Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தெய்வீக சுகம் பெறும் வழிகள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: தெய்வீக சுகம் பெறும் வழிகள்..!
Permalink  
 


// நான் நாட்டுறிமையாக்கப்பட்ட வங்கியில் வேலை பார்க்கிறேன்! வேலை வெட்டி இல்லாமல் சாப்பிட்றவன் எல்லாம் எங்கள் வேலையின் யோக்கியத்தை சொல்ல தகுதியற்றவன்!  //

அப்படியானால் வங்கியில் வேலை பார்ப்பவன் அங்கே வருபவன் போகிறவன் எல்லாம் ரொம்ப நேர்மையானவன் என்று அர்த்தமா என்ன‌?
அதுவே பாபிலோன் சாம்ராஜ்யம் தானே அண்ணே..?

திருடனுக்கு காவல் நிற்பதற்கும் விபச்சாரிக்கு விளக்கு பிடிப்பதற்கும் எதாவது வித்தியாசம் இருக்கிறதா என்ன‌?

உங்க வங்கிக்கு வருபவனெல்லாம் யோக்கியன்,அந்த சம்பளம் இரத்தக்கறையில்லாதது என்ற தப்பெண்ணம் கொண்ட நீங்கள் முதலில் தெளிவடையவேண்டும்;நீங்கள் நல்ல ரோஷக்காரனாக இருந்தால் காட்டில் போய் மரம்வெட்டி வந்து அதை விற்றுப்பிழைக்கவேண்டும்;அதற்கும் காட்டிலாகா அனுமதி வேண்டும்;

ஏன் இதனைக் குறிப்பிடுகிறேன் என்றால் இந்த உலகில் எந்த தொழில் செய்தாலும் எப்படி பிழைத்தாலும் ஏதோ ஒரு வகையில் சிருஷ்டிகருடைய வாழ்க்கை அமைப்புமுறையான ஆதிநிலையிலிருந்து விலகியே இருக்கிறோம் என்பதை உணர்ந்தால் நல்லது.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

நான் எழுதியிருப்பதன் ஆழத்தையறியாத சில மூடர்களின் கூற்றுகளும் அதற்கு என்னுடைய பின்னூட்டமும் இங்கே யௌவன ஜனத்தின் கவனத்துக்கு...

bereans
:
தெய்வீக சுகம் என்றால் என்ன? இன்று இருக்கிறதா? யாருக்கு தெய்வீக சுகம்? அது என்ன அற்புத சுகம்? தேவ‌ன் அற்புத‌மாக‌ த‌ரும் ஒரு சுக‌ம், நோயிலிருந்து ஒரு தீர்வு தெய்வீக‌ சுக‌மாகும். இப்ப‌டி ப‌ட்ட‌ சுக‌ம் பெற‌ எந்த‌ ம‌னித‌னின் உத‌வியும் தேவை இல்லை, எந்த‌ ஒரு ப‌ரிந்துறையாள‌னின் துனையும் தேவை இல்லை. இப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு சுக‌ம் ம‌த‌ம் சாறாத‌ சுக‌ம். தேவ‌ன் த‌ன் பிள்ளைக‌ள் (அவ‌ர்க‌ள் எந்த‌ ம‌த‌த்தை சார்ந்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்தாலும்) அனைவ‌ரின் மேலும் க‌ண்ணோக்க‌மாக‌ இருப்ப‌தாக‌ தான் வேத‌ம் கூறுகிற‌து. அப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு மாபெரும் க‌ருனை நிறைந்த‌, அன்பு நிறைந்த‌ தேவ‌ன், கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் கூட்ட‌ங்க‌ளில் மாத்திர‌ம் அற்புத சுகம் த‌ருகிறார் என்றால், அது தவறான ஒரு பிரசங்கமாகும். இன்றும் தேவன் உலகில் உள்ள அனைவருக்கும் மத சாரா அற்புத சுகங்களையும், நண்மைகளையும் நாள் தோறும் செய்து வருகிறார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த தெய்வீக சுகத்திற்கும் மதத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

விசேஷ‌மாக‌ அப்போஸ்த‌ல‌ர்க‌ளுக்கு பிற‌கு அநேக‌ர் போய்ய‌ர்க‌ள் நாங்க‌ள் தேவ‌னிட‌த்திலிருந்து சுக‌ம் பெற்று த‌ருகிறோம் என்று வ‌ந்து போயிருக்கிறார்க‌ள். தேவ‌ன் ஒரு ம‌னித‌னின் வார்த்தைக‌ளை கேட்டு தான் ம‌ற்றும் ஒரு ம‌னித‌னுக்கு சுக‌ம் த‌ர‌வேண்டிய‌ நிலையில் இல்லை. அவ‌ர் அனைத்தையும் அறிவார். அவ‌ருக்கு க‌ட்ட‌ளையிட்டு சுக‌ம் பெறும் அள‌விற்கு ம‌னித‌ன் அவ‌ரைவிட‌ வ‌ல்ல‌மை அதிக‌ம் உள்ள‌வ‌ன் கிடையாது. க‌ட‌வுள் இல்லை என்று சொல்லுப‌வ‌ருக்கு கூட‌ தான் தேவ‌ன் சுக‌ம் த‌ருகிறாரே!

அற்புத சுகம் பெற்று தருகிறோம் என்று எல்லா மதங்களிலும் ஒரு கூட்டத்தார் இருக்க தான் செய்கிறார்கள், தங்களையே தேவனின் விசேஷமான ஆட்கள் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் இருப்பது உண்டு. தேவனிடம் யார் ஜெபித்தாலும், யார் கேட்டாலும், அவரின் சித்தத்திற்கு உட்பட்டு சுகம் தர அவர் வல்லவராக இருக்கிறார். இடையாட்கள் வேண்டாமே!!

soulsolution:
டி பி எம் என்றழைக்கப்படும் வெண்வஸ்திரம் தரிக்கும் ஒரு கிறிஸ்தவக்கூட்டம் (உள்ளாடைகள் கூட வெண்மைதானோ?) விசுவாசத்தின் நிமித்தம் நாங்கள் மாத்திரை மருந்து உபயோகிக்க மாட்டோம் என்று மார்தட்டுவார்கள். ஆனால் கண் குருடாக ஆரம்பித்தால் செக் பண்ணி குருட்டுக் கண்ணுக்கு விசுவாசத்தை நம்பாமல் கண்ணாடி போட்டுக்கொள்வார்கள். வீட்டில் பிரசவம் விசுவாசத்தினால் அதுவாகவே நடக்க விடமாட்டார்கள். அதற்கு மட்டும் மருத்துவமனை. இந்த முட்டாள்களை நம்பி ஏமாறும் கூட்டத்துக்கு அளவேயில்லை!


// அவன் இவன் என்கிற ஏகவசனத்தில் உங்களையா சொல்லியிருக்கிறோம். பவுல் பேதுரு போன்ற ஊழியக்காரார்களை (உண்மையான ஊழியர்கள் இவர்களே) இன்றைய சபை போதனைகளில் அவன் இவன் என்று தான் சொல்லுகிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. //

உங்கள் நண்பர் "ஆத்தும பிசின் " (soulsolution) அவர்களின் செயல்பாடுகளை நீங்கள் கண்டிக்காதபோதே அவர் பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளுக்கு நீங்களும் உடன்படுகிறீர்கள் என்று தெரிகிறதே; உங்களுக்கும் நடுநிலைக்கும் ரொம்ப தூரம் என்பதை நான் அறிந்தே இருக்கிறேன்;

நான் குறிப்பிட்டது பொதுவான நாகரிகத்தைக் குறித்ததான காரியமாகும்;அதனைப் புரிந்துக் கொள்ளும் விசாலமான இருதயமும் தங்களுக்கு இருப்பதுபோலத் தெரியவில்லை;ஏனெனில் காரண காரியத்துடனும் உதாரணத்துடனும் தங்கள் எழுத்துப்பிழையைச் சுட்டிக்காட்டியதற்கே நீங்கள் பொறுக்கவில்லையே;

நானும் கூட பெரிய தமிழ் புலவன் அல்ல;நான் அதிகமாக பத்திரிகைகளை வாசித்து வார்த்தை களஞ்சியத்தையும் பயன்பாட்டு முறைகளையும் சற்று அவதானித்துக்கொண்டேன்,அவ்வளவுதான்;மற்றபடி உங்களுக்கு ஆங்கிலம்,ஹிந்தி போன்ற மற்ற மொழிகள் தெரிந்திருக்கலாம்;அதில் நான் குறைவுபட்டே இருக்கிறேன்;

வேதத்தின் பரிசுத்தவான்களை அவன் இவன் என்று (தமிழ்) வேதமே குறிப்பிட்டு ஆண்டவரையோ உயர்த்தி குறிப்பிடுகிறது;அதனால் தற்கால சூழ்நிலையில் நம்மைச் சுற்றியுள்ள பெரியோர்களை அவன் இவன் என்று குறிப்பிடமுடியுமா?

ஆண்டவரை மரியாதையாகக் குறிப்பிடுவதுபோலவே எங்க ஊர் எம்மெல்லேவை (MLA) 'ஐயா அவர்கள் ' என நான் மரியாதையாகக் குறிப்பிட்டாலும் இங்கே சிந்தைக்குரிய பலனே கிடைக்கும்;

நம்ம ஜெயலலிதாவுக்கு வரும் கோபத்துக்கு கலைஞரை அதிகபட்சம்
"திருக்குவளை தீயசக்தி" என்று மட்டுமே இகழ முடிகிறது;

நீங்களும் உலகத்தானைப் போல மூர்க்கத்தனமாக சமூகத்தில் மதிப்பானவர்களை இகழ்ந்து பேசலாமா?

ஒருவருடைய கருத்தை விமர்சிப்பதற்கும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கும் வித்தியாசமுண்டல்லவா?

அவங்களெல்லாம் வந்து உங்க சோற்றில் மண்ணைப் போட்டார்களா அல்லது பேதுரு ஒருத்தன் காதை வெட்டியதுபோன்ற வரட்டு வைராக்கியம் பாராட்டுகிறீர்களா?

யோசியுங்கள்..!


// தேவ‌ன் த‌ன் பிள்ளைக‌ள் (அவ‌ர்க‌ள் எந்த‌ ம‌த‌த்தை சார்ந்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்தாலும்) அனைவ‌ரின் மேலும் க‌ண்ணோக்க‌மாக‌ இருப்ப‌தாக‌ தான் வேத‌ம் கூறுகிற‌து. //

வேதத்துக்கு விரோதமானதொரு கொள்கையை வைத்துக்கொண்டு இவர்களெல்லாம் எழுத வந்துவிட்டார்கள்;

Joh 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். (யோவான்.1:12)

Joh 10:35 தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத்  தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,

Joh 10:36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும்  இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?  (யோவான்.10:35,36)

மேற்கண்ட வாக்கியங்களின்படி எல்லோரும் பிள்ளைகளல்ல என்றாகிறது; இவர்களோ பாவம் இல்லை, நரகமும் இல்லை, மரணமுமில்லை, உயிர்த்தெழுதலுமில்லை என்று தானும் குழம்பி மற்றவரையும் குழப்பிக்கொண்டிருப்பதுடன் கீழ்த்தரமான தூஷண வார்த்தைகளை கிறித்தவ ஊழியர்களுக்கு விரோதமாக கட்டவிழ்த்துவிட்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் தங்களைக் கிறித்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்;

சத்தியத்தின்படி இவர்கள் கிறித்தவர்களல்ல, ஏனெனில் இவர்கள் கிறித்துவை தெய்வநிலையில் வைத்துத் தொழுபவர்களல்ல;அவர் மகா தேவனான யேகோவா எனும் சிருஷ்டி கர்த்தரால் பலியாகவே சிருஷ்டிக்கப்பட்டவர் எனும் கொள்கையுடையவர்கள்;அந்த இயேசுவும் கூட தேவனுக்கு சமமானவரல்ல,தேவனின் வேலையாளாகப் பழைய ஏற்பாட்டில் பணியாற்றிய மிகாவேல் தூதனே எனும் கொள்கையை உடையவர்கள்;

இதுபோன்ற துருபதேசக்காரர் அவ்வளவு சீக்கிரத்தில் முழு பொட்டலத்தையும் அவிழ்த்துக்காட்டுவதில்லை; மூடி மறைத்து மர்மமாகவே பேசுவார்கள்;நிறைய கேள்விகள் கேட்பார்கள்;அவை ஒவ்வொன்றும் புரட்சிகரமாகவும் மிக சவாலாகவும் இருக்கும்;நாமும் சத்தியத்துக்காக வைராக்கியமாக இருக்கிறார்கள் என்று இவர்களிடம் மயங்கியிருக்கும் வண்ணமாக‌ நரிகளைப் போல நம்மில் ஒருவரைப் போலத் தந்திரமாகப் பேசி பழகுவார்கள்;ஒருநாள் திடீரென ஓநாயாக அவதாரமெடுத்து இரத்தம் குடிக்க இரட்சிப்பையே சேதாரமாக்கி விசுவாசக் கப்பலைக் கவிழ்த்து வழக்கமான அனைத்து சபை ஐக்கியத்தின் மீதும் சலிப்பை ஏற்படுத்தி தனிமைப்படுத்துவதுடன் அவர்கள் பணி நிறைவடையும்.

இதுபோல அநேகர் இருந்தாலும் எனக்குத் தெரிந்து மூன்று பேரைக் குறித்து வைத்திருக்கிறேன்;அதில் முதலிடம் பெறுவது கோவை பெரியன்ஸ் எனும் வேதாகம மாண‌வர் குழுவினர்;
http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=1


இரண்டாவது நித்திய ஜீவன் எனும் கற்பனைகளைக் கைக்கொள்வதன் மூலம் மட்டுமே இரட்சிப்படைய முடியும் என்று போதிக்கும் பெரியவர்;
http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&p=1

மூன்றாவது சகல கனமும் மகிமையும் பொருந்திய அடிக்கடி ஆவியாவனவருடன் டூர் அடிக்கும் சுந்தர்.பீ
http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=1


இவர்களைக் குறித்து இன்னும் விவரமாக ஒரு ஆய்வு கட்டுரையினை விரைவில் சமர்ப்பிக்க முயற்சிக்கிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் மாயம் பண்ணி மறைந்திருந்து தாக்கும் இவர்களை விட வெளிப்படையாகவே தாக்கும் இஸ்லாமியரை கொஞ்சம் நம்பலாம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Tcs.Arputham:
// ஒரு சமயத்தில் எழுதுகிற எல்லார் மீதுமே ஒரு சந்தேகக்கண் வருவதை நாம் தவிர்க்க இயலாது. “எல்லாவற்றைய்யும் சந்தேகப்படு” என்று காரல்மார்க்ஸ் என்ற தத்துவ ஞானி சொல்லிச் சென்றார். நம் வேதமோ, “அன்பு சகலத்தையும் நம்பும், சகலத்தையும் தாங்கும்” என்றே கூறுகிறது. //

சகோதரர் அற்புதம் அவர்களே இங்கே நான் யாரையும் சந்தேகப்படவில்லை;ஜோன்ஸ் அவர்கள் சந்தேகப்படும்படி எதுவும் எழுதவில்லை; அவர் வெளிப்படையாகவே தனது அவிசுவாசத்தினால் நமது விசுவாசத்தைத் தாக்கினார்;எனவே முதலாவது நம்முடைய விசுவாசத்தை தற்காக்கும் (defend) முயற்சியில் இறங்கினோம்;பிறகு அவருக்கு ஆலோசனை வழங்கினோம்;

சுகம் பெற பிரார்த்திக்கச் சொல்வது வேறு, நாம் நம்பும் விசுவாசத்தைக் கேள்வி கேட்பது வேறு; மேலும் இதுபோன்று எந்த ஒரு மனுஷனும் தன்னுடைய சுகத்துக்காக தேவ அன்பை விலை பேசுதல் கூடாது; இது தாயின் இடுப்பில் உட்கார்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் குழந்தை தன் தாயைக் கிள்ளிக் கொண்டே வருவதைப் போன்றதாம்;

நம்மைப் பெற்ற தாயிடம் கூட நம் பெலவீனத்துக்காகக் கோபித்துக் கொண்டு, ' ஏன் என்னை இப்படி நோயாளியாகப் பெற்றாய் ' என்று குறைபாட முடியாதல்லவா? பிறகு எப்படி காணக்கூடாத‌ இறைவனைக் குற்றஞ்சாட்டி அவரது இருப்பையே கேள்வி கேட்க இயலும்?

நண்பர் ஜோன்ஸ், "விசுவாசத்தின் உச்சநிலை தானியேல்.3:17 " என்பதையறிந்து அவர் வருத்தம் தெரிவித்தால் நலம்;

Dan 3:17 நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.

Dan 3:18 விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.


// “தெய்வீக சுகம்” குறித்த சகோ.சில்சாமின் கருத்தின் எனக்கு உடன்பாடு கிடையாது. “நானே உன் பரிகாரி” என்று தேவன் சொல்லியிருக்கிறார். விசுவாசிக்கிற எவரும் தேவனிடமிருந்து சுகத்தைப் பெற முடியும். தேறினவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள்தான் தங்களது அதிக வசன அறிவினால் தேவையற்ற கேள்விகளை எழுப்புவார்கள். //

தெய்வீக சுகம் பற்றி எழுதிக்கொண்டிருக்கும்போதே இப்படிப்பட்ட புரிதல் வருமே என யோசித்தேன்;உங்களுக்கு உடன்பாடு இல்லாததால் எனக்கு விளக்கம் சொல்லும் உரிமை கிடையாது என்பதும் நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை வலியுறுத்துவதற்கும் தகுதியில்லை என்பதும் அர்த்தமல்ல‌;

தேறினவர்கள் யார் என்பதைக் குறித்து நான் குறிப்பிட்ட வரிகளை மீண்டும் வாசித்துப் பாருங்கள்,அதில் களங்கமில்லாத அன்பையும் அந்த அன்பானது இறைவன் மீதான நல்லெண்ணத்தினால் வருகிறது என்பதையும் விளக்கியிருக்கிறேன்;

// சுகம் வேண்டுமானால் முதலாவது நீங்கள் மருத்துவமனைக்குத் தான் செல்லவேண்டும்; அதுவே அறிவுடைமையாகும். "தெய்வீக சுகம்" என்பது உச்சக்கட்டமான மனோதத்துவ மருத்துவமுறையாகும்; அது தேறியவர்களுக்கே சாத்தியமாகும்; அதாவது தெய்வீக சுகமாகிய அற்புத சுகத்தைப் பெற இறைவன் மீதான உறுதியான விசுவாசம் தேவை; அதற்கு ஆதாரமானது அவர் மீதான நம்பிக்கை; நம்பிக்கை உருவாகக் காரணமாவது அவர் மீதான அன்பு; இந்த அன்பு அவரைக் குறித்த நல்லெண்ணத்தினால் ஏற்படுவதேயன்றி மூளையறிவினால் ஏற்படுவதில்லை; மருத்துவர்களே சொல்வதென்ன, ' நாங்கள் மருத்துவம் செய்கிறோம்,இறைவன் குணமாக்குகிறார் ' என்பதே. //

இதற்கு மாறாக அன்பும் இல்லாமல் நல்லெண்ணமுமில்லாமல் அவர் என்னை குணமாக்கட்டும் பிறகு நம்புகிறேன் என்ற மனோபாவத்துடன் வரும் யாரையும் அவர் குணமாக்கவில்லை;அவரே நம்பாத ஒருவருக்காக நான் விண்ணப்பிக்க முடியாது;அதாவது நான் என் தேவனை நம்புகிறேனோ இல்லையோ அவரிடத்திலிருந்து ஒரு நன்மையைப் பெறக் காத்திருக்கும் என்னை அவர் நம்பவேண்டும்; இப்படியே ஒருவன், " என் விசுவாசம் பெருக உதவிசெய்யும் "என்று விண்ணப்பித்தான்;


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

தமிழ்க் கிறித்தவ தளத்தில் தீராத தலைவலிக்கு ஆண்டவரே காரணம் போலவும் தலைவலி குணமானாலே இயேசு இருப்பதை நம்புவேன் என்றும் ஒருவர் அடம்பிடிக்கிறார்;அவருக்கு நான் அளித்த பதிலூட்டம்..!

// ( This is for Chillsam Bro) First of all I am not here to collapse or destroy your faith and website, TRUST ME ......
And you said to me go and Heal near by your church. How ? If God really heals people, All the crowds be in the church.....Then why all crowds in Hospitals. THINK //

நண்பர் ஜோன்ஸ் அவர்களே, உங்களுக்கு பொறுமையிருந்தால் கீழ்க்கண்ட வேதப்பகுதியை வாசித்துப் பாருங்கள்;அல்லது அதன் சுருக்கத்தைச் சொல்கிறேன்; இயேசு எந்தவொரு அற்புதத்தாலும் தம்மை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை என்பது முதலாவது விதியாகும்; அடுத்து அவர் செய்த அற்புதச் செயல்கள் எதுவுமே மனதுருக்கத்தின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட்டது என்பதும் கவனிக்கப்படவேண்டியது; கீழ்க்காணும் வேதப்பகுதியில் இயேசுவானவரே மிகத் தெளிவாகக் கூறுகிறார், அற்புதச் செயல்கள் எல்லோருக்கும் பொதுவானது அல்ல‌;

சுகம் வேண்டுமானால் முதலாவது நீங்கள் மருத்துவமனைக்குத் தான் செல்லவேண்டும்; அதுவே அறிவுடைமையாகும். "தெய்வீக சுகம்" என்பது உச்சக்கட்டமான மனோதத்துவ மருத்துவமுறையாகும்; அது தேறியவர்களுக்கே சாத்தியமாகும்; அதாவது தெய்வீக சுகமாகிய அற்புத சுகத்தைப் பெற இறைவன் மீதான உறுதியான விசுவாசம் தேவை; அதற்கு ஆதாரமானது அவர் மீதான நம்பிக்கை; நம்பிக்கை உருவாகக் காரணமாவது அவர் மீதான அன்பு; இந்த அன்பு அவரைக் குறித்த நல்லெண்ணத்தினால் ஏற்படுவதேயன்றி மூளையறிவினால் ஏற்படுவதில்லை; மருத்துவர்களே சொல்வதென்ன, ' நாங்கள் மருத்துவம் செய்கிறோம்,இறைவன் குணமாக்குகிறார் ' என்பதே.

இன்னும் என்னைக் கேட்டால் நீங்கள் சுகம் பெறுவதற்கு இவ்வளவு நீதிபோதனைகள் தேவையில்லை; தாழ்மையுடன் கூடிய உங்கள் அர்ப்பணமும் விடாப்பிடி விசுவாசமும் போதும்; அவ்வளவு ஏன் உங்கள் நிலை எனக்கே வந்தாலும் நீங்கள் இதையே எனக்குச் சொல்லவேண்டிவரலாம்; அதுதான் நிதர்சனமான உண்மை; இந்த அமைப்பிலேயே நாம் வைக்கப்பட்டுள்ளோம்; ஆண்டவருக்கு எதிராகக் கேள்வி கேட்க நமக்கு உரிமையில்லை; நாம் தொழாவிட்டாலும் அவர் தான் தெய்வம்; அவர் நமக்கு நன்மை செய்யாவிட்டாலும் நாம் அவருக்கு கடனாளிகளே; ஏனெனில் அவரிடமிருந்து ஏற்கனவே பெற்றுள்ள நன்மைகளுக்கு ஏற்ற கனிகளை நாம் இன்னும் தரவில்லை;

நீங்கள் விரும்பினால் (Pls mail me then i'll give my mobile no.) என்னிடம் நேரடியாக தொடர்பு கொண்டால் உங்களுக்காக பிரார்த்தனை செய்ய ஆயத்தமாக இருக்கிறேன்; உங்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் இறைவனாலும் உங்களுக்கு சுகம் தரமுடியாது; எனவே அதற்கான படிகளையறிந்து முன்னேறி வாருங்கள்;

சுகம் என்பது இன்றைய தேவை; ஆனால் ஒரு தனி மனிதன் மீதான தெய்வீக திட்டம் என்பது தூரகாலம் சம்பந்தமானது;
நீ கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால் அநேகத்தின் மீது அதிகாரியாக்குவேன் என்கிறார், இயேசுகிறிஸ்து; எனவே உங்களைக் குறித்த தேவ திட்டத்தையறியாததே உங்கள் பிரச்சினைக்கெல்லாம் காரணமாக இருந்தால் சுகம் என்பது ஒருபோதும் கிட்டாமலே போகும் ஆபத்தும் உண்டு

Luk 4:23 அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.

Luk 4:24 ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Luk 4:25 அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.

Luk 4:26 ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை.

Luk 4:27 அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
(லூக்கா.4.23 27)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard