Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நண்பனா...எதிரியா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: நண்பனா...எதிரியா..?
Permalink  
 


// பிராமண சமூகம் என்று சொல்லப் படும் சமூககத்தை சார்ந்த பெண்கள பலர் பிற சாதி ஆண்களை , குறிப்பாக நசுக்கப் பட்ட பிரிவு ஆண்களை திருமணம் செய்வது நடை பெற்று வருகிறது. //

இதற்கு அந்த சமுதாயம் எந்த வகையிலும் பெருமைபட்டுக் கொள்ளமுடியாது;”தள்ளிவைப்பது” முதலாக அனைத்தும் நடந்துக்கொண்டு தானிருக்கிறது;நீங்கள் ரஜினிகாந்தை மனதில் வைத்து சொல்லியிருந்தால் அது ஒன்றும் பெரிய சாதனையல்ல‌;

பூரண கும்ப மரியாதையினை எனக்கு கேட்கவில்லை;தாழ்த்தப்பட்டோரின் ஆன்மிகத் தலைவரை உங்கள் பீடங்கள் ஏற்றுக்கொண்டதா என்பதே எனது கேள்வி;நான் நமது மார்க்கத்தைப் பற்றிய ஒரு ஐயத்தை முன்வைக்கும் போது நீங்கள் வேறொரு மார்க்கத்தின் காரியத்தை உள்ளே நுழைப்பது நல்ல மரபல்ல‌.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

thiruchchikkaaran, on August 9, 2010 at 22:31 Said:
புத்திசாலித் தனம் என்பது இந்த உலகத்தில் எந்த ஒரு இனத்தினருக்கோ, பகுதியினருக்கோ, பிரிவினருக்கோ, சமூகத்தினருக்கோ சொந்தமானது அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்....

நாரத கான சபாவில் புஷ்பவனம் குப்புசாமி கச்சேரி பண்ணுகிறார்;
காஞ்சி மடத்தில் பங்காரு அடிகளாருக்கு பூரண கும்ப மரியாதை;
காலம் மாறிப் போச்சு சாமி…எல்லாம் திருச்சிக்காரன் புண்ணியம்..!

// சாதிப் பிரிவினைகளை வளர்த்தி , குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் வியாபாரிகளின் வியாபாரம் படுத்து விடும்…//

சாதிப்பிரிவினைகளுக்கு எதிராக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்; எனக்குத் தெரிந்த ஒரு வன்னிய இனப் பெண் மதம் மாறியபிறகும் அவளது தாயாருக்கு அந்த உணர்வு இன்னும் இருப்பதால் அவளை பெண்கேட்டு வந்து கை நனைத்த பிறகு மாப்பிள்ளை தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதையறிந்து பெண்தர மறுத்துவிட்டார்கள்;இதற்கு என்ன சொல்வீரய்யா..?

யாரய்யா சாதி வியாபாரிகள்..?
யாரையா சாதிய தீயில் எண்ணை வார்த்தது..?
மனசாட்சியை பிட்டுக்கு விற்றுப் பேசாதிரும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Ashok kumar Ganesan

Date:
Permalink  
 

அற்புதமான வாதம். ஆனால், இது திருச்சிக்காரனின் செவிட்டு காதில் ஊதிய சங்கு. நீங்கள் கூறியது அவர் மூளைக்கு எட்டுமா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
அன்புடன்,
அசோக்
 


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// இந்து மத்தில் வெறுப்புக் கருத்துக்கள் புகுத்தப் படுவதை எதிர்த்து பல கட்டுரைகளை எழுதி இருக்கிறோம். //

அப்பட்டமான மோசடியான விவாதம் இது;இந்து மதத்தில் வெறுப்புக் கருத்துக்கள் புகுத்தப்படவில்லை;அது காலங்காலமாக வேரூன்றியுள்ளது; 'மனுஸ்மிருதி ' என்பதில் யார் எதை புகுத்திவிடமுடியும்?

அது ஆதிசங்கரரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் ஆங்காங்கு மடங்கள் ஸ்தாபிக்கப்பட்டு கல்வியறிவில்லாத மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டார்கள்;அதிலிருந்து வந்ததுதான் சாதீய பிரிவினைகளும் இடஒதுக்கீடு சண்டைகளும் காலனிகளும்...கொஞ்சம் வாயை மூடுங்க சார்..!

அதனை வேரறுக்க வந்த பெரியவர்களின் கருத்துக்களை மறைக்க அவர்களையே தெய்வமாக்கி வழிபடும் தந்திரம் தொடருகிறது;இதற்கு பெயர் கூடிக்கெடுப்பது என்பதாகும்;

இனி மேலோட்டமாக, 'கட்டுரை வெளியிடப்படும்- வெளியிடப்பட்டுள்ளது ' போன்ற வெற்று வார்த்தைகளை விட்டு சமதளத்துக்கு வாருங்கள்;நீங்கள் கட்டுரை வெளியிட்டவுடனே எல்லாம் சரியாகிவிடாது;வெளிப்படையாகக் கண்டிக்க முன்வந்தால் நாங்களும் ஆதரவளிக்க ஆயத்தமாக இருக்கிறோம்;

நீயும் நானும் ஒன்றாக இருந்தோம்;உன் நடவடிக்கை சரியாக இல்லாததால் நான் வெளியேறுகிறேன்;நீயோ உன் தவறுகளை மறைக்க என்னை யாரோ விலைகொடுத்து வாங்கிவிட்டார்கள் என்கிறாய்;நீ என்னை விசேஷமாக நினைத்தால் மறுவிலை கொடுத்து என்னை மீட்கலாமே..?

உன் அவசரத் தேவைக்காக மார்வாடி கடையில் அடமானம் வைக்கும் சாதாரண பொருளை வட்டியோடு மீட்டுக்கொள்ளும் நீ என்னை மீட்க முயற்சிக்கவில்லை;

ஆனால் எனக்கு சிறிதும் சம்பந்தமில்லாத வேறொருவர் தாமாக முன்வந்து  என்னுடைய மரணப்படுக்கையில் -புறக்கணிக்கப்பட்ட சூழ்நிலையில் -குழியில் தள்ளப்படும் நிலையிலிருந்து என்னை மீட்டெடுத்தார்;

நான் அவருக்கு நன்றியுடனிருப்பதுதானே இந்து தர்மம்..?
என் அனுபவங்களைச் சொல்வதில் என்ன குற்றம்..?

கரடியும் இரு நண்பர்களும் கதை தங்களுக்கு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல‌..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// இனப் படுகொலைகளை செய்து விட்டு, அதை கடவுளே செய்ததாக சொல்லி அதைப் புனிதப் படுத்தி, இத்தனை காலமும் நல்ல பெயரும் எடுத்து விட்டனர். அவர்களின் வழி வந்தவர்களே இன்று உண்மைகளை உணர்ந்து விட்டனர். எந்த இனப் படுகொலைகளை தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார்களோ ,, அதே இனப் படுகொலை தங்கள் இனத்தையே அழித்து விட்டதை அவர்களே உணர்ந்து வருகின்றனர் //

அற்புதம்...அருமை...அபாரம்...ஆம் இந்த ஒவ்வொரு வரியும் ஏழை இந்திய பாமரனைக் கூறுபோட்டு இரத்தம் குடித்த பல்வேறு யுத்தங்களுக்கும் சேதாரங்களுக்கும் காரணமாக இருந்த பார்ப்பனர்களுக்கே பொருந்தும்;அவனுக்கு வால் பிடித்தவனும் அதே அதோ கதியினையடைவான்..!

ஆக்கிரமிப்பு என்பது நவீன காலத்தில் அரசியல்ரீதியாக அல்லாமல் பொருளாதாரரீதியில் நடந்துக்கொண்டிருக்கிறது;இனஅழிப்பு என்பது நேரடியாக நடவாமல் கலாச்சாரரீதியில் நடந்துக்கொண்டிருக்கிறது;

உதாரணத்துக்கு புத்திசாலிகள் என்று கூறப்பட்ட பிராமணர்களுடைய ஞானமே அவர்கள் அடையாளத்தை இழக்க காரணமாகிவிட்டது;அந்த இனம் தனது தனித்தன்மைகளைத் தொலைத்துவிட்டு மெள்ள அழிந்துவருகிறது... இன்றைய பார்ப்பனீயமானது முதியோர் இல்லத்தில் புகையிலை மென்று கொண்டிருக்கிறது..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

thiruchchikkaaran, on August 7, 2010 at 22:31 Said:

நான் என்ன அவதூறாக எழுதுகிறேன்? எழுதி இருப்பதை அப்படியே தானே மேற்கோள் காட்டுகிறேன். சுவாசமுள்ள ஒரு ஜீவனையும் வீட்டு வைக்காமல் சங்கரித்தார்கள் என்று இனப் படுகொலை செய்ததாக நானாக இட்டுக் கட்டி எழுதுகிறேனா? எனக்கு கற்பனையில் கூட இவ்வளவு கொடூரம் தோன்றவில்லையே. இரக்கமற்ற இனப் படுகொலைகளை , புனிதமாக கருதும் மன நிலைக்கு நீங்கள் சென்றது ஏன்?

இனப் படுகொலைகளை செய்து விட்டு, அதை கடவுளே செய்ததாக சொல்லி அதைப் புனிதப் படுத்தி, இத்தனை காலமும் நல்ல பெயரும் எடுத்து விட்டனர். அவர்களின் வழி வந்தவர்களே இன்று உண்மைகளை உணர்ந்து விட்டனர். எந்த இனப் படுகொலைகளை தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார்களோ ,, அதே இனப் படுகொலை தங்கள் இனத்தையே அழித்து விட்டதை அவர்களே உணர்ந்து வருகின்றனர்



ஏனய்யா இதே லாஜிக்கல் தின்க்கிங் ராம ராவணனுக்கும் கிருஷ்ண கர்ணனுக்கும் பொருந்தாதோ...சைவத் துறவியரைக் கழுவேற்றியதும் இதே புனிதர்கள்தானே..?

அதெல்லாம் உங்கள் தெய்வத்தின் திருவிளையாடல்கள்...இஸ்ரவேலர் செய்தது தெய்வத்தின் பெயரால் நடந்த இனப் படுகொலையா..?

என்னுடைய முக்கியமான வாதங்களுக்கு பதில் கூறாமல் நிறக் குருடனைப் போல மேலோட்டமாகவே எழுதுகிறீர்களே..!

ஹிட்லர் முதல் சதாம் ஹுசேன் வரை ஏன் ராஜ்பக்க்ஷே வரை செய்ததும் செய்துவருவதும் பொதுவாகவே வடக்கு தெற்கை நசுக்குவதும் ஆக்கிரமிக்க வடக்கு நோக்கி நகருவதும் எந்த தெய்வத்தின் கட்டளையால் நடந்தது, நடக்கிறது..?

வேதத்திலுள்ள யுத்தங்கள் சமமான எதிரிகளுக்குள் நடைபெறவில்லை... நீங்கள் வரலாற்றை ஆராய்ந்தால் இஸ்ரவேலர் பெரிய பராக்கிரமசாலிகளோ யுத்தவீரர்களோ அல்ல;பெரிய படைபலமும் அவர்களிடம் இருந்ததில்லை; அவர்கள் யுத்தங்களை அவர்களுடைய தேவனே நடத்தினார்;அவர்கள் அவருக்கு விரோதமாகப் போனபோது அவர்களுடைய எதிரிகளிடம் அவரே ஒப்புக்கொடுத்தார்;

இதிலுள்ள மனித ஞானத்துக்குப் புலப்படாத தேவதிட்டமானது, இஸ்ரவேலர் வழியாக உலகமுழுவதையும் தமது பொதுவான திட்டத்துக்குள் கொண்டுவருவதே;

ஏனெனில் யெகோவா தேவன் இஸ்ரவேலரை அழைத்திருக்காவிட்டாலும் அவர்கள் வேறு ஏதோ ஒரு அமைப்பில் இந்துக்களைப் போல இருந்திருப்பர்;யுத்தங்கள் வரும்,மரணம் வரும்,நன்மை தீமை எல்லாம் அவரவர் விதிப்படி நடந்தே தீரும்;

ஆனால் "கெட்ட போரிடும் பூமியை வேரொடு சாய்ப்போம்" என்ற பாரதியின் வாக்குப்படி நவீன -சமாதான -சமதர்ம சமுதாயத்தை ஸ்தாபிக்கவே இஸ்ரவேலரை தேவன் அழைத்தார்;அவர்கள் மூலமே இன்று உலகம் நவீனப்ப‌டுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது;அவர்களே இன்றைய உலகின் போக்குகளை நிர்ணயிக்கும் உன்னத பீடத்தில் இருக்கின்றார்கள்;அதனை யாரும் மறுக்கவோ தடுக்கவோ இயலாது;

எனவே பைபிளை நிதானமாகப் பகுத்துப் படித்தாலே இறைவனின் அழகிய- அன்பான இருதயம் தங்களுக்குத் தெரியவரும்;

பைபிள் கருத்துப் பெட்டகமாகவும் வரலாற்று பொக்கிஷமாகவும் மனுக்குல விளக்காகவும் விளங்குகிறது;

அதனை மறுத்துப் பேசுவோரும் மறைமுகமாக இரசித்து படிக்கும் புத்தகமாகவே அது விளங்குகிறது;

வேதத்தின் நிறைவாக இயேசுகிறித்து விளங்குகிறார்;பழைய ஏற்பாட்டில் யுத்தம் செய்தவரும் அவரே,புதிய ஏற்பாட்டில் மீட்பின் திட்டத்தை செயல்படுத்தியவரும் அவரே,வரப்போகும் உலகின் நியாயாதிபதியும் அவரே;

வரப்போகும் உலகின் உபத்திரவங்களின் போதும் உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் இறைவன் அனுப்பும் வாதைகளைப் பார்த்து மனந்திரும்பாமல் இன்னும் அவரை தூஷிப்பார்களாம்;அதுவும் இந்த பைபிளில் தான் எழுதியிருக்கிறது;

எனவே நீங்கள் சரியான இறையியல் கொள்கைகளைக் கற்று அதனடிப்படையில் பைபிளைப் படித்தாலே அதன் மேன்மை விளங்கும்;தவறான இறையியல் கொள்கையில் பழகியவர்கள் அந்த கொள்கையுடன் ஒத்துவராத எதையும் எதிர்த்தே பேசுவர்;உதாரணத்துக்கு கம்யூனிஸம் மற்றும் பரிணாமக் கொள்கையில் ஊறியவர்களிடம் இதெல்லாம் எடுபடாது;ஏனெனில் அவரவர் பார்வையில் அவரவர் ஞானியாக இருக்கிறார்;

ஆனால் கிறித்தவ இறையியல் கொள்கையானது இயேசுவானவரை மையமாகக் கொண்டது;அவரை உற்று கவனித்து பின்பற்றினால் அவருக்குள் அவருக்கு முன்வந்து சென்ற (புத்தர் முதலாக‌...) அத்துணை பேரின் பாதிப்பும் அடங்கும்;எந்த ஒரு மகானும் துறவியும் சாதுவும் எட்டாத உச்சங்களை அவர் எட்டிவிட்டார்;இந்த உலகில் வந்து தனது உயிர்த்தெழுந்த சரீரத்துடன் பரமேறிச் சென்றவர் அவர்மட்டுமே;அவர் சமாதியாகவில்லை;காணாமற்போகவில்லை;அனைவர் கண்முன்பாகவும் விண்ணேறிச் சென்றார்;எனவே அவரே மெய்யான தெய்வம் என்கிறோம்;

உங்களால் விமர்சிக்கப்படும் பழைய ஏற்பாட்டின் தெய்வத்தையே அவர் மனதார தொழுது அவரையே தனது பிதா என்கிறார்;இன்னும் என்ன சொல்ல‌..?

பைபிளைக் குறைத்து மதிப்பிடுவதை நிறுத்துங்கள்...
பைபிளில் நல்ல கருத்துக்களும் இருக்கிறது என்றோ நல்ல கருத்துக்கள் நிரம்பிய அருமையான பைபிளில் சில தேவையில்லாத கருத்துக்களும் கலந்துவிட்டது என்றோ சொல்லவருவது கண்டனத்துக்குரியது;பைபிள் முழுமையானது இன்னும் ஆராயப்படாதது, ஆராயப்படுகிறது; ஆராயப்படுகிறது; எனவே அவசரப்பட்டு கருத்து சொல்லவேண்டாம்.

இறுதியாக ஒரு உண்மையைக் கண்டுபிடித்தேன்;நீங்கள் எங்களை சீண்டாமல் பிரபலமாக முடியாது;எம்மைப் பற்றி பேசாவிட்டால் சீக்கிரமே மறக்கப்படுவீர்கள்;எனவே நான் வேறு ஆக்கப்பூர்வமான வேலைகளைப் பார்க்காதபடி உங்களைத் தொடரும் வண்ணமாக தொடர்ந்து சீண்டிக்கொண்டேயிருக்கிறீர்கள்;ஆனாலும் எனக்கு பிரச்சினையில்லை; எந்த ஒரு வினைக்கும் எதிர்வினையுண்டு;அது நன்மையாகவே முடியும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

http://thiruchchikkaaran.wordpress.com/2010/08/07/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/#comment-1733

ஹலோ...எதிராக எழுதுவோர் எதிரிகள்...ஆதரவாக எழுதுவோர் நண்பர்கள் எனக் கொள்க‌...முதலில் தலைப்பை மாற்றும்..!

நமக்குள் பொய்வேடமிடவேண்டாம்...
நீங்கள் எம்மை நண்பராக பாவித்தால் எமது புனித நூலான பைபிளைக் குறித்த அவதூறான கருத்துக்களை நீக்கிவிட்டு வாரும்...

அதை எழுதுவதற்கென்றே நீர் பயிற்சி பெற்றிருப்பதுபோலவே உமக்கு சவால் விட நாங்கள் பயிற்சி பெற்றுள்ளோம்;

அரசியல்,பொருளாதாரம்,மொழி,கலாச்சாரம் என்று ஒரு சமூகம் ஒன்றுபட்டு வாழ்வதற்கு பல்வேறு காரணிகள் இருக்க நீர் என்னவோ கிறித்தவமும் யூதமுமே உலகத்திலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்பது போல பசப்பிக்கொண்டிருக்கிறீரே...

இங்கே இருக்கிற சாதாரண‌ ராமர் கோவில் பிரச்சினையைத் தீர்த்துவைக்க முடியாத உங்கள் மதநல்லிணக்க உணர்வு எங்களுக்கு எங்கிருந்து வரும்..?

ஒரு பாரம்பரிய சின்னத்தை இடித்துவிட்டே மற்றொன்றை எழுப்பவேண்டும் என்பதையே மிஸ்டர் விவேக் சொல்லிக்கொடுத்தாரா..?

ஐயா நாங்களும் உங்க ஊரு தண்ணியக் குடிச்சி இங்க விளையற அரிசியத்தான் (காசுகொடுத்து...) வாங்கி சாப்பிடுறோம்...அதாவது உங்களப்போலவே நாங்களும் யோசிப்போம்'ணேன்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard