Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பைபிளும் விக்கிரகமும் ஒன்றா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: பைபிளும் விக்கிரகமும் ஒன்றா..?
Permalink  
 


தேள் கொட்டிட்டு கழுநீர் பானைக்கு அடியிலே போய் ஒளிந்துக் கொள்ளுமாம்;அதுபோல தாறுமாறான கருத்துக்களால் வேதத்தை உண்மையாய் நேசிப்பவர்களைப் புண்படுத்திவிட்டு- உலகின் அனைத்து வேதவல்லுனர்களின்- பரிசுத்தவான்களின் போதனைக்கும் எதிரான ஒரு கருத்தை பரப்பிவிட்டு- கொஞ்சமும் உணர்வில்லாமல் செவிட்டு விரியனைப் போல ஒரு மனுஷன் எழுதிக்கொண்டிருக்கிறான்;

அவன் தைரியம் வேதாகமத்துக்காக வைராக்கியம் பாராட்டுவோரை சாத்தான் என்கிறான்; சவால் விடுகிறான், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் துணிகரமாகப் பேசுகிறான்; இதுபோன்ற ஆட்களைக் கண்டிக்கவும் ஆட்களில்லை, கண்டிப்போருக்கு ஆதரவும் இல்லை; இதுதான் இன்றைய கிறித்தவத்தின் பரிதாபநிலை... கேட்டால் என்ன சொல்லுவார்கள்,ஆண்டவர் நியாயந்தீர்ப்பார், என்று..!

இதோ அந்த "களி" பானையின் பிதற்றல்கள்...


ஆண்டவராகிய இயேசுவை சோதிக்க வந்த  பிசாசானது வேதபுத்தகத்தில் இருந்து பல வசனங்களை சுட்டிகாட்டி கேள்விகளை கேட்டது. அதை சற்று ஆராய்து பார்த்தால்   "வேதத்தில்  இவ்வளவு ஞானம் உள்ள ஒருவனை  "பிசாசு" என்று வேதம் ஏன் குறிப்பிடுகிறது இயேசு ஏன் அவனை பார்த்து "அப்பாலேபோ சாத்தானே" என்று கூறினார் என்று ஆச்சர்யப்பட தோன்றும்.
வேதாகமம்  புத்தகமாக உருவாகவும் அது உலகெங்கும் பரவவும் அனேக தடைகளை சாத்தான் உண்டாக்கினான் பல உயிர்களை பலிகொண்டான் இறுதியில் பல காரியங்களை செய்தும்  பருப்பு வேகாத சாத்தான் இப்பொழுது  ஒரு புது யுக்தியை கையில் எடுத்துகொண்டான்!
என்ன தெரியுமா?

"நான் வேதபுத்தகத்தை பத்திரமாக பாதுகாக்க போகிறேன் என்பதுதான்!
வேதத்தை ஒருவன்  கையில் வைத்திருப்பதாலோ அல்லது அதை கரைத்து குடித்து
மனப்பாடம் செய்வதாலோ அல்லது அதை பத்திரமாக ரெங்கு பெட்டியில் மூடி பாதுகப்பதாலோ அல்லது
பிறரிடம் அதைப்பற்றி பெருமையாக போசுவதாலோ அவனுக்கு எந்த பலனும் நேர்ந்துவிடபோவது இல்லை அதில் உள்ள வார்த்தைகள் நம்  வாழ்வில் கிரியை செய்து,  நம் வாயிலும் உன் செயலிலும் வெளிப்பட்டால் மட்டுமே நமக்கும் சாத்தனுக்கும் வேறுபாடு தெரியும்.
நீர் இங்கு வார்த்தைகளை எழுதும்முன்னே நேற்றே எனக்கு ஆவியானவர் உம்மைப் பற்றி தெரிவித்துவிட்டார். நன்றாக  ஆவியில் நிறைத்து  ஜெபியும், என்னைப்பற்றி ஆவியானவர் உமக்கு வெளிப்படுத்துவார். எப்பொழுதும் ஆண்டவருடன் தொடர்பு நிலையில் இருந்தால் இதுபோன்ற வார்த்தைகளை எழுதுவதை ஆண்டவர் நிச்சயம் கண்டிப்பார்!

பரிசுத்த ஆவி இல்லை என்று
சாதித்து மோசமான வார்த்தைகளை எழுதும் சிலருக்கும் ஆவியை பெற்றுள்ளேன் என்று சொல்லிக்கொண்டு அதே வார்த்தைகளை பயன்படுத்து உமக்கும் என்ன வேறுபாடு?
நீர் எழுதுவதுபோல் என்னால் எழுத முடியாது! உம்மைப்போல தரம்கெட்ட வார்த்தைகளை எழுதி கோபம் கொள்ளுவேன் என்று எதிர்பார்க்காதீர்! நிச்சயம் தொற்றுபோவீர்!
உமக்கும் எனக்கும் நடுநின்று கர்த்தர்தாமே நியாயம் தீர்ப்பாராக!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

"கிறித்தவன்" என்ற (போர்வையில்) பெயரில் அநேக ஜந்துகள் சுற்றிக் கொண்டிருக்கிறது; அதில் ஒரு ஜந்து சொல்லுகிறது, பரிசுத்த வேதாகமத்துக்காக வைராக்கியம் கொள்வதும் எதிர்த்து எழுதுவதும் விக்கிரகாராதனையைப் போன்றதாம்;என்ன செய்ய ஐயோ'ன்னு இருந்தாலும் இதுபோன்றோரிடமும் நமக்கு வழக்கு உள்ளது;போட்டுவைப்போம்;அந்த ஆளுடைய பொன்னெழுத்தும் என்னுடைய கிறுக்கல்களும் பின்வருமாறு:

"விக்கிரக ஆராதனை" என்பது தேவனால் கடுமையாக  வெறுக்கப்படும் ஒரு காரியம் என்பதை பல சகோதரர்கள் அறிந்திருக்கலாம். ஆனால் எதெல்லாம் விக்கிரக ஆராதனைக்குள் அடங்கும் என்பதை நாம் கொஞ்சம் அறிந்து கொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.
பொதுவாக "விக்கிரக ஆராதனை" என்பது ஏதாவது ஒரு சிலையோ அல்லது படத்தையோ அல்லது ஒரு உருவத்தையோ தெய்வமாக நினைத்து வழிபடுவதே குறிக்கும்.
இதை கொஞ்சம் விளக்கமாக  சொன்னால் "ஏதோ ஒன்றை" அது பொருளோ பணமோ இயற்க்கை சக்தியோ படமோ  சிலையோ அல்லது வீடோ நிலமோ அல்லது மனைவியோ பிள்ளைகளையோ அல்லது  பார்க்கும்  வேலையையோ
அல்லது கம்பனி முதலாளியையோ
தேவனுக்கு நிகராக நமது முக்கிய நம்பிக்கையாக  உயர்த்துவதே விக்கிரக ஆராதனை எனப்படும்.
"உன் தேவனாகிய கர்த்தர்  ஒருவரே கடவுள்" அவருக்கு இணையாக அல்லது ஈடாக இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அவரை  தவிர  வேறு எந்த ஒன்றின் மேல் நமது நம்பிக்கை இருக்கும்என்றால் அது விக்கிரக ஆராதனை ஆகிவிடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
சிலர் தாங்கள் வணங்கும்  சிலைகளை உடைத்தால் கையை வெட்டுவேன் என்று வைராக்கியமாக இருந்தால் சிலர் எங்கள் நபியை குறை சொன்னால் கைகளை வெட்டுவோம் என்று சொல்லி செய்யவும் செய்கின்றனர். சிலர்  எங்கள் வேதத்தை யாரும் குறைகூறினால் சாபம் விடுவோம் என்று விடுகின்றனர். எல்லாமே ஒரே தன்மையை சார்ந்ததே!
தேவன் மேலுள்ள வைராக்கியத்தை தவிர ஒரு நபியின் மேலோ அல்லது ஒரு புத்தகத்தின் மேலோ அல்லது எந்த ஒரு பொருளின் மேலோ வைத்திருக்கும் வைராக்கியம் எல்லாமே விக்கிரக ஆராதனையே சாரும் என்பதை அறியவேண்டும்.
இன்றைய  கிறிஸ்த்தவ  இஸ்லாமிய சகோதரர்களுக்கு  தங்கள் தங்கள் வேதத்தின்
மீதும்  தங்கள் தங்கள நபிகள்   மற்றும்  அப்போஸ்தலர்கள்
மீதும் அளவற்ற வைராக்கியமும், அவர்கள் நம்பிக்கை வைத்திரக்கும் எந்த ஒன்றை சற்று குறைத்து
கூறிவிட்டாலும் தாங்கமுடியாமல் கூச்சலிடும் மார்க்கபேதமும் அதிகமாகவே உள்ளது  அனால் எல்லா மதங்களும் சுட்டிக்காட்டும்  எதையும் சகித்துகொள்ளும்
மனபக்குவம் மட்டும் எங்கோ  தொலைந்து போய்விட்டது.

தங்கள் நினைத்த காரியங்களை சாதிக்கவும் தங்களுக்கு விருப்பமில்லாத காரியங்கள் நடைபெறாமல் தடுக்கவும்  ஜெபங்களும் போராடங்களும் எங்கும் பெருகியுள்ளது ஆனால் இயேசு சொன்னதுபோல்
மத்தேயு 5:40 உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.

என்று விட்டுவிட யாருக்கும் மனதில்லை! 
நீங்கள் கையில் வைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள கருத்துக்களை அராய்ந்து
அதன்படி வாழவே தேவனால் அந்த வேதம் தரப்பட்டுள்ளதே அன்றி,  என் வேதம் பெரியதா உன்னுடையது  பெரியாத்தா என்று போட்டிபோட அல்ல!

அடுத்தவர் வேதங்களை சுலபமாக பழித்துபேசும் ஒருவருக்கு தங்க வேதத்தையோ அல்லது நபியையோ சற்று குறித்து கூறிவிட்டாலும் தங்க முடிவதில்லை
வேதத்தையும் நபியையும் தேவனையும்  தாங்கள்தான் இத்தனை காலம் காப்பாற்றிக்கொண்டு வருவதுபோலவும்,  இவர்கள் வைராக்கியமாக இல்லை என்றால் எல்லாமே  முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் இவர்கள் வாழ்கின்றனர். அனால் உண்மையில் இவர்கள் தங்கள் மாமிசகிரியைகளை வெளிப்படுத்து கிரார்களேயன்றி வேறொன்றும் அல்ல!
நீங்கள் எத்தனை வேத புத்தகத்தை படித்தாலும் அதன்படி வாழவில்லை என்றால் அந்த புத்தகத்தால் உங்களுக்கு பலன் எதுவும் இல்லை. அப்படி வேதத்தின்படி தேவனின் வார்த்தைகளின்படி வாழ்பவன் அவ்வளவு சீக்கிரம்  பிறரை  பழிக்கவும் மாட்டான்.
மத்தேயு 3:9 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்
என்ற ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் சொல்கிறேன், எந்த ஒன்றையும் இதுதான் முடிவானது என்று எண்ணி கொள்ளாதீர்கள்!  நாங்கள் உண்மையை அறிந்திவிட்டோம் எங்களை யாரும் அசைக்க முடியாது என்று இறுமாப்பு அடையாதீர்கள்!  எந்த ஒரு வார்த்தையையும் தேவன் தன்னுடைய வார்த்தையாக மாற்றி,  எந்த வேதத்தையும் பொய்யாக்கவும் எந்த வேதத்தையும் மெய்யாக்கவும் தேவனாலே கூடும்!
எனவே நீங்கள் எதை வேண்டுமாலும் ஆராயுங்கள்!  ஆனால் ஆராய்ந்து அறிந்த உண்மைகளின்படி வாழ முற்ப்படுங்கள்.  உங்கள் நம்பிக்கையோ உலகில் உள்ள எந்த ஒன்றின் மேலும் வைக்காமல்  ஜீவனுள்ள தேவன் மேல் மட்டும் வையுங்கள்! எதையும் பொய்யாக்கவும் எதையும் மெய்யாக்கவும் அவர் ஒருவராலே ஆகும்!


1Pe 3:15 கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.

2Ti 2:25 எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,
2Ti 2:26 பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.


ஏம்ப்பா மாக்கான்... மேற்கண்ட வசனங்களின்படி உன்னுடைய கிறுக்குத்தனமான உளறல்களைப் பொறுத்துக் கொள்ளச் சொல்லி வேதம் சொல்லுவதும் என்னைப் போன்றோர் வைராக்கியமிருந்தும் கோழைகளைப் போலிருக்க வேண்டுமென்பதும் உண்மைதான்;

ஆனாலும் உன்னைப் போன்ற கசப்பான பிச்சினால் அநேக அப்பாவிப் பாத்திரங்கள் மாசுபடக் கூடாது என்ற அவசரமே எமது தவிப்பு;

மற்றபடி நின்று பேசுமளவுக்கு நீ பெரிய ஆள் கிடையாது; எப்போது நீ வேதத்தை விக்கிரகத்துடன் ஒப்பிட்டுப் பேசினாயோ அப்போதே நீ காலி,வேடிக்கையைப் பார்க்கத்தானே போறேன்..!


இதுதொடர்பான மற்றொரு பதிவு...
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37771036



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard