10. நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.Isaiyah 41:10 சகோதரர்களே,வேதத்தில், பல இடங்களில் "பயப்படாதே" என்று ஆண்டவர் சொல்லி இருக்கிறார். ஆனால், பல இரட்சிக்கப்பட்ட கிறிஸ்துவர்கள் வாழ்நாள் முழுவதும் பயந்தே வாழ்கின்றனர். "கொலை செய்யாதே", "விபச்சாரம் செய்யாதே" என்று ஆண்டவர் கூறியதை போலவே, "பயப்படாதே" என்றும் கூறியுள்ளார்.ஆனால் நம்மில் பலர், "பயப்படாதே" என்று ஆண்டவர் ஆறுதல் கூறுவதாகவே நினைக்கின்றனர். ஆனால், இது ஒரு தவறான கோட்பாடாகும். நாம் வேதவசனங்களின் மூலம் இவற்றை ஆராயலாம்.18. அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.1John 4:18
8. அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். 1John 4:8
இந்த வசனத்தின் மூலம், தேவ அன்பு நமக்குள் இருந்தால், நம்மில் பயம் இருக்காது என்று நிரூபிக்கறது.
40. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார். Mark 4:40 மேலே குறிப்பிட்ட வசனம், இயேசுவானவர், காற்றையும், கடல் சீற்றத்தையும் வார்த்தையால் அடக்கியபோது சொல்லப்பட்டது. இங்கே சீஷர்களை இயேசுவானவர் கடிந்துகொண்டதும் தெரிகிறது. ஒருவன், இயேசுவை விசுவாசித்தால் அவன் பயப்படான். விசுவாசமும், பயமும் ஒன்றாய் இருக்க முடியாது. (கிறிஸ்துவின் மேல் கொண்ட) விசுவாசமே ஒருவனை, நீதிமானாக்கும். ஒருவன் பயப்படும் போது, அவனுள் விசுவாசம் இல்லை, விசுவாசம் இல்லாதவன் நீதிமான் அல்ல. அவன் அப்போது பாவியாகவே இருக்கிறான். 6. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். -Hebrews 11:6
பயமுல்லவன் = விசுவாசமில்லாதவன். அதனால், பயத்தோடு கர்த்தரை பிரியப்படுத்த முடியாது. அதனால், விசுவாசத்தை காத்துகொள்வோம், பயப்படாமல் இருப்போம்.
"விசுவாசி ஒருநாளும் பதறான் அவன் நங்கூரம் இயேசுவில் உண்டு ஆபத்தை கண்டேன்றும் அஞ்சான்..."
இந்த பழைய கிறிஸ்துவ பாடல் எனக்கு பிடித்த ஒன்று.
ஆசிர்வாதமாய் இருங்கள்,
அசோக்
P.S: நான் மேற்கூறிய பயமும், கர்த்தருக்கு பயப்படும் பயமும் வேறு. குழப்பிக்கொள்ள வேண்டாம்.