28  எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.. 

இந்த வசனம் குறிப்பிட்டுள்ள காரியத்துக்கு மட்டும் விலகியிருந்துவிட்டு நியாயபிரமாணம் சொல்லும் பிற கற்ப்பனைகளாகிய  கொலை செய்வதோ அல்லது திருடுவதோ அல்லது ஆண் புணர்ச்சியில் ஈடுபடுவதோ தேவன் பார்வையில் பாவமில்லை என்று கருதுகிறீர்களா?
 
நிச்சயம் முடியாது! காரணம் வேறொரு வசனம் இவ்வாறு சொல்கிறது
 
I கொரிந்தியர் 6:9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
I கொரிந்தியர் 6:10
திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
கலாத்தியர் 5:21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை 
 
இந்த பாவங்கள் எல்லாமே நியாயபிரமாணத்தில் சொல்லப்பட்டவைகளே. நியாயபிரமாணம் முடிந்துவிட்டது என்று சொல்பவர்கள் மீண்டும் ஏன் இதுபோன்று அதில் உள்ள கற்பனைகளை எடுத்து போதிக்கவேண்டும்? இவைகளை எல்லாம் நாம் ஆராயும்போது நிச்சயம் நியாயப்பிரமாணம் என்பது நான்கு பகுதிகளை உள்ளடக்கியது என்பதை அறிய முடியும்:
 
1. ஆசாரிப்பு கூடாரத்துக்கடுத்த கற்பனைகள் 
2. பலியிடுதல் மற்றும் இரத்தம் சிந்துதல்  சம்பந்தமான கற்பனைகள்   
3. தேவனுடய கட்டளைகள்    
4. தேவனுடய நீதி நியாயங்கள்  
 
இதில் முதல் முதல் பகுதி இயேசு மரித்தபோது  முடிவுற்று தேவாலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்துக்கான திரை கிழிந்து தேவனை எங்கும் தொழுதுகொள்ளும் நிலை ஏற்ப்பட்டது  இரண்டாம் பகுதியாகிய பலிசெலுத்துதல் இயேசுவின் பலி மற்றும் இரத்தத்தால் முடிவுக்கு வந்தது.  ஆனால் மற்ற இரண்டு பகுதியாகிய கட்டளை மற்றும் நீதி நியாயங்கள் ஒருநாளும் முடியவும் செய்யாது! அதை முடிக்கவும் முடியாது!
 
சங்கீதம் 119:160 உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்
 
இவ்வாறு நித்தியமான  நீதியும் நியாயமும் எப்படி முடிவுக்கு வரும்?  வானமும் பூமியும் உள்ளவரை அதின் எந்த உறுப்பும் ஒளிந்துபோகாது என்பதையே இயேசுவும் உறுதிபடுத்தியுள்ளார் அதை தொடர்ந்து பவுலும் அவரின் கற்பனை நீதி நியாயங்களில் அனேக காரியங்களை குறித்து போதித்திருக்கிறார் மற்ற அப்போஸ்த்தலர்களும் கற்பனையை கைகொள்வது  பற்றி போதித்திருக்கின்ற்றனர்  
 
I கொரிந்தியர் 7:19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதன மில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.
 
(இவ்வாறு தெளிவாக சொல்லியிருக்கும் பவுல், நியாயபிரமாணம் முடிந்துவிட்டது என்று சொல்லியிருப்பதால், அவர்  "நியாயபிரமாணம்"  என்று குறிப்பிடுவது  பலி மற்றும் சடங்காச்சாரங்களை பற்றியே சொன்னார் என்பதை சுலபமாக அறிய முடியும்)

I யோவான் 5:2 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்.
யோவான் 2:4
அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

சகோதரர்களே நியாயபிரமாணம் சொல்லும் பொய் சொல்லாமல் இருப்பது திருடாமல்/ கொலை 
செய்யாமல்  விபச்சாரம் /அக்கிரமம்/ ஆண்புனர்ச்சி வஞ்சம்/  வன்கண்/ பொறாமை/ வேசித்தனம்/ விக்கிரக ஆராதனை /தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவது போன்ற அனைத்து காரியங்களும் புதிய ஏற்பாட்டில் ஆங்காங்கே இயேசு மூலமோ அல்லது பவுல் மூலமோ தடை செய்யபட்டுள்ள பாவம்  என்பது அனைவரும் அறிந்த ஓன்று! இவைஎல்லாம் எல்லோருக்கும் பயனுள்ள பொதுவான நல்ல காரியங்களே அதுபோல் தசமபாகம் எனபதுகூட தேவனின் ஊழியர்கள் மற்றும் விதவைகள் அனாதைகள் போன்றவர்கள் வாழ்வதற்கு ஆதாரமாகவே கொடுக்கபட்டுள்ளது.
 
