பிதாவை வணங்கும் யாரும் இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை(தெய்வமாக ) செலுத்தியே ஆகவேண்டும் ஆனால் யோவான் ;16-13, 1யோவான் 4-6 கு நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்
சகோ. ஜோன் அன்பு அவர்கள் இப்படியேதான் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார். அவருக்கு எவ்வளவு வசனம் கொடுத்தாலும் இயேசு யோவான் 11 இல் நேரடியாக தேவன் என குறிப்பிடப்பட்டு இருக்கிறாரே என காட்டினால் மூலபாஷையின் படி பிழை என்பார் ஆனால் மூலபாஷையில் இந்த ஒரு என்ற விடயம் இல்லவே இல்லை. இப்போது கூட பாருங்கள் வேதத்தை இவர் சரியாக வாசிப்பது கிடையாது. உண்மையிலேயே இவருக்கு மூலபாஷை குறித்து எதுவும் தெரியாது. பரிசுத்த ஆவியை தேவன் என்று ஒப்புக்கொள்ளாதவரை வேத வசனங்கள் இவருக்கு விளங்கப்போவதில்லை. ஏனென்றால் பரிசுத்த ஆவியானவராலே வேதம் ஏவி எழுதப்பட்டுள்ளது. இவருக்கு சவால் விடுகிறேன். மூலபாஷை குறித்து கதைக்க தயாரா? நான் விரிவுரையாளருடன் தொடர்புகொள்ளத் தயார். செலவு முழுவதையும் நானே பொறுப்பேன்கிறேன். Just Phone Call அவ்வளவுதான். பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
வசனங்களை ஒன்றுக்கு பலதடவை வாசிக்கட்டும். இவருக்கு பரலோகத்தில் இயேசுவை தேவதூதர்கள் தொழுவதும் மனிதர்கள் பூலோகத்தில் அரசனை பணிந்து தொழுது கொள்ளுதலும் ஒன்றுதான். இது எவ்வளவு பெரிய தேவதூஷணம் சொல்லுகிறோம் என்பதை அறிந்தே செய்கிறார் தேவன் பரிசுத்தமாய் வீற்றிருக்கும் இடத்தையும் அரசனின் இடத்தையும் முடிச்சுப் போட்டு்ப் பார்க்கும் இவரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
//இயேசுவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தியதாக ஒரு வசனமும் கூறவில்லை. (ஒருவேளை இயேசுவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தியதாக ஏதேனும் வசனம் இருந்தால் அதை எடுத்துக்காட்டும்படி வேண்டுகிறேன்)//
இதற்கும் ஏதாவது மூலபாஷை வைத்து இருப்பார் என்று தெரிந்தாலும் மற்றவர்களுக்காக எழுதுகிறேன்
என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன். (I தீமோத்தேயு 1:12 )
அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். (லூக்கா 17:16)
முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். (மத்தேயு 21:9)
அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.அதற்கு இயேசு: நான் அவர்தான்; (மாற்கு 14:61-62)
மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, (எபேசியர் 1:11)
கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு 23:39)
-- Edited by John on Wednesday 23rd of March 2011 01:42:29 AM
//ஏதேனின் முழு பொய்யை சொல்லவில்லை மாறாக பாதி பொய்யையும் "மீதி உண்மையும்" பேசினானாம் பொய்க்குப் பிதாவாக இருக்கிற சாத்தான்!! ஜான் என்ன லாவகமாக அந்த சாத்தானுக்கு வக்காலத்து வாங்கி, இல்லை இல்லை, அவன் ஒன்றும் முழு பொய்யை சொல்லவில்லை, பாதி உண்மையை தான் சொல்லியிருக்கிறான் என்று இவர்கள் எந்த ஆவியில் செயல்ப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவ்ப்படுத்தியிருக்கிறார்!! //
சாத்தான் முழுப்பொய்யும் சொல்லுவான் பாதி பொய்யும் சொல்லுவான். உதாரணமாக உங்கள் மூலம் சாத்தான் சொல்லுவது பாதி பொய். சரி நீங்கள் வசதியாக மறந்துவிட்ட வசனத்தின் மற்ற பகுதியும் எடுத்துக்கொள்வோம்
அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; (பொய்!)நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து (உண்மை)தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
தேவன் என்ன சொல்லுகிறார் என்பதை கிழே படியுங்கள்.
பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்;..(ஆதியாகமம் 2:22)
பிசாசு ஒளியின் தூதன் வேடத்தை தரித்துக்கொண்டு வஞ்சிப்பான் (இரசலை போல , அல்லது உங்கள் கூட்டத்தை போல)
கிழே உள்ள வசனத்தில் ஒரு பெண்னை பிடித்த பிசாசு தன்னை பவுல் அறிந்துகொள்ள கூடாது என்று பிசாசு இல்லாதது போல நடிக்கிறதை பார்க்கிறோம்.
அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள். இப்படி அநேகநாள் செய்துகொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப்புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; (அப்போஸ்தலர் 16:17-18)
சாத்தன் வனாந்திரத்தில் இயேசு கிறிஸ்துவிடம் "Out of Context" இல் உங்கள் கூட்டத்தை போலவே வசனத்தை உபயோகிப்பதை பார்க்கிறோம்
//மேலும் கொல்வின் கத்தோலிக்கராக இருப்பதால் அவரும் நொந்துவிடக்கூடாது என்று மரியாளையும் விட்டு வைக்கவில்லை திரு ஜான் அவர்கள்!! மரியாள் வணக்கத்தின் ஆதாரம் அது போன்ற பாபிலோனிய கலாச்சாரத்திலிருந்து வந்தது என்று தான் அந்த புத்தகத்தின் ஆக்கியோன் சொல்லியிருக்கிறாரே தவிர அது நிம்ரோத் காலத்தில் துவங்கியது என்று இல்லை!!//
நான் எங்கே நிம்ரோத் காலத்தில் துவங்கியது என்று எழுதியிருக்கிறேன்? சகோ. கொல்வின் மரியாளை தொழுதுகொண்டால் (உண்மையில் இல்லை என்று எனக்கு தெரிந்தாலும்) அதை நிச்சயம் நான் ஆதரிக்க மாட்டேன். வேதத்தில் இல்லாததை யார் சொன்னாலும் ஏற்று கொள்ளமாட்டேன். அது நான் நேசிக்கும் சபை மூப்பனகவோ, சகோதரனாகவோ ஏன் என் மனைவியாக இருந்தாலும் கூட எற்றுகொள்ளமட்டேன்.
//கிறிஸ்து ஒரு முறையாவது நான் தான் பிதா என்று சொல்லியிருக்கிறாரா!?//
நான் உண்மையாகவே தங்களுக்கு எதோ மனரீதியான பிரச்சனை இருப்பதாக கருதுகிறேன். நான் ஆயிரம் மூறை சொல்லிவிட்டேன். "இயேசு தான் பிதா என்று சொல்லுவது , இயேசு தேவன் இல்லை என்று சொல்லுவது போன்ற ஒரு மூடத்தனம்" அதை நானும் சொல்லவில்லை, சகோ. கொல்வின் மற்றும் சகோ. சில்சாம் ஆகியோரும் சொல்லவில்லை. நாங்கள் சொல்லாததை நீங்கள் திரும்பத்திரும்ப சொல்லுவதால் எனக்கு உங்களுக்கு விளங்கிக்கொள்வதில் பிரச்சனை போல தோன்றுகிறது
-- Edited by John on Saturday 19th of March 2011 12:00:17 AM
-- Edited by John on Saturday 19th of March 2011 12:00:57 AM
சகோ. எபி. சரியான கேள்விகளை கேட்டுள்ளீர்கள். ஆத்துமா அழியும் என்பதும் பரலோகத்தில் பரதீசு தாபிக்கப்படும் என்பதும் அவர்களின் கோட்பாடு. இவர்கள் உங்கள் கேள்விகளுக்கு சரியான பதில்கள் அளிக்கப்போவதில்லை
யாருக்கும் நரகம் இல்லை,அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்னும் கோட்பாட்டினால் எனக்குள் சில கேள்விகள் எழுந்தன. அவைகளை இங்கே பதிக்கிறேன். கோவை பெரியன்ஸ் தளத்திலுள்ளவர்கள் மற்றும் சகாயம் போன்றோர் பதில்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
#அப்படியானால் சுவிஷேசம் ஏன் சொல்ல வேண்டும்?
#ஏன் தேவனுக்கு கீழ்ப்படிதலுள்ள,பிரியமான வாழ்க்கை வாழ வேண்டும்?அவரவர் தன் இஷ்டப்படி வாழலாமே, முடிவு ஒன்றுதானே?
#பவுல், பேதுரு போன்றோர் கிறிஸ்துவினிமித்தம் ஏன் இரத்தசாட்சியாக மரிக்க வேண்டும்?
#கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தினால் என்ன பலன்?ஏன் அவரை விசுவாசிக்க வேண்டும்?
#ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்?
#ஏன் வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் தேவன் ஏழு சபைகளையும் எச்சரிக்க வேண்டும்?
#கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மட்டும் எழுதி புதிய ஏற்பாட்டை முடித்திராமல் நிருபங்களும் ஏன் இருக்க வேண்டும்?
#உங்கள் கோட்பாடுகளை நம்பாதவர்களுக்கும் நரகம் இல்லை, இரட்சிப்பு உண்டு. அப்படியிருக்க இந்த கோட்பாட்டிலிருக்கும் நீங்கள் ஏன் உங்கள் கருத்துக்களை இவ்வளவு சிரமம் எடுத்து மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும்?
-- Edited by ebi on Friday 18th of March 2011 04:02:23 PM
// கடவுள் சிருஸ்டிதவரை உருவகம் செய்ய "ஞானம்" என்ற பதம் பயன்படுத்தி இருக்கையில், அது உண்மையில் தம்முடைய மனித வாழ்க்கைக்கு முன்னாள் ஆவி சிருஷ்டியாக இருந்த இயேசுவுக்குச் சொல்லணியென அறிஞ்சர் பெரும்பான்மையர் ஒப்புக்கொள்கின்றனர். அடுத்து இந்த பதிவுகளுகயான மேலதிக தகவலை பெற என் நண்பர் தேநீர் பூக்கள் எழுதிய பிரதான தூதனாகிய மிகாவேல் யார் ? என்ற திரியில் மிக அழகாக விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. //
இந்த ஆட்களை "முட்டா பய புள்ளைங்க" என்றோ "முட்டா கழுதைங்க" என்றோ குறிப்பிடக்கூட அச்சமாக இருக்கிறது;ஏனெனில் இவர்களில் பெரும்பாலானோரின் பெற்றோர்கள் நல்ல விசுவாசிகள் ஆவர்;கழுதைகளோ தேவ மகிமையை உணர்ந்து தூதனுக்கும் மற்றவனுக்கு வித்தியாசத்தை அறிந்தவையாக வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது; ஏன் இவைகளை குறிப்பிடுகிறேன் என்றால் நேற்று என் மனதில் ஒரு சிறு நெருப்பாக எழுந்த கேள்வியே இதற்குக் காரணம்;அதனை இங்கே குறிப்பிடுகிறேன்,(மேசியாவின்) எதிரிகளில் யார் வேண்டுமானாலும் இதற்கு பதில் சொல்லட்டும்....
இயேசுவைக் குறித்து பழைய ஏற்பாட்டில் ஞானம் என்று குறிப்பிட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்;அதனை அப்படியே முழுவதுமாக ஏற்றுக்கொண்டாலும் ஞானம் என்பதை யாராவது சிருஷ்டிக்கமுடியுமா, அப்படியானால் ஞானம் என்பது சர்வவல்லவரிடமே இல்லாதிருந்த ஒரு காலம் இருந்திருக்குமா? ஞானம் என்பதே யெகோவா தேவனின்சிறப்பாக இருக்குமானால் அந்த ஞானமே இயேசுவாக இருந்தால்- அவரே யெகோவா தேவனாகவும் அவரில் ஒரு பாகமாகவும் இருந்தால் -அதனை இவர்கள் எப்படி எதிர்த்து எழுதவோ இயங்கவோ முடியும்? விவரிக்க இயலாத ஞானம் எனும் பொக்கிஷத்துக்கு மேலான ஞானம் என்பது இருந்ததா,அந்த ஞானம் இன்னொரு ஞானத்தை சிருஷ்டித்து அதன் உதவியுடன் இந்த உலகத்தை சிருஷ்டித்த சிருஷ்டியான இயேசுவாகி விட்டதா?
இந்த ஆட்களுடைய புரட்டுகளை எனது அருமை வாசகர் வட்டத்தார் அறிந்து கொள்ளவேண்டுமென்றே அவர்களுடைய தொடுப்புகளுடன் எழுதிவருகிறேன்; எனவே இந்த திரியில் அருமை நண்பர் ஜாண் மற்றும் கோல்வின் ஆகியோர் எழுதிவரும் கருத்துக்களுக்கு பின்னணியிலுள்ள கட்டுரை எதுவென்று தெரியாமல் திணறும் வாசகர்கள் தொடுப்பைத் தொடர்ந்து சென்று முழு முட்டாள்களின் முழு விவரங்களையும் வாசித்தறிய வேண்டுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இவர்கள் எழுதுவதைப் பார்த்தால் வயிறு குலுங்க சிரிக்கலாம். அந்த அளவுக்கு மடமை பரவியிருக்கிறது. இவர்களின் எழுத்துக்களை வாசிக்கும் ஒருவருக்கு கிறிஸ்தவம் ஒரு பபிலோனிய பதம் என்று விளங்கிவிடும். அவ்வளவுக்கு தேவதூஷணமாக எழுத முடியுமா அத்தனையும் கச்சிதமாக செய்து வருகிறார்கள். இவர்களின் மடமைகளை தோலுரித்துவரும் சகோ. ஜோன் மிகவும் பாராட்டுக்குரியவர்.
இருப்பினும் இப்போதாவது ரசலின் மாணவர்கள் என்று ஒத்துக்கொண்டார்களே. சகோ. சில்சாம் இந்த வாக்குமூலத்திற்காகதானே இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தார்.
சகா. ஜோன் உங்கள் விவாதங்கள் ஒவ்வொன்றும் அவர்களின் தலையில் இடியாக இறங்குகின்றது. தேவன் உங்களை வல்லமையாய் பயன்படுத்தி வருகிறார். இதற்காக நான் தேவனைத் துதிக்கிறேன்.
-- Edited by colvin on Thursday 17th of March 2011 08:52:25 AM
// உதாரணமாக இரஸல் என்பவர் ஒரு அமாவாசை இரவில் மிரண்டு எழுந்து உட்கார்ந்து வேதாகமத்தை ஆர்ர்ர்ராய்ய்ய்ச்ச்சீ....செய்கிறார்; அவருடன் ரெண்டு கைத்தடி(யர்)கள் சேருகிறார்கள்; வித்தியாசமானதைப் பேசுவோர் பின்னால் எல்லோருக்கும் கூட்டம் சேருவதைப் போலவே இவருக்குப் பின்னாலும் கூட்டம் சேருகிறது;நன்றாகக் கூட்டம் சேர்ந்ததும் கோதுமை வியாபாரம் செய்கிறார்;பெரும்பணம் சேருகிறது;பற்பல வெளிப்பாடுகளை அறிவிக்கிறார்;என்ன,வெளிப்பாடு என்று சொல்லாமல் கூட்டி கழித்து கால்குலேட் செய்து அறிவிக்கிறார்;அனைத்தும் மோசடி மோசடி மோசடி ச்ந்தி சிரித்த மோசடிஇராஜா மாதிரி வாழ்க்கை வந்து வாய்க்கிறது; ஹோமோசெக்ஸ் போன்ற சின்னத்தன்மான குற்றங்களிலும் விவாகரத்துபோன்ற சாதாரண வழக்குகளிலும் சிக்கி தரமிழக்கிறார்; அவருடைய காலத்துக்குப் பிறகு அனைத்து மார்க்கபேதக் குழுக்களைப் போலவே இதிலும் பிளவு ஏற்படுகிறது;வேகமாக உடைந்து கொண்டே வந்த இந்த இயக்கமானது இறுதியில் யாருக்கும் யாரும் அடங்காத தாந்தோன்றி குழுக்களாக உருமாறி சிதைந்து ரெண்டு அல்லது மூணு பேர் எங்கே கூடினாலும் அங்கே ஒருத்தர் இருப்பேன் என்றாரே அவருக்கு பதிலாக தானே இருக்க விரும்பி தலையில்லாத முண்டங்களாக எங்கும் சுற்றித் திரிகிறார்கள்;இவர்களிடம் விசுவாசிகள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.. //
அன்பு சகோ. சில்சாம் உங்கள் ஆதரவுக்கும், உற்சாகத்திற்கும் நன்றி. நீங்கள் மேலே சொல்லயுள்ளது போலத்தான் எல்லா "Cult" ம் உருவானது. புரட்டர்களை துரத்துவது, வஞ்சிக்கப்பட்ட ஆத்துமாகளை மீட்பது, ஆத்துமாக்கள் வஞ்சிக்கப்படாமல் காப்பது ஒரு உன்னத அ(உ)ழைப்பு, ஊழியம் அதை நாம் எல்லாரும் செய்யவேண்டும். செய்வதற்கு ஒரு "Platform" அமைத்து தந்ததற்கு நன்றி.
இவர்களின் மோசடி வேதாகமொழிபெயர்ப்பு குறித்து எழுத வேண்டும். (அவற்றை பின்னர் தனிப்பதிப்பாக பார்ப்போம்)ஆயினும் நாம் இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் ஒன்று உள்ளது. Highlight ஆன விடயம் என்னவெற்றால் இவர்கள் பலமொழிகளில் வேதாகமத்தை வெளியிட்டுள்ளார்கள். ஒன்றுகூட இன்னொருக்கு முரண்படுவதில்லை. தமிழிலும் வெளிவந்துள்ளது. இயேசுவிற்கு முன்னால் கர்த்தர் என்றிருப்பதையும் எஜமான் என்று மாற்றியுள்ளனர்.//
அன்பு சகோ. கொல்வின் கட்டாயம் எழுதுங்கள். இரசலின் குழந்தையான காவல் கோபுர (சாத்தான்) வேதத்தில் "Proskuneo" (முகம் தரையில் பட குப்புற விழுந்து பணிதல் அல்லது தொழுதல்) என்ற கிரேக்க வார்த்தை எங்கெல்லாம் பிதாவுக்கு வருகிறதோ அங்கெல்லாம் "Worship" என்றும் இயேசு கிறிஸ்துவுக்கு வருகிறதோ அங்கெல்லாம் "Homage" என்றும் புரட்டியிருகிறார்கள்.
சரி கிழே கொடுக்கப்பட்ட தொடுப்பில் சென்று வாசிக்கவும். ஹிந்து புரானங்களில் (Persians or Bobylonians are the ones who brought Idol worship to India) உள்ள நிங்கள் சொல்லும்பாபிலோனியர் கதைக்கும் உள்ள ஒற்றுமை தெரியும்.