அன்பு நண்பரே ஆர்வத்துடனான பங்களிப்புக்கு நன்றிகள் பல;
கிறித்தவ விழிப்புணர்வு என்பது வேறு விழிப்புணர்ச்சி என்பது வேறு; இதனை தாமதமாகவே நான் யோசித்து உணர்ந்தேன்; ஏன் நான் விழிப்புணர்ச்சி என்று எழுதாமல் விழிப்புணர்வு என்று எழுதினேன்; யார் அப்படி எழுத வைத்தது என்பதை யோசித்தபோது விடை கிடைத்தது; விழிப்புணர்வு என்பதே சரியானது என்ற தீர்மானத்துக்கு வந்தேன்;
இதனடிப்படையில் இந்த உணர்வை யாரெல்லாம் அடைகிறார்களோ அவர்களெல்லாம் உணர்வால் ஒன்றிணைவார்கள்; அது ஏற்கனவே நடந்து கொண்டுதானிருக்கிறது; இதெல்லாம் சாத்தியம் தானா, சரிதானா என்ற தேடல் வந்தாலே சத்திய ஆவியானவர் உங்களுக்குள்ளிருந்து கிரியை செய்கிறார் என்பதும் மற்றவரை எச்சரிக்கச் சொல்லுகிறார் என்பதும் அறியவேண்டிய காரியமாகும்;
இதன்படி நாம் யாருடைய போதனையையோ கேட்டோ அவருடன் இணைவதோ அல்லது இணையச் செய்வதோ நம்முடைய வேலையல்ல; அதற்கென்றே நிறைய குழுக்கள் இருக்கின்றது; நம்முடைய வேலையானது நமக்குள் ஏற்பட்ட இந்த விழிப்புணர்வை அடுத்தவருடன் பகிர்ந்துகொள்வது;
அது என்னுடைய போதனையால் வரவேண்டிய அவசியமேயில்லை.
(இன்னும் சொல்லுகிறேன்...)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நல்ல யோசனைதான். நன்கு யோசித்து நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் வகுத்து செயல்படுத்துவது அவசியம்.
ஏனெனில், ஒருவருக்குத் தவறானவராகத் தோன்றும் ஊழியர் மற்றொருவருக்கு சரியானவராகத் தெரிவார். இதுதான் தவறான ஊழியர்களின் மிகப்பெரிய பலம்.
ஓர் ஊழியர் ஒரு விஷயத்தில் தவறினாலும் அவர் தேவஊழியர் எனப்படுவதற்கு தகுதியானவர் அல்ல எனும் கருத்து எப்போது மேலோங்குகிறதோ அப்போதுதான் தங்கள் எண்ணம் ஈடேறும் என்பது எனது கருத்து.
இது தமிழ் கிறித்தவ தளத்தில் நண்பர் இராஜ்குமார் அவர்கள் அளித்துள்ள மற்றொரு பின்னூட்டமாகும்;இதற்கு பிந்தைய கருத்துகளுக்கே நான் பதிலளித்துள்ளேன்; இந்த குறிப்பிட்ட கருத்துக்கு இன்னும் பதிலளிக்கவில்லை; எத்தனை நீளமாக- தெளிவாக- தாழ்மையுடன் நாம் பதிலளித்து, இசைந்து சென்றாலும் அவரவருக்கென்று உருவாக்கிக் கொண்ட வட்டத்திலிருந்து ஒருவரும் வெளியே வருவதாக இல்லை; அவ்வளவு ஏன், சற்று சிரமம் பார்க்காமல் இங்கே ஒரு பின்னூட்டமிடக் கூட ஒருவருக்கும் மனமில்லை;காரணம்தான் புரியவில்லை;
நானோ நேர்மையுடன் அவர்களுடைய தொடுப்புகளைத் தருவதிலிருந்து முழு விவரத்தையும் காப்பி பேஸ்ட் செய்து அதற்குரிய பதிலையும் விவரமாகப் பதித்து வருகிறேன்...தமது சிங்காசனத்திலிருந்து அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் தேவன் தாமே அவரவருக்குரிய பலனைத் தருவாராக;இவையெல்லாமே அவர் ஒருவருடைய நாம மகிமைக்காக மட்டுமே...
By Rajkumar@TCS அன்பு சகோ சில்சாம் அவர்கள் சொன்ன தேவ இரகசியம் தொடர்பான அந்த செய்தி ஆசீர்வாதம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது நானும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
சகோ ஆலன்பால் அவர்கள் இந்த வெளிப்படுத்தல் தொடர்பான செய்தியில் சொல்ல வந்த காரியம் (நான் புரிந்து கொண்டது)
செய்தியின் அடிப்படை: தேவனிடத்திலிருந்து பதில் வரவில்லையானால் சோர்ந்து போகாதிருங்கள் என்பதின் அடிப்படையில் அமைந்திருந்தது
எனற உரையாடல் மூலமாக தேவ இரகசியங்களைக் குறித்த விளக்கங்களையும், அதற்குப் பின் சிறிது இடைவெளியில் வெளிப்படுத்தல் 1:1 . சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.
என்ற வசனத்தை கூடுதலாக மேற்கோள் காட்டி அவர் சொல்ல முயன்றது இயேசு கிறிஸ்து பல ஆண்டுகள் கழித்து உலகத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று அப், யோவானுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார், இனி ஊழியரின் ஊகம் தொடர்கிறது, ஒருவேளை இந்த வெளிப்படுத்தின விஷேசத்தை பிதாவானவர் இயேசு கிறிஸ்துவுக்கே கூட அப்போது தான் வெளிப்படுத்தியிருக்கலாமோ என்னவோ அது நமக்குத் தெரியாது ஆகவே நீங்கள் பதில் கிடைக்கவே இல்லையென்று சோர்ந்து போகாதிருங்கள், இப்படியாக அந்த நற்செய்தி தொடர்ந்தது
ஆனால் பிதா மாம்சத்தில் வெளிப்படவில்லை என்று ஆலன்பால் அவர்கள் அந்த செய்தியில் சொன்னதாக எனக்கு நினைவில்லை
இந்தக்கருத்து ஒருவேளை சரியாக இருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாக இருந்தது காரணம் அப்போஸ்தலர் முதலாம் அதிகாரத்தில் அவர் எடுத்துக்கொள்கிறதற்கு முன்னதாக இயேசு என்னவெல்லாம் நடக்கும் என்பதை விளக்கிச் சொன்னதாகவும் அது தொடர்பாக சீஷர்கள் சந்தேகம் கேட்டுத் தெளிவடைந்ததாகவும் விளக்கப்பட்டிருக்கிறது, அதே போல
யோவான் 15:15 இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
என்றும் ஒரு இடத்தில் நம்முடைய இரட்சகரே நேரடியாக சொல்லியிருக்கிறார், ஆகவே இது ஆலன்பால் அவர்களால் திரித்து சொல்லப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை,
என்னுடைய இந்த புரிதல் ஒருவேளை தவறாகக்கூட இருக்கலாம் எனக்குத் தெரியவில்லை, நண்பர் சில்சாம் எந்த கோணத்தில் இதை புரிந்து கொண்டார் அல்லது என்னுடைய புரிதல்களில் உள்ள தவறுகள் என்ன என்பதைச் சுட்டிக்காட்டுவாரானால் என்னுடைய புரிதல்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
மேலும் நான் தலைவராக உருவாகி வருவதாகச் சொல்லியிருந்தார், அது முற்றிலும் தவறு நான் இந்தத் தளத்திற்கு வருவதும், என் வாழ்வின் முழுமுதல் நோக்கமும் கிறிஸ்துவை அதிக ஆழமாக அறிந்து கொண்டு அவர் கிருபையில் வாழ்ந்து முடிப்பதே, இந்த வார்த்தை என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. நான் தங்களிடமும் மற்றவர்களிடமும் சத்தியத்தைக் கற்றுக்கொள்ளவே வந்திருக்கிறேன். தயவு செய்து என்னைப்பற்றிய புரிதல்களை மாற்றிக்கொள்ளுங்கள்.
என்னுடைய மற்ற பதிவுகளிலும் கூட நான் இந்த தளத்திற்கு வந்து அதிகமாக ஆண்டவரைப்பற்றித் தெரிந்து கொண்டேன் என்றே சொல்லியிருக்கிறேன் என்பதையும் இங்கே தாங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
நான் தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு விரோதமாகப் பேசவேண்டாம், என்று நான் சொல்ல வந்தது என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் இப்படி பேசி மிக அதிகமான விலைக்கிரயங்களைச் செலுத்தி ஆண்டவருடைய அளவிடப்பட முடியாத கிருபையால் இரட்சிக்கப்பட்டேன்.
எங்கள் வீட்டு எதிரில் சபை நடத்தும் போதகர் அவர்களை எல்லோரும் பாஸ்டர்(புறஜாதியாரும்) என்றுதான் அழைப்பார்கள், ஆனால் கிறிஸ்தவனான நானோ பொறுக்கி என்று பொருள்படும் ஆங்கில வார்த்தையில் தான் அவரை குறிப்பிடுவேன், இரட்சிப்பின் அனுபவத்திற்கு நேராக அந்த சபை மூலம் பல முறை அழைக்கப்பட்டேன். காசுக்காக ஊழியம் செய்கிறார்கள் என்று எல்லோரிடமும் சொல்லித் திரிவேன். ஆனால் இனி தற்கொலைதான் முடிவு என்ற நிலைக்குப் போய் உடைக்கப்பட்டு பின்பு என் தேவனை இணம் கண்டுகொண்டேன். ஒருவேளை நான் அப்படி அவதூறு பேசியதால் தான் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் வந்ததோ, அல்லது நான் மேற்சொன்ன நேரடியான அழைப்பைப் புறக்கணித்தால் தான் இப்படிப்பட்ட சூழ்னிலைகளைக் கடக்கவேண்டியிருந்ததோ என்றெல்லாம் இப்போது யோசித்துப் பார்ப்பதுண்டு
ஒருவேளை எனக்கு இனைய ஊழியம் செய்யவேண்டும் என்ற என்னத்தை தேவன் கொடுக்காமல் இருந்திருந்தால் நான் அதற்காக செலவிட்ட நேரங்களையும் சிந்தனைகளையும் நான் இதே இனையத்தைப் பயன்படுத்தி சம்பாதிப்பதற்காகப் பயன்ப்படுத்தியிருக்கலாம் அல்லவா? அப்படியானால் எனக்கு இந்த ஆர்வத்தை கொடுத்தது தேவன் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்படிப்பட்ட ஆர்வத்தால் தான் எல்லோரும் வருகிறார்கள் என்று நான் எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டது உண்டு ஆகவேதான் எபிரெயர் 5:4 ஐ குறிப்பிட்டேன்.
உங்களுக்கு சமீபத்தில் நடந்த அரசியல் சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன், காஷ்மீரைச் சேர்ந்த ஒரு இராணுவ அதிகாரிக்கு விசா வழங்க சீனா மறுத்து விட்டது, இதற்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு அந்த நாட்டு இரானுவ வீரர்களின் வழக்கமான பயிற்சிக்காக வழங்கப்படும் விசா மறுக்கப்பட்டது உடனே சீனா விபரீதத்தை உணர்ந்து தன்னுடைய தூதரை நேரடியாக வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தது.
இப்படி உலகப்பிரகாரமான ஒரு சம்பவத்துக்கே இப்படிப்பட்ட எதிர்விளைவுகள் இருக்குமானால், உலகத்தில் இருப்பவரிலும் பெரியவரான நம் தேவன் ஏற்படுத்தியிருக்கும் ஊழியரை நாம் குறை சொன்னால் என்ன நடக்கும் என்ற பயத்தினாலேயே இந்தக் கருத்தைப் பதிவு செய்தேன்.
குற்றம் சாட்டுவதும் குறைகூறுவதும் என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் எதிர்விளைவையும் கசப்பான அனுபவத்தையும் தான் கொடுத்திருக்கிறது ஆகவே அதில் எனக்கு உடன்பாடு இல்லை,
சமீபத்தில் கூட இரு ஊழியர்களின் கருத்து வேறுபாட்டால் என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் பிரச்சனையில் சிக்கிக்கொண்ட அனுபவம் எனக்கு உண்டு, ஆனாலும் நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு ஒப்புறவாகத்தான் இன்றுவரை முயன்று கொண்டிருக்கிறேன். என்னாலும் ஊழியர்களே இப்படித்தான் என்று குறை கூறிக்கொண்டு இருந்திருக்க முடியும், அதனால் பகையும் கசப்பும் வளருமே ஒழிய வேறு என்ன அங்கே இருக்க முடியும்? அப்படியானால் அங்கே பிசாசு அல்லவா வென்றுவிடுவான்? ஆனால் தேவன் இப்படிப்பட்ட சூழ்நிலையை அனுமதிக்காமல் அது நடக்காது என்று எனக்குத் தெரியும், ஆகவே சூழ்னிலைகளை மாற்றித்தாரும் என்று ஜெபிக்கிறேன், தேவன் மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கிறேன்.
நேற்றைய தினத்தில் கூட போதகர் அற்புதம் அவர்களோடு பேசும்போது அந்த ஊழியரிடம் சமரசம் ஆகிவிட்டீர்களா? என்று கேட்டார், நானும் முயன்று கொண்டிருக்கிறேன் பிரதர் என்றே பதிலளித்தேன், இன்றும் கூட முயற்சி செய்வேன். நாளையும் தொடருவேன். இப்படிப்பட்ட சூழ்னிலைகளின் நடுவே நான் சென்று கொண்டிருப்பதால் இங்கே மட்டுமல்ல நான் சந்திக்கும் எல்லா நபர்களுக்கும் நான் சொல்லுவது மற்றவர்களை குறை சொல்லாதீர்கள் என்பதே ஒருவேளை இந்த இடத்தில் இந்த வரிகள் தவறாக இருக்குமானால் என்னை மன்னித்துவிடுங்கள்.
மேலும் இயேசுவே யகோவா என்று நான் சொன்னதாகவும், அதற்கு தாங்கள் விளக்கம் கேட்டதாகவும், அதற்கு இன்று வரை நான் பதில் சொல்லவில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள், உண்மையாகச் சொல்லுங்கள் என்னிடம் இந்தக் கேள்வியை என்று என்னிடம் கேட்டீர்கள்? ராமர்ன் அவர்கள் நடத்தும் தளத்திற்கு உங்கள் ஆண்டி வைரஸ் அனுமதி அளிக்காததால் நான் நடத்திவரும் வலைபதிவில் உங்கள் இருவரின் விவாதத்தை தொடர்ந்து நடத்த அவரை விவாதத்துக்கு அழைத்தல்லவா பின்னூட்டம் இட்டிருந்தீர்கள்? அதில் விளக்கம் எதுவும் கேட்டதாக எனக்குத் தெரியவில்லையே? மேலும் அது என்னுடய கட்டுரையே அல்ல கோவை அண்ணாவின் தளத்தில் நான் படித்து என்னைக் கவர்ந்தபடியால் என்னுடைய தளத்திலும் பதித்தேன் மேலும் அந்தக்கட்டுரை nlm-tv.com என்ற தளத்திலிருந்து எடுக்கப்பட்டது அதற்கான தொடுப்பும் அதற்கு கீழெயே கொடுக்கப்பட்டுள்ளது, அப்படி உண்மையிலேயே அந்தேகம் கேட்கவேண்டும் என்று இருந்திருந்தால் நீங்கள் கோவை அண்ணா 6 மாதங்களுக்கு முன்பே வெளியிட்ட போது அவரிடம் கேட்டிருக்கலாம் அல்லது நேரடியாக அந்த தளத்திற்கே உங்கள் சந்தேகத்தை அனுப்பியிருக்கலாம், மாறாக இராமர் அவர்களின் தளத்துக்கு உரிய பின்னூட்டத்தை இங்கே பதிக்கிறேன் என்ற முன்னுரையோடு மட்டுமே நீங்கள் பின்னூட்டம் இட்டிருகிறீர்கள்
நீங்கள் ராமர் அவர்களை விவாதத்துக்கு அழைத்திருக்க நான் அழையாவிருந்தாளியாக வந்தால் நன்றாக இருக்குமா? என்று நான் மறு பிண்ணூட்டம் இடவில்லை
புறஜாதியார் உட்பட பலரும் இந்த தளத்துக்கு வருகிறார்கள், ஆசீர்வாதம் டீ.வி பார்க்கிறார்கள், இப்படிப்பட்ட குற்றச் சாட்டுகளை அந்த ஊழியரின் தனிப்பட்ட கவனத்துக்குக் கொண்டு செல்ல முயல்வது நல்லவிளைவுகளை ஏற்படுத்த முடியுமே ஒழிய இப்படி ஒரு பொதுவான இடத்தில் விவாதிப்பது எந்தப்பயனையும் தராது என்பது என்னுடைய தனிப்பட்ட தாழ்மையான கருத்து. என்னுடைய தளத்தில் விளக்கம் கேட்டதாகச் தாங்கள் சொல்லியிருந்தீர்கள் ஆசீர்வாதம் டீவி இனையத்தில் உங்கள் கன்டனத்தை ஏன் பதிவு செய்யவில்லை என்பதே என்னுடைய நேரடிக்கேள்வி? அல்லது அப்படி உலக அளவில் கொழுந்துவிட்டு எரியும் பிரச்சனைக்கான தீர்வு என்று வர்ணித்த அந்தக் கட்டுரை குறித்த விவாதத்தை ஏன் நீங்கள் (மார்ஸ்மேடை) இங்கேயோ அல்லது உங்கள் தளத்திலோ விவாதத்தை ஆரம்பிக்கவில்லை? ஆசீர்வாதம் டீவியில் சொன்ன அந்த ஒற்றை வரியைப் பார்த்த எத்தனை பேர் கவனித்தார்கள் என்பதும், அந்த வரிகளை என்னைப்போல (ஒருவேளை தவறாக) புரிந்து கொண்டார்கள் என்பதுமே மிகப்பெரிய கேள்வி.. அப்படியிருக்க இங்கே விவாதம் செய்பவர்கள் எத்தனை பேர் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள்? அவர்களது தனிப்பட்ட புரிதல்கள் என்ன? என்பதும் இங்கே விளக்கப்படவில்லை
அல்லது ஒரு தனியார் பள்ளிக்கு எதிரான போரட்டத்தை சில்சாம் அவர்கள் வீடியோ ஆதாரத்தோடு வெளியிட்டிருந்தார், அப்படிப்பட்ட ஆதாரமும் இந்த குற்றச்சாட்டுக்கு இல்லை ஒருவேளை அவர் முன்னேற்பாடு செய்யவில்லை என்று விளக்கம் சொல்லலாம், ஆனால் ஒருவேளை ஆசீர்வாதம் டீவியை நீங்கள் தொடர்ந்து பார்ப்பவரானால் முந்தைய நாள் இரவு 9 மனிக்கு ஒளிபரப்பாகும் அதே தேவ செய்தி மறுநாள் மதியம் 1 மனிக்கு ஒளிபரப்பாகும் அப்போது பதிவு செய்திருக்கலாம், அல்லது அவர்கள் 24 மனி நேரமும் திரையில் காட்டும் கைபேசி என்னுக்கு தொடர்பு கொண்டு தன் மாற்றுக்கருத்தையோ அல்லது இன்று ஒளிபரப்பான செய்தியின் சி,டி பிரதியை வாங்கி வீடியோ ஆதாரமாக வெளியிட்டு குற்றம் சாட்டியிருக்கலாம்,
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இது தவறு மாறாக இதுவே சரி என்றாவது ஒரு விளக்கக்கட்டுரை எழுதி அதை பதித்துவிட்டு அந்த ஊழியருக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கலாம், மாறாக இப்படி குற்றம் சாட்டுவதில் என்ன நன்மை விளைந்து விடப்போகிறது என்று நண்பர் கட்டாயம் விளக்கமளிக்கவேண்டும். அல்லது இது குறித்து ஆசீர்வாதம் டீ.விக்கு அவர் அளித்த மறுப்பைக் குறித்த விவரங்களை ஆதாரங்களோடு வெளியிட்டு அது தொடர்பாக அவர்கள் கொடுத்த விளக்கத்தையோ அல்லது சாமாளிப்புகளையோ இங்கே வெளியிட்டு அவரது வாதத்துக்கு வழு சேர்த்து என்னைப் போன்றவர்களின் கண்களைத் திறக்க சத்தியத்தை சரியாக அறிவிக்கும் பொறுப்பு சகோ சில்சாம் அவர்களையே சாரும், மேலும் இது குறித்து தன்னுடைய சொந்த புரிதல்களை அவர் இன்னும் விளக்கவில்லை, குறை கண்டுபிடித்தால் அங்கே சரியானது என்று ஒன்று இருக்குமல்லவா? அது ஏன் இது நாள்வரை இங்கே விளக்கப்படவில்லை என்பதையும் நான் அறிய விரும்புகிறேன்.
மேலும் கீழ்கண்ட என்னுடைய பதிவில் என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றுதான் சொல்லியிருந்தேனே தவிர மற்றவர்களும் அப்படித்தான் நடக்கவேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை, இது பொதுவான விவாதம் என்பதால் நான் என்கருத்தை சொல்லியிருந்தேன் அவ்வளவே...
ஒருவேளை ஒத்தக் கருத்துடையவர்கள் மட்டுமே (குறை சொல்லவோ, குற்றம் சாட்டவோ திட்டவோ) வரவேண்டும் என்று விவாதத்தை ஆரம்பிப்பவர் எதிர்பார்ப்பாரானால் அது குறித்து முன்பே சொல்லிவிட்டால் நலமாக இருக்கும், (மார்ஸ்மேடையில் அப்போஸ்தலர்கள் காலத்தில் நடந்தது என்ன என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும்) மேலும் ஊழியர்கள் மற்றும் உடன் ஊழியர்கள் செய்யும் அரசியல்கள் குறித்து நான் எப்பொதுமே கவலைப்படுவதில்லை, அதில் தலையிடுவதும் இல்லை, அவர்களை நீதிபரரே நியாயம் தீர்க்கட்டும், நான் அவர்களிடம் புதிதாக எதாவது சத்தியத்தை கற்றுக் கொள்ளலாம் என்று மட்டுமே எதிர்பார்க்கிறேன், ஊழியர்கள் மத்தியில் யார் பெரியவன் என்ற தந்திரத்தை வைத்து சாத்தான் விளையாடினால் அதற்கு விலைபோனால் நாம் தான் பாவி என்று நியாயம் தீர்க்கப்படுவோமே ஒழிய வேறு ஒரு பிரயோஜனமும் இல்லை
ஊழியத்தில் தேவனைமட்டும் பார்க்கவேண்டும், ஊழியர்களை பார்க்கக்கூடாது என்பது நான் கற்றுக்கொண்ட பாடம், காரணம் மனிதர்கள் எல்லோரும் குறைவுள்ளவர்கள் தேவன் மாத்திரமே குற்றமற்றவர். இதுவும் என்னுடைய சொந்தப் புரிதல் மாத்திரமே, மிரட்டும் தொனியில் என்பதிவு இருந்ததாகச் சொல்லும் தங்களுடைய இந்த விவாதப்பதிவு டீ.வீ ஊழியங்களை நம்பவே கூடாது, கிறிஸ்தவ ஊழியம் செய்பவர்கள் தேவனால் அழைக்கப்பட்டு வரவில்லை என்ற என்ற குழப்பங்களை எனக்குள் ஏற்படுத்திவிட்டது என்று என்னாலும் குற்றம் சாட்டமுடியும் அப்படி சாட்டினால் நானும் குற்றம் சாட்டும் ஆவிக்குள் ஆட்பட்டுவிடுவேன் இதுவும் என் தனிப்பட்ட கருத்து தான் இதற்கு காரணம் கீழ்கண்ட வசனம்
மத்தேயு 7:1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். என்று என்னை எச்சரித்த்தால் நான் மற்றவர்களைக் குற்றம் சாட்டக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன் இதுவும் என் தனிப்பட்ட புரிதல்கள் மாத்திரமே..
ஒரு வசனம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையில் பேசும், அதற்கு தனியாக விளக்கவேண்டுமானால் பொதுவான விளக்கம் மாத்திரமே தரமுடியும்.....
மேலும் வேளைப்பௌ அதிகமாக இருப்பதால் என்னால் உடனடியாக பதில் பதிக்க முடியாது, நான் வரத்தாமதித்தால் பதில் சொல்லாமல் அவமதித்தாக எடுத்துக்கொள்ளவேண்டாம், கட்டாயம் தாமதித்தாலும் பதில் சொல்லுவேன், தாங்கள் சொல்லும் பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பின் கட்டாயம் விதன்டாவாதம் செய்யமாட்டேன்
நன்றி
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இந்த வாத பிரதிவாதங்கள் பெரும்பான்மையும் சுய பிரஸ்தாபத்தையும் சுய பரிதாபத்தையுமே சார்ந்திருக்குமானால் தயவுசெய்து சுட்டிக்காட்டவும்.
// முதலில் சகோ சில்சாம் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன், தாங்கள் வயதில் மூத்தவர் என்பதை உங்கள் பதிலில் இருந்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன், நான் உங்கள் கட்டுரைகள் சிலவற்றை நான் பகீரங்கமாக வெளியிட்டது ஒரு உதாரணத்திற்காகதானே தவிர தங்களை வேதனைப்படுத்துவது நோக்கமல்ல... நான் சகோ ஆலன்பால் வேதனை அடைந்திருப்பார் என்று நான் சொன்னது ...//
நண்பரே, ' மன்னிப்பு ' எனும் ஒரு வார்த்தையே மிகவும் உயர்ந்த கிறித்துவின் பிரமாணமாக இருக்கிறது;எனவே அதனை அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்;மிகமிக அவசியமான சூழ்நிலையில் மாத்திரமே அந்த அரும்பொருளை பரிசாகத் தாருங்கள்;மற்றபடி நீங்கள் மனதார புரிந்துகொண்ட காரியத்தில், 'வருந்துகிறேன், பொறுத்துக் கொள்ளவும் ' என்று சொன்னாலே போதுமானது;
ஏனெனில் நான் உங்களைவிட கீழ்த் தளத்திலிருந்து வேலை செய்கிறேன்; எனவே தங்கள் அதிகப்படியான அன்பையும் மன்னிப்பையும் தாங்கும் பெலன் எனக்கில்லை;மேலும் நான் அண்ணனாக இருக்கவும் இயலாது; இதுபோன்ற பெரியண்ணன் மனப்பான்மையே கிறித்தவத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்;நான் வயதில் மூத்தவன் என்பது தவறான அபிப்ராயமாக இருக்கலாம்;
நீங்கள் எனது கட்டுரைகளைக் குறித்த விமர்சனத்தையே வைத்திருக்கிறீர்கள்,அது தவறல்ல,ஆனாலும் அதன் தொடுப்பு இங்கே தேவையா என்பதையே யோசிக்கவேண்டும்;
வேதனை என்ற குறிப்பிட்ட வார்த்தையை மூன்று முறை மூன்று காரணங்களுக்காக பயன்படுத்தியிருக்கிறீர்கள்;
முதலில் என்னைக் குறித்த வேதனை என்னவோ அறியேன்;ஒருவேளை அது வயசான (?) மனுஷனுக்கு இதெல்லாம் தேவையா என்ற கோபமோ அல்லது வயசான (?) மனுஷனை என்னவெல்லாம் பேசிவிட்டோம் என்ற வருத்தமோ ,அறியேன்;
அடுத்து நான் வேதனைப்பட்டதாகச் சொன்னது; நான் எந்த வேதனையும் அடையவில்லை;காரணம் எனது காரணங்களில் தெளிவாக இருப்பதால் வேதனைக்கு அவசியமேற்படவில்லை;
அடுத்து ஆலன் பால் அவர்களின் வேதனை: அவர் வேதனைப்படும்படி நாம் ஒரு வார்த்தையும் எழுதவில்லை;மாறாக நாம் வேதனைப்படும் வண்ணமாகவும் இடறலடையும் வண்ணமாகவும் அவரே பேசியிருக்கிறார்;
அதிலும் அவர் தனது கருத்தை வெளியிட்டது ஒரு ஊடகத்தின் (media) மூலம் என்பதால் அந்த செய்தி வெளியே சென்றுவிட்டது;அந்த கருத்தை அவர் ஆவியானவர் பெயரில் வெளியிட்டிருப்பதால் எதிர்த்து கேட்கவோ திரும்பப் பெறவோ முடியாத சிக்கலை உருவாக்கியிருக்கிறார்;
இன்னும் கொடுமை என்னவென்றால் அதற்கு விளக்கம் கேட்கவும் வாய்ப்பைத் தரவில்லை;விளக்கமாகச் சொல்லவுமில்லை;போகிற போக்கில் எதையோ தெளித்துவிட்டு சென்று விட்டார்;
இதனால் அவர் தனது கருத்தை தெய்வ வாக்கு நிலைக்கு உயர்த்தி, "ஏற்றுக்கொள், இல்லாவிட்டால் தள்ளிவிட்டு போ,அடுத்து நியாயத்தீர்ப்பு தான்" என்ற நெருக்கத்தினையும் ஏற்படுத்திவிட்டார்;
மேற்கண்ட வசனம் இந்த விவாதத்துக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஆவியில் ஏவப்பட்டதால் இதை போட்டுவைக்கிறேன்; இன்னும் நான் தான் ஏதோ ஆலன் பால் அவர்களை பொதுவான தளத்தில் அவமானப்படுத்திவிட்டேன் என்பீர்களாகில் அவர் சத்திய வார்த்தைக்கு புறம்பாக எதையோ செய்திருக்கிறார் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டது போலாகும்;
நான் மீண்டும் சொல்லமுடியும்,சகோ.ஆலன் பால் அவர்களுக்கு எதிராகவோ ஆசீர்வாதம் டிவிக்கு எதிராகவோ நான் எதையும் எழுதவில்லை;அங்கே கேள்விப்பட்டதை வார்த்தை மாறாமல் அதன் கருத்தை அப்படியே போட்டுள்ளேன்;
உலகமுழுவதும் அதே வார்த்தைகளைக் கேட்ட யாரும் பாதிப்படையாதபோது எனது எழுத்துக்களால் மட்டும் என்ன பாதிப்பு ஏற்படும்? சிந்திக்கட்டும்,சத்திய வெளிச்சத்தில் தெளிவடையட்டும்;அல்லது தாங்களோ ஆலன்பால் அவர்களின் தரப்பினரோ எனக்கு விளக்கம் கொடுக்கட்டும்;நான் மன்னிப்பு கேட்கிறேன்;
மனம்போன போக்கில் வசனத்தை வியாக்கியானம் செய்வதை கிறித்தவர்கள் நிறுத்தும்வரை என்னைப் போன்ற ஆயிரக்கணக்கானோர் எழும்பி போராட வேண்டும்;மற்றபடி வளரும் இளம்தலைமுறையினரான என்னைப் போன்றோர் வெறுத்துப்போய் வேறு ஞான மார்க்கத்துக்கோ தியான மார்க்கத்துக்கோ திசைமாறிச் செல்லும் ஆபத்து ஏற்படும்;
//தங்களுக்கு தேவன் அளவற்ற ஞானத்தை கொடுத்திருக்கிறார். அதை ஏன் நீங்கள் இனைய ஊழியத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது? இது எனது தனிப்பட்ட கருத்து மாத்திரமே தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள், //
மீண்டும் ஒரு மன்னிப்பு...ஹோ.! என்னுடைய ஞானம் என்பது ஒன்றுமில்லை;
"மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை.நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை. " (நீதிமொழிகள்.Pro 30:2 ,3)
நான் முன்பே குறிப்பிட்டதுபோல சுதந்தரமாக எனது கருத்துக்களை வெளியிட சில்சாமின் பிளாக் (chillsam's blog) என்று வைத்திருக்கிறேன்;நீங்களோ பைபிள் அங்கிள் என்று வைத்திருக்கிறீர்கள்; நான் எதை வேண்டுமானாலும் எழுதலாம்;
கட்டுப்பாடு உங்களுக்குத் தான்;தங்களது தளம் அற்புதமான வேதத்தின் கருவூலமாக மாறும்;மாறிக் கொண்டிருக்கிறது;ஏனெனில் ஆரம்பத்திலேயே தங்கள் நோக்கங்களையும் எல்லைகளையும் இலக்கையும் நிர்ணயித்துவிட்டீர்கள்;தங்களை காப்பியடிக்க என்னால் இயலாது; ஆனாலும் யௌவன ஜனம் தளத்தை மட்டுமாவது முழுமையான கிறித்தவ தளமாக நடத்த முயற்சிக்கிறேன்.
// கிறிஸ்தவர்கள் நகைச்சுவைக்கும், செக்ஸுக்கும், அப்பாற்பட்டவர்களா என்று கேட்டிருந்தீர்கள், ஆம் என்றால் பொய் சொல்லுகிறவனாகிவிடுவேன். ஆனால் சமயலறையில் தூங்குவதும், குளியறையில் சமைப்பதும், உண்டா? (ஓ நீங்கள் தான் முழு நேர இனைய ஊழியர் இல்லையோ? மன்னிக்கவும்) //
நீங்கள் எதைச் சொல்லுகிறீர்களோ தெரியவில்லை;சமைலறை என்பதோ குளியலறை என்பதோ நாமே வகுத்துக்கொண்டது;தற்காலத்தில் சமையலறைக்கு எதிரிலோ அல்லது அருகிலோ வீட்டுக்குள்ளேயே கழிப்பறையும் இருக்கிறதே;நான் குடிசையிலிருந்து வந்தவன்;எனவே எனக்கு எல்லாம் ஒன்று தான்;
மேலும் இணைய உலகுக்கு நான் முழுநேர ஊழியர் அல்ல என்று குறிப்பிட்டதை இப்படி திரித்துவிட்டீர்களே;அது தொடர்பாகவே அடுத்த வரிகளில் விளக்கியிருக்கிறேன்;முழுநேர இணைய ஊழியர் என்பது வேறு;இணைய உலகில் முழுநேர ஊழியர் என்பது வேறு அல்லவா?ஆனால் அதை வைத்தே கிண்டலடிக்கிறீர்களோ?
செக்ஸ் மற்றும் அன்றாட செய்திகளையும் கவனிப்பதால் நான் என்னை ஒரு வேதபாரகனாகவோ பரிசேயனாகவோ அல்லாமல் சாதாரண பாவியாக நிறுத்தி பாவிகளின் சிநேகிதனாக இருத்திக்கொள்கிறேன்;
நான் என்னை மிகவும் பரிசுத்தவானாகக் காட்டும்போது தன்னைக் குறைவாக எண்ணும் ஒரு மனிதன் என் காலில் வந்து விழுகிறான்;ஆனால் 'நானும் பெலவீனமாக இருந்தவன் கர்த்தர் மீட்டுக்கொண்டார் 'என்று அவன் தோளில் கைபோட்டு நட்புணர்வுடன் சொல்லும்போது தயக்கமின்றி என்னுடன் உறவாடுகிறான்;
மற்றபடி செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டும் படங்களையோ செய்திகளையோ என்னுடைய தளத்திலிருந்து தான் ஒருவன் அறிகிறான் என்பீர்களா என்ன? அவை என்னுடைய தனிப்பட்ட உணர்வுகள்;இதனால் எனது கிறித்தவ சாட்சி பாதிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை;நான் முன்பே குறிப்பிட்ட வண்ணமாக எனது வலைப்பூக்களின் செய்திகளையும் பக்கங்களையும் வகைப்படுத்திவிட்டால் பிரச்சினை ஓரளவு தீர்ந்துபோகும்;
// சாருநிவேதிதா குறித்த அந்தப் பதிவை 1200 பேர் படித்ததாகச் சொல்லியிருந்தீர்கள் மகிழ்ச்சி...//
என்னுடைய திருப்தி அதுவல்ல,அதை வாசிக்க வந்தோர் எனது மற்ற கட்டுரைகளின் மூலம் ஓரளவுக்கு கிறித்தவத்தைக் குறித்து அறிந்திருப்பர் அல்லது கிறித்துவைக் குறித்த நினைவுகளால் தொடப்படுவர்;
// தனி ஒருவனாக இருந்து 2 புறஜாதியாரை கிறிஸ்துவின் இரட்சிப்புக்குள் நடத்தமுடியும் என்றால்...//
எதைவைத்து இப்படி திருப்தி கொள்ளுகிறீர்களோ தெரியவில்லை; கிறித்துவிடம் நடத்தப்படுவோர் வெளிப்படையாக தங்கள் அறிக்கையின் மூலம் கிறித்துவை மகிமைப்படுத்துவர்;நீங்கள் குறிப்பிட்ட இருவரில் ஒருவரான கத்தோலிக்கன் செல்வராஜ் அவர்கள் மாதா வணக்கத்தைக் குறித்த தனது கருத்துக்களை மாற்றிக்கொள்ளாததுடன் எனது பின்னூட்டங்களையும் தவிர்த்துக் கொண்டிருப்பது தாங்கள் அறியாததோ?
// நம்முடைய தலைமுறைக்குள்ளாவது குறைந்தது 25% தேவனுடைய மக்களாக மாற அந்தரங்கத்தில் தவறுகளைக் கடிந்துகொள்ளலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. //
தங்களுடைய நல்ல மனம் இதில் தெரிகிறது;ஆனாலும் வேதத்தின் வழிமுறை அதுவல்ல; இதற்காகவே, "மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது." (நீதிமொழிகள்.Pro 27:5 ) எனும் வேத வசனத்தினைக் குறிப்பிட்டேன்;
புறையோடிப் போகும் புண்ணைவிட கிழித்து காயம் கட்டப்படும் மருத்துவமே இன்றைய தேவை;மூடிவைத்தால் மட்டுமே எல்லாம் சரியாகி விடாது;
கடந்த 40 வருடத்துக்கு மேலாக ஜாமக்காரன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒவ்வொரு கட்டுரையும் தாங்கள் கூறிய வண்ணமாக நிதானமாக விசாரித்து விளக்கக் கடிதம் கோரி ஆதாரத்துடனே வெளியிடப்பட்டது; யாராவது திருந்தினார்களா?
இன்னும் ஜீவநீரோடை எனும் பத்திரிகையின் ஆசிரியர் சாம்ஸன் பால் அவர்களுடைய எழுத்துக்களும் அவ்வாறே;
தினமும் அதிகாலையில் தமிழன் டிவியில் பீட்டர் சாலமன் என்ற கிறித்துவின் சபைக் குழுவினரின் போதகர் செய்வதென்ன?
இதனாலெல்லாம் புதியவர் இடறுவார் என்றால் அவருக்கு கிறித்துவை மட்டுமே சரியாகச் சொல்லாதவரே குற்றவாளியாவார்;ஒவ்வொருவரும் தன்னையும் தன்னுடைய ஸ்தாபனத்தையும் மட்டுமே முன்னிறுத்தி இயேசுவையும் அவர்தம் தியாகத்தையும் பின்னுக்குத் தள்ளும் பயங்கரம் எப்படி வெகுஜனத்தைக் கவரும்?அதில் பரிசுத்தாவியானவர் செயல் இல்லாததால் விரைவில் அவிந்துபோகும்;
அது வழியருகே விதைக்கப்பட்ட விதையாகவோ கற்பாறையின் மேல் விழுந்த விதையாகவோ முள்ளின் மீது விழுந்த விதையாகவோ மாறும்;
இதனை எழுதும் போது ஒரு கருத்து ஆவியில் வந்து போகிறது; "வழியருகே" என்பவன் சுவிசேஷகன், "கற்பாறை" என்பது சபை, "முள்ளில்" என்பவன் கள்ள ஊழியன், என்று இருக்கலாமோ என்னவோ... தயவுசெய்து என்னுடைய இந்த சொந்த கருத்தை உபதேசமாகக் கொள்ளவேண்டாம்;
//உதாரணமாக உமர் அண்ணா ஒருவேளை... //
நண்பரே, சகோ.உமர் அவர்களுடன் என்னை ஒப்பிடவேண்டாம்; அவருடைய தளம் வேறு,என்னுடைய தளம் வேறு;அவர் ஆராயும் குரானில் (பழைய ஏற்பாடு என்றும் புதிய ஏற்பாடு என்றும் பைபிளைப் போல...) பழைய குரான் என்றும் புதிய குரான் என்றும் பிரிவுகள் இல்லை;ஹதீஸ் எனும் மாற்றமுடியாத நிலையான கொள்கை விளக்க வியாக்கியானக் குறிப்பேடு உண்டு;அதன் அடிப்படையிலேயே அவர் வாதிக்கிறார்; இஸ்லாமியரும் தடுமாறுகிறார்;
சரி, தட்டு தடுமாறி இங்கே வந்து சேரும் இஸ்லாமியருக்கு நாம் எதைத் தருகிறோம்?கத்தோலிக்கத்தையா,பாப்டிஸ்டு,அட்வென்ட்,ப்ரோட்டஸ்டன்ட், பெந்தெகொஸ்தே,தீவிர பெந்தெகொஸ்தெ,மிதவாத பெந்தெகொஸ்தே,வேத மாணாக்கர்,யெகோவா சாட்சிகள்,பிரன்ஹாம் தீர்க்கதரிசி, மார்மன், கிறித்துவின் சபையார் போன்ற எண்ணற்ற மார்க்கபேத கொள்கையாளர்களையா, இவர்களில் யாரிடம் புத்தம்புது மலரான இஸ்லாமிய ஆத்துமாவை அழைத்துச் செல்வீர்கள்?
"வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு. " (நீதிமொழிகள்.Pro 24:27)
இங்கே கிறித்தவம் என்பது இதுதான் என்ற ஒரு கொள்கை இருந்தால் சொல்லுங்கள்;பிரதானமான விசுவாசப் பிரமாணங்கள் மூன்றுண்டு;மூன்றையும் சரியாக விளங்கிக் கொள்ளாத எண்ணற்ற ஸ்தாபனங்களும் கலப்பட சத்திய சிறுகுழுக்களும் ஏராளமாக உண்டு;
எனவே நானே தெளிவடையாத எந்த கருத்தையும் இதுபோன்ற எதிர்ப்புகளிடையே போதனையாக இங்கே சொல்லும் தைரியம் எனக்கில்லை;
அண்மையில் நம்முடைய தள நண்பர் ஒருவர் என்னிடம் வந்தார்;அவரிடம் நான் எனது புரிதலின் படியான சில சத்தியங்களைப் பேசிக் கொண்டிருக்கும்போதே, 'நீங்கள் அந்த குழுவைச் சேர்ந்தவரா 'என்று ஏதோ ஒரு ஜாடியில் போட்டு என்னை அடைக்க முயன்றார்;
அவரோ புதியவர்,அவரிடம் எல்லா வித்தியாசமான போதனைகளையும் விளக்கிச் சொல்லிக்கொ ண்டிருக்கவும் முடியாது,அனைத்தையும் பொறுமையாகக் கேட்கும் மனநிலையிலும் அவர் இல்லை;அவரை எப்படி ஆதாயப்படுத்தமுடியும்?
மென்மையான -மேலோட்டமான நல்ல கிறித்தவ போதனைகள் என்னிடம் உண்டு; அது உங்களுக்கு அத்தனை சுவாரசியமாக இருக்காது; அவற்றை என்னைச் சுற்றிலும் இருக்கும் நண்பர்களுக்காக மட்டுமே வைத்திருக்கிறேன்;
ஒருவேளை ஏதாவது ஒரு பொதுகூட்டத்தில் நீங்கள் என்னை சந்திக்க நேர்ந்தால் என்னுடைய இயல்பையும் சரியான போதகத்தையும் அறிய வாய்ப்புண்டாகும்; மற்றபடி இங்கு கற்றுக்கொள்ளவே நான் கேள்வி எழுப்புகிறேன்; தீர்வு சொல்ல எனக்குத் தெரியாது அல்லது தைரியமில்லை;
இது அரிசியிலிருந்து சிறுகற்களைக் களையும் முயற்சியைப் போன்றதே; சிலசமயம் கற்குவியலுக்கிடையே அரிசி சிந்தியிருக்கலாம்;அதிலிருந்து அரிசியை மீட்டெடுக்கவேண்டும்.
// தங்களுடைய தளத்தில் பொதுவான விசயங்களும் இடம்பெறும் என்று சொல்லுவீர்களாயின் நான் அதிவிரைவு திரட்டியிலிருந்து தங்கள் தளத்தை நீக்கிவிடுகிறேன் //
"என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? " (மத்தேயு.Mat 20:15)
-மேற்கண்ட வாக்கியத்தின் படி தங்களுக்கு வானளாவிய அதிகாரமுண்டு; அந்த விஷயத்தில் தாங்கள் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச் பாண்டியனைப் போன்றவர்;என்ன, உடனே நானும் ஒரு கிறித்தவ திரட்டியைத் துவங்குவேன்; இப்படியே சபைகளும் பெருகியது;
என்னுடைய தளத்தில் எப்படிப்பட்ட விஷயங்கள் இடம்பெறும் என்பதை நான் தானே இறுதி செய்யமுடியும்?
என்னுடைய தளத்தினால் தங்கள் திரட்டியின் தரம் பாதிக்கப்படும் என்று கருதினால் நீங்கள் என்னை தாராளமாக நீக்கலாம்; நான் நீக்கப்படுவதோ அவமானப்படுவதோ எனக்கு புதிதல்ல,பழகிவிட்டது; எனக்கு நண்பர்களும் மிக மிகக் குறைவு.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மிகுந்த பாரத்தோடு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சில்சாம் அவர்களுக்கு ஒரு தாழ்மையான கேள்வி தாங்கள் ஏன் இது தொடர்பாக ஆசீர்வாதம் டீவிக்கு உங்கள் கண்டனத்தை நேரடியாகச் சொல்லவில்லை என்பதை கொஞ்சம் விளக்குவீர்களாக... என்று மீண்டும் ஒருமுறை கேள்வியை முன்வைக்கிறேன்.
சில நாட்களுக்கு முன் ராமர்ன் என்கிற மார்டின் தங்கள் தளத்தில் கிறிஸ்தவம் அல்லாத பதிவுகளைச் சுட்டிக்காட்டி இது ஏன் கிறிஸ்தவ திரட்டியில் இடம் பெற்றது என்று கேள்வியை நம் இருவருக்கும் ஏன் மின்னஞ்சல் அனுப்பினார்?
மாறாக அவர் சம்பந்தமே இல்லாமல் மார்ஸ்மேடையிலோ, தமிழ் இந்துவிலோ, வந்து
முழு நேர ஊழியரின் தளத்தில் படித்த கிறிஸ்தவ செய்தி என்று அலங்கரிப்பு வார்த்தைகளில் உங்களின் அந்த பதிவையும் அதற்கான தொடுப்பையும் பதிவு செய்துவிட்டு மற்றவர்களையும் குறைசொல்ல ஆரம்பிக்க அழைத்திருப்பாரானால் எப்படி இருந்திருக்கும்?
(இன்னும் பல உள்ளன அவைகள் பொதுவான விசயம் சார்ந்தவை அவை இங்கே பட்டியலிடப்படவில்லை)
இது போன்ற கிறிஸ்தவ திரட்டியில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளைப் படிக்கவரும் ஒரு புதிய கிறிஸ்தவர் ஒரு முழு நேர ஊழியர் இதெல்லாமா கிறிஸ்தவ கட்டுரை என்று எனக்கோ அல்லது தங்களுக்கோ மின்னஞ்சலோ அல்லது அவர் கிறிஸ்தவ திரட்டியில் படித்த புரட்சிகரமான கிறிஸ்தவ கட்டுரை என்ற தலைப்பில் ஒரு குறைசொல்லும் அரங்கை கூட்டியிருப்பாரானால், கிறிஸ்துவுக்காக உழைக்கும் உழைப்பும், அதற்கான ஊக்கத்தையும் அது கட்டாயம் பாதித்திருக்கும் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளத்தயாரா?
இப்படித்தான் இந்த தொடரை ஒருவேளை ஆலன்பால் படிக்க நேர்ந்தால் மணதளவில் தாக்கப்பட்டிருப்பார், இந்த ஒரே காரணத்திற்காகத்தான் உங்களிடம் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
தாங்கள் மின்னஞ்சலில் சொன்னது போல தாராளமாக என்னை நீக்கிவிடலாம் என்று சொல்லி இங்கே தப்பிக்க நினைக்கவேண்டாம், தயவுசெய்து விளக்குங்கள், மற்றவர்கள் செய்தால் தான் தவறா? http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=6&topic=1922&Itemid=287 My Reply: அன்பான நண்பர் இராஜ்குமார் அவர்களின் மனத் தாழ்மையையும் நட்புணர்வையும் நான் பெரிதும் மதிக்கிறேன்;தங்கள் தளமானது கிறித்துவின் அன்பைப் போதிப்பதில் மிகச் சிறந்த வாசலாக இருக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை;உங்களுடன் ஒப்பிடுமளவுக்கு நான் எதையுமே செய்யவில்லை என்பதை அறிந்தே இருக்கிறேன்;ஆனாலும் கிறித்துவின் அங்கங்களான நாம் ஒவ்வொரு வகையில் விசேஷித்தவர்களாக இருக்கிறோமல்லவா, நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தவும் கண்டிக்கவும் கற்பிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும்;
இது ஒருபுறமிருக்க, எனது தளமுயற்சிகளைக் குறித்த தங்கள் விமர்சனங்களில் எந்தவித தவறுமில்லை;அவற்றை நான் நியாயப்படுத்தவும் போவதில்லை;எனவே நான் தொடர்ந்து எழுதுபவற்றை வாதமாக எடுத்துக் கொள்ளாமல் என்னுடைய தரப்பு விளக்கமாக பாவிக்கவும்;வாதம் என்றாலே வாதிகளும் இருப்பர்; அதில் சிலர் தீவிரவாதிகளாகவும் சிலர் மிதவாதிகளாகவும் சிலர் சந்தர்ப்பவாதிகளாகவும் இருப்பர், நானோ தீவிரவாதி; வேகம் விவேகமல்ல என்பார்கள்;ஆனால் நான் எதையும் வேகமாக செய்பவன்; என்ன செய்வது?
என்னுடைய தளம் அல்லது வலைப்பூ என்பது கிறித்தவர்களுக்கு மட்டுமே உரித்தான தளமாகவோ தொழில்நுட்ப நுண்ணறிவுடனோ அமைக்கப்படவில்லை என்பதை அனைவரும் அறிவர்; நான் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவிரும்பவில்லையாதலால் அடிக்கடி என்னைக் குறித்து "வழிப்போக்கன்" என்று சொல்லிக்கொள்வேன்;
நீங்களோ இதென்ன,"பிராமீனாத்து விருந்து சாம்பாரில் மீன் முள்ளா" என்பது போல பிரமிக்கிறீர்கள்; நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் அநேகரை சந்திக்கிறோம்; அதுபோல பற்பல எண்ணங்களும் வந்துபோகிறது; அவையெல்லாவற்றையும் எப்போதும் வெளியிடமுடியாது; முழுவதும் புரியவைக்கவும் முடியாது;ஆனால் அதிக சுயசார்புள்ளவர் அல்லது தன்மீதான நல்லெண்ணத்தை உண்டாக்கவும் காப்பாற்றிக்கொள்ளவும் கவனமாக இருப்பவர் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளமாட்டார்; உதாரணமாக நானும் கூட எனது சுய அடையாளங்களுடன் வேறொரு முகமூடியினை அணிந்து கொண்டு இங்கே செயல்பட்டிருந்தால் இன்னும் பெருமை பெற்றிருக்கலாம்; நான் இயன்றமட்டும் என்னை மறைத்துக்கொண்டு செயல்படுவதே பெரிய சவாலாக இருக்கிறது; மறைந்திருக்க காரணமென்ன என்பதை பிறிதொரு சமயத்தில் சொல்லுகிறேன்;
"கிறித்தவ உலகின் நக்கீரன்"என்று டாக்டர் புஷ்பராஜ் அவர்களைக் குறித்துச் சொல்லப்படுவதுண்டு; அதுபோல நீங்கள் என்னை "துக்ளக்"என நினைத்தாலும் சரி, பிரச்சினையைக் கிளப்பத் தெரிந்த எனக்கு தீர்வைச் சொல்லமுடியவில்லை; ஒரு செய்தித் தாளானது தீர்வு எதையும் சொல்லுகிறதா என்ன, அந்த விஷயத்தில் நீங்கள் என்னை கழுதையாக நினைத்தாலும் சரி, கழுதையினால் தின்னப்படும் காகிதமாக நினைத்தாலும் சரி எனக்கு முழு சம்மதமே;
மேலும் திரட்டியில் இணைக்கும் நடைமுறைகளைக் குறித்த ஞானமோ தெளிவோ எனக்கு இல்லையென்பதே உண்மை; என்னுடைய டூல் பாரில் இருக்கும் ஆட் ஆனை (add on) அழுத்தியதுபோது அது நேரடியாக தங்கள் தளத்துக்குக் கொண்டுவந்தது; இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் அங்கே வந்தது; வழக்கமாக ஆடான் (add on) மூலம் எனது வலைப்பூவில் எந்தவொரு கட்டுரையையும் பதித்து அங்குள்ள கருவிப்பட்டையின் மூலம் தமிழ்மணத்தில் சேர்ப்பேன்;ஆனால் உங்கள் திரட்டியில் பதிந்தபிறகு முன்போல் என்னுடைய வலைப்பூவில் அது சேராதது குழப்பமாக இருந்து பிறகு அதனை கற்றுக்கொண்டு சரியாக செய்கிறேன்;தங்கள் திரட்டியிலிருந்த ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளையும் நீக்கினேன்;இனி தேவையற்ற எந்த சுய இடுகைகளும் தங்கள் திரட்டிக்கு வராது;
இனி...
இயன்றமட்டும் தங்கள் கேள்விகளுக்கு விவரமாக பதிலளிக்க முயற்சிக்கிறேன்; ஏனெனில் முரடர்களை சமாளிப்பதைவிட சாதுவானவர்களை அல்லது மெத்தனப்போக்குடையோரை ஆதாயப்படுத்துவது கடினமான காரியமென்பதை நான் அறிந்திருக்கிறேன்; எனது விளக்கங்கள் தங்கள் கடைசி பதிவிலிருந்து இறங்குவரிசையில் செல்லுவதை கவனிக்கவும்;
//முழுநேர ஊழியரின் தளத்தில் படித்த கிறிஸ்தவ செய்தி என்று அலங்கரிப்பு வார்த்தைகளில் உங்களின் அந்த பதிவையும் அதற்கான தொடுப்பையும் பதிவு செய்துவிட்டு மற்றவர்களையும் குறைசொல்ல ஆரம்பிக்க அழைத்திருப்பாரானால் எப்படி இருந்திருக்கும்?//
இணைய உலகுக்கு சில்சாம் என்பவர் முழுநேர ஊழியரல்ல; ' நான் கர்த்தருடைய கனமான ஊழியத்தைச் செய்கிறேன்,எல்லோரும் எனக்கு மரியாதை கொடுக்கவேண்டும் ' என்று அவர் இதுவரை கேட்டதுமில்லை; எனவே நீங்கள் சொல்வது போல "இராமர்ன்" அதுபோல சில்சாமைக் குறித்து போட்டிருந்தால் அது "இராமர்ன்"கே மிகவும் சங்கடமாக இருந்திருக்கும்; தந்திரமாக சில்சாமுடன் பழகி வேவுபார்த்து அவரை அசிங்கப்படுத்தவேண்டும் என்று நினைப்பவரே மிகவும் ஏமாற்றமடைவார், ஏனெனில் சொல்லிக் கொள்ளுமளவுக்கு அவர் (சில்சாம்) பெரிய ஆள் கிடையாது என்பதுடன் கிறித்துவைத் தவிர யாரையும் அவர் சார்ந்திருக்கவில்லை;
அவர் தன்னை " கர்த்தர் அழைத்தார் " என்று ஊழியத்துக்கு வந்துவிட்டு தினமும் ஊரறிய சத்தம் போட்டு எல்லோரிடமும் "ஐந்தப்பமும் இரண்டு மீனும் " கேட்டுக் கொண்டிருப்பவருமல்ல; வாயினால் அவரைத் துதிப்போருடைய வயிற்றையும் நிரப்ப அவரே வல்லவர் என்பதை விசுவாசிப்பவர்;மடியிலே கனமில்லே,வழியிலே பயமில்லலே..!
ஒரு வியாபாரி ஒரு குறிப்பிட்ட முதலீட்டில் ஒரு தொழிலைச் செய்கிறான்; அவனுடைய சிறப்பான திருப்திகரமான சேவையால் மட்டுமே புகழ்பெறுகிறான்; அவ்வளவு ஏன் 'சன்டிவி' நம்மிடம் டொனேஷன் கேட்கிறதா என்ன? நம்ம ஆட்களோ ஆகாய்.1:6 வழிவந்தவர்கள் என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகீறேன்; அதுபோகட்டும்.
தங்களுடைய கிறித்தவ திரட்டியில் நீங்கள் அழைத்தபிறகே இணைந்தேன்; நீங்கள் என்மீது குற்றஞ்சாட்டும் பதிவுகளோ அதற்கும் முந்தையது;அதிலும் தாங்கள் உதாரணத்துக்குக் கொடுத்தவை வெறும் தொடுப்புகளே.
நானாக பதித்த எந்த பதிவையும் பரிசீலித்தே பதிக்கிறேன்; அதில் ஒரு கட்டுரை மட்டுமே கிறித்தவத்துக்கு சம்பந்தமில்லாதது என்றறிந்தேன்; ஆனால் அதையும் சம்பந்தப்படுத்தும் உயிருள்ள சாட்சியை என்னிடம் வைத்திருக்கிறேன்; அதாவது ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவமானது செய்தி;
அதுபோலவே அதே வாரத்தில் நானறிந்த சகோதரி ஒருவரும் பாதிக்கப்பட்டு அற்புதமாக விடுதலை பெற்றார்; மற்றபடி தங்கள் திரட்டியில் நான் பதிக்கும் சுய இடுகை மூலமாகவோ அல்லது நீங்களே திரட்டும் திரட்டியின் மூலமாகவோ என்னை சந்திக்கும் வாசகர் என்னுடைய பழைய பதிவுகளையும் வாசிப்பதை நான் எப்படி தடுக்கமுடியும்?
என்னுடைய டைரியிலும்கூட எதையும் அடித்து திருத்தியதோ கிழித்ததோ இல்லை; என்னுடைய பேரன் கூட நான் செய்த அநியாயங்களை எனது டைரியின் மூலம் அறியமுடியும்;அந்தளவுக்கு வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிப்பவன் நான்;
நான் 'மஞ்ச கண்ணாடி' போட்டுக்கொண்ட பிறகு 'பச்ச கண்ணாடி' போட்டிருந்த போது பெற்ற அனுபவங்களை மறைக்கவேண்டுமா என்ன? அது அப்படியே இருக்கட்டும், அதையும் சேர்த்து என்னை நேசிப்பவர்கள் எனக்குப் போதும்;
நான் தற்போது இரு வலைப்பூ தளத்தையும் ஒரு விவாத தளத்தையும் நிர்வகிக்கிறேன்; இதில் நேரமெடுத்து அதிலுள்ள தொழில்நுட்ப வசதிகளை ஆராய்ந்து அதன்மூலம் இந்த தளங்களை அழகுபடுத்தவும் செய்திகளை வகைப்படுத்தவும் முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்; அதற்கு அவகாசமில்லாததால் எனது தளங்கள் குப்பைத் தொட்டியைப் போலிருக்கிறது;
ஆனாலும் இவற்றின் மூலம் ஒன்றை நீங்கள் நிச்சயமாக அறிந்திருக்கலாம், நான் கிறித்தவ வட்டாரத்துடன் மட்டுமே முடங்குபவனல்ல; கிறித்துவின் பார்வையில் உலகத்தை பார்க்கும் சிறந்த வழிமுறையுடனே உலகத்தின் பார்வையில் கிறித்துவையும் இன்றைய கிறித்தவத்தையும் பார்க்கும் சிக்கலான பணியையும் செய்துகொண்டிருக்கிறேன்;
இதனை சபையானது செய்யாததாலேயே இந்த உலகத்தார் மத்தியில் ஒன்று, நாம் அந்நியராக இருக்கிறோம் அல்லது அதிகமாகக் கலந்துவிடுகிறோம்; பேப்பர் படிக்காத- டிவி பார்க்காத ஊழியர்களிடம் குட்டுபட்டு வளர்ந்தவன் நான்; அதுவே மேன்மையானது;
ஆனாலும் அதுபோன்ற "பரிசுத்தவான் போர்வை" மட்டுமே உலகத்தானை ஈர்த்துவிடுமா என்று தெரியவில்லை; எனவே என்னுடைய தளத்தில் கிறித்தவரல்லாதோரையும் ஈர்க்கக்கூடிய பொதுசெய்திகளைப் போட்டு அதனைப் பல்வேறு திரட்டிகளில் இணைக்கிறேன்; அந்த திரட்டிகளிலோ பெரும்பாலும் அரசியலும் சினிமாவும் மட்டுமே முன்னணியிலிருக்கிறது; என்னுடைய இந்த கிறித்தவம் சம்பந்தமில்லாத பதிவுகளைப் பார்வையிட வருவோர் இங்கே உள்ள தொடுப்புகள் மற்றும் ஏனைய பதிவுகள் மூலம் ஆண்டவரைக் குறித்தும் அறியக்கூடும் என்பது எனது எதிர்பார்ப்பு;
உதாரணத்துக்கு, சாரு நிவேதிதா “பொம்பளை பொறுக்கியா..?” எனும் இந்த பதிவுமட்டுமே ஒரே நாளில் சுமார் 1200 பேர் என்னுடைய வலைப்பூவை பார்வையிட்டுச் செல்ல காரணமாக இருந்தது;அது இத்தனை பெரிய வெற்றியாகும் என்று நானே எதிர்பார்க்கவில்லை; பிறகே அவர் அவ்வளவு பெரிய ஆளாக்கும் என்ற பயமும் பிரமிப்பும் ஏற்பட்டது; ஆனாலும் நான் கிளப்பிய சர்ச்சையின் மையக் கருவானது நான் கடந்த 28 வருடமாக வாசிக்கும் ஜூவி இதழில் என்னை பாதித்த வார்த்தை; இத்தனை வெளிப்படையாக வெட்கமில்லாமல் தன்னைக் குறிப்பிடும் ஒருவரின் புகழின் தரத்துக்கும் நம்முடைய தளத்தில் புகழப்படும் அருள்நாதரின் புகழின் தரத்துக்குமான ஒரு மறைமுக சவால்தான் இந்த பதிவு;
// A – கிளாஸ் ஜோக்ஸ் "ஐம்பத்திநாலில் பதினெட்டு மூன்று தரம் போகும்...........//
மேற்காணும் அதே காரணங்களுக்காகவே இந்த கட்டுரையையும் பதிக்கப்பட்டது; மேலும் நாம் கிறித்தவர்கள் என்பதற்காக நகைச்சுவைக்கும் செக்ஸுக்கும் தூரமானவர்களாக இருக்கிறோமா? நான் அதைப் படித்தபோது பாவம் செய்யவில்லை, பதித்தபோதே பாவம் செய்தேன் என்பீர்களா?
இதுவே கிறித்தவனை வேடதாரியாக்கி மனஅழுத்தத்தில் தள்ளுகிறது;இனி பிரசங்கமேடைகளில் நம்முடைய ஊழியர்கள் எடுத்துவிடும் ஆபாச செய்திகளை மட்டும் பதிக்க முயற்சிக்கிறேன்;கண்டித்து போதிக்கும் போர்வையில் அங்குமிங்கும் சேகரித்த குப்பைகளை பிரசங்கபீடத்தில் வாந்தியெடுக்கும் ஊழியர்களை அறிவேன், அவர்களும் சாதாரணமானவர்களல்ல, வெற்றிகரமாக சபையை ((என்று ஏதோ ஒன்றை)) நடத்துபவர்கள் தான்; மிகவும் கோபமாக வைராக்கியமாக பரிசுத்தத்தைக் குறித்துப் பேசும் போர்வையில் ஆபாசமான கள்ளத்தொடர்பு செய்திகளால் ஆராதனையின் துதிநேரமும் செய்தி நேரமும் நிரம்பியிருப்பது உங்களுக்குத் தெரியுமா?
//ஏன் இது தொடர்பாக ஆசீர்வாதம் டீவிக்கு உங்கள் கண்டனத்தை நேரடியாகச் சொல்லவில்லை //
"ஆசீர்வாதம் டிவி " என் ஒருவனுடைய கருத்துக்கு அத்தனை மரியாதை கொடுத்து தன்னைத் திருத்திக்கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கில்லை; ஏனெனில் ஏஞ்சல் டிவியுடன் இதே போன்று எனக்கு ஏற்பட்ட அனுபவமே;
கடிதம் எழுதுவதைவிட போன் சிறந்தது அல்லவா,போன் செய்து விளக்கம் கேட்டால், முதலில் எங்களுக்கு அதைக் குறித்து தெரியாதே என்றும் பிறகு ஐயா ஊரிலில்லை,எப்போ வருவாங்க தெரியாது என்றும் சொல்லி காலத்தைக் கடத்துவார்கள்;கடிதமென்றால் கொளுத்திவிடுவார்கள்,ஐயா கவனத்துக்கே வராது;மேலும் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியும்கூட மிகப் பழையதாக இருக்கும்;
ஆனால் இதுபோன்ற பொதுமேடையில் என்னைப் போன்றே இந்த நிகழ்ச்சியை கவனித்தவர்களின் கருத்துடன் சேர்த்துப் பார்த்தால் ஒருவேளை எனக்கே நல்ல சத்தியத் தெளிவு கிடைத்தால் எனக்கு இலாபம்தானே; ஆனால் நான், 'எனக்கேன் ஊர்வம்பு' எனக் கடந்து போவதால் திசைமாறிப் போகக்கூடிய ஆத்துமாக்களுக்கு யார் பொறுப்பு?
மேலும் இது தனியே அழைத்துச் சென்று கண்டிக்குமளவுக்கு சகோதரரிடையான வழக்கு அல்ல,"நான் சொல்வதே இறுதியானது " என்று சொல்லக்கூடிய நிலையிலிருக்கும் தலைவனும் நானல்ல;
சத்தியப்புரட்டு இல்லை என்றால் அதை ஆசீர்வாதம் டிவியின் சார்பாக நீங்களே சொல்லுங்கள், அல்லது அவரிடம் எனக்காகக் கேட்டுச்சொல்லுங்கள்; அல்லது எழுதி கேளுங்கள்; மற்றபடி அவர்களிடம் போய், 'உங்களைப் பற்றி ஒரு விஷயம் வைத்திருக்கிறேன்;அதனைப் பதிக்காமலிருக்க என்னை கொஞ்சம் கவனிக்க வேண்டும்' என்று பேரம் பேசுபவனுமல்ல; நான் பத்திரிகையாளர்களைச் சொல்லவில்லை; ஊழியர்களே இதுபோல மிரட்டி பணம் வசூலிக்கும் காரியமும் நடந்துகொண்டிருக்கிறது;
என்னுடைய செய்தியைப் பார்த்து சகோ.ஆலன்பால் அவர்கள் வேதனைப்பட்டால் அதற்காக சந்தோஷப்படுவேன்; அவரைச் சுற்றி துதிபாடிகள் இருக்கலாம்; ஆனால் அவருடைய ஆரோக்கியமான உபதேசத்தில் அக்கறை கொண்டவனாக இருப்பதால் சந்தோஷப்படுவேன்; துதிபாடிகள் வருவர்,போவர்; ஆனால் எனக்கு சகோ.ஆலன்பால் அவர்களைப் போன்ற தலைவர்களோ ஆசீர்வாதம் டிவியைப் போன்ற சுயாதீன கிறித்தவ சானலோ கிடைக்கமாட்டார்;அதற்காக பல நூறுகோடி ரூபாய்கள் தேவைப்படும்; நல்ல தலைவர்கள் வருடந்தோறும் எழும்புகிறதில்லை;சகோ.ஆலன்பால் அவர்கள் நல்ல தலைவர், அவருடைய ஆசீர்வாதம் டிவி நம்மெல்லாருக்கும் பொதுவானது;அவர் தன்னை சரிசெய்து கொண்டால் இன்னும் 25 வருடமாவது அழகானதொரு ஊழியத்தைச் செய்யலாம்;
"எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்." (யாக்கோபு.Jas. 2:10 )
மேற்கண்ட வாக்கியத்துக்கு ஒப்ப அவர் எல்லாவற்றிலும் சரியாக இருந்து வேத வசனத்துக்கு ஒவ்வாததாகவோ எதிராகவோ ஏதேனும் ஒன்றை தவறாக வியாக்கியானம் செய்து போதித்தால் முழுவதுமே கெட்டுப்போகும்;அது தைலக்காரனுடைய குப்பியைப் போலவுமாகும்;அது அவருக்குக் கிடைத்த விசேஷ வெளிப்பாடாக இருக்கலாம் என்று இதற்கு மேல் யாரும் யாரையும் ஏமாற்றமுடியாது;
இதுவரை என்னுடைய தளத்தைக் குறித்த விமர்சனங்களுக்கும் ஆசீர்வாதம் டிவியைக் குறித்த விமர்சனத்துக்கும் பொதுவானவிளக்கத்தைக் கொடுத்துள்ளேன்;
ஆசீர்வாதம் டிவி யைக் குறித்து தாங்கள் என் முன்வைத்த கேள்விக்கு ஏற்றமுறையில் நான் பதிலளிக்காதிருந்தால் எனக்கு தயவாக தெரிவிக்கவும்;
"மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது." (நீதிமொழிகள்.Pro 27:5 ) எனும் வேத வார்த்தையையும் சற்று கவனத்தில் கொள்ளவும்.
மற்ற காரியங்களுக்கான பதிலை அவசியப்பட்டால் அவசியம் பதிப்பேன்; நன்றி..! (குறிப்பு: என்னைக் குறித்து "இராமர்ன்" பரபரப்பு செய்தி வெளியிட்டு என்னை வேதனைப்படுத்தாவிட்டாலும் நீங்கள் அதன் ஒரு சிறுபகுதியை பகிரங்கப்படுத்தி நிறைவேற்றியிருக்கிறீர்களே, அண்ணா..? இதன்மூலம் நான் மகிழ்ச்சியடைகிறேன்...இன்னும் ஆராயப்படாத நான் ஆராயப்படவும் சுயபரிசோதனை செய்யபடவும் சரியான விளக்கங்களைப் பதிக்கவும் எனக்கு வாய்ப்புண்டு.)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// அன்பு நண்பர்களே, தய்வுசெய்து தேவனுடைய ஊழியர்களை குறைசொல்லுவதைத் தவிர்க்கவும், எபிரெயர் 5:4 இல் சொல்லப்படவைகளை நீங்கள் விசுவாசிக்கவில்லையா? அல்லது மத்தேயு 10:40 மற்றும் யோவான் 13:20 இல் சொல்லப்பட்டவைகளை நீங்கள் விசுவாசிக்கவில்லையா? மத்தேயு 7:2 வசனம் உங்களை நியாயம் தீர்க்கட்டும், இது எனது தனிப்பட்ட தாழ்மையான கருத்து, நன்றி //
Heb 5:4 மேலும், ஆரோனைப்போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.
Mat 10:40 உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
Joh 13:20 நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Mat 7:2 ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
வாசகருடைய வசதிக்காக நண்பர் குறிப்பிட்ட வசனங்களைக் குறிப்பிடுகிறேன்; அதற்கும் இந்த திரிக்கும் எந்த சம்பந்தமுமில்லை; நான் எடுத்துக்கொண்ட பிரச்சினைக்கு எதிரான வசனங்களல்ல, இவை; மாறாக எனக்காகச் சொல்லப்பட்டதாகவே இருக்கிறது; அப்படியானால் திருந்தவேண்டியது யாரென்று நண்பர்தான் சொல்லவேண்டும்;
நண்பர் இராஜ்குமார் அவர்களும் ஒரு தலைவராக உருவாகி வருவதால் இந்த அடக்கம் அவருக்குத் தேவைதான்; இது நிச்சயம் உங்களை இன்னும் உயர்த்தும்; ஆனால் "யதார்த்தவாதி வெகுஜன விரோதி " எனும் முதுமொழிக்கேற்ப என்னைப் போன்றவர்களுக்கு நண்பர்கள் மிகவும் குறைவு; "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் " என்பது நமக்கு சரிப்பட்டு வராது; இங்கே "ஆசீர்வாதம் டிவியில் புரட்சிகரமான கருத்து..!" என்று நண்பர்களுடைய மனம் புண்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே குறிப்பிட்டேன்; அதையே சிலர் புரிந்துகொள்ளாமல் நான் ஏதோ ஆலன்பால் அவர்களின் கையாள் ரேஞ்சுக்கு அலப்பறை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்;
இந்த திரியைத் துவங்கியது முதல் அதில் பல்வேறு கருத்துக்களை வாசகர் தம் சிந்தனையைத் தூண்டும் வண்ணமாகக் குறிப்பிட்டு வருகிறேனேயன்றி யாரையும் எந்த குறையும் கூறவில்லை என்பதை தயவாகப் புரிந்துகொள்ளவேண்டும்;
1Jn 4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
இந்த வசனத்தை நீங்கள் விசுவாசிக்கவில்லையா? தானறிந்ததை மேல்விவரணத்துக்காகவேனும் இதுபோன்ற தளங்களில் விவாதிப்பதில் என்ன தவறு?
Psa 80:13 காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.
இந்த வசனத்தின்படியான காலக் கட்டத்தில் சபையானது தவித்துக்கொண்டிருக்கிறதை ஒருவரும் உணர்ந்தாரில்லை; இன்னும் பழைய பாட்டையே பாடிக்கொண்டிருப்பது முறையா?
நீங்களும் உங்கள் தளத்தில் "இயேசுவே, யெகோவா " என்று எழுதியிருந்தீர்கள்; அதற்கு விளக்கம் கேட்டேன், இதுவரை தரவில்லை; இதுபோல ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையிலிருந்து குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருந்தால் புதியவருக்கு வழிகாட்டியாக யாரைக் காட்டலாம்?
நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன் எனில் அதன் முழு பொருளும் அதன் உள்ளர்த்தங்களும் யாருக்குத் தெரியும், எனக்கு மட்டும் தானே..?
இங்கே என்ன நடக்கிறது, வேத வசனங்களுக்கு அவரவர் தம்தம் இஷ்டத்துக்கு ஒவ்வொரு விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்;
உதாரணத்துக்கு மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள Heb 5:4 வசனமானது இந்த திரிக்கு எப்படி பொருந்துகிறது?
தசமபாகத்தையே ஏற்றுக்கொள்ளாத தற்கால சபையினர் ஆசாரியத்துவ ஊழியம் இன்னும் இருப்பதாகவும் அவர்களையெல்லாம் ஆண்டவர் இன்னும் அழைத்துக்கொண்டிருப்பதாகவும் நினைப்பது மடமையல்லவா?
எனக்குத் தெரிந்து யாரையும் தேவன் நேரடியாக அழைக்கவில்லை;அவர் ஒரு பொதுவான பெரிய அதிமுக்கியமான கட்டளையைக் கொடுத்துவிட்டு பறந்துவிட்டார், அது மத்தேயு.28 -ன் கடைசியில் வருகிறது; அது மட்டுமே நம்மேல் விழுந்த கடமையாகும்;
அப்படியானால் கர்த்தர் என்னை அழைத்தார் என்பவர்களின் காரியம் என்ன? அவர்களைக் கர்த்தர் அழைக்கவில்லை,அது தலைமுறை தலைமுறையாக வரும் ஆசாரியப்பட்டமுமல்ல; அழைக்கப்பட்டதாகச் சொல்லிக்கொள்பவர்கள் தாங்கள் மிகவும் விரும்பும் ஒரு ஊழியரால் முதலில் அவர்களுக்கு எடுபிடியாக அழைக்கப்படுகிறார்கள்; பிறகு அவருடன் ஏதேனும் மனஸ்தாபமோ பொறாமையோ ஏற்படும் போது அந்த ஊழியரின் போட்டியாளரால் மீண்டும் அழைக்கப்படுகிறார்கள்; அது அவருக்குக் கீழாகவோ அல்லது கொஞ்சம் வளர்ந்துவிட்டரென்றால் மூளைச் சலவை செய்யப்பட்டும் பிரிக்கப்படுகிறார்கள்;
அதாவது போட்டி ஊழியர் எதிர்முகாமில் மிகவும் உற்சாகமாக செயல்படும் ஊழியரை நட்பு பாராட்டி அழைத்து அவரைப் புகழுவார்; "என்ன ப்ரதர்,உங்களுக்கு இருக்கும் திறமைக்கு இன்னும் என்னென்னவோ செய்யலாம், அங்கே எவ்வளவு நாள் இருந்தாலும் நீங்கள் தலையெடுக்கமுடியாது, அவரு அவருடைய பிள்ளைக்கும் மச்சானுக்கும் தான் முக்கியத்துவம் தருவாரு' என்று முதலில் மனதைக் கலைக்கிறார்கள், கறைக்கிறாகள்;
பிறகு இதே மூடில் ஜெப அறைக்குச் செல்லும் அந்த அப்பாவி எந்த விதமான அடிப்படை பயிற்சியும் பெறாமலே அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாக ஊழியத்துக்கு அழைக்கப்பட்டதாகக் கூறி தலையெடுப்பார்; மேலும் இதுவரை எந்தவொரு தலைவரும் முழுமனதோடு தனது உடன்பணியாளரை நம்பியதோ வழியனுப்பி வைத்ததோ இல்லை; இதைக் குறித்து இன்னும் விரிவாக எழுதலாம்;
இந்த ஒரு வசனத்தையே இப்படி பல கோணங்களில் ஆராயவேண்டியதாக இருக்கிறதே, மற்ற வசனங்களைக் குறித்து நான் என்ன சொல்வது ? வசனம் என்பது எதிராளியை மிரட்டுவதாக அல்லாமல் கண்களைத் தெளிவிக்கிறதாக ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதாக இருக்கவேண்டும்; அழைப்பிலேயே இவ்வளவு உள்விவகாரம் இருக்க மற்ற சேதிகளையெல்லாம் என்ன சொல்ல?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// சாமான்யர்களாகிய நீங்களும் நானும் சில்சாமின் கருத்துக்கு எதிராகச் சொன்னால், நாமெல்லாம் துருபதேசக்காரர்கள்; ஆனால் மக்கள் பணத்தை வஞ்சனையாகக் கவர்ந்து படோடாப டீ.வி. ஊழியம் செய்யும் ஆலன் பால், சில்சாமின் கருத்துக்கு எதிராகச் சொன்னால, அது ஆசீர்வாதம் டீ.வி.யின் புரட்சிகரமான கருத்து.
என்னே சில்சாமின் நேர்மை? //
இப்படியாக அன்பு57 என்பவர் வருந்துகிறார்;இதே போன்ற கேள்வி அநேக நண்பர்களுக்கு எழலாம்;என்னுடைய நேர்மையெல்லாம் வெறும் வெங்காயம் அண்ணாச்சி...உங்கள நான் துருபதேசக்காரர் என்றோ ஒற்றைக் கண்ணன் என்றோ மாலைக் கண்ணன் என்றோ ஒருபோதும் குறிப்பிடவில்லை;ஒப்புமையாகக் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக்கொள்வது குழந்தைத்தனமானது;இதுவும் தவறாகப் போகிறது.
ஆலன்பால் அவர்கள் ஆசீர்வாதம் டிவியின் அதிபர் என்பதால் எனக்கு எந்த பயமுமில்லை;அவருடைய பெரும்பாலான போதனைகள் ஆரோக்கிய உபதேசத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது;
ஆனால் உங்களைப் போன்றவர்கள் இயேசுவானவரைக் குறித்த போதனைகளின் ஆதாரத்திலேயே அடிபடுவதால் உங்களை இந்த விவாதத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாது;எங்கள் ஊழியர்களைக் குறைசொல்ல உங்களுக்கு எந்தவிதமான தார்மீக அதிகாரமும் கிடையாது;எம்மை பொருத்தவரையிலும் கிறித்துவை தெய்வமாகத் தொழுவோரே கிறித்தவர்;அதன் அடிப்படையில் நீங்கள் கிறித்தவரே இல்லை;நீர் பரிசேயர்,வேதபாரகர் வரிசையில் வந்து கிறித்துவின் இரத்தத்தினால் உண்டான எங்கள் சுயாதீனத்தை வேவு பார்க்கும் கள்ள சகோதரர்;உங்கள் கூட்டாளியான கோவை பெரியன்ஸ் இயேசுவானவரை சிருஷ்டிகராக மட்டும் பார்க்காமல் சிருஷ்டிக்கப்பட்டவராகப் பார்க்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
போதனையின் அடிப்படையில் பிரிந்திருப்போரை மட்டுமே துருபதேசக்காரர்கள் என்று வேதம் கூறுகிறது;வியாக்கியானத்தில் மாறுபடுபவர்களை எளிதில் திருப்பமுடியும்;ஆதார உபதேசங்களில் மாறுபடுவோரை ஒன்றும் செய்யமுடியாது;விலகிச் சென்று மற்றவர் சிக்கிவிடாமல் எச்சரிக்கும் பணியை மட்டுமே செய்யமுடியும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
issacsindhu: // தேவனுடைய ஊழியக்காரர் என்பவர் தேவனுடைய சித்தம் இல்லாமல் ஊழியம் செய்ய முடியாது. தேவனே அனுமதித்து இருக்கும் போது நாம் யார் அவர்களை குறை சொல்ல.மேலும் தேவனுடைய ஊழியக் காரர்களை குறை சொல்லுவது நம் வேலை இல்லை // குறை சொல்வதென்பது " மாமியார் ஒடச்சா மண்குடம்,மருமக ஒடச்சா பொன்குடம் ", என்பார்களே அதுபோல உள்நோக்கத்துடன்தானிருக்கக் கூடாதே தவிர, புதியவர்களை எச்சரிக்க, வேதத்துக்குப் புறம்பான போதகங்களை எதிர்ப்பது தவறல்ல; நாம் அவர்களை தேவனுடைய ஸ்தானத்திலிருந்து நியாயந்தீர்க்கவில்லை; அவர்களைப் பின்பற்றவேண்டாமென மற்றவரை எச்சரிக்கிறோம், அவ்வளவே; "பக்கத்து வீட்டில் " இதற்காக கொலையே நடக்கிறது; தேவனுடைய சித்தப்படியான -தேவனுடைய அனுமதியுடனான ஊழியர் என்று வந்தால் "யூதாஸ்காரியோத்து " மற்றும் "எகிப்தின் பார்வோன் மன்னன் " ஆகியோரும் தேவ ஊழியர்தானோ?
//விவாதம் வேண்டாம் என்று தான் சொன்னேன் // // ஆனால் இப்படி விமர்சனம் வேண்டாம் என்று தான் சொன்னேன் //
விவாதம் (அ) விமர்சனம் என்பதன் பொருளே நான் சொல்லும் கருத்தை நீங்கள் ஏற்கிறீர்களா மறுக்கிறீர்களா என்பதிலேயே இருக்கிறது;நான் குறை சொல்லுகிறேன்; நீங்கள் நான் சொன்ன கருத்து சரியா தவறா என்பதைப் பார்க்காமல் குறைசொல்லுவதே தவறு என்கிறீர்கள்;
இது என்வீட்டில் அன்றாடம் நடப்பதுதான்;அதாவது சாம்பாரில் பருப்பு தீய்ந்துபோன வாசம் வந்தால் எனது மனைவி உடனே சொல்லுவார்கள் என்ன தினமுமா அப்படி செய்கிறேன்,என்று; இதுபோன்ற அணுகுமுறையும் சமரசமும் சத்தியத்துக்கு உதவாது;
என்வீட்டு சாம்பாரில் பருப்பு தீய்ந்து போனால் என்னுடன் போகும்; ஆனாலும் ஊருக்கே நான் வைத்த விருந்து சாம்பாரில் பருப்பு தீய்ந்துபோன வாசம் வந்தால் அது மொத்த விருந்து கொண்டாட்டத்தையுமே பாதிக்கும்;
இங்கே என்னுடன் வாதிடும் நேரத்தை நண்பர்கள் ஆசீர்வாதம் டிவியை நோக்கி திருப்பலாமே;தன்னை மாற்றிக்கொள்வதே வளர்ச்சி; நம்முடைய மார்க்கமும் பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகே தற்போதய நிலையை அடைந்துள்ளது;
இப்படியே இஸ்ரவேலரும் வெறும் நாற்பது நாளில் சென்று சேரும் கானான் பயணத்தை நாற்பது வருடமாக மாற்றிக்கொண்டார்கள் என்பது வரலாற்றிலிருந்து நாம் அறியவேண்டியது;
மாற்றப்படமுடியாமல் எழுதித் தரப்பட்ட வேத வார்த்தைகளையே தரக்குறைவான விமர்சனங்களால் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் எதிரிகள் மத்தியில் நாம் சரியானதைச் சொல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும்; தேடுபொறியில் கிறித்தவம் சம்பந்தமாக எந்த வார்த்தையைப் போட்டாலும் அது தூஷிப்பவர்களுடைய தளத்துக்கே நம்மை நடத்துகிறது;இது என்ன கொடுமை? அப்படியானால் நாம் ஆக்கப்பூர்வமாக இங்கே எழுதி வைக்கவில்லையென்பது தானே பொருள்? எது சரியானது என்பதை எழுதிக் கொண்டேயிருங்கள்,
எதிரியை எதிர்த்து எதுவும் செய்யாவிட்டாலும் ஆடுகளத்திலிருக்கும் ஒரு கால்பந்து வீரனைப் போல அசைந்துகொண்டே இருங்கள்;வெற்றி நிச்சயம்..!
அற்புதம் அண்ணா, சிட்டியில் பப்ளிக்கா பப்ளிசிட்டியானதில் பிரபலமானவரின் வழியில் வந்தோரின் நின்ற இன்றைய நிலை பரிதாபம்தான்...சுயமரியாதைமிக்க ஒரு யூத இளைஞன் எருசலேமின் வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரத்தை யோசிக்கும் போது நெஞ்சமெல்லாம் நடுங்கும், உதடுகள் உலர்ந்துபோகும், உள்ளமெல்லாம் நொறுங்கும்...இதை நான் யோசிக்காத நாள் கிடையாது; அவரே என் மீட்பர், அவருடைய இரக்கத்தினால் நான் மீட்கப்பட்டேன்; எனவே எனக்கு பப்ளிசிட்டி தேடும் எந்த ஒரு சாதாரண முயற்சியையும் நான் செய்யவில்லை; தளத்திலும் கூட எனது புகைப்படத்தைத் தவிர்க்கக் காரணம் அதுவே; என்னால் என்னுடைய கருத்துக்களால் அவருடைய நாமம் புகழப்படுவதொன்றே என்னுடைய நோக்கமாகும்; இகழப்படும் சூழல் உருவானால் வேகமாக வெளியேறிவிடுவேன்; அந்த வைராக்கியம் நம்முடைய ஊழியர்களுக்கு இருக்குமானால் எதிரிகளுடன் சமரசம் செய்துகொண்டு சேர்ந்து விருந்துண்ண மாட்டார்கள்; எந்தவொரு ஊழியனும் தனக்கு பப்ளிசிட்டி கிடைக்க உதவும் எந்தவொரு காரியத்துக்கும் செலவு செய்தாகவேண்டும்; அது லஞ்சம் கொடுப்பதாகவோ ஊழல்வாதியிடம் காணிக்கை பெறுவதாகவோ சிபாரிசு பெறுவதாகவோ அனுதினமும் நடந்துகொண்டுதானிருக்கிறது;
பப்ளிசிட்டி,பப்ளிக்,சிட்டி என்பதைக் கருவாகக் கொண்டு ஒரு கவிதை வரையத் தூண்டுகிறீர்கள்; இதனால் எனக்கு பப்ளிசிட்டி கிடைத்து என்னுடையதெல்லாம் சிட்டியில் பப்ளிக்காகி விடப்போகிறது..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஆசீர்வாதம் டிவியின் ஸ்தோத்திர பலிகளில் ஒன்று "எங்கள் ஏதேன் தோட்டமே உமக்கு ஸ்தோத்திரம்" என்பதாம்;ஒரு நண்பர் கேட்கிறார், இயேசுவானவரை பலவிதங்களில் வேதம் வர்ணித்தாலும் எங்குமே அவரை ஏதேன் தோட்டத்துடன் ஒப்பிட்டதில்லை;அப்படியிருக்க சத்தியத்துக்கு விரோதமாக எப்படி அவரை "எங்கள் ஏதேன் தோட்டமே " என்று விளிக்கலாம்;
மேலும் "இனிப்பானவரே " என்றும் துதிக்கிறார்கள்; "இனிமையானவரே" என்று சொல்லுவதுண்டு, இது என்ன"இனிப்பானவரே..."புதுசா இருக்கே..!
இன்னுமொரு கொலை மிரட்டல்:
ஏதேனிலிருந்த கனியைப் புசிக்கும் நாளிலே சாவீர்கள் என்பது ஆதாம் ஏவாளுக்கான தேவனுடைய கட்டளை என்பது அனைவரும் அறிந்ததே; அதன் விளைவுகளையும் நாம் அறிந்திருக்கிறோம்;ஆனால் அந்த கனி எது தெரியுமா? அது வேறொன்றுமில்லை, தசமபாகம் தான்..!
ஆம், தசமபாகத்தை மனிதன் புசிக்கக்கூடாது அது தீமையாகும் அது தேவனுக்குரியது; மீறினால் மரணம் நிகழும்; இதை நான் சொல்லலை சகோ.ஆலன்பால் சொல்லுகிறார்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஆசீர்வாதம் டிவியின் புரட்சிகரமான கருத்து...சுவிசேஷகர் தாய் போல...பிதாவாகிய தேவன் மாம்சத்தில் வெளிப்படவில்லை..!
ஆசீர்வாதம் டிவியில் இன்று வெளிப்பட்ட இரண்டு கருத்துக்கள்:ஒன்று ஊழியங்கள் சம்பந்தமாக; அதில் ஐந்து வகையான ஊழியங்களில் சுவிசேஷ ஊழியமே சிறந்தது என்பதாகவும் அதனை ஊக்குவிக்க வேண்டுமெனவும் சுவிசேஷகர்கள் தாய் போன்றவர்கள் அவர்களை எதிர்க்கக்கூடாது கீழ்ப்படியவேண்டும் என்றும் சகோ.ஆலன்பால் அவர்கள் கூறினார்; "வித்தியாசமாக" இருந்தது.
மற்றொன்று தேவ இரகசியம் சம்பந்தமானது; அதில் தேவன் தமக்கென எப்போதும் சில காரியங்களை மறைபொருளாக வைத்திருப்பார் அதனை ஒருவரும் அறியமுடியாது;அவ்வளவு ஏன் இயேசுவும் கூட அதனை அறியமுடியவில்லை;தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் ஆனாலும் பிதா மாம்சத்தில் வெளிப்படவில்லை; ("பரலோகத்திலிருக்கிற பிதாவாகிய தேவனை எல்லோரும் ஸ்தோத்தரிப்போமாக..." என்ற இடைவார்த்தையுடன்...) என்று பிரசங்கித்தார்;இதுவும் "வித்தியாசமாக " இருந்தது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)