Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஐந்தரை கோடி....!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
ஐந்தரை கோடி....!
Permalink  
 


http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=36026603

14:09:02 May 28, 2010
நண்பர்களே எரிச்சலும் பரியாசமும் நிறைந்த உங்கள் கருத்துக்களால் யாரை ஆதாயப்படுத்தப் போகிறீர்கள்? யாருக்கு செய்யும் ஊழியம் இது?

நமக்கு விரோதியாயிராதவன் நம் பட்சத்திலிருக்கிறான் என்றார்,ர்வவல்ல‌ தேவனாகிய இயேசுகிறிஸ்து;ஆனால் சரியான சத்தியத்தைச் சொல்ல முயற்சிக்கும் உங்களுடைய அணுகுமுறை உலகத்தாரைப் போலவும் உங்களைப் பொருட்படுத்தாமல் தவறான ஊழியத்தைச் செய்வோர் இயேசுவைப் போலவும் நடந்துகொள்ளும் மாயத்தை நான் என்னென்று சொல்வேன்..!



// குறுந்தகடுகளில் "பரீட்சை எழுதும் பிள்ளைகளுக்கு ஜெபம்" போன்றவற்றை போட்டு சம்பாதித்தார்களே,மாநில அளவில் இடம் பிடித்த மாணவர் பட்டியலை பார்த்தீர்களா? இனி இவர்களின் ஸ்தாபனங்களில் பணம் கொடுத்து சாட்சிகள் இறக்குமதி செய்வார்கள்;இதை பார்த்தும் இன்னும் இந்த வேஷதாரிகளை செய்யும் வியாபாரத்தை நம்ப சொல்லுகிறீர்களா? //

நண்பரே, மாணவர்களில் மார்க்க வித்தியாசம் பார்த்தல் வேண்டாமே, இன்றைக்கு அநேக மாணவர்களின் மனதில் இயேசுவானவர் நிறைந்திருக்கிறார்;

இன்னும் சொல்லப்போனால் கிறித்தவ மாணவனைவிட மாற்று மார்க்கத்தைச் சார்ந்த மாணவன் அதிகமாக ஆண்டவருக்கு பயப்படுகிறான்; இது எனது தனிப்பட்ட அனுபவம் சார்ந்த கருத்தாகும்;

எனவே 'உண்மையாய் தம்மை நோக்கி கூப்பிடும் யாவருக்கும்,அவர் உண்டென்ற விசுவாசத்துடன் வேண்டுதல் செய்யும் யாவருக்கும் பலனளிப்பேன்' என்று வாக்களித்த தேவன் அவர்களை வெற்றிபெறச் செய்திருப்பதில் வியப்பில்லை;

மேலும் பரீட்சைக்கான ஜெப‌ சிடியின் நோக்கம் மற்றும் இலக்கு கிறித்தவர்களல்ல;எனவே தான் அவர்கள் இந்துக்களின் வழக்குப்படி 'ஆண்டவன்' என்று ஒருமையிலும் 'இறைவன் இயேசு' என்றும் தரம் தாழ்த்தி குறிப்பிடுகிறார்கள்;

பரீட்சைக்கான ஜெப‌ சிடியின் ஜெபிக்க அறியாத மாற்று மார்க்கத்தவர் நம்முடைய ஜெப முறையினை அறியும் வாய்ப்பும் ஏற்படுகிறது;ஏன் கிறித்தவ குடும்பங்களிலும் கூட "தேனும் திணை மாவும் நானுன‌க்குத் தருவேன்,நீ எனக்கு..." என்ற 'டைப்'பில் தான் ஜெபம் நடக்கிறது;

நீங்கள் குறிப்பிட்டதுபோல வெற்றிபெற்ற மாணவர்களை விலைகொடுத்து வாங்கி அவர்கள் பெற்ற வெற்றிக்கு இவர்கள் சொந்தங்கொண்டாட முடியாது;இந்த கருத்து வெற்றிபெற்றவர்களைக் கொச்சைப்படுத்துவதாகும்;

உண்மையிலேயே வெற்றிபெற்ற குறிப்பிட்ட மாணவன் அல்லது மாணவி ஏதாவதொரு வகையில் இந்த ஊழியர்களுடன் தொடர்பிலிருந்து அவர்களுடைய பிரார்த்தனையினால் மனோதைரியமும் மனசாந்தியும் பெற்றிருந்து அதினால் வெற்றிபெற்றிருந்தால் மட்டுமே தாமாக முன்வந்து சாட்சி சொல்லுவார்கள்,அது தவறல்ல;

மற்றபடி 'செட்டப்' பண்ணுகிறார்கள்,என்று நாமே சொன்னால் பிறகு நமக்கும் இந்துவெறியனுக்கும் வித்தியாசமில்லாமற் போகும்..!


// மனசாட்சியை திறந்து சொல்லுங்கள்,இது சரிதானா என்று? //

"ஆலையில்லா ஊரில் இலுப்பப்பூ சர்க்கரையாம்..!"

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=33996033




// தேவ‌னையே வியாபார‌ப்பொருளாக‌ வைத்திருக்கும் இவ‌ர்க‌ளை என்ன‌ த‌லைக்கு மேல் வைத்து மெச்சிக்க‌ சொல்லுகிறீர்களா..? //

மெச்சிக்கொள்ளச் சொல்லவில்லை...
"போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.

ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,

அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.

ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்."(1.கொரிந்தியர்.3:11 15)

மேற்கண்ட வசனத்தின்படி பொறுத்திருக்கவேண்டியதாக இருக்கிறது; கிறிஸ்துவைப் பற்றிய பிரஸ்தாபத்தில் இவர்கள் முன்னணியிலிருக்க - இவர்களால் கவரப்பட்டோர் அடுத்த நிலைக்கு முன்னேறி வரும்போது சரிசெய்யப்படுவர்;

அதாவது சபைகளாலும் ஜெபக் குழுக்களாலும் இன்னும் ஆண்டவரைக் குறித்து சரியாக அறிந்துக்கொண்டு தூய்மைப்படுத்தப்படுவர்;

அதாவது நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து பாளம் பாளமாக வெட்டியெடுக்கப்படும் மண்ணிலிருந்து பொன்னானது பல்வேறு கட்டங்களில் பிரித்தெடுக்கப்படுவது போலும் எண்ணெய் கிணறுகளிலிருந்து எடுக்கப்படும் "க்ரூட் ஆயில்" எனப்படும் திரவத்திலிருந்து பெட்ரோல்,டீசல்,மண்ணெண்ணெய் போன்ற பல்வேறு உபயோகமான பொருட்கள் பிரித்தெடுக்கப்படுவது போலும் பரலோக ராஜ்யத்துக்கென ஆண்டவரால் முன்குறிக்கப்பட்ட ஆத்துமாக்கள் சேகரிக்கப்படுகிறார்கள்;

மற்றபடி தேவனை யாராலும் வியாபாரப்பொருளாக ஆக்கமுடியாது,அது கூடாதது;ஜெப சிடி ஜெபத்துக்கான வழிகாட்டு உபகரணம் மட்டுமே;அதன் தயாரிப்புச் செலவைப் பொறுத்து விலை நிர்ணயம் பண்ணப்படுகிறது;

உத்திராட்சக் கொட்டைக்கூட இன்றைக்கு 'டெலி மார்க்கெட்டிங்'கில் விற்பனைக்கு வந்து சுமார் 1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது;ஆனால் நேர்மையான முறையில் ஒரு மாதிரி ஜெபம் ஆயத்தம் செய்யப்பட்டு வெறும் 50 ரூபாய்க்கு விற்றால் அது தேவனையே விற்பது போலாகாது என்பது என் கருத்தாகும்.

அன்புக்குரிய நிர்வாகி அவர்களுக்கு,
உங்கள் அனுமதியில்லாமல் நான் செய்த ஒரு காரியத்தினால் உங்களது பார்வையாளர் எண்ணிக்கை இதோ "ஜம்ப்"ஆகியிருக்கிறது;அது என்ன என்று கேட்கவேண்டாம்;இது நான் செய்துள்ள இரண்டாவது முயற்சியாகும்;

இந்த தளத்தை நான் நேசிக்கிறேன் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்கமுடியாது;அதுபோலவே நாமனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதே என்னுடைய தரிசனமாகும்;

அதற்கான காலம் கனியட்டும்..!

bereans

சகோ சில்சாம் அவர்களே,

தாங்கள் இந்த தளத்தின் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு மிக்க நன்றி. தங்களின் முயற்சியால் அநேகர் இந்த தளத்தை பார்வையிட்டு செல்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதற்கும் நன்றி! இது சபை பாகுபாடற்ற ஒரு கிறிஸ்தவ தளம். நடப்பது அனைத்திலும் தேவனின் சித்தம் இருக்கிறது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவன் நான். எது நடந்தாலும் தேவனின் மகிமைக்கென்றே நடக்கட்டும்.

நிர்வாகி
கோவைபெரெயன்ஸ்


10:48:29 Jun 8, 2010
நானும் ஒரு எழுத்தாளன் (..?!) என்பதால் தங்கள் காயங்களை அறிந்திருக்கிறேன்;ஆனாலும் தங்கள் பார்வையாளர் எண்ணிக்கை 17 அல்லது 20 லேயே தொடர்வதைக் கண்டு வருந்தியதுண்டு;நம்முடைய பிரயாசம் சிறியதாகவும் பலன் பெரியதாகவும் இருத்தல் வேண்டும் என்பதே பவுலடிகளின் பாணி;

இதனை மாற்ற நான் செய்த ஒரு சின்ன முயற்சி என்ன என்பதை ‍ நல்லபிள்ளையாக இருந்து கேட்காதது குறித்து அதிக மகிழ்ச்சி;

இனி தினமும் குறைந்தது 500 பேராவது வந்து செல்லும் தளமாக உயர நீங்கள் செய்யவேண்டியது என்ன என்பதைக் குறித்து யோசியுங்கள்;

கர்த்தர்தாமே தங்கள் முயற்சிகளை வெற்றியடையச் செய்வாராக..!


bereans

முன்பே எழுதியது போல் "நடப்பது அனைத்தும் தேவனின் சித்தமே" அது நம் வெற்றியாக இருந்தாலும் சரி தோல்வியாக இருந்தாலும் சரி என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த வெற்றியை அல்லது தோல்வியை சந்திக்க நடத்தி செல்பவரும் அவரே. தோல்வி என்றால் அது நம் விசுவாசத்திற்கு வரும் ஒரு சோதனை என்றே நான் என்னுவது. வெற்றி என்றால் அது தேவன் தந்த ஒரு கிருபை என்பது என் விசுவாசம்.

500 பேரா 5 பேரா என்கிறபடி கணக்கு பார்த்து என்ன! வருவோருக்கு பிரயோஜனமாகவும், தேவனின் நாமம் மகிமைப்படவுமே என் முயற்சி. கர்த்தர் நடத்தட்டும்.


soulsolution
சிங்கிளாக வரும் சிங்கங்கள் போதும் இத்தளத்திற்கு. சிறு மந்தை சிறியதுதான். வஞ்சிக்கப்படுவதற்குத்தான் 'அநேகர்' தேவை.

ஆத்துமாவின் பிசின் (soulsolution) அன்று சொன்னதும் இன்று சொல்வதும்...

//  சிங்கிளாக வரும் சிங்கங்கள் போதும் இத்தளத்திற்கு. சிறு மந்தை சிறியதுதான். வஞ்சிக்கப்படுவதற்குத்தான் 'அநேகர்' தேவை. //

************************

நன்றி கூறுகிறோம்!

தாங்கள் எத்தனை பலவீனமானவர்கள் (வசனத்தில்) என்று தனித்தளம் தொடங்கி நிரூபித்த ஒவ்வொரு "தள நிர்வாகி"க்கும் கோவை பெரெயன்ஸ் குழு நன்றி தெரிவிக்கின்றது. உங்களுடைய அதிமேதாவித்தனத்தினால்தான் எங்கள் தளத்துக்கு வரும் சகோதர, சகோதரிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

உங்களது இந்த மஹோன்னத ஊழியம் தொடரட்டும். ஜனங்கள் சத்தியத்தை அறியட்டும்!!

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 80 பேர் தளத்துக்கு வருகை தருகிறார்கள்.

நன்றி!
அன்பு,
சில்சாம் மற்றும்
சுந்தர் மூவருக்கும்.....

******************************************************


நான் தாழ்மையுடனும் நட்புணர்வுடனும் எத்தனை முறை இங்கே வந்தாலும் புறக்கணிப்பும் எகத்தாளமும் தொடருகிறது;இதுதான் கிறிஸ்துவின் அன்பு என்றால் மாற்று மார்க்கத்திலிருந்து இங்கே வந்ததைக் குறித்த அதிர்ச்சியும் இன்னும் வரக்காத்திருப்போரின் நிலையைக் குறித்த அச்சமும் அதிகரிக்கிறது..!





__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard