Pastor i got a good news to tell you, am a nursing student in bangalore yesterday when you said that put whatever u have to the offering bag, that time i thought if i put it all i can't go back by bus then i thought my GOD gave me this money if i can give him he'll give MORE back to me.. i put it all to the bag and one of my Srilankan friends he gave me the bus charge.. and i believed that my GOD can give me more.. today i got a good news from my home, my SISTER got ADMISSION in a good college in PUNE for nursing but the miracle is she don't have to pay any FEES.. only four students selected from kerala for this CHRISTIAN CHARITY SCHOLLERSHIP and she is one of them.. THANK GOD and THANK YOU PASTOR for your valuable prayer, GOD BLESS YOU.
John Edward /// God would have closed His nose during this sacrifice (offering). ///
இது எனது மதிப்பிற்குரிய நண்பர் ஒரு குறிப்பிட்ட திரியில் எழுதியது. யாரோ ஒரு சிலருடைய கருத்தினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இதுபோன்ற வரம்புமீறிய வரிகளினால் தேவனை துக்கப்படுத்தி அவர்களுக்கு நண்பனாக இருப்பதைக் காட்டிலும் அவர்களால் வெறுக்கப்படுவது எனக்கு நலமாக இருக்கும்.
ஈகை என்பது வேதம் முழுவதிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதனை ஊக்கப்படுத்தும் எந்தவொரு செயலும் அல்லது சாட்சியும் போற்றுதற்குரியதே. அதன்படி ஒரு ஏழை விதவையின் தியாகத்தையும் நம்முடைய ஆண்டவர் போற்றுகிறார். அவள் ஆலயத்திலிருந்து வெளியேறி எப்படி வீட்டுக்கு சென்றிருப்பாளோ அப்படியே இப்போதும் தியாகமாகக் கொடுக்க ஆயத்தமாகும் ஒவ்வொரு ஆத்துமாவையும் நடத்த கர்த்தர் வல்லவராக இருக்கிறார்.
@Prason Christopher Robin
///the money the girl in the offering bag went to the pastor'e belly? Sad to know that people still believe that money minded business men still pray for them . ///
ஒரு மனிதன் வேலைக்கு சென்று சம்பாதித்து பணம் கொண்டு வந்து உன் வயிற்றை நிரப்பவே இவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்று சொல்லுவானா ? இதுபோன்ற அறிவுகெட்ட கருத்துக்களைப் பரப்புவதற்காகவா இவர்களுக்கெல்லாம் கண்ணும் காதும் விரல்களும் நரம்புகளும் கொடுக்கப்பட்டது ?
@Vijay Kumar /// If anybody interested to invest your money in share market please consider this business. ///
பத்து சதவீதமே கொடுக்க வக்கில்லாத இந்த பிச்சை (து) ரோகிகள் முழுவதுமாகக் கொடுப்பதைக் குறித்து எப்படி போதிக்க துணிகிறார்களோ ? கர்த்தருக்காகக் கொடுத்த ஒரு இளம்பெண்ணின் விசுவாசத்தைப் பாராட்ட மனதில்லாவிட்டாலும் அவளுடைய தியாகத்துக்கு உள்நோக்கம் கற்பிக்காதிருக்கலாமே..!
புதிய ஏற்பாடு (புதிய உடன்படிக்கை) துவங்குகிற அப்போஸ்தலர் நடபடிகள் முதல் வெளிப்படுத்தல் வரை வேதத்தில் தசமபாகம் என்ற வார்த்தை எபிரேயர் நிருபத்தில் மட்டுமே வருகிறது. (அதுவும் கிறிஸ்து பழைய ஏற்பாட்டு தசமபாகம் வாங்குகிற ஆசாரியர்கள் யாவரையும் விட மேலானவர் என்று பழைய ஏற்பாட்டு ஆசாரியத்துவத்தை மேன்மைப்படுத்திய யூதர்களுக்கு சுட்டிக்காட்டும்போது மட்டுமே!) விருத்தசேதனம் (விருத்தசேதனமும்,விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை), ஓய்வுநாள் (நாட்களை விசேஷித்துக் கொள்கிறவனும், கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று), தசமபாகம் யாவும் யூதர்களுக்கு கட்டளையிடப்பட்டவை. அப். 15 ம் அதிகாரத்தின்படி புறஜாதியிலிருந்து இரட்சிக்கப்பட்டவர்களுக்கு இவை பொருந்தாது.
புதிய ஏற்பாட்டுச் சபை துவங்கிய காலத்தில் பொதுவுடைமை தான் சபையில் இருந்தது. ஆசாரிய ஊழியமோ லேவிய ஊழியமோ சபையில் இருக்கவில்லை. ஆலயங்களும் கட்டப்படவில்லை (நாமே தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம்). யூதருடைய ஜெப ஆலயங்களை சபை கூடுகைக்கு உபயோகித்துக் கொண்டார்கள் (நான் சபை கட்டிடங்களுக்கு விரோதியல்ல. தேவனை கூடி ஆராதிக்க நல்ல கட்டிடம் இருந்தால் சந்தோஷமே; ஆனால் அதை ஆலயம் (temple) என கூறுவது தவறு).
புதிய ஏற்பாட்டுச் சபை உபத்திரவங்களுக்கு நேராய் கடந்து சென்றபோது கிறிஸ்தவ மக்கள் தங்கள் காணியாட்சிகளை விட்டு சிதறடிக்கப்பட்டார்கள். சிதறடிக்கப்பட்ட விசுவாசிகளுக்கு உதவவே பவுல் மற்ற சபைகளிடம் உதவி வேண்டினார். எந்த அப்போஸ்தலரும், மூப்பர்களும் தசமபாகமோ பொருளுதவியோ தங்களுக்காக கேட்கவில்லை.
ஆனால் கொடுப்பது என்பது விதைப்பதற்கு சமம் என பவுல் கூறியுள்ளார். சபை விசுவாசிகளுக்கு பொருளுதவி கோரியபோது அவர் இதை வலியுறுத்தியுள்ளார். சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான்; பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான், உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் என்பதெல்லாம் சபை போதகர்களுக்கு தசமபாகம் கொடுப்பதைப் பற்றியல்ல. விசுவாசிகளுக்கு உதவுவதைப் பற்றியது.
சகோதரன் ஒருவனுக்கு குறைச்சல் உண்டு என்று கண்டும், நீங்கள் எங்களுக்கு தசமபாகம் கொடுத்துவிட்டு போங்கள்; ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்; நீங்கள் குளிர் காய்ந்து இளைப்பாறுங்கள் என்று கூறிவிட்டு எந்த உதவியும் செய்யாமல் பெரிய கட்டிடம் கட்டவும், விளம்பர வருமானமே இல்லாமல் TV ஊழியம் நடத்தவும் அந்த தசமபாகத்தை உபயோகிக்க வேதம் கூறுகிறதா என்ன?
அந்த காலத்தில் மிஷனறிகள் தங்கள் நாட்டிலுள்ள சொத்துக்களை விற்று அதைக் கொண்டு சோப்பு, சீப்பு, சால்வேஷன் என ஊழியம் செய்தார்கள் (இந்த காலத்திலும் சிலர் இருக்கிறார்கள் - சிலர் மட்டுமே).
ஆனால் கொடுப்பதை வேதம் வலியுறுத்துகிறது. கொடுப்பதினால் ஆசீர்வாதம் உண்டு என்பதையும் நாம் மறந்து போகக்கூடாது. முதலாவது ஒவ்வொரு விசுவாசியும் தன்னை முழுவதும் ஆண்டவருடைய சித்தத்திற்கு ஜீவபலியாய் ஒப்புக்கொடுக்கவேண்டும்(ரோமர் 12:1,2); இதுவே தேவன் விரும்பும் காணிக்கை (பலி). இரண்டாவது ஒருவருக்கொருவர் எல்லா விதத்திலும் (பொருளாலும்) உதவியாயிருக்கவேண்டும் (எல்லாரும் ஆசாரியரே).
