அண்மையில் ஒரு நண்பர் மூலம் மேற்காணும் விளம்பர அட்டையைக் கிடைக்கப் பெற்றேன்; இது யாரையும் குறைசொல்லுவதற்காகவோ விளம்பரப்படுத்துவதற்காகவோ இங்கே பதிக்கப்படவில்லை;
மாறாக இதிலுள்ள மாற்றுக் கருத்துகளோ அல்லது நல்ல விஷயங்களோ தள நண்பர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்படுவதால் நம்மைச் சுற்றி நடக்கும் ஊழியமுறைகளைக் குறித்த செய்தியை அறிவார்களே என்ற பொதுவான நல்லெண்ணத்திலேயே இந்த அட்டையை இங்கே விளம்பரப்படுத்துகிறேன்;
இந்த அட்டையானது எனது கைக்கு வரப்பெற்றதும் எனது வழக்கமான வைராக்கியத்தின்படி கோபமே வந்தது; விசாரித்தபின் பரிதாபம் ஏற்பட்டது; மல்லாக்கப் படுத்துக்கொண்டு ஏதேதோ யோசித்து எப்படியெப்படியோ ஊழியம் என்ற பெயரில் எதையெதையோ செய்கிறார்கள், எப்படியும் போகட்டும் என விட்டுவிட்டேன்;
இந்த ஊழியத்தை (..??) கடந்த 13 வருடமாக செய்கிறார்களாம்; உலக மக்கள் செய்வது போல மாதச் சீட்டு போலப் பணத்தை சேகரித்து அதைக் கொண்டு இந்த சுற்றுலா வியாபாரத்தை மன்னிக்க,ஊழியத்தை நடத்துகிறார்கள்; பேண்டு மற்றும் பிரசங்கியாருடன் சென்று சுற்றுலா தலங்களுக்கு (இவர்கள் சுற்றுலா செல்லவில்லையாம்..!) வரும் சுற்றுலா வாசிகளுக்கு பாட்டுப் பாடி சுவிசேஷம் சொல்லுவார்களாம்; இது எப்படி இருக்கு?
இதனை நேர்மையுடன் செய்தாலாவது பரவாயில்லை;அதிலும் ஏதேனும் மோசடி செய்து 'லம்ப் 'பாக ஒரு அமௌண்ட்டை லவட்டிக் கொண்டு வடதேச மிஷினரி ஊழிய அழைப்பை ஆண்டவரிடமிருந்து பெற்று ஊழியர் புறப்பட்டு விட்டால் ஊர் சிரிக்கும்... சந்தி சிரிக்கும்... ஏன் சூரியனும் சிரிக்கும்... அதான் சன்டிவி..!
சிலர் 'நல்ல ஐடியா,நாமும் செய்யலாம் போலிருக்கிறதே' என்று யோசிப்பது போலத் தெரிகிறது..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)