Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: " Rosh HaShanah " greetings..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
" Rosh HaShanah " greetings..!
Permalink  
 


இன்று பரிசுத்த வேதாகமம் கூறும் மெய்யான புதுவருடப் பிறப்பு ஆகும்; வேதாகமத்தின் எளிமையான இந்த உண்மையானது, இத்தனை காலம் மறைக்கப்பட்டிருந்ததுடன் அந்நியமாகவும் எண்ணப்பட்டது; வழக்கமாக கிறிஸ்தவர்களாகிய நாம் இதனை யூதர்களின் பண்டிகை என்றே நினைத்திருந்தோம்.

ஆனால் இது யூதர்களுடையது மாத்திரமல்ல,பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது என்ற தெளிவை தற்காலத்தில் பெற்றிருக்கிறோம்; இதன் விளைவாக யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டு அவர்களால் இன்றளவும் ஆசரிக்கப்பட்டுவரும் பண்டிகைகளின் முக்கியத்துவத்தையும் அவை எவ்வாறு கிறிஸ்துவின் நிறைவேறியது அல்லது நிறைவேறப்போகிறது என்பதையும் ஆய்ந்தறியும் நல்வாய்ப்பு நமக்கெல்லாம் கிட்டியிருக்கிறது.

317388_245869118793227_129317027115104_715577_852212300_n.jpg

Rosh Hashanah, the Jewish New Year, a two-day festival, will be celebrated this year from sundown on Wednesday, September 28. We would like to wish all our readers a year of peace, good will and wellbeing.

On the eve of Rosh Hashanah, the Central Bureau of Statistics announced that the population of Israel numbers 7,797,400.


http://www.mfa.gov.il/MFA/Facts+About+Israel/People/Jewish+Festivals+in+Israel.htm#rosh

http://www.facebook.com/IsraelinIndia



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

CUT AND PASTE FROM

http://chillsam.wordpress.com/2009/03/02/lent-2/

கிறிஸ்தவர்கள் இப்போது சொல்லட்டும்,யூதர்களின் ஆதாரப் பண்டிகையான பஸ்கா பண்டிகையே கிறிஸ்துவுக்கு நிழல்,அது கிறிஸ்துவில் நிறைவேறி ஒழிந்தது எனில் பஸ்காவுக்கு (போட்டி?) நிழலான லெந்து கால நடைமுறைகள்..?

சற்று யோசிப்போமா..? நிழலுக்கே நிழலா..?

சில்ஸாமின் தனி கருத்து:-

இது எனக்கு “இயேசுவை நினைத்துக் கொண்டு இராமாயணம் படி” என்பது போலிருக்கிறது..!

நண்பர் சந்தோஷ் ரொம்ப புத்திசாலியாயிற்றே...நிறைய கட்டுகதைகளையெல்லாம் தொகுத்து பைபிளைக் கற்றுக் கொடுக்கும் அதே சந்தோஷ் தானா நீர்?

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=33707951

அது நீர்தானென்றால் உம்ம அளவுக்கு எனக்கு கட்டுக்கதைகளெல்லாம் தெரியாது என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன்; நானே மறந்துவிட்ட எனது ஆரம்பக்கால பதிவை நினைவூட்டியதற்கு நன்றி; அப்போது நான் பதித்த‌ கருத்தில் தற்போதும் எந்த மாறுபாடும் இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்;

லெந்து காலம் அல்லது தவக்காலம் என்பதோ புனித வெள்ளி என்பதோ ஈஸ்டர் என்பதோ வேதத்தில் கட்டளையிடப்படவில்லை; அது ஏதோ ஒரு வகையில் நமக்கும் சேர்ந்து வருவதைப் போல மதிமயக்கி காலம் காலமாகப் போதிக்கப்பட்டதால் மருவி நிலைத்துவிட்டது; இதுபோல ஒத்துப்போகும் தன்மையினாலேயே சபைகள் உடைந்தும் ஆவியிழந்தும் காணப்பட்டது, காணப்படுகிறது; அன்றைக்கு நாங்கள் யாரை ஆராதிக்க சபைக்குச் செல்லுகிறோம், கிறித்துவை தானே என்பது விதண்டாவாதம்; நீங்களாக அர்த்தமற்ற நாட்களையும் வேதம் போதிக்காததும் பரிசுத்தவான்கள் ஆசரித்திராததுமான நாட்களை பாரம்பரியத்தின் காரணமாக அனுசரித்து அதில் ஆண்டவர் மகிமைப்படுகிறார் என்று நினைத்துக் கொள்வது பரிதாபமானது;

பஸ்கா பலி போன்ற யூதப் பண்டிகைகளையே மேன்மைப்படுத்தாமல் அது கிறித்துவில் நிறைவேறிவிட்டது, கிறித்துவுக்கு நிழல் என்று வேதம் கூறினாலும் அதனைக் கொண்டாடத் தடைசெய்யவில்லை; எப்படி கொண்டாட வேண்டுமென்ற மாற்றுவழிமுறைகளும் போதிக்கப்படுகிறது; கொண்டாட விரும்புவோர் மற்றும் விரும்பாதோர் ஆகிய இருதரப்புக்கும் பொதுவானதொரு ஆலோசனையையே வேதம் போதிக்கிறது; கொலொசேயர் 2 மற்றும் ரோமர்.14 ல் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டாமென்றோ அதைக் குறித்துப் பேச வேண்டாமென்றோ தடுக்காமல் பெலவீனமானவரைத் தள்ளிவிடக்கூடாது என்று பவுலடிகள் போதிக்கிறார்;

கிறித்தவர்களுக்கு பண்டிகையே இல்லையென்றால் ரொம்ப சந்தோஷம்; ஆனால் இருக்கும் வேதத்தின் போதனை சார்ந்த பண்டிகைகளைத் தள்ளிவிட்டு அவற்றைக் குறித்து போதிப்பதையும் தடைசெய்துவிட்டு வேறு சில கலப்பு மார்க்கப் பண்டிகைகளைக் கொண்டாடுவதே பரிதாபநிலை; இது ரோம அரசாங்கம் யூதரைத் தனிமைப்படுத்த செய்த சூழ்ச்சி என்பதை அநேகர் அறிகிறதில்லை; யூதர்,யூதக் கிறித்தவர்கள்,புறசாதியிலிருந்து கிறித்தவர்களானவர்கள் ஆகிய மூன்று குழுக்களும் இணைந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்?