மூன்றாவது சுவிசேஷத்தைச் சொல்லுகிறவனுக்கு அதனாலே பிழைப்பு உண்டாயிருக்க வேண்டும்; போரடிக்கிற மாட்டை வாய்கட்டாயாக; உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்கு சகல நன்மையிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன் போன்ற வசனங்கள் தங்கள் சொந்த வருமானத்திற்காக உழைப்பதை விட்டு ஆண்டவருடைய இராஜ்யத்தினிமித்தம் ஆத்துமாக்களுக்காக உழைப்பவர்களுக்கு பிழைப்பு உண்டாயிருப்பதற்காக ஆண்டவரே ஏற்படுத்தின முறைகள். எல்லோரும் வேலை செய்துதான் சாப்பிட வேண்டுமென்று இருந்திருந்தால் சபை தேக்கநிலை அடைந்திருக்கும். சபை வளர முழுநேர ஊழியமும் தேவைதான். எல்லோரும் சொந்த நிலத்தில் வேலை செய்து சாப்பிடும் நிலை இந்த காலத்தில் இல்லை. தனியாரிடம் வேலை செய்பவர்கள் தங்கள் முழு உழைப்பையும் முதலாளிகளுக்கு கொடுத்துவிட்டு ஆண்டவருக்காய் எதையும் செய்யயியலவில்லையே என்ற ஏக்கத்தில் வேலையை உதறியவர்கள் எத்தனைபேர்! அப்படிப்பட்டவர்களுக்கு பிழைப்பு உண்டாகவேண்டும். அப்படி கொடுப்பவர்களுக்கு நிச்சயம் ஆசீர்வாதம் தான்.
ஒரு தனிமனிதனுக்கு தான் கொடுக்கவேண்டும், போகிற சபைக்கு தான் கொடுக்கவேண்டும் என்ற வரைமுறையெல்லாம் வேதத்திற்கு (புதிய ஏற்பாட்டு நடைமுறைக்கு) புறம்பானது.
கொடுப்பது என்பது விதைப்பது. விதைத்தால் தான் தொடர்ந்து அறுவடையுமுண்டு. எனவே கொடுக்க ஊக்கப்படுத்துவோம்.
ஆனால் அதை காரணம் காட்டி ஏழைகளை சுரண்டி, கால்வயிற்று கஞ்சிக்கு இல்லாதவர்களிடமிருந்து வாங்கி அந்த பணத்தில் சொகுசுக்காரில் வலம் வருவதும், பிள்ளைகளை படிக்க வைக்க வழியில்லாமல் திண்டாடிக்கொண்டு அவர்களை குழந்தைத் தொழிலாளர்களாய் அனுப்புகிறவர்களை ஏமாற்றி அவர்களுக்கு ஆசீர்வாதமான வார்த்தைகளை வாக்களித்து அவர்கள் தரும் காணிக்கையில் தங்கள் குழந்தைகளை கான்வெண்டில் படிக்க வைப்பதும், TV நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்துவதும், காணிக்கை அனுப்பியவர்கள் வீட்டில் அடுப்பெரிகிறதா என எட்டிக்கூட பார்க்காதிருப்பதும் ................. (உள்ளம் கொதிக்கிறதையா!!!)
இப்படிப்பட்ட ஏழைகளை சுரண்டி தானே ஐயா பல்கலைக் கழகங்கள் கட்டினீர்கள். அந்த பிள்ளைகளில் யாருக்காவது அதில் இலவசமாக வேண்டாம் அரசுக் கட்டணத்திலாவது கல்வி கொடுத்தீர்களா??? ........ (இரத்தக் கண்ணீர் வருகிறது. என் கண்ணில் மட்டுமல்ல ஆண்டவர் கண்ணிலும்!!!) நீங்கள் பரலோகம் போனபோது (போய்க்கொண்டிந்தபோது) ஆண்டவர் இதைக்குறித்து எதுவும் கேட்கவில்லையா? கனடாவிலும் இஸ்ரயேலிலும் ஊழியம் செய்யச் சொன்ன ஆண்டவர் இதைக்குறித்து எதுவும் சொல்லவில்லையா?
பெரிய கோடீஸ்வரர்களே TV Channel நடத்தயியலாமல் (விளம்பரதாரர் உதவியுடன்) நடத்தயியலாமல் ஓடிப்போகும்போது நீங்கள் (விளம்பரமேயில்லாமல்) வெற்றிகரமாக நடத்துவது உங்கள் சொந்த காசா ஐயா? ஐந்து அப்பம் என்கிறீர்களே! ஒரு அப்பத்தை ஐந்து பேருக்கு பங்கு வைக்கும் அவல கிறிஸ்தவனுக்கு நீங்கள் ஏதாவது செய்திருக்கிறீர்களா ஐயா?
தசமபாகமாம், காணிக்கையாம் ......!!!!!!!!! நான் உள்ளுக்குள் அழுது குமுறுகிறது போல என் இயேசுவும் குமுறுவாரோ????
(தனியாரிடம் வேலை செய்பவர்கள் தங்கள் முழு உழைப்பையும் முதலாளிகளுக்கு கொடுத்துவிட்டு ஆண்டவருக்காய் எதையும் செய்யயியலவில்லையே என்ற ஏக்கத்தில் வேலையை உதறியவர்கள் எத்தனைபேர்! - நானும் கூட அப்படி உதறியவன் தான். உதறிவிட்டு World vision போன்ற கிறிஸ்தவ அமைப்புகளில் வேலைக்கு முயற்சி செய்து கிடைக்காமல் சிறு தொழில் செய்து வாழ்கிறேன் (நேர்மையாய் தொழில் செய்வது அதைவிட கடினம் தான்!!!!!!!) - என் வார்த்தைகள் சார்புநிலையற்றவை என விளங்கிக்கொள்ளவே இந்த சுய விளக்கம். இவனும் அந்த கூட்டமோ என எண்ணி இதை வாசித்தால் எழுதியது வீணாகிவிடுமே)
சகோ.Chill Sam: ஹஹ்ஹாஹ்ஹா அருமையான கருத்து, தங்கள் கருத்திலுள்ள நகைச்சுவையை ரசிக்கிறேன். ஆனால் தங்கள் கருத்து சரியானதல்ல.
இப்படிச் செய்யலாமே! எந்த சூழ்நிலையில் யாருக்கு எழுதப்பட்டது என்பதை ஆராயத்தேவையில்லை என்றால் சோவியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அதை உருட்டிப்பார்த்து முதலில் தாயம் விழுந்ததென்றால் ஆதியாகமம், அடுத்தமுறை 12 விழுந்ததென்றால் 12-ஆம் அதிகாரம். அடுத்து வசனத்தைக் கண்டுபிடிக்க மீண்டும் உருட்டுவோம் இந்த முறை 3 விழுந்துவிட்டது. சரி இப்போது என்னவசனம் என்று பார்ப்போம்:
அன்பு சகோதரர் Chill Sam அவர்களுக்கு, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்,
// கர்த்தர் ஆசீர்வதிக்கிறார், பெருகப்பண்ணுகிறார், தசமபாகம் கொடு உன்னை வானத்து பலகனிகளைத் திறந்து இடங்கொள்ளாமல் போகுமட்டும் ஆசீர்வதிப்பார் என்று பிரசங்கிப்பது பொய் என்று நீங்கள் சொல்லுகிறீர்களா...? அப்படியானால் தேவனை பொய்யர் என்கிறீர்களா…?//
"உன்னைக் உச்சந்தலையைக் கர்த்தர் மொட்டையாக்குவார்; நீ முற்றிலும் சங்கரிக்கபடுவாய்" என்று ஒருவர் போதிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவரைப்பார்த்து ஏன் இப்படி போதிக்கிறீர்கள் என்று கேட்கிறோம் உடனே அவர் வேதவசனத்தைதானே சொல்கிறேன். வேதம் சொல்வது பொய் என்கிறீர்களா? அப்படியானால் தேவனை பொய்யர் என்கிறீர்களா…? என்று அவர் கேட்டால் அது நியாயமாகுமா?
ஒரு காரியம் எந்த சூழ்நிலையில் யாருக்கு எழுதப்பட்டது என்பதை ஆராய்ந்து மறைமுகமாக சுயநல நோக்கம் எதுவுமின்றி போதித்தால் அதுதானே ஊழியம்! மோசே ஆசரிப்புக் கூடாரம் கட்ட ஜனங்கள் நகைகளைக் கழற்றிக் கொடுத்தார்கள். அதைக் காட்டி நான் ஒரு தேவாலயம் கட்டப்போகிறேன் எனக்கும் நகைகளைக் கழற்றிக் கொடுங்கள் என்று நான் சொன்னால் அது தேவனுடைய வார்த்தையாகுமா?
ChillSamநண்பர் விஜய் அவர்கள் எனது கேள்விகளுக்குரிய பதிலைக் கொடுத்ததாக நான் நினைக்கவில்லை; என்னுடைய பல கேள்விகளைத் தவிர்த்துவிட்டு மேலோட்டமாகவே பதிலளித்திருக்கிறீர்கள்... இங்கு நமக்குள் நடைபெற்ற அனைத்து வாதப் பிரதிவாதங்களையும் தொகுத்து (பல..?!) தனி கட்டுரையாகத் தருகிறேன்; அதில் நீங்கள் விரும்பினால் கருத்து கூறவும்; என்னால் சுருக்கமாக ஓரிரு வரிகளில் எழுதமுடியவில்லை; அவ்வாறு நான் நீ...ளமாக எழுதுவதும் அடுத்தடுத்து வரும் பின்னூட்டங்களில் மறைந்துபோகும்; என்னுடைய நேரமும் கருத்துக்களும் இதுபோல வீணாவதை நான் விரும்பவில்லை. மன்னிக்கவும்.
உங்கள் கரத்தில் நீங்கள் கை காசு போட்டு வாங்கிய பைபிளை எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்....// ஒரு காரியம் எந்த சூழ்நிலையில் யாருக்கு எழுதப்பட்டது என்பதை ஆராய்ந்து ...// கொண்டே வந்து உங்களுக்கு சம்பந்தமில்லாததாகத் தோன்றும் பக்கங்களையெல்லாம் கிழித்தெறிந்து கொண்டே வாருங்கள்; இறுதியில் முன் அட்டையும் பின் அட்டையும் மாத்திரம் இருக்கும்; இதற்குள் உங்களுக்கு வியர்த்திருக்குமல்லவா... அந்த அட்டையை விசிறியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எனது நண்பர் என்ற காரணத்தினால் என்னால் இயன்ற ஒரு ஆலோசனையைச் சொன்னேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//what have you achieved all these years are gathered a group of people who blame others.... nothing else.//
கர்த்தர் ஆசீர்வதிக்கிறார், பெருகப்பண்ணுகிறார், தசமபாகம் கொடு உன்னை வானத்து பலகனிகளைத் திறந்து இடங்கொள்ளாமல் போகுமட்டும் ஆசீர்வதிப்பார் என்று சொல்லி ஏமாளிகளின் கூட்டத்தைக் கூட்டுவது மட்டும் பெரிய சாதனையா சகோதரரே????
// கர்த்தர் ஆசீர்வதிக்கிறார், பெருகப்பண்ணுகிறார், தசமபாகம் கொடு உன்னை வானத்து பலகனிகளைத் திறந்து இடங்கொள்ளாமல் போகுமட்டும் ஆசீர்வதிப்பார் என்று //
... சொல்லுவது பொய் என்று நீங்கள் சொல்லுகிறீர்களா...? அப்படியானால் தேவனை பொய்யர் என்கிறீர்களா...?
// ஏமாளிகளின் கூட்டத்தைக் கூட்டுவது ...//
தமிழகத் தேர்தலில் எத்தனை அருமையானதும் தெளிவானதுமான தீர்ப்பை என் ஜனம் கொடுத்திருக்கிறது...அந்த ஜனத்தையா ஏமாளிகள் என்கிறீர்கள்..?
அவர்கள் புத்திசாலிகள், காரியக்காரர்கள்...விளைவைக் காணாமல் விதைக்கமாட்டார்கள்.. நீங்கள் கொடுக்காமல் வைத்திருந்து அடையப்போகும் நன்மை என்று சொல்லுங்களேன்,
ஓஹோ, நீங்கள் விரும்புவோர்க்கு தகுதியானவர்க்கு கொடுப்பீர்களல்லவா, அதின் நன்மை என்ன என்று சொல்லுங்களேன், ஒன்றுமில்லை எல்லாம் ஒரு ஆத்மதிருப்திக்காக என்கிறீர்களா, அதுக்காகத் தானே இவர்களும் கொடுக்கிறார்கள்..?
ஓஹோ, ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு கொடுக்கக்கூடாது, ஆனால் கொடுக்கவேண்டும், அப்படியானால் கொடுத்தல் எனும் கிரியையின் நோக்கம் யாது..?
தேவன் கொடுத்ததிலிருந்து அவர் கொடுப்பதைப் போலவே நம்மைவிட கீழ்நிலையில் இருப்போருக்கு கொடுத்து.... எல்லாம் ஒரே நிலைக்கு மீண்டும் வரும்... ஏதோ ஒரு இன்ப உணர்வு.... தானே கடவுளாகிவிட்டது போன்ற திமிர்.... மனிதன் செய்யும் எல்லாவற்றுக்கும் ஒரு நோக்கமும் அதற்கு ஒரு விளைவும் உண்டு; முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே விளையும், நன்மையோ தீமையோ.... நன்மை செய்து ஆண்டவருடைய கட்டளையை நிறைவேற்றுகிறோம் என்பதிலும் கூட ஒருவித சுயநலமும் உள்நோக்கமும் இருக்கும்.
எனவே வாங்குபவர் தரப்பிலிருந்து மாத்திரமல்ல, கொடுப்பவர் தரப்பிலிருந்தும் பார்த்தால் கொடுப்பவர் ஒன்றும் ஏமாந்து கொடுக்கவில்லை, அவரும் ஏதோ உள்நோக்கத்துடன் தான் கொடுக்கிறார் ,அவர் கொடுத்த நோக்கத்துக்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும்; யாரிடம் கொடுத்தோம் என்பதைப் பொறுத்தது அல்ல, இது...திறந்த மனதுடன் சிந்தித்தால் நீங்கள் பல கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
என்று சபை நடத்த ஆண்டவர் போதும் என்ற விசுவாசத்திற்குள் முழுமையாக வருகிறார்களோ, என்று தசம பாகம் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று சொல்வதை நிறுத்துறாங்களோ, அன்று நல்லா சபைக்குக் கொடுப்போம் என்று நினைத்திருக்கிறேன். அந்த நாள் வருவது போல் தெரிய வில்லை!
கேட்டது: ஒருவர் சபைக்கு முதலில் வருகையில் கொஞ்ச நாள் கழித்துத்தான் நல்லா காணிக்கை கொடுப்பாங்க. ஆனால் சபையோடு ஐக்கியம் குறையும்போது முதலில் குறைப்பது காணிக்கைதான் என்று ஒரு பெரிய ஊழியர் சொன்னதாகச் சொன்னார்கள். இப்படி ஜனங்களின் காணிக்கை மேல் கண் வைத்து செய்யும் ஊழியம் என்று மாறுமோ?? ஜனங்கள் மேல் உண்மையான அன்பு இருக்கும் போது அவங்க காணிக்கை கொடுக்கிறாங்களா இல்லையா, கூட கொடுக்கிறாங்களா, குறைய கொடுக்கிறாங்களா என்பதெல்லாம் கண்ணில் படாது என்று நினைக்கிறேன். சபையில் யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பது யாருக்கும், ஊழியக்காரர்களுக்கும் தெரியாது என்றால் எப்படி இருக்கும்? இந்து கோவில்களில் இருப்பது போல் உண்டியல் காணிக்கை மட்டும்தான். கவர் காணிக்கை,காணிக்கைப் பை எல்லாம் கிடையாது என்று கொண்டு வந்தால் என்ன?
விசுவாசிகளின் ஆவிக்குரிய தன்மையை ”சபைக்குக்” கொடுக்கும் காணிக்கை வைத்து அளவிடும் போக்கு என்று மாறும்?
கொடுத்தால் 100 மடங்கு கொடுப்பார் என்று போதிக்கும் ஊழியர்கள், எளிதாக அந்த ஃபார்முலாவை பயன்படுத்தி ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளலாம் அல்லவா. உம்: அவர்களுக்கு 1 இலட்சம் தேவைப்பட்டால், 1000 ரூபாய் ஏதாவது வேறு ஊழியத்திற்கு அனுப்பி வைத்தால் போதுமானது. 1 இலட்சம் வந்து விடாதா? ஊருக்குத்தான் உபதேசம் போல.
கார் விற்க நேர்ந்ததை விலாவாரியாக விளக்கி அனுதாபம் தேடும் ஊழியர்கள், சில மாதங்களில் காருக்கு மேல் கார் வாங்கியதை (மருமகனுக்கு ஒன்று, மகனுக்கு ஒன்று) ஏன் சொல்வது கிடையாது? 1000 ரூபாய் பாக்கெட்டில் இல்லாமல் கஷ்டப்பட்ட கதையை சொல்லி அனைவரையும் உச்சுக் கொட்ட வைப்பவர்கள், வெளிநாடு போய் பெற்ற காணிக்கை எவ்வளவு என்று ஏன் சொல்வது கிடையாது? கார், ஏசி, சொந்த வீடு, நல்ல சாப்பாடு, வெளி நாட்டில் வேதபடிப்பு, முதல் வகுப்பில் இரயில் பயணம், விமான பயணம் எல்லாம் இருந்தும், எப்பவும் நாங்க கஷ்டம்தான் படுகிறோம் என்று புலம்பும் ஊழியர்களுக்கு- உங்க சபை விசுவாசிகளுடன் ஒரு மாதம் வாழ்ந்து பாருங்கள். அவர்களும் உங்களைப் போலவும், உங்களை விடவும் கஷடம் தான் படுகிறார்கள் என்று புரியும்.
உம்மை உண்மையாய் நேசிக்கும், எங்களையும் உண்மையாய் நேசிக்கும் , உம் ராஜ்யத்தை மட்டுமே கட்ட நினைக்கும், பவுல் போன்ற , அன்பான அக்கறையுள்ள வல்லமையான் ஊழியக்காரர்கள் எங்கே ஆண்டவரே? அப்படிப்பட்டவர்களை எழுப்ப மாட்டீரா? - இதுவே இப்பொழுது என் ஏக்கம்!
I sent this mail to a minister last February. Hope you do not mind me posting it here! This is my opinion only.
--
You were talking about tithing recently.
I’m sure many pastors will see you as an enemy for saying that people can send their tithe to any ministry as led by God. Allen Paul is a bit wise. He asks everybody to pay their first tithe to their church and the second tithe to Blessing TV!
The doctrine of tithing appears to be a seducing doctrine! Believers are seduced by the so called 100 fold return. Pastors are simply seduced by the money it brings!
My opinion on giving is this:
We must give as God leads. Not just 10%, our all (100%) belong to God. You said God’s advice for us is to tithe wherever He leads. I think God may ask the spiritually young to ‘tithe’ and spiritually mature to ‘give’!
Tithing belongs to Old Testament. New Testament talks about GIVING not tithing. If God asks somebody to tithe, that is fine, but I do not think the law of tithing (or any law – like circumcision, observing 7th day etc) is applicable to NT believers. NT believers should be guided by the Holy Spirit, not by the law, in everything including giving. A good book to read in the Bible about the “law keeping mentality” is Galatians. Law based tithing is old wineskin and spirit led giving is new wine.
The way pastors force and manipulate their people to tithe and that too only to the local church is very very sad, imo. Church or any ministry should live by faith not by tithe. When ministers do the will of God, God will supply all their needs. A pastor whom I respect very much recently wrote a book on tithing. He was insisting that we must tithe, only to the local church and only to a full time church pastor! He was twisting verses and quoting out of context to suite his tithing doctrine. That book grieved me a LOT. It is very obvious that tithe preaching pastors are putting their faith in tithe than in God’s ability to provide.
A believer can also decide to give tithe to church/any ministry. But, this decision should be made out of free will , not out of any manipulation, pressure, compulsion, fear or guilty conscience.
I think our attitude in giving is also important. We should give out of love for God and God’s ministry. We shouldn’t give expecting a return though God may choose to bless us more financially because of our giving.
Ministers can talk about the needs in the ministry and ask people to give. Those led by the Spirit will give and the needs will be met.
Also another very much neglected aspect is, taking care of the poor and needy. Ministers preach again and again on giving to their ministry and it is rare to hear sermons on giving to the poor and needy. All the verses ministers quote on giving from NT( 2 Corin 8 & 9) were actually written by Paul when he was collecting money for charity - for the poor and needy in Jerusalem- not for his ministry work. Paul was actually working for his food and doing ministry. He cannot even be called a full time minister!
The following are some very good articles on tithing. Read and be blessed.
// என்னுடைய சொந்த கற்பனை: ஒருவர் வாங்கும் போது அவருடைய உள்ளங்கை கீழிருந்து மேல் நோக்கி இருக்கும் போலவும் ஒருவர் கொடுக்கும் போது அவருடைய உள்ளங்கை மேலிருந்து கீழ் நோக்கி இருக்குமா போலவும் தோன்றுகிறது;கொடுக்கிறவர்கள் எப்போதும் மேன்மையாகவும் உயர்வாகவும் கர்த்தர் வைத்திருப்பார். //
இதே கருத்தில் கர்ணனின் ஈகையைக் குறித்து உயர்வாகச் சொல்லும்போது இதே கருத்தில் சொல்லுவார்கள்;அதாவது கர்ணன் யாருக்கும் எதையும் கொடுக்கமாட்டானாம்,அவன் கையில் தேவையுள்ளோர் எடுத்துக்கொள்ளும் வண்ணமாக கையை நீட்டுவானாம்;அது கர்ணனின் தயாள குணத்துக்கும் வள்ளல் தன்மைக்கும் உதாரணமாகச் சொல்லப்படும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இந்த விவாதம் தலைப்புக்குப் பொருந்தாமல் திசைமாறி பயணித்துக் கொண்டிருக்கிறது; இங்கு யாருக்கும் யாரும் தீர்ப்பு செய்யப்போவதில்லை,கர்த்தரே தீர்ப்பு செய்வார்.
நண்பர்கள் 48 மணிநேரத்துக்குள் தமது பதிவுகளைக் கீழ்க்காணும் திரிக்கு மாற்றிவிடவும்; தொடர்ந்து இந்த திரியில் தசமபாகத்தைக் குறித்து விவாதிப்போம்; நன்றி.
அசோக்குமார் எழுதியது: //கிறிஸ்துவின் உதிரத்தை ஏன் அவமாக்குகிரீர்கள் என்று சொல்லி இருந்தால், நீங்கள் இவ்வளவு சீறி இருக்கமாடீர்கள் என்று நினைக்கிறன். பேச்சுதமிழிலில், அசிங்கப்படுத்துகிரீர்கள் என்று சொல்லியதால் அதில் உள்ள உண்மை உங்களை இப்படி சொல்லவைக்கிறது.//
அசோக்குமாரின் பழைய பதிவை தற்போதைய அவரது திருத்தத்தின்படி திருத்திய பதிப்பு: //கிறிஸ்துவின் உதிரத்தை நீங்கள் ஏன் அவமாக்குகிறீர்கள்? நீங்கள் இன்னும் ஏன் உங்கள் கிரியைகளை நம்பி இருக்கிறீர்கள்? கிருபை மூலம் ரட்சிப்பென்றால், எதற்கு இதை செய்யவேண்டும், அதை செய்யவேண்டும் என்ற விவாதங்கள்? உங்கள் கிரியைகளை நோக்கி பார்காதிருங்கள் (அவை நன்மையாய் இருந்தாலும், தீமையாய் இருந்தாலும்). தேவ கிருபையை மாத்திரம் சார்ந்து கொள்ளுங்கள். கிறிஸ்துவை சார்ந்து கொள்ளுங்கள், அவர் கிரியைகள் உங்களை தேவராஜ்யத்தை சுதந்தரிக்க செய்யும்.//
நண்பரே, இப்படி மொட்டையாக “ஏன் அவமாக்குகிறீர்கள்” எனக் கேட்டால் எப்படி? யார், எவ்வாறு அவமாக்கினார் என்பதை அவர் எழுதியதை மேற்கோள் காட்டி சொல்லுங்கள். ‘அவமாக்குதல்’ என்பது ஒரு கடுமையான வார்த்தை. இப்படிச் சொல்லி ஒருவரைக் குற்றம் சாட்டும் நீங்கள், எழுதின வார்த்தைக்குக் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் (தேவனிடம்). எனவே எதையும் பொறுப்புடன் எழுதுங்கள்.
‘இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யவேண்டும் என்ற விவாதங்கள் எதற்கு’ என்கிறீர்கள். வேதாகமம் கூட பல வசனங்களில் “இதைச் செய், அதைச் செய்யாதே” எனக் கூறவில்லையா? கிருபையினால் நீதிமான்களாக்கப்படுகிறோம் எனக் கூறின பவுல், “இதைச் செய், அதைச் செய்யாதே” எனக் கூறவில்லையா? நம்மை இரட்சிப்பதற்காக தம்மைப் பலியாகத் தந்த இயேசு “இதைச் செய், அதைச் செய்யாதே” எனக் கூறவில்லையா? ஒருவேளை இவர்களைப் போல் சொல்ல நமக்குத் தகுதியில்லை எனச் சொன்னால் அதை ஒருவகையில் ஏற்கலாம். ஆனால் அது கிறிஸ்துவின் இரத்தத்தை அவமாக்குகிறது என்றால் எப்படி ஏற்கமுடியும்?
சகோ.சுந்தர் அத்தனை சிரமப்பட்டு பல வசனங்களைப் பதித்து, அதற்கு விளக்கங்கங்களையும் கொடுத்திருக்க, மொட்டையாக ஒரு வரியில், அவர் எழுதியதை அவமாக்குதல் என்கிறீர்களே? உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா?
உங்கள் குற்றச்சாட்டுக்கான தகுந்த ஆதாரத்தை தகுந்த வசனம், மற்றும் தகுந்த மேற்கோளுடன் வையுங்கள். அது முடியவில்லையெனில், சொன்னதை வாபஸ் வாங்குங்கள்.
அசோக்குமார் எழுதியது: //நீங்கள் நியாயபிரமாணத்தை கைகொள்ளாதவர்மீது எறிய கல்லுகளை (வார்த்தைகளை, தீர்ப்புகளை) தயாராக வைத்து இருக்கிறீர்கள். உங்களுக்கு என் தேவனின் பாணியில் பதில் சொல்லுகிறேன், "உங்களில் யார் நியாயபிரமாணத்தை முழுமையாக கைகொண்டிருக்கிரீர்களோ, அவர் நியாயபிரமாணத்தை கைகொள்ளாதவர்மீது அடுத்த கல்லை வீசட்டும்".//
சுந்தரோ, நானோ எறிந்த கற்களில் (வார்த்தை, தீர்ப்பு) ஒன்றை எங்கள் பதிவுகளிலிருந்து நேரடியாக எடுத்துக்காட்டி, உங்கள் தீர்ப்புகளைச் (அதாவது: அவமாக்குகிறீர்கள், கல்லெறிகிறீர்கள் என்பது போன்ற தீர்ப்புகளைச்) சொல்லுங்கள். மீண்டும் மீண்டும் மொட்டையாக எதையும் சொல்லாதீர்கள்.
-- Edited by sam on Sunday 21st of November 2010 06:38:20 AM
சர்வரோக நிவாரணியாக இயேசு இருக்கும்போது, இதை கைகொள்ளவில்லை அதை கைகொள்ளவில்லை என்று கூச்சல் எதற்கு? நம்மால் பலவற்றை கைகொள்ளமுடிகிறது என்ற அகந்தை இப்படி சொல்லவைக்கிறது என்று உங்களுக்கு புரியவில்லையா? உங்களால் கைகொள்ளமுடிகிறது என்றால், உங்களுக்கு அவர் கொடுத்த கிருபைக்காய் நன்றி சொல்லுங்கள்.
மரியாள் தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை எதை செய்து தெரிந்து கொண்டால் என்று பாருங்கள்.
கிறிஸ்துவின் உதிரத்தை ஏன் அவமாக்குகிரீர்கள் என்று சொல்லி இருந்தால், நீங்கள் இவ்வளவு சீறி இருக்கமாடீர்கள் என்று நினைக்கிறன். பேச்சுதமிழிலில், அசிங்கப்படுத்துகிரீர்கள் என்று சொல்லியதால் அதில் உள்ள உண்மை உங்களை இப்படி சொல்லவைக்கிறது.
நீங்கள் நியாயபிரமாணத்தை கைகொள்ளாதவர்மீது எறிய கல்லுகளை (வார்த்தைகளை, தீர்ப்புகளை) தயாராக வைத்து இருக்கிறீர்கள். உங்களுக்கு என் தேவனின் பாணியில் பதில் சொல்லுகிறேன், "உங்களில் யார் நியாயபிரமாணத்தை முழுமையாக கைகொண்டிருக்கிரீர்களோ, அவர் நியாயபிரமாணத்தை கைகொள்ளாதவர்மீது அடுத்த கல்லை வீசட்டும்".
"ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்" அதுபோல் இயேசுவின் இரத்தத்தை குறித்து இந்நாட்களில் சாத்தான் ரொம்பவே ஆதங்கப்படுகிறான். ஏனெனில் அவனது முடிவு எங்கே இருக்கிறது என்பது அவனுக்கு தெரியாதா என்ன?
சகோதரர் அவர்கள் மீண்டும் நியாயபிரமாணத்தை நோக்கி ஜனங்களை திருப்புவது எனது நோக்கம் அல்ல. ஆனால் நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்ட காரியங்கள் புதிய ஏற்பாட்டு காலத்தில் போதிக்கப்பட்டிருந்தால் அதை நிச்சயம் கைக்கொள்ளவேண்டும் என்பதே எனது கருத்து.
தாங்கள் எழுதிய வேதசம்பாஷனை அனைத்தையும் கருத்தில் கொண்டு அதற்க்கு ஏற்ற பதிலையே தந்துள்ளேன். உண்மைகள் பல நேரம் கிறுகிறுக்க வைக்கத்தான் செய்யும்.
நான் எழுத வேண்டும் என்று எண்ணிய அனைத்து காரியத்தையும் ஏன் அதற்க்கு மேலாகவே சகோதரர் சாம் அவர்கள் தெளிவாக எழுதிவிட்டார்கள். எனவே எனது பதிலை நான் சுருக்கமாக முடிக்கிறேன்.
chillsam wrote:
////"அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே. " (ரோமர்.11:6 )////
ஒரு மனிதனுடைய இரட்சிப்பு என்பது தேவ கிருபையினா லேயே மட்டுமே கிடைக்கிறது அது நிச்சயம் கிரியையினால் உண்டானதும் அல்ல அது கிரியையினால் பெற முடிந்த காரியமும் அல்ல. அதை குறித்தே இங்கு பவுல் பேசுகிறார்.
இதை சொன்ன பவுல் இன்னும் சில காரியங்களை மிக தெளிவாக சொல்லியிருக்கிறார் அதையும் சற்று படித்து பாருங்கள்:
வசனத்தின் அடிப்படையில் பதில் இல்லைஎன்றால் இப்படி ஏதாவது ஒரு மாற்று கருத்தை கொண்டுவந்துவிடுகிரீர்கள்.
இயேசுவை "தேவனின் வார்த்தை" என்றும் அவர் தேவனின் ஒரு பகுதி என்றுமே நான் விசுவாசித்து எழுதி வருகிறேன் "பிதாவாகிய தேவன்தான் அப்படியே இயேசுவாக மாறி வந்துவிட்டார்" என்ற கருத்தையே நான் மறுக்கிறேன்.தாங்கள் சொல்வதுபோல் அவரை தொழுது கொள்வது பற்றி நான் எங்கும் விவாதித்ததாக எனக்கு கொஞ்சமும் நியாபகம் இல்லை. நான் அவ்வாறு எழுதியிருந்தால் எனக்கு அதற்க்கான சுட்டியை தரவும் உண்மையை ஆராய்ந்து நான் திருத்திகொள்கிறேன்.
-- Edited by SUNDAR on Saturday 20th of November 2010 11:52:32 AM
சில்சாம் எழுதியது: //நண்பர் சுந்தர் அவர்களுக்கும் முன்பதாக ஒரு குறிப்பிட்ட வேதபகுதியையே பதித்து அதில் கவனிக்க வேண்டிய வார்த்தைகளையும் ஹைலைட் செய்திருக்கிறேன்;அதனை சற்றும் கவனத்தில் கொள்ளாமல் சுந்தர் நம்மை பழைய ஏற்பாட்டு இன்ப சுற்றுலா அழைத்துச் சென்று தலையை கிறுகிறுக்க வைத்திருக்கிறார்;//
சகோ.சில்சாம், சுந்தர் எழுதியது எனக்கு கிறுகிறுப்பாக இல்லை; நீங்களும் அசோக்குமாரும் சொல்வதுதான் எனக்கு கிறுகிறுப்பாயிருக்கிறது. நீங்கள் ஹைலைட் செய்த வசனங்களில் நியாயப்பிரமாணப் போதனை தேவையில்லை என அன்றைய அப்போஸ்தலர்கள் தீர்மானித்தது மெய்தான். ஆனால் அதே அப்போஸ்தலர்கள் நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்ட கற்பனைகளைத்தானே ஆங்காங்கே போதனைகளாகக் கூறியுள்ளனர்? அவ்வாறெனில் அவர்களின் போதனையில் முரண்பாடு உள்ளதா? இதனை தயவுசெய்து எனக்குத் தெளிவுபடுத்துங்கள்.
பழைய ஏற்பாட்டு கட்டளைகளை எடுத்துச்சொன்ன சுந்தர், அப்போஸ்தலர்களின் நியாயப்பிரமாணப் போதனைகளையும் எடுத்துச் சொல்லியுள்ளாரே? ஆனால் நீங்கள் அவர் பழையஏற்பாட்டு இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றதாகக் கூறுகிறீர்கள். நீங்களும் இப்படி மொட்டையாகச் சொல்வது ஏனோவென எனக்குப் புரியவில்லை.
இந்த வசனங்களெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா சகோதரரே. இதையெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் சுந்தர் பழைய ஏற்பாட்டு இன்ப சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறுகிறீர்களே?
சில்சாம் எழுதியது: //பழைய ஏற்பாட்டில், ஒரு தேசத்தின் குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு சட்டங்கள் போலக் கொடுக்கப்பட்ட கட்டளைகள் ஒரு வீட்டுக்குள் பிள்ளைகள் கடைபிடிக்கவேண்டிய அடிப்படையான- தனிப்பட்ட- எளிமையான அன்றாட கடமைகள் போல மாற்றியமைக்கப்பட்டு அதற்குரிய சுதந்தரத்துடனும், தகப்பன்- பிள்ளை என்ற உறவு நிலையிலும் அச்சமின்றி நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.//
தகப்பன் - பிள்ளை உறவுநிலையைக் கூறுகிறீர்கள். ஆனால், இயேசுவின் கற்பனைகளின்படி செய்பவன்தான் பிதாவின் புத்திரனாக இருப்பான் என்றல்லவா இயேசு சொல்கிறார் (மத்தேயு 5:45)? அப்படியானால் புதியஏற்பாட்டுப் போதனையும் நம்மை நிர்பந்திக்கிறது, பயமுறுத்துகிறது எனச் சொல்லலாமே?
பழையஏற்பாட்டில் கட்டளைக்குக் கீழ்ப்படியாவிட்டால் தண்டனை என்றிருந்தது. ஆனால் புதியஏற்பாட்டில் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால் பிதாவின் புத்திரர் எனப்படும் சுதந்தரத்தை இழக்கவேண்டி வரும் என்றுள்ளது. இதுதான் பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் வித்தியாசம்.
பிதாவின் புத்திரர் எனும் சுதந்தரத்தைப் பெறவேண்டுமெனில், இயேசுவின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியத்தான் வேண்டுமென புதிய ஏற்பாடும் நிர்பந்திக்கத்தானே செய்கிறது?
சில்சாம் எழுதியது: //அடிமைகளுக்கும் அடங்காதவர்களுக்கும் கட்டளை கொடுக்கப்பட்டது; பிள்ளைகளுக்கோ அக்கறையுடன் ஆலோசனை தரப்பட்டது;//
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் தகப்பனின் ஆலோசனைப்படி நடக்காதவன், தகப்பனுக்குப் பிள்ளை எனும் சுதந்தரத்தை இழந்துபோவான் என மத்தேயு 5:45 கூறுகிறதே? ராஜ்யத்தின் புத்திரர், புத்திரருக்கான பாக்கியத்தை இழந்து அழுகையும் பற்கடிப்புமான இருளுக்குத் தள்ளப்படவேண்டியதாகும் என மத்தேயு 8:12 கூறுகிறதே?
தேவனுடைய ஆவியால் நடத்தப்படுபவன்தான் தேவனுடைய புத்திரன் என ரோமர் 8:14 சொல்கிறதே, தேவனுடைய ஆவியால் நடத்தப்படுதல் என்றால் என்ன? விளக்கமாகக் கூறுங்கள்.
சில்சாம் எழுதியது: //புதிய ஏற்பாட்டில் கற்பனைகள் என்று வருமிடத்தெல்லாம் அது பழைய கற்பனைகளையே குறிப்பிடுவதாக எண்ணுவது மனிதனின் அறியாமை.//
நீங்கள் சொல்வது 100-க்கு 100 சரியே. ஆனால் புதியஏற்பாட்டு கற்பனைகள் எவை? அவை முற்றிலும் பழையஏற்பாட்டுக் கற்பனைகளுக்கு மாறுபட்டவையா? விளக்கமாகச் சொல்லுங்கள் சகோதரரே.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இயேசுவைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டவர்கள் கூறுவது மட்டுந்தான் இத்தளத்தில் ஏற்கப்பட்டும்; மற்றவர்கள் வேதவசனங்களைச் சொன்னால்கூட அவர்கள் சொல்வது அசிங்கம் என்றுதான் விமர்சிக்கப்படும் என்பது போலுள்ளது. இயேசுவைத் தெய்வமாக ஏற்றிக்கொண்டவர்கள் மட்டுமே இத்தளத்தில் வரவேற்கப்படுவார்கள் எனும் கொள்கை ஏதுமுள்ளதா சகோதரரே?
சில்சாம் எழுதியது: //இந்த வசனத்தின் அடிப்படையிலான ஒரு விசேஷித்த செய்தியை விரைவில் எழுதுவேன் அதற்காகவே ஒரு திரியை ஆரம்பித்து வைத்திருக்கிறேன்; மற்றபடி கருகலான வேத எழுத்துக்களுக்கு சொந்த விளக்கங்களை யார் கொடுத்தாலும் நாங்கள் பொருட்படுத்துகிறதில்லை என்று முந்தி அறிக.//
உங்கள் விசேஷித்த செய்திக்காக காத்திருக்கிறேன். ஆனால், வேத வசனங்களுக்கான விளக்கங்களை யார் தந்தாலும் பொருட்படுத்துகிறதில்லை எனும் உங்கள் கொள்கை, என்னைப் போன்றவர்கள் வேதவசனங்களுக்கு விளக்கம் கொடுப்பதைத் தடைசெய்வதாக உள்ளது. தயவுசெய்து உங்கள் கொள்கையை மறுபரிசீலனை செய்யவும்.
சில்சாம் எழுதியது: //இடித்துப்போட்டவைகளையே மீண்டும் கட்டும் நியாயப்பிரமாணப் போதகர்களுக்கும் வசனத்தை இங்குங்கும் திரித்து எழுதும் உரிமை உண்டுதானே?//
இயேசுவும் அப்போஸ்தலரும் நியாயப்பிரமாணத்தின் ஒரு சிறு பகுதியைக்கூட போதிக்கவில்லை, அவர்களின் போதனைக்கும் நியாயப்பிரமாணத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை, அவர்களின் போதனை நியாயப்பிரமாணத்துக்கு முற்றிலும் மாறுபட்டது என உங்களால் திட்டவட்டமாகக் கூறமுடியுமா?
அசோக்குமார் எழுதியது: //கிறிஸ்துவில் நாம் நிலைத்திருந்தால், கனி கொடுப்பது இயற்கையாக வரும். அதேபோல், கட்டளைகளை நம் முயற்ச்சியால் கைகொள்ள முடியாது. ஆனால், கிறிஸ்துவில் நிலைத்திருந்தால், கட்டளைகள் நம்மில் நிறைவேறும் (கிறிஸ்துவில் நிறைவேறியதை போல). அதனால் கட்டளைகளை நோக்கி பார்க்காமல், கிறிஸ்துவை மட்டும் பார்ப்போம்.//
இதைத்தான் நல்ல கருத்து எனச் சொன்னதாகக் கூறுகிறீர்கள், சகோ.சில்சாம் அவர்களே.
கிறிஸ்துவில் நிலைத்திருந்தல் என்றால் என்ன? எதன்மூலம் ஒருவன் கிறிஸ்துவில் நிலைத்திருக்கமுடியும்? ஒருவன் எப்போது கிறிஸ்துவில் நிலைத்திருப்பவனாகக் கருதப்படுவான்? இயேசுவின் கற்பனைகளுக்குக் (உங்கள் அகராதிப்படி ஆலோசனைகளுக்குக்) கீழ்படியாதவன், கிறிஸ்துவில் நிலைத்திருப்பதாகக் கருதப்படமுடியுமா?
இப்பதிவிலுள்ள எனது எல்லா கேள்விகளுக்கும் தவறாமல் பதில் தரும்படி வேண்டுகிறேன்.
அன்பு சகோதரர் சாம் அவர்களே, நண்பர் சுந்தர் அவர்களுக்கும் முன்பதாக ஒரு குறிப்பிட்ட வேதபகுதியையே பதித்து அதில் கவனிக்க வேண்டிய வார்த்தைகளையும் ஹைலைட் செய்திருக்கிறேன்;அதனை சற்றும் கவனத்தில் கொள்ளாமல் சுந்தர் நம்மை பழைய ஏற்பாட்டு இன்ப சுற்றுலா அழைத்துச் சென்று தலையை கிறுகிறுக்க வைத்திருக்கிறார்;அவர் குறிப்பிட்டவையெல்லாம் கிறித்துவுக்கு நிழல் என்றும் அவை கிறித்துவில் நிறைவேறிவிட்டது என்றும் வேதம் சொல்லுகிறது.
பழைய ஏற்பாட்டில், ஒரு தேசத்தின் குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு சட்டங்கள் போலக் கொடுக்கப்பட்ட கட்டளைகள் ஒரு வீட்டுக்குள் பிள்ளைகள் கடைபிடிக்கவேண்டிய அடிப்படையான- தனிப்பட்ட- எளிமையான அன்றாட கடமைகள் போல மாற்றியமைக்கப்பட்டு அதற்குரிய சுதந்தரத்துடனும், தகப்பன்- பிள்ளை என்ற உறவு நிலையிலும் அச்சமின்றி நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பழைய ஏற்பாட்டின் பிரமாணம் ஒருவனை மனதளவில் குற்றவாளியாகவும் விழுகிறவனாகவும் வைத்திருந்தது;கிறித்துவின் மூலம் பெறப்பட்ட கிருபை வரமோ நம்மை பயத்திலிருந்து மீட்டிருக்கிறது.
அடிமைகளுக்கும் அடங்காதவர்களுக்கும் கட்டளை கொடுக்கப்பட்டது;பிள்ளைகளுக்கோ அக்கறையுடன் ஆலோசனை தரப்பட்டது;புதிய ஏற்பாட்டில் கற்பனைகள் என்று வருமிடத்தெல்லாம் அது பழைய கற்பனைகளையே குறிப்பிடுவதாக எண்ணுவது மனிதனின் அறியாமை.
இனி நீங்கள் குறிப்பிட்ட காரியம் தொடர்பாக...அதற்கு பதிலளிக்க வேண்டிய அசோக் அவர்களுக்கு முன்பாக நான் எனது கருத்துக்களை வாசகர் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்... // இப்படி மொட்டையாக “ஏன் அசிங்கப்படுத்துகிறீர்கள்” எனக் கேட்டால் எப்படி? //
முதலாவது நீங்கள் ஒன்றை அறியவேண்டும் நண்பரே, அசோக் அவர்களோ அல்லது நானோ எந்த பின்னணியிலிருந்து வந்தோமோ அல்லது எந்த உபதேசத்தில் தேறி வந்தோமோ அதற்காகவே நிற்கிறோம்;அசோக் மற்றும் நான் இருவருமே வேற்று மார்க்கத்தின் சடங்கு சம்பிரதாயங்களை வெறுத்து அதிலுள்ள போலித்தனத்திலிருந்து மீட்பு வேண்டியே இங்கே வந்தோம்;ஆண்டவருடைய பெரிதான கிருபையால் மிகச் சரியான சத்தியத்தைப் பெற்று நிர்மலமானதொரு விசுவாசத்தைப் பின்பற்றுவதாக எண்ணிக்கொண்டிருக்கிறோம்.
அதற்கு மாறாக யார் என்ன சொன்னாலும் அதிர்ச்சியாக இருக்கிறது;உதாரணமாக எனது நண்பனிடம் நான் சொல்கிறேன்,'எனக்கெல்லாம் ஒரு கஷ்டம் வந்தால் நீ ஓடிப்போயிருவே நீ யாருன்னு எனக்கு தெரியாதா ' என்று நான் கூறினால்,என் நண்பன் என்ன சொல்வான்,"ஏண்டா இப்படி நம்ம நட்பை அசிங்கப்படுத்தறே" என்று சொல்வானல்லவா? அசிங்கம் என்பதற்கான மாற்று சொல்லோ மேன்மைப்படுத்தல் என்பதற்கான எதிர்சொல்லோ கிடைக்காத சூழ்நிலையில் சொல்லப்பட்ட வார்த்தையானது அத்தனை தவறானதல்ல.
ஏனெனில் சுந்தர் போன்றவர்கள் இயேசுவை தெய்வமாகவே ஏற்றுக்கொள்ளவில்லை;நானும் அசோக்கும் இயேசுவை இரட்சகராக மட்டுமல்ல,தொழத்தக்க தெய்வமாகவே பாவிக்கிறோம்;
நாங்கள் மேன்மையாகக் கருதும் விசுவாசத்துக்கு எதிராக எழுதுவோர் எமது விசுவாசத்தை மட்டுமல்ல,அதனை எங்களுக்குள் விதைத்த தேவனையும் தூஷிக்கிறார்கள்;அவருடைய தியாகத்தைக் கொச்சைப்படுத்தி மீண்டும் பயத்தினால் மார்க்கத்தினாலேயே மார்க்கத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கிறார்கள்;
"அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே. " (ரோமர்.11:6 )
// சகோ.சுந்தர் அத்தனை சிரமப்பட்டு பல வசனங்களைப் பதித்து, அதற்கு விளக்கங்கங்களையும் கொடுத்திருக்க, மொட்டையாக ஒரு வரியில், அவர் எழுதியதை அசிங்கம் என்கிறீர்களே? உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா? //
இடித்துப்போட்டவைகளையே மீண்டும் கட்டும் நியாயப்பிரமாணப் போதகர்களுக்கும் வசனத்தை இங்குங்கும் திரித்து எழுதும் உரிமை உண்டுதானே?
//சகோ.சில்சாம், எதன் அடிப்படையில் அசோக்குமார் எழுதியதை “நல்ல கருத்து” எனச் சொன்னீர்கள் என்பதை தெளிவுபடுத்தினால் நன்றாயிருக்கும்.//
// கிறிஸ்துவில் நாம் நிலைத்திருந்தால், கனி கொடுப்பது இயற்கையாக வரும். அதேபோல், கட்டளைகளை நம் முயற்ச்சியால் கைகொள்ள முடியாது. ஆனால், கிறிஸ்துவில் நிலைத்திருந்தால், கட்டளைகள் நம்மில் நிறைவேறும் (கிறிஸ்துவில் நிறைவேறியதை போல). அதனால் கட்டளைகளை நோக்கி பார்க்காமல், கிறிஸ்துவை மட்டும் பார்ப்போம். //
மேற்கண்ட வரிகளையே நல்ல கருத்து என்று கூறினேன்...இதுவும் முழுமையானதல்ல..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ashokkumar எழுதியது: //கிறிஸ்த்துவின் ரத்தத்தை நீங்கள் ஏன் அசிங்கப்படுத்துகிரீர்கள்? நீங்கள் இன்னும் ஏன் உங்கள் கிரியைகளை நம்பி இருக்கிறீர்கள்? கிருபை மூலம் ரட்சிப்பென்றால், எதற்கு இதை செய்யவேண்டும், அதை செய்யவேண்டும் என்ற விவாதங்கள்?//
அன்பான சகோதரரே, இப்படி மொட்டையாக “ஏன் அசிங்கப்படுத்துகிறீர்கள்” எனக் கேட்டால் எப்படி? யார், எவ்வாறு அசிங்கப்படுத்தியுள்ளார் என்பதை அவர் எழுதியதை மேற்கோள் காட்டி சொல்லுங்கள். ‘அசிங்கப்படுத்துதல்’ என்பது ஒரு கடுமையான வார்த்தை. இப்படிச் சொல்லி ஒருவரைக் குற்றம் சாட்டும் நீங்கள், எழுதின வார்த்தைக்குக் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் (தேவனிடம்). எனவே எதையும் பொறுப்புடன் எழுதுங்கள்.
‘இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யவேண்டும் என்ற விவாதங்கள் எதற்கு’ என்கிறீர்கள். வேதாகமம் கூட பல வசனங்களில் “இதைச் செய், அதைச் செய்யாதே” எனக் கூறவில்லையா? கிருபையினால் நீதிமான்களாக்கப்படுகிறோம் எனக் கூறின பவுல், “இதைச் செய், அதைச் செய்யாதே” எனக் கூறவில்லையா? நம்மை இரட்சிப்பதற்காக தம்மைப் பலியாகத் தந்த இயேசு “இதைச் செய், அதைச் செய்யாதே” எனக் கூறவில்லையா? ஒருவேளை இவர்களைப் போல் சொல்ல நமக்குத் தகுதியில்லை எனச் சொன்னால் அதை ஒருவகையில் ஏற்கலாம். ஆனால் அது கிறிஸ்துவின் இரத்தத்தை அசிங்கப்படுத்துகிறது என்றால் எப்படி ஏற்கமுடியும்?
சகோ.சுந்தர் அத்தனை சிரமப்பட்டு பல வசனங்களைப் பதித்து, அதற்கு விளக்கங்கங்களையும் கொடுத்திருக்க, மொட்டையாக ஒரு வரியில், அவர் எழுதியதை அசிங்கம் என்கிறீர்களே? உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா?
உங்கள் குற்றச்சாட்டுக்கான தகுந்த ஆதாரத்தை தகுந்த வசனம், மற்றும் தகுந்த மேற்கோளுடன் வையுங்கள். அது முடியவில்லையெனில், சொன்னதை வாபஸ் வாங்குங்கள்.
chillsam எழுதியது: //ஆதங்கத்துடன் கூடிய நல்லதொரு கருத்துக்காக நன்றி,நண்பரே;//
சகோ.சில்சாம், எதன் அடிப்படையில் அசோக்குமார் எழுதியதை “நல்ல கருத்து” எனச் சொன்னீர்கள் என்பதை தெளிவுபடுத்தினால் நன்றாயிருக்கும்.
நண்பர் சந்தோஷ் அவர்களுக்கு தங்கள் எழுத்தை நீக்குவதற்கு முழு உரிமை உண்டு;ஆனால் விரிவான விவாதத்துக்கு உதவக்கூடிய கருத்துக்களை எந்தவித நியாயமான காரணமுமின்றி நீக்குவது சரியானதா என்று யோசிக்கவும்;நீங்கள் விரும்பினால் அதனை நான் சுட்டியுள்ள திரியில் அதாவது நியாயப்பிரமாணம் சம்பந்தமான திரியில் பதிக்க வேண்டுகிறேன்.
நண்பர் சந்தோஷ் நமது எழுத்துக்களை மேற்கோள் காட்டி எழுதியிருப்பதால் இந்த திரிக்கு சம்பந்தமில்லாததாக இருந்தாலும் அதற்குரிய பதிலைப் போட்டு வைக்கிறோம்;தேவைப்பட்டால் இதனை தனி திரியாக்கலாம்...
சகோதரர் சில்சாம் அவர்கள் சொன்னது // ஆனால் ஒரு தவறான செய்தியினால் புதியவர்கள் தடுமாறாதிருக்க சிலராவது எழும்பி அதைக் குறித்து எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்; இந்த குறிப்பிட்ட கருத்து அனைவருக்கும் பொதுவானது;
உதாரணத்துக்கு பின்வரும் வரிகள்...இது சந்தோஷ் அவர்கள் கண்டும் காணாதது போல தூவிச் செல்லும் ஒரு கருத்தாகும்;
// அவருடைய ஞானம் அளவிடப்பட முடியாதது. ஞானமானது கர்த்தரின் பெண்சக்தியாகும்.. அவர் தன்னுடைய ஞானத்தோடு ஆலோசனை செய்தார். //
உங்கள் கருத்துக்கு நன்றி. இந்த வார்த்தையின் பின்பாக ஒரு வசனம் விடுபட்டு போயுள்ளது. அதை இப்போது சேர்த்து விட்டேன். அந்த வசனம்
ஆதி 5.1. ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். 2. அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார். (தேவ சாயல் - ஆணும், பெண்ணுமாக)
இதுபோன்ற சொந்த விளக்கங்களாலேயே குழப்பம் விளைகிறது;எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணாதிருக்கவும் வேதம் போதிக்கிறது.
எந்தவொரு அடிப்படை ஆதாரமுமில்லாமல் தேவனிடமிருக்கும் பெண் தன்மையே ஞானம் என்று எழுதிவிட்டு அதற்கு மேற்கோளாக சம்பந்தமில்லாததொரு வசனம் போடப்பட்டுள்ளது;
// (தேவ சாயல் - ஆணும், பெண்ணுமாக) //
என்பதற்கு இன்னும் விளக்கம் தேவைப்படுகிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நண்பர்களுக்கொரு தாழ்மையான வேண்டுகோள் எந்த ஒரு பின்னூட்டத்தையும் படித்து கருத்து சொல்லும் முன்பதாக அந்த குறிப்பிட்ட திரியின் தலைப்பையும் அதன் முதல் அறிமுக செய்தியையும் கவனத்தில் கொள்ளவும்;இது நம்முடைய விவாதம் மையப் பொருளை விட்டு விலகாதிருக்க உதவியாக இருக்கும்;
இங்கே முன்வைக்கப்படும் எந்த ஒரு கருத்தையும் தணிக்கை செய்யவோ நீக்கவோ நான் விரும்புகிறதில்லை;ஆனால் ஒன்று செய்கிறேன்;குறிப்பிட்ட அந்த திரியை முடக்குகிறேன்;காரணம் விவாதம் அதிகமாக திசை மாறி சென்றுவிட்டால் புதிதாக வரும் நண்பருக்கு இங்கே என்ன நடக்கிறது என்றே தெரியாமல் போய்விடும்; நான் ரொம்ப யோக்கியமல்ல,நானே இந்த தவறை தெரிந்தும் தெரியாமலும் செய்திருக்கிறேன்;
தொடர்ந்து இங்கே நண்பர் சந்தோஷ் அவர்கள் முன்வைத்திருக்கும் நீண்ட பின்னூட்டத்தைப் பொறுமையாக வாசித்தோருக்கு சில கருத்து வேறுபாடுகளும் சங்கடங்களும் ஏற்படக்கூடும்;அவர் பொதுவாகவே கட்டுரை அல்லது அறிக்கை போல பதித்து செல்கிறவர்;நேரடி விவாதத்துக்கு வரக்கூடியவரல்ல;அவரது பல கருத்துக்கள் ஏற்புடையதாக இருப்பினும் சில வரிகள் சர்ச்சைக்குரியதாகவும் ஏற்கத்தகாததுமாக இருக்கும்;அதற்கான தொடுப்பையும் தரமாட்டார்;நாம் அதை பொருட்படுத்தாது சென்று விட்டால் பரவாயில்லை,
ஆனால் ஒரு தவறான செய்தியினால் புதியவர்கள் தடுமாறாதிருக்க சிலராவது எழும்பி அதைக் குறித்து எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்; இந்த குறிப்பிட்ட கருத்து அனைவருக்கும் பொதுவானது;
உதாரணத்துக்கு பின்வரும் வரிகள்...இது சந்தோஷ் அவர்கள் கண்டும் காணாதது போல தூவிச் செல்லும் ஒரு கருத்தாகும்; // அவருடைய ஞானம் அளவிடப்பட முடியாதது. ஞானமானது கர்த்தரின் பெண்சக்தியாகும்.. அவர் தன்னுடைய ஞானத்தோடு ஆலோசனை செய்தார். //
இதனை விமர்சிக்கும் போது இரண்டு விளைவுகள் உண்டாகும்;ஒன்று இந்த கருத்து ஏன் சரியாக இருக்கக்கூடாது என்ற எண்ணம் புதியவருக்குத் தோன்றும்;அல்லது இந்த கருத்தை எப்படி மறுக்கமுடியும் என்ற தவிப்பு உண்டாகும்;
இதில் விமர்சிப்பவர் இரண்டு தவறுகளைச் செய்யமுடியும்;ஒன்று தேவையில்லாத ஒரு கருத்துக்கு அறிமுகம் கொடுத்த தவறு;மற்றொன்று அதற்கு சரியான மறுப்பு கூறாது;
இதன் காரணமாகவே பலரும் தவறுகளைக் கண்டும் காணாமல் செல்கின்றனர்;ஒரு கருத்து தவறானது என்றறிந்தும் அதனை தவறு என்று நிரூபிக்க இயலாதிருப்பது ஒரு மயக்கம்தான்; இதனை நாம் உணர்ந்து நம்மை உருவாக்கிக் கொள்ளவேண்டியதாகிறது;
காரணம் கண்டும் காணாமல் செல்வதைவிட அதினால் ஏற்படும் பாதிப்பு அதிகமாகும்.
இங்கே தசமபாகத்தைக் குறித்த விவாதத்தையொட்டி நியாயப்பிரமாணத்தைக் குறித்த அவரது கருத்துக்கள் மேற்கோள் போல அதிகமாக வந்துள்ளதால் வாசிப்பதில் சற்று சோர்வு ஏற்படுகிறது;
நியாயப்பிரமாணம் ஒழிக்கப்பட்டுவிட்டது என கருதும் போதகர்கள் தங்கள் காணிக்கை உறையில் தசமபாக காணிக்கை என அச்சிட்டிருப்பது முரண்பாடு போலிருக்கிறது;அதற்கு விளக்கமாக நியாயப்பிரமாணத்துக்கு முன்பே தசமபாகம் செலுத்தப்பட்டதைக் கூறுவர்;அதையும் எதிர்த்து இன்றைக்கு பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர்;
சந்தோஷ் அவர்களின் கருத்துக்களை நிதானமாக வாசித்தபிறகு அவரிடம் நான் கேட்க விரும்பியது என்னவென்றால்,நீங்கள் நியாயப்பிரமாணத்தைக் குறித்து மிக எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள்,ரொம்ப சந்தோஷம்;
ஆனால் நிபந்தனையற்ற தேவ சுபாவமும் உணர்வுமான அன்பை எப்படி நியாயப்பிரமாணத்தில் ஒரு பகுதியாக்க இயலும்?
நியாயப்பிரமாணத்துக்கு அன்பு ஆதாரமாக இருப்பினும் அன்பின் மூலமாக நியாயப்பிரமாணம் நிறைவேறுகிறதாக இருப்பினும் அன்பை கட்டளையாக்க இயலுமா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்;
அதாவது என்னை நீ நேசித்தாக வேண்டும் என்று யாரையாவது நான் வறுபுறுத்த முடியுமா?