அன்று எகிப்த்திலிருந்து தேவன் இஸ்ராயேல் மக்களை மோசேயின் தலைமையில் கூட்டி வந்தார். மக்களுக்கு மாமிசம் தேவைப்பட்டபோது மோசேயிடம் முறையிட்டார்கள். தேவன் அவர்களின் பயனத்திற்கு பொறுப்பேற்றபடியால் அவரே காடைகளை பொழிந்தார்.
இன்று தேவன் தங்களை தொலைக்காட்சி மூலமாக ஊழியம் செய்யும் படி அழைத்தார் என்று சொல்லிக்கொண்டு மக்களிடமே அதற்கு உண்டான பணத்தை எதிர்ப்பார்க்கிறார்கள். தேவனே அவர்களிடம் இப்படி ஒரு ஊழியத்தை கொடுத்திருந்தால் அன்று மோசேயின் தலைமையில் இஸ்ராயேல் மக்களுக்கு தேவன் காடையை பொழிந்தது போல் இன்று சுயமாக தங்களை ஊழியர்கள் என்று உயர்த்தி தேவன் பெயரில் இவர்கள் ஆடம்பரமான டீ.வி நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவன் வானத்திலிருந்து பணத்தை வருஷிக்க மாட்டாரோ. அப்பாவி கிறிஸ்தவர்களை தேவனின் பெயரை சொல்லி ஆடம்பரமான டீ.வி நிகழ்ச்சியின் மூலம் தான் ஜனங்களை இரட்சிப்பிற்குள் நடத்த முடியுமா அதுவும் இவர்களிடமே பணத்தையும் கேட்டு. அதாவது வேத வசனங்களினால் இரட்சிக்கப்படாத மக்கள் இவர்களின் ஆடம்பர டீ.வி நிகழ்ச்சிகளின் மூலமாக இரட்சிக்கப்படுவார்கள் என்று இவர்களின் நினைப்பு.
கிறிஸ்தவ மக்கள் ஏன் இப்படி பட்ட டீ.வி ஊழியர்களிடம் கேள்வி எழுப்புவதில்லை? அன்று பவுல் போன்ற அப்போஸ்தலர்கள் கூடார தொழில் செய்து சுவிசேஷம் சொல்லி வந்தார்கள். இன்றோ இந்த நவீன ஊழியர்கள் (!!) ஆடம்பரமாக இருக்கைகளின் அமர்ந்து வேலை செய்யாமல் (பெரும்பாலுமானோர்) மக்களிடமிருந்து பணத்தை வாங்கி இவர்கள் தங்கள் பெயர் புகழ்சிக்காக சுவிசேஷம் என்று சொல்லி அதுவும் தேவன் இவர்களிடத்தில் இப்படி செய்ய சொன்னார்கள் என்று சொல்லி துனிகரமாக செய்து வருகிறார்கள்.
கிறிஸ்தவர்களே, காலம் கடைசியாக இருப்பதால், "இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக்கொண்டு அவரின் நாமத்தை சொல்லிக்கொண்டு "அநேகர்" வரும் காலமாக இருக்கிறது" மத். 24:24. ஆகவே இப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
நீங்கள் இதுபோல பேசுவதற்கும் மக்களை அவர்கள்தான் சேர்த்துக் கொடுக்கிறார்கள்; அதாவது மாறுபாடானவற்றைப் போதிப்பவர்கள் தங்களது களமாகக் கொண்டுள்ளது இதுபோன்ற இளம் விசுவாசிகளையே;
அவர்கள் ஏதோ தவறாகக் கேட்டு நிர்ணயித்துக் கொண்டதைப் போலவும் இவர்களே சரியானதைச் சொல்லி அவர்களைக் காப்பாற்ற வந்தது (ஓநாய்கள்)போல)வும் வேடமிடுவர்;
இவர்களிடமிருப்பது சரியான சரக்காக இருக்குமானால் இவர்கள் இதுவரை சுவிசேஷத்தை கேள்விப்பட்டிராதோரிடம் தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டவேண்டும்;
இன்றைக்கும் வெளிநாட்டு உதவிகளும் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தக விநியோகமும் பெறுவது மாறுபாடானவைகளைப் போதிக்கும் குழுக்களே;
இவர்கள் வெளிநாட்டுத் தொடர்பில்லாத தியாகிகளாக இருந்தால் மட்டுமே மற்றவரை குறை கூறமுடியும்;
சுவிசேஷத்தை பிரபல்யபடுத்த ஆவியானவர் பல வழிமுறைகளை பயன்படுத்துகிறார்;
மோசே கூட வானத்திலிருந்து காடைகளை வரவழைக்கவில்லை; அவனும் கூட ஆசரிப்பு கூடாரம் கட்ட மக்களிடமே அறிவித்தான்;தாவீதும் அப்படியே;
பவுலைத் தவிர வேறு யாரும் வேலை செய்து ஊழியம் செய்ததாக குறிப்பு இல்லை; பவுலும் கூட சுமார் இரண்டரை வருடம் மட்டுமே வேலை செய்தார்; பயணித்துக் கொண்டே இருக்கும் ஒரு நபர் நிரந்தர வேலை எதையும் செய்யமுடியாது;
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலிருந்து- குறிப்பிட்ட மக்களுக்கு குறிப்பிட்ட நோக்கத்துடன்- எழுதப்பட்ட நிருப வாக்கியத்தை பொதுவான தன்மையுடைய போதனையாகவோ,கொள்கையாகவோ கொள்ளமுடியாது;
சுவிசேஷப் பணியை முழுநேரமாக செய்தோரால் மட்டுமே கிறிஸ்தவத்தில் ஒவ்வொரு துறையிலும் அரும்பெரும் சாதனைகளைச் செய்யமுடிந்தது;
மேம்போக்காக, நுனிப்புல் மேயும் போக்கில், காழ்ப்புணர்ச்சியுடன் ஊழியர்களை விமர்சிப்பதைவிட்டு சத்தியத்தை மட்டுமே நாம் தியானித்தால் நல்லது;
அவர்களுடைய வாழ்நாள் சாதனையின் வயதைக் கூட எட்டாதோர் "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என எதையாவது பிதற்றுவதை (மாறுபாடானவற்றைப் போதிக்கும் துருபதேசக்காரர்கள்) தவிர்க்கவேண்டும்..!
soulsolution //ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலிருந்து- குறிப்பிட்ட மக்களுக்கு குறிப்பிட்ட நோக்கத்துடன்- எழுதப்பட்ட நிருப வாக்கியத்தை பொதுவான தன்மையுடைய போதனையாகவோ,கொள்கையாகவோ கொள்ளமுடியாது;
சுவிசேஷப் பணியை முழுநேரமாக செய்தோரால் மட்டுமே கிறிஸ்தவத்தில் ஒவ்வொரு துறையிலும் அரும்பெரும் சாதனைகளைச் செய்யமுடிந்தது;//
வேதத்தின் எல்லா வசங்களுமே அப்படித்தான் மிஸ்டர் ஊழியர்வாள்! வேலை செய்யச்சொன்னால் அது யாருக்கோ சொன்னது; தசம பாகம் முதலான வசூலிக்கும் வசனங்கள் மாத்திரம் அப்பாவி 'விசுவாசி'களூக்கு, சூப்பர்மா? இப்படியே மெயின்டன் பண்ணீங்கன்ணா சீக்கிரம் முன்னேறிருவீங்ணா.
இயேசு கிறிஸ்து கிறிஸ்தவத்தில் ஒவ்வொரு துறையிலும்(?) அரும்பெரும் சாதனைகளை செய்யச் சொல்லவேயில்லை.அடுத்தவரிடம் உதைவாங்கியே சாவீர்கள் என்றுதான் சொன்னார். அதேதான் அப்போஸ்தலருக்கும், சபைக்கும் நடந்தது...