பக்கத்து ஊர் ராஜபக்க்ஷே செய்யும் அதே சூழ்ச்சியைத் தான் அன்றைய ரோம அரசாங்கம் செய்தது; இதனால் அனைத்து அடக்குமுறைகளையும் மீறி வேகமாக வளர்ந்து பெருகிய கிறித்தவ மார்க்கம் சாத்வீகமான முறையில் நசுக்கப்பட்டது; அரசாங்க சலுகைகளுக்கு சபலப்பட்டு புறசாதியினரும் யூதக் கிறித்தவர்களில் ஒருபகுதியினரும் ரோம அரசாங்கத்தின் கட்டளையின்படி தொழுகை நாளையும் பண்டிகைகளையும் ஆசரித்தனர்; மனித‌னுக்கு தியாகத்தையும் ஒடுக்கத்தையும்விட கட்டுபாடற்ற ஆர்பாட்டமும் கொண்டாட்டமும் விருந்துகளுமே முக்கியமாகத் தோன்றுகிறது; அதன் பாதிப்புகளை இன்று வரை அனுபவிக்கிறோம்; இது வரலாற்றுரீதியான நேரடியான பார்வையாகும்;

இதனால் காலம் காலமாக மனுக்குல வாழ்வுடன் பின்னிப்பிணைந்து வந்து வீழ்ச்சியையும் மீட்பையும் சொல்லும் வேதத்தின் பண்டிகைகள் யூதமக்களின் பண்டிகைகளாக முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டது; யூதர்களின் அதாவது இஸ்ரவேலர் ஆசரித்துவந்த பண்டிகைகளில் மட்டுமே சிருஷ்டிப்பின் வரலாறு துவங்கி அடிமைத்தனமும் மீட்பும் பேசப்பட்டது; அது ஒவ்வொன்றும் போதனையுடன் கூடிய தியானமாகுமானால் முழுவேதத்தையும் ஒவ்வொரு கிறித்தவனும் வாசித்தும் அறிந்தும் வருகைக்கு ஆயத்தப்படும் பாக்கியம் கிட்டும்; அதையும் பவுலடிகளின் ஆலோசனையின்படி ஆவிக்குரிய உணர்வுடன் ஆசரிக்கவேண்டும்;



http://www.youtube.com/watch?v=n9NzfC6CBVw&p=44F88A4AD923842E&playnext=1&index=39

உதாரணமாக தற்போது யூதர்களின் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் "ரோஷ் ஹஷானா" எனும் இந்த பண்டிகையானது யூதர்களின் வாழ்வியல் பருவங்களின் ஆரம்பமாக இருக்கிறது; நாம் புத்தாண்டு என்றாலே முதல் தேதி முதலே உற்சாகப்பட்டு விருந்து கொண்டாடுவது போல யூதர் செய்கிறதில்லை; அவர்கள் முதல் பத்து நாள் தங்களைத் தாழ்த்தி அமர்ந்திருந்து தங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு மன்னித்து ஒப்புரவாகி பொருத்தனைகளை செலுத்தி புதிய தீர்மானங்களை எடுத்து பத்தாவது நாளே மகிழ்ந்திருந்து விருந்து கொண்டாடுவார்கள்; முதலாம் நாளும் கடைசிநாளும் மட்டும் தொடர் உபவாசமிருப்பர்;

இதனிடையே இந்த பத்துநாளில் தம்முடைய ஜீவபுத்தகத்திலிருந்து சிலரை நீக்குவதாகவும் சிலரை சேர்ப்பதாகவும் நம்பப்படுகிறது; அதாவது முதல்நாளில் புத்தகத்தை திறந்து நீதியுள்ளோரையும் அநீதியானவர்களையும் தொகையிடுவாராம்; அநீதியுள்ளோர் இந்த பத்து நாளில் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது; நீதியுள்ளோர் இன்னும் தங்களை தூய்மைப்படுத்திக்கொள்வார்; இத்தனை முயற்சிகளும் மறுமைக்கு அல்ல, இன்னொரு வருடம் ( பிறந்துள்ள புதிய வருடம் ) இந்த உலகில் வாழ்வதற்கு; காரணம் இதுவே இந்த உலகை ஆண்டவர் படைத்த நாளாக யூதர்கள் நம்புகின்றனர்; அதை வேதமும் மறுக்கவில்லை; அதையொட்டியே அத்தனை பரிசுத்தவான்களும் வாழ்ந்தனர் என்பதற்கு பரிசுத்த வேதாகமமே சான்று பகருகிறது; இதில் கவனிக்க வேண்டியது என்ன, சடங்காக ஜீவனில்லாமல் செய்யப்படும் ஆராதனைகளைத் தவிர்க்கவேண்டும்; இது சம்பந்தமான கட்டளைகளின் ஒரு பகுதியை லேவியராகமம்.23:24 - லிருந்து வாசிக்கலாம். இத்தனை சத்தியங்கள் இந்த ஒரு வார்த்தையின் ("ரோஷ் ஹஷானா" ) பின்னணியிலிருக்க இது எதுவும் போதிக்கப்படாமலே நம்ம சபைகளில் "சேர்ப்பின் பண்டிகை" கொண்டாடப்பட்டது தான் கொடுமையிலும் கொடுமை; அதான் இது...அப்போ இது பரவாயில்லையா..? சுமார் 500 ரூபாய் மட்டுமே பெறுமான ஆசீர்வாதத் தட்டு எனும் ஒரு காரியம் நேற்று ஒரு சபையில் ரூபாய் 75,000 க்கு ஏலம் போனதாம்...இதெல்லாம் பரவாயில்லையா? இது வேதத்துக்கு ஏற்புடையதா..? இதுபோன்ற கூத்துக்களெல்லாம் யூதப் பண்டிகைகளில் கிடையாது.

(இன்னும் வரும்..!)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

கொலோசெயர் 2:16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது,ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.

இதை ஏன் பவுல் எழுதுகிறார்! ஏனென்றால் யூதர்கள் தான் இவைகளை அந்த காலத்திலும் நேரத்திலும் சரியாக தவறாமல் பின் பற்ற கட்டளை பெற்றவர்கள், ஆனால் கிறிஸ்தவர்களான பிறகும், யூதர்களை போல் இவைகளை ஆசரித்தால் யாருமே உங்களை குற்றப்படுத்துவார்களே, ஆகையால் இவைகளை விட்டு விடுங்கள் என்கிறார்

மேலும் நமக்கு என்று ஒரு பண்டிக்கை நாள் அனுசரிக்கும் படி நம் கர்த்தரும் நம் எஜமானனுமான இயேசு கிறிஸ்து சொல்லி விட்டு சென்றிருக்கிறார், அது,

I
கொரிந்தியர் 5:8 ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடேபண்டிகையைஆசரிக்கக்கடவோம்.

அது தான் திருவிருந்து, அல்லது கிறிஸ்துவின் பந்தி எனப்படும் ப‌ண்டிகை.




__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

எத்தனையோ முறை வேண்டுகோள் விடுத்தும் தமிழ் கிறித்தவ தளத்தின் நண்பர்கள் தங்கள் பின்னூட்டங்களை இங்கே பதிப்பதில்லை; எனவே நமது கட்டுரைகளின் தொடர்ச்சிக்காகவும் நம்முடைய வாசகர்களின் வசதிக்காகவும் வேறு தளங்களில் இடப்படும் எந்தவொரு கட்டுரை சம்பந்தமான பின்னூட்டங்களையும் இங்கே காப்பி பேஸ்ட் செய்து அதற்குரிய பதிலை இங்கேதானே விவரமாகப் பதிக்கிறேன்; இங்கே படிக்கும் விவரத்துக்கும் அங்கேயே கேள்வி எழுப்புவது என்ன நாகரீகமோ கிறித்தவ அன்போ தெரியவில்லை;கர்த்தர் தாமே அவர்களுக்கு வெளிச்சத்தைத் தருவாராக‌...

இது அண்மையில் யூதப் பண்டிகை ஆசரிப்பு சம்பந்தமான நம்முடைய கட்டுரைக்கான வாதப் பிரதிவாதமாகும்;நம்முடைய வாசகர்கள் இதற்கான தங்கள் கருத்தினைப் பதிக்க அன்புடன் அழைக்கிறேன்;

arputham:
// நான் வேத வல்லுநர்களை வெறுப்பதாகக் கூறவில்லை. ”பெரிய வேத வல்லுநர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டவர்கள்” என்ற ஒரு கூட்டத்தையே நான் குறிப்பிட்டேன். மேலும் இது போதும் என்கிற மனப்பான்மையும் என்னிடம் இல்லை. இன்னும் கொஞ்சம் அறிய வேண்டும், இன்னும் கிட்டிச் சேர வேண்டும் என்பதே என்னுடைய முழு அவா. அதற்காகவே நான் எனது முழு நேரத்தையும் வாசிப்பையும் செல்விட விரும்புகிறேன். மற்றவர்களும் கிறிஸ்துவை நெருங்கிச் சேரவும் அவரைக் குறித்து அதிகம் அறியவும் விரும்புகிறேன், எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எனது தாழ்மையான கருத்து என்னவெனில், வேதாகமத்தில் நான் ஆச்சரியப்படுமளவுக்கு ஏராளமான கருத்துக்கள் பொக்கிஷங்களாக உள்ளன என்பது உண்மைதான். அவை பிரயோஜனமாக வும் இருக்கக்கூடும் என்றாலும் கிறிஸ்துவைக் குறித்து அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துவதே நமது பிரதானமான நோக்கமாக் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அதை விட பிரயோஜனமானது வேறு எதுவும் இருக்கக் கூடுமா? தெரியவில்லை.


மேலும் பரிசுத்த ஆவியானவரே உண்மையான வேத வல்லுநர். உலகத்தில் பல வேத வல்லுநர்கள் உள்ளனர். அவர்கள் எழுதிய பல புத்தகங்களை வாசிக்கத்தான் செய்கிறேன் என்றாலும் ந்ஈங்கள் சொல்கிறது போல ஆவியின் வெளிச்சத்திலேயே நிதானிக்க முயல்கிறேன்.


பண்டிகை குறித்த எனது கேள்விக்கு உங்கள் பதில என்ன என்று அறிய விரும்புகிறேன்.
//

// பண்டிகை குறித்த எனது கேள்விக்கு உங்கள் பதில என்ன என்று அறிய விரும்புகிறேன். //

// புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவம் பண்டிகைகளை ஆசரிக்கும்படி போதிக்கிறதா? //

இதுவே தங்கள் கேள்வியானால் இந்த கேள்விக்கான தங்கள் பதில் என்ன‌.?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

arputham:
// சகோ.சில்சாம் அவர்களுக்கு உங்களளவுக்கு அனுபவமும் வயதும் எனக்கு கிடையாது. உங்களை குறை கூறவும் நான் எப்போதுமே விரும்புவதில்லை. நாம் பொதுவான தளத்தில் இருப்பதால் இப்படிச் செய்தால் நலமாயிருக்கும் என்று நீங்கள் எண்ணும் சில காரியங்களைப் போல நானும் சில வேளைகளில் எண்ணுவதை சொல்லுகிறேன். அவ்வளவே!

உங்கள் தளத்தில் உள்ள விளக்கம் நீங்கள் சொன்ன அளவுக்கு வேத ஆராய்ச்சியின் முடிவாக இல்லை என்பதினால்தான் அவற்றை இங்கே எழுதவில்லை. மேலும் புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவம் பண்டிகைகளை ஆசரிக்கும்படி போதிக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருந்தேனே!

கிறிஸ்தவ உலகில் கண்ணை மூடிக்கொண்டு யூதர்க்ளைப் பின்பற்றும், போற்றும் வழக்கம் உள்ளது. நாம் கிறிஸ்துவைத் தவிர வேறே எதையாகிலும் பின்பற்றவேண்டுமா என்ன? எனக்கு தெரியவில்லை. நான் வேத வல்லுநர்கள் என்று எவரையும்மே போற்றுவதில்லை. மேலும் பிரபல வேத வல்லுநர் என்று யாரையாகிலும் குறிப்பிட்டால் கூட எனக்கு எரிச்சல் வருவதுதான் உண்மை. ஏனெனில் பெரிய வேத வல்லுநர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டவர்கள்தான் கிறிஸ்தவத்தில் பல குழப்பங்களை இன்றளவும் செய்து கொண்டிருக்கிறார்கள். தேவனுக்கு பயந்த ஒரு குழந்தையின் ஞானத்துக்கு முன்பாக் பெரிய வேத வல்லுநர்கள் மற்றும் அவர்களின் இறையியல் படிப்புகள் எல்லாம் ஒன்றுமில்லை என்பதே என் சிற்றறிவுக்கு எட்டிய உண்மை.

தொடர்ந்து உங்களின் பதிவுகளை தனி நபர் தாக்குதலின்றி தொடருங்கள். உங்களுக்குள்ளும் கிறிஸ்து இருக்கிறாரே! //

இது தமிழ்கிறிஸ்தவ தளத்திலிடப்பட்ட பின்னூட்டத்துக்கான பதிலூட்டமாகும்...இதிலேயே நண்பர் ஜோசப் அவர்களுக்கும் பதில் இருக்கிறது...

ஒவ்வொரு பதிவையும் சம்பந்தப்பட்ட பகுதியிலேயே பதிக்க வேண்டுமென்று தாங்கள் எனக்கு அறிவுறுத்திய வண்ணமாக "சும்மா தெரிஞ்சு வெச்சுக்கலாமே " பகுதியிலேயே இதனைப் பதித்துள்ளேன்; உங்கள் கருத்தின் அடிப்படையிலேயே இது வெறும் யூதப் பண்டிகையாகவும் என்னுடைய நோக்கம் வாழ்த்துவதாகவும் மட்டுமே இருக்கும் பட்சத்தில் அது விவாதமாக வேண்டிய அவசியமில்லை;எனக்கு விவாதிப்பதிலும் ஆர்வமில்லை;காரணம் என்னைக் கண்டு எல்லோரும் ஒதுங்கிச் செல்லும் போக்கை உணர்கிறேன்;

யூதர்களின் பண்டிகைகளெல்லாமே ஆர்வத்தைத் தூண்டுவதற்குக் காரணம், அவர்கள் வேதத்தின் மக்கள்; (ரோமர்.9:4) அப்படியானால் அதில் ஏதேனும் அறிந்துக்கொள்ளக்கூடிய பக்திவிருத்திக்கு உதவும் சத்தியம் அல்லது செய்தி இருக்குமோ என ஆராயவேண்டியது ஒவ்வொரு கிறித்தவனின் கடமையாகும்; ஏனெனில் தம்முடைய ஜனத்தின் வழியே இத்தனைப் பெரிய இரட்சிப்பை ஸ்தாபித்த தேவன் இன்றைக்கும் அவர்களுக்கு நடைபெறும் காரியங்கள் வழியே தனது இரண்டாம் வருகையின் இரகசியத்தையும் பொதித்துவைத்துள்ளார்;

சில காரியங்களை தாங்கள் கூறுவதுபோல விரிவாக எழுதினால் ப்ரயோஜனமாகவும் ஏற்புடையதாகவும் இருக்கும் என்பது உண்மைதான்;ஆனாலும் இது மறைபொருளாக இருக்காது என்ற எண்ணத்தில் அதிகம் சிரத்தை எடுத்துக்கொள்ளுகிறதில்லை;இனி முயற்சி செய்கிறேன்;

வேத வல்லுநர்களை நீங்கள் வெறுப்பது நல்லதல்ல; காரணம் உங்களை ஒரு குறிப்பிட்ட நிலையில் கொண்டு வந்து நிறுத்துவது ஒரு குறிப்பிட்ட நபரின் கருத்துதான்; பிறகு உங்கள் ஆவியில் சம்பாஷித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள்; எந்தவொரு மார்க்கமோ மார்க்கக் குழுவோ இது பொதுவானது;சரியானதைப் பெற்றோர் பாக்கியசாலிகள் அவ்வளவே; மேலும் கடந்த வருடத்தின் ஆவிக்குரிய அனுபவங்களே இப்போதும் இருக்கிறதா என்றால் அதுவுமில்லை; அதன் அதன் வீச்சும் ஆழமும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது;அதுவே சீரான பூரணநிலைக்கு நம்மைக் கொண்டு செல்லும்; இது போதும் என்று புறக்கணிக்கும் நிலைக்கு வந்துவிட்டால் நாமும் ஒரு "கல்ட்" எனும் உறைந்த நிலைக்கு சென்றுவிடுவோம்;

இதைக் குறித்து இன்னும் அதிக தகவல் உண்டா என்று கேட்பதுதானே இங்கே வழக்கம்; ஒரு புதிய வார்த்தையும் வாழ்த்தும் இங்கே பகிரப்பட்ட போது அதன் விவரங்களை நீங்களே ஆய்ந்தறிந்து பதிக்கலாம் அல்லது என்னைக் கோரலாம்; அதைவிட்டுவிட்டு மூடியிடுவதைப் போன்ற‌ மேலோட்டமான கருத்து என்னைத் தனிமைப்படுத்தும் என்பதை உணர்ந்தீர்களா? சிந்தனைக்கு என்று குறிப்பிட்டு நீங்கள் முன்வைத்த கருத்தைச் சொல்கிறேன்; இதனால் என்ன நடந்தது, உடனே மற்றொருவர் "ரம்ஸான்" வாழ்த்து சொல்லுகிறார்;இன்னமும் இப்படியே இருந்தால் எப்படி என்று
தோன்றவில்லையா?

கிறித்தவர்களாகிய நாமெல்லாரும் இன்றுமுதல் யூதர்களின் பண்டிகையைக் கொண்டாடவேண்டும் என்றோ கிறித்தவர்கள் எந்த பண்டிகையையும் கொண்டாடக்கூடாது என்றோ நான் அறிவிக்கவில்லை; நீங்களெல்லாம் ஒரு கருத்தைப் பதித்துவிட்டு வேறு உபயோகமான காரியங்களைப் பார்க்க சென்றுவிடுவீர்கள்; ஆனால் நானோ இரவெல்லாம் பகலெல்லாம் அதைக் குறித்தே சிந்திக்கிறேன்,எனக்கு வேறு வேலையில்லாததால்..!

யூதர்களின் பண்டிகைகளை வேதத்தின் போதனைகளாக கற்றறிவதே நம்முடைய நோக்கமாக இருந்தால் இந்த மாய உலகின் விழாக்களின் மீதான நம்முடைய கவனம் குறைந்துக் கொண்டே வரும் என்பது திண்ணம்; இதனை நான் விளக்கும்போது நீங்கள் புரிந்துக்கொள்ளுவீர்கள்;

இஸ்லாமியரின் பண்டிகைகளைக் கவனித்துப் பாருங்கள்; அது ஏன் இத்தனையாக அனைத்து தரப்பினரின் கவனத்தையும் கவருகிறது? அந்த பண்டிகைகள் அனைத்துமே தியாகத்தையும் அர்ப்பணத்தையும் மட்டுமே வலியுறுத்துவதே காரணமாகும்;ஆனால் என்ன ஒரு பரிதாபநிலை தெரியுமா அது ஒவ்வொன்றும் யூதர்களின் பண்டிகையையும் கிறித்தவர்களின் பண்டிகைகளையும் ஒட்டி போலியாக உருவாக்கப்பட்டது; நம்முடைய தன்மையை அவர்கள் ஸ்வீகரித்துக் கொண்டு போலியாக அவற்றை நிறைவேற்றுகின்றனர்;அந்த சத்தியங்களுக்கு சொந்தங்களான நாமோ (வேதத்தின் வழிவந்தவர்களும் அதன் வழிநின்றவர்களும்...) மேற்கத்திய கலாச்சார மாயையில் சிக்கிக் கொண்டோம்;நமக்கு சுவிசேஷத்தை அறிவித்தவர்களின் வாரிசுகளின் இன்றைய நிலைமையப் பார்த்தாலே இதன் தீவிரத்தை நாம் உணர்ந்து கொள்ளமுடியும் .


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

என்னிடம் சண்டை போடறதுக்காகவேனும் இங்கே வந்த நண்பர் ஜோசப் அவர்களை வரவேற்கிறேன்;முதலாவது தாங்கள் ஆங்கிலத்தில் பதித்துள்ளதை இயன்ற மட்டும் தமிழில் மொழிபெயர்த்துவிட்டு பின்னர் உங்களுக்குரிய பதிலை இங்கே பதிக்கிறேன்;

"சகோ.சில்சாம், நீங்கள் பதித்துள்ள காரியங்களில் எனக்கு ஆழ்ந்த அறிவு இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன்;ஆனால் ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்,நான் மிகப் பெரிய பாவி,இயேசு மிகப் பெரிய இரட்சகர்;அவரே என்னை மீட்க தம்முடைய இரத்தத்தை சிந்தினார்;

நீங்கள் பதித்துள்ள காரியங்களைக் குறித்த நிச்சயம் எமக்கில்லை;மேலும் அநேகர் நினைப்பது போலவே இதனை ஒரு யூத பண்டிகையாக மட்டுமே நான் நினைக்கிறேன்;இதற்கும் கிறித்தவத்துக்கும் என்ன தொடர்பு என்பது எனக்குப் புரியவில்லை;

மேலும் கிறிஸ்மஸ் மற்றும் ஈஸ்டர் பழங்குடிகளின் வழிவந்த விழா என்பதையும் பின்னர் அது கிறித்தவர்களால் கொண்டாடப்பட்டது என்பதையும் ஒப்புக்கொள்ளுகிறேன்;யாரும் "வேறொரு கிறித்து"வை ஆராதிக்க டிசம்பர் 25 அன்று ஆலயத்துக்குச் செல்கிறதில்லை;

அப்படியே கிறித்தவ உலகம் பழைய ஏற்பாட்டு பண்டிகைகளை மட்டுமே கொண்டாடினாலும்கூட அதையும் உலகம் வியாபாரமயமாக்கும்;எப்படியும்  கிறித்து இல்லாத கிறிஸ்மஸ் என்னால் ஏற்கமுடியாத‌து;கிறிஸ்மஸைக் குறித்து எனக்கென்று சில எண்ணங்கள் உண்டு;நாம் நம்பும் உண்மைகளை மற்றவருக்கு அறிவிக்க கிறித்தவத்துக்கு பண்டிகைகள் அவசியம்;
.........."


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

Bro Chill Sam
I may not have the depth of knowledge about the things you share, I agree. All I know is I am the greatest sinner and Jesus is the greatest saviour. who shed his blood for me to save me.
First of all we were not sure of the content of your posting, like many, I had thought that it is a Jewish festival and I still do not understand in the way it is connected to the christendom. I also agree that Christmas and Easter are the erstwhile pagan festivals which was later celebrated by Christians. No one goes to church on Dec 25 to worship another christ. Even if the christian world had celebrated all the old testament festivals, the world would have turned that too as festival of Markets. Even I don't agree with the fact about Christless christmas.
But I have my own thoughts about christmas. Christianity needs festivals to make others know about the basics of what we believe, while it is evident that christ was born to this world and he died and was resurrected. Christmas and Easter tells the world and the Gentiles about the message of christ and we have a reason to celebrate.

Please don't Judge and Condemn people who celebrate these festivals. For the Bible does not condemn and does not give any right for others to condemn people who celebrate. It is left to the individuals discretion. Do you know that there are still lot of Gospel preached in the Jails and hospitals on these days and Christians have a strong reason to preach the Gospel on these days.
And by the way why are you scared about Harvest festivals, All the money collected goes to Missions, Is this wrong? What bothers you in this regard?


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

"அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்."
(லூக்கா.1:29 Luke)


மரியாள் காபிரியேல் தூதன் சம்பந்தமான வேத வாக்கியம் இது; அதுபோல நண்பர்கள் இந்த (
" Rosh HaShanah " greetings..!) வாழ்த்துதலைக் குறித்து சிந்தித்து அவர்களாக ஒரு சில காரணங்களைக் கண்டுபிடித்து அதனைத் தங்கள் கருத்தாகப் பதித்துள்ளனர்; இதுவே கிறித்தவத்தின் மிகப் பெரிய பெலவீனம்;

Isa 44:18 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.

Hos 8:12 என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.

மேற்காணும் இரண்டு வாக்கியங்களும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்காகச் சொல்லப்பட்டது;ஆனாலும் இங்கே நான் சொல்லவரும் கருத்துக்கும் பொருத்தமாக இருப்பதால் அதனைப் பயன்படுத்துகிறேன்; எனது வாழ்த்துதலுக்கு நண்பர்களுடைய பின்னூட்டம் என்ன‌? அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவில்லை;எனக்கு பதில் வாழ்த்து சொல்லவுமில்லை;

ஆனால் நாம் பார்க்கதான் போகிறோம், இன்னும் இரண்டே மாதங்களில் கிறித்தவ உலகமே அல்லோலகல்லோலப்படுமளவுக்கு கொண்டாட்டங்களுக்கு நாம் ஆயத்தமாவோம்; சுனாமி வந்தாலென்ன, பூகம்பம் வந்தாலென்ன, வடதேசத்தில் சபைகளுக்கெதிராக உபத்தி
ரங்கள் நடந்தாலென்ன, தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும் என கடன்வாங்கியாவது கொண்டாடித் தீர்ப்போம்;

ஆனால் வேதம் கொண்டாட உற்சாகப்படுத்தும் எந்த பண்டிகையும் இதுபோன்றதல்ல; கிறித்தவ உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கும் எந்தவொரு பண்டிகையும் வேதத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டு பரிசுத்தவான்கள் ஆசரித்ததல்ல‌; இதனை எனது வழக்கமான பாணியில் விவாதமாக்காமல்- இதற்கு மேலும் தாமதியாமல்- காலங்கடத்தாமல் போதனையாக எழுத விரும்புகிறேன்;கர்த்தர் தாமே உதவி செய்வாராக‌.

அதற்கு முன்பதாக ஒரு கிறித்தவ தளம் வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களையும் போதனைகளையும் அறிய விரும்பாமல் எப்படி புறக்கணித்து வருகிறது என்கிறதான எனது ஆதங்கத்தைப் பதிவுசெய்து விட்டு தொடருகிறேன்;

"ரோஷ் ஹஷானா " எனும் வார்த்தையோ இன்னும் நான் எழுதப்போகும் வேத ஆதாரத்தின்படியான பண்டிகை சம்பந்த எபிரெய வார்த்தைகளோ தமிழ் வார்த்தைகளில் தேடுபொறியில் சிக்கவில்லை;அப்படியானால் இதைக் குறித்த ஞானத் தெளிவு நமக்கில்லையோ,அதைக் குறித்த போதனை நமக்கு அந்நியமானதோ என்று யோசித்தேன்;

ஆனால் அதைக் குறித்த வேதசத்தியம் போதிக்கப்படாமலே நம்முடைய சபைகளில் அறுப்பின் பண்டிகை,சேர்ப்பின் பண்டிகை, கூடாரப் பண்டிகை என களைகட்டி ஸ்டால்களில் கலெக்ஷன் தூள் பரத்துகிறது; இதனைத் தானே நமதாண்டவரும் கண்டித்தார்?

"Isa 29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது."

என்னுடைய வாழ்த்துக்கு சகோதரர்  அற்புதம் அவர்களின் பின்னூட்டமிது:
//"  Rosh HaShanah " greetings..! என்றால் என்ன என்று தேடிப் பார்த்ததில் யூத வருடப் பிறப்பு வாழ்த்துக்கள் என்ற பதிலைப் பெற்றேன். உலகமெங்கிலும் சிதறி கூடி வாழும் யூதர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன். சிறைபிடிக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்ட யூதர்கள் எவ்வாறு ஒன்று சேர்ந்து தங்களுக்கான தேசத்தைப் பெற்றார்களோ அதேப் போல உலக தமிழர்கள் ஒன்று கூடி தங்களுக்கான தமிழ் தேசத்தைப் பெற யூத வருடப் பிறப்பு நினைவூட்டுகிறது. ஏனெனில் அவ்வாறு யூதர்கள் ஒன்று கூடியபோது கொண்டாடப்பட்ட பண்டிகைதான் இன்றளவும் வருடப் பிறப்பாக அவர்களால் ஆசரிக்கப்படுகிறது.
சிந்தனைக்கு:
யூத வருடப்பிறப்பு வாழ்த்துகள் கூற தயாராக இருக்கும் நாம் நம் இந்திய துணைக்கண்டத்தில் வாழும் மொழிவாரி மக்களில் வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் கூறி இருக்கிறோமா? //

இதுதான் இந்திய- தமிழ் கிறித்தவத்தின் நிலைமைக்கு நல்லதொரு உதாரணம்; இந்த வாழ்த்தை அவர்கள் வேதத்தின் வாழ்த்தாகப் பார்க்காமல் யூதர்கள் சம்பந்தமான ஏதோ காரியமாகப் பார்த்து வேறு சில புறசாதியினங்களின் பண்டிகைகளுக்கும் நாம் வாழ்த்து கூறுகிறோமா என்று ஆராய்கிறார்கள்; புறசாதியினரின் பண்டிகைக்கும் வேதத்தின் பண்டிகைக்கும் வித்தியாசமுண்டல்லவா?

யூத வருடப்பிறப்பு என்பது யூதர்களுக்கு மட்டுமானதல்ல,அது முழு உலகத்துக்குமானது, அது சிருஷ்டிப்பு சம்பந்தமானது; சிருஷ்டிகர் சம்பந்தமானது,ஜீவன் சம்பந்தமானது,அர்ப்பணம் சம்பந்தமானது,எதிர்வரும் வருடத்தின் ஆசீர்வாதம் சம்பந்தமானது,முழு வேதத்தின் மீதான நமது உரிமை சம்பந்தமானது; இன்னும் என்ன சொல்ல‌..!

நாம் பெற்றிருக்கும் குறைந்த வேதஅறிவின்படி அது சிதறடிக்கப்பட்ட யூதர்கள் மீண்டும் ஒன்றிணைந்த நாள் (??) போல பாவிக்கப்படுகிறது; ஆனால் காலங்களின் வழியே சென்று வேதத்தை அறிந்துணர -சர்வவல்லவர் மனுக்குலத்துக்காக செய்து முடித்த மாபெரும் இரட்சிப்பின் திட்டத்தை புரிந்துணர உதவுவதே இந்த பண்டிகைதான் என்பது வேதம் போதிக்கும் ஒரு முக்கிய சத்தியமாகும்;

யூதர்களுடைய பாரம்பரியத்தில் இரண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதுண்டு;அதன் தொடர்பாக ஏழு பண்டிகைகள் ஆசரிக்கப்பட்டன‌; அதிலொன்று இஸ்ரவேலர் (யூதர் என்று கூறாமல் இஸ்ரவேலர் என்றே குறிப்பிடுவோமாக.) எகிப்திலிருந்து வெளிப்பட்டது தொடர்பான நினைவுகூறுதலாகக் கட்டளையிடப்பட்டு தலைமுறை தலைமுறையாக ஆசரிக்கப்படும் பஸ்கா பண்டிகை;இதுவே பிரதானமானது; இதனை நம்முடைய ஆண்டவரும் அவர்தாமே பரமேறிச் சென்றபிறகும் பவுலடிகள் உள்ளிட்டோரும் ஆசரித்ததுண்டு;அதன் பொருள்பட ஆசரிக்க போதித்ததுமுண்டு;

அடுத்து அதற்கு இணையான மற்றொரு கொண்டாட்ட காலம் தான் ரோஷ் ஹஷானா எனும் புதிய ஆரம்பம்;பஸ்கா பண்டிகையானது மதரீதியிலான வருட ஆரம்பமானால் இது வெளிப்புற வாழ்க்கை அல்லது அரசியல்ரீதியிலான வருட ஆரம்பமாகும்; முந்தியது இஸ்ரவேலருக்கு மட்டுமானது என்றா
ல் பிந்திய வருட ஆரம்பமானது உலகமனைத்துக்கும் பொதுவானதாகும்; ஏனெனில் தேவாதி தேவன் இந்த உலகை நிர்மாணித்த நாளாக அதனை இஸ்ரவேலர் ஆசரிக்கிறார்கள்;அது மூடநம்பிக்கை என்போமா? அது மூடநம்பிக்கையாகவோ அந்நியமாகவோ ஆகுமானால் வேதம் பொய்யாகும், நாமும் வேதத்துக்கு அந்நியமாவோம்;

இது எனது மற்றொரு நண்பரான ஜோ அவர்களின் பின்னூட்டம்:
// உலகளாவிய யூதர்கள் தங்களது தேசத்தை 1948'ல் பெற்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தங்களது உரிமைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை யூத வரலாறு அளித்தது. அதேபோல இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கமும் அஹிம்சை என்ற காந்தீய கொள்கையிடம் மண்டியிட நேர்ந்தது. அமெரிக்க கறுப்பின மக்கள் தங்களது உரிமைகளை பெற்றனர். இப்படி உலகமெங்கும் ஒடுக்கப்பட்டோருக்கு நியாயம் செய்த தேவன், ஈழ தமிழர்களுக்கும் நியாயம் கிடைக்க செய்வார். 2000 ஆண்டுகள் காத்திருந்த யூதர் 400 ஆண்டுகள் காத்திருந்த இந்தியர்..... ம் பார்ப்போம், நம் சகோதரர்களுக்கும் நிச்சயம் நீதியின் சூரியன் உதிக்கும்.

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்பது சொல் வழக்கு ஆனால் இன்றைய தமிழர் பிரிவினைகளாலும், ஒற்றுமையின்மையினாலும் தங்களது குரலை ஓங்கி ஒலிக்க செய்யமுடியாமல் தலை குனிந்து நிற்கும் நிலை. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்தே தமிழர்கள் பிளவுபட்டு கிடந்தனர்.... இனிமேல்?

உலகமெங்குமுள்ள ஆபிரகாமின் ரத்தவழி சந்ததிகளுக்கு

ஆபிரகாமின் விசுவாச சந்ததிகளான

எங்களின் ரோஷ் ஹசானா வாழ்த்துக்கள்....//

இந்த சொல்லை உச்சரிப்பதிலேயே அதன் அழகும் கம்பீரமும் மிளிரும்; இதனால் வேதத்தில் ஒரு யுத்தமே நடந்தது;இஸ்லாமியர்
அதாவது பாலைவனத்தில் உமிழ்நீர் வற்றிப்போனவன் "ஷ" எனும் சொல்லை உச்சரிக்க இயலாது; இதுவே யூதருக்கும் அரபியருக்கும் வித்தியாசம்; எனவே மிக எச்சரிக்கையாக அதனைச் சரியாகப் பதிக்க முயற்சிக்கிறேன்;ஆனால் நண்பர் "ஜோ" மிகச் சாதாரணமாக ரோஷ் ஹசானா என்று குறிப்பிட்டிருக்கிறார்; இதெல்லாம் பெரிய பாவமில்லை;ஆனால் சிறிய பயிற்சி அவ்வளவே;

இவரும் கூட சற்றும் பதட்டமில்லாமல் மேலோட்டமாகவே கருத்தினைப் பதிவிடுகிறார்;இந்த நவீன காலத்திலும் வேதத்தின் ஆழ்ந்த சத்தியங்களை ஆராய்ந்தறிய மனமில்லாவிட்டால் அதற்காக வைராக்கியம் கொள்ளாவிட்டால் எப்போது அதற்கு சமயமுண்டாகுமோ?

இந்த சத்தியங்கள் எனக்குத் தெரியவந்தபோது என்னிடம் எந்த வசதியும் இல்லை; அதாவது கம்ப்யூட்டரோ (computer) இணையதள (internet) வசதியோ நல்ல காமெண்டரிகளோ (commentaries) யூதக் கலாச்சாரம் சம்பந்தமான புத்தகங்களோ (jewish history) எதுவுமில்லை;

ஒன்று மட்டும் இருந்தது, வரலாற்றுப்பூர்வமாக வேதத்தையறியும் ஆர்வமிருந்தது; அதன் அடிப்படையிலேயே எனது தனிப்பட்ட முயற்சியில்லாமலே பல விஷயங்கள் எனக்குத் தெரியவந்தது;

நம்முடைய தமிழ்ப் போதகர்கள் பலருக்கும் இந்த விஷயங்கள் தெரியாமல் இல்லை;ஆனாலும் வீணான குழப்பங்கள் வேண்டாமென பல காரியங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன‌;

எல்லாவற்றுக்கும் ஒரு சில வசனங்களைத் தயாராக வைத்திருப்பார்கள்; அவற்றில் சில‌,
"நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்."(ரோமர்.Rom 14:6 )

"ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக."(கொலொசேயர்.Col 2:16)

ஒரு நண்பர் இந்த வசனம் இருதரப்புக்கும் பொதுவானது என்கிறார்;அதாவது பண்டிகையைக் குறித்த போதனையின் மூலம் பக்திவிருத்தி உண்டாகுமானால் அதனைத் தடுக்கக் கூடாது; அதேபோல அதனைக் குறித்த அறிவில்லாமல் ஒருவன் மந்தமாக இருந்தால் குற்றப்படுத்தவுங்கூடாது;

"விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்." (ரோமர். Rom 14:1)

மேலும் மறுபுறத்தில் மற்றொரு அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது; வேதத்துக்கு முற்றிலும் விரோதமாக - வேதம் நேரடியாகக் கட்டளையிடாத கத்தோலிக்க மார்க்க வழிவந்த பண்டிகைகளைச் சீர்திருத்த சபையார் எனக் கூறிக்கொள்வோரும் அவர்கள் அடியொற்றி ஆவிக்குரிய சபையார் எனக் கூறிக் கொள்வோரும் ஆசரித்துக் கொண்டிருக்கின்றனர்;

வேதத்துடன் நேரடியாக சம்பந்தபட்ட பண்டிகைகளைத் தவிர்த்துவிட்டு பழங்குடியினர் பாரம்பரியமாகக் கொண்டாடி வந்த‌ பண்டிகைகளை நாம் கொண்டாடுவதால் பாபிலோனிய சூழ்ச்சி மார்க்கத்த்துக்கு
கிறித்தவம் விலைபோய்க் கொண்டிருக்கிறது;

வருடமுழுவதும் ஆண்டவருடைய பிறப்பையும் இறப்பையும் உயிர்த்தெழுதலையும் விமர்சிக்கும் உலகத்தார் அனைவரும் குடித்து கூத்தடிக்க பயன்படுத்தும் அந்த  விழாக்காலங்கள் அநேகர் விழுந்து போவதற்கே ஏதுவானது;

ஆனால் வேதத்தின் ஏழுபண்டிகைகளும் புரிந்து ஆசரிக்கப்படுமானால் நாம் முழு வேதத்தினையும் மிக எளிதாக நம் முடைய அடுத்த சந்ததிக்கும் கடத்திச் செல்ல‌முடியும்; இந்த ஏழுபண்டிகைகளும் ஆண்டவருக்குள் நிறைவேறும் அதிசயத்தையும் மிக எளிதாக நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு போதிக்கமுடியும்;

இங்கே நண்பர்கள் சிலாகிக்கும்வண்ணமாக யூதர் சுமார் 2500 வருடத்துக்குப் பிறகும் தங்கள் சுதந்தர தேசத்தையடைந்தார்கள் என்றால் அதற்குக் காரணமாக அமைந்தது,அவர்கள் தங்கள் கலாச்சார அடையாளமான பண்டிகைகளை தேவபயத்துடன் ஆசரித்ததுதான்;அவர்கள் இதில் தவறியபோதெல்லாம் எதிரிகளிடம் வீழ்ந்துபோயினர்;

வேதத்தில் காலங்கள் சம்பந்தமாக சொல்லப்பட்ட வாக்குத்தத்தங்களையும் இந்த அறிவின்மூலமே எளிதாக அடையமுடியும்; இதன்மூலமே விஞ்ஞானத்தையும்  எதிர்கொள்ளமுடியும்;உதாரணமாக,

"வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது."(சங்கீதம்.65:11 Psa )

-எனும் வாக்கியமானது எந்த பொருளில் -எந்த வருட ஆசரிப்பு முறைக்காகச் சொல்லப்பட்டதோ அதற்கு மட்டுமே பொருந்தும்; இதனைக் குறித்தும் இன்னும் விவரமாக எழுதுவேன்; ஒவ்வொரு பண்டிகையையும் அதன் முக்கியத்துவத்தையும் நிதானமாக எழுத முயற்சிக்கிறேன்; வாசகர் எனக்காக ஜெபிக்கவும்; மாற்றுக்கருத்து இருப்பின் தயவுகூர்ந்து தெரிவிக்கவும்.

"ரோஷஹ்ஷானா" -" Rosh HaShanah " greetings...God Bless You..!

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

roshhashanah200.jpg

நண்பர்கள் அனைவருக்கும் "ரோஷஹ்ஷானா" வாழ்த்துக்கள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard