நண்பர் 'அனானி ' அவர்களே வாழ்த்துக்கள்; தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி; இந்த தளத்தில் நீங்கள் சுதந்தரமாக தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்; நாங்கள் எந்த ஒரு கருத்தையும் மட்டுறுத்துவதில்லை;காழ்ப்புணர்ச்சியோ அருவருப்பான கீழ்த்தரமான தாக்குதல்களோ இல்லாத பட்சத்தில் நாம் நிதானமாக நிறைய நிறைவாகப் பேசலாம்;இது வலைப் பூவாக அல்லாமல் ஒரு கலந்துரையாடல் தளமாக இருப்பதால் பல நல்ல கருத்துக்கள் இங்கே தொகுக்கப்படும் என்பது எமது எண்ணம்;
தாங்கள் கிறித்தவத்தைக் குறித்து கூறிய கருத்துக்களில் எந்த தவறும் இல்லை;நீங்கள் நினைப்பது போல வெளிப்பார்வைக்கு அதுபோலத் தோன்றுவது உண்மைதான்;
நீங்களாவது இயேசுவின் காலத்துக்குப் பிறகு 2000 வருடம் கழித்து இதனைக் கூறுகிறீர்கள்;ஆனால் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருக்கு முன்பாக இதே கருத்தை யூத மார்க்க அறிஞர்கள் கூறியதை என்னவென்று சொல்ல;அவர்களுக்கு அவர் சொன்ன பதிலையே நான் உங்களுக்கும் கூறுகிறேன்;அது பின்வருமாறு:
50 இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.
51 நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
52 அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள்.
53 அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
55 என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
56 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
57 ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
58 வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.
59 கப்பர்நகூமிலுள்ள ஜெபஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார்.
60 அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.
61 சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?
62 மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?
63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
64 ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்:
65 ஒருவன் என் பிதாவின் அருளைப்பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.
66 அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள்.
67 அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.
பொதுவாக நான் இதுபோன்ற நீண்ட வேத பகுதிகளைப் பதித்து அதை வைத்து வாதாடுவதில்லை; காரணம் வேதம் என்பது மிகவும் புனிதமானது; அதனை நாம் தனிப்பட்ட முறையில் தியானித்து நம்முடைய வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டுமே தவிர நமது வாதங்களுக்கு அதனைப் பயன்படுத்தக் கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்;ஆனாலும் தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வாசக நண்பர்களுடைய தெளிவுக்காக இந்த பகுதியைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துகிறேன்;
இங்கே நண்பர் 'அனானி 'முன்வைத்த அதே வார்த்தைகளைக் கொண்டு 2000 வருடமுன்பே யூதர் அவரை விமர்சித்தது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
அதற்கு இயேசு கொடுத்த பதிலையும் அவருடைய சீடரின் மனநிலையையும் பாருங்கள்;சத்தியம் புரியவரும்;
இதற்கும் மேல் ஐயம் இருந்தால் நான் தொடருகிறேன்...
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
தங்களை அன்புள்ளவர்களாக காட்டிக் கொள்ளும் கிறித்தவர்கள் நரபலி கூட்டத்தினர்.அவர்கள் இயேசு உண்மையாய் இருந்தவர் என்று சொல்கின்றனர்.அவரை கொன்ற பாவி தாங்கள்தான் என்றும் சொல்லுகின்றனர்.அவரது இரத்தத்தையும், சரீரத்தையும் கூட்டமாக உண்டு ஆடிப் பாடி மகிழ்கின்றனர்.
அது சரீரம் அல்ல பிரட்தான், இரத்தம் அல்ல கிரேப் ஜூஸ்தான் என்று சொல்வார்களானால் அவர்கள் கிறித்தவர்களே அல்ல என்று அவர்களின் வேதமே சொல்லுகிறது.
ஆகையால் கிருத்துவர்கள் நரமாமிசம் உண்ணும் கூட்டத்தினர்.ஆனால் தங்களை நோக்கி வரும் மக்களிடம் இந்த கட்டளையை பற்றி முதலில் எதுவும் சொல்ல மாட்டார்கள்.போகப்போக இதை பற்றி போதித்து அவர்களையும் தங்கள் நரபலி கொண்டாத்தத்தில் சேர்த்து கொள்வார்கள்.