//u could have avoided the word,”andha aalu” what will little children think about Jesus christ?//
மரியாதை என்பதே ஒருவரைக் குறித்து நாம் அறிந்த காரியங்களின் அடிப்படையிலேயே அமைகிறது;அதனை இறுதி செய்வதில் குழந்தைகளுக்கு இணை குழந்தைகளே; ஒரு கைக்குழந்தையிடமே நீங்கள் இதனை கவனிக்கலாம்;அது உங்களை நம்பாவிட்டால் உங்களைத் தொடவும் அனுமதிக்காது;
உதாரணமாக இயேசுவானவரைக் குறித்த நல்ல அபிப்ராயத்தை வளர்த்துக் கொண்ட ஒரு சிறுமி அல்லது சிறுவன் "இன்னா அங்கிள் இயேசப்பாவைப் போய் அப்படி சொல்றீங்க" எனக் கேட்க அதற்கு பதிலாக கதை சொல்லும் நான் சொல்லுவேன்,"நான் அப்படி சொல்லல,காக்கா தான் சொல்லிச்சு" என்று கூறி சமாளிப்பேன்; அதுகளும், "சரி..சரி சொல்லுங்க...அப்புறம்..." என்று கண்களை விரித்துக் கொண்டு கேட்கும்,அதுவே குழந்தைகள்; வனாந்தரத்தில் மக்கள் பசியைத் தீர்க்கும் திட்டத்துடன் ஆண்டவர் அப்பத்தைக் கேட்க சீடர்களோ ஆண்டவர் தனது பசிக்காகக் கேட்பதாக நினைத்திருப்பார்களோ என்ற சிந்தனையையும் கதை தூண்டுகிறது;
டேனி, அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்;கதை உங்கள் சொந்த கதையாக இருந்தால் டபுள் க்ரீட்டிங்ஸ்'யா..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஒரு ஊருல ஷாருன்னு ஒரு காக்கா இருந்துச்சு. அது அந்த ஊருல இருக்குற எல்லா காக்காவோட தலைவரா இருந்துச்சு, எல்லா பிரச்சனையையும் தீர்க்கிற திறம படைச்ச அந்த ஷாருவுக்கு ஒரு சவாலான பிரச்சன வந்துச்சு. அது என்னதுனா அந்த ஊருல இருக்குற காக்காங்களுக்கு சாப்பாடு இல்லாம போனது தான். காக்காங்களுக்கு சாப்பாடு வைக்கிற காலம் போயி. காக்காங்கள சாப்பிட வர வைச்சி, அத பிடிச்சி சாப்பிடுற கூட்டம் அந்த ஊருல அதிகமாக எல்லா காக்காங்களும் தங்கள் பசிக்கு என்ன செய்றதுன்னு தெரியாம ஷாருகிட்ட வந்து சேர்ந்துதுங்க…
ஷாரு பக்கத்து ஊர்ல இருக்குற மக்கள் எப்படி பட்டவங்க அங்க போனா எதாச்சும் சாப்பிட கிடைக்குமான்னு நான் போயி பாத்துட்டு வரேனு கிளம்புச்சி. அங்க எல்லாம் நல்ல படியா இருந்துச்சினா நாம எல்லாரும் ஒவ்வொருத்தரா போய் அங்க தங்கிடலாம் சொல்லுச்சி. எல்லா காக்காங்களும் சரின்னு ஒத்துக்குச்சிங்க.
ஷாரு பறந்து பக்கத்து ஊருக்கு போச்சி. ஆனா அந்த ஊரு மக்கள் மூட்ட முடிச்சியெல்லாம் கட்டிட்டு ஒரு மலை மேல ஏறிட்டு இருந்தாங்க. ஐயோ நமக்குத்தான் சாப்பாடு இல்லன்னு நினைச்சி இந்த ஊருக்கு வந்தா இந்த ஊருல இருக்க மக்கள் சாப்பாடு இல்லாம வேற ஊருக்கு போறாங்க போலிருக்கேன்னு நினைச்சிது, ஊருல யாருமே இல்ல, எல்லாரும் இங்கதான் இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கிச்சு. ஹூம்…ஒரு வேளை எதாவது திருவிழா மாதிரி கொண்டாட வந்துருப்பாங்களோ, எப்படியாச்சும் எல்லாருக்காகவும் சமைப்பாங்க. கண்டிப்பா மிச்ச மீதிய எங்கையாச்சும் கொட்டுவாங்க.. சரி என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பாப்போம்ன்னு ஒரு மரத்துமேல நின்னு கவனிச்சுது…ரொம்ப நேரமாகியும் யாரும் சமைக்கிற மாறி தெரியல…ஐயோ இது எதாச்சும் உண்ணாவிரத கூட்டமா என்ன? நொந்து போனது ஷாரு..
கடைசியா ஒரு சின்ன பையன்கிட்ட இருந்த ரொட்டிய எல்லாரும் வந்து கேக்குறத பாத்துச்சி அந்த ஷாரு. எல்லாரும் அந்த ரொட்டிக்காக சண்டை போட போறாங்க இங்க இருந்து சாப்பாடு வாங்க ஊருக்கு போகவும் முடியாது. கண்டிப்பா நடக்குற சண்டைல நிறைய பேரு சாவானுங்க நமக்கு இன்னிக்கு Non-Veg தான்னு நாக்கில் எச்சில் ஊறியது ஷாருவுக்கு…ஆனா அந்த ரொட்டிக்கு யாரும் சண்ட போடாம அத எல்லாத்தையும் ஒருத்தரே சாப்பிடட்டுன்னு சொல்லி ஒரு ஆளுக்கிட குடுக்க., ஐயோ! இந்த ரொட்டிய அவரு சாப்பிட்டாருன்னா நமக்கு ஒண்ணுமில்லாம போயிடுமேன்னு நினைச்சி எப்படியாச்சும் அவரு கைல இருக்குறத சுட்டுட்டு போயிடலாம்னு மேல பறந்து வந்துச்சு ஷாரு..
அந்த ஆளு அந்த ரொட்டிய தானும் சாப்பிடாம அத கையில எடுத்து வானத்த அண்ணாந்து பாத்தாரு..என்னைய நேருக்கு நேரா பாத்தாரு. நான் அவரு கையில இருந்த ரொட்டிய பார்க்க முடியல. அவரையே பாத்துட்டு இருந்தேன். என்னை விரட்ட அவரு கைய ஓங்குவாருன்னு பாத்தேன் ஆனா அவரு என்ன பாத்து சிரிச்சாரு. சிரிச்சிட்டே அந்த கூடைய வேற ஆளுக்கிட்ட குடுத்தாரு, குடுத்துட்டு எனக்கு சைகை காட்டினாரு. உடனே எனக்கு நம்பிக்க வந்துச்சி அவரு முகத்த பாத்ததுல இருந்து அவரு என் இனத்த கண்டிப்பா பசியால சாகவிடமாட்டாருன்னு நம்பிக்க வந்துச்சி.
உடனே என் ஊருக்கு போயி எல்லாத்தையும் கூட்டிகிட்டு வர கிளம்பிட்டேன், எல்லாரையும் பசியோட வேகவேகமா கூட்டிகிட்டு வந்துச்சு ஷாரு. தூரத்துல வரும்போது மலையில யாருமே இல்லாம இருக்குறத பாத்து ரொம்ப சோர்ந்து போயிடுச்சி ஷாரு.. என்ன வரச் சொன்னாரே அவர நம்பி வந்தேன் இப்போ யாரையும் காணோமே என்ன ஏமாத்திட்டாரேன்னு கவலப்பட்டுச்சி ஷாரு…அப்போ அங்க இருந்த சில காக்காங்க ஷாரு.. ஷாரு இங்க வாயேன்னு கூப்பிட அங்க போயி பாத்தா அங்க ஏழு கூடை நிறைய ரொட்டியும் மீனும் இருந்துச்சு..எல்லாரும் வயிராற சாப்பிட்டோம். இன்னும் அந்த ஆளோட பார்வை ஷாருவோட கண்ணுலேயே இருந்துச்சு..
ஒரு வாரம் கழிச்சி அதே குரல கேட்டுச்சி ஷாரு..அங்க போய் பாத்துச்சி
“காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்”. லூக்கா 12:24
ஷாருவுக்கு ரொம்ப பொறாமையா போயிடுச்சி, இத வாசிக்கிறவங்க ரொம்ப குடுத்து வச்சவங்க. எங்க பசிய தீக்குறதுக்கு ஆசைப்படுற அந்த இயேசு உங்க தேவைகள சந்திக்காம போயிடுவாறான்னு ரொம்ப பொறாம பட்டுச்சி.. பறவைகள விட நீங்க ரொம்ப விஷேஷமானவங்க உங்களுக்காக பரத்திலிருந்து இறங்கிவந்து பாவியான உங்களுக்காக மரிச்சி பாதாளத்த ஜெயிச்சாரு, உங்க எல்லாருக்காகவும் அடிக்கப்பட்டு தன்னையே கொடுத்த அந்த இயேசுவ நான் மலைமேல சிலுவைல தொங்கும் போது நான் பாத்தேன். பாத்து ரொம்ப பொறாமப்பட்டேன் ஏன் அவரு உங்கள இவ்வளவு நேசிக்கிறாருன்னு தெரியல, ஆனா நான் ஏன் மனுஷனா பிறக்காம போயிட்டோம்மேன்னு வருத்தப்படுறேன்..ரொம்பவே வருத்தப்படுறேன்…
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)