இது எனக்கு ஒரு புதிய செய்தி! இதற்க்கு ஏதாவது வேத ஆதாரம் இருந்தால் சொல்லுங்களேன்? ஏனென்றால் வேத ஆதாரம் இல்லாத பல வெற்று பேச்சுக்களை நம்பி ஏமார்ந்து திருந்த முயற்சிசெய்பவன் நான் ஆகையால் மறுபடியும் அந்த குழிக்குள் விழ விரும்பவில்லை
வேதம் என்பதே மனிதரால் தொகுக்கப்பட்டது தானே, அப்படியானால் அன்றைக்கு பேசின தேவன் இன்றைக்கும் பேசமாட்டாரா, அவர் ஜீவனுள்ளவர் என்று நீங்கள் தானே சொல்லுகிறீர்கள், என்பதே இந்த கள்ளத் தீர்க்கதரிசிகளின் வாதம்..! இவர்களெல்லாம் மீன்பிடிப்பவர்களல்ல, பிடித்த மீனை ஆராய்ச்சி செய்பவர்கள், முடிந்தால் அந்த மீன்கள் மீண்டும் கடலுக்குத் திரும்ப ஆவன செய்பவர்கள், இவர்களுடைய முன்னோர் ஆண்டவருடைய வருகைக்கு நாள் குறித்து ஊரைக் கொள்ளையடித்தவர்கள்,மேலும் மொத்தமாக கொளுத்திக்கொண்டு செத்துப்போனவர்கள், எல்லாவற்றுக்கும் முடிவு காலம் நெருங்குகிறது, ஆடும் வரை ஆட்டம் என்ற பாடலையே ரீமேக் செய்து இவர்களுக்காக ஒருமுறை பாடவேண்டும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கொக்கு கொக்கரிக்கிறது... டேய் பை(B)யா உன்கிட்ட நான் வந்து சர்டிபிகேட் வாங்கவேண்டிய அவசியமில்லை; மல்லாந்துக் கொண்டு உமிழ்வது உனக்கே கேடு... திருந்திவிடு..இல்லை திருத்துவோம்..!
chillsam wrote:
ஆனால் வேதத்துக்கு இணையாக இன்னொன்றைக் கொண்டு வந்து கோர்த்துவிடுவதையே கண்டிக்கிறோம்; இன்னும் பைபிள் மட்டுமே முழுமையானதல்ல என்னும் துணிகரமான கருத்தையும் கண்டிக்கிறோம்;
புத்தர் மூலமும் ப்ளாட்டோ மூலமும் கூட சர்வவல்ல தேவன் பேசினார் என்று நீங்கள் கூறமுயற்சித்தால் சாத்தான் யார் என்பது உமது எழுத்துக்களிலேயே புரிந்துவிடும்.
அன்பர் சில்சாம் குற்றச்சாட்டில் எதுவுமே உண்மை இல்லை எல்லாம் அவரின் மனப்ரம்மை. இல்லாத கருத்துக்களை அவரே கற்ப்பனை செய்து தவறான வார்த்தைகளை பிரயோகித்து வருகிறார்.
எமது பதிவில் இருந்து:
இந்த உலகம் தோன்றியதில் இருந்து எந்த ஒரு மூலையில் யார் ஒருவரால் செய்யப்படும் காரியமும் இறைவனுக்கு தெரிந்தே நடை பெறுகிறது. அவரின்றி இந்த உலகில் எதுவும் இல்லை. இவ்வாறிருக்கையில், பைபிள் என்றொரு புத்தகத்தை மட்டும் வைத்துகொண்டு அதற்க்கு உள்ளேயா? வெளியேயா? என்று பார்ப்பது அவசியமற்றது என்றே நான் கருதுகிறேன். இறைவனின் வார்த்தைகள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். பைபிளில் உள்ளது மட்டும்தான் இறைவன் செய்தது என்றால் பைபிளில் இல்லாத எல்லோரையும் பூமியில் பிறக்க வைத்து வாழவைப்பது யார்?
அவர் நல்லோர் மேலும் பொல்லார் மேலும் மழையை பெய்யசெய்து எல்லோரையும் தற்காத்து பூரணசற்குணராக இருக்கும் பிதா என்றல்லவா வேதம் சொல்கிறது. எனவே அவர்களை வாழவைப்பதும் அதே இறைவன் அல்லவா? இதில் என்ன குறை கண்டார்? புரஜாதியில் உள்ள ஒரு சிறு குழந்தை மூலமாக கூட இறைவனால் நம்மிடம் பேசமுடியும் மற்றும் புத்தர் மூலம் மட்டுமல்ல ஒரு கழுதை மூலமாக கூட உம்மிடம் பேசி உமக்கு புத்தி புகட்ட முடியும். ஆனால் அதை புரிந்துகொள்வதற்கு நமக்கு ஞானம் வேண்டும் அவ்வளவுதான்
அவர் உண்மையில் எங்களை பழிக்கவில்லை அறியாமல் தேவனின் மகத்துவத்தை பழிக்கிறார்.
சுந்தரின் பதிவு "வேதாகமத்தில் எல்லாம் அடங்கியுள்ளது" இக்கருத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாத மற்றவர்களுக்கு வேதாகமம்தான் உண்மையானது என்பதை விளக்க வேறு எங்காவது இருந்து ஆதாரங்களை திரட்டியே ஆகவேண்டும்! அதன்மூலமே நாம் வேதாகமம் உண்மை என்பதை புரியவைக்க முடியும்
இதில் என்ன தவறு இருக்கிறது? விவிலியம் உண்மை என்று நிரூபிக்க அறியவில்கோட்பாடுகளை ஆதாரமாக காட்டுவது இல்லையா? அல்லது அகழ்வாராச்சிகளை ஆதாரமாக காட்டுவதில்லையா? அல்லது ரிக் வேதத்தில் இயேசுவின் பலி பற்றி எழுதியிருக்கிறது சுட்டிகாட்டி விளங்க வைப்பது இல்லையா?
இதில் என்ன குறையை கண்டார்? "மாக்கன்" "களியை கிண்டுகிறான்" "சோற்று பண்டாரம்" இதெல்லாம் ஒரு ஆவிக்குரிய (அவரை எல்லாம் ஆவிக்குரியவன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்) கிறிஸ்த்தவன் எழுதும் வார்த்தைகளா"? வேதத்தை காப்பாற்றுவது இருக்கட்டும் முதலில் அவரை தற்காத்துகொள்ளுவது நல்லது.
எங்கள் தளம் எல்லா மதங்களை பற்றியும் விவாதிக்கும் எல்லாமத கருத்துக்களும் இங்கு பதியப்படும் "கொக்குக்கு ஒரே புத்தி அதுவும் கோணபுத்தி" என்ற நிலையில் இருக்கும் அறிவு ஜீவிகள் இங்கு தலையிட வேண்டாம். அவரவர் தளத்தில் கொட்டிவைத்து தாங்கள் யார் என்பதை உலகத்துக்கு வெளிப்படுத்துங்கள்.
இனி இத்தளத்தில் யாரையும் இழிந்து பதிவிடும் பதிவுகள் நீக்கப்படும்!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
SUNDAR: // மேலே எழுதப்பட்டுள்ள கட்டுரைகளில் வேதாகமத்தின் மகிமையை குறைக்கும் எந்த வார்த்தையோ அல்லது வேதாகமத்தை தேவவார்த்தை என்று அறிந்தவர்கள வேறு வேதங்களை படிக்க வேண்டும் என்றோ வலியுறுத்தும் எந்த கருத்தும் சிறிதும் இல்லை.எழுதப்பட்ட அந்த வார்த்தைகளில் எந்த தவறும் இல்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். ஒரு இந்துமத நண்பனிடம் ஆண்டவரை பற்றி சொன்னபோது அவரின் கேள்விகளுக்கு பதில் கொடுப்பதற்காகவும் மற்றும் அவருக்கு வேதாகமம்தான் உண்மை தேவவார்த்தை என்பதை புரியவைக்க நாம் என்னயுக்தியை கையாளலாம் என்பதை ஆராய்வதற்காகவே பிறமத வேதங்களை படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையே அப்பதிவு விளக்குகிறது அதன் அடிப்படையில் மேலேயுள்ள கட்டுரையில் நாம் மிக தெளிவாக "வேதாகமத்தில் எல்லாம் அடங்கியுள்ளது அதற்க்கு மேல் எனக்கு எதுவும் வேண்டாம்" என்று கருதுபவர்களை நான் குறை எதுவும் சொல்லவில்லை! ஆம்! ஒரு மனிதனின் மீட்புக்கு தேவையான அனைத்தும் வேதாகமத்தில் அடங்கியிருக்கிறது என்பது உறுதி! அது ஒன்றை அறிந்தால் மட்டுமே போதுமானது வேறு எதுவும் தேவை இல்லை. என்று போல்ட் செய்து கொடுத்துள்ளேன். எங்கு சிறிய குறை கிடைக்கும் உடனே நமது ஜென்ம குணத்தை கொட்டி தீர்க்கலாம் என்று கண்ணில் எண்ணெய் ஊற்றி திரிபவர்களுக்கு கொஞ்சம் ஹோல் கிடைத்தால் போதும் திரித்து நாராக்கிவிடுவார்கள் கோபத்தை கொட்டி தீர்த்து விடுவார்கள். இது புதிதல்ல! எனவே மேலும் இவர்களைபற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை!. அதாவது, வேதவார்த்தைகள்படி வாழுங்கள் என்று எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும் இவர்களும் திருந்த மாட்டார்கள் இவர்களை ஒதுக்கிவிட்டு நேர்மையாக நடக்கும் பிறமத சகோதரர்களுக்கு கட்டுரை எழுதி அவர்களாவது திருப்பிவிடலாம் என்றால் அதற்கும் விடமாட்டார்கள்!
"சாத்தானின் சாம்ப்ராஜ்யத்துக்கு முடிவை கொண்டுவரும் வழியை காட்டும் வேத புத்தகத்தை கையில் வைத்திருக்கிறீர்கள்! நீங்களும் அதன்படி நடந்து அவனது ஆட்சிக்கு முடிவை கொண்டுவருவதில்லை, புதியதாக வரும் ஒருவனையும் அதற்க்கு முடிவை கொண்டுவர விடுவதில்லை" காரணம் தனது முடிவு எங்கே இருக்கிறது என்பது சாத்தனுக்கு நனறாகவே தெரியும்! அவ்வளவு சீக்கிரம் அவன் விடுவானா என்ன? வேதாகமானது நமது கையில் ஒரு புத்தகவடிவில் இருப்பதால் அதை ஒரு புத்தகம் என்று சொன்னதில் எந்த தவறும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை. மேலும் என்னை பொறுத்தவரை புத்தகம் எனப்படும் பொருளுக்கு எந்த மதிப்பும் இல்லை "ஆவியும் ஜீவனுமாய்" இருக்கும் அதில் உள்ள வார்த்தைகளுக்கு மட்டுமே என்றும் மதிப்புண்டு!
சகோதரர் சில்சாம் அவர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கும் தேவையற்ற சாபத்துக்கும் இழிவான வார்த்தைகளுக்கும் நான் பதில் தந்து என்னை தற்காத்து கொள்ள தேவையில்லை அதற்க்கான அவசியமும் இல்லை என்றே நான் கருதுகிறேன்! // ஹலோ சார், நீங்க உங்க இந்து நண்பருக்கு உங்கள்சுயஞ்சித்தப்பிரகாசமாய்த் தோன்றும் எதையாவது சொல்லும்; அதைக் குறித்து எமக்கு எந்த ஆட்சேபமுமில்லை; ஆனால் வேதத்துக்கு இணையாக இன்னொன்றைக் கொண்டு வந்து கோர்த்துவிடுவதையே கண்டிக்கிறோம்; இன்னும் பைபிள் மட்டுமே முழுமையானதல்ல என்னும் துணிகரமான கருத்தையும் கண்டிக்கிறோம்; அங்கே ஒருத்தன் தனது சந்திரக் கடவுளுக்கு இணைவைத்தாலே கழுத்தை அறுக்கிறான்;நீரோ பரிசுத்த வேத எழுத்துடன் கண்ட குப்பை கூளங்களையெல்லாம் இணைவைத்துப் பேசி -எழுதினால் நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது; மனுஷ ஞானமான வஞ்சகமான உபதேசத்தினால் யாரையும் ஆதாயப்படுத்தமுடியாது;உலகப் பொதுமறை எனப் புகழப்படும் குறளுடன்கூட வேத எழுத்துக்களை ஒப்பிடக்கூடாது; கையில் கொடுக்கப்பட்டுள்ள பரிசுத்த வேத எழுத்துக்களிலேயே இரட்சகருடைய முழுதன்மையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது;அதை நம்பாதவன் எதையும் நம்பப்போவதில்லை; Joh 5:30 நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. Joh 7:18 சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. புரிந்தால் புரிந்துக் கொள்ளும்;வரட்டு பிடிவாதக்காரனிடம் ஒன்றும் செய்யமுடியாது;நீர் என்னை குற்றங்கண்டுபிடிக்கும் சாத்தான் என்றாலும் அதைக் குறித்து கவலையில்லை;உம்மைப் போல அனுசரித்துப் போயிருந்தால் இயேசுநாதரை சிலுவையிலே அறைந்திருக்கமாட்டார்கள்; சீடரும் பல்லாயிரம் இரத்தசாட்சிகளும் தமது இன்னுயிரை இழந்திருக்கவேண்டாம்;உம்மைப் போன்ற சோற்றுப்பண்டாரங்களாலேயே (எபிரெயர்.12:16) கத்தோலிக்கம் எனும் விஷவித்தும் அதன் வாலைப் பிடித்து முகமது எனும் சைத்தானும் முளைத்தது; உம்மைப் போன்றோரை யாராவது சபிக்கமுடியுமா நாங்களெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்களையா...எங்களுக்கு வேதத்தைத் தவிர எதுவும் தெரியாது; கொக்கு பிடித்தவன் கதை உமக்குத் தெரியும் என்ற நம்பிக்கையில் அந்த தொடர்பில் சூட்சமமான ஒரு செய்தியைக் கூறிவைத்தேன்; அது சாபமல்ல என்பது எனது வாசகருக்குத் தெர்யும்; எனது தனிப்பட்ட அனுபவமான பழக்கமொன்றுண்டு;பைபிள் என்று இங்கே மிகச் சாதாரணமாகக் குறிப்பிடப்படும் பரிசுத்த வேதாகமத்தின் மீது பாட்டுப்புத்தகத்தையோ வேறு எந்த புத்தகத்தையோ எந்தவொரு பொருளையும் அல்லது பேனாவைக் கூட நான் வைப்பதில்லை; இந்த செயலானது சிலருக்கு பைத்தியமானதாகத் தோன்றலாம்,ஆனாலும் நமது கையிலிருக்கும் அரும்பெரும் பொக்கிஷமான வேதப் புத்தகத்தை எந்த அளவுக்கும் உயர்த்தலாம்;சிறு அளவும் உதாசீனப்படுத்தக்கூடாது; அதன்மீது எச்சில் உமிழ்ந்துவிட்டு உயிர்தப்பி ஓடச்சொன்னோரின் கொடுமைக் கதைகளையெல்லாம் வளர்ந்தவன் நான்;மிஷினரிகளின் முன்பு வைக்கப்பட்ட முதலாவது சவாலே வேதப்புத்தகத்தை அவமதிப்பதுதான்; வேறு எந்த மொழிக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு நமது வேதாகமத்துக்கு உண்டு;மற்ற மொழிகளில் வேண்டுமானால் அதற்கு வெறும் புத்தகம் என்று பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்;தமிழில் மட்டுமே அது முதன்முதலில் பரிசுத்த வேதாகமம் என்று வழங்கப்பட்டது; ஆங்கிலத்திலும் பரிசுத்த புத்தகம் என்று வழங்கப்படுகிறது;பரிசுத்தமானது என்று வழங்கப்படும் எல்லாம் பரிசுத்தமானதுதானா என்பது தனி விவாதம்;ஆனால் என்னுடைய பரிசுத்த வேதாகமத்தை இன்னொரு அசுத்தமான கட்டுக்கதையேடுகளின் மூலமே புரிந்துக்கொள்ளமுடியும் என்ற நிலை வருமானால் அதைவிட அவமானம் எதுவுமில்லை;இந்த பரிசுத்த வேதாகமத்தின் வரலாற்றுரீதியான நிரூபணங்களுக்காக சில கையேடுகளையும் பண்டைய வரலாற்றுக் குறிப்புகளையும் அகராதிகளையும் பயன்படுத்துகிறோம்;அது தவறல்ல;அது முழுக்க முழுக்க வேதாகமத்தைச் சார்ந்த ஒரு கிரியையாகும்; அதைவிட்டுவிட்டு புத்தர் மூலமும் ப்ளாட்டோ மூலமும் கூட சர்வவல்ல தேவன் பேசினார் என்று நீங்கள் கூறமுயற்சித்தால் சாத்தான் யார் என்பது உமது எழுத்துக்களிலேயே புரிந்துவிடும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// இப்ப்டி ஒரு பதிவுக்காகத்தானே காத்திருந்தோம். தேவ வசனம் "பைபிள் என்றொரு புத்தகம்" ஆகிவிட்டதிலிருந்தே தெரிகிறதா இந்த லூசு மாய்க்கானுக்கு புத்தி பேதலித்துவிட்டதென்று. மீண்டும் அந்தப் புதுமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. "நீ வாயைத்திறக்காதவரை உன்னை முட்டாளென்றுதான் எண்ணியிருந்தேன், உன் வாயைத்திறந்து அதை நிரூபித்துவிட்டாய்". இரண்டு மூடர்களின் வாத்ம் சூடுபிடித்துவிட்டது. வாசகர்களுக்குக் கொண்டாட்டம்தான்! // ஏய் சோலு சொலிஷனு...ஆத்தும பிசினு...ஏதோ ஒரு கண்றாவி... உன்னுடைய பாராட்டுக்காக நான் இத எழுதல...நீ புத்திசாலியா இருந்தா சும்மா வேடிக்கை பாரு... கையாலாகாத நாயி ஊளையிட்டதாம்... டுபாக்கூரு..!
உன்னைத் திரும்ப திரும்ப நான் நாயின்னு மனப்பூர்வமா தைரியமா சொல்லக் காரணம் என்னன்னு தெரியுமா உன்னை பைபிள் கூட நாயின்னு தான் சொல்லுது... அதனால் தான் தைரியமா சொல்றேன்... ஏற்கனவே உன்னை நேரடியா வரச்சொன்னேன் முதுகெலும்பில்லாத மண்புழுவைவிட கேவலான நீயும் உண்மையத் (truth seekers..!) தேடிக்கிட்டு இருக்கே எப்பவாது கண்டுபிடிச்சா சொல்லிவிடு...
நீ நரகத்தை நம்பறதில்லையேனு பாக்கறேன்... ஆனாலும் உனக்கு இதுதான் பதில்... இது சர்வவல்ல தேவனும் கர்த்தருமாகிய இயேசுகிறித்து சொல்லிச் சென்றது... Mat 5:22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான். N.B: தனிப்பட்ட முறையில் தாக்கி எதிர்தரப்பை பெலவீனப்படுத்த முயற்சிப்பதைவிட நியாயமான வாதத்தின் மூலம் ஆதாயப்படுத்த முயற்சிப்பது நலமானது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// மேலேயுள்ள நிர்வாகியின்பதிவு விவிலியத்தின் மதிப்பை குறைத்து மதிப்பிடுகிறது என்று யாரும் கருத வேண்டாம். வேத புத்தகத்தின் மதிப்பை அது எவ்விதத்திலும் குறைக்கவில்லை. யாராலும் அதன் மதிப்பை குறைக்கவும் முடியாது! ஏனெனில் ஜீவனுள்ள தேவனின் வார்த்தைகள் உள்ள புத்தகம் வேதாகமம் ஆகும். மேலும் பைபிளில் உள்ள அனைத்தும் உண்மை என்பதையும் நித்திய ஜீவனை அடைய சரியான நேர்வழி வழி என்பதையும் நான் அறிவேன். வேறு எந்தஒரு புத்தகத்துக்கு இல்லாத மகிமையாகிய வேதபுத்தகத்தை முழு மனதோடு வாசிக்கும் போதே ஆவியாகிய தேவன் நம்மோடு இடைபடுவதை அறியமுடியும் ஆனால் வேதாகமத்துக்கு வெளியே தேவனின் வார்த்தைகள் எதுவும் இல்லை என்பதை என்னால் ஏற்க்க முடியாது. தேவனின் வார்த்தைகள் செயல்கள் அனைத்த்ம் ஒரு புத்தகத்துக்குள் அடங்கியுள்ளது என்று சொல்வது தேவனின் மதிப்பை குறைத்து மதிப்பிடுவது என்றே நானும் கருதுகிறேன். மேலும் வேத புத்தகத்தில் உள்ள "ராட்சசர்கள்" "தேவர்கள்" "தேவ குமாரர்கள்" போன்ற பல வார்த்தைகளுக்கு சரியான விளக்கம் வேதத்தில் இல்லை. இதுபோன்ற வார்த்தைகளுக்கு அவரவர் அவரவர் விருப்பத்துக்கு கட்டுக்கதையை தயாரித்து வழங்குகின்றனர். இதன் அடிப்படையில் நான் மீண்டும் சொல்லும் கருத்து என்னவெனில்: "வேதாகமத்தில் எல்லாம் அடங்கியுள்ளது அதற்க்கு மேல் எனக்கு எதுவும் வேண்டாம்" என்று கருதுபவர்களை நான் குறை எதுவும் சொல்லவில்லை! ஆம்! ஒரு மனிதனின் மீட்புக்கு தேவையான அனைத்தும் வேதாகமத்தில் அடங்கியிருக்கிறது என்பது உறுதி! அது ஒன்றை அறிந்தால் மட்டுமே போதுமானது வேறு எதுவும் தேவை இல்லை. ஆனால் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாத மற்றவர்களுக்கு வேதாகமம்தான் உண்மையானது என்பதை விளக்க வேறு எங்காவது இருந்து ஆதாரங்களை திரட்டியே ஆகவேண்டும்! அதன்மூலமே நாம் வேதாகமம் உண்மை என்பதை புரியவைக்க முடியும் பிறமத சகோதரர் ஒருவரிடம் "கர்த்தரின் வேதம் குறைவற்றது" என்று பைபிள் சொல்கிறது எனவே அது குறைவற்றது என்று சொன்னால் :முதலில் பைபிள் உண்மையானது என்பதற்கு என்ன ஆதாரம்? அதுவும் "நீ கையில் வைத்திருப்பது தான் கர்த்தரின் வேதம் என்பதற்கு என்ன ஆதாரம்?" என்று கேட்பார்கள். சரி பைபிளில் இவ்வாறு வசனம் உள்ளது அதனால் அது உண்மைதான் என்று நீங்களும் நானும் ஏற்றுக்கொள்ளலாம் அனால் பைபிளை பிற வேதங்களை போல் ஏதோ கட்டுக்கதை என்று எண்ணுபவர்கள் அதை ஏற்க்க மாட்டார்கள். இங்கு எழுதப்படும் செய்திகள் வெறும் கிறிஸ்த்தவர்களின் திருப்திக்காகவோ அல்லது கிறிஸ்த்தவர்களின் அன்பை பெறுவதற்காகவோ அல்ல. இங்கு வரும் அனைவரும் உண்மை வழியை அறியவேண்டும் என்பதற்காகவே எழுதப்படுகிறது. எனவே வெறும் வேதாகம வார்த்தைகளை மட்டும் வைத்து எழுதிக்கொண்டு இருந்தால் பிறமத சகோதரர்களுக்கு இங்குள்ள செய்திகளை வாசிக்க, உண்மையை அறிய விருப்பம் வராது என்பதற்காகவே ஏன் வாழ்வில் நடந்த அனேக உண்மை சம்பவங்கள் அடிப்படையில் கருத்துக்களை எழுதி வருகிறேன், பொய்யான கட்டுகதைகள் எதையும் இங்கு எழுதவில்லை. நடந்த உண்மைகளை எழுதுவதற்கு எந்த ஒரு தடங்களும் எங்கும் இல்லை! கிறிஸ்த்தவர்களுக்கு பாடம் சொல்பவர்கள் சகோதரருக்குள்ளே குற்றம்சொல்லி கொண்டு திரிபவர்கள் சொல்லிவிட்டு போங்கள், அதில் எனக்கு ஆர்வமில்லை! காரணம் "ஒரு மனிதனின் எதிரி அவன் வீட்டாரே" "ஒரு தீர்க்கதரிசிக்கு அவன் சொந்த வீட்டில் மதிப்பில்லை" போன்ற இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் எனது வார்த்தைகளின் உண்மைகளை ஏற்கும் மனபக்குவம் அனேக கிறிஸ்த்தவ சகோதரர்களுக்கு இல்லை. எனவே அவர்களுக்காகவே பதிவுகளை தந்துகொண்டு இருப்பதில் எந்த பயனும் இல்லை என்றே நான் கருதுகிறேன். அதற்காக அவர்கள் தவறான பாதையில் உள்ளார்கள் என்றும் நான் சொல்லவில்லை. என்னுடைய பணியும் அழைப்பும் வேறு அவர்களது அழைப்பு வேறு ! ஒரு உண்மையான நேர்மையான பிறமத சகோதரனும் என் வார்த்தைகளை அனுபவங்களை படிப்பதன் மூலம் நான் அறிந்துகொண்டதுபோல ஜீவனுள்ள தேவனை அவர்களும் அறியவேண்டும் என்பதே என்னுடைய முக்கிய குறிக்கோள்! இதற்க்கு பிற அழைப்பை உடைய கிறிஸ்த்தவர்கள் தடைக்கல்லை வைக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
தேவனின் மகத்துவத்தை குறைக்காத உங்களுடைய கருத்துக்களை நீங்கள் தாராளமாக பதிவிடலாம். இங்கு யாருடைய கருத்துக்களும் முன்னறிவிப்பின்றி தகுந்த காரணம் இன்றி நீக்கப்படாது. அவர்களே முன்வந்து நீக்கிகொண்டால் அதற்க்கு நிர்வாகி பொறுப்பும் அல்ல! // வரிக்கு வரி எனது (chillsam) மறுப்பு இந்த பொருளில் தொடரும்...
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இது "இறைநேசன்" என்ற பெயரில் சுந்தர் வெளியிட்டது...
இந்த தளத்தில் கிறிஸ்த்தவ கருத்துக்கள் அதிகம் பதிவிடப்பட்டிருந்தாலும் இது கறிஸ்த்தவத்தை மட்டுமே விவாதிக்கும் ஒரு தளம் என்று கருத வேண்டாம். எந்த ஒரு மதத்தில் உள்ள நல்ல கருத்துக்களையும்/ வெளிப்பாடுகளையும் இறைவனின் திட்டங்களையும் அறிந்தவர்கள் இங்கு பதிவிடலாம் அது பற்றி விவாதிக்கலாம். சில தளங்களில் தங்கள் கருத்துக்கு ஒவ்வாத அல்லது தங்களுக்கு சிறிதேனும் பிடிக்காத கருத்துக்கள் இருந்தால் உடனே நீக்கிவிடுவதுபோல, இங்கு நீக்கப்படுவது இல்லை. அனால் பிறரை மட்டமாக விமர்சித்து தர குறைவான வார்த்தைகளுடன் வரும் பதிவுகள் இங்கு அனுமதிக்கப்படாது. இங்கு எழுதப்படும் கருத்துக்களுக்கு பிற தளங்களில் விமர்சனம் எழுதுவது பற்றி யாரும் கவலைப்படவேண்டாம்! நாம் கடமையை செய்வோம் அதற்க்கான பலனை விளையச்செய்வது இறைவனாலே ஆகும்! மேலும் கிறிஸ்த்தவத்தை மட்டுமே பிடித்துகொண்டு மற்ற எல்லா மதத்தையும் கடுமையாக தாக்கி எழுதும்பதிவுகளும் இங்கு தேவையில்லை. அதுபோல் கிறிஸ்த்தவத்தை பற்றி மட்டும்தான் எழுத வேண்டும் என்று யாரும் எதிர்பாத்து எதிர் கருத்துக்களை பதிவிட வேண்டாம். இந்த உலகம் தோன்றியதில் இருந்து எந்த ஒரு மூலையில் யார் ஒருவரால் செய்யப்படும் காரியமும் இறைவனுக்கு தெரிந்தே நடைபெறுகிறது. அவரின்றி இந்த உலகில் எதுவும் இல்லை. இவ்வாறிருக்கையில், பைபிள் என்றொரு புத்தகத்தை மட்டும் வைத்துகொண்டு அதற்க்கு உள்ளேயா? வெளியேயா? என்று பார்ப்பது அவசியமற்றது என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் திரு விவிலியத்திலேயே மேலும் அனேக புத்தகங்கள் பற்றி மேற்கோள் காட்டப்பட்டுள்ளன: (உதாரணமாக யாசேரின் புத்தகம்/ நாத்தானின் பிரபந்தம் மற்றும் பல) மேலும் RC பைபிளில் உள்ள பல ஆகமங்களை CSI பைபிளில் காணவில்லை. இவற்றை எல்லாம் நீக்க யார் அனுமதி கொடுத்தார் என்பது புரியவில்லை. இவ்வாறு இருக்கையில், இறைவனின் வார்த்தைகள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். அத்தோடு முக்கியமாக நான் கருதுவது என்னவெனில் கடவுளை தேடி அவருக்கு பயந்து அவர் வாத்தைகள்படி வாழ தங்களை அர்ப்பணிப்பவர்களுக்கு அனேக உண்மைகளை/ வழிகளை இறைவன் தெரிவிக்கலாம் என்பதை கீழ்க்கண்ட விவிலிய வசனம் தெரிவிக்கிறது. சங்கீதம் 25:14 கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; சங்கீதம் 25:12 கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
எனவே இறைவன் வெளிப்படுத்தும் எந்த காரியமானாலும் தயக்கமின்றி இங்கு எழுதலாம்! நம்புகிறவர் நம்பட்டும், நம்பாத ஞானிகள் விட்டுவிடட்டும்!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இனி நம்முடைய கருத்துடன் உடன்படாதவர்களைப் போலியாக "நண்பர்" என்றோ "சகோதரர்" குறிப்பிடுவதைவிட "திரு"என்று விளிக்க யோசிக்கிறேன்;
இங்கே திரு.சுந்தர் அவர்கள் தனது தளத்தில் பரிசுத்த வேதாகமத்தைக் குறித்து போகிற போக்கில் மிகச் சாதாரணமாகக் குறிப்பிட்டுள்ளதை "யௌவன ஜனம்" வன்மையாகக் கண்டிக்கிறது;
அவருக்கு நிறைய வேதஞானம் இருப்பதுபோலக் காட்டிக்கொண்டாலும் அது வெறும் மாயை என்பதை கிறித்தவ நண்பர்கள் விரைவில் புரிந்து கொள்ளுவார்கள்;
இதுபோன்ற ஆட்களுக்காகவே எனது கருத்தாகவோ கொள்கையாகவோ வேதத்திலிருந்தோ எதையும் குறிப்பிடுவதைத் தவிர்த்துவருகிறேன்;
இவர்களுடன் சரிக்குசரியாக மல்லுக்கட்ட நான் ஆயத்தமானாலும் அதன் பலன் ஒன்றுமில்லை;அவரவருக்கென்று ஒரு தனிரூட்டு போட்டு யோசிப்பவர்களிடம் என்ன செய்ய..?
அதை ஒருவேளை அவர் தணிக்கை செய்யவும் வாய்ப்பிருக்கிறது; நீக்கிவிடவும் வாய்ப்பிருக்கிறது; அடிமேல் அடி அடித்தால் அம்மி நகரும் என்பது போல கொஞ்சம் லெப்ட் அன்ட் ரைட் வாங்கினால் தம்முடைய சொந்த கருத்தையே மறுத்து தடாலடியாக விழவும் ஆயத்தமாக இருக்கக்கூடியவர்;
இது போல தண்ணீரைப் போலத் தளும்புவோர் எந்த கொள்கையையும் அறிவிக்கக்கூடாது;அதற்கு ஆவியானவரைத் துணைக்கு அழைக்கவும் கூடாது;ஆவியானவர் சொன்னதாகச் சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்பது ஆவியினால் நடத்தப்படுவதாகச் சொல்வதற்கு எதிராகவும் ஆவியானவருடைய செயல்பாடுகளுக்கு இழுக்காகவும் அந்நியர் தூஷிக்கவும் ஏதுவாக இருக்கிறது;
இவர் "அந்த" ஆட்களைத் திருத்தப்போகிறேன் என்று அங்கே போய் ஆனமட்டும் போராடிப் பார்த்துவிட்டு ஓய்ந்துபோன காரியங்கள் இங்கேயே தளத்தில் கொட்டிக் கிடக்கிறது;
எனவே தற்போது தனக்கென்று ஒரு புதுதளம் அமைத்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்திலிருக்கும் அவர் பழைய களிப் பானையை எடுத்து கிளறத் துவங்கியிருக்கிறார்;
நான் நேரடியாக சொல்கிறேன், திரு.சுந்தர் (இறைவனாகிய சுந்தர்..?) அவர்களே உங்கள் கருத்துக்களாகிய உளறல்கள் பலவற்றை நீங்கள் எனக்கு அறிவுறுத்தியபடியே நான் கண்டும் காணாமல் போயிருக்கிறேன்,
ஆனால் இது மிகவும் துணிகரமானது; போகிற போக்கில் நீங்கள் குறிப்பிட்ட "பைபிள் என்றொரு புத்தகத்தை மட்டும் வைத்துகொண்டு.." எனும் வார்த்தையை உங்களுக்கு தைரியமிருந்தால் எனது தளத்தில் பதித்துப்பாருங்கள்; உங்களை முழுவதும் தோலுரித்துக் காட்ட நான் தயாராக இருக்கிறேன்; நீர் யாராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை;
உமக்கு பைபிளைக் குறித்த சரியான வரலாறு தெரியாவிட்டால் அதை முறையாகக் கற்றுக் கொண்டு வாரும்; அல்லது அதைக் குறித்துப் பேசுவதை நிறுத்தும்; மற்றபடி பைபிளை அதாவது பரிசுத்த வேதாகமத்தைக் குறித்து அள்ளித் தெளித்த கோலம் போல கருத்துக்களை வெளியிடுவதை உடனே நிறுத்தியாக வேண்டும்;
நீர் புத்தரையோ குரானையோ புகழ்வதைக் குறித்து நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை; எத்தனையோ திரியை நீக்கிவிட்டு மீசையைத் துடைத்துக்கொண்டதுபோல நீர் இந்த திரியை நீக்கியாக வேண்டும்; இதற்கு மேல்விவரம்- விளக்கம் எதையும் எந்த கொம்பனாலும் சொல்லிவிடமுடியாது என்று உறுதியாக நம்புகிறேன்;அதாவது உமது கருத்துக்களை நியாயப்படுத்தும் எந்த சமாளிப்பும் இங்கே நமது கரத்தில் தவழும் பரிசுத்த வேதாகமத்தில் இல்லை;
கேவலமான அந்த "குரான்" சொல்லுகிறது,அதில் ஏதேனும் சந்தேகமிருந்தால் இங்கே வரவேண்டும் என்று;ஆனால் நீர் சொல்லுகிறீர் இதில் ஏதேனும் சந்தேகமிருந்தால் மாற்றுவேதங்களையும் ஆராயவேண்டும் என;உம்மைப்போன்ற ஆட்களை எதால் அடிப்பதோ தெரியவில்லை,போங்கய்யா..!
கொடுக்கப்பட்ட இதையே புரிந்துக்கொள்ள இயலாமல் ஞானிகளெல்லாம் பைத்தியமாகிவிட்டனர்; இன்னும் ஆதாரப்பூர்வமான கைப்பிரதிகளோ பொதுவான கிறித்தவ விசுவாசம் சார்ந்த கருத்துக்களோ இல்லாத தள்ளுபடியாகமங்களையும் இந்த வேதத்தில் சேர்த்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்குமோ? நீர் "கொக்கு" தலையில் வெண்ணையை வைப்பதற்குள் உமது கண்கள் அந்த "கொக்கு"களால் கொத்தப்படுவதாக..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)