இலங்கைத் தமிழர்கள் கொத்துக் குண்டுகளால் கொத்துக் கொத்தாக கொத்திப் போடப்பட்ட போது தாங்கள் துடித்துப்போய் எழுதியவையும் தவிப்புடன் கூடிய ஜெப விண்ணப்பங்களும் "இனி என்ன" என்று மனச் சோர்விலிருந்து வெளிப்பட்ட துயர வார்த்தைகளும் கண்ணில் இரத்தக் கண்ணீரையல்ல, கண்ணீரையே வரவழைத்தது; அவர்களை என் இரத்தமாக நான் நினைத்திருந்தால் ஓடோடி வந்து அவர்கள் அருகில் நின்றிருப்பேனல்லவா..?
மன்னிக்கவும்; அதே நிலை நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் வரும்; இனி இந்த வெற்று அரசியல்வாதிகளை நம்பி பயனில்லை;
இஸ்லாமியன் மார்க்கக் கல்வியின் மூலம் குழந்தைப் பருவமுதலே பிள்ளைகளை திட்டமிட்டு வளர்க்கிறான்; அவனைக் கட்டுப்படித்த முடியாத எரிச்சலில் இந்து தீவிரவாதிகள் நம் மீது பாய்கின்றனர்;
எங்கள் வீட்டில் ஒரு பூனையை வளர்த்தோம்;அதைக் கோபப்படுத்த அதன் வால் நுனியைத் திருகுவோம்;அந்த நம்மை எதிர்த்து எதுவும் செய்யமுடியாத நிலையில் அதன் எதிரே எதை வைத்தாலும் வேகமாக தின்றுவிடும்;இதுபோல அதன் எதிரே மாட்டு சாணத்தைப் போட்டுவிட்டு அதன் வாலைத் திருகி விளையாடுவோம்;அதுவும் எவ்வளவு சாணம் இருந்தாலும் வேகமாகத் தின்றுவிடும்
அதுபோல தன்னைக் கோபப்படுத்தும் இஸ்லாமியனுக்கு எதிராக ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இந்து தீவிரவாதி நம்மைத் தாக்குகிறான்; இதுதான் இவர்களுடைய தேசபக்தி..!
இதனிடையே நாம் செய்யவேண்டியது நம்முடைய வாய்ப்புகளை முழுவதுமாகப் பயன்படுத்தி சித்தாந்த ரீதியிலான ஒரு யுத்தத்தின்மூலம் கருத்தொற்றுமையினை உருவாக்கவேண்டும்;
தமிழ் ஈழம் வீழ்ந்ததோ என்றெண்ணும் போதெல்லாம் சுமார் 2500 வருடம் கழித்தும் தம் மண்ணை மீட்டெடுத்த யூத குலம் வீரமும் தீரமும் என்னை உற்சாகப்படுத்துகிறது;
நான் நிச்சயமாகக் குழப்பவில்லை,குழம்பிப் போகவுமில்லை; ஆம்,எனக்குள் இந்த மூன்று கருத்துக்களும் வந்து போவது உண்மையே;கருவறுக்கப்பட்ட தமிழர்களையும் நசுக்கப்படும் இந்திய கிறிஸ்தவர்களின் தவிப்பையும் யூதருடைய வெற்றி வரலாற்றுடன் இணைத்துப் பார்க்கிறேன்;
ஆம், நாம் வீழ்வதில்லை; ஆனால் நம் சொந்தங்களை எழுப்பிவிடவேண்டும்; இந்த காரியத்தில் சீமானைப் பின்பற்ற வேண்டும்;அவர் ரொம்ப நல்லவர் நேர்மையானவர் என்பதற்காக இப்படி சொல்லவில்லை; தான் எடுத்துக்கொண்ட பொருளை உயர்த்திப் பேசி நிமிர்ந்து நிற்கும் துணிச்சலையும் சற்று கவனிக்கச் சொல்கிறேன்;
இதே தீரத்தையும் வீரத்தையும் துணிச்சலையும் சத்தியமாகிய உடைவாளையுடைய எடுத்துப் பிடித்து உயர்த்தினால் எதிரி தரைமட்டவான் என்பது நிச்சயம். ஆங்காங்கு நசுக்கப்படும் ஏழை ஊழியர்களைக் குறித்த செய்திகளை ஒருங்கிணைத்து நமக்குள் ஒரு கருத்தொற்றுமையினை உருவாக்குவதே எமது நோக்கம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// நான் வீட்டிலே இருந்தாலும், தெருவிலே இருந்தாலும் என்னுடைய நேரத்தில், அலுவலில் குறுக்கிட இன்னொருவருக்கு சட்டப் படி என்ன உரிமை இருக்கிறது. வீதியில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றால் அவர்கள என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். நான் செல்லும் வழியில் குறுக்கிட்டு, என்னிடம் பேசி, என்னைக் கட்டாயப் படுத்தி என் நேரத்தை, அலுவலைக் கெடுக்க சட்டப் படி யாருக்கும் உரிமை இல்லை. //
நண்பரே, தங்கள் வரிகளை நீங்களே ஒருமுறை படித்துப் பாருங்கள்; Rv அவர்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிட்ட வண்ணமாக நாம் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் "டைம் என்ன " என்று கேட்பவர் முதலாக பின் தொடர்ந்து வேவு பார்த்து திருடும் பிச்சைக்காரன் வரை பல்வேறு இடையூறுகளை தினமும் சந்தித்தே வருகிறோம்;என்ன,பெண்கள் கேட்டுவிட்டால் வழிந்துக்கொண்டே வந்த வேலையை மறந்துவிடுவோம்;
இங்கே கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள துண்டுப் பிரதியை நன்றாக வாசியுங்கள்;ஆரம்பத்திலேயே குறிப்பிட்ட வண்ணமாக வம்புக்குச் சென்றது இந்து நண்பர்தான்;பதிலுக்கு அவர்களும் எகிறியிருக்கிறார்கள்;நீங்கள் சொல்வதுபோல இந்து நண்பரிடம் யாரும் வம்புக்குச் செல்லவில்லை;
கிறித்தவ சுவிசேடகர்களைப் பொறுத்தவரையிலும் நீங்கள் சொல்வது உண்மைக்கு மாறானது;சித்தாந்த ரீதியிலும் சிந்தனா மண்டலத்திலும் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்ட பகையுணர்ச்சியும் சலிப்புமே பிரச்சினைக்குக் காரணம்;
அப்படியே அவர்கள் உங்களிடம் வந்தாலும் கால நேர சூழ்நிலை பார்த்தே பேசும் வண்ணம் அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்;"யுரேகா ஃபோர்ப்ஸ்" ஆட்களைவிட இவர்கள் மோசமல்ல;வந்ததும் உங்களிடம் ஒரு நிமிடம் பேசலாமா என்றே ஆரம்பிப்பார்கள்;இந்த காலத்தில் யார் நம்மிடம் உட்கார்ந்து பேசி நம்முடைய பிரச்சினைகளைக் காது கொடுத்து கேட்கிறார்கள்?
ஆனால் இவர்கள் அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொள்வதுடன் ஜெபிக்கிறேன் என்று கூறிச் சென்று மீண்டும் வந்து சந்தித்து விசாரிப்பார்கள்;மதம் மாற்ற அல்ல அந்த பிரச்சினையின் நிலை என்ன என்பதை;நம்ம ஊர் கவுன்ஸிலர் கூட இத்தனைப் பொறுப்பாக நடந்துக்கொள்வதில்லை;இவர்களுக்கென்று சம்பளமென்று எதுவும் கிடையாது;தங்கள் ஓய்வுநேரத்தில் இப்படி இறைப்பணியாற்ற வருகிறார்கள்;
உங்களிடம் வந்து "சார் ஒரு நிமிடம் உங்களிடம் பேசலாமா " என்று கேட்டதும் புரிந்துக்கொண்டு மறுக்கலாமே;அதற்கும் மேல் பேசினாலும் "சார்,ப்ளீஸ் விட்டுடுங்க" என்று விலகிச் செல்லலாமே;
உள்ளத்தில் அன்பு இருந்தால் சகிப்புத்தன்மை என்பது தானாக வரும்; பத்து எறும்புகள் சேர்ந்து 90 யானைகளைக் கடித்து குதறிவிடும் என்பது போல உள்ளது தங்களது பதட்டம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்ல வேண்டி இருக்கிறது. எனக்கு அவ்வளவு பொறுமை இல்லை.கடைசி முறையாக, தங்கமணி எழுதுகிறார்: // இந்தியாவில் நீங்கள் முஸ்லீம் தெருக்கள் வழியே வினாயகர் ஊர்வலம்… // நீங்கள் ப்ராக்டிகல் நிலை பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் சொல்வதெல்லாம் சரியே. அதே போல ப்ராக்டிகல் நிலை பற்றி சில தலித் அமைப்புகளும் யோசிக்கலாம். பல நூறாண்டுகளாக கொடுமைகள் நடக்கின்றன, நமக்கு ஆதரவு எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்வோம், உருட்டுக்கட்டை இல்லாவிட்டால் நியாயம் கிடைக்காது என்ற முடிவுக்கு வரலாம். அப்படிப்பட்ட முடிவுக்கு வர தலித் அமைப்புகளுக்கு உங்களை விட அநேக காரணங்கள் இருக்கின்றன.
திருச்சிக்காரன் எழுதுகிறார்: // என்னுடைய வாழ்க்கையில் குறுக்கிட , என்னுடைய வேளையில் தலையிட, என்னுடைய வழியில் குறுக்கிட எந்த சட்டப்படி அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது?…// என்ன செய்யலாம் இருக்கத்தான் செய்கிறது. வீதியில் பேச அவர்களுக்கும் உரிமை இருக்கிறதே? என்னிடம் பேசாதே, என் வீட்டுக்குள் வராதே என்று சொல்லும் உரிமைதான் நமக்கு சட்டப்படி இருக்கிறது.
வீதியில் பிரசாரத்தை விடுங்கள், உங்கள் செல் ஃபோனில் கூப்பிட்டு உங்களுக்கு வேண்டாத கடனை கொடுங்கள் என்று சொல்லவும் உரிமை இருக்கிறதே! அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு தெரிந்திருக்கும் - காஸ்ட்கோ பக்கம் போனால் யாராவது வந்து ஆம்வே என்பார்கள், அவர்களை அங்கே வரவே கூடாது என்று சொல்லும் அதிகாரம் சட்டப்படி இல்லையே!
பாபு எழதுகிறார்: // ஐநுறு பேர் உள்ள தெருவில் அந்த ஐநுறு பேருக்கும் பிடிக்காத ஒரு விசயத்தை செய்வது பொது இடையூறாகவே கருதப்படும்… // அந்த தெரு அந்த ஐநூறு பேருக்கு மட்டும் சொந்தமானது இல்லை, இந்தியாவில் இருக்கும் 120 கோடி பேருக்கும் சொந்தமானது என்பதுதான் விஷயம். ஐநூறு பேருக்கும் பிடிக்காத விஷயத்தை அங்கே பேசக் கூடாது என்பது நாகரீகம் மட்டுமே;
ஐநூறு பேருக்கும் பிடிக்காத ஒரு கட்சி கூட்டம் அங்கே நடக்கலாமா? ஒரு நூறு வருஷம் முன்னால் போவோம்; அன்றைக்கு அந்த ஐநூறு பேரும் ஜாதி சரி என்று நினைத்திருப்பார்கள்; பெண் ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள்; ஆங்கிலேய ஆட்சியை ஆதரித்திருப்பார்கள். அதே ஐநூறு பேர் தெருவில் “ஜாதி தவறு, விடுதலை வேண்டும், ஆணும் பெண்ணும் சமம்” என்று ஒருவர் பேசலாமா?
உங்களுக்கு சட்டம் பிடிக்கவில்லை என்றால் சட்டத்தை மாற்றலாம். இல்லை எனக்கு ப்ராக்டிகலாக சட்டம் போதவில்லை என்று கோதாவில் இறங்கலாம். அப்படி சட்டம் போதவில்லை என்ற முடிவுக்கு வேறு யாராவது வந்தால் அவர்கள் சட்டத்தை மதிக்கவில்லையே என்று கூப்பாடு போடுவதில் உள்ள முரண்பாட்டை உணர்ந்துகொள்ளுங்கள்!
RV அவர்கள் மிக அருமையாக நடுநிலையாக யோசித்து எழுதுகிறார்; இதுபோன்ற சிந்தனை வந்தாலே மத நல்லிணக்கம் வரும்; தீவிர சித்தாந்தம் எங்கிருந்தாலும் அது எங்கிருந்தாலும் அது வேரறுக்கப்படவேண்டும்;
பட்டயத்துக்கு முன் நிற்பவனைவிட பட்டயத்தைப் பிடித்திருப்பவனுக்கே அதிக பொறுமை வேண்டும்;
நாங்கள் யாரோ எவரோ அல்ல,உங்களில் ஒரு பாகம் என்பதை தயவுசெய்து சிந்தித்து உணருங்கள்;
உங்கள் கையோ காலோ கண்ணோ தொல்லை கொடுத்தால் அதனை குணப்படுத்துவீர்களல்லவா அதுபோல நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருத்தல் வேண்டும்;
இதில் சகிப்புத்தன்மை, பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் போன்ற எண்ணங்கள் தேவையற்றது;
ஒரு சந்தையிலுள்ள ஒவ்வொரு கடைக்கும் ஒரு நோக்கமும் அவசியமும் உண்டு; ஒரு சமூகத்தில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பும் தேவையும் உண்டு; இப்படியே தெய்வத்தைக் குறித்த பார்வையும் அதனை வெளிப்படுத்தும் முறையும் ஒவ்வொரு கூட்டத்துக்கும் மாறுவதுண்டு;விளம்பரப்படுத்துவதும் தான் விரும்புவதை உயர்த்திப் பேசுவது மனித இயல்பு.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கிறித்தவத்தை எதிர்க்கும் மத அடிப்படைவாத தளமான "தமிழ் ஹிந்து"வில் அண்மையில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம் சார்ந்ததே கீழ்க்காணும் செய்திப் படமும் அது தொடர்பான படங்களும்;
இதில் நம்முடைய வட்டாரத்தில் சுவிசேஷகர் என்றழைக்கப்படும் எளிமையான சகோதர்களுக்கு அவர்கள் இழைத்த அநீதிகளையும் கொடுமைகளையும் அத்தனை பெருமையாக சொல்லிக் கொள்ளூகிறார்கள்;
கிறித்துவைப் பின்பற்றும் கிறித்தவர்களான இந்த காரியத்துக்காகச் செய்தது என்ன,வழக்கம்போல் ஜெபிக்கப் போகிறோமா?
ஆனால் அவர்களோ அதைக் குறித்து ஊடகங்களில் தொடர்ந்து பேசி ஒருவித கருத்தொற்றுமையை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள்;
இந்த காரியத்தில் நட்புரீதியிலோ சித்தாந்த ரீதியிலோ விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் இயக்கத் தோழர்களும் இணைந்து போராடியிருக்கிறார்கள்;
எண்ணற்ற பொதுமக்கள் அமைதியாக இந்த காரியத்தை வேடிக்கை பார்க்க ஒரு சில இந்து தீவிரவாதிகள் செய்த எல்லா குழப்பத்தையும் பெரிதாக இந்து சமுதாயமே கிளர்ந்து எழுந்துவிட்டதைப் போலக் கூறி பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்;
இந்நிலையில் நாம் செய்யவேண்டியதென்ன?
இதுபோல அன்றாடம் ஆங்காங்கு நடைபெறும் கொடுமைகளை நாமும் பதிவுசெய்து கிறித்தவ விசுவாசத்தினைப் பின்பற்றுவோருக்குள் ஒருங்கிணைப்பை உருவாக்கவேண்டும்;
கிறித்தவ சுவிசேஷகர்களை ஏதோ கிரிமினல் குற்றவாளிகளைப் போல நடத்தி அவர்களை அச்சுறுத்தி அவமானப்படுத்தும் போக்கை நாம் கண்டிக்கவேண்டும்;
எங்கோ யாருக்கோ நடந்த காரியத்தைப் போல கடந்து போகாமல் நம்முடைய நியாயங்களையும் உரிமைகளையும் எடுத்துச் சொல்லவேண்டும்;
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையிருக்கலாம்;ஆனாலும் நான் நம்மைச் சுற்றி நடக்கும் சில சூழ்ச்சிகளை தூரப் பார்வையுடன் அணுகி நமது சபைகளை எச்சரிக்க விரும்புகிறேன்;நான் ஆவிக்குரிய பணிகளுடனும் சமுதாய விழிப்புணர்ச்சி பணிகளுடனும் போராடிக் கொண்டிருக்கிறேன்;
ஆவிக்குரிய பணிகள் எனக்கு பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது;ஆனால் நம்முடைய விசுவாசத்துக்கெதிராகத் தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக உடனுக்குடன் நம்முடைய தரப்பு நியாயத்தை அந்தந்த இடங்களில் பதித்துவிட விரும்புகிறேன்;மற்றொரு புறம் அந்த செய்திகளைச் சொல்லி கிறித்தவ மக்களை எச்சரிக்க விரும்புகிறேன்;
ஊடகம் அதிலும் எழுத்து என்பது வலிமையானதொரு ஆயுதமாகும்;அண்மைக்காலமாக எதிரிகள் அதனைப் பயன்படுத்தி நமக்கெதிரான கருத்தொற்றுமையினை உருவாக்கி வருகிறார்கள்;
நம்முடைய நிலையினை எடுத்துச் சொல்ல எந்த சபையும் முன்வரவில்லை;அவர்களோ நம்மை எதிர்த்து எழுதிய அண்மைக்கால கட்டுரைகளைப் புத்தகமாக பதித்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள்;நாமோ அந்த புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கவுமில்லை;சென்று பார்த்துவரவுமில்லை;
சரியோ தவறோ நமக்கெதிராக நடந்த ஒரு நிகழ்வை நம்முடைய கவனத்துக்குக் கொண்டுவரவும் யாருக்கும் நேரமில்லை;
கண்டுக்காம விட்டா தானாக அடங்கிவிடும் என சிலர் எண்ணுகிறார்களோ என்னவோ?
அண்மைக்காலத்தில் தமிழகத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இந்து தீவிரமானது வேர்கொண்டு பலரை பாதிக்கும் நிலை வரும் முன்பதாக விழித்துக் கொண்டால் மட்டுமே நாம் பிழைக்கமுடியும்;இல்லாவிட்டால் இரட்சிப்பு வேறிடத்திலிருந்து வரும், பழி நம்மேல் சுமரும்;
(தொடரும்...)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)