Dear Santhosh..,தயவுசெய்து.. தயவுசெய்து.. மீண்டும்.. மீண்டும்.. கேட்கிறேன், தங்களைப் பற்றியும் தங்கள் விசுவாசத்தைக் குறித்தும் தாங்கள் மேற்கோள் காட்டும் புதினமான காரியங்களைக் குறித்த தொடுப்பும் (link) அவசியம் அறியத் தருக...நன்றி...!
மேலும் என்னைப் போன்று நேரடி கலந்துரையாடல் மற்றும் விவாதங்களில் சிக்கிக் கொள்ளாமல் தாங்கள் அறிந்ததை நேர்த்தியாக பதிக்கும் பாங்கினைக் கண்டு அகமகிழ்கிறேன்;வாழ்த்துக்கள்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நான் இந்த கட்டுரையை இரண்டு நாள் முன்பே எழுதி முடித்தேன். இன்றுதான் போஸ்ட் செய்ய முடிந்தது. இதே கருத்தில் சகோதரர் சில் சாம் அவர்களும் எழுதியிருப்பது எதிர்பாராத ஒன்றாகும்.
மனிதன் மரணத்துக்கு பிறகு நரக அக்கினியில் வாதிக்கபடாமல் இருக்க இயேசுவை ஏற்று கொள்ள வேண்டும் என அனேகர் போதிக்கின்றனர். இறப்புக்கு பிறகு நரகம் இல்லை புதிய பூமியே (அதுவும் அனைவருக்கும்) என சில பிரிவுகள் அதே வேதாகமத்தை காட்டி போதிக்கின்றனர். அது போலவே இயேசுவை ஏற்று கொண்டவர்கள் பரலோகம் போகின்றனர் என்றும் சிலர் போதிக்கின்றனர். (அதற்கான வசனம் வேதத்தில் இல்லை என்பது வேறு விஷயம்) இயேசுவை ஏற்று கொண்டவர்களும் நியாயத்தீர்ப்பு நாள் வரும் வரை பாதாளத்தில் இருக்க வேண்டும் என வசனங்கள் வெளிப்படையாக சொல்லாமல் கொஞ்சம் மூடி மறைத்து சொல்லுகின்றன.
இவ்வாறு மரணத்துக்கு பிறகு ஒரு மகிழ்ச்சியான வாழ்வுக்கு எல்லா மதங்களுமே ஒவ்வொரு வழியை சொல்லுகின்றன. இன்று மற்ற மக்களை இயேசுவிடம் சேர்க்க அனேகர் கேட்கும் கேள்வி இறப்புக்கு பின் உங்கள் நிலை என்ன? என்பதே. இதுவே இன்றைய கிருத்துவத்தின் முக்கிய போதனையாகும்.
இத்தகைய ஒரு கேள்வியின் மூலமும், இறப்புக்கு பிறகு நித்திய வாழ்வுக்கு ஆசைப்பட்டும் எத்தனை பேர் இயேசுவை ஏற்று கொண்டார்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவானர்களே
என்று தெரிய வரும். அதிலும் பெரியார் தாசன் போன்றவர்களுக்கு இந்த கேள்வி வந்து அவர்கள் இஸ்லாமியராக மாறி விடுகின்றனர்.
அப்படியானால் இயேசுவை ஏற்று கொண்ட அனேகர் ஏன் அவரை ஏற்று கொண்டார்கள் என ஆராய்ந்தால் அவர்கள் அற்புத சுகம், அசுத்த ஆவியிலிருந்து விடுதலை, பில்லி-சூனிய கட்டுகளிலிருந்து விடுதலை, மன நிம்மதி, தற்கொலை எண்ணத்திலிருந்து விடுதலை, ஒரு கிருத்துவர் தனக்கு செய்த உதவி, அவர் தனக்கு தந்த ஆறுதல் போன்ற காரணங்களால் என தெரிய வரும். ஒரு ஊழியர் இவ்வாறாக சொன்னார். ஒரு புண்ணியவான் என் தாத்தாவுக்கு சூனியம் வைத்தான் அதனால் நாங்கள் இயேசுவை ஏற்று கொண்டோம் என்று.
மனிதர்கள் வாழ்வில் நாளை என்பது முக்கியமானதன்று. இன்று, இப்போது என்பதே முக்கியமானது. இயேசுவை ஏற்று கொண்டவர்களும் அவர்களுக்கு நெருக்கடி வந்த கால கட்டத்தில் அவர் செய்த உதவிக்காகவே அவரை ஏற்று கொண்டவர்கள். கிருத்துவம் என்பது மனிதனின் நாளை சம்பந்தப்பட்ட மார்க்கம் அல்ல. அது இன்று, இப்போது மனிதனின் பிரச்சனைகளுக்கு வழி சொல்லும் மற்றும் இன்று, இப்போது தேவனோடு இணைய வழி சொல்லும் மார்க்கமாகும்.
தேவனின் மேல் பக்தி கொண்ட அனேக தேவ மனிதர்கள் பரலோகத்துக்காகவோ அல்லது நரகத்திலிருந்து தப்பிக்கவோ அல்லது அவர் அளிக்கும் நன்மைகளுக்காகவோ அவரை தேடாமல் அவருக்காகவே அவரை தேடினார்கள். தேவனே அவர்களுக்கு போதுமானவராக இருந்தார். இதனால்தான் அவர்களுக்கு சோதனை, துன்பம்வந்த காலங்களிலும் அவர்கள் தேவனோடு இணைந்து இருக்க முடிந்தது. அவர்கள் நாளைய தினத்துக்காக தேவன் மேல் அன்பு செலுத்தியிருப்பார்கள் எனில் துன்பம் வந்த காலத்தில் நொறுங்கி போயிருப்பார்கள்.
நாளைய தினம் புதிய பூமியிலா, பரலோகத்திலா, பாதாளத்திலா அல்லது நரகத்திலா என்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அவர்களுக்கு தேவையானது தேவனுடைய பாதங்களே அதிலேயே அவர்கள் திருப்தியடைந்தனர். மேலும் நாளைய தினம் என்பது ஒருபோதும் வராதது. வந்தால் அது இன்றாகி விடும். கண்ணுக்கு தெரியாத நாளை எங்கே என்று யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் வாக்கு பண்ணலாம். ஆனால் தேவன் இன்றே, இப்போதே பக்தி செலுத்த இருப்பவராயிருக்கிறார்.
வேதத்தில் சில தேவ மனிதர்களின் வாழ்க்கையை பற்றி பார்ப்போம்.
இவர்கள் மூவரும் கூட மற்ற மக்களை போலவே நினைத்திருந்தார்கள். இறந்த பிறகு தேவன் தங்களை நரக அக்கினியிலிருந்து காப்பாற்றுவார் என்று. ஆனால் இவர்களுக்கு நடந்ததோ தலைகீழ். தேவனை வேண்டினால் நரக அக்கினியிலிருந்து விடுதலை என்று இருக்க, தான் நிறுத்திய சிலையை வேண்டாமல் உண்மையான தேவனை வேண்டினால் நரக அக்கினி என்று இராஜாவால் சொல்லப்பட்டது.
15. இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.
இவர்களுக்கு காத்திருந்ததோ இராஜ வாழ்க்கை. அதை கர்த்தருக்கென்று வைராக்கியமாக ஒதுக்கி தள்ளினவர்கள். எப்போதும் இவர்கள் தேவனோடே சஞ்சரித்து கொண்டிருந்தவர்கள். தேவன் இவர்கள் உடலிலும், உயிரிலும் கலந்திருந்தார். கர்த்தர் தங்களை காப்பார் என திடமாக நம்பினார்கள்.
அப்படி அவர் காப்பாற்றாவிட்டால் என்ன செய்வாய் என்ற சாத்தானின் நியாயமான, கரிசனையான கேள்வியை ஒதுக்கி தள்ளாமல் அதற்கும் அவர்கள் பதிலை வைத்திருந்தனர்.(சிலர் இந்த கேள்வியை ஒதுக்கி தள்ளி பின்பு கடவுள் இல்லை என்று அதை நிரூபிக்க போராடி வருகின்றனர் அல்லது இயேசுவை குறை சொல்கின்றனர்)அவர்களின் பக்தியை கண்டு சாத்தானே வியந்து போனான்.
16. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக்குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. 17. நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்; 18. விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.
இறந்த பிறகு இல்லை நரக அக்கினி இப்போதே. அவர்கள் கண்களுக்கு முன்பாகவே நரக அக்கினி வளர்க்கப்பட்டது. அதுவும் ஏழு மடங்கு சூடாக்கப்பட்டது. இவர்களை அக்கினியில் போட சென்றவர்கள் அதன் அருகில் போகாமலேயே பற்றி எரிந்தனர். ஒருவழியாக அவர்கள் மூவரும் அக்கினியில் தூக்கி வீசப்பட்டனர்.
19. அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாணரமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து, 20. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான். 21. அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின்நடுவிலே போடப்பட்டார்கள். 22. ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினிஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது. 23. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.
இவர்கள் எப்போதும் தேவனோடு சஞ்சரித்து கொண்டிருந்தவர்கள் ஆகையால், இவர்கள் போகும் இடமெல்லாம் தேவனும் கூடவே போக வேண்டியதாயிருந்தது. இவர்கள் அக்கினியில் தூக்கி வீசப்பட்ட போது வேறு வழியில்லாமல் தேவனும் அவர்கள் கூடவே அக்கினியில் இறங்கினார். அவர்களோடு கூட அக்கினியில் இறங்கின தேவன் அவர்களின் மேல் அக்கினியின் மணம் கூட வீசாமல் பாதுகாத்தார். அந்த அக்கினியிலும் அவர்கள் தேவனுடைய குளுமையை அனுபவித்தனர்.
24. அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள். 25. அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
26. அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள். 27. தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.
இத்தகைய ஒரு இக்கட்டான நிலைமை அவர்களுக்கு வந்த போதிலும் அவர்கள் அதற்கென சிறப்பு ஜெபம் எதையும் ஏறெடுக்கவில்லை என்பது கவனிக்கதக்கது. ஏனெனில் அவர்களின் வாழ்க்கையே ஜெபமாக இருந்தது.நம் வாழ்க்கையிலும் சில நெருக்கடியான நிலை வ்ரும் போது ஜெபிக்க நேரமும் இருப்பதில்லை அல்லது ஜெபிக்கவும் முடிவதில்லை.
இவர்களின் சாகாத நிலை கண்டு இராஜா இவர்களின் தேவனே மெய்யான தேவன் அவருக்கு எல்லா மக்களும் பயப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்தான். இந்த மூவரும் தங்கள் பக்தியினால் ஒரு நகரத்தையே தேவ மகிமைக்கு சொந்தமாக்கினர். இப்படிப்பட்ட மூவர் எந்த தேசத்தில் இருந்தாலும் அந்த தேசம் தேவனை மகிமைப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இஸ்ரவேலர்களை மட்டுமே தேவன் தன்னுடைய மக்களாக அங்கீகரித்திருந்தபடியால் ராஜா எல்லா மக்களும் கர்த்தரையே வணங்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கவில்லை. ஆனால் எல்லா மக்களும் கர்த்தருக்கும் அவருடைய மக்களுக்கும் பயப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்தான்.
28. அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.
29. ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷண வார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப் பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான். 30. பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.
இந்த மூவரும் மனிதனின் பகுதிகளான ஆவி, ஆத்துமா, சரீரம் என வைத்துக் கொண்டால், நான்காமவர் பரிசுத்த ஆவியாவார். இவ்வாறாக ஒரு மனிதன் எல்லா வகையிலும் தேவனோடு இணைந்திருக்கும் போது அவனுக்கு நரக அனுபவத்துக்கு ஒப்பான ஒரு சோதனை வந்தாலும் அந்த சோதனையினால் அவன் எரிந்து போகாமல் அந்த நிலையிலும் தேவனோடு சந்தோசமாக இருப்பான். இப்படிப்பட்ட மனிதர்கள்
அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்
அது மட்டுமல்லாது இவர்கள் சிந்திய கண்ணீரினால், இவர்கள் அடைந்த சோகத்தால் இவர்களை போன்ற மற்றவர்கள் சிந்தும் கண்ணீரை துடைக்கவும், அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும் அவர்கள் உள்ளம் சந்தோஷம், சமாதானம் அடையவும் காரணமாயிருக்கிறார்கள்.
மழையும் குளங்களை நிரப்பும்.
சங்கீதம் 84.4. உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சேலா.) 5. உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும் தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். 6. அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும். 7. அவர்கள் பலத்தின்மேல் பலமடைந்து சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.