இந்த ஊழியர் ஒரு மனிதனின் தினசரி செலவுக்காக (உணவு, தங்கும் இடம் போன்றவை) அந்த தொகையை கேட்கிறாரா என்பது தெரியவில்லை. அது அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு நாளைக்கு 133 ரூபாய் என்பது மிகவும் குறைந்த தொகையே. இதை கேட்கும் ஒருவரை பார்த்து (இதை விசாரித்து உறுதி செய்து சொல்ல வேண்டியதும் நீங்களே) பரிசுத்த ஆவியை விற்கிறார் என்று சொல்வது சரியானது அல்ல.
நண்பரே, இது நீங்களோ நானோ பரிசோதித்து அனுமதியளிக்கும் காரியமல்லவே... பரிசுத்தாவியானவர் சம்பந்தமான விவகாரமல்லவா..? எனவே இதுபோன்ற காரியங்களின் உண்மைத்தன்மையை சோதிக்க வேண்டுமானால் ஆதி அப்போஸ்தலர்களின் மரபை நோக்கவேண்டும்.கடந்த 19 நூற்றாண்டுகளிலும் சரி,திருச்சபை வரலாற்றிலும் சரி பரிசுத்த ஆவியின் வரங்களுக்காக பயிற்சியளிக்கும் ஒரு பட்டறை நடைபெற்றதில்லை.வேதகலாசாலை கூட பணம் கட்டி நடைபெற்றதில்லை.குறிப்பிட்ட பணத்தை முதலீடு செய்து ஒரு பயிற்சியை எடுப்பவர்கள் அதைவைத்து சம்பாதிக்கவே நினைப்பார்கள், அது மனித இயல்பு.
அப்படியானால் தொடர்ந்து மூன்று மாதம் வேலைவெட்டியெல்லாம் விட்டுவிட்டு இந்த பட்டறைக்கு செல்லுவோர் நிச்சயமாக தியாகமுள்ளவர்களோ ஏழை எளிய மக்களோ அல்ல.ஏனெனில் அவர்கள் பயிற்சி மையம் அமைந்திருக்கும் வட்டாரத்திலேயே எண்ணற்ற கிராம ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலருக்கு இலவசமாக இந்த பயிற்சி பட்டறையில் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை. ஏனெனில் அவர்கள் காரியத்தில் கண்ணாக இருக்கிறார்கள்,நம்மைப் போன்ற எளியவர்களின் ஐயத்தை நீக்குவதையோ நமக்கு விளக்கமளிப்பதையோ அவர்கள் விரும்பாமல் நம்மை புறக்கணிக்கிறார்கள்.எனவே நாம் என்ன செய்கிறோம் என்றால் இதுபோன்ற ஊழியங்களையும் ஊழியர்களையும் நம்பவேண்டாம் என்று எச்சரிக்கிறோம். அதையும் மீறி ஓடிச்சென்று விழுபவர்களைக் குறித்து நாம் கவலைப்படுகிறதில்லை.
அவர்கள் சொல்லுவதுபோல இதுபோல 90 நாளோ அல்லது 15 நாள் குறுகிய கால பயிற்சியோ ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள உதவாது. ஆவியானவரின் நிறைவு என்பது அருட்கொடையாகும்.அது ஒரே நிமிஷத்திலும் வரும்,ஒரு வருடமும் ஆகும்.ஆயத்த நிலையிலுள்ள தூய உள்ளமே இதற்கான ஒரே தகுதியாகும். அதைப் பெற்றுத் தர ஸ்பெஷலிஸ்ட் எல்லாம் அவசியமில்லை. இதுவும் மற்றொரு பிரசங்க மேடையாகவும் சுய இஷ்டமான ஆராதனையாகவும் சொந்த் வியாக்கியானங்களாகவுமே இருக்கப்போகிறது. ஒரே ஒரு ஆறுதல் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சில மாதங்கள் ஓய்வெடுக்கப்போகிறோம்.அதை நேரடியாகச் சொல்லிவிட்டு நேர்மையுடன் அவர்கள் செய்யட்டும், நாம் சுற்றுலா போகும்போது எப்படி வெளிப்படையாக சுற்றுலா என்று அறிவித்துவிட்டு செய்கிறோமோ அதுபோல. அதைவிட்டுவிட்டு பரிசுத்தாவியைப் பெற பள்ளிறை அல்லது பட்டறை என்று அறிவிக்கக்கூடாது. அதை உள்ளூர் சபையிலுள்ள சாதாரணமான நிலையிலுள்ள ஏழை ஊழியரே செய்துவிடமுடியும். ஓரிரு நாட்களில் எளிமையாகப் பெறக்கூடிய இறைவனின் அருட்கொடையை சிங்காரித்து கலெக்ஷன் யுக்தியாக மாற்றவேண்டாம் என்கிறோம். விட்டால் இன்னொன்றும் சொல்லுவார்கள், இந்த பயிற்சியின் முடிவில் நீங்கள் பரி.ஆவியின் வரங்களைப் பெறாவிட்டால் பணம் வாபஸ் என்பதாக.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இந்த ஊழியர் ஒரு மனிதனின் தினசரி செலவுக்காக (உணவு, தங்கும் இடம் போன்றவை) அந்த தொகையை கேட்கிறாரா என்பது தெரியவில்லை. அது அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு நாளைக்கு 133 ரூபாய் என்பது மிகவும் குறைந்த தொகையே.
இதை கேட்கும் ஒருவரை பார்த்து (இதை விசாரித்து உறுதி செய்து சொல்ல வேண்டியதும் நீங்களே) பரிசுத்த ஆவியை விற்கிறார் என்று சொல்வது சரியானது அல்ல.
திரு.எசேக்கியா ஃப்ரான்ஸிஸ் அவர்கள் நடத்த இருக்கும் பரிசுத்தாவி ஸ்கூல் வழியே இன்று சென்றிருந்தேன். அற்புதமான சூழலில் ஆர்ப்பாட்டமாக இடத்தை வளைத்துப்போட்டு கேம்ப் செண்டர் கட்டியிருக்கிறார்கள், நல்லது. ஆனாலும் இந்த் கேம்ப் செண்டர் அமைந்துள்ள சுற்றுவட்டாரத்தில் கவனிப்பாரற்ற நிலையில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றன. அங்கிருப்போரெல்லாம் இந்த பரிசுத்தாவியைப் பெறவேண்டுமானாலும் என்ன தகுதி இருக்கவேண்டும் ? ஏன் அவர்களை சந்திக்க இவர்கள் செல்லுகிறதில்லை ? அந்த கிராமங்களின் ஏழை மக்களின் மூடபழக்க வழக்கங்களிலிருந்து மீட்கப்பட்டு ஆண்டவரையறிய திட்டமொன்றை ஏன் இவர்களால வகுக்கமுடியவில்லை ? இதெல்லாம் என் மனதில் தோன்றிய கேள்விகள்..! ஐந்து ந்ட்சத்திர ஹோட்டலில் பெருந்தனக்காரர்கள் கூடி வறுமை ஒழிப்பைக் குறித்து ஆலோசித்த கதைதான்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
The thousands they get for these courses means it s wrong, but if they mention it s only for our stay and food and etc means it s k....thousands to hear voice of god r to preach mightily means its a great comedy or tragedy wat to say i dont know but both will apply because we can hear god's voice and preach mightily by sitting at his feet rather than going to this meetings...Again i say if the amount s for food and etc means its k....but according to my opinion no can make us to preach mightily r no one can make us work god's gifts, today in many magazines we can see courses tat makes u prophets and apostles i dont know how they can make everyone prophets and apostles...in bible it says God appoints apostles and prophets but today if we pay for courses we can be apostles and pophets this s totaly wrong.... Today comercialisim and corprate techniques are ocuppying the churches if Jesus would have been here he would done the same thing he done at the temple of jerusalem..but unfortunately he his not with us in flesh but with us in spirit so it s for us to do the same tat is to caution people and preach wat is right...but wat s sad is most men who occuppy stages dont preach against these things and those who preach dont get these stages and r left unnoticed...so it s our duty to educate people with sound bible knowledge so tat they will follow the lord not anyone else...today people dont know wat bible says because all gifts and holyspirit s given for free and we dont have to pay anything for tat..So Bible clearly states it s for free and we dont need to pay for tat if we sit at his feet and wait for him means itself we can know wat to do and wat not to do.
I love my Lord God and Savior Jesus Christ and hence posting this. Without this fees of 12000, is it not possible to share the Love & Blessings of God to poor & the needy? Don't you have money to cover this cost if any? Still need sponsorship? You know well, Bible Says..Act-8:18 And when Simon saw that through laying on of the apostles' hands the Holy Ghost was given, he offered them money,
Act-8:19 Saying, Give me also this power, that on whomsoever I lay hands, he may receive the Holy Ghost. Act-8:20 But Peter said unto him, Thy money perish with thee, because thou hast thought that the gift of God may be purchased with money. I am not the Judge, to Judge anyone, but i believe my Lord God and Savior Jesus Christ will take care of Judgement.
Issue here is about those who can't afford even that. Brother - Rahel Eggenberger! @ if we give something, we partake in their blessing!!// One who can't afford this amount won't be blessed? I say this as my testimony...before i was nothing and JESUS CHRIST, My Lord God & Savior gave me everything and blessed. In fact, i didnt even give anything so extradionary to Him, rather i surrendered myself to Him. I respect Ministry People, but when anything comes like this financial issues....i think of someone who cant even afford that. Let me windup my opinion / comments and let God Guide All and Lets all be in His Kingdom. Praise God.
such kind of fee could never meet the salaries of all the people working and serving during this time for participants of this spiritual equipment, but board and lodging has to be provided. 1 month = 4000, 1 week = 1000, 1 day = 143 - easier how to find sponsers, but the value is for eternity: -) gods kingdom = if we give something, we partake in their blessing!!
DO NOT SELL MY SAVIOR, YOU WILL BE SOLD ONE DAY FOR A PIECE,GIVE THE SALVATION TO THE PEOPLE,WHICH YOU GOT FREELY FROM MY GOD. SHAME OF PEOPLE WHO SELL THE MINISTRY IN ORDER TO LIVE THEIR OWN LIVING-BEWARE DO NOT PLAY WITH GOD-IF YOU CONTINUE IN SELLING GODS KINGDOM YOU WILL GET THE SAME DEATH WHAT JUDAS HAD-REPENT TO REACH THE KINGDOM OF GOD YES ---------SHAME ON PEOPLE SELLING HOLY SPIRITS-HOW DARE THEY DO THIS -PLEASE DO BE AWARE OF THE ANTI CHRISTS-
அன்பர்களே.. நண்பர்களே நான் மீண்டும் மீண்டும் ஒரு காரியத்தை நினைவுபடுத்துகிறேன்;இந்த திரியானது சகோதரர் எசேக்கியா ஃப்ரான்ஸிஸ் அவர்களை விமர்சிக்க அல்ல, பரிசுத்தாவியானவரின் செயல்பாடுகளைக் குறித்த சரியான நடைமுறைகளை ஆய்ந்தறியும் நோக்கிலேயே பதிக்கப்பட்டது;
இன்றைய உலகில் ஒவ்வொருவரும் தமக்கென தனித் தன்மைகளை வளர்த்துக்கொள்ள விரும்புகிறார்கள்;அதன் பாதிப்பிலேயே சகோதரர் எசேக்கியா ஃப்ரான்ஸிஸ் பாதை மாறினார் என்பது வெளிப்படை;
ஆனாலும் நண்பர் சுவிசேஷ ஜெபக் குழு மற்றும் ஆசீர்வாத இளைஞர் இயக்கம் போன்ற வெளிப்படையான அணுகுமுறையும் நடைமுறைகளும் கொண்ட இயக்கங்கள் இன்னும் வளரவேண்டும் என்பதே என் உள்ளத்தின் அவா;
சகோதரர் எசேக்கியா ஃப்ரான்ஸிஸ் அவர்களைப் போன்றோர் பயிற்சி பெற்றது அதுபோன்ற சுயநலமில்லாத சுயசார்பில்லாத களங்களிலேயே என்பது அனைவரும் அறிந்ததே; தொடர்ந்து பரிசுத்தாவியானவரின் அபிஷேகத்தைக் குறித்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தால் நலம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இந்த ஊழியர் எப்படிப்பட்டவர் என்று எனக்கு தெரியாது. நான் இவரின் அபிமானியும் அல்ல. ஆனால் இந்த தொகை மூன்று வேளை சாப்பாட்டையும், நடுவில் கொடுக்கப்படும் டீ, காபியையும், தங்கும் இடத்தையும் சேர்த்து இருக்குமானால் இது மிகவும் மலிவான விலையே. உதாரணமாக வேறு ஊரை சேர்ந்த நான் சென்னைக்கு ஒரு வேலை விஷயமாக வருவதாக கொள்வோம். தங்குவதற்கு ஒரு மோசமான லாட்ஜை எடுத்து கொண்டாலும் ஒரு நாளைக்கு 200 ரூபாய் ஆகிறது. ஒருவேளை சாப்பாடு 30 ரூபாய் என்று வைத்து கொண்டால் ஒரு நாளைக்கு 90 ரூபாய் ஆகிறது. டீ, காபிக்கு 10 ரூபாய் என்று வைத்து கொண்டால் ஒரு நாளின் மொத்த செலவு 300 ரூபாய் ஆகிறது. ஆக 300 ரூபாய் என்பது சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஆகும் செலவு. (சொந்த வீடு வைத்துள்ளவர்கள் நிலம் மற்றும், வீடு கட்டின செலவு, பராமரிப்பு செலவு முதலியவைகளை கூட்டி தங்கள் வாழ்னாளை வகுத்து கொள்ளவும்) பத்து நாளைக்கு 3000 ஆகும் காரியத்துக்கு 1000 மட்டுமே கொடுக்க வேண்டியிருப்பதால் பத்து நாளைக்கு 2000 ரூபாய் லாபம். 90 நாளைக்கு 7000 என்பது மிக மிக மிக மலிவான விஷயமாகும்.
வெளியூரிலிருந்து இந்த கூட்டம் நடக்கும் ஊருக்கு வேறு வேலைக்காக செல்பவர்கள் இந்த இடத்தை லாட்ஜ் போன்று உபயோகித்தால் அவர்களுக்கு ரூபாய் 2000 (பத்து நாளைக்கு) மிச்சம். இவர் உண்மையான ஊழியராக இருந்து நாமும் உண்மையாக செல்வோம் எனில் பரிசுத்த ஆவியின் அனுபவம் இலவசம்.
(போவதற்க்கு முன் உபவாசம் கோர்ஸ் இல்லை என்பதை உறுதிபடுத்தி கொள்ளவும்)
(வனாந்திரத்தில் இயேசு என்ற கட்டுரைக்கும் இந்த கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.)
-- Edited by SANDOSH on Sunday 22nd of August 2010 07:32:42 PM
Paul222: // சில கிறிஸ்தவ ஊழியக்காரர்களின் தவறான செய்கைகளால் ஆண்டவரின் நாமம் தூஷிக்கப்படுவது வேதனையாக இருக்கிறது. // யாரோ சில கிறித்தவ ஊழியர்களல்ல,நண்பரே... இவர்களெல்லாம் வெகு ஜனக்கூட்டத்தை ஈர்க்கும் கவர்ச்சி (யாக்கிக் கொண்ட) மிக்க தலைவர்கள்; இவர்களெல்லாம் பிரதான மேடைகளை அமைத்து அரசியலிலும் சமூகத்திலும் பிரதானமானவர்களுடன் நெருக்கத்தை வைத்துக் கொண்டு சத்தியத்தை வியாபாரமாக்கிக் கொண்டிருப்போர்;
இவர்கள் பிரபலமாகவும் ஊடகங்களிலும் அதிகமாகத் தென்படுவதாலும் இவர்கள் சொல்வதெல்லாம் சரி என்பது போல ஏழை எளிய அப்பாவி மக்களுக்கு ஒரு தவறானதொரு அபிப்ராயத்தைத் தோற்றுவித்து விட்டார்கள்;
இவர்கள் போட்டுச் சென்ற பாதையிலேயே அடுத்த தலைமுறை நடந்தாக வேண்டும்; எனவே இப்போதாவது விழித்துக்கொண்டு எது சரியானது என்பதை உரக்கச் சொல்லும் கடமை நமக்கு இருக்கிறது;அந்த உரிமையும் நமக்கு உண்டு.
Paul222: // சகோதரர் சில்சாம் மனவேதனை புரிகிறது. இவர்களை பின்பற்றும் மக்கள் அவ்வளவு எளிதாக நாம் கூறுவதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.ஆனால் அதற்காக சும்மா இருக்காமல் ஏதாவது செய்துதான் ஆகவேண்டும். //
ஏதாவது செய்யணும், என்ன செய்யலாம் என்று கூறவே இந்த திரியைப் பற்றவைத்தேன்; நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டவண்ணமாக ஒரு குறிப்பிட்ட நபரை தூஷிப்பதோ குற்றஞ்சாட்டுவதோ என்னுடைய நோக்கமல்ல; மாறாக இளம் சீடர்கள் சரியான திசையில் பயணிக்க உதவும் ஒரு வழிகாட்டியாக இருக்கவே முயற்சிக்கிறேன்;
இந்த பிரபலங்களால் ஒரு தூர தேச சம்பவமாக வர்ணிக்கப்படும் பரிசுத்தாவியானவரின் எளிமையான செயல்பாடுகளை தள நண்பர்கள் தங்கள் தனிப்பட்ட அனுபவத்தோடு இங்கே பகிர்ந்துகொண்டால் அது ஒரு இலவசக் கையேட்டைப் போல விளங்க வாய்ப்புண்டு;இந்த திரியும் முழுமையடையும்;அதிலும் வெளிப்படக்கூடிய வேதத்துக்குப் புறம்பான காரியங்களை நாம் ஒருவருக்கொருவர் சரிசெய்து கொள்ளமுடியும்;
நாம் எல்லாவற்றிலும் தேறினவர்களாக இருப்பதால் நம்மை ஆண்டவர் நேசிக்கவில்லை;நாம் தேறினவர்களாக மாறுவதற்கான நம்முடைய முயற்சிக்காகவே ஆண்டவர் நம்மை நேசிக்கிறார்;நாம் முற்றிலும் தேறினவர்கள் ஆவதே உன்னத நோக்கமாம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Conducted once or twice a year for a selected number of 500-700 persons for ten days.
The purpose is to raise and train potential leaders and help them to know and use their callings and gifts to the maximum.
Conducted mainly by pastors, evangelists, full time workers and also those who are doing part time Ministry with a Ministry call.
Over 10,000 believers have been trained so far and are being used mightily by our Lord in their churches and ministries.
Any believer who has a zeal to work for the Lord with signs and wonders should attend this.
Highly suggested for Carecell leaders, part time and full time workers.
The Topics handled:
Spiritual Warfare - Faith and Holiness - Art of Praise and Worship - Ministry Gifts - Angels - The Authority of a Believer - Excellence of Intercession - Evangelism - The Gifts and Fruits of the Holy Spirit - Goal Setting and Time Management
Conducted twice or thrice a year for a period of three months. 25 to 30 candidates who are mostly full time workers are selected within the age group of 18 to 40
The 150 students who have been trained in our schools of Holy Spirit are being mightly used by God.
Letters of testimonies of miracle, signs and wonders taking place in their Ministries are streaming into our office.
They are having a break through in their life and Ministry, only after finding out their calling and effectively equipping themselves.
The School of the Holy Spirit is the right place for young people who are trained to be a mighty preacher. Here their calling and Ministry gifts are confirmed.
The gifts of the Holy Spirit and the anointing fire is kindled and an indepth teaching on the Word of God is instilled and they are taught to "rightly divide the Word of Truth"
Conducted twice or thrice a year for a period of three months. 25 to 30 candidates who are mostly full time workers are selected within the age group of 18 to 40
The 150 students who have been trained in our schools of Holy Spirit are being mightly used by God.
Letters of testimonies of miracle, signs and wonders taking place in their Ministries are streaming into our office.
They are having a break through in their life and Ministry, only after finding out their calling and effectively equipping themselves.
The School of the Holy Spirit is the right place for young people who are trained to be a mighty preacher. Here their calling and Ministry gifts are confirmed.
The gifts of the Holy Spirit and the anointing fire is kindled and an indepth teaching on the Word of God is instilled and they are taught to "rightly divide the Word of Truth"
Conducted twice or thrice a year for a period of three months. 25 to 30 candidates who are mostly full time workers are selected within the age group of 18 to 40
The 150 students who have been trained in our schools of Holy Spirit are being mightly used by God.
Letters of testimonies of miracle, signs and wonders taking place in their Ministries are streaming into our office.
They are having a break through in their life and Ministry, only after finding out their calling and effectively equipping themselves.
The School of the Holy Spirit is the right place for young people who are trained to be a mighty preacher. Here their calling and Ministry gifts are confirmed.
The gifts of the Holy Spirit and the anointing fire is kindled and an indepth teaching on the Word of God is instilled and they are taught to "rightly divide the Word of Truth"
SPONSORSHIP
One person for STC ( Rs1000/- )
One person for the School of the Holy Spirit ( Rs7000/-)
மேற்கண்ட அறிவிப்பை திரு.எசேக்கியா ஃபிரான்ஸிஸ் அவர்களது தளத்தில் கவனித்தேன்; இதைக் குறித்தும் இன்னும் பல முன்னணி தமிழ்நாட்டு ஊழியர்களைக் குறித்தும் ஒரு குறிப்பிட்ட தளத்தில் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டுள்ளது;என்னுடைய நோக்கம் அதுவல்ல,என்னுடைய அழைப்பும் அதுவல்ல;
ஆனால் இந்த தளத்துக்கு வந்து செல்லும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு சத்தியத்தைக் குறித்த விழிப்புணர்ச்சியை உண்டாக்க முயற்சிக்கிறேன்; அதற்கு சக ஊழியன் என்ற முறையிலும் கர்த்தருடைய பந்தியில் நானும் பங்கேற்பதாலும் உரிமை உண்டென எண்ணுகிறேன்;
திரு.எசேக்கியா ஃப்ரான்ஸிஸ்அவர்களது அறிவிப்பிலுள்ள சர்ச்சைக்குரியதும் ஆராய்ச்சிக்குரியதுமான செய்தி பரிசுத்த ஆவியைக் குறித்த பயிற்சிக்கு பணம் பெறுவதா என்பதே;
இது பணத்தினால் அந்த ஆவியைப் பெற முயற்சித்து பேதுருவினால் சபிக்கப்பட்ட சீமோனை நினைவுபடுத்தவில்லையா?
"சீமோன் என்று மறுபேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.
தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்.
அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.
நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்தஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.
உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.
நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.
அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.
(அப்போஸ்தலர்.8:9 முதல் 24 வரை )
மேற்கண்ட பகுதியில் மிகத் தெளிவாக இரண்டு காரியங்களை கவனிக்கிறோம்; பரிசுத்த பேதுருவின் மூலம் ஆவியானவர் நேரடியாக செயல்படுகிறார்; அதாவது ஆவியானவரின் அதிசயத் தொடலும் அபிஷேகமும் உடனுக்குடன் நடக்கிறது;அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு சீமோன் என்பவன் அந்த அற்புத வல்லமையை பணத்தினால் பெற எண்ணுகிறான், சபிக்கப்பட்டான்; ஆனால் இன்று நிலைமை தலைகீழ்..!
அன்றைய ஊழியர் பணத்தினால் பெற முயற்சித்தவனை சபிக்கிறார்,"உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது." எத்தனை பயங்கரமான சாபம்..!
மேற்கண்ட அறிவிப்பின்படி, குறுகியகால ஊழியப் பயிற்சி பத்து நாளைக்கு ரூபாய் 1000/- பரிசுத்த ஆவியைப் பெற மூன்று மாதத்துக்கு ரூபாய் 7000/-
இது உணவு உறைவிடம் உட்பட என்றே இருக்கலாம்; பத்துநாள் பயிற்சிக்கு 1000 ரூபாய் எனில் 90 நாளைக்கு 9000 ரூபாய் ஆகும்;ஆனால் அதில் தள்ளுபடி 2000 ரூபாய்..!
இந்த மூன்று மாதமும் பயிற்சியாளர் வேலைக்குப் போனால் சம்பாதிக்கக்கூடிய சராசரி சம்பளமான 15000 ரூபாய் நஷ்டம்;
அவரை நம்பியிருக்கும் பெற்றோரோ மனைவி பிள்ளைகளோ கர்த்தரை நம்பிக்கொள்ளவேண்டியதுதான்;
அதான் படித்தவுடன் தொழிலைத் துவங்கி (அதே வழியில்?) சம்பாதிக்கப்போகிறோமே..?
என்ன ஒரு அவலட்சணமான போக்கு அல்லவா..!
பரிசுத்தாவியைப் பெற ஏஜென்ட் எதற்கு? பரிசுத்தாவியைப் பெற 90 நாட்கள் எதற்கு? பரிசுத்தாவியை 90 நாளில் பெற என்ன உத்தரவாதம்? அதற்குத் தரும் உத்தரவாதம் தரமுடியாமல் அதே பரிசுத்தாவியை ஒரே நாளில் சில மணித் துளிகளில் முழு அர்ப்பணத்தால் பெறமுடியாதா? அது தகுதியையும் மனுஷ்ய ஞானத்தையும் சார்ந்ததானால் பரிசுத்தாவியின் மேன்மை என்ன?
ஒரு காரியத்தைக் குறைகூறுவது எளிது; ஆனால் சரியாகச் செய்வது கடினம்; ஒரு காரியத்தை செய்யாதே என்று கூறுவது எளிது; ஆனால் எப்படி செய்யவேண்டும் எனப் போதிப்பது கடினம்; எப்படி செய்யவேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கவும் எப்படி செய்யக்கூடாது மற்றும் சரியானதைச் சரியாகச் செய்வது எப்படி என்று கற்றுக் கொடுக்கவும் நல்ல மாதிரிகள் இல்லை;
இந்த பரபரப்பான உலகில் பல உயிரினங்கள் வேகமாக அழிந்துக் கொண்டிருக்கிறதாம்; அதன் அழிவைத் தடுக்க விஞ்ஞானிகள் விசேஷ அக்கறை எடுத்து செயல்பட்டு ஒவ்வொரு இனத்தையும் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்; தாவரங்கள்,மிருகங்கள்,பறவையினங்கள்,நீர்வாழ் ஜந்துக்கள் என அனைத்து வகைகளிலும் ஒருபுறம் புதிய இனங்களைக் குறித்த ஆராய்ச்சியும் மறுபுறம் அழிவைத் தடுக்கும் முயற்சிகளும் தொடருகிறது; இது விரைந்து கவனிக்கப்படாவிட்டால் சிருஷ்டிப்பின் மகத்துவமான ஒன்றையொன்று சார்ந்த சமநிலை பாதிக்கப்படும்; அது இந்த உலகமே அழிவதற்குக் காரணமாகிவிடும்;
அதேபோன்று ஊழியர்களிலும் நல்ல மரபுகளை உருவாக்கித் தந்தோர் அருகி வருகிறார்கள்; நாம் உடனே செயல்பட்டால் அதுபோன்ற ஊழியர்களை அடையாளம் காணுவோமானால் நம்முடைய சபையும் காப்பற்றப்படும்; அந்த ஊழியர்கள் ஏதோ ஒரு மூலையில் கிராமங்களில் ஏழ்மையான சூழ்நிலையில் எளிய மக்களோடு அன்றாடத் தொடர்பிலிருப்பவராகக் கூட இருக்கலாம்;
மற்றபடி இந்த நிர்விசாரம் தொடருமானால் நமது சபைகளும் சீக்கிரமே சாகும்;ஊழியத்துக்குப் பணம் கேட்பது தவறில்லை;பணம் கேட்பதே ஊழியமாகி விடக்கூடாது;
இதுகுறித்து தள நண்பர்களும் தத்தமது கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)