Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முழுநேரங்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: முழுநேரங்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்!
Permalink  
 


ebi wrote:
Bro.சில்சாம்,கொலை மிரட்டல் செய்தி சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. தேவன் தாமே தங்களையும்,குடும்பத்தாரையும் காத்துக்கொள்வாராக. ஆமென்.
ஆம்,நண்பரே நான் எழுதியவை அனைத்தும் உண்மை;ஒன்றையும் கூட்டி குறைத்து எழுதவில்லை;ஆனால் சுருக்கமாக எழுதியுள்ளேன்;"இது ஏதடா வம்பு" என்று உண்மையிலேயே பயந்து தான் போனோம்; இதுபோலவே ஏஞ்சல் டிவி சம்பந்தமானதொரு போராட்டத்திலும் சில வருடங்களுக்கு முன்பு கொலை மிரட்டல் வந்தது.

ஆனாலும் அருமை நண்பர் "கோவையார்" இங்கே வேறுமாதிரி ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார்;அதாவது அவர் கொசுவைக் கூட "குருவியை" விரட்டுவது போல "ச்சூ,போ..!" என்று தான் விரட்டுவாராம்;அந்த அளவுக்கு மென்மையான நானா கொலை செய்வேன்' என்கிறார்;ஆனால்,"இனி இதுபோல எழுதினால் உன் வீட்டுக்கே வந்து வெட்டுவேன் " என்று அவர் மீண்டும் மீண்டும் சத்தம் போட்டது ஒரு இடத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே, அதை யாராவது இல்லை என்று சொல்லமுடியுமா? நான் பொய் சொல்லுகிறதில்லை என்பதை கர்த்தர் அறிவார்; எந்த கர்த்தர் என்று கேட்பார்கள்... எனக்கு ஒரே கர்த்தர் தான் உண்டு..!

தள நண்பர்களான தாங்கள் என் முகம் பாராமலே என்னை நேசிப்பதும் எனக்கு புத்தி சொல்லுவதும் என்னைப் பாராட்டுவதும் என்னை நம்பி எனக்கு ஆதரவளிப்பதும் கர்த்தருடைய பெரிதான கிருபையினால் யான் பெற்ற பாக்கியமாகும்; அடியேன் தொடர்ந்து உண்மையுடனும் உத்தமத்துடனும் பணிபுரிய எனக்காக ஜெபிக்கவேண்டுகிறேன்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

Bro.சில்சாம்,கொலை மிரட்டல் செய்தி சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. தேவன் தாமே தங்களையும்,குடும்பத்தாரையும் காத்துக்கொள்வாராக. ஆமென்.


__________________
ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

//;ஆண்டவரே வந்து நின்றாலும் அவரையே சோதித்தபிறகே நம்புவேன் என்று அடம்பிடிப்பார்கள்; இவர்களுக்கு எல்லாவற்றுக்கும் நிரூபணம் வேண்டும்;பெற்ற தாயிடமே தன் தகப்பனைக் குறித்த நிரூபணம் கேட்கும் மாபாவிகள்; தோமா என்பவன் விரல்களால் தொட்டுப்பார்த்தே நம்புவேன் என்றான் எனில், இவர்கள் அந்த ஜீவாதிபதியை மீண்டும் சிலுவையில் அறைந்தாலே நம்புவேன் என்பார்கள்;இவர்களுக்குள் கிறித்துவைக் குறித்த மனதுருக்கம் இருக்குமானால் இவ்வளவு துணிகரமாகத் தாங்கள் காணாதவைகளில் துணிகரமாக நுழைந்து புரட்டி பேசவே மாட்டார்கள்.//

இங்கு, இவர்கள் மிகவும் மோசமான சந்தேககுணமுள்ளவர்கள் என்று அர்த்தம் தருவதாகவே உள்ளது. தாய் பழிக்கப்படவில்லை.


கிறிஸ்து என்றாலோ அல்லது கிறித்து என்றாலோ நிச்சயம் தேவன் கோபித்து கொள்ளமாட்டார். மேலும் கிறிஸ்துவின் தெய்வத்தன்மையை மறுதலிப்பதை விட இது ஒன்றும் மோசமானது அல்ல.

மூலமொழியில் இப்படி இருக்கு இப்ப அப்படி இருக்கு என்று இவர்களுக்கு எப்படி தெரிந்ததாம்? ஏதோ ஒரு மனிதன் எழுதி வைத்ததையோ அல்லது சொன்னதையோ வைத்து தானே? மேலும் இவர்கள் நரகம் என்ற ஒன்று இல்லை மற்றும் எல்லோருக்கும் எப்படியும் இரட்சிப்பு என்பதை நம்பினால் பின்னர் ஏன் இவர்கள் கருத்தை பரப்ப வேண்டும்? இவர்கள் கருத்தை ஏற்றுக்கொண்டாலோ அல்லது ஏற்றுக்கொள்ளாவிட்டாலோ நிச்சயமாக ஒருவருக்கு நரகம் இல்லை, இரட்சிப்பு உண்டு. பின்னர் ஏன் இவர்கள் இவ்வளவு பிரயாசப்பட வேண்டும்?

காணிக்கையை, "பிச்சை" என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவர்கள் தான் கிறிஸ்தவர்கள் இல்லையே, பின்னர் கிறிஸ்தவ ஊழியர்கள் காணிக்கை வாங்கினால் என்ன வாங்காவிட்டால் இவர்களுக்கென்ன? கிறிஸ்தவ விசுவாசிகளுக்கே இதனை ஆதரிக்கவோ கண்டிக்கவோ முழு உரிமை உண்டு.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

Dino Wrote
//உம்மைப்போல சில அடி முட்டாள்கள் தனது தளத்தில் வைத்துக்கொண்டு தன் சுயநலத்துக்காக அவர்களின் நேரத்தையும் வீணடித்துக் கொண்டு இது வெல்லாம் ஒரு புலைப்பா:::  தூ தூ :::::::  வேக்கம் கெட்டவனே :::::: உண்மையே பேசு :::  பொய் சொன்ன வாய்க்கு பொறி கூட கிடைக்காது ::::://

இப்படி கேவலமாக எழுத உங்கள் நாட்டின் சட்டம் இடம் கொடுக்கிறதா? முதலில் மரியாதையாக எழுதப் பழக்கிக் கொள்ளும். நீர் இப்படி எழுதியமைக்காகவே உங்கள் நாட்டின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்பதை நீர் அறிய மாட்டீரா?

நீர் இதுவரை உருப்படியாக எதை எழுதுனீர்? ரசலின் உபதேசங்களைக் கூட சரியாக மேற்கோள் காட்டத் தெரியவில்லை உமக்கு. தேவதத்திற்கு அடுத்ததான வி்டயங்களை மட்டும் தேவதூதர்களுக்கு கால் இல்லை. பெரிய தெய்வம் சிறிய தெய்வத்தைப் படைத்து அது உலகத்தைப் படைத்தது போன்று உங்கள் போதகர் எழுதுவார். அதற்கு நீர் கைகொடுவீர். உங்களுக்கு மனிதப் போதனைகள்தான் முக்கியம். வேதம் முக்கியம் கிடையாது. ஐரோப்பியர் பெரும்பாலோனோர் மத அக்கறையற்றோர். அவர்களிடம் உங்கள் கள்ள உபதேசங்களை வைத்துக் கொள்ளும்.

To கோவை பெரியன்ஸ்
ஜெபக்கூடுகை நடத்தும் இடங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமே. இடவாடகை, மின்சார செலவு. இவற்றை சமாளிப்பது எப்படி, மற்றும் கோவையில் நடந்த கொன்பரன்ஸ் இற்கு பணம் என்ன வானத்திலிருந்தா கொட்டியது. பல  இலட்சங்கள் எங்கிருந்து உங்களுக்கு வந்தது. இதை சொன்னால் குடும்பத்தை இழுக்கிறேன் என்று வாதத்தை திசை திருப்புகிறீர்.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

எனது இந்த வெளிப்படையான அறிக்கைக்கு கோவை வெறியன் மேம்போக்கான ஒரு பதிலை எழுதியிருக்கிறார்;அதில்,

// இவருக்கும் தேவனுக்கும் சம்பந்தமே கிடையாது, ஏனென்றால் இவர் ஒரு "கிறித்தவர்" இவர் தொழுதுக்கொள்வது இயேசுசாமியை!! கிறிஸ்து என்கிற ரட்சகரின் நாமத்தை உச்சரிக்கவே வராத இவரது நாக்கு எப்படுப்பட்டவைகளையும் திரித்து பேசும்!! //


அடியேன், "கிறிஸ்து" என்று எழுதாமல் "கிறித்து" என்று எழுதுவதற்கு இறையியல் சம்பந்தமான எந்த விசேஷ காரணமும் இல்லை என்று பலமுறை சொன்னபிறகும் கோவை வெறியன் மீண்டும் மீண்டும் பினாத்திக்கொண்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது; இவரைப் போன்ற மனநோயாளிகளிடம் எப்படி சத்தியத்தைக் குறித்து விவாதிப்பது என்றே புரியவில்லை; அதன் காரணமாகவே, நீ ஒன்றும் பேசவேண்டாம் வாயை மூடு என்று மீண்டும் மீண்டும் வேண்டுகிறோம்;ஆரோக்கியமான மனநிலை உள்ளவர்களுடன் எதையாவது பேசி சமாளிக்கலாம்;ஆனால் கல்லையும் மண்ணையும் எறிகிற வாயாடிகளான அமலேக்கியரிடம் எப்படி பேசுவது?

கிறிஸ்து என்பதே மாற்று மொழி வார்த்தையல்லவா,அதிலென்ன மேன்மை? அல்லது மேசியா என்று எழுதினால் மட்டும் அதை உச்சரிக்கும் நாக்கு உங்களுக்கு இருக்கிறதா? பிதாவின் நாமமே அறியாமல் "ஜே"(J) போட்டு உச்சரிப்பதா "ஒய்"(Y) போட்டு உச்சரிப்பதா என்று அறியாமல் இருக்கிறீர்களே, கொஞ்சமும் வெட்கமில்லாமல் யூத குலத்துக்காக வழங்கப்பட்ட நாமத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்களே? சர்வவல்லவர் நாமகரணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்று பலமுறை சொல்லிவிட்டோம்; இதற்கு மேலும் உங்கள் மதியீனமான உளறல்களைக் கேட்கும் பொறுமை எங்களுக்கு இல்லை;நீங்கள் உடனடியாக செய்யவேண்டியது, நீங்கள் இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொள்ளவும் வேண்டாம்,யெகோவா தேவனைக் குறித்து நீங்கள் சொல்ல‌ நாங்கள் கேட்கவும் வேண்டாம்,குறைந்த பட்சம்," உங்கள் நம்பிக்கை நாங்கள் மறுத்து எழுதி உங்கள் மனதைப் புண்படுத்திவிட்டோம்,மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றாவது எழுதி இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்..!

"தினோ"(dino) எனும் புதுப் பிசாசும் நாகரீகமில்லாமல் கொக்கரிக்கத் துவங்கிவிட்டது;இதோ அதன் தூஷண வார்த்தைகள்...

// சில்சாம் என்ற பெரிய கள்ளனின் பதிவுகளை வாசித்து அதிர்ந்து போனேன்!!!!!!!!!!! காரணம் பொய்யிலே பிறந்த புலவர் மாதிரி எவ்வளவு அழகா திரைவசனம் கொடுக்கிறார் பாருங்க . இதை விட சினிமா படங்களுக்கு கதை எழுத போகலாமே. வேதமாணாக்கரின் ஒரு சகோதரனை பொய்யாக அவமதிப்பது இந்த முழு உலக வேதமாணாக்கரின் நடத்தைகளையும், சாட்சிகளையும் சந்தேகப்படுவதட்கு சமம். (அப்படியானால் சர்வதேச கொலைக்காரர்களா நீங்கள்? அப்படியானால் உங்களைக் குறித்து இன்டர்போலிடம் தாம் தான் புகார் செய்யவேண்டுமோ?) வேதம்  சொல்கிறது வேலைக்கு போக மனம் இல்லாதவன் சாப்பிடவே கூடாது என்று சொல்கிறது. பிச்சைகாரனை விட கேவலமாக சபை விசுவாசிகளின் காணிக்கைகளை கொண்டு பிச்சை எடுத்து வைறு வழக்கும் கூட்டங்கள் தானே நீங்கள். இந்த செய்தி எல்லாம் உமது சபைக்கு வரும் விசுவாசிகளுக்கு நன்றாக தெரியும். நீ சோம்பேறி என்றும் மக்கள் பணத்தில் உல்லாசமாக வாழும் கள்ளன் என்று:. உம்மைப் போலவே இந்த ஐரோப்பா நாட்டில் பல தமிழ் பேசும் கள்ளப் போதகர்கள் இருகானுவல். அதில் ஒரு சிலர் நிதி மோசடியில் கம்பி எண்ணிக்கொண்டும் இருக்கார்கள். நீ கள்ளன் வேதத்தை சாட்டாக வைத்து இதுவே குடும்ப வழக்கமாக செய்யும் அனைத்தும் எமக்கு தெரியும்.  உம்மைப்போல சில அடி முட்டாள்கள் தனது தளத்தில் வைத்துக்கொண்டு தன் சுயநலத்துக்காக அவர்களின் நேரத்தையும் வீணடித்துக் கொண்டு இது வெல்லாம் ஒரு புலைப்பா:::  தூ தூ :::::::  வேக்கம் கெட்டவனே :::::: உண்மையே பேசு :::  பொய் சொன்ன வாய்க்கு பொறி கூட கிடைக்காது ::::://

இவர்களெல்லாம் நவநாகரீக தொட்டிலான ஐரோப்பாவில் வசதியான வாழ்க்கைக்காக தன்னையும் தன் தேசத்துக் குடிகளையும்  அடிமைகளாக விற்றுவிட்டு அவர்தம் இரத்தம் சிந்தக் காரணமாக இருந்துகொண்டு சிருஷ்டிகரைக் குறித்து எழுத வந்துவிட்டார்கள்;
இவர்கள் பரதேசியாக இருக்கும் நாட்டில் தின்ற சோறு உனக்கு இவ்வளவு தெம்பைக் கொடுத்தால் என்னைப் போன்றோரை பிறந்து வளர்ந்த மண்ணிலேயே வந்து சந்தித்து சேர்த்துக்கொண்ட இரட்சகருக்காக நிற்கும் எங்கள் மனம் எத்தனை உரத்துடன் இருக்கும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கட்டும்;உங்களைப் போன்ற புல்லர்களுக்கெல்லாம் விளக்கம் சொல்லவேண்டிய அவசியமே எனக்கில்லை; உன்னோடு வேதத்தை விவாதிப்பதே வேதத்துக்கு இழுக்கு;எங்க கிராமத்துல இருக்கும் படிப்பறிவில்லாத பாட்டியையே உங்க ஆட்களால் சமாளிக்க முடியாது;அட்ரஸ் இல்லாத பரதேசிகள் இணையதள வசதி இருக்கும் ஒரே காரணத்தால் கண்டதையும் எழுதிவைத்தால் அதற்கெல்லாம் விளக்கம் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை;எங்கள் நாட்டில் மத உணர்வுகளைப் புண்படுத்தி பேசுவதும் எழுதுவதும் சட்டவிரோதம் என்பதை  மட்டும் உனக்கு எச்சரிக்கையாக உனக்கு சொல்லிக்கொள்ளுகிறேன்; உனக்கு உனது நாட்டில் இருப்பது போலவே எனக்கு எனது நாட்டிலும் கட்டற்ற சுதந்தரம் உண்டு;ஆனாலும் உனது கட்டற்ற சுதந்தரமானது சர்ச்சில் சொன்னதுபோல , எனது மூக்கின் நுனியில் முடிகிறது.அந்த எல்லையை தாண்டினால் உனக்கு பிரச்சினை தான்..!

நேற்று கோவை வெறியன் நேரடி விவாதத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்தார், அந்த அழைப்பை ஏற்று நாளைக்கே நான் சென்றாலும் சாதாரண நண்பர்களை சந்திப்பதுபோல நான் தன்னந்தனியாகச் செல்லுவது எனக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிந்துவிட்டது; எனவே அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளுடனே செல்லுவேன்; முக்கியமாக உள்ளூர் பத்திரிகையாளர்களை அழைத்து பகிரங்கமான பொது நிகழ்ச்சியாகவே அதனை நடத்துவேன்; அப்போது நீங்கள் எங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தி பேசும் அக்கிரமமானது அம்பலமாகும்; அந்த நேரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்;நாங்கள் பாஸ்டர் இரஸல் எனும் ஹோமோசெக்ஸ் வெறியனின் பொய்ப் போதகத்துக்கு எங்கள் கற்பைப் பறிகொடுத்தவர்கள் அல்ல;எனவே பொய்யர்,கள்ளர்,மாயக்காரர்,மனைவியை விவாகரத்து செய்தவர்,ஆசீர்வாத கோதுமை விற்று மோசடி செய்த கொள்ளைக்காரர்களுடைய கூட்டத்தில் இருந்துகொண்டு எங்கள் மீது கல்லெறியும் மதியீனத்தை விட்டு
விட்டு சத்தியவானும் நீதிபரருமான இயேசுகிறித்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு ஆத்தும ஈடேற்றம் பெறும்படி வேண்டுகிறோம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

கவலையை விடுங்கள் நண்பரே!. நேரடியாக அந்த வசனத்தை நீங்கள் பாவிக்கவில்லை என்பது தெரிகிறது. சகோ.கோபெரியன்ஸ் இந்தி மீடியத்தில் படித்திருப்பதால் தமிழ்வாசிக்கும்போது சில குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவருடன் கூட உள்ளவர் விகர்ப்பமான அர்த்தங்களை கொடுத்தபோது தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன்.

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

எனக்கருமையான யௌவன ஜனம் தள நண்பர்களுக்கு இதன்மூலம் அறிய வேண்டுவது யாதெனில், நாம் யாருடனும் இதுவரை வம்பு சண்டைக்கு போனதும் இல்லை; வந்த சண்டையை விட்டதும் இல்லை; யாருக்கும் பயந்ததும் இல்லை; ஆனாலும் நம்மீது முகாந்திரமில்லாத ஒருவித காழ்ப்புணர்ச்சி நம்முடைய (மேசியாவின்) எதிரிகளுக்கு எப்படி ஏற்பட்டது என்றே தெரியவில்லை; நானும் என் மனசாட்சி மழுங்கிவிடாதிருக்கவும் மங்கிவிடாதிருக்கவும் வேண்டி மீண்டும் மீண்டும் யோசித்து பார்க்கிறேன், என்னுடைய கருத்துக்கள் அல்லது தாக்குதல் இவர்களுடனான மோதலுக்கு ஆரம்பமாக இல்லவே இல்லை.

இதோ இந்த திரியில் இருப்பது அவர்களுடைய தளத்தில் எழுதி பிறகு அவர்களுடைய நட்புபாராட்டாத அவமானப்படுத்தும் போக்கினால்
நாம் வெறுத்துப்போய் வெளியேற முடிவெடுத்த போது இங்கே காப்பி செய்தது; ஒரு தள உறுப்பினரை இப்படி தூஷணமாக எழுதுகிறீர்களே என்று வேதனையுடன் நியாயம் கேட்ட‌போதும் நீ இங்கே எழுதவேண்டிய அவசியமில்லை; நீ போகலாம் என்று நிர்தாட்சண்யமாக சொன்னவர்கள்; ஆனால் தற்போது என்னை பேடி என்றும் ஓடுகாலி என்றும் பெட்டைத்தனமாக ஓடிப்போனதாகவும் தூஷிக்கிறார்கள்;விரோதத்தை வளர்த்தது யார் என்றும் அது எங்கிருந்து முளைவிட்டு இங்கே வந்து படர்ந்தது என்பதும் நடுநிலையாளர்களுக்கு தெரியும்; பிறகு ஒரே இரவில் சுமார் 100 பதிவுகளுக்கும் மேல் நான் எழுதிய என்னுடைய எழுத்துக்களை "ஏற்றுக்கொள்ளாதவர்களை விட்டு விலகு" எனும் கிறித்துவின் பிரமாணத்தின்படி என்னுடைய இந்த புதிய தளத்துக்கு மாற்றினேன்;இதில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பதற்கு கர்த்தரே சாட்சியாயிருக்கிறார்; ஏனெனில் இதில் பல எழுத்துக்கள் என்னுடைய நன்மதிப்புக்கே சவாலாக இருக்கும்;ஆனாலும் உள்ளது உள்ளபடி எனும் உளத்தூய்மையுணர்வுக்காக இதில் எந்த மாற்றத்தையும் தணிக்கையும் நான் செய்யவில்லை;என்றாவது உதவும் என்ற எண்ணத்தினால் எனது எழுத்துக்களை சேமித்து வைத்திருக்கிறேன்; சில நாட்கள் மிகுந்த மனவேதனையினால் இந்த குறிப்பிட்ட உபதளத்தை (Sub forum) யாரும் பார்வையிடமுடியாத வண்ணம் பூட்டி வைத்திருந்தேன்; அதன்பிறகு முழுமூச்சுடன் மோதி பார்த்துவிடுவது என்ற வைராக்கியத்தினால் மீண்டும் திறந்தேன்;எனக்கு நேரமில்லாமையே தவிர இவர்களுக்கு பதிலளிக்காதிருக்க ஒரு காரணமும் இல்லை; இவர்களுடைய சூழ்ச்சிகளும் மொள்ளமாரித்தனமும் எனக்கு அத்துப்படி ஆகும்;எனவே இவர்களுடைய ஆட்கள் ஜெர்மனியிலிருந்தாலும் சரி கோவையில் இருந்தாலும் சரி அல்லது பனங்காட்டில் இருந்தாலும் சரி அஞ்சி ஒளிகிற வம்சம் நாங்கள் இல்லை;

தள அன்பர்களுக்கு அண்மைய தகவல் ஒன்றை பகிர்ந்துகொள்ளும் நோக்கத்திலேயே இந்த பழைய பதிவில் என்னுடைய கருத்தை எழுதுகிறேன்; ஏறக்குறைய இது என்னுடைய ஆரம்பகால பதிவு ஆகும்;இதன்மூலம் நீங்கள் சுமார் ஒன்றரை வருடத்துக்கு முந்தைய என்னுடைய பாணியையும் மென்மையையும் அறிவீர்கள் என்று நம்புகிறேன்;இப்படி தயங்கி தயங்கி எழுதிய என்னையே இன்றைக்கு இப்படி (மேசியாவின்) எதிரிகள் மாற்றியுள்ளனர்;இனி நான் திருந்தவும் வாய்ப்பில்லை;ஏனெனில் இந்த
...களுக்கு இப்படி எழுதினால் தான் உரைக்கும் என்று புரிந்துவிட்டது;

அவர்களுக்கு என்மீது கோபம் திரும்பியதே ஒரு சுவாரசியமான கதையாகும்; அவர்கள் பொத்தாம்பொதுவில் அனைத்து ஊழியர்களையும் கீழ்த்தரமான வார்த்தைகளால் சாடிக்கொண்டிருந்தார்கள்;நானும் ஏறக்குறைய அதே பாணியில் எழுதினதால் என்னை வளைத்துப் போடலாம் என்ற பேராசையுடன் என்னைத் தொடர்பு கொண்டார்கள்;ஆனால் நான் ஏற்கனவே இவர்களைக் குறித்து கிரகித்து வைத்திருந்ததால் இவர்களுடைய சூழ்ச்சிக்கு பலியாகவில்லை;மேலும் எங்கள் ஊழியர்கள் மோசடி செய்தாலும் அதை விமர்சிக்க உனக்கு உரிமையில்லை என்ற ரீதியில் நான் நேரடியாக இவர்களுடைய கள்ள உபதேசங்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்தேன்; உடனே என்னை அச்சுறுத்தும் நோக்கில், நானும் முழு நேர ஊழியன் என்றும் வேலைக்கு போகாமல் வீடுவீடாக காணிக்கை என்ற பெயரில் பிச்சையெடுத்து வெட்கமில்லாமல் குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடுவதாகவும் தனிப்பட்ட முறையில் தாக்கினார்கள்;நான் அதுவரையில் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கினதில்லை; பன்றி என்றோ காக்கா என்றோ தாக்கியவன் நான் இல்லை;அது இங்கே தேதி வாரியாக அப்படியே இருக்கிறது.

ஆனாலும் சற்றும் சளைக்காமல் இவர்களுக்கு கடந்த ஒரு வருடமாகப் பல வகையிலும்  தொல்லை கொடுத்து வந்ததைப் பொறுக்கமுடியாமல் எப்போதும் தனித்து இயங்கவே விரும்பும் மும்மூர்த்திகளும் ஒரு அவசர ஒப்பந்தத்தின் பேரில் இணைந்தார்கள்;அதன் பிறகே அன்பு என்ற ஆளும் இயேசுவை தெய்வமாக தொழுவதை மறுப்பவன் என்பது தெரியவந்தது; அதற்கு சற்று முன்பு வரை அதாவது சுமார் ஆறு மாதம் முன்பு வரையிலும் கூட இந்த ஆள் ஏழாம் நாள் அல்லது பத்து கற்பனைக்காரன் என்றே எண்ணியிருந்தேன்;நான் இவர்களை வேதத்தின் நடைமுறைகளுக்கு
ம் அடிப்படை கிறித்தவ பண்புகளுக்கும் அப்பாற்பட்ட விதத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த காரணத்தினாலேயே இவர்களுடன் ஒருபோதும் வசனத்தை வைத்து வாதாடுவதை தவிர்த்து வந்தேன்;இவர்களிடம் வசனத்தைப் போட்டு வாதாடி அதற்கு அவர்கள் சொல்லும் விகாரமான விளக்கங்களைக் கேட்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

என்னுடைய ஒரே போராட்டம் என்னவென்றால், நீ கிறித்துவை தெய்வமாகத் தொழமாட்டேன் என்கிறாய், எனவே நீ முதலாவது உன்னை கிறித்தவன் என்று சொல்லிக்கொள்ளாதே, அடுத்து கிறித்துவை தெய்வமாகத் தொழுவோரின் மனம் புண்படும்படி அதற்கு எதிராக எழுதாதே என்பதே;அதை விட்டு விட்டு நாலாந்தர மஞ்சள் பத்திரிகையைப் போல ஓயாமல் திரித்துவம் குறித்தும் கர்த்தத்துவத்தைக் குறித்தும் ஊழியர்களைக்குறித்தும் எழுதாதே" என்பதே;

இஸ்லாமியர் கிறித்துவை தெய்வமாகத் தொழுவதில்லை;அவர்களுக்கு எதிராக ஏதாவது எழுதுகிறோமா,ஏன் உன்னை மட்டும் எதிர்க்கவேண்டும்? யோசித்துப்பார்;நீ எங்களில் ஒருவன் போல மாயம் பண்ணிக்கொண்டு கிறித்தவன் என்ற போர்வையில் சூழ்ச்சியுடன் எழுதுவதால் புதியவர்கள் உன்னால் வஞ்சிக்கப்படுவார்கள்;எனவே இஸ்லாமியரைப் போல வெளிப்படையாக, நான் கிறித்தவன் அல்ல,நான் யெகோவா தேவனையே தொழுபவன் என்று அறிவிக்க வேண்டுகிறேன்;அப்போது தான் அனைவருக்கும் நாம் வெவ்வேறானவர்கள் என்ற வித்தியாசம் தெரியும்;
புதியவர்களும் எளிதில் ஒப்பிட்டுப் பார்த்து எது வேண்டுமோ அதை தேர்வு செய்வார்கள்; அதைவிட்டு
விட்டு அதை மாத்திபுட்டாங்க, இதை சாச்சுபுட்டாங்க என்பதெல்லாம் மோசடியான மோடிவித்தையாக்கும்.

இன்று மதியம் (06.03.2011@3pm) கோவை வெறியன் போன் செய்து கொஞ்சமும் வெட்கமில்லாமல், அந்த ஆளை நான் வேசியின் மகன் என்று எழுதிவிட்டதாகவும் இனி அதுபோல எழுதினால் வீட்டுக்கே வந்து வெட்டிப்போட்டுவேன் என்று மிரட்டினார்;மேலும் கோர்ட்டுக்கு இழுப்பேன் என்றும் அச்சுறுத்தினார்;மேலும் சரியான ஆம்பளையாக இருந்தால் நேரடி விவாதத்துக்கு வரச் சொல்லியும் சவால் விட்டார்; நான் என்ன செய்யமுடியும்? எனக்கு எந்த பாதுகாப்பும் இல்லை; எனக்கு எது நடந்தாலும் கேட்க யாருமில்லை; ஆனால் இதோ எழுதிவைக்கிறேனே, இதுவே எனது மரண வாக்குமூலமாக இருக்கும்.

நான் இயன்ற மட்டும் மரியாதையாகவே பேசினேன்;அவர் ஏதோ இரத்தகொதிப்பு  (BP) நோயாளியைப் போல படபடப்பாக ஒருமையில் பேசினதால், எனக்கே பரிதாபமாக இருந்தது;கோவை மாவட்டத்துக்குக்காரர்கள் பொதுவாகவே மரியாதைக்கு பேர் போனவர்கள் என்பதால் நான் இயன்ற மட்டும் மரியாதையாகவே பேசினேன்;ஆனாலும் அவர் கட்டுப்பாட்டுக்கு வருவது போலத் தெரியவில்லை;வீட்டிலிருந்த எனது மனைவியும் எனது தம்பியும் மிகவும் பயந்துவிட்டார்கள்;ஆனாலும் அவர்களை அமைதிபடுத்திவிட்டு தொடர்ந்தேன்;இன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் என்னை சந்திக்க சில குடும்பங்கள் வந்திருந்தால் மிகவும் சங்கடமாக இருந்தது;சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் அவரோடு போராட வேண்டியதாக இருந்தது;அவர் கொலை மிரட்டல் விட்டதைக் குறித்து நாம் கவலைப்படவில்லை;ஆனால் நம்முடைய விளக்கங்களை ஏற்க மறுத்து அவற்றை முழுவதுமாக புறக்கணித்து நம்மீது பழிபோடுவதே சங்கடமாக இருக்கிறது; நான் மீண்டும் மீண்டும் தெளிவாகச் சொல்லிவிட்டேன், நான் யாரையும் வேசியின் மகன் என்று எழுதவில்லை; அன்பு எனும் குதர்க்கவாதியே நான் எழுதியவற்றுக்கு இடம் சுட்டி பொருள் விளக்கு என்பது போல பொழிப்புரை எழுதியவன்; நான் அவனிடமே தெளிவாகச் சொல்லிவிட்டேன், நான் இந்த அர்த்தத்திலோ இந்த குறிப்பிட்ட நோக்கத்திலோ எழுதவில்லை என்று;அதற்கு மேலும் ஒரு மனுஷன் விவஸ்தை கெட்டத்தனமாக வந்து கிறுக்கனைப்போல மிரட்டி நீ என்னை வேசியின் மகன் எழுதிவிட்டாய் இனி அப்படி எழுதினால் உன்னை கொலை பண்ணிடுவேன் என்றால் நான் என்ன சொல்லமுடியும்? நான் எழுதினேன் என்று சொல்லுகிறாயே, அதற்கு என்ன செய்வாய்,அது முடிந்துவிட்டது, இனி எழுதினால் என்ன எழுதாவிட்டால் என்ன,என்றேன்.

அந்த குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினை வாசகர் தயவுசெய்து சிரமம் பாராது வாசித்து என்மீது சொல்லப்ப‌டும் குற்றச்சாட்டுக்கு தகுந்த நியாயம் சொல்ல வேண்டுமாய் வேண்டுகிறேன்...இந்த நியாயத்துக்கு நான் யாரிடம் செல்லமுடியும்? நான் யாருக்காக இந்த களத்தில் இருக்கிறேன்? இதனால் எனக்கும் என் குடும்பத்துக்கும் என்ன பலன்? ஒன்றும் புரியவில்லை..!

//
இவர்கள் எந்தவகையிலும் நியாயமான விவாதத்துக்கு தகுதியில்லாதவர்கள் என்று அறிந்தே நான் இவர்களுடன் சமமாக நின்று விவாதிப்பதில்லை;வேதப்புரட்டர்கள் என்பதால் எதையும் எப்படியும் புரட்டுவார்கள்;ஆண்டவரே வந்து நின்றாலும் அவரையே சோதித்தபிறகே நம்புவேன் என்று அடம்பிடிப்பார்கள்; இவர்களுக்கு எல்லாவற்றுக்கும் நிரூபணம் வேண்டும்;பெற்ற தாயிடமே தன் தகப்பனைக் குறித்த நிரூபணம் கேட்கும் மாபாவிகள்; தோமா என்பவன் விரல்களால் தொட்டுப்பார்த்தே நம்புவேன் என்றான் எனில், இவர்கள் அந்த ஜீவாதிபதியை மீண்டும் சிலுவையில் அறைந்தாலே நம்புவேன் என்பார்கள்;இவர்களுக்குள் கிறித்துவைக் குறித்த மனதுருக்கம் இருக்குமானால் இவ்வளவு துணிகரமாகத் தாங்கள் காணாதவைகளில் துணிகரமாக நுழைந்து புரட்டி பேசவே மாட்டார்கள்.//

http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=39729174


கருத்துக்கு மட்டும் வசனத்தின் மூலம் பதில் சொல்லு, தனிப்பட்ட முறையில் தாக்கும் வேலை வேண்டாம் என்கிறார்,
கோவை வெறியன்; நானும் ஆரம்பம் முதலே அதையே சொல்லி வருகிறேன்;என் தெய்வத்தை உங்க ஆட்கள் தூஷிப்பது என் மனதை பாதிக்கிறது; இதனால் எனக்கு தனிப்பட்ட முறையில் மன உளைச்சல் உண்டாகிறது; உங்க ஆட்களுக்கு பதிலளிப்பது மட்டுமே என் முழுநேரப் பணியல்ல; யெகோவா சாட்சியினர் என்பார் உலகளாவிய ஒரு அமைப்பாகும்; அவர்களிலிருந்து பிரிந்த வேதாகம மாணவர் பிரிவினர் புற்றீசல் போல எங்கும் பரவியிருக்கின்றனர்; அவர்களை எளிதில் அடையாளம் காணவே முடியாது;சிலர் சபைக்குள்ளிருந்தே கலகம் செய்கிறார்கள்; சிலர் வெளியிலிருந்து சுயாதீனமாக செயல்பட்டு சோர்ந்து கிடக்கும் சபையின் மக்களை வஞ்சித்து கொண்டுபோகிறார்கள்; அப்படி இவர்களால் வஞ்சிக்கப்படும் மக்கள் பெரும்பாலும் ஊழீயர்களின் தவறான அணுகுமுறையினாலும் முதலாளித்துவ போக்கினாலும் பாதிக்கப்பட்டவர்களே;இதற்கு எதிராகவும் போராடி வருகிறோம்; ஆனாலும் யாரும் சொத்து சேர்த்துவிட்டார்கள் என்றோ பணக்காரர்களாகி விட்டார்கள் என்றோ நாம் யாரையும் விமர்சிக்காமல் பெரும்பாலும் உபதேசக் குழப்பங்களை மட்டுமே நம்முடைய போராட்ட களமாகக் கொண்டுள்ளோம்.

கோவை வெறியனைப் பொறுத்தவரையிலும் அவர் யெகோவா சாட்சியும் இல்லை, வேதமாணவரும் இல்லை, ஆனால் அவர்களுடைய பெரும்பாலான கொள்கைகளை ஏற்றுக்கொண்டு தனித்து இயங்குவதாகச் சொல்லிக்கொள்ளுகிறார்;அவர் கிறித்துவைப் பின்பற்றுகிறாராம்; அப்படியானால் சீஷர்கள் இயேசுவுக்கு செய்த மரியாதையை செய்யலாமே என்றால் அப்படி யாரும் இயேசுவை வணங்கவில்லை,அவரும் தம்மை வணங்கச் சொல்லி எங்குமே சொல்லவில்லை என்று மூர்க்கத்தனமாக மறுக்கிறார்; சரி கிறித்துவைப் பின்பற்றுவதாகச் சொல்லுகிறீர்கள்,கிறித்து இன்னும் வெளிப்படாத காலத்தில் வாழ்ந்த மோசே யாரை பின்பற்றினார்? யெகோவா தேவனையல்லவா? யெகோவா தேவனைப் பின்பற்றின மோசே அவரை வணங்கி தொழுதுகொண்டாரே,அதுபோலவே தற்போது கிறித்துவைப் பின்பற்றுவதாகச் சொல்லும் நீங்களும் கிறித்துவைத் தொழுவதில் என்ன தடை என்று கேட்டேன்;அதற்கு அவரால் சரியான மாறுத்தரம் சொல்லமுடியவில்லை; உங்களுக்கும்  யெகோவா சாட்சியினருக்கும் என்ன வித்தியாசம் என்றும் வேதாகம மாண‌வர் கூட்டத்தாரின் போதனையிலிருந்து நீங்கள் எப்படி வேறுபடுகிறீர்கள் என்றும் யெகோவா சாட்சியினருக்கும் வேதாகம மா
வர் கூட்டத்துக்கும் என்ன வித்தியாசம் என்றும் முதலில் சொல்லிவிட்டு இது இயேசுவை தெய்வமாக ஆராதிப்பவருக்கு எதிரான தளம் என்று அறிவித்துவிட்டு பிறகு எங்கள் மிரட்டலாமே..?

இறுதியாக அடியேன் சொல்லவருவது என்னவென்றால்,நீங்கள் எவ்வளவு தான் அச்சுறுத்தினாலும் சரி கொலை மிரட்டல் விட்டாலும் சரி இன்னும் வேகமெடுப்போமே தவிர பின்னடைய மாட்டோம்;ஏனெனில் கிறித்துவின் சபையே கிறித்துவுக்காக இரத்தம் சிந்திய இரத்தசாட்சிகளின் இரத்தத்தில் தான் கட்டப்பட்டுள்ளது;உங்கள் தலைவர் இரஸல் போன்றவர்கள் கிறித்துவின் நாம மகிமைக்காக ஒரு துரும்பும் கிள்ளிப்போடவில்லை;ஆனால் என்னைப் போன்றவர்கள் கிறித்துவின் நாமத்தினிமித்தம் உண்டாகும் நிந்தையை சகிக்கவும் இரத்தம் சிந்தவும் தீர்மானம் எடுத்தே வந்திருக்கிறோம்;ஏற்கனவே செத்துப்போனவர்களை உங்களால் கொலை செய்யவே முடியாது;எங்கள் சரீரத்தை நீங்கள் கொலை செய்யலாம் ஆனால் எங்கள் ஆத்துமாவுக்கு ஒரு சேதாரமும் நேராது..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

soulsolution

அருமை அன்பர்களே! இந்த ஓநாய்களுக்கு சல்லி காசுகூட கொடுக்காதீர்கள்; பதிலாக எத்தனையோ முதியோர் இல்லங்கள், அநாதை ஆஸிரமங்கள், மனநல வளர்ச்சிகுன்றியவர்களை ஆதரிக்கும் அமைப்புகளுக்கு உதவுங்கள்.


chillsam 01:50:25 Dec 29, 2009

ஆம்,அன்பரே நாங்கள் ஓநாய்களுக்கு சல்லிக்காசும் கொடுப்பதில்லை; ஆனால் அதுங்கள வெட்டிக்கதை பேசவிட்டு போண்டாவும் டீயும் குடிச்சுட்டு வரோம்... சத்தியத்துக்கு துரோகம் செய்யும் அந்த ஒநாய்கள் "அநீதத்தின் கூலியை" சம்பாதித்தே வயிற்றைக் கழுவட்டும் என விட்டுவிட்டோம்;

ஆனால் எங்களுக்கு சத்தியமார்க்கத்தை நிதானமாகப் போதிக்கும் சமாதான சுவிசேஷகர்களுக்கு எங்களுக்கு ஆண்டவர் தரும் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கிறோம்;

ஏனெனில் அவர்கள் எங்களை வந்து சந்திப்பதற்கு முன் சாபத்திலும் பயத்திலும் இருந்தோம்; அவர்களுடைய வார்த்தைகளே எங்களை உற்சாகப்படுத்தியது;

ஆனால் ஒநாய்களோ எங்களை பயமுறுத்தியது;ஆண்டவர் செய்து முடித்தவற்றில் கேள்வி எழுப்பி எங்களைக் குழப்பியது; ஒருவருக்காக ஒருவர் வேண்டுதல் செய்யுங்கள்; பரிசுத்தவான்களின் குறைவில் அவர்களுக்கு உதவுங்கள் என்றெல்லாம் வேதம் கூறும் ஆலோசனைகளுக்கு மாறாக எங்களை திசைதிருப்பியது;

எனவே ஓநாய்களை அடையாளம் கண்டு கொண்டோம்; இனி ஏமாறமாட்டோம்; இந்த பிணந்தின்னும் ஓநாய்களுக்கு கழுகுகளும் கூட்டாளிகளாம்..!

நாங்களோ கபடற்ற புறாக்களாகவும் சர்ப்பத்தைப் போல எச்சரிக்கையாகவும் இருக்கவே போதிக்கப்பட்டிருக்கிறோம்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard