நம்முடைய (திருச்சபைகளின்) உள்கட்டமைப்புகளை பெலவீனப்படுத்தும் வண்ணமாக தொடர்ந்து செயல்படுவோரைக் குறித்து ஆராயும்போது அவர்களுக்குள் சில ஒற்றுமைகள் அல்லது சில சித்தாந்தங்கள் அவர்களை இணைத்து வைத்திருப்பதும் பெரும்பாலானவற்றில் அவர்கள் சமரசம் செய்துகொண்டு ஏதோவொரு கட்டாயத்தின்பேரில் பொருந்தா கூட்டணியாக இணைந்திருப்பதும் புரிகிறது. இன்று பின்வரும் தொடுப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு வசனத்தால் பழைய நினைவுகளை அசை போட்டதில் இவ்விரு காரியங்களும் பளிச்சிட்டது.
We can't do anything about it. People have different allergies. Some has OT allergy. My Heavenly Father-God is the same old OT God. So, I enjoy, honor, read, and respect OT.
2010 - ம் ஆண்டிலேயே துவக்கப்பட்டிருக்கும் திரிக்கும் இப்போது பகிரப்பட்டிருக்கும் செய்திகளுக்கும் என்ன ஒரு ஒற்றுமை தெரியுமா, தற்போது இவ்விரு வித்தியாசமான கும்பலும் தேவையற்ற காரியத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒருத்தர் ஏற்கனவே இயேசுவை மறுதலிக்கும் வேதப்புரட்டு கும்பலாக அறியப்பட்டவர். இன்னொருவர் (”ப்ளாக் ஷீப்” விஜய் ) தானும் திரித்துவ தேவனையே நம்புவதாக பெயருக்கு சொல்லிக்கொண்டு அவரையே மிஞ்சி ஆடிக்கொண்டிருப்பவர். இவ்விருவருடைய மதிகேடும் விரைவில் வெளிப்படும் என்பது நிச்சயம். எது உங்களையெல்லாம் இணைத்து வைத்ததே உங்கள் அழிவுக்கும் காரணமாகும் அப்போது அலறுவீர்கள்........!!!!!!!
< இதோ உங்கள் பார்வைக்காக அவர்களால் படைக்கப்பட்டிருக்கும் தந்திரமும் சூழ்ச்சியும் பொதிந்ததொரு கட்டுரை...இவர்களைவிட பொதுவுடைமைவாதிகளே மேலானவர்கள். இன்னும் மாவோயிஸ்டுகள் கூட அழகாக பேசி தேசத்தையே துண்டாட துடிக்கிறார்கள். >
புத்தாண்டு ஆராதனைகளில் சபைகளில் கடைப்பிடிக்கப்படும் வாக்குத்தத்த குலுக்கல் தவறு: அதற்கான எட்டுக் காரணங்கள் கீழே:
காரணம் #1
இது முழுக்க முழுக்க விசுவாசிகளைக் கவர்ந்திழுக்கப் பயன்படுத்தப்படும் வியாபாரத் தந்திரமேயன்றி வேறல்ல. முதலாவது ஜனவரி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அது ஜானஸ் என்ற ரோமானியக் கடவுளின் பெயராகும். இது God of Doors என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கதவுகளின் தேவனே புத்தாண்டுக்கான கதவைத் திறப்பதாக ரோமானியர் நம்புகிறார்கள். உலகம் இக்காலண்டரை ஏற்றுக்கொண்டதால் நாமும் இதை பின்பற்றும் நிர்பந்தத்துக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம் அவ்வளவே! இக்காலண்டரைப் பின்பற்றுவது பாவமல்ல ஆனால் தேவன் தனக்குரிய காலங்களில் செயல்படுபவர். நாம் பயன்படுத்தும் ஆங்கிலக் காலண்டரை வைத்துத்தான் அவர் தனது வருடாந்திரத் திட்டங்களைப்போட்டு நமக்கு அவற்றை வாக்குத்தத்தமாகக் கொடுக்கிறார் என்று ஒருவர் நம்புவது எத்தனை மதியீனம்!!! அது தேவதூஷணமேயன்றி வேறல்ல கர்த்தரை ஆங்கிலக் காலண்டருக்குள்ளோ, தமிழ்க்காலண்டருக்குள்ளோ, சீனக் காலண்டருக்குள்ளோ அடக்க முடியாது.
காரணம் #2
ஒரு புதிய ஏற்பாட்டு விசுவாசி நேசிக்க வேண்டிய ஏங்க வேண்டிய வாக்குத்தமெல்லாம் பாவத்தை மேற்கொள்ளுவது பற்றிய, நித்திய வாழ்வு பற்றிய வாக்குத்தத்தங்களே! பூமிக்குரிய ஆசிகள் அல்ல. கிறிஸ்துவின் மணவாட்டியின் இருதயத்தை உலகப்பொருளுக்கு நேராகத் திருப்பக்கூடாது. அப்படித் திருப்புவது ஒரு குடும்பப் பெண்ணை விபச்சாரியாகுவதற்குச் சமம். எபிரேயர் 11,12 அதிகாரங்களில் வாக்குத்தத்தங்களைக் குறித்து பேசும் பவுல் நாம் அடைய வேண்டிய நித்திய இராஜ்ஜியத்தின் காரியங்களைக் குறித்தே பேசுகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். நாம் இவ்வுலகத்துக்குரியவர்கள் அல்ல. அதற்காக தேவன் நம்மைப் பொருளாதாரத்தில் உயர்த்தவே மாட்டார் என்று நான் சொல்லவில்லை. நமது இருதயம் அதைப்பற்றிப் போகக்கூடாது என்பதே பிரதான நோக்கம். புத்தாண்டில் கொடுக்கப்படுபவையெல்லாம் பூமிக்குரிய ஆசீர்வாதங்களே!
காரணம் #3
வேதத்திலுள்ள எந்த வாக்குத்தத்தையும் பற்றிக்கொண்டு ஜெபிக்கும்போது, அதனை நமக்கு நிறைவேற்ற தேவன் சத்தியமும், நீதியுமுள்ளவராயிருக்கிறார். அதன்படி வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்ள விசுவாசிகளை பழக்குவிக்கும் நோக்கில்தான் சபைகளில் புத்தாண்டு வாக்குத்தத்த குலுக்கல் செய்யப்படுகிறது என்ற ஒரு வாதம் சில சகோதரர்களால் முன்வைக்கப்படுகிறது. அது தவறு ஏற்கனவே சுயநல சேற்றில் உழலும் விசுவாசிகளை அதை விட்டு தூக்கி எடுத்து பிறருக்காகவும் ஜெபியுங்கள் என்று அவர்களைப் பக்குவப்படுத்துவதே கடினமாயிருக்கும் வேளையில், அவர்களை தனது ஆசீர்வாதத்தைச் சுதந்தரிக்கப் பழக்குவிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்கள் 24 மணி நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். சுயத்தை வெறுத்தல் என்ற காரியத்தை முழு கிறிஸ்தவ உலகமும் மறந்துவிட்ட சூழலில் அதில்தான் ஜனங்களைப் பழக்குவிக்க வேண்டுமே தவிர இதில் அல்ல.
காரணம் #4
இது நமது விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு இது துளியும் உதவாது. உதாரணமாக “நீ மாம்சத்தின்படி பிழைக்க இனி மாம்சத்துக்கு கடனாளி அல்ல” என்ற பழைய ஏற்பாடு காணாத மாபெரும் வாக்குத்தத்தம் புத்தாண்டில் தனக்குக் கிடைத்தால் ஒரு விசுவாசி முகம் சுழிப்பான், (இதை எந்த சபையும் வாக்குத்தத்த சீட்டுகளில் எழுதமாட்டார்கள் என்பது வேறு விஷயம்) காரணம் அவன் எதிர்பார்த்தது அது அல்ல. அதே வேளையில் “உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன்” என்ற வாக்குத்தத்தம் கிடைத்தால் துள்ளிக் குதிப்பான் தனக்கு இவ்வாண்டு வேலையில் Promotion கிடைக்கப் போகிறதென்று. விசுவாசிகளில் உலக சிநேகத்துக்கு தீனிபோடும் முயற்சியே இந்த வாக்குத்தத்த குலுக்கல்.
காரணம் #5
ஒரு வாக்குத்தத்தத்தை தேவன்தான் ஒரு விசுவாசியிடம் அவரே விரும்பி தனிப்பட்ட விதத்தில் தரவேண்டுமே தவிர, அவரிடத்திலிருந்து நாமாகவே பிடுங்கக் கூடாது. நாமாகவே எழுதி நாமாகவே குலுக்கி நாமாகவே எடுத்துக் கொள்வது எப்படி ஆவிக்குரியதாகும்? இயேசுவோ அப்போஸ்தலரோ இம்முறையை போதிக்க வில்லையே!
காரணம் #6
இது ராசிபலன் பார்ப்பதைவிட விட மோசமானது. சபைக் கூடுகை தேவனிடம் குறிகேட்கும் இடமல்ல. நம்மை பலியாக ஒப்புவிக்கும் இடம். ஒருவேளை குலுக்கல் வாக்குத்தத்தம் நிறைவேறாத பட்சத்தில் ஜனங்கள் முறுமுறுத்து தேவனைவிட்டு விலகவும் வாய்ப்புண்டு. இதற்கு தேவனோ அந்த விசுவாசியோ பொறுப்பல்ல. ஜனங்களை கவர்ந்திழுக்க இந்தத் தந்திரத்தைக் கையாண்ட சபையே பொறுப்பு.
காரணம் #7
நாம் தேவனிடத்தில் போனாலே அவர் ஏதாவது ஒன்றைக் கொடுப்பார் என்ற மனநிலை அவரை வேதனைப்படுத்தும் விஷயமாகும். நமது பிள்ளைகள் அதே மனநிலையோடு நம்மை அணுகினால் அது எவ்வளவு நம்மைப் புண்படுத்தும்! எனக்கு வேறு எதுவுமே வேண்டாம் இயேசு போதும் என்று இருக்கும் ஒரு விசுவாசி இம்மாதிரியான எந்த வாக்குத்தத்தத்தையும் எதிர்பார்க்கமாட்டான்.
காரணம் #8
புத்தாண்டு ஆராதனைகளில் தேவனைத் தொழுதுகொள்ளுவது, சகோதர, சகோதரிகளோடு ஐக்கியம் கொள்ளுவதை விட “வாக்குத்தத்த குலுக்கல்” வேளையையே விசுவாசிகள் ஆவலாய் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால் நானும் அப்படித்தான் இருந்தேன். இந்த வாக்குத்தத்த சீட்டு மாத்திரம் தரப்படாவிட்டால் பாதிப்பேர்புத்தாண்டு ஆராதனைக்கு வராமல் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்க்க டி.வியில் உட்காந்து விடுவார்கள். அல்லது தூங்கிவிடுவார்கள். ஆராதனையைத் தவறவிட்டுவிட்டால் வாக்குத்தத்தம் பறிபோய்விடும் என்ற எண்ணம்தான் பலரை பதறியடித்துக்கொண்டு சபைக்கு வரவைக்கிறது. இது பாஸ்டருக்கும் தெரியும் தேவனுக்கும் தெரியும்.
அனேகமாக எல்லா கிறிஸ்தவ பிரிவுகளாலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ல் தவறாமல் கடைபிடிக்கும் "புதுவருட வாக்குத்தத்த" முட்டாள்தனம் கண்டிப்பாக இவ்வருடமும் இருக்கும். யாருக்கோ எப்போதோ கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை தங்களுக்கு என்று எண்ணவைத்து வசன வியாபாரம் செய்வது வழக்கமாகிவிட்டது. சென்றவருடம் "களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்" என்ற வாக்குத்தத்தம், இந்த வருடம் "உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்" என்ற வாக்குத்தத்தம். ஆக சென்றவருடத்தில் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பியதால் ஏற்பட்ட துக்கம் இவ்வருடம் சந்தோஷமாக மாறும் என்றுதான் அர்த்தமாகும். சபைக்கு ஒரு வாக்குத்தத்தம், தனிநபருக்கு ஒன்று, குடும்பத்துக்கு ஒன்று என்று இதில் ஏகப்பட்ட பிரிவுகள் வேறு.
இவ்வருடமாவது திருந்துவோமா?
My reply: 23:50:28 Dec 17, 2009
உலக வழக்கில் சொல்கிறேன், இறைவனைப் பழிப்பவன் வாயில் "மண்ணைப் போடு" என்றானாம், ஒரு பக்தன்; அவனை விட தீவிர பக்தன் சொன்னானாம், "அந்த மண்ணும் பக்தர்களின் பதம் பட்டு புனிதமாக இருக்கும்; அதை அவன் வாயில் போடுவதால் புனிதமடைந்து அந்த பாவி கடைத்தேறிவிடுவான், அவன் நாக்கு புழுத்து போவதாக" என்று சபித்தானாம்;
கர்த்தருடைய வார்த்தையைக் கேட்காமல் கெட்டவர்களுண்டு; அதனைக் கேட்டு விசுவாசித்தோர் கெட்டதாக வரலாறு இல்லை; புதிய விசுவாசிகளுக்கும் வளரும் விசுவாசிகளுக்கும் ஒரு கருப்பொருளுடன் கூடிய வாக்குத்தத்தத்தை வருட ஆரம்பத்தில் தருவதில் என்ன தவறு?
ஞானமான போதகர்கள் பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களிலிருந்து தீர்க்கதரிசன செய்தியை தியானித்துப் போதித்து தங்கள் சபையினை கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படுத்துவர்;
மேலும் தன்னிடம் வரும் விசுவாசிக்கு கர்த்தருடைய பீடத்திலிருக்கும் ஊழியன் அவர் சார்பான வாக்கையும் எச்சரிப்பையும் தருவது அவனது கடமையாகும்; கற்பனையான சொந்த வாக்குகளைச் சொல்வதைவிட ஏற்கனவே சொல்லப்பட்ட வாக்குகளை நினைப்பூட்டுதலாகச் சொல்வது நன்மையே பயக்கும் என்பது எனது கருத்து.