இது தமிழ் கிறிஸ்டியன் தளத்தின் "மார்ஸ் மேடை"க்கு வந்த கேள்வி...அதற்கு நான் அளித்த பதில்...இது என்னுடைய தனிப்பட்ட கருத்து..இதில் மாறுபட்ட கருத்தினையுடைய சகோதரர்கள் தாராளமாக தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்;
rawangjohnson: பழைய ஏற்பாட்டில், தேவன் ஜலப் பிரளயத்தால் மனிதர்களை அளிப்பதில்லை என்று ஒப்பந்தம் செய்து கொண்டு, அதற்கு அடையாளமாக வானவில்லையும் வைத்தார்.
இப்படியிருக்க, சுனாமி, பாக்கிஸ்தானிலும் சீனாவில் பெருவெள்ளம், இன்னும் பற்பல பிரளங்கள் உண்டாகி, மனித வர்த்தத்தையும் பூமியையும் அழித்துப் போடுகின்றன. ஏன் இப்படி நடக்கிறது?
இந்தச் சந்தேகத்தைப் பற்றி எங்கள் குருவானவரிடம் கேட்டபோது, அது தீர்க்கதசினத்தின் நிறைவேறல் என்று சட்டென்று பதிலளித்தார். ஆனால், இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால், நியாயமான வெளிப்பாடு இருக்கிறது என்று நம்புகிறேன்.
எனவே, நான் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரு நியாயமான விளக்கத்தைத் தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
Deu 29:29 மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.
மேற்கண்ட வேதவார்த்தையே எந்த ஒரு வேத ஆராய்ச்சிக்கும் முன்பாக மனதில் இருத்தவேண்டியதாகும்; இனி சூழமைவைப் பொறுத்து ஆராய்வோமானால் வேதத்தில் நாம் காணும் "வானவில்" ஆகிய உடன்படிக்கையின் சின்னமானது, ஒரு உலகளாவிய நிக்ரஹத்துக்கு அடையாளமாகும்; மேலும் அதில் ஆவிக்குரிய அர்த்தமும் உண்டு; அது தனி தியானம்.
அண்மையில் கூட நான் வானவில்லைப் பார்த்தபோது இது நம்முடைய வேதத்தில் மட்டுமே உள்ளதல்லவா என்று பெருமை கொண்டேன்; "சுனாமி" போன்ற சேதாரங்கள் சர்வலோக அழிவுக்கு காரணமாகப் போவதில்லை; வட்டார அளவிலான இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் தேவனுடைய பயங்கரத்துக்கும் அவரது செயல்பாட்டுக்கும் ஒரு அடையாளமாக விளங்குகிறது;
இதைக் குறித்து நம்முடைய ஆண்டவரும் லூக்கா.13 ல் சொல்லுகிறார்;
Luk 13:4 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
Luk 13:5 அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.
எந்த அழிவும் நியாயத்தீர்ப்பு அல்ல, அது மனந்திரும்புதலுக்கான எச்சரிப்பு; அழிக்கப்படுவோர் துன்மார்க்கர் என்றோ இருப்போர் நீதிமான்கள் என்றோ அர்த்தமல்ல;
ஒவ்வொரு ஆத்துமாவும் மனந்திரும்ப அதன் வாழ்நாளில் போதுமான அவகாசத்தையும் வாய்ப்பையும் இரட்சகர் வழங்குகிறார்; காலங்காலமாக நாம் இங்கே செல்வ செழிப்புடன் வாழ்ந்திருக்க அவர்தம் இன்னுயிரைத் தரவில்லை; அதுபோல யாராவது போதித்தால் அது கள்ள உபதேசமாகும்; ஆனால் இருக்கும் வரை இலாபம், அழைப்பு வந்தால் ஏதாவது ஒருவகையில் நமது ஓட்டத்தினை முடித்துவிட்டு படுத்துக்கொள்ள வேண்டியதுதான், அவர் வந்து எழுப்பும் வரை..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)