இந்த கட்டுரையில் யார் யார் தாக்கினார்கள் நண்பரே... அதே உறுதிகொண்ட நெஞ்சில் கையை வைத்து யோசித்து சொல்லுங்களேன்...
நான் ஆபிரகாமிய வர்க்கத்தான் என்பதில் பெருமை கொள்கிறேன்; அதுமட்டுமே இன்றைய உலகமுழுவதையும் வியாபித்துள்ள வர்க்கமாகும்; இஸ்ரவேலர், கிறித்தவர், இஸ்லாமியர் ஆகிய இம்மூன்று பிரதான மார்க்கங்களும் ஆபிரகாமின் வழிவந்தவையே;
அரசியலில் வலதுசாரி இடதுசாரி என்று இருப்பதைப் போல மனுக்குலத்திலும் ஆபிரகாமியம் மற்றும் மற்றவர்கள் என்பது ஒருபோதும் தவிர்க்கமுடியாது; ஆனால் கொடுமை என்னவென்றால் பல்வேறு சடங்குகளைக் கொண்ட ஆபிரகாமிய வர்க்கத்தார் இந்துக்களை விமர்சிக்கின்றனர்; கல்லைச் சுற்றி வந்து வணங்கும் இஸ்லாமியர் (ஹஜ்) தாம் உருவமில்லாத இறைவனை வணங்குவதாகச் சொல்லிக்கொள்வதும் கிறித்தவர் மாதாவையும் தூதரையும் மரித்த புனிதர்களையும் வணங்கிக்கொண்டு கையில் அதனைக் கண்டிக்கும் பைபிளையும் வைத்திருப்பதும் மெய்யாகவே நகைப்புக்குரியது;
இதில் யூதர் மாத்திரமே வித்தியாசப்பட்டு நிற்கின்றனர்; யூதருடைய சடங்குகளாக பைபிளில் சொல்லப்படுபவற்றையும் நம்மருகில் ஒரு இந்து செய்யும் சடங்குகளையும் உற்று நோக்கினால் பெரிய வித்தியாசம் ஒன்றுமிராது; எங்கே பிரிகிறோம் என்பதே புரியவில்லை..!
ஆபிரகாமிய வழி வந்த நேரடி வாரிசுகளான யூதருடைய வாழ்க்கை முறையும் இந்துக்களின் வாழ்க்கை முறையும் ஏதாவது ஒருவகையில் ஒத்திருந்தாலும் இந்துக்களும் ஆபிரகாமிய வழிவந்தோர் என்ற அதிர்ச்சிகரமான உண்மையானது வெளிப்படும்;
ஞானிகளுடைய இருதயம் உண்மையைத் தேடும்; அடையும் வரை உறங்காது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இந்த கட்டுரை தொடர்பாக தமிழ் கிறித்தவ தளத்தில் இடப்பட்டுள்ள ஒரு கருத்தும் அதற்கு நம்முடைய பதிலும்... rawangjohnson: // காலையில் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் படுக்கைக்குச் சென்றாலும், புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை. இப்போ, எனது கணினியில் மணி அதிகாலை 3.09. சுமார் நள்ளிரவு 12.00 மணியளவில் தமிழ்ஹிந்து தளத்தில் மேற்கண்ட தலைப்பிலான கட்டுரையைப் படித்து மன பாரத்தோடுதான் படுக்கச் சென்றேன். தூக்கம் வராம்ல் அந்தக் கட்டுரை என்னைக் குழப்பிக் கொண்டிருந்தது.
குழப்பத்திற்கு மத்தியில் பிசாசானவனின் சூழ்ச்சியை நினைத்தும் வியந்து போனேன். விசுவாச வாழ்க்கையில் ஆழமாகக் காலூன்றி பதிந்து நடந்தோலும், எதார்த்தமாக அங்குச் சென்று படிக்கும் போது, நமக்கே கொஞ்சம் தலை சுற்றத்தான் செய்கிறது. இவர்களின் கட்டுரையைப் பற்றி கொஞ்சம் விமர்சனம் எழுத வேண்டும் என்று தேவன் நினைத்தாரோ தெரியவில்லை. அறையிலேயே உள்ள கணினியில் வந்து அமர்ந்து கொண்டேன். கட்டிலும் என்னைப் பரிதாபமாகப் பார்க்கிறது.
குழந்தை உருவாகிறபோதே அதன் மனித இயற்கையால் (அவர்கள் என்ன நல்லது கெட்டது செய்தாலும்) யாஹ்வே தெய்வத்திற்குப் பிடிக்காததாக இருக்கிறது.
இது கிறிஸ்தவத்தைப் பற்றிய இந்துக்களின் பார்வையாக இருக்கிறது. அதாவது கருவில் சிதைந்து போகிற குழந்தை ஞானஸ்நானம் பெறாததினால், நரலோகத்திற்குப் போகுமா என்று கேட்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள் இதுபோன்ற கேள்விகளைத் திடீரென்று இபோதான் சந்திக்கிறார்கள் என்று ஹிந்துக்கள் நினைக்கக் கூடாது. எனவே, இப்படிப் பட்ட கேள்விகளை அள்ளி எறிந்தால் அவர்களைத் தலைதெறிக்க ஓட வைக்கலாம் என்றும் இந்துக்கள் நம்பலாகாது.
கிறிஸ்தவத் தத்துவப்படி கருவில் அழிகின்ற குழந்தை எந்தப் பாவமும் செய்யாமல் இருந்தும் அது நரகத்திற்குதான் செல்லும் என்று நீங்கள் கருதுகிறீர்கள். கிறிஸ்தவர்கள் உங்கள் கேள்விக்கு ஆம் என்றும் இல்லை என்றும் பதில் சொல்ல முடியாது என்றும் நினைக்கிறீர்கள். இந்துக்கள் பார்வையில் கிறிஸ்தவக் கோட்பாடு தவறானது என்பதை நிரூபிக்க சுவாமி விவேகானந்தர் உரையைச் சுட்டிக் காட்டுகிறீர்கள்.
இங்கேதான் சாத்தானின் தந்திரம் நிறேவேறுகிறது. இந்தக் கட்டுரைக்குப் பின்னூட்டம் ஒரு இநது சகோதரர், யாராவது தன்னைப் பார்த்துப் பாவிகளே என்று கூப்பிட்டால், அவரை எப்படித் துறத்தியடிக்கத் தெரியும் என்றும் பதிலளித்திருக்கிறார்.
ஐயா, நீங்கள் இந்தக் கட்டுரையை அச்சடித்துத் தாராளமாக, உங்களைப் பாவிகளே என்று கூப்பிடும் மஷனரிகளிடம் காட்டி பதில் கேட்கலாம். ஒரு வேளை அதைப் படித்து விட்டு அந்த மிஷனரி பதில் கூறாமல் போய்விடுவார். நீங்களும், உங்களுக்கு வெற்றி கிடைத்து விட்டதாக ஆர்ப்பரிப்பீர்கள். ஏன், எனக்கே கூட கருவில் மரிக்கும் சிசுவைக் கர்த்தர் நரகத்துக்கு அனுப்புவாரா, சொர்க்கத்திற்கு அனுப்புவாரா என்று தெரியாது.
இங்கேதான் சாத்தானின் தந்திரம் பரிணாமம் அடைகிறது. பாம்பாக வந்த சாத்தான் கூட, ஏவாளிடம் முதல் சந்திப்பில் தேவனின் நிபந்தனையைப் பற்றி கேள்வியாகத்தான் கேட்டான். அந்த சாத்தான் அறிந்திருக்க மாட்டானா? இப்படியொரு நிபந்தனையைத் தேவன் வித்திருக்கிறார் என்று? நிச்சயமாகத் தெரிந்திருக்கும் என்றால், ஏன், ஏவாளிடம் வினா வடிவில் சம்பாஷனையைத் தொடங்க வேண்டும்? வினா வடிவில் கேட்டு, ஏவாளால் பதில் சொல்ல முடியாவில்லால், மனிதனின் தேவ கீழ்ப் படிதலைப் பாதியாவது பாழாக்கிப் போடலாம் என்ற நம்பிக்கை சாத்தானுக்கு இருந்திருக்க வேண்டும். சாத்தானின் நம்பிக்கையும் பலித்தது. பதில் சொல்வதில் தடுமாறிப் போன ஏவாளிடம், நீங்கள் சாவதில்லை. மாறாக தேவனைப் போல் ஞானம் பெறுவீர்கள் என்று வஞ்சகமாக ஆசை வார்த்தை காட்டி விட்டான். அந்த வஞ்சகத்தில் விழுந்த மனித குலம், தலைமுறை தலை முறையாய் பாவத்தில் விழுந்து வருகிறது.
சாத்தானுக்குத் துணை போகிற இந்த இந்துத் தளம் மீண்டும் இதே காரியத்தில், திரும்பத் திரும்ப குழந்தை பருவத்திலும் கருவுற்ற பருவத்திலும் மரித்துப் போகிற சிசுகளின் நிலை என்ன என்று கேள்வி எழுப்புபிறது. இதைப் படித்தவுடன் எனக்குக் குழப்பம்தோன் ஏற்பட்டது. அதனால்தான் என்னவோ தெரியவில்லை, புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை.
ஆர்.கோபால் என்பவர் கட்டுரையை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரைக்குத் தனபால், எஸ்எஸ், கந்தர்வன், ராமா, தூயவன், பாஸ்கர், சாராங், கோயமுத்துர் கவுண்டன், உமாசங்கர், ஜெயசங்கர், கோபால், ஸ்டீபன், போன்றோர் தாங்கள் தெளிவு பெற்று விட்டதாகப் பின்னூட்டம் எழுதியுள்ளனர்,
உலகைக் காண்பதற்கு முன் உயிர் நீத்து விடுகிற குழந்தைகளின் நிலையைப் பற்றி கிறிஸ்தவர்களிடம் கேள்வி எழுப்பி, கிறிஸ்தவர்களும் ஒழுங்கா பதிலைத் தரமுடியாமல் நம்மை மடக்கப் பார்க்கிறார்கள். சிலிசாம் கூட கிறிஸ்தவர்கள் சார்பில் ஏதோ எழுதியிருக்கிறார்.
சாத்தான் தந்திரமுள்ளவன் - இதனை நான் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
சாத்தான்தான் இவ்வுலகத்திற்குள் பாவத்தை இறக்குமதி செய்தது.
அதே சாத்தான் மீண்டும் வந்திருக்கிறான். பாம்பின் வடிவமாக அல்ல, மேலே கூறப்பட்டுள்ள இந்து சகோதரர்கள் ரூபத்தில். அவர்கள் கேள்வி, பிறப்பதற்கு முன் அழிந்து போகின்ற சிசுக்களின் நிலை, கிறிஸ்தவர்களின் பார்வை என்ன? என்பதாகும். இது சாத்தானால் ஏவப்பட்ட கேள்வி. இந்தக் கேள்வியைக் கேட்டவர்களுக்கு,அவர்களின் பின்புலத்தில் சாத்தான் இருப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் எல்லாம் ஒரு வேளை, தாங்கள் ஆச்சாரமான குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும், தவறாமல் சாமிகுப்பிடுகிறவர்கள் என்றும், கௌரவமான குடும்பம் என்றும் இப்படி என்னென்னவோ சொல்வார்கள்.
பிறந்த குழந்தை - பிறந்த குழந்தை - பிறந்த குழந்தை
இதற்குக் கிறிஸ்தவர்கள் பதில் சொல்லமுடியவில்லை என்றால் ஆர்எஸ்எஸ் இந்துக்கள் இந்தக் கேள்வியை மூலாதாரமாக வைத்து மேலும் நமது மிஷனரி நடவடிக்கைகளைக் குறுக்கிறடுவார்கள்.
ஆனால்,கட்டுரையாளருக்கும் பின்னூட்டம் எழுதியவருக்கும் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்.
உங்களிடத்தில எந்தப் பாவமும் இல்லையா? பிறக்காத குழந்தைகளைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். நீங்கள் இந்த உலகில் வாழ்ந்து உங்கள் மார்க்கப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் கேட்கிறேன். கடுகளவுகூட பாவம் இல்லையா,உங்கள் வாழ்க்கையில். பிறக்காத குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். நீங்கள் பிறந்து விட்டீர்கள். உங்களிடத்தில் எந்தவிதமான பாவமும் காணப்படவில்லையா? ஆம்/இல்லை என்று எதாவது ஒரு பதில் தாருங்கள். பிறந்த குழந்தையைப் பற்றிக் கேள்வி எழுப்ப சாத்தான் தூண்டி விட்டிருக்கிறான். அவனுடைய இலட்சியம், தேவன் இலவசமாகத் தந்த இரட்சிப்பை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதுதான். இந்துமதம்தான் தமிழர்களின் தாய்மதம். அதனால், ஆபிராமிய கொள்கையை நாம் இங்கு இறக்குமதி செய்ய வேண்டாம் என்று அதே சாத்தான் உங்களை ஏவிவிடுவான்.
உங்களிடம் எழுதிக் கொண்டிருக்கும் நான் ஒரு பாவி என்பதை ஒப்புக் கொள்கிறேன். இந்த பாவம் ஆதாமின் கீழ்ப்படியாமையினால் வந்தது. ஆனாலும், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் எங்களுக்கு இந்தப் பாவத்தில் இருந்து விடுதலையைத் தந்தது என்று விசுவாசிக்கிறோம். அதனால் எங்களுக்கு இரட்சிப்பு உண்டு.
இதைப் படித்தவுடன், சாத்தான் தயாராக வைத்துள்ள அடுத்த கேள்வியை உங்கள் மூளைக்குத் திணித்து விடுவான்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம்தான் உங்களை நரக அக்கினியில் இருந்து உங்களைக் காக்கிறது என்றால், கிறிஸ்துவுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் கதி என்னவானாது? - இதுதானே சாத்தான் உங்களைக் கேட்கத் தூண்டுகிறது.?
ஒரு வேளை கிறிஸ்தவர் தரப்பில் யாரும் பதில் தரமாட்டார்கள். நீங்களும், கிறிஸ்தவர்கள் பதில் சொல்லாமல் ஓடி ஒழிந்து விட்டார்கள் என்று எழுதி பெருமைப் பட்டுக் கொள்வீர்கள்.
ஆனால், கிறிஸ்தவர்கள் விதைகளை நிலத்தில் தூவிக் கொண்டே போவார்கள். உங்கள் மனம் மாதிரி மணலும் முட்செடியும் நிறைந்த நிலத்தில் விழுகின்ற விதைகள் ஒரு வேளை முளைக்காமல் போகலாம். ஆனால், நிச்சயமாக செழிப்பான கருமண்ணிலும் கிறிஸ்துவின் இரட்சிப்பு விதை விழும். அந்த விதை நன்றாக நிலத்தைப் பற்றிக் கொண்டு ஓங்கி வளரும்.
இப்போ மணி 4.00 ஆகிவிட்டது. ஏதோ சாத்தானை எதிர்த்து எழுதி விட்டேன் என்ற நம்பிக்கையில் மீண்டும் தூங்கச் செல்கிறேன். முடிந்தால் மற்ற பதிப்பில் சந்திப்போம். //
// சிலிசாம் கூட கிறிஸ்தவர்கள் சார்பில் ஏதோ எழுதியிருக்கிறார். //
அன்பான சகோதரர் அவர்களுக்கு தங்களது இந்த வரிகள் எனது மனதைப் புண்படுத்தியது;கடந்த இரண்டு வருடமாக நானும் சகோ.அசோக்குமார் கணேசன் எனும் நண்பர் ஆகிய இருவர் மட்டும் தமிழ் ஹிந்து தளத்துக்கெதிராக நின்று போராடிக் கொண்டிருக்கிறோம்; அவ்வப்போது வேறு சில சகோதரர்களும் கிளாடி என்ற சகோதரியும் அதிகம் போராடியதுண்டு;அங்கே நமக்கெதிராக எழுதப்படும் தூஷணங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே இருக்கிறோம்;
மற்றபடி நம்முடைய நீண்ட விளக்கங்களை அவர்கள் பதிக்கிறதில்லை என்பதே உண்மை; எனவே அவர்களுடைய இயல்பு தெரிந்ததால் திசை திருப்புவது போன்ற சில கருத்துக்களை எழுப்பிவிட்டு எனது தளத்துக்கு வரவழைக்கிறேன்; எனது தளத்தில் அந்த கட்டுரைக்கு நேர்த்தியானதொரு பதிலை ஆயத்தம் செய்து தொடராக எழுதிவருகிறேன்; இதற்காக இரண்டு முழு இரவுகள் உழைத்திருக்கிறேன்; இதனைப் பெருமையாகவோ ஆயாசமாகவோ குறிப்பிடாமல் கர்த்தருடைய வைராக்கியத்துடனும் கர்த்தருக்கு மகிமையாகவும் குறிப்பிடுகிறேன்;
இது தமிழ் ஹிந்து தளத்தில் பதிக்கப்பட்ட என்னுடைய பதிலுக்கான தொடுப்புகள்:
B.பாஸ்கர் 17 September 2010 at 3:51 pm // வணக்கம்,சகோதரர் சில்சாமின் விளக்கங்கள் படித்தேன் புதியதாய் என்ன இருக்கப் போகிறது? ஆனால் கிறிஸ்துவம் தனது தவறுகளை திருத்திக்கொள்வதாக எழதி இருந்தார், தவறுகள் உள்ளது என்று ஒப்புக் கொள்ளவும் ஒரு தைரியம் வேண்டும். அது அவரிடம் உள்ளது. நன்றி.
பல ஆண்டுகளாக இந்துக்கள் தங்களை திருத்திக் கொள்ளாமல் இருப்பதாக வேறு வருத்தம் தெரிவித்து இருக்கிறார். நான் கேள்விப் பட்ட ஒரு விஷயம். உண்மை தனக்கு ஆதாரம் தேடுவதில்லை. ஆரம்பத்தில் எப்படி இருந்ததோ அப்படியே இறுதி வரையிலும் இருக்கும். ஆனால் பொய் தன்னை நிரூபிக்க பல ஆதாரங்களை தேட வேண்டி உள்ளது. தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும். //
அற்புதமான கருத்து நண்பர் பாஸ் (எ) பாஸ்கர் அவர்களே..! ஆனால் பிரச்சினை ஆதாரம் தேடுவது பற்றியதல்ல;தன் ஆதாரங்களை நோக்கி முன்னேறுவதாகும்;
எந்த ஒரு சமுதாயத்திலுமே தலைமுறைகள் மாறிவரும்போது மாற்றங்களும் இயல்பு;ஆனாலும் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் நின்று சுயபரிசோதனை செய்து நாம் எங்கிருந்து வந்தோம், எங்கு போகிறோம், ஏன் இங்கு இருக்கிறோம் என்று யோசிக்காத சமுதாயம் உயிர்மீட்சி அடைய முடியாது; இந்த அளவுகோலில் இந்து சமுதாயம் முழுவதும் வளைந்து நெளிந்து போயிருக்கிறது என்பதே உண்மை.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// சில்சாம், ஒரே ஒரு கேள்வி: கருவாக இருக்கும்போதே இறக்கும் சிசுக்களின் கதி என்ன?
(1) அவை “ஆதி பாவத்தால்” இறந்து போகும் பச்சைக் குழந்தைகளும், கருவறையிலேயே இறக்கும் சிசுக்களும் நரகத்திற்குப் போகின்றன என்று St. Augustine போன்ற உங்கள் ஆதிகாலத் தலைவர்கள் கூறுகின்றனரே? அவரை ஏற்கிரீர்களோ இல்லையோ, சிசுக்கள் நரகம் செல்வதை ஏற்றுக் கொண்டால் உங்கள் கர்த்தர் கருணையே இல்லாதவன் என்றாகிவிடுமே?
(2) இறக்கும் சிசுக்கள் சுவர்க்கம் போகின்றன என்றால், சம்சாரத்தில் இருப்பவர்களுக்கு பெரும் அநியாயமாகிவிடுமே? ஏன் சிலரை மாத்திரம் ஈசியாக சொர்க்கம் அனுப்புகிறார்? உம் போன்றவர்க்கு அந்த ஈசியான வழியை ஏன் கொடுக்கவில்லை? கர்த்தர் பாரபட்சம் பார்ப்பாரோ? அது இருக்கட்டும், இறக்கும் சிசுக்கள் சொர்க்கம் தான் போகின்றன என்றால் நீங்கள் கருகலைப்பையும் சிசுவதையையும் ஏன் எதிர்க்கிறீர்கள்? அவர்களை சிசுவாக இருக்கும்போதே அழிந்து நிச்சயமாக சுவர்க்கம் போவதைத் தடுக்கிரீர்களே? என்ன கருணையின்மை உமக்கு? //
chillsam 17 September 2010 at 12:51 am அன்பு நண்பர் கவரும் கந்தர்வனுக்கு வாழ்த்துக்கள்; ஒரே ஒரு கேள்வி என்று இத்தனை கேள்வி கேட்டால் என்ன நியாயம்? இதில் எதற்கு என்று நான் பதில் சொல்வேன்? நான் என்ன முழு உலகக் கிறித்தவத்துக்கும் ஸ்போக்ஸ்மேன் என்று நினைத்தீர்களா? நானும் உங்களிலிருந்து வந்தவந்தான்! வேண்டுமானால் என்னுடைய இந்தியத் தன்மையையும் தமிழ் இரத்தத்தையும் சோதித்துப் பாருங்கள்;
கிறித்துவின் நற்செய்தி என்பது இதற்கெல்லாம் அப்பாற்பட்டது; ஆனால் கிறித்தவத்தின் மீது நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகளெல்லாம் வெளிநாட்டு சட்டதிட்டங்கள் மற்றும் கலாச்சாரம் சம்பந்தப்பட்டதாகும்;
நானோ கிறித்தவத்தின் எந்த பிரிவையும் சேராதவன்; உலகமுழுவதும் மரண தண்டனை நிறைவேற்ற ஒரே மாதிரியான நடைமுறை இருக்கிறதா என்ன? அதுபோலவே கருக்கலைப்போ சிசுவதையோ அந்தந்த வட்டாரத் தேவையைப் பொறுத்ததாகும்;
நீங்கள் தான் இந்த உலகம் கடவுளுக்கு சொந்தமெனவும் அவரே நம்மைச் சுற்றி நடப்பவையாவற்றுக்கும் பொறுப்பாளி என்று நம்புகிறீர்கள்; என்னுடைய கருத்து வித்தியாசமானது;
எந்தவொரு உயிரையும் துன்புறுத்துவது இறைவனுடைய நோக்கமல்ல; மாறாக இறைசக்தியின் எதிர்சக்தியான சாத்தானே உயிர்களைக் கவர்ந்து செல்கிறான்; இது அனைத்து மார்க்கங்களுக்கும் பொதுவான நம்பிக்கையாகும்;
அப்படி இறையடி சேரும் உயிர்களை அது எத்தனை மாதக் குழந்தையோ அல்லது வயது முதிர்ந்த கிழவனோ இறைவன் தன்னிடமாக ஏற்றுக்கொள்கிறான்; உதாரணத்துக்கு இயேசுபெருமான் சிலுவை மரத்தில் உயிர்விடும் போது அவர் தனது ஆவியை இறைவனிடமே ஒப்புவித்தார்; இது ஒரு பார்வை;
மற்றபடி இந்த ஜீவியத்தில் அன்றாடம் நாம் செய்யும் ஒவ்வொரு கர்மாவுக்கும் பலனை அடைந்தே தீரவேண்டும் என்பது ஏற்கனவே நமது மார்க்கத்தில் உள்ள நம்பிக்கை தானே;
ஒரு இந்து நம்பிக்கையாளனாக உங்களைக் கேட்டால் கருவில் கலையும் சிசுவின் நிலையைக் குறித்து என்ன சொல்லுவீர்கள்? அந்த துன்பத்துக்கு யார் காரணம்? ஒரு பாவமுமறியாத அந்த இளம் தாய்க்கு நேர்ந்த துன்பத்துக்கும் ஏமாற்றத்துக்கும் யார் காரணம்? கிரகதோஷமா, சர்ப்ப தோஷமா, சாமி குத்தமா, முற்பிறவி சாபமா, செய்வினையா, செயப்பாட்டுவினையா, விதியா, மருத்துவ காரணமா, மாமியார் கொடுமையா, கள்ளக் காதல் சாபமா, தற்கொலை செய்துக்கொண்ட கன்னிப்பெண்ணின் சாபமா, குட்டிசாத்தானின் சித்துவேலையா, சூனியமா, மந்திரமா………..etc…….etc……..? இப்படி எனக்குத் தெரியாத தங்களுக்குத் தெரிந்த ஏதோ ஒரு காரணத்தையும் இதனால் துன்பமடைந்த உயிர்களுக்கு நல்ல தீர்வையும் நீங்களே சொல்லுங்களேன்..!
இங்கே பின்னூட்டமிட இயலாதோர் எனது வலைப்பூவைத் தொடர அன்புடன் வேண்டுகிறேன்.
தமிழ்ஹிந்து தளத்தில் வெளியாகும் கிறித்தவ விரோதக் கட்டுரைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைப்பதைப் போன்றதொரு மாயை பரப்பப்பட்டு வருகிறது;அது ஒன்றும் அதிசயமல்ல,அந்த குழுவினர் கடைபிடித்துவரும் சில தந்திரங்களே அதற்குக் காரணம்; தமிழ் ஹிந்துவின் தந்திரங்கள் அவர்கள் கடைபிடித்துவரும் தந்திரங்களில் ஒன்று நம்முடைய நியாயமான விளக்கங்களைப் பதிக்கிறதில்லை;ஆனாலும் விவாதம் சூடுபிடிக்கவேனும் ஒரு சில விமர்சனங்களைப் பதித்து அதற்கு பரியாசம் செய்யும் தோரணையில் ஒரு சிலரை விட்டு எழுதி அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கட்டுரைக்கு பொருந்தாத வெற்றுக் கூச்சல்களால் பின்னூட்டப் பகுதியை நிரப்பி கிறித்தவ நம்பிக்கைகளை தூஷிக்கும் பல்வேறு நபர்கள் மூலம் எதையாவது எழுதிவைப்பார்கள்;
தமிழ் ஹிந்துவின் சூழ்ச்சிகள் இது ஒருவகையில் நம்முடைய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முடக்கும் சூழ்ச்சியாகவே தோன்றுகிறது;ஏனெனில் இவர்களூடைய கட்டுரைகளைப் படிப்பதிலும் அதற்கு சரியான பதில் கொடுக்கவேண்டுமே என்ற துடிப்பிலும் அநேக நல்ல எழுத்தாளர்களுடைய பொன்னான நேரம் வீணாகிக் கொண்டிருக்கிறது;
தமிழ் ஹிந்துவின் சட்டவிரோத செயல்பாடுகளின் விளைவுகள் மேலும் சில நல்ல உள்ளங்கள் மனச்சோர்வினாலும் மனஅழுத்தத்தினாலும் தவித்துக்கொண்டிருக்கிறது;இது சட்டப்படி குற்றம் என அறிந்தே இந்த மாபாதகத்தை தமிழ்ஹிந்து குழுவினர் செய்து கொண்டிருக்கின்றனர்;அநேக கிறித்தவ நம்பிக்கையாளர்கள் இந்த தூஷணங்களை நம்பாவிட்டாலும் மனம் வெதும்பி எப்படி இதனைத் தடுப்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர்;
இந்த ஹிந்து வெறியர்களூம் கூட மறைமுகமாக பைபிளை பிரபலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்;இதன் எதிர்விளைவானது நன்மையாகவே முடியும் என்பது உண்மையான மார்க்க நம்பிக்கையாளர்களின் கருத்தாகும்.
இது தமிழ் ஹிந்துவில் அண்மையில் வெளியான முதல்பாவம் 1 & 2 கட்டுரைக்கான நமது பின்னூட்டம்...
இந்த முதல் பாவத்திற்குப் பின்னால் பூமி சபிக்கப்பட்டது ஏன்? பூமியும் அதிலுள்ள யாவையும் இன்று உள்ளது போல மனிதர்கள் ஆட்சி செய்வதற்காகவே உண்டாக்கப்பட்டது;(ஆதி3:17.) ஆகவே சகலமும் சபிக்கப்பட்டது; இது எப்படி என்று உங்கள் பாணியிலேயே விளக்குகிறேன்; ஜாதகம் கணிப்பவர்களிடம் சென்று கால சர்பதோஷம் என்றால் என்ன என்று கேட்டுப்பாருங்கள்; இது எதனால் உண்டாகிறது என்றும் கேட்டுப்பாருங்கள்; மேலும் இது அந்தப் பரம்பரையில் எத்தனை தலைமுறைக்கு வரும் என்றும் கேட்டுப் பாருங்கள்; அதை நான் இங்கு விளக்கப்போவதில்லை, ஆனால் ஒரு பாவம் மனிதனுடைய எத்தனை தலைமுறைகளை பாதிக்கும் என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த சாட்சி; அப்படிப்பட்ட கீழ்ப்படியாமையின் பாவம் தான் ஆதாம் ஏவாளின் பாவமும்; மேற்சொன்ன காலசர்ப்ப தோஷத்தில் எப்படி தலைமுறை தலைமுறையாக பாதிப்பு இருக்குமோ அப்படித்தான் முதல் மனிதர்களின் பாவமும் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? இல்லை பொய் என்று சொல்லிவிட முடியுமா? முடிவை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.
ஆர். கோபால் 15 September 2010 at 11:30 pm
அன்புள்ள சில்சாம், சாபம் என்பது உண்டா, கால சர்ப தோஷம் என்பதெல்லாம் அப்புறம் இருக்கட்டும். முதலாவது விஷயம், முதல் பாவம் நடந்ததாக சொல்லப்படும் நிகழ்ச்சி உண்மையா என்பதுதான் கேள்வி. நடக்காத ஒரு விஷயத்தை வைத்து பூச்சாண்டி காட்டும் மந்திரவாதி போலத்தான் இந்த முதல் பாவ கொள்கை என்பதுதான் கட்டுரையின் சாரம். கட்டுரையை கொஞ்சம் சரியாக வரி விடாமல் படித்துவிட்டு பிறகு பதில் எழுதவும். இரண்டாவது, இந்த கட்டுரை கிறிஸ்துவர்களுக்கு அல்ல. இந்துக்கள் தெளிவு பெற வேண்டும் என்பதற்காகத்தான்.
இது அவர்கள் நம்முடைய கருத்துக்குக் கொடுக்கும் மரியாதை
தங்கமணி 16 September 2010 at 12:17 am
சில்சாம், பைபிளில் இருப்பதை இப்படி வரிக்கு வரி எழுத்துக்கு எழுத்து புள்ளிக்கு புள்ளி நம்புவதாக சொல்லிக்கொள்கிறீர்கள்.ஆனால், விஷத்தை குடித்தாலும் ஒன்றும் செய்யாது என்றால் மட்டும் நம்ப மாட்டேன்னென்கிறீர்களே? ) இது நியாயமா?
//விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு – 16 : 17-18)//
வியாதியஸ்தர்கள் மீது கை வைத்து சொஸ்தமாவதாக பிலிம் காட்டி ஏமாற்று வேலை செய்து பிழைக்கிறீர்கள். ஆனால், அதே வரியில் சாவுக்கேதுவான விஷத்தை குடித்தால் ஒன்றும் செய்யாது என்பதை மட்டும் செய்ய மாட்டேன் என்கிறீர்களே? ”தேவனாகிய கர்த்தரை பரீட்சியா இருப்பாயாக. ” என்பதை வைத்து தப்பிக்க முயல்கிறீர்களே. அதே போல வியாதியஸ்தர்கள் மீது கை வைத்து சொஸ்தம் செய்ய முயற்சிப்பதும் இதே போல பரிட்சை செய்வது இல்லையா? அதை மட்டும் ஏன் செய்கிறீர்கள்? அது ஏமாற்றுவேலை தானே?. சொஸ்தம் ஆகிவிட்டது என்று பொய் சொல்லலாம். ஆனால், விஷம் குடித்து காட்டுவதில் அப்படி ஏமாற்றமுடியாது ) என்பதால் ஜகா வாங்குகிறீர்களா?
//அப்படிப்பட்ட அருள்நாதருக்காக நான் விஷம் குடிக்கத் தயாராக இருக்கிறேன்; ஆனால் நான் விஷம் குடித்தால் மரித்துப்போவேன் என்பது நிச்சயம்; அதில் எந்த சந்தேகமும் இல்லை; ஏனெனில் இயேசு விஷம் குடிக்க என்னை அழைக்கவில்லை; //
என்று புளுகுகிறீர்களே? இயேசு விஷம் குடித்தால் ஒன்றும் செய்யாது என்று ஆணித்தரமாக சொல்லும்போது, விஷம் குடிக்க சொல்லவில்லை என்று இப்படி புளுகி த்ப்பிக்க முயல்வதில் உங்களுடைய விசுவாசமின்மைதானே தெரிகிறது? சாவுக்கேதுவான விஷத்தை குடித்தால் ஒன்றும் செய்யாது என்றுதானே சொல்லுகிறார்? அதில் தெரியாமல் குடித்துவிட்டால் ஒன்றும் செய்யாது என்று சொல்கிறாரா? அல்லது தெரிந்தே குடித்தால் நிச்சயம் செத்துபோவாய் என்று சொல்லுகிறாரா? அவர் சொல்லாததெல்லாம் அதில் இருப்பதாக நீங்களாக போட்டுக்கொண்டு தப்பிக்க முயல்கிறீர்களே? உங்களுக்கே நம்பிக்கையில்லாத ஒரு விஷயத்தை மற்றவர்களிடம் விற்று பிழைப்பு நடத்த முயலும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
இது அவர்கள் நம்மை தூஷிக்கும் முகமாக திசைதிருப்பும் சூழ்ச்சியாகும்;இதற்கு நாம் கொடுக்கும் நியாயமான பதிலையும் பதிக்காமல் அடுத்தடுத்து வருபவர் இந்த தோரணையிலேயே நம்மை தூஷிக்கத் தூண்டுவார்கள் chillsam 16 September 2010 at 7:49 am
நாமெல்லாரும் மனிதர்கள் என்பதில் சந்தேகமில்லை தானே? அப்படியானால் நம்மூலம் பேசப்படும் காரியங்கள் மனித அறிவுக்கு உட்பட்டவை தானே? இந்நிலையில் ஒருவர் பேசும் விஷயத்தை இயற்கைக்கு மாறுபட்ட அதிசய செய்தியாக்கத் தேவையான இரகசிய செயல் எது?அந்த தரத்துக்கு இணையாக இந்த கட்டுரை இல்லை;
ஆனாலும் இந்த கட்டுரையாசிரியர் இதனை எழுத எடுத்துக்கொண்ட காலத்தைப் போலவே இதற்குரிய பதிலை ஆயத்தம் செய்யவும் நேரம் தரப்படவும் அது இந்த கட்டுரையின் கருத்துக்கள் ஒரு “வெள்ளை” முட்டாளினிடமிருந்து பெறப்பட்டபோது கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைப் போல ஏற்றுக்கொள்ளப்படவும் வேண்டும்;அப்படியானால் நான் சவாலை ஏற்கிறேன்..!
இது தான் அவர்களைப் பொருட்படுத்தாமல் சத்தியத்தைச் சொல்லும் முயற்சியாக நான் போட்டுள்ள பின்னூட்டமாகும்; இஷ்டமிருந்தால் போடுவார்கள்; இல்லாவிட்டால் மட்டுறுத்தல் பகுதியிலேயே வைத்திருந்து பிறகு நீக்கிவிடுவார்கள்; இதுவே தமிழ் ஹிந்து தளத்தின் தந்திரமாகும். இது இரண்டாம் கட்டுரைக்கான பின்னூட்டம்... ஜெயக்குமார் 15 September 2010 at 7:01 pm
இனிமேல் எவனாச்சும் பாவிகளேன்னு நான் போகும்போது கூப்பிடட்டும், உடனே இந்தக் கட்டுரைக்கு பதில் சொல்லிவிட்டு பின்னர் சத்தம்போட்டு உங்கள் ஏசுவை அழையடா ”அடப்பாவி” என என்பேன். அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்.
chillsam 16 September 2010 at 7:54 am
அண்ணே, இந்த அறிவு வரவும் வெளிநாட்டுக்காரனைத் தானே நம்பியிருக்கிறீர்கள், இது நியாயமா? ஆனானப்பட்ட டார்வினே குரங்குபோல அந்தர் பல்டியடித்தான், இவன் எந்த மூலைக்கு? இவர்களுடைய தத்துவங்கள் கல்லறையில் தூங்குகிறது, இவர்களால் எதிர்க்கப்பட்ட இறைவனின் நற்செய்தியோ சிகரங்களின் கொடுமுடியில் ஜொலித்துக்கொண்டிருக்கிறது..!
இதுபோல நட்புரீதியிலோ நகைச்சுவையாகவோ எழுதி முன்னேற முயற்சித்தாலும் திடீரென ஒருவர் எச்சரிக்கை விடுவார்;நாம் திசைதிருப்புவதாகவும் மறைமுகமாக மதப்பிரச்சாரம் செய்வதாகவும் அலறுவார்கள்.
எனவே இனிமேலும் அங்கே பின்னூட்டமிட்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்காமல் அதற்கு இதுதான் பதில் என்ற ரீதியில் தெளிவான நம்முடைய விளக்கத்தை நேர்மையுடனும் உள்நோக்கமில்லாமலும் போட்டுவைக்கிறோம்; இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி புறக்கணித்தாலும் சரி அதைக் குறித்து நமக்கு கவலை இல்லை;
குறிப்பிட்ட அந்த இரு கட்டுரைகளுக்கான நம்முடைய பொதுவான பதிலை சற்று நேரமெடுத்து பொறுமையாக எழுதுகிறோம்; தள நண்பர்களும் அவ்வப்போது தமது மேலான கருத்துக்களை இங்கே பதிக்கவும், நம்முடைய இந்த சிறிய முயற்சியை ஊக்கப்படுத்தும் விதமாக அவரவர் தளங்களில் இந்த தொடரை மறுபதிப்பு செய்யவும் வேண்டுகிறோம்;
கருத்துப் பிழைகள் இருந்தால் தாராளமாகச் சொல்லலாம்;அவற்றை நாம் விவாதமாக்காமல் நியாயமான முறையில் சுட்டிக்காட்டப்படும் கருத்துப் பிழைகளைத் திருத்திக்கொள்ள நாம் ஆயத்தமாக இருக்கிறோம்;