இந்த படத்தில பால் முட்டி போட்டுண்டு இருக்கிறா போல தெரியுதே... ஆஹா இதுல ஏதோ டிகால்டி வேல இருக்கு... அண்ணன் பால் அவர்களின் எதிரிகள் தான் ஏதோ சூழ்ச்சி செய்திருக்கிறார்கள்...அவர் இயேசுவின் முன்பு மாத்திரமே முழந்தாலிடும் வழக்கம் உள்ளவர்..!
தினகரன்ஸ் எதற்காக இதுபோல வணங்கி நின்றார்கள் என்றதற்காக விளக்கத்தையோ வருத்தத்தையோ இன்றுவரை கிறித்தவ சமுதாயத்திடம் தெரிவிக்கவில்லை; பெரியவர் போயே சேந்துட்டார்..!!
ஆனால் கத்தோலிக்க மார்க்கத்தின் தலைவரான போப் ஆண்டவரோ பல சமயங்களில் த...ங்கள் மார்க்கத்தார் மேற்கொண்ட தவறான காரியங்களுக்காக பெயரளவிலாவது வருத்தம் தெரிவித்திருக்கிறார்..!!!
ஆனால் சூடுண்ட இந்த பொய்யரோ தங்களுடைய அனைத்து செயல்களையும் நியாயப்படுத்தியே வந்திருக்கிறார்கள்;நாம் தான் பெரிய மனது பண்ணி பொது மன்னிப்பு வழங்கவேண்டும் போலிருக்கிறது...!!!!
இன்று (12.12.2010) இரவு (8pm) சகோதரன் பால் தினகரன் அவர்களின் நிகழ்ச்சியை இருவேறு சானல்களில் அடுத்தடுத்து பார்த்துக் கொண்டிருந்தேன்; இரண்டு நிகழ்ச்சிகளின் ஆரம்பத்திலும் அவர் மீண்டும் மீண்டும் சொன்ன வார்த்தை,"இன்று இரவு ஆண்டவர் உங்களை உயர்த்தப்போகிறார், இதை என்னிடம் சொல்லியே இறைவன் இயேசு என்னை அனுப்பினார்,'என் பிள்ளைகளை உயர்த்தப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல் ' என்று சொல்லியிருக்கிறார்" என்று மீண்டும் மீண்டும் சொன்னபிறகு வழக்கம்போல 1.பேதுரு.5:6 -ஐ எடுத்துப் போட்டார்கள். "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். " இதனால் உயர்த்தப்படுவதற்கு முதல் தேவையான அடங்கியிருத்தலைக் குறித்த போதனை வரும் என்பது அர்த்தமல்ல,ஏற்றக்காலம் இதுவே என்ற ரீதியிலேயே போதனை செல்கிறது.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் எனக்குள் தோன்றிய எண்ணமானது, "ஆண்டவரை உயர்த்தச் சொல்லிப் போதிப்பது சரியா அல்லது ஆண்டவர் உயர்த்தப் போகிறார் என்று போதிப்பது சரியா " என்பதே;
ஆண்டவர் என்னை உயர்த்தப்போகிறார் என்ற போதனையே ஈர்க்கும்படியாக இருக்கிறது;ஆண்டவரை உயர்த்தச் சொல்லும் போதனை சோர்வடையச் செய்துவிடுகிறது;காரணம்,செவித்தினவு ... அதாவது காதில் அடைத்திருக்கும் கொழுப்பு..!
என்னது காதுல கொழுப்பா...? அது எப்படி...? அது அப்படித்தான்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இது என்னுடைய வலைப்பூவுக்கு வந்த அனானியின் விமர்சனத்துக்கான பதிலாகும்.
// இத்தனை சொல்கிற நீங்களே உங்கள் வலைமலரிலும் பல விவாதமேடையிலும் இயேசுவின் படத்தை பற்பல விதத்தில் பயன்படுத்தியுள்ளீர்களே, அது தவறென தற்போது உணர்ந்துள்ளீர்களா?
உங்களைப் போன்ற பலர் இயேசுவின் படத்தைப் பயன்படுத்தியுள்ளதைப் போலவே, பால் தினகரனும் செய்துள்ளார். இதில் அவரை விமர்சிப்பதற்கு உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. முதலில் உங்கள் தவறை உணருங்கள்.
உங்களைப் போன்ற பலர் இயேசுவின் படத்தை பயன்படுத்தி வருவதால்தான், அது ஒரு விக்கிரகமாக மாறி வருகிறது. நீங்களெல்லாம் ஏன்தான் இயேசுவின் படத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது தெரியவில்லை.
அன்புக்குரிய அனானி அவர்களே,தளத்திற்கு வந்து பார்வையிட்டு தங்கள் கருத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றி;
நான் இயேசுவின் படத்தைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்ளுகிறேன்;இந்த கட்டுரையை வரையும்போதே அந்த எண்ணம் எனக்கு உருத்தலாகவே இருந்தது;
ஆனாலும் கிறித்தவ சமுதாயத்தின் அடையாளமாக முன்னணியில் இருப்போர் எதை செய்கிறார்களோ அது அநேகரைப் பாதிக்குமல்லவா?
கீழ்க்கண்ட விவாதத்தைப் பாருங்கள்,இந்த பின்னூட்டங்களுக்கும் எனது கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை;எனவே நம்மை குறைக் சொன்னவருக்கு எனது கட்டுரையின் தொடுப்பைக் கொடுத்திருக்கிறேன்;
SATHESH, on September 15, 2010 at 22:31 Said:
உயர்திரு திருச்சி ஐயா, அவர்கள் இஷ்டம் விக்ரக வழிபாட்டினருடன் உணவு உண்ணாமல் இருந்துவிட்டு போகட்டும். அவர்களிலேயே வேளங்கன்னியில் அன்னை புனித மரியாளை வணங்குபவர் இருக்கிறார்கள் அவர்களுடனும் இவர்கள் கலந்திருக்க மாட்டார்களா? பெண்டகோஷ்ச்டேல் சபையிலும் சிலர் சிலுவையை (சிலுவை என்ற விக்ரகத்தை) அதன் மேல் பட்டு துணி சாற்றி வணங்குகிறார்கள்.
முழு அருவ வழிபாடு இந்து மதத்திலும் ஒரு அங்கம் அதை பயில்பவர் எவரும் உருவ வழிபாட்டினரை விட்டு விலகி வழ வேண்டும் என்று சட்டம் போட்டதோ, உதாசீனப் படுத்தியதோ வரலாறு இல்லை.
சுட்ட பின் சட்டுவமும்,சட்டியும் வேண்டாம் அனால் சுடும் வரை வேண்டும் என்று உள்ளவரும் மற்றவரை தாழ்வென்று சொன்னதில்லை.
சாகும் வரை உருவ வழிபாட்டிலே மூழ்கியவர்களும் பிறவற்றை தாழ்வென்று கூறவில்லை.
கிறித்தவ இந்து சண்டை,இந்து முஸ்லிம் சண்டை,இந்துக்களுக்குள் சண்டை,முஸ்லிம்களுக்குள் சண்டை,க்ரித்தவர்களுக்குள் சண்டை என்று கேட்டும் படித்தும் இருக்கிறோம் ஆனால் பார்ப்பனருக்கும் பிறருக்கும் சண்டை என்று கேட்டோ,படித்தோ இல்லை.அப்படி எதாவது இருந்தால் தெரியப் படுத்துங்கள். (நான் கேட்பது அடி உதை, வெட்டு குத்து ரேஞ்சுக்கு )
அன்றன்றுள்ள அப்பத்தை இன்று எங்களுக்குத் தாரும் என இறைவனை மன்றாடும் நிலையிலிருக்கும் என் போன்றோர் இவ்வளவு தான் செய்யமுடியும்,”கற்க கசடற..!”
சீனு, on September 17, 2010 at 22:31 Said:
chillsam,
உங்களின் அந்த தளத்தில் இயேசுவின் உருவம் எப்படி இருக்கவேண்டும் என்ற வாதம். ஆனால், இயேசுவின் உருவம் இப்படி இருக்காது என்று சில வருடங்கள் முன்பு படித்திருக்கிறேன். அதேபோல, அவர் உருவம் எப்படி ‘இருந்திருக்கவேண்டும்’ என்று ஒரு மாதிரி உருவமும் போட்டிருந்தார்கள்.
இத நான் சொல்லலைங்க. சொன்னதும் உங்க ஆளுங்க தான். இதன்படி நாம் சீர்திருத்தக் காலத்தைக் கடந்துவிடவில்லை என்பதை முந்தி அறியவும்; தாங்கள் குறிப்பிடுவதுபோல நான் அறிவீனமாக இருந்தால் அங்கே பால் தினகரன் அமைத்துள்ளது போல ஒரு தியான மண்டபத்தை அமைத்து அங்கே இயேசுவை சித்தரிக்கும் ஏதோ ஒரு படத்தை அமைத்து அதன் முன்பு அமர்ந்து வழிபடுவேன்;ஆனால் நானோ ஏன் பால் தினகரனோ கூட அதுபோல செய்கிறதில்லை;
ஆனால் விக்கிரகங்களையே பார்த்து பூஜித்து பழக்கப்பட்டுவிட்ட மக்களைத் திருப்திபடுத்த இதுபோன்ற சமரசங்கள் தேவைப்படுகிறது;இதுவே பால் தினகரன் தரப்பின் விளக்கமாக இருக்கும்; ஏனெனில் உருவ வழிபாடு என்பது பைபிளில் நேரடியாகவே கண்டிக்கப்படுகிறது எனபதில் சந்தேகமில்லை;
என்னைப் போன்றோர் இயேசுவை சித்தரிக்கும் படங்களை ஒரு அடையாளக் குறியீடு போலவே பாவிக்கிறோம்;உதாரணத்துக்கு சாலைவிதிகளைச் சித்தரிக்க அங்காங்கு சைகை குறியீடுகளை (Traffic Signals)அமைத்துள்ளதைப் போலவும் ஒரு கதையை சித்திரத்தின் மூலம் (Cartoon) விளக்குவது போலவும் மட்டுமே பாவிக்கிறோம்; இதற்கும் கூட நம்முடைய சபையானது கடந்துவந்த பாதைகளே காரணம்;கத்தோலிக்கத்தின் பாதிப்பு இல்லாமல் நம்மால் கிறித்தவத்தைக் கொண்டு செல்லமுடியாததாலேயே இந்த குறைபாடு நிலவுகிறது;பால் தினகரனும் கூட கத்தோலிக்கர்களையும் இன்னபிற உருவ வழிபாட்டாளர்களையும் கவருவதற்காகவே இதுபோன்ற சித்திரங்களைப் பயன்படுத்துகிறார்;
சபைகள் சிதைக்கப்படக் காரணமே இதுபோன்ற சுயநல கோடீஸ்வரர்களும் ஆதிக்கவெறி பிடித்த அரசாங்கங்களும் தானே தவிர என்னைப் போன்ற வழிப்போக்கர்களாலல்ல என்பதை முந்தி அறியவும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நம்முடைய தேசத்தில் கிறித்துவின் சுவிசேஷத்தை அறிவிப்பதில் அதிகம் பயன்பட்டது இயேசு அழைக்கிறார் ஊழிய ஸ்தாபனம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடும்;அவர்கள் மூலம் அநேக மக்கள் தொடர்ந்து ஆண்டவரைக் குறித்துக் கேள்விப்பட்டு நெருங்கிவருகிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே;
சகோ.DGS.தினகரன் அவர்களது மறைவுக்குப் பிறகு அண்மைக்காலத்தில் சகோ.பால் தினகரன் அவர்களுடைய ஊழிய பாணியானது மாற்றமடைந்து வருவதைப் பலரும் கவனித்திருக்கலாம்;அவர் ஏதோ ஒரு விஷயத்தில் தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள எண்ணி அதற்கான முயற்சியாக தனது தந்தையான சகோ.DGS.தினகரன் அவர்கள் மறைந்ததுமே சில புதிய காரியங்களை அறிவித்தார்;தனக்கு அப்போஸ்தல தீர்க்கதரிசன அபிஷேகம் ஊற்றப்பட்டிருப்பதாகவும் அதைக் கொண்டு அநேகரை இறைவன் இயேசு அபிஷேகிக்கச் சொல்லியிருப்பதாகவும் சொல்லிக் கொண்டார்;அவருடைய ஊழிய ஸ்தாபனமானது (ஆம்,அதிலென்ன சந்தேகம்..?) அவர்தம் தந்தையாரின் முயற்சியினாலோ "இறைவன் இயேசு"வின் (?) திருவருளாலோ எந்தவித பொருளாதார சிக்கல்களும் இல்லாமல் பிரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது;அதன் அடையாளமாக தேசமெங்கும் நிலங்கள் வாங்கப்படுகிறது;பத்திரம் கையெழுத்தாகிறது; கோபுரங்கள் எழுப்பப்படுகிறது;இவையெல்லாம் ஏற்கனவே இறைவன் இயேசு உரைத்த தீர்க்கதரிசன நிறைவேறுதல்களாகவே இருக்கட்டும்,எந்த பிரச்சினையுமில்லை;
ஏனெனில் எரேமியா.32:44 ல் சொல்லப்பட்ட வசனம் இவர்களுக்காக சொல்லப்பட்டதாகவே தோன்றுகிறது;ஆனால் அவை பொதுசொத்தாக வாங்கப்படாததுதான் சங்கடமாக இருக்கிறது;
"பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்."(எரேமியா.32:44)
அதுவும் போகட்டும்,அண்மையில் டெல்லி அருகே பாராளுமன்ற கட்டிடத்துக்கு மிக அருகில் கட்டப்பட்டுள்ள மற்றுமொரு ஜெப கோபுரத்தின் திறப்பு விழாவின் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் ஒரு புகைப்படத்தில் நம்முடைய இறைவன் இயேசு ஏதோ ஒரு மூடில் நம்மைப் பார்த்து முறைக்கிறார்;
இதனைக் கண்டதும் எனக்கு பல யோசனைகள் வந்துபோனது; இதனைக் கண்டிப்பதா,கண்டும் காணாமல் விட்டுவிடுவதா எனக் குழப்பம் ஒருபுறமும் நம்முடைய அருமை சகோதரரை எல்லோருமே கண்டு(டி)க்காமல் விட்டு விட்டால் அவர்மீது இருப்பதாக அவர் சொல்லிக்கொண்டிருக்கும் அப்போஸ்தல தீர்க்கதரிசன அபிஷேகம் டேமேஜ் ஆகுமே என மறுபுறமும் தவித்துப் போனேன்;
ஏனெனில் ஒரு படிப்பறிவில்லாத தாயார் என்னிடமே ஒரு சமயம் கேட்டார்கள், நம்ம ஆண்டவரை ஏன் இதுபோல ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி வரைகிறார்கள்;நாமெல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கிறோம்,அவருக்கு மட்டும் ஒவ்வொரு படத்திலும் ஒரு மாதிரி முகம் இருக்கிறதே என;
அப்படியானால் அந்த தாயாரைப் பொறுத்தவரையிலும் ஆண்டவருக்கென்ற ஒரு உருவம் இருக்கும் எனவும் அது வெவ்வேறாக இருக்கும் போது எந்த உருவத்தை மனதில் நிறுத்தித் தொழுவது என்றும் குழம்புகிறார்கள்;
ஒரு காரியத்தைச் சொல்லும்போது அது எளிதில் புரியும் வண்ணமாக அதனை ஒரு சித்திரம் மூலம் வரைவது வழக்கமான நடை,முறைதான்;ஆனாலும் அப்போஸ்தல தீர்க்கதரிசன அபிஷேகத்தையுடையவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் நம்முடைய சகோதரன் எப்படி கர்த்தருடைய பிரசன்னத்தை நாடி மக்கள் வரும் ஜெபக் கூடத்தில் ஆண்டவருடைய உருவத்தை சித்தரிக்கும் ஏதோ ஒரு படத்தை வைக்கலாம் என்பதே நம்முடைய கேள்வி;
கீழ்க்காணும் வேதப் பகுதியில் உருவ வழிபாட்டைக் கண்டிக்கும் மாறாத வேதபகுதியை வாசக நண்பர்கள் கவனித்து தங்கள் கருத்தைப் பதிவுசெய்ய அன்புடன் வேண்டுகிறோம்.
Deu 4:7 நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?
Deu 4:8 இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது?
Deu 4:9 ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில்,
Deu 4:10 உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.
Deu 4:11 நீங்கள் சேர்ந்து வந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.
Deu 4:12 அந்த அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடே பேசினார்; வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு ரூபத்தையும் காணவில்லை.
Deu 4:13 நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.
Deu 4:14 நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்திலே கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார்.
Deu 4:15 கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.
Deu 4:16 ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும்,
Deu 4:18 பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின் கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,
Deu 4:19 உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள். (உபாகமம்.4:7 முதல் 19 வரை)
இந்த கொள்கையானது எப்போது திருத்தப்பட்டது என்பது விளங்கவில்லை; ஒருவேளை இது பிதாவாகிய தேவனுக்கே பொருந்தும் என்பார்களோ? அப்படியானால் அவரையும் தள்ளிவிட்டு இறைவன் இயேசு என்று தானே மீண்டும் மீண்டும் விளிக்கிறார்கள்;
பிதாவின் ஸ்தானத்தை இயேசுவுக்குக் கொடுத்துவிட்டு இயேசுவானரின் கிறிஸ்து எனும் ஸ்தானத்தை சிலர் எடுத்துக்கொண்டு போட்ட ஆட்டங்களும் அதன் தற்கால விளைவுகளையும் குறித்த ஒரு ஆய்வு கட்டுரையை விரைவில் எதிர்பாருங்கள்;