Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: GOD's (S)word..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
GOD's (S)word..!
Permalink  
 


http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=25573502

chillsam 23:19:03 Feb 26, 2009

"PRAISE THE LORD"

HAPPY NEW YEAR=>=>=>2009
PROMISE OF THIS YEAR: MIKAH.4:13


கர்த்தருக்குள் எனக்கன்பான தேவனுடைய பிள்ளைகளுக்கு வருடங்கள் முடிந்துபோனாலும் மாறாத நாமமுடையவரும் வாக்குத்தத்தங்களின் நாயகருமான இரட்சகர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள்;

இந்த 2009 -ம் ஆண்டு விசேஷித்த நிகழ்வுகளின் வருடமாக அமைய இருக்கிறது; இதனை கடந்த வருடத்தின் நவம்பர் மாதத்திலேயே தேவன் எனக்கு வெளிப்படுத்தினார்;அதனை நான் நம்ப காரணமாக அமைந்தது 2008 வருடத்தில் தேவன் எனக்கு சொன்னவை அத்தனையும் நிறைவேறியதுதான்..!உலக பொருளாதார வீழ்ச்சி முதலாக அரசியல் குழப்பங்கள் மற்றும் கர்த்தருடைய சபைகளுக்கெதிரான உபத்திரவங்கள் இவையாவும் ஆண்டவர் எனக்குச் சொன்னது;இதனை நான் சந்தித்த அத்தனை தேவபிள்ளைகளிடமும் சொன்னதோடு ஜூன் மாதத்துக்குப் பிறகு நிலைமை மோசமாகும் என்பது வரை சொல்லியிருந்தேன்;இனி அதைக் குறித்து விள‌க்க அவசியமில்லாதபடி அவை அத்தனையும் நிகழ்ந்துவிட்ட சம்பவங்கள்..!

ஆனால் இந்த வருடம் (2009) எப்படி இருக்கும், இந்த வருடத்தினைக் குறித்த ஆண்டவரின் திட்டம் என்ன என்பதனை ஆண்டவர் எனக்குச் சொல்லி அதனை முதலில் நான் நம்புகிற காரணத்தினால் அதனை இப்போதே பதிவுசெய்ய விரும்புகிறேன்;தங்களுடனும் பகிர்ந்து கொள்ளுகிறேன்.இதன் மூலம் நம்முடைய தேவன் இன்றைய உலகின் சம்பவங்களில் இடைபட்டு மாற்றங்களை ஏற்படுத்திவருகிறார் என்பதனை உணர்ந்து கொள்வதுடன் தங்கள் விசுவாசம் பெருகினால் அதுவே எனக்குப் போதும்..! இந்த வருடத்தின் நிகழ்வுகள் எப்படி அமையும் என்பதைக் குறித்து நான் ஆண்டவரைக் கேட்டபோது தேவ ஆவியானவர் இடைபட்டு சொன்னவை ஆச்சரியமானது..!

இஸ்ரவேலர்களுக்கு மாத்திரம் வாக்குத்தத்தங்கள் உரைக்கப்பட்டு அவர்களிடையில் மாத்திரம் தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் அமைந்திருந்த காலத்தில் அவர்கள் உலகத்துக்கே ஆசீர்வாதமாகவும் அச்சுருத்தலாகவும் இருந்து(வருவது)வந்தது போலவே இன்றைக்கு ஆண்டவர் தம்முடைய கூடாரத்தினை நம் மத்தியில் ஸ்தாபித்திருக்கிற சூழ்நிலையில் இஸ்ரவேலரைக் காட்டிலும் மேன்மையான ஆவிக்குரிய மக்களான நம்மை இந்த உலக‌த்தில் உயர்த்தி வைப்பது தேவதிட்டமாம்;

ஏனெனில் இது நமக்கான யுகம்;இதற்கு ஆதாரமாக ஆவியானவர் "மீகா" தீர்க்கதரிசன புத்தகத்தினை கவனிக்கச் செய்தார்;அதில் உரைக்கப்பட்டு இஸ்ரவேலரின் அரசியல் வாழ்வில் நடந்த சம்பவங்களைப் போன்ற சம்பவங்கள் மீண்டும் புறசாதியாரான நம்முடைய காலத்திலும் நிறைவேறவேண்டும்;அதுபோன்றதொரு காலத்தில்தான் நாம் நுழைந்துள்ளோம்.அதற்கு ஆதாரமாக "மீகா.4:13"-ஐ வாக்குத்தத்தமாக தேவன் கொடுத்துள்ளார்;

