தமிழ்நாட்டின் ஏதோ ஒரு குக்கிராமத்துக்கும் இறைமகன் இயேசுவின் அன்பு வானொலி வழியே கடந்து சென்று படிப்பறிவில்லாத ஏழை எளிய மக்களையும் தழுவிக் கொள்ளுகிறது என்பதற்கு ஒரு உயிரோவிய சா(கா)ட்சி..!
இது கள்ளங்கபடமில்லாத ஒரு கிராமத்து பாட்டியின் மெய்யான அனுபவமாகும்;தொலைக்காட்சியைவிட வானொலியே அதிகமாக மனதை ஈர்க்கிறது என்றும் ஆராய்ச்சிகள் சொல்லுகிறது;இந்த உயிருள்ள சாட்சியின் மூலம் அது நிரூபணமாகிறது;
DRB Rating எனும் பார்வையாளர் கணிப்பு பொறியிலும்கூட கிறித்தவ நிகழ்ச்சிகள் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே பதிவாகியிருக்கிறதாம்;ஆனால் வானொலியோ தொலைக்காட்சி இல்லாத மலைக் கிராமங்களிலும் குக் கிராமங்களிலும் விரைவாகவும் இலவசமாகவும் சென்றடைகிறது;
இந்த அனுபவத்துக்குப் பிறகு இங்கே தார்ச் சாலைகளில் சாகுபடி செய்வதைப் போல கோட்டு சூட்டு ஒப்பனைகளுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இலட்சக்கணக்கான ரூபாய்களை இறைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய ஊழிய கனவான்கள் தங்கள் ஊழிய முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமோ என்று தோன்றுகிறது;
இங்கே இணையதளத்தின் வழியாக அந்த வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கவும் இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்பெறவும் உதவும் தொடுப்பைக் கீழே கொடுத்திருக்கிறோம். http://radio882.com/download_tamil.htm
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)