குமரகுருபரனும் தட்சிணாமூர்த்தியுமான இயேசுநாதர்..! பிரபலமான தலைவர்களெல்லாம் அவர்தம் அன்னையரால் வளர்க்கப்பட்டவர்களே;மாவீரர்கள் எனப் புகழப்பட்ட அலெக்ஸாண்டர்,வீர சிவாஜி என...அவ்வளவு ஏன் நம்முடைய ஹீரோ இயேசுவானவர் கூட அப்படியே;
ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் எல்லாம் அறிந்த வேதமூர்த்தியானஅவர் தமது தாயார் சொன்னதைக் கேட்டு அவருக்குக் கீழ்ப்படிந்திருந்ததாக வேதம் சொல்லுகிறது;
42 அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப் போய்,
43 பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
44 அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
45 காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.
46 மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.
47 அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.
48 தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
49 அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்.
50 தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.
51 பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக் கொண்டாள்.
(லூக்கா.42 முதல் 51)
இந்த குறிப்பிட்ட வேதபகுதியில் அவரது 12 வயது முதல் 30 வயது எங்கேயிருந்தார் என்ற அனைத்து யூகம் சார்ந்த கேள்விகளுக்கும் சிறந்த கல்வியாளரும் மருத்துவருமான லூக்கா முற்றுப்புள்ளி வைக்கிறார்;
இயேசுவானவர் குமரகுருபரனாக இருந்து தம் பிதாவுக்கு உகந்ததைச் செய்து பிதாவுக்கு இணையான அவர்தம் வலதுபாரிசத்தில் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து விட்டார். (தொடரும்...)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)