எனவே இங்கு எனது நிலை என்னவென்றால், இவைகளை எல்லாம் செய்யாமல் இருப்பது எனக்கு மிகுந்த  பாரமானது என்று ஒருவர் கருதினால் அவர் நிச்சயம் தேவனுடய ஆவியில் நடத்தப்பட மாட்டார் என்றே நான் கருதுகிறேன்! ஏனெனில் அவரவர் கனியினால்தான் அவரவரை அறிய முடியும். மற்றும் நீதி நியாயமும் நேர்மையான நிலையும் உத்தமமும் போயயனாகிய பிசாசுக்குத்தான் மிகவும் கசப்பாக இருக்கும்!

முடிவாக: 
 
எது கைகொள்ளப்பட வேண்டிய  அவசியமில்லை என்று தேவன் கருதினாரோ அதையெல்லாம் அவரே முடித்து  இதற்க்கு பதில் இப்படி செய்யுங்கள் என்று மாற்றி கொடுத்துவிட்டார். 
 
உதாரணமாக பலியிடுங்கள் என்று சொன்னவர் "பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்  என்றும். நுனித்தோலை விருத்தசேதனம் பண்ணு என்று சொன்னவர் மாமிசத்தன் நுனித்தோல் அல்ல இருதயத்தின் நுனித்தோல் என்றும் இந்த ஆலயத்தில்தான் தொழுதுகொள்ளவேண்டும் என்று சொன்னவர் வானம் எனக்கு சிங்காசனம் பூமி எனக்கு பாதபடி  எங்கும் பிதாவை தொழும் காலம் வந்திருக்கிறது என்றும் மாற்றியிருக்கிறார்.
 
அவரால் மாற்றப்படாத கற்பனைகள் நீதிநியாயங்கள்  எல்லாமே நிச்சயம் கைகொள்ளப்பட வேண்டும்! அவைகளை  நிர்விசாரமாக ஒதுக்கி பட்சபாதம் பண்ணி எஸ்கேப்ஆக நினைப்பவர்களுக்கு தேவனின் எச்சரிப்பு இதோ:
 
1.  உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.
2. நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. 
  என்பதே

SUNDAR
http://www.lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=35525017


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// அதாவது கர்த்தர் குறிப்பிடும் அந்த மூன்றாம் வருடம் சரியாக கணக்கு பார்த்து தசமபாகத்தை செலுத்துகிறேன். மற்ற வருடங்களில் எந்த கணக்கும் இன்றி இஸ்டம்போல்  செய்கிறேன்...இதில் தவறு எதுவும் இருந்தால் சுட்டி காட்டவும்!  திருத்தி கொள்கிறேன். //
http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=35525017


குறிக்கிடுவதற்க்கு மன்னிக்கவும்;கீழ்க்காணும் வேதப்பகுதியை நிதானமாக வாசிக்கவும்.

Act 15:1  சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம் பண்ணினார்கள்.

Act 15:2  அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்தவேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.

Act 15:3  அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்.

Act 15:4  அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபையாராலும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையெல்லாம் அறிவித்தார்கள்.

Act 15:5  அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம் பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள்.

Act 15:6  அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக் காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.

Act 15:7  மிகுந்த தர்க்கம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார்.

Act 15:8  இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்த ஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக்குறித்துச் சாட்சிகொடுத்தார்;

Act 15:9  விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.

Act 15:10  இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்?

Act 15:11  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.

Act 15:12  அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக் கேட்டார்கள்.

Act 15:13  அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள்.

Act 15:14  தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே.

Act 15:15  அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது.

Act 15:16  எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு,

Act 15:17  நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

Act 15:18  உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது.

Act 15:19  ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும்,

Act 15:20  விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.

Act 15:21  மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்.

Act 15:22  அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக் கண்டது. அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே.

Act 15:23  இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்:

Act 15:24  எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடைய வேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,

Act 15:25  நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட,

Act 15:26  எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக் கண்டது.

Act 15:27  அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.

Act 15:28  எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.

Act 15:29  அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.

மேற்காணும் வேதப்பகுதியின் அடிப்படையிலேயே கட்டளைகளும் கற்பனைகளும் பிரமாணங்களும் சடங்காச்சாரங்களும் ஒழிக்கப்பட்டது; அதன் ஒருபகுதியே தசமபாகக் கட்டளை;கிறித்துவின் மரணத்துக்குப் பிறகு பயம் என்பதே இல்லை;(1.யோவான்.4:18) அப்படியானால் தசமபாகம் என்பது இல்லையா? ஆம்,அது கட்டளையாக இல்லை;அன்பினால் நிறைவேற்றவேண்டும்;

தசமபாகம் எனும் சொல்லின் பொருளை நூறில் பத்து அல்லது பத்தில் ஒன்று என்று பொருளாகும்;அதன்படி நம்முடைய வருமானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை இறைப்பணிக்காகத் தருவதும் ஏழை எளிய மக்களின் குறைவில் உதவி செய்வதும் நம்மை மென்மையானவர்களாகவும் இறைவனுக்கு அருகிலும் வைத்துக்கொள்ள உதவும்;ஆவியில் கடினப்பட்டோர் யாருக்கும் எதுவும் செய்யமாட்டார்கள்;அரசாங்கத்தையும் வரி ஏய்ப்பு செய்வார்கள்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

anbu57 wrote:
//தேவனுடைய ஆலயத்தில் தசமபாகம் கொடுக்கச் சொல்வதுதான் தேவனின் போதனை.

மனுஷருடைய ஆலயத்தில் தசமபாகம் கொடுக்கச் சொல்வது மனுஷரின் போதனை.//

chillsam wrote:
//இதுவும் சத்தியத்துக்கு விரோதமானதுதான்;//

arputham wrote:
//இதோ அன்பு அவர்களின் போதனை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பித்து விட்டது.//

colvin wrote:
//சகோ. அன்பு அவர்களே சகோ. அற்புதம் உங்கள் தவறை சுட்டிக் காட்டியுள்ளார். ... மனிதருடைய ஆலயம், கடவுளுடைய ஆலயம் என ஏன் பிரித்து பேசுகிறீர்கள் என விளங்கவில்லை.//


இவ்விமர்சனங்கள் எல்லாவற்றிற்கும் சில்சாம் அழகான பதில் தந்துள்ளார் அவரது யெளவன ஜனம் தளத்தில்:

//வேதத்தில் நேரடியாகச் சொல்லப்பட்டதை இல்லையென்று சொல்பவன்;
வேதத்தில் நேரடியாகச் சொல்லப்படாததை இருக்கிறதென்று சொல்பவன்
-ஆகிய இவ்விருவருமே கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.//


வேதத்தில் நேரடியாகச் சொல்லப்பட்டவை:

எருசலேம் தேவாலயத்தைக் குறித்து தேவன் நேரடியாகச் சொன்னது:


1 ராஜாக்கள் 9:3,6,7 கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொள்வீர்களாகில், நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்களை வைக்காதபடிக்கு நிர்மூலமாக்கி, என் நாமம் விளங்க நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் சகல ஜனங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் இருப்பார்கள்.

அதே எருசலேம் தேவாலயத்தைக் குறித்து பின்னொரு நாளில் எரேமியா மூலம் தேவன் சொன்னது:

எரேமியா 7:4 கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள்.

எருசலேம் தேவாலயத்துக்கே இக்கதி என்றால் பிற ஆலயங்களின் கதி என்னாகும்?

எருசலேம் தேவாலயத்துக்கு அடுத்தபடியாக தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அவருடைய ஆலயம்:


1 கொரி. 3:16,17 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.

2 கொரி. 6:16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.


பவுலைக் காட்டிலும் அதிமேதாவிகள்தான், வேதாகமம் சொல்லாத ஆலயங்களையெல்லாம் தேவனுடைய ஆலயம் என்று சொல்லிக் கொள்வார்கள்.

மனுஷரின் ஆலயம் என நான் சொல்வதை வினோதமாகப் பார்க்கிற அதிமேதாவிகளே! ஏற்கனவே நான் எடுத்துக்காட்டிய வசனங்களை மீண்டும் தருகிறேன், படியுங்கள்.


மத்தேயு 4:23 பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, .....

மத்தேயு 10:17 அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.

மத்தேயு 23:34 சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்;


எருசலேம் தேவாலயத்தைத் தவிர மற்ற எந்தவொரு ஆலயத்தையும் மனுஷரின் ஆலயம் என வேதாகமம் கூறியிருக்க, எந்த வசனத்தின் அடிப்படையில் அதுபோன்றதான தற்கால ஆலயங்களை தேவனுடைய ஆலயம் எனச் சொல்கிறீர்கள் எனபதை வசனஆதாரத்துடன் சொன்னால் நலமாயிருக்கும்.
//

அன்பு57 அவர்களின் ஆலயம் குறித்ததான கருத்து சரியானதுதான்;ஆலயம் எனும் வார்த்தையின் பொருளானது வேதத்தின் அடிப்படையில் ஏசாயா தீர்க்கன் மூலமாக மிகவும் தெளிவாக வெளிப்படுகிறது;" நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்."(ஏசாயா.Isa 57:15)

இந்த வசனத்தின் அடிப்படையில் ஆலயம் என்பது இரு தன்மைகளைக் கொண்டதாக விளங்குகிறது;ஒன்று உன்னதத்திலும் மற்றொன்று நம்முடைய உள்ளத்திலும்; இதன்படி தேவமகிமையை அணிந்தோர் ஒரே இடத்தில் கூடினால் அது எத்தனை மேன்மையாக இருக்கும்... அதுவே கிறித்தவ திருச்சபையின் அலங்காரம்...மற்றபடி ஆலயம் என்பது வேதவாக்கியங்களின்படி உன்னதத்தில் மட்டுமே உள்ளது;

ஆனால் "சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். " (எபிரெயர்.Heb 10:25 ) என்று அப்போஸ்தலன் கூறுகிறார்;

சபை என்பது யூத ஆலயத்தைக் காட்டிலும் மேன்மையுள்ளதாக இருக்கிறது;ஏனெனில் இங்கே சாவாமையுள்ள ஒரே பிரதான ஆசாரியர் நமக்குண்டு;எனவே நாம் ஆலய பக்தர்களாக இல்லாமல் தேவ பிள்ளைகளாக இருந்து சபையின் அங்கங்களாக இருக்கிறோம்;இங்கே நம்மை நடத்தும் மேய்ப்பர்கள் உண்டு,மூப்பர்கள் உண்டு,(அவர்கள் மீது பிராதும் உண்டு..!);இந்த நடைமுறைகளைக் குறித்து 1.பேதுரு.5 மற்றும் 2.தீமோத்தேயு வில் தெளிவாக அறியலாம்; இரத்தினசுருக்கமாக, அப்போஸ்தலர்.20:28 ல் "ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். " என்று பவுலடிகள் அறிவுறுத்துகிறார்;

ஆலயமா,சபையா என்று வேண்டுமானால் விவாதிக்கலாம்; ஆலயமே இல்லை என்றால் அடிவிழும் என்னிடமல்ல, தேவனிடம்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 


எந்த ஒரு காரியத்தையும் எதிர்ப்பது மிகவும் எளிதாக இருக்கிறது; ஆனாலும் அதனை விளக்குவது தனிப்பட்ட திறமையாகும்; இதனால் எதிர்தரப்பை மட்டுமல்ல, பார்வையாளரையும் கவரமுடியும்; ஆனால் பரிதாபத்துக்குரிய ஒரு கொடுமை என்னவென்றால் அந்த கலையானது துருபதேசக்காரருக்கே வந்து வாய்க்கிறது; இந்த திரியில் மாத்திரமல்ல, எதிலுமே வாதம் வேண்டாம் என்று நான் முடிவுசெய்து முழுதாக பத்து நாள் கூட என்னால் இருக்கமுடியவில்லை; பிரசவ வைராக்கியம் போல இதோ மீண்டும்...

உள்ளே நுழையக் காரணம், தவறான ஒரு கருத்து உண்மை போன்ற தோற்றத்தைப் பெற்றுவிடக்கூடாது என்பதுதான்;

நண்பர் (?) விஜய் அவர்களின் தசமபாக வழக்கு நாடகத்தை வரிக்கு வரி விமர்சித்து ஒன்றுமில்லாமல் செய்ய என்னால் முடியும்; ஆனால் அது என்னுடைய யுத்தமாக மட்டுமே இருக்கும்; அந்த நாடகத்தின் நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதியுமல்ல, அந்த ஊழியர் முழுவதும் நிருபிக்கப்பட்ட குற்றவாளியும‌ல்ல; ஏனெனில் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணையோ குறுக்கு விசாரணையோ செய்யப்படவில்லை; இதுபோன்ற ஒவ்வொரு பொருளுக்கும் நாடகங்களை எழுத எம்மாலும் முடியும்;

காரியம் இப்படி போய்க்கொண்டிருக்க‌...இடையில் நுழைந்த அன்பு57 அவர்கள் புதிய சர்ச்சைகளைத் தூவியிருக்கிறார்; நான் மனதாரச் சொல்லுகிறேன், எதிர்த்து எழுதவேண்டுமென்பதற்காக இந்த வாதத்தை நடத்தவில்லை என்பதை ஆவியானவரே (அவருடைய் செயல்பாட்டை நம்புவோர்... ) ஒவ்வொருவருக்கும் புரியவைப்பார்;

விஜய் எழுதியது முழுவதுமே சத்தியத்துக்கு விரோதமானது என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறேன்;அதிலிருந்து நான் பின்வாங்கவில்லை; அவரும் அதனை நியாயப்படுத்தி எதையும் நிரூபிக்கவில்லை; சமரசம் செய்து கொண்டு விலகியிருக்கிறோம், சில நண்பர்கள் விஜய் அவர்களை நேரடியாகக் கண்டிக்காவிட்டாலும் மறைமுகமாக அவருக்கு பதில் சொல்லியிருக்கிறார்கள்; அதனை அவர் கண்டுகொண்டதைப் போலத் தெரியவில்லை; எப்படியோ நம்மை நேரடியாகத் தாக்கி அவமானப்படுத்தாமலிருந்தால் போதுமே என்று ஒதுங்கிக் கொண்டார், நானோ ஞானமில்லாமல் சிக்கிக்கொண்டேன், போகட்டும்;

தற்போதைய நிலையில் விஜய் அவர்கள் வெற்றி பெறுகிறார்; ஆம்,அவர் மீண்டும் மீண்டும் தசமபாகம் குறித்த விவாதத்துக்கு அழைத்தார்;இதோ வந்துவிட்டேன்;

அன்பு57 அவர்களின் கருத்துக்களின் முத்தாய்ப்பான வரிகளான‌

// தேவனுடைய ஆலயத்தில் தசமபாகம் கொடுக்கச் சொல்வதுதான் தேவனின் போதனை.
மனுஷருடைய ஆலயத்தில் தசமபாகம் கொடுக்கச் சொல்வது மனுஷரின் போதனை. //

இதுவும் சத்தியத்துக்கு விரோதமானதுதான்; ஐயா, நீங்கள் பூரண சற்குணராயிருக்க விரும்புகிறவர்கள், இப்படி நாணயத்தின் ஒருபக்கத்தை மட்டுமே பார்க்கும் ஒற்றைக் கண்ணனாக இருக்கலாமா? வேதம் இருபுறமும் கருக்கான எந்த பட்டயத்திலும் கருக்கான‌தல்லவா?

// Mat 5:20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். //

இந்த வசனம் யூதருக்காகச் சொன்னதா, புறசாதியினருக்குச் சொன்னதா?
யூதருக்காகச் சொன்னதோ அவர்களுடைய கீழ்ப்படியாமையினால் நழுவி புறசாதியினரான ஒட்டுகிளைகளுக்கு வந்துசேர்ந்த பொக்கிஷமோ ஆண்டவருடைய கட்டளையின் உட்பொருள் என்ன‌?

அவர்கள் என்னவெல்லாம் செய்து தேவநீதியினையடைய முயற்சித்தார்களோ அதைவிட அதிகமாக நாமும் செய்யவேண்டுமென்பது ஆண்டவர் சொல்வது சரிதானே?

அதில் ஒன்றாக தசமபாகம் வராதா? நான் வாங்கக் கேட்பதாக நினைத்து வாதிடுவதாக எண்ணவேண்டாம், கொடுக்க நினைப்பவனுடைய மனநிலையிலிருந்து பாருங்கள்;

என்னமோ தேவ ஆலயம், மனுஷ ஆலயம் என்று பூதம் கிளப்புகிறீர்களே...நான் கேட்கிறேன்,
நீங்கள் ஆதாமின் வழிவந்தவரா,ஆபிரகாமின் வழி நிற்பவரா, யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது உம்மைக் கட்டுபடுத்தாது எனில் அவர் தம் வேதத்தை மட்டும் ஏன் வைத்திருக்கவேண்டும்? ஏன் புதிய ஏற்பாட்டை மட்டும் வைத்திருக்க உமக்கு என்ன உரிமை, நிருபங்களெல்லாம் யாருக்கோ எழுதப்பட்டது, பொதுவான நிருபங்களையும் போனால் போகிறதென்று நான்கு சுவிசேஷங்களையும் புரியும் வரைக்கும் கடைசி புத்தகத்தையும் வைத்துக்கொள்ளுங்கள்; ஏதோ ஒன்றை எதிர்க்கப்போய் குளவிக்கூட்டில் கைவைத்தவனைப்போல பரிசுத்த வேதாகமத்தின் மீதான நம்முடைய உரிமையையே விலைபேசுகிறீர்கள்;

தசமபாகம் என்பது தேசத்துக்கான வரியைப் போன்றது என்று ஸ்டான்லி போன்ற வேத வல்லுநர்கள் சொல்லுகிறார்கள்; அவரைக் குறித்து கொஞ்சம் சொல்லவேண்டுமானால் அவரும் கூட சமரசமாக-‌ சர்ச்சைக்கிடமில்லாத வகையிலேயே இதுபோன்ற கேள்விகளை அணுகுகிறார்; அவருடைய "தெளிவான பதில்கள்" புத்தகத்தை வாசித்தோருக்கு இது தெரியும்; ஆனால் நான் அதுபோன்ற பதில்களில் திருப்தி அடைபவனல்ல; எனக்குத் தேவையானது , உண்மையிலேயே "தெளிவான பதில்"களாகும்;

தேசத்துக்கு வரிசெலுத்துவது போலவே தேவாலயத்துக்கும் வரி செலுத்தினர்; இந்த நேரத்தில் "இந்து அறநிலையத் துறை " அல்லது "வக்பு வாரியம் " போன்றதொரு சுயாதீன அமைப்பு வந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசிக்கிறேன்; நான் இதனை அடிக்கடி யோசிப்பதுண்டு; கர்த்தருடைய பெரிதான கிருபையால் "அம்மா " ஆட்சி வந்தால் அது நிறைவேறிவிடும்;

ஒரு ஊழியமோ, ஊழியரோ, ஸ்தாபனமோ ஊழல் செய்கிறது என்பதற்காக தசமபாகம் என்பதையே வேதம் போதிக்கவில்லை என்பீர்களாகில் இன்னும் வேதம் போதிக்காமலே நாம் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் கத்தோலிக்க வழிவந்த சடங்குகளைக் குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கும்;

ஈகையைக் குறித்து பழைய ஏற்பாட்டைவிட புதிய ஏற்பாடு அதிகமாகப் போதிக்கிறது என்பதே உண்மை; இந்த நிலையை அனைவரும் ஒப்புக்கொள்வர்; அது தசமபாகத்தைக் குறித்தல்ல, "முழுவதையும்" என்று போதிக்கிறது, என்ன செய்வோம்?

ஜாலி ஆப்ரஹாம் பாடுவார்,"பத்தில் ஒன்றையாவது கொடுப்போம் கர்த்தருக்கு " என்று.

சரியான இடத்தில் விதைப்பது அவரவர் சாமர்த்தியம்; அதற்காக விதைப்பதே கூடாது என்பது மாலைக் கண்ணனின் கூற்றாகும்; ஆம், தசமபாகம் என்பது விதைப்பு- அறுப்பைப் போன்றதே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அண்மையில் தமிழ்க் கிறித்தவ தளத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி என்னை விரட்டிய " தசமபாகம் – ஒரு நீதிமன்ற வழக்கு " எனும் கட்டுரை தொடர்பாக ஒரு இளைஞருடன் பேசிக் கொண்டிருந்தேன்;ந்த கட்டுரையின் விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புக்குச் சென்றறிய வேண்டுகிறேன்;
http://chillsam.wordpress.com/2010/09/11/tithe/

அந்த இளைஞர் சொல்லுகிறார்,"நானும் தசமபாகம் கொடுக்கிறேன், ஆனாலும் அது தேவையில்லாதது என்று அறிந்தே எனது போதகருடைய தவறான போதனையின் காரணமாகக் கொடுக்கிறேன், பழகிவிட்டது" என்பதாக‌;இது மட்டும் எப்படி சரியாக இருக்கும் என்று தெரியவில்லை; மேலும் மத்தேயு (22:22) மற்றும் எபிரெயர் (7:5) வசனங்களைத் தவிர‌ தசமபாகத்தைக் குறித்து வேதம் விவரமாக வேறு எதுவும் கூறவில்லை என்று நினைக்கிறேன் என்றார்;

Mat 23:23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

Heb 7:5 லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்துவந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.

மேற்கண்ட வசனங்களின்படி தசமபாகம் கொடுப்பது நியாயப்பிரமாணத்துக்கு முந்தியதாக இருந்தாலும் பிறகு அது
மோசேயினால் நியாயப்பிரமாண சட்டத்துக்கு கீழ்  கொண்டுவரப்பட்டது;அந்த நியாயப்பிரமாணமும் கிறித்துவின் மரணத்தால் ஒழிக்கப்பட்ட பிறகு புதிய ஏற்பாட்டு பிரமாணத்தின்படி தசமபாகம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை;

இன்னும் சகோ.ஸ்டான்லி அவர்கள் போதனையின்படி (மல்கியா.3:10) வானத்தின்கீழே ஒரு ஆல‌யமே இருந்தது;அங்கு வரும் எண்ணற்ற ஏழை எளியமக்கள் போஷிக்கப்பட பல்வேறு உணவு பொருட்களை சேகரிக்க வேண்டியிருந்தது;இன்றைய நிலைமை அப்படியில்லை;நம்மிடம் அதே போன்ற ஆலயமுமில்லை என்பதால் தசமபாகமும் தேவையற்றது என்பது அந்த இளைஞருடன் பேசியபோது அவருடைய கருத்தாக எனக்குத் தெரியவந்தது;

ஆக முழுமனதுடன் கொடுக்காத விசுவாசி மற்றும் முழுமனதுடன் கொடுக்காத விசுவாசியிடம் தசமபாகம் பெறும் ஊழியர் இருவரில் யார் குற்றவாளி யாரால் யாருக்கு என்ன இலாபம் என்பது யோசிக்கவேண்டிய விஷயம்;

வேதம் ஒரு காரியத்தை தெளிவாகப் போதிக்கிறது,"எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். "(கொலோசெயர்.Col 3:24 )

தொடர்ந்து என்னை சர்ச்சைக்குரிய நபராக்கிய (மீண்டும் ஒருமுறை?) "தசமபாகம் – ஒரு நீதிமன்ற வழக்கு" எனும் நாடகத்தைக் குறித்து எனது பார்வையினை இங்கே பதிக்கிறேன்; இது தொடர்பான தள நண்பர்களுடனான விவாதத்தின்போது தசமபாகம் குறித்த என்னுடைய கருத்து என்ன என்பதைக் கூற அவர்கள் என்னை மீண்டும் மீண்டும் என்னை நெருக்கினார்கள்;

ஆனாலும் ஆண்டவருடைய வழிமுறையின்படி நான் நேரடியாக எதையும் கூறாமல் தவிர்த்துவந்தேன்;இது பொதுவாகவே என் மீது கூறப்படும் குற்றச்சாட்டாகும்;இதனால் எனக்கு ஒன்றுமே தெரியாது,அல்லது எதிலும் தெளிவு கிடையாது என்பது சிலருடைய எண்ணமாகும்;அல்லது என்னை கிறித்தவ சோதனைக் கூடத்திலிருக்கும் ஏதாவது ஒரு ஜாடியில் போட்டு அடைப்பது சிலருடைய எண்ணமாகும்;

"இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும் பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும்,அநேக காரியங்களைக்குறித்துப் பேசும்படி அவரை ஏவவும் தொடங்கினார்கள். (லூக்கா.Luk 11:53,54 )

ஆண்டவருக்கு ஏற்பட்ட இந்த அனுபவமே அவ்வப்போது எனக்கு நினைவுக்கு வரும்; எனவே நானும் எச்சரிக்கையுடனிருக்கவே முயற்சிக்கிறேன்;

பிரச்சினைக்குரிய இந்த நாடகம் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது;எனவே இதனை மொழிபெயர்த்தவர் முதல் குற்றவாளியல்ல;ஆனாலும் அவர் சமதளத்திலிருந்து நோக்கும் விசுவாசியாக இருந்தும் வேதவார்த்தைகளின் மூல அர்த்தங்களைக் கருத்தில் கொள்ளாமல் மேலோட்டமாக மொழிபெயர்ப்பு வேலையை மாத்திரம் செய்திருப்பது குற்றமாகும்;

நான் எடுத்திருக்கும் பணியானது சரியான திசையில் பயணிக்குமானால் இதுபோல கண்டவனும் பெருந்தனம் செய்யும் போக்கு தடுக்கப்படும்;'தலா தலா பெருந்தனம் ' என்றும் 'தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ' என்றும் சொல்லப்படும் சொலவடையைப் போல முழுதாக வேகாமலே கடைத்தெருவுக்கு வந்த பலகாரமாக சிலர் புற்றீசலைப் போலப் புறப்பட்டிருப்பதாலேயே இந்த நிலைமை;எழுப்புதல்... எழுப்புதல் என்று இவர்கள் பேசி எழுதினாலும் புலம்பினாலும் அவையும் கூட வெளி வேஷமேயாகும்;இவர்களுடைய புலம்பலைப் பார்த்தால் அதுவும் நீலிக் கண்ணீரைப் போலவே இருக்கிறது;

வேதம் சொல்லுகிறது,
"நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்." (மத்தேயு -Mat. 6:6 )

ச்சும்மா பரபரப்பைக் கிளப்பி பட்டையைக் கிளப்பும் சின்னஞ்சிறுசுகளைப் போல ஊழியர்களைக் குறைகூறுவதை ஏதோ ஒரு பொழுதுபோக்காக எண்ணுகிறார்கள்;அதுவும் மலேசியா சிங்கப்பூர்,கனடா போன்ற வெளிதேச தமிழ் சபைகளிலேயே இந்த துணிகரம் நிலவுகிறது;

தங்களை
யே சபைகளுக்கு தூண்களைப் போலவும் தாங்கள் இல்லாவிட்டால் ஊழியர்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்துவிடுவார்கள் என்றும் இவர்களாக எண்ணிக்கொண்டு ஊழியர்களை பிச்சைக்காரர்களைப் போல கேவலமாக நினைத்து நடத்தும் பேசும் ஊழியர்களை நான் சந்தித்திருக்கிறேன்;

இங்கே வந்து ஊழியர்கள் கூட்டங்களில் மிஷினரிகள் என்ற போர்வையில்
வந்து பேசும் இந்த வெளிநாட்டு கருப்புக் காகங்கள் சகட்டுமேனிக்கு ஊழியர்களைத் திட்டிவிட்டு ஸ்பான்ஸர் செய்யும் பிரியாணியை வாங்கித் தின்னவும் இங்கே மானங்கெட்ட ஊழியர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்;

குறைகூறுவதையும் முறுமுறுத்தலையுமா எழுப்புதல் என்று கூறமுடியும்? ஃப்ரெடி ஜோசப் போன்றவர்களும் கூட இந்தவிதமான துணிகரத்திலிருக்கிறார்கள்;

ஒருவேளை இவர்களுக்குத் தொப்புளுக்குமேல் கஞ்சியிருப்பதால் புளி ஏப்பத்தில் கண்டதையும் பேசலாம்;ஆனால் அன்றாடம் ஏழை எளிய மக்களுடன் ஊடாடிக்கொண்டிருக்கும் கிராமத்து ஊழியர்களின் நிலைமை மாற என்ன திட்டம் இவர்களிடம் உண்டு?

இவர்கள் செய்யும் ஊழியம் கூட சுற்றுலா போலவே;மேட்டுக்குடிகளுடனும் மேதாவிகளுடனும் மட்டுமே பழகி ஏஸி கார் ஏஸி பெட்ரூம் என குளிர்ச்சியான அறைகளில் மலஜலாதி செய்யும் கனவான்கள் மெத்தப்படித்தவர்கள் என்ற நினைப்பில் வேதத்தைக் கற்க விரும்பாமல் யார் யாரோ எழுதிய புத்தகங்களிலிருந்து குருடன் தடவிய யானையைப் போல வேதத்தைப் பார்ப்பவர்கள் எப்படி சரியானதைப் போதிக்கமுடியும்?

// எனக்கு சகோதரர் ஒருவர் மூலம் மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட இந்த அற்புதமான நாடகத்தை உங்களுக்காக தமிழில் மொழியாக்கம் செய்து தருகிறேன். இதன் அசல் ஆங்கிலப் பிரதியை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. அவர் யாராக இருந்தாலும் அவருக்கு என் நன்றிகள், ஏனனில் இது அநேகருடைய கண்களைத் திறந்து வைக்கக் கூடியது. இந்த நாடகத்தில் வரும் நீதிபதி மற்றும் பாஸ்டர்.ஜோன்ஸ் ஆகிய இரண்டு பாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல. இது யாரையும் புண்படுத்த வெளியிடப்படவில்லை, தேவஜனங்களின் மனங்களைப் பண்படுத்தும் நோக்கத்துடனேயே வெளியிடப்படுகிறது.//

இது அந்த நாடகத்தின் முன்னுரை; இதிலேயே அதன் நோக்கம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது; ஊழியர்களைப் புண்படுத்தாமல் விசுவாசிகளைப் பண்படுத்துமாம்; இது எப்படி? அப்படியானால் சபைகளில் இருவித கூட்டத்தார் இருப்பதை நண்பர் ஒப்புக்கொள்ளுகிறார், போலும்;ஆளுவோர் ஆளப்படுவோர் ஆகிய அந்த இரு கூட்டத்தாரில் யார் யாரை ஆளுவது என்பதே தற்போதய போட்டி;

"அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்." (நியாயாதிபதிகள்.Jdg 8:23 )

ஒரு தலைவரைச் சுற்றிலும் அநேகர் இருப்பதையும் அவர் எல்லோராலும் புகழ்ப்படுவதையும் பார்த்து மனதில் பொறாமை கொள்வோரே இதுபோன்ற சர்ச்சைகளை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்; கொடுத்த காணிக்கைக்கு கணக்கு கேட்பது முதலாக கோர்ட்டில் கேஸ் போடுவது வரையிலும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த அதிகார போட்டியே காரணம்; தனியாள் அதிகார அமைப்பில் இதுபோன்ற பிரச்சினைகள் என்றால் நிர்வாக அமைப்பிலோ ஊழல் குற்றச்சாட்டுகளால் சபைகள் அதகளப்படுகிறது;

இதனால் புதிதாக சபைக்குள் வரும் ஆத்துமாக்கள் (என்பதே இல்லை;இந்த பஞ்சாயத்து தீர்ந்தால்தானே ஆத்தும ஆதாயப்பணி நடைபெறும்?) தடுமாறுகிறார்கள்;பீடத்தை நெருங்க அஞ்சுகிறார்கள்;

இறைவனுக்கு தங்களிடம் இருக்கும் நன்மையானதைப் படைப்பதால் மனநிம்மதியடைவதென்பது இந்த சமுதாயத்தின் இரத்தத்தில் ஊறிவிட்ட சமாச்சாரம்;ஆண்டவரும் அதனைப் புறக்கணிக்கிறதில்லை;

(தொடரும்...)




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard