Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: லூக். 19:10


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
லூக். 19:10
Permalink  
 


http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=25666017

07:08:35 Mar 3, 2009
அன்பர் Raaj அவர்கள், "எல்லாவற்றையும் விட மேன்மையான ஒரு நித்திய பேரின்ப வாழ்க்கையை இந்த பூமியில்(..?) தரவே இயேசு தன் ஜீவனை கொடுத்தார்!" என்று சொன்னதன் அர்த்தம் "அனர்த்தம்" ஆகிவிடக்கூடாது;

சங்கீதம்.4:7 இல் நாம் வாசிக்கும் ,"அவர்களுக்கு தானியமும் திராட்சை ரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைக் காட்டிலும் அதிக சந்தோஷத்தைக் காட்டிலும் அதிக சந்தோஷம்..." இதன் பொருளாக இருக்கமுடியும்;

மற்றபடி "நித்திய ஜீவன்" என்பது எழுத்தின்படி தற்போதைய உலகில் வாக்களிக்கப்படவில்லை;



RAAJ

chillsam wrote:
மற்றபடி "நித்திய ஜீவன்" என்பது எழுத்தின்படி தற்போதைய உலகில் வாக்களிக்கப்படவில்லை;

சகோதரர் சில்சாம்,

ஆதாமின் பாவம் ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவரை மேற்க்கொள்ளுகிறது, அனால் கிறிஸ்த்துவின் கிருபை மட்டும் ஒருவர் அவரை ஏற்றுக்கொண்டால்தான் இரட்சிக்கப்படுவார்கள் என்று போதிக்கப்படுவது சரியா? அவர் எல்லோருக்க்காகவும் தானே இரத்தம் சிந்தினார். ஆதாமுக்குள் எல்லோரும் மரிப்பதுபோல கிறிஸ்த்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுகிரோமல்லவா?

இப்பொழுது இயேசுவின் வாக்குதத்தப்படி "என் பிதாவிடத்தில் அனேக வாசஸ்தலங்கள் உண்டு அவற்றி ஒற்றை உங்களுக்கு ஆயத்தப்படுத்த போகிறேன் என்பதுதான்"  இயேசுவை ஏற்றுக்கொண்டு அவர் சித்தப்படி ஜீவிக்கும் சிறு மந்தை அவர் ஆயத்தம் பண்ணப்போகிற வாசச்தலத்துக்குள் பிரவேசிக்கும் என்பது உண்மை!

ஆனால் இன்னொரு கூட்டமும் இருக்கிறது!

அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையில்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெண்கலத்தையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.

பூமியின்  ராஜ்யங்களின் தொடர்ச்சியாகத்தனே இந்த தேவராஜ்யம் பற்றிய  தரிசனம் சொல்லப்படுகிறது இது பூமியிலா அல்லது வேறேங்கிலுமா?

மேலும் இஸ்ரவேலை குறித்து என்றென்றைக்குமான நித்ய தரிசனம்

நான் என் தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் பிதாக்கள் குடியிருந்ததுமான தேசத்திலே குடியிருப்பார்கள்; அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அதிலே என்றென்றைக்கும் குடியிருப்பார்கள்; என் தாசனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாயிருப்பார்.

நான் அவர்களோடே சமாதான உடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நித்திய உடன்படிக்கையாயிருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே என் பரிசுத்தஸ்தலத்தை என்றென்றைக்கும் ஸ்தாபிப்பேன்.

இது பூமியில அல்லது வேறேங்கிலுமா?

பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.
யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது

இதன் அடிபடையில் பழைய வானமும் பூமியும் ஒளிந்து,  எல்லாம் புதியதாக புதுப்பிக்கப்படும் என்றுதான் வசனங்கள் குறிப்பிடுகின்றன என்பது எனது கருத்து.

chillsam 19:37:29 Mar 5, 2009

எனக்க‌ன்பான‌ ந‌ண்ப‌ர் RAAJ அவ‌ர்க‌ளுக்கு,
1.தீமோத்தேயு.4:8- இல் வாசிக்க‌வில்லையா?
இத‌ற்குப் பின் வ‌ரும் ஜீவ‌ன் என்ப‌தே நித்திய‌ ஜீவ‌ன்;
என‌வே தான் இயேசு உயிரோடெழுப்பிய‌ லாச‌ரு மீண்டும் ம‌ரித்தான்;


அவ‌ன் ரோம‌ப் பேரர‌சின் கொடுங்கோலாட்சியாளனான‌ நீரோ ம‌ன்ன‌ன் முன்பு விசுவாச‌த்தை அறிக்கையிட்டு இர‌த்த‌சாட்சியாக‌ ம‌ரித்தானாம்;

இத‌ற்குப் பின்வ‌ரும் ஜீவ‌ன் என்ப‌தின் பொதுவான‌ பார்வை ம‌ட்டுமே வேத‌த்தில் உண்டு;
தெளிவான‌ விள‌க்க‌ம் இல்லை;


பொதுவான‌ பார்வை சொல்கிற‌து,இத‌ற்குப் பின்வ‌ரும் ஜீவ‌னில் க‌ண்ணீர் இல்லை;துக்க‌ம்,தூக்க‌ம்,ப‌சி,துன்ப‌ம் இல்லை;ஏன் இவ‌ற்றுக்கெல்லாம் கார‌ண‌மான‌ மாம்ச‌மும் இர‌த்த‌மும் இல்லை;

அந்த‌ ஜீவ‌னுக்குரிய‌வ‌ர்க‌ள்; தேவ‌தூத‌ரைப்போலிருப்பார்க‌ள்;
காம‌ உற‌வுக‌ளோ மோக இச்சையோ இருப்ப‌தில்லை;
என‌வேதான் அந்த‌ ஜீவ‌னுக்கு முன்குறிக்க‌ப்ப‌ட்டோர் எல்லாவ‌ற்றிலும் சுய‌க‌ட்டுப்பாடுட‌ன் இருக்க‌வேண்டுமென‌ வேத‌ம் போதிக்கிற‌து;

த‌ற்போதைய‌ உல‌கின் ஆதார‌ங்க‌ளான நீர்,நில‌ம்,காற்று ஆகிய‌ன‌ இல்லாத‌ ஆனால் இதைவிட‌ சிற‌ந்த‌தொரு அமைப்புக்குள் செல்ல‌ப்போகிறோம்;அதையே வேதாக‌ம‌ம் வெவ்வேறு இட‌ங்க‌ளில் வ‌லியுறுத்துகிற‌து;

அதை எழுதிய‌வ‌ர்க‌ள் ம‌னித‌‌ர்க‌ள் என்ப‌தால் அவ‌ர்க‌ளுடைய‌ அறிவுக்கு அப்பாற்ப‌ட்ட‌ காரிய‌ங்க‌ளை தேவ‌ன் ம‌றைத்து வைத்துள்ளார்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard