http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=34950072 bereans இன்று எத்துனையோ சபைகள் இயேசு கிறிஸ்துவின் பெயரை பயன்படுத்தி வந்திருந்தாலும் எதிலும் ஒரு ஒற்றுமை இல்லையே!! அமேரிக்கா தான் பாபிலோன், ரஷ்யா தான் பாபிலோன் என்று சொல்லும் சபைகள் இருக்கிறது, தாங்களே அந்த பாபிலோன் சபையின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள் என்பதை மறந்து அல்லது தெரியாமல் இருக்கிறார்களே!
இராபோஜனம் என்கிற கர்த்தர் பந்தியை எடுத்து பார்க்கலாமே! ஒரு கன்வென்ஷன் என்றால் ஒன்று சேரும் இந்த பல்வேறு சபைகள் இந்த இராபோஜன விஷயத்தில் மன்னுக்கும் வின்னுக்கும் உள்ள வித்த்யாசம் கொண்டிருக்கிறார்கள். முதல் காரியம் இவர்களில் ஒரு சபைக்கூட இந்த இராபோஜனம் என்கிற இந்த வார்த்தைக்கு தகுந்தாற் போல் இரவில் நடத்துவது இல்லை. ஒரு சபைக்கூட இல்லை (ஒரு வேளை 0.1% இருக்கலாம்). இப்படி ஒரு முக்கியமான விஷயத்தை அதுவும், நம் கர்த்தர் இயேசு கிறிஸ்து "இதை நான் வரும் மட்டும் என்னை நினைவு கூறும் படி செய்யுங்கள்" என்று சொல்லியும் ஒரு சபைக்கூட அவர் சொன்னபடி செய்வதில்லை, ஆனால் நாங்கள் தான் உண்மையான சபை, நாங்கள் சொல்லுவது தான் சத்தியம் என்று மாத்திரம் சொல்லிவருவதில் தயங்குவதில்லை!! இராபோஜனம் என்றாலே இரவில் உண்டான ஒரு விஷயம் "தமிழ் வேதாகமம்" மாத்திரம் போதும் என்று சொல்லுபவருகளுக்கும் புரியவில்லை போல். இந்த ஒரு விஷயத்தில் எல்லா சபைகளும் குருட்டாட்டம் தான் கான்பித்து வருகிறார்கள். பாபிலோன் சபை என்று இவர்களை சொல்லுவதில் என்ன தவறு?
வாரம் ஒரு முறை மாதம் ஒரு முறை பெரிய பாஸ்டர் வந்தால் மாத்திரம் அனுதினமும் ஒரு நாளில் எத்துனை முறை வேண்டும் என்றாலும்
ஆனால் இவைகளில் ஒரு சபைக்கூட "இராபோஜனம்" அனுசரிப்பதில்லை என்பதே சரியாகும். இத்துனை குழப்பம் நிறைந்த இந்த சபைகளை ஏன் பாபிலோன் சபை என்று கூறக்கூடாது? கணவுகள் காட்சிகள், தரிசனங்கள் பார்பவர்களுக்குக்கூட இந்த வெளிப்பாடு இன்னும் (இன்று வரை) கொடுக்கப்படவில்லயா? சபையின் வசதிக்காகவோ அல்லது மக்களின் வசதிக்காகவோ அல்லது பாஸ்டரின் வசதிக்காகவோ இத்துனை பெரிய ஒரு கட்டளையை மாற்றியவர்கள் "பாபிலோன் சபை" என்பதில் என்ன தவறு?
Chillsam: 08:46:03 Mar 30, 2010 இராப்போஜனம் என்பது கலாச்சாரம் சம்பந்தமான விஷயம்; தற்போதுள்ளது போல மூன்று வேளையும் வயிறு முட்ட உண்ணும் கலாச்சாரத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை;
ஆனால் யூதர்களின் வழக்கமான இராப்போஜன நேரத்தையும் வருடாவருடம் தலைதலைமுறையாக ஆசரித்துவந்த பஸ்கா விருந்தையும் அர்த்தமுள்ள ஒரு விருந்தாக ஒரு புதிய கோணத்தில் நிறைவேற்ற கர்த்தர் முடிவு செய்து அதை நிறைவேற்றியதுடன் புதிய பிரமாணத்தையும் உடன்படிக்கையையும் ஸ்தாபித்தார்;
ஆனால் ஒரு செயலை செய்த நோக்கத்தைவிட அந்த செயலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் விக்கிரக ஆராதனைதான் என்பது என் கருத்து;
உதாரணமாக திருமுழுக்கு எனப்படும் கட்டளையை எடுத்துக் கொண்டால் அதன் நோக்கத்தைவிட அப்போது உரைக்கப்படும் நாமத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மார்க்கபேதங்களை உருவாக்கிவிட்டோம்..!
இயேசு செய்த சிம்பாலிக்கான ஒரு காரியத்தையே ஒரு கட்டளை போலாக்கி விட்டால் கொலோசெயர்.2:16 க்கு என்ன சொல்வோம்..?
இயேசு இராப்போஜனம் மேற்கொண்ட நாளும் நேரமும் நம்முடைய வாழ்வில் வரப்போவதில்லை;ஆனால் அந்த நிகழ்வும் அதன் நோக்கமும் நெஞ்சில் நிறுத்தினாலே போதும்..!
23:36:59 Apr 1, 2010 // தொடுப்பு இருந்தால் அது நீக்கப்படும் //
ஏதேச்சாதிகார போக்கு நமக்குள் வேண்டாம் சகோதரரே..!
//எங்களை கள்ள போதகர்களும், கள்ள உபதேசங்கள் தருபவர்களும் என்று...// நீங்களும் இதுபோலச் சொல்லுகிறீர்களல்லவா, ஆனாலும் நான் அதுபோல இந்த குறிப்பிட்ட கட்டுரையில் குறிப்பிடவில்லையென்றெண்ணுகிறேன்..!
நான் உங்களைத் தனிப்பட்ட முறையில் ஏதும் குறைகூறவில்லை; பொதுவாகவே இதைக் குறித்த கருத்துவேறுபாடுகள் உள்ளன;அதற்கு ஆதாரமாக உங்கள் கருத்தை மேற்கோள் காட்டியிருக்கிறேன்;அதிலும் தங்கள் பெயரைக் குறிப்பிடவில்லை;
இதன் நோக்கம் எனது தள நண்பர்களுக்கு வித்தியாசமான போதனைகள் சென்றடைய வேண்டுமென்பதுதான்;நீங்களும் விரும்பினால் எனது தளத்தில் பதிலளிக்கலாம்;
மாற்றுக்கருத்தே இருக்கக்கூடாது என்று எண்ணவேண்டாம்; கர்த்தர் வரும் வரையிலும் அது இருந்தே தீரும்;என்னை ஆதாயப்படுத்த நீங்களும் உங்களை தெளிவுபடுத்த நானும் முயற்சிக்கிறோம்;
// மேலும் கொலோ. 2:16ல் சொல்லப்பட்ட போஜன பானத்திற்கும் பண்டிகைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. //
இது உங்கள் தனிப்பட்ட கருத்தாகவும் இருக்கலாமல்லவா..?
தார்மீக ரீதியில் உங்களது பல காரியங்களை ஏற்றுக்கொள்ளுவதுடன் அதனை போதித்தும் வருகிறேன்; அதனால் பல சங்கடங்களுக்கும் உள்ளாகிறேன்..!