இந்த 2009 -ம் வருடம் நமக்கு வெளியே கலவரமாகவும் உள்ளே அமைதியாகவும் வாய்த்திருக்கும்;இது யாத்திராகமம்.14:20 -ன் சம்பவத்தைப் போலிருக்கும்;பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக அநேகர் தேவபிள்ளைகளிடம் வருவார்கள்;இது யோசேப்பு எகிப்தில் மகிமையாக உயர்த்தப்பட்டது போலிருக்கும்;தேவன் தம்முடைய ஊழியர்களுக்கு வெளிப்ப‌டுத்தாமல் ஒன்றையும் செய்கிறதில்லை;(ஆமோஸ்.3:7)

நீதிமான்களாகிய தேவபிள்ளைகளிடம் துன்மார்க்கருடைய ஆஸ்திகள் வந்து சேரும்;துன்மார்க்கர் ஆக்கிரமித்திருந்த ஸ்தானங்களில் சன்மார்க்கத்தார் வருவார்கள்;தேசத்தில் துஷ்டர் ஒடுக்கப்பட்டு சமாதானம் பெருகும்;இன,மத வேறுபாடுகளால் மக்களைப் பிரிக்கிற குழப்பவாதிகள் வலுவிழந்து நடுநிலையாளர்கள் ஆட்சிபீடங்களை நோக்கி வருகிறார்கள்;அவர்களுக்கு ஆலோசனை கூறவும் தேவதிட்டங்களை செயல்படுத்தவும் கர்த்தர் தேவபிள்ளைகளை எழுப்புகிறார்;

அவர்கள் எகிப்தில் யோசேப்பும் பாபிலோனில் தானியேலும் இருந்த‌துபோல உலகெங்கும் உள்ள அரசாங்கங்களை நடத்துவார்கள்;அரபு நாடுகளிலும் சீனாவிலும் பெரிய எழுப்புதல் உண்டாகும்;இதன் விளைவாக இந்தியாவில் பெரிய மாற்றங்கள் வரும்;அதற்கு ஆதரவானதொரு அரசாங்கமே இந்தியாவில் வரும் மக்களைவைத் தேர்தலுக்குப் பிறகு அமையும்;இந்தியாவின் எழுப்புதல் இஸ்லாமியர்களின் மூலம் வரும்;இதுபோன்ற இன்னும் அநேக தேவதிட்டங்கள் செயல்படுத்தப்படப்போகும் ஏழு வருடங்களின் ஆரம்ப வருடமே இந்த "2009"

மேலும் விவரங்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ளவும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக‌..!

Yours In HIS Grace.,
"chillsam

RAAJ

நல்ல தீர்க்க தரிசனம் ஆண்டவர் அப்படியே நிறைவேற்றுவாராக!

சகோதரர் சில்சாம், இது ஆண்டவர் உங்களுக்கு கொடுத்த தீர்க்க தரிசனமா? அல்லது வேறு எதாவது தேவ உழியர் தரிசனத்தை மீள் பதிவு செய்திருக்கிறீர்களா?

இதுபோல் 2008 ஆண்டுக்காக கொடுக்க பட்ட தீர்க்க தரிசனத்தையும் கொஞ்சம் பதிக்க முடியுமா?  என்னென்ன நிறைவேறியுள்ளது என்று அறிந்துகொள்ள வசதியாக இருக்குமே! 


chillsam 13:26:56 Feb 27, 2009

எனக்கன்பான சகோதரருக்கு,
இது என‌க்கு ஆண்டவரால் கொடுக்கப்பட்டது;
நான் யாரிடமிருந்தும் இதனைப் பெறவில்லை;
ஏன் WORD என்பதற்கு (S)WORD எனும் வார்த்தையினை நயமாக நேற்றிரவு கொடுத்தவரும் தேவ ஆவியானவர்தான்;


முதலில் நான் இது போல வகை பிரித்தறிய அறிந்திருக்கவில்லை;
ஆனால் கடந்த மூன்று வருடங்களாக இதனை அறிந்து அறிவித்து வருகிறேன்; கடந்த 2008 ஆம் வருடம் பிறக்க ஒரு வார முன்னரே கடந்த  வருடத்துக்கான தேவ திட்டங்கள் தெரியவந்தது;அது அப்படியே நிறைவேறியது;


ஆரம்பத்தில் சிலர் இவர் இப்படி சொன்னாரே அப்படி சொன்னாரே என கேள்வி எழுப்பினர்;ஆனால் இன்றைக்கு அவர்கள் ஆச்சரியப்படுகின்றர்; ஆண்டவர் தாம் சொன்னதை நிறைவேற்றுவதில் அக்கறையுடையவராக இருக்கிறார்;

ஆம்,கடந்த வருடம்  பொருளாதார முடக்கம் ஏற்படும் என்றும் அதன் பாதிப்பு ஜூன் மாதத்துக்குப் பிறகு மோசமாக இருக்கும் என்று கூறி அதற்கு அடையாளமாக  ஒரு திருமணத்தினை முன்பதாகவே நடத்திவிட கூறியிருந்தேன்; யாரையும் இந்த வருடம் திருமணம் முடிக்கவேண்டாம் என்றும் தடுத்தேன்;

மாத்திரமல்ல, "சபைகளுக்கு எதிராக உபத்திரவங்கள் நடைபெறும்" என்று நான் பெற்றுக் கொண்ட வார்த்தை ஒரிஸ்ஸாவில் துவங்கி தேசம் முழுவதும் எதிரொலித்ததை அறிந்திருப்பீர்கள்.

"உலக அரசியலிலும் குழப்பங்கள் ஏற்படும்" என்ற வார்த்தையினை நான் பெற்ற அடுத்த நாளே பாகிஸ்தானில் பெனசீர் பூட்டோ கொலை செய்யப்பட்டார்; இந்தியாவில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து விடுமோ என்ற சூழ்நிலை ஏற்பட்டது;

இவை உலகளாவிய பொதுவான காரியங்கள்;
ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கக்கூடிய- இன்னும் நான் பார்த்திராதவர்களுக்குக் கூட தேவ ஆவியானவர் காரியங்களை வெளிப்படுத்தி ஜெபிக்க உதவி செய்கிறார்.


இறுதியாக,
தீர்க்கதரிசிகள் இது போல பொறுமையாக விளக்கம் அளிப்பதில்லை;
சொன்னால் சொன்னதுதான்;அது நிறைவேறியே தீரும்.
(1.இராஜாக்கள்.18 மற்றும் 2.இராஜாக்கள்.7)


eras 22:12:00 Feb 28, 2009

// "இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால்; அதோ, வனாந்தரத்தில் இருக்கிறர் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்" மத். 24:25,26.

இந்த வசனத்தை நாம் தியானித்தோமென்றால், நாம் இன்று இருப்பது இறுதிக்காலம் என்று தெரிந்துக்கொள்ளலாம். நம் கர்த்தர் சொன்னப்படியே, இன்று அநேக ஊழியர்கள், தங்களின் ஊழியங்களிலும், கோபுரங்களிலும், வாசல்களிலும் இருந்து தான் இயேசு கிறிஸ்து செயல் படுவதாக சொல்லி வருகிறார்கள். இவர்களை நம்பாதிர்கள் என்று நம் கர்த்தர் நமக்கு சொல்லியிருக்கிறார். மேலும் இப்படி சொல்லுவதினால் தான் இயேசு கிறிஸ்து தங்களிடம் பேசுகிறார், இத்துனை மணியிலிருந்து இத்துனை மணி வரை பேசுகிறார் என்றும் துணிச்சலாக சொல்ல முடிகிறது. இப்படி பெசுபவர்களை நம்பாதீர்கள், அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள் என்று கிறிஸ்து தன் சீஷர்களுக்கு போதித்தார், கடைசி காலத்தில் இப்படி தான் இருக்கும் என்று தீர்க்கதரிசனமாக சொன்னார். இப்படி இருக்க, நாம் வேதத்தை நம்புவதா, அல்லது என்னிடம் இயேசு பேசினார் என்று சொல்லுபவர்களை நம்புவதா. சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே. //

chillsam 10:03:58 Mar 3, 2009

அன்பான சகோதரருக்கு என்னுடைய வார்த்தைகள் கள்ளத்தீர்க்கதரிசியின் வார்த்தைகள் என்ற தோரணையில் எதையோ சொல்வதைவிட "குழந்தைத்தனமானது" என்று சொன்னாலும் வருத்தப்படமாட்டேன்;

வார்த்தையினை நேசிக்கும் நீங்கள் சில நுட்பமான உள் அர்த்தங்களையும் விளங்கிக் கொள்ள முய‌ற்சித்த‌ல் ந‌ல‌மாகும்;

க‌ள்ள‌ நோட்டுக‌ள் புழ‌க்க‌த்திலிருக்கிற‌து என்ப‌தால் எல்லாமே க‌ள்ள‌ நோட்டுக‌ளா?  அல்ல‌து

க‌டையில் க‌ல‌ப்ப‌ட‌மான‌ பொருட்க‌ளை விற்கிறார்க‌ள் என்ப‌த‌ற்காக‌ நாம் எந்த‌ பொருட்க‌ளையும் வாங்கி ப‌ய‌ன்ப‌டுத்துகிற‌தில்லையா?

ச‌ற்று சிந்திப்பீர்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்..!

eras:

// "ஆனாலும் தேவ வசனங்களை போய் இந்த உலகத்தில் பயன்படும் அழிந்துபோகும் கரன்சிக்கு ஒப்பிட்டது தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது." //

01:10:30 Mar 4, 2009

அது அழிந்துபோகும் க‌ர‌ன்ஸிதானே கொளுத்திவிட‌லாமா?அல்ல‌,
அது ந‌ம்முடைய‌ ஜீவாதார‌மான‌ அனைத்து தேவைக‌ளுக்கும் தேவையான‌து;

இந்த‌ உல‌க‌மே அக்கினிக்கு இரையாக‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ வேதம்
சொல்லும்போது அதையே ந‌ம்ப ம‌றுக்கும் நீங்க‌ள் அத‌னை தேவ‌ராஜ்ய‌த்துட‌ன் சம்ப‌ந்த‌ப்ப‌டுத்தும்போது க‌ர‌ன்ஸியினை உண்மையான‌ உரைக்க‌ப்ப‌ட்ட‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌ங்க‌ளின் ஒலிபெருக்கிக‌ளான‌ ஊழிய‌ர்க‌ளுட‌ன் ஒப்பிட‌க்கூடாதா?


க‌ர‌ன்ஸியும் அழிய‌க்கூடிய‌து;வார்த்தையினைச் சொன்ன‌ ஊழிய‌னும் அழிந்துபோவான்;க‌ர்த்த‌ர் சொன்ன‌ வார்த்தையோ மாறாத‌து;

மேலும்  க‌ர‌ன்ஸி உங்க‌ள் கைக்கு வ‌ருவ‌து சாதார‌ண‌ காரிய‌ம‌ல்ல‌;
அத‌னை ச‌ம்பாதிக்க‌ நீங்க‌ள் க‌டுமையாக‌ உழைக்கிறீர்க‌ள்;
அத‌ற்காக தேவ‌னுடைய‌ ஜீவ‌ சுவாச‌த்தினை ப‌ய‌ன்ப‌டுத்துகிறீர்க‌ள்;

எனவே தான் அவ‌ருக்கு ந‌ன்றி செலுத்தும் வ‌ண்ணமாக‌ அதிலிருந்து ஒரு ப‌ங்கினை த‌குதியான‌ தேவ‌னை ம‌ட்டுமே ந‌ம்பி வாழும் ம‌ற்ற‌வ‌ருக்குத் த‌ருகிறோம்;


என‌வே க‌ர‌ன்ஸி=
உங்க‌ள் பொன்னான‌ நேர‌ம்+
உட‌ல் உழைப்பு+
உங்க‌ள் ஆயுட்கால‌ம் என‌ கொள்க‌..!

bereans
// இதே போல் முன்பு நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயம் வந்து உலகத்தை அழித்தது என்கிறது வேதம், அப்பொழுது என்ன பூமியா அழிந்து போனது. இல்லையே." //

16:05:39 Mar 5, 2009

இது போன்றதொரு கருத்தினை நாத்திகன்கூட‌ சொல்வதில்லை;
பூமியின் தன்மை, தட்பவெப்பநிலை உட்பட எல்லாமே ஜலப்பிரளயத்துக்குப் பிறகு மாறியதாக தற்போதைய ஆராய்ச்சிகள் சொல்லும்போது எதுவுமே மாறாமல் வெறும் தண்ணீர் வடிந்ததுமே வாழத் துவங்கிவிட்டது போல சொல்லாமா..?எனவே உங்கள் கருத்து பூகோளரீதியிலும் -அறிவியல்ரீதியிலும் ஒப்புக்கொள்ளமுடியாதது;

மேலும் இந்த உலகம் அழிவுக்கு அக்கினி இரையாக வைக்கப்பட்டிருக்கிறது என்பதாலேயே அதை நம்பி முதற் நூற்றாண்டு அப்போஸ்தலர் முதலாக தங்கள் சொத்துசுக‌ங்க‌ளை விட்டுவிட்டு தியாக‌மாக‌ வாழ்ந்த‌னர்;அப்போஸ்த‌ல‌னாகிய‌ ப‌வுல் ம‌ற்றும் பேதுருவும்கூட‌ நாம் வாழும் இந்த‌ ச‌ரீர‌த்தை "ம‌ர‌ண‌ச‌ரீர‌ம்" என்றும் "இந்த‌ தேக‌த்தைவிட்டு குடிபோக‌ ஆசை"என்றும் சொல்லிருக்கிறார்க‌ள்..,சிந்திக்க‌வும்..!

RAAJ:

// சகோதரர் சில்சாம், பூமி என்பது மனிதன் என்றென்றைக்கும் இருப்பதற்க்காக படைக்கப்படாது என்று வேதம் கூறுகிறது ஆனால் இப்பொழுது இருக்கும் நிலையிலே அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது! //

 

20:24:03 Mar 5, 2009

அருமை நண்பருக்கு,முதலில் எழுத்துப் பிழையில்லாமல் எழுதப் பழகுங்கள்;உங்கள் சொல்ல வ‌ருவதன் அர்த்தம் புரியவில்லை..!ஆனாலும் முயற்சிக்கிறேன்..!

வேத எழுத்துகளைப் புரட்டிவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்;முக்கியமாக நீங்கள் திருமணமானவராக இருந்தால் இன்னும் அதிக எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்;ஏனெனில் இது தேவனுடைய வார்த்தை;இதில் ச‌ந்த‌தி ச‌ம்ப‌ந்த‌மான‌ ஆசீர்வாத‌ங்க‌ள் உள்ள‌து;

நீங்க‌ள் குறிப்பிட்ட‌ வ‌ச‌ன‌ம் (ஏசாயா.45:18 இல்) பூமி என்றென்றைக்கும் இருக்கும் என்று கூற‌வில்லை;மேலும் வேத‌த்தில் என்றைக்கும் (பிரசங்கி.1:4) என்ப‌த‌ற்கும் என்றென்றைக்கும் என்ப‌த‌ற்கும் வித்தியாச‌முண்டு;

பிர‌ச‌ங்கி மனித‌ வாழ்வு நிர‌ந்த‌ர‌மான‌த‌ல்ல‌;அது மாயை,ஆனால் உல‌க‌ம் நிர‌ந்த‌ர‌மான‌து என்கிறான்;இதுதான் நீங்க‌ள் கேள்விப‌ட்ட‌ சுவிசேஷ‌மா?

ஆனால் ஏசாயாவில் ஆண்ட‌வ‌ரே சொல்லுகிறார்;
நிர‌ந்த‌ர‌மில்லாத‌- இல்லாம‌லிருந்த‌- என்னால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ உல‌கைக் க‌ண்டு ப‌ய‌ப்ப‌டாதே,
நீ என்றென்றைக்கும் வெட்க‌ப்ப‌ட‌மாட்டாய்;
இதுவே அந்த‌ ப‌குதியின் மொத்த‌ க‌ருத்து;ஆனால்..?


உங்க‌ளுக்கு எதாவ‌து தெரியாவிட்டால் எழுத‌லாம்;
ம‌ற்ற‌ப‌டி என்னுடைய‌ முய‌ற்சி வீணான‌து;
வேத‌த்தை முன்பின்னாக‌ புர‌ட்டும் உங்கள் முய‌ற்சி ஆப‌த்தான‌து..!